Monday, November 1, 2010

மன்மத அம்பு - கப்பலில் காதல்

அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் (!!) "மன்மத அம்பு" ஷூட்டிங் முடிந்து, பாடல் வெளியீடு நவம்பர் 20௦ அன்று சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற இருக்கும் நிலையில், படத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன் என்று கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை அணுக, அவர் என்னை கேட்பதை விட, அவரை கேட்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்மிடம் கை காட்டிய இடத்தில் ............................அமர்ந்திருந்தவர் கமல்ஹாசன்....

நிறைய கேள்விகள் கேட்க நினைத்தாலும், அவரின் கோபத்தை மனதில் கொண்டு சில கேள்விகள் மட்டுமே கேட்டோம்...

நிருபர் : வணக்கம் சார்....

கமல் : வணக்கம்.....என்னை காண வருகை தந்திருக்கும் உங்களை வருக வருக என்று வரவேற்கும் ஆவல் எனக்கு உண்டு.. ஏனென்றால், வந்தவர்களை விருந்தினர்களாக கருதி வரவேற்பது என்பது தமிழனின் பண்பாடு என்றாலும், அந்த பண்பாடு இன்னமும் அழியாமல் உள்ளதா என்பதை அறியாமல் உங்களை வரவேற்பதில் சிறிய சிக்கல்... ஆகவே.........

நிருபர் : இவ்ளோ சுருக்கமா வரவேற்றதற்கு மிக்க நன்றி சார்... இப்போ, கேள்விகளை கேட்கலாமா?

நாங்க எல்லாரும், எப்போவும், தெரிஞ்சுக்க ஆசைப்படற அபூர்வ சகோதரர்கள் படத்துல வர்ற "அப்பு" பத்தி ஏதாவது சொல்லுங்களேன்..

கமல் : சொல்றேன்.. சின்ன வயசுல, நாங்க வெளையாடற இடத்துல ஒரு குட்டை இருந்தது... அதுல, "குப்பு"ன்னு ஒரு குள்ளமான பையன் வந்து, டைவ் அடிப்பான், நீச்சல் அடிப்பான், மீன்கள் பிடிப்பான்.....
ஆனாலும், அவனை பார்க்கும் அனைவரும், கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பாதே என்று சொல்லி கேலி செய்வார்கள்...

அன்று முடிவு செய்தேன்...குட்டையானவர்கள் கெட்டவர்கள் இல்லை என்று நிரூபிப்பது என்று...
பின்னாளில் “குட்டையானவன் கெட்டவனா” என்றெல்லாம் பல நாட்கள் யோசித்து, ஒரு திரைப்படமாக எடுத்து, வெண்திரையில், அதை நிரூபித்தேன்... எனவே, அந்த அபூர்வ சகோதரர்கள் படமும், அதில் வரும் குள்ள "அப்பு"வும், உலகத்தில் உள்ள அனைத்து குள்ளர்களுக்கும் சமர்ப்பணம்...

நிருபர் : இப்போது நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் "மன்மத அம்பு" படம் பற்றிய ஒரு கேள்வி.. அது, ஏற்கனவே வெளிவந்த "டைட்டானிக்" படத்தின் காப்பி போல் இருக்கிறது என்று இணையத்தில் நிறைய தேள்கள் தம்பட்டம் கொட்டி வருகிறதே!!?

கமல் : உங்களின் முதல் கேள்வியே கோணலாக உள்ளது... இது போல் எல்லா படத்திற்கும் இதையே சொல்லிக்கொண்டு திரியும் நிறைய செந்தேள் செந்தாமரைகளை பார்த்தவன் நான்....இரண்டும் பிரம்மாண்டமான கப்பலில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதை தவிர எந்த ஒற்றுமையும் இல்லை... ”மன்மத அம்பு” இன்றைய கல்லூரி இளைஞர்களுக்கு காதலை சொல்லி தரும் ஒரு புதிய முயற்சி... நீங்கள் என்னை கோபமுற செய்யாமல் கேள்விகளை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
நிருபர் : மன்மத அம்பு படத்தை பற்றி....
கமல் : படம் ஷூட்டிங் முடிந்து விட்டது.... சொகுசு கப்பலில் எடுத்துள்ளோம்... தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்...
நிருபர் : இதெல்லாம் தெரியுமே... தெரியாதது ஏதாவது?
கமல் : தெரிந்த விஷயங்களை மேலும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்... தெரியாத விஷயங்கள் தெரியாததாகவே இருக்கட்டும் என்று திரிஷா என்னிடம் சொன்னதை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை...
நிருபர் : படத்தில் பாடல்கள் இருக்கிறதா? பாடல்களை படத்தில் வைப்பதற்கு நீங்கள் எதிரி என்றும், எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும், டூயட் பாடல்களில் நடிக்க மாட்டீர்கள் என்றும் வாலி ஒரு விழாவில் உங்களை பற்றி சொன்னாரே...
கமல் : கவிஞர் வாலி அவர்கள் சொன்னது பற்றி எனக்கு எதுவும் தெரியாது... ஆனால், இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் வைக்கலாம் என்று ரவி சொன்னபோது, அந்த 5 பாடல்களில் 6 பாடல்களை எழுத மட்டும் புதிதாய் ஒரு பாடலாசிரியர் இருக்கட்டும்... மீதமுள்ள பாடல்களை ஏற்கனவே உள்ள பழைய பாடலாசிரியர்கள் எழுதட்டும் என்று முடிவு செய்து, அந்த 6 பாடல்களை மட்டும் ”புதிய பாடலாசிரியர்” ஆன நானே எழுதி விட்டேன்...
நிருபர் : என்ன? 5 பாடல்களில் 6 நீங்கள் எழுதி விட்டீர்களா? அய்யோ... தல சுத்துதே... சரி சார்... முன்னாடி “யாவரும் கேளிர்”னீங்க, அப்புறம் “காருண்யம்”னீங்க... இப்போ திடீர்னு அதென்ன ஒரு ரொமாண்டிக் தலைப்பு “மன்மத அம்பு”....?
கமல் : பெயரளவில் மட்டுமே வேறுபட்டாலும், பொருளளவில் இந்த மூன்றுமே ஒன்று தானே....
நிருபர் : மன்மத அம்பு கேட்கவா, பார்க்கவா?
கமல் : முதலில் நவம்பரில் பார்க்க (ஏன்னா, அப்போ தானே ஆடியோ ரிலீஸ்), பின்னர் டிசம்பரில் பார்க்க (அப்போ தான் படம் ரிலீஸ்)...
நிருபர் : தமிழ் படங்களின் ஆடியோவை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யாமல் வெளிநாட்டில் ரிலீஸ் செய்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளாரே?
கமல் : அவர் சொன்னது வேறு ஒருவர் நடித்து வெளிவந்த வேறு ஒரு படத்திற்கு... இந்த படத்தின் பாடல் வெளியீட்டிற்கு அழைத்தால், அவரே வந்து பாராட்டி விட்டு செல்வார்... ஏனென்றால் எனக்கும் அவர்க்கும் பகையில்லை... இதை நான் வெளியில் சொல்வது முறையில்லை... சரி, அடுத்த கேள்வி?
நிருபர் : படத்தின் ஷூட்டிங்கின் நடுவே திரிஷா தொலைந்து விட்டாராமே?
கமல் : தொலையவில்லை... யாருடனோ நட்பு கொண்டு, அவர்களுடன் நாங்கள் எட்ட முடியாத “தொலைவில்” இருந்தார்.... கேட்டால், பழமையான விளையாட்டான கண்ணாமூச்சி ஆட்டம் என்றார்.... இது போன்ற “ஒளிந்து விளையாடும் விளையாட்டு” அவருக்கு மிகவும் பிடிக்கும்...
நிருபர் : எப்போதும் எல்லா படங்களிலும் காமெடி என்று சொல்லி மெட்ராஸ் பாஷை பேசுவீர்களே.... இந்த படத்திலும் அதே போன்ற காமெடி உண்டா.... கெட்டப் சேஞ்ச் புதுசா ஏதாவது ட்ரை பண்ணி இருக்கீங்களா?
கமல் : சமீப காலமாக அதாவது செந்தமிழ் மாநாடு நடந்த பிறகு, செந்தமிழை கரைத்து குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், செந்தமிழை தவிர மற்ற அனைத்துமே என் நாவுக்கு அந்நியமாகி போய் விட்டது... திஸ் இஸ் நாட் ய ஜோக் மேன்... யு கேன் சி இட் வென் தி மூவி ரிலீஸ்..... ஐ டோண்ட் ஹேவ் எனி கெட்டப் சேஞ்ச் இன் திஸ் மூவி...
நிருபர் : ஆஹா.... ஆங்கிலம் இங்கே செந்தமிழாக மாறி தமிழ் மழை பொழிந்தது... மிக்க மகிழ்ச்சி.... படத்தின் பாடல்களை எல்லாம் எந்தெந்த பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்??
கமல் : நல்ல குரல் வளம் கொண்டவர்களை பாட வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்ததால், படத்தின் அனைத்து பாடல்களையும் நானே பாடிவிட்டேன்....
நிருபர் : படத்தின் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றையும் நீங்களே செய்து விட்டீர்களே!!??
கமல் : ஆம்... என் கலை தாகத்தை தணிக்க நான் எடுத்த சிறு முயற்சி தான் இந்த அனைத்து துறை கையாளல் அல்லது உங்கள் பாஷையில் ஆக்கங்களின் ஆக்ரமிப்பு...
நிருபர் : மன்மத அம்பு ஆஸ்கரை குறிவைக்குமா?
கமல் : நான் வச்ச குறி எப்போதும் தப்பிவிடும்.... ஆனாலும், குறித்து கொள்ளுங்கள்....இம்முறையும் குறி வைத்திருக்கிறேன்.. இதுவும் சரித்திரம் சலித்துக்கொள்ள இருக்கும் ஒரு நிகழ்வு தான்... (நீங்கள் அனைவரும் நினைக்கும் அந்த சோர்வு சலிப்பு இல்லை, சல்லடை வழியே கப்பிகளை அகற்றும் அந்த சலிப்பு).... இது புரிந்தால் நீங்கள் புத்திசாலி, புரியவில்லை என்றால் நான் அதிர்ஷ்டசாலி.....
நிருபர் : இன்றைய தமிழ் சினிமா?
கமல் : இன்றளவில் அது மூச்சிழந்து இருக்கிறது.... அதற்கு ஆக்ஸிஜன், அனாசின், நோவால்ஜின் மற்றும் க்ளைகோடின் தருவதற்கு நான் பல வழிகள் வைத்துள்ளேன்... "மன்மத அம்பு" பட ரிலீஸின் போது அதைப்பற்றி அறிவிப்பேன்... இப்போது எனக்கு நிறைய பணிகள் உள்ளது... பாரதி வருகிறேன் என்று அலைபேசியில் தெரிவித்தார்...பாரதி என்றால் பாரதிராஜா இல்லை... இவர் சந்தானபாரதி... கொஞ்சம் நீராகாரம் அருந்தும் பழக்கம் உள்ளவர்.. அப்படியே என் அடுத்த படம் பற்றி விவாதமும் நடைபெற போகிறது... பிற‌கு சந்திப்போம்..
நிருபர் : இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கி, எங்கள் கேள்விகளுக்கு ”தெளிவாய்” நல்ல முறையில் பதில் சொன்னமைக்கு மிக்க நன்றி சார்...

Saturday, September 25, 2010

இக்கட ரா....ரா.....ரா.... ராமய்யா.......“எட்டு”க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா....

தமிழ் படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களுக்கு பெயர் போனது.... அது அந்த காலம்....

தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இது இந்த காலம்....

ஏதேனும் நல்ல கருத்தை தன் பாடல் வழியாக சொல்ல முயற்சிக்கும் கவிஞர்களை கூட, எதுவும் சொல்லாதே..... அர்த்தமற்ற வார்த்தைகளை போட்டு பாடலை எழுதி முடி.... நாங்கள் இசையால் அதை நிரப்பிக்கொள்கிறோம் என்று சொல்லி பாடல்களை எழுத வைத்து, இசையமைத்து, கண்ட மேனிக்கு படம் பிடித்து, ரிலீஸ் செய்வதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்... எப்படி அந்நாளில் பாடலில் வரிகளுக்கு முக்கியத்துவம் இருந்ததோ, அதே போல், இன்றைய சூழலில், பாடல் வரிகளுக்கான முக்கியத்துவத்தை அதிரடி இசை எடுத்துக்கொள்கிறது...

ஆனாலும் இன்றைக்கு சில நல்ல டைரக்டர்கள், நல்ல பாடலாசிரியர்களை கொண்டு, பல நல்ல பாடல்களை வழங்க முற்படுவதையும் காண்கிறோம்... வைரமுத்து, தாமரை போன்ற கவிஞர்கள் பல நல்ல பாடல்களை நம்மிடையே சமீப காலத்தில் படைத்ததை மறுப்பதற்கில்லை...

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படங்களில் பெரும்பாலும், பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி, ஆடியோ விற்பனையில் சாதனை படைப்பதை நாம் அறிவோம்... படத்தின் ஒரு சில பாடல்களின்றி, அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் ஆகும்....... அவர் தம் படங்களின் பாடல்களில் நிறைய கருத்துக்களை சொல்வார்... அந்த கருத்துக்களை அடக்கிய பாடல்கள் பெரிய அளவில் மக்கள் மனதில் எடுபடுவதையும் நாம் கண்டிருக்கிறோம்... அப்படி ஒரு பாடலை பற்றியது தான் இந்த பதிவு.....

1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி, ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து, மெகா ஹிட் ஆன படம் “பாட்சா” என்பதை உலகறியும்..... ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் “பாட்சா” படத்திற்கு உண்டு....

அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதியிருந்தார்.... பிரமாதமான இசையை தேனிசை தென்றல் தேவா அவர்கள் வழங்கினார்....

இங்கே நாம் பார்க்கவிருப்பது அந்த படத்தில் வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய இந்த “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் எங்கேயோ, எப்போதோ படித்த ஒரு சித்தரின் சிந்தனையை வைரமுத்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, உடனே வைரமுத்து அவர்கள், அந்த கருத்தை ஒரு பாடல் எழுத, அதுவே பின்வரும் இந்த பாடல்....பாருங்களேன்....

ரா ரா ரா ராமய்யா....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா...
இக்கட ரா ரா ரா ராமய்யா....
அதை புட்டு புட்டு வைக்கபோறேன் பாரய்யா ....

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா

என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல

இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல

நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல

ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல

எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல

************

அந்த காலத்தில் சித்தரின் மனதில் எழுந்த இந்த கருத்து, இதோ இங்கே பாடலாக தரப்பட்டுள்ளது....

இந்த பாடலும், அதன் கருத்தும், தற்போது இன்றைய நடைமுறைக்கு ஒப்பானதா? ஆம் என்றால் எப்படி?

உங்கள் கருத்தை சொல்லுங்களேன் தோழமைகளே!!

Saturday, August 14, 2010

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....


தாயின் மணிக்கொடி பாரீர்

இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.


வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க

அன்று சிந்திய பலரின் குருதி

கொடியின் மேலே ஆனது காவி


உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்

அதை உண‌ர்த்தும் விதமாய்

கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை


பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி

பசுமையாய் ஆக்குவோம் நாட்டை

இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை


இடையில் உள்ள சக்கரம் போல்

ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்

உன் வாழ்வும் உயர்வு பெறும்

நம் நாடும் வளம் பெறும்


இன்றைய இந்தியா இதை உண‌ருமா?

கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை

இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்

அனைத்தும் கருகிய நிலை


விதவிதமான போதையின் பிடியில் இந்தியா

தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்

போதையின் பிடியில் சுருண்டு....


அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற

அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்

கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....


நம் இன்றைய தேவை என்ன?

ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்


கடுகு அளவுள்ள எறும்பே அதன்

உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்

உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பாரு


சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை

குடியை கெடுக்கும் குடியை தவிர்

மனதை கெடுக்கும் மதுவை மற


சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து

வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து

கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்

நம் வாழ்வு சிறக்கும்....


ஜெய் ஹிந்த்.....


உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Monday, August 2, 2010

”அப்பீட்” ஆன நான் மீண்டும் “ரிப்பீட்” ஆனேன்.....

வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.....

என் ”ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட்” அப்பீட் ஆனது ஆனதுதான், இனி ரிப்பீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணி இருந்த வேளையில், என் மற்றொரு வலையான எடக்கு மடக்கு பதிவில் இந்த ஜிமெயில் ஹேக்கான விஷயத்தையும், ஜோக்கிரியை பற்றியும் குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன்...

கூடவே, நண்பர்கள் இந்த விஷயத்தில் உதவுமாறு வேண்டியிருந்தேன்... சௌந்தர், ஜே போன்றோர் இட்ட பின்னூட்டத்தில் சூர்யா கண்ணன் அவர்களை இது குறித்து தொடர்பு கொள்ள சொல்லி இருந்தார்கள்...

மற்றொரு நண்பர் சிங்கை கிரி (www.giriblog.com) அவர்களும், இது தொடர்பாக அவர் எழுதிய ஒரு இடுகையின் லிங்க் அளித்து முயற்சிக்க சொல்லி இருந்தார்....

நான் முதலில் நண்பர் சூர்யா கண்ணன் (www.suryakannan.blogspot.com) அவர்களுக்கு என் நிலை குறித்து ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்...

சூர்யா கண்ணன் அவர்களின் சீரிய முயற்சியால் நான் ஹேக் செய்யப்பட்ட என் ஜிமெயில், ஜோக்கிரி ப்ளாக் இரண்டையும் மீண்டும் கிடைக்கப்பெற்றேன்....

அவருக்கு இந்த பதிவை காணிக்கையாக்கி என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....
மிக்க நன்றி திரு.சூர்யா கண்ணன் மற்றும் சிங்கை சிங்கம் கிரி (இப்போ சிங்கம்னு சொல்றதுக்கு பதிலாக, ரோபோட் என்று சொல்லலாமோ!!) அவர்களே......

Monday, July 19, 2010

அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”


கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படமான 'மேதை' என்ற படத்தின் மூலம் தனது மறுபிரவேசத்தை நிகழ்த்தப் போகிறார் ராமராஜன்.

(இதுவரை பட்டாப்பட்டி டவுசரில் அனைத்து கிராமங்களையும் கலக்கி வந்த "மாமேதை கி”ராமராஜன்" இந்த "மேதை" படத்தில் ஜேம்ஸ்பாண்ட் எல்லாம் அசரும் வகையில் கோட் சூட் அணிந்து கலக்குகிறார். ஆனாலும் ரசிகர்களை (!!???) ஏமாற்றாமல் ஒரு பாடல் காட்சியிலாவது பட்டாப்பட்டி டவுசர் அணிந்து கையில் பால்சொம்புடன் வருவார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).

இது அவருக்கு 44-வது படம். (முந்தைய 43 படங்களிலும் டவுசர் மற்றும் பட்டாப்பட்டி அணிந்து நடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமை அண்ணனுக்கு உண்டு).

இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியராக வருகிறார் ராமராஜன். வழக்கம்போல கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அவரது ரசிகர்கள் (!!???) எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்டதாக அசத்தலாக தயாராகிறதாம்.

படத்தின் முக்கிய பலமாக வடிவேலு நடிக்கிறார். இதுவரை கவுண்டமணியுடன் மட்டுமே கலக்கி வந்த ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மதுரை மண்ணின் மைந்தருடன் இணைந்து காமெடி பண்ண தயாராகிறார். (வடிவேலு இந்த படத்துல அண்ணன் ”மேதை”யோட மேட்டர முடிச்சுடுவாருன்னு நெனக்கறேன்).

புதுமுக நாயகி ஒருவர் ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா. பாடல்கள் ரிலீஸாகி பட்டைய கெளப்புதாமாம்...

“மேதை” அறிமுக காட்சியில் வரும் :

என்னோட பட்டாப்பட்டிக்கு பதில் சொல்ல
இந்த பதினெட்டு பட்டிலயும் ஆளில்ல

என்ற பாடல் சூப்பர் ஹிட்டாம்... மெய்யாலுமா தல??

மதுரை அருகே மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் நடக்க இருக்கிறது.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.

தன் புதிய படமான “மேதை” பற்றி சொல்லும் போது, முன்பு சிவாஜி நடித்து வெளிவந்த படிக்காத மேதை அளவு இருக்கும் என்று கூறினார்...

(இந்த படத்தில் ரீ-எண்ட்ரி ஆவதன் மூலம் ”மேதை கி"ராமராஜன்" திரையுலகில் முன்னணியில் இருக்கும் டெர்ரர் ஸ்டார்ஸ் டி.ராஜேந்தர், ஜெ.கே.ரித்தீஷ் மற்றும் யுனிவர்சல் ஹீரோ சாம் ஆண்டர்சன் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று அகில உலக கி"ராமராஜன்" ரசிகர் மன்றம்? தெரிவித்துள்ளது).

Wednesday, July 14, 2010

BITS, Pilani - Dubai - Vacancies

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் மிக பிரபலமான BITS, Pilani கல்வி நிறுவனத்தின் துபாய் கிளையில் கீழ்க்கண்ட பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று அங்கே பணிபுரியும் என் தோழர் செல்லதுரை என்பவர் மூலமாக அறிந்தேன்..

1. Technical Assistants - Electrical & Electronics Engg. / Electronics & Instrumentation Engg (Male)
2. Senior Lecturer / Lecturer - IT (Male)
3. Executives / Assistants - Finance & Accounts (Male)
4. Executives / Assistants - HR (Male)
5. Senior Secretaries / Secretaries (Male)

மேலும் விரிவான தகவலுக்கு /மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்..

http://www.bitsdubai.com/vacancies.html

Thursday, June 17, 2010

"பன்ச் டயலாக்ஸ் 2010"

வெண் திரையில் அதிர அடிக்கும் இசை...

கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்...

தமிழ்நாட்டில் பிறந்த யாரும் பன்ச் டயலாக் என்பதை அறியாமலோ,தெரியாமலோ அல்லது பேசாமலோ இருந்திருக்க வாய்ப்பேயில்லை... ஏனென்றால், பன்ச் டயலாக்கும் தமிழ்நாடும் பிரிக்க முடியாத ஒன்று..

அதை மனதில் வைத்து "பன்ச் டயலாக்ஸ் 2010" என்கிற புதிய நிகழ்ச்சியில் இன்று நாம் பலதரப்பட்ட வி.ஐ.பி.களை சந்தித்து அவர்களின் லேட்டஸ்ட் "பன்ச் டயலாக்ஸ்" என்னவாக இருக்கும் என்று கேட்டோம்... அவர்கள் சொன்னது இங்கே.... கவிஞர்கள் கொஞ்சம் பெருசா கவிதை மாதிரி பன்ச் டயலாக்ஸ் சொன்னது ரசிக்க வைத்தது.....(சிறிது முன்னே, பின்னே இருந்தாலும்) அப்படியே இதோ உங்கள் பார்வைக்கு)..........

கருணாநிதி : "கொடநாடு உல்லாசி"யே..
ஊரெல்லாம் உன்னை ஏசியே...
வருதே பேசியே..

ஜெயலலிதா : வயது எண்பதை கடந்த ஏழை
என்று தன் வயதையும், வளமையையும்
மறைத்து பேசி வரும் ஒரு கோழை,
அது தமிழ்நாட்டை பிடித்த பீடை...

ஜெக‌த்ர‌ட்ச‌க‌ன் : என் ர‌த்த‌த்தில் குறையாத‌ க்ளூகோஸே...

உன்னை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இங்கே அட்டு பீஸே...
வாழும் வள்ளுவனே... அகில உலக நல்லவனே..
அவனியில் வல்லவன் என்றும் நீ ஒருவனே ....


ரஜினிகாந்த் : சுத்துனா உலகம்...
சும்மா எதாவது சொன்னா கலகம்...
தேவலோக தலைவன் இந்திரன்...
அகில உலகுக்கும் தலைவன் என் “எந்திரன்”...
இது எப்படி இருக்கு!!?? ஹா...ஹா...ஹா...ஹா...

விஜயகாந்த் : ஊத்தற அளவு கம்மி...
விலையோ ரெம்ப அதிகம்...
ரேசன்ல இல்லடா.. பரதேசி...
டாஸ்மாக்ல...ஆங்....
என் விழியே என்றும் சிவப்பு...
அதில் தெரியுதா பாரு நெருப்பு...

கமல்ஹாசன் : நான் விடும் “மன்மத அம்பு”
இது இளைஞர்களுக்கான காதல் விருந்து
இதை வெண்திரையில் வந்து அருந்து
இல்லையேல் பின்னால் நீ வருந்து

விஜய் : நான் சொல்லி அடிச்சா குச்சி..
சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சு..
வானத்துல பறக்கறதுக்கு நான் புறா இல்ல...
அந்த கடலையே கலக்கற “சுறா”....

(யப்பா... போதும்டா சாமி... இதுக்கே நாடு தாங்கலடா.....)

அஜித் : நான் நெறைய பேஸ் மாட்டேன்...

கொஞ்சமா பேஸ்வேன்...
கொஞ்சமா பேஸ்னா அப்றம் நெற்ய பேஸ்வேன்...
புரியுதா... அது!!!

சிம்பு : போட்டியில யாரு மொதல்ல வராங்கன்றது முக்கியம் இல்ல...
யாரு லாஸ்ட்ல ஃபர்ஸ்டா நான் வரேன்ங்கறது தான் முக்கியம்...
ஏதாவது புரிஞ்சா சரி?

தமிழ் கரடி : அஞ்சும், அஞ்சும் பத்து...
நீ எப்போவும் ஊர சுத்து...
தயிர் கடையும் மத்து...
மாட்டுனா, மனவே என்ன நாலு மாத்து மாத்து...

அழகிரி : அண்ணன் அடிச்சா கலங்கும் மதுரை...
பாய்ந்து ஓடியதே பந்தயத்தில் குதிரை..

பேரரசு : கடையில வாங்குனேன் அவல்பொரி...
அண்ணன் கலக்கி அடிச்சா தீப்பொறி..
சுத்தி அடிச்சா சூறாவளி...
சுத்தாம ஆடினா கதகளி...

தங்கர் பச்சான் : என் பேரு தங்கர் பச்சான்..
நான் தங்க தமிழ் நாட்டின் அமிதாப் பச்சன்...
இதை எல்லாருக்கும் சொல்லி வச்சேன்...
இத கேட்ட எல்லாரையும் மிரள வச்சேன்

பரத் : பழத்த பெசஞ்சா பஞ்சாமிர்தம்...
பார்த்து பயந்தா காண்டாமிருகம்...
அதிர வைப்பான் ஆறுமுகம்...
இனிமே எனக்கு ஏறுமுகம்...

விஷால் : ஒண்ணு, ரெண்டு நம்பர்...
இதுல நானும் ஒரு மெம்பர்...
பிராந்தில கலந்தேன் பெப்பர்...
அத வாந்தி எடுக்காம அடிச்சா சூப்பர்...

விவேக் : என் பேச்சால எல்லாருக்கும் வச்சேன் ஆப்பு
இப்போ அதே ஆப்பை, எனக்கே வச்சுக்கிட்டேனே மாப்பு

வடிவேல் : நானு என்னிக்குமே வாய் சொல்லுல வீரர்....
ஆனாலும், என்னிய பார்த்தா பயலுவ எல்லாருக்கும் டெர்ரர்
என்னிய அதட்டி பாக்குறான் சிங்கமுத்து....
அவனுக்கு போடறேன் நான்
நெத்தியில பத்து...

சந்தானம் : நொங்கு எடுத்து, கிழிஞ்சது டங்குவாரு
தேங்காய்ல இருந்து தொங்குது தேங்கா நாரு
சூப்பர் ஸ்டார் கூட நடிச்சேன் அது ஜோரு
ஓட விட்டு எல்லாரையும் சுளுக்கு எடுக்குறேன் பாரு...

கவுண்டமணி : ஒலகத்துல ஒரே அறிவாளி ஜி.டிநாயுடு
என் பக்கத்துல வராதே... அப்டியே நீ ஓடிடு...

செந்தில் : எனக்கு பேச வராது பஞ்ச் டயலாக்கு
கவுண்டரால நான் ஆனேன்
என்னிக்குமே பேக்கு

வைரமுத்து : பிடறி சிலிர்க்க ராஜநடை போட்ட தமிழ் சிங்கம்....
அது தமிழ்நாடு நமக்கு தந்த வாழ்வியல் அங்கம்
கோபாலபுரத்தின் ஒரு அடையாளம்...
தமிழுக்கும், தமிழர்க்கும் அதுவே கடிவாளம்...

அன்று நிலவில் பாட்டி சுட்டாள் ஒரு வடை
அதை அடைய தமிழனுக்கு இல்லை தடை...

வாலி : துள்ளி நடந்து வரும் தமிழே
தத்தி தாவி வரும் குமிழே
வீர நடை போடும் சிங்கமே
மாசு குறையாத தமிழ் தங்கமே

எழுத நினைத்தேன் உன் வரலாறு
அதுக்கு தமிழே எனக்கு தகராறு

கவிஞர் விஜய் :

இருளிலும் ஒளிரும் குமிழே
பகலிலும் மிளிரும் தமிழே
எங்கெங்கு தேடினும் இனியே
பாரிலும் உமக்கில்லை இணையே