Monday, July 19, 2010

அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”


கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படமான 'மேதை' என்ற படத்தின் மூலம் தனது மறுபிரவேசத்தை நிகழ்த்தப் போகிறார் ராமராஜன்.

(இதுவரை பட்டாப்பட்டி டவுசரில் அனைத்து கிராமங்களையும் கலக்கி வந்த "மாமேதை கி”ராமராஜன்" இந்த "மேதை" படத்தில் ஜேம்ஸ்பாண்ட் எல்லாம் அசரும் வகையில் கோட் சூட் அணிந்து கலக்குகிறார். ஆனாலும் ரசிகர்களை (!!???) ஏமாற்றாமல் ஒரு பாடல் காட்சியிலாவது பட்டாப்பட்டி டவுசர் அணிந்து கையில் பால்சொம்புடன் வருவார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).

இது அவருக்கு 44-வது படம். (முந்தைய 43 படங்களிலும் டவுசர் மற்றும் பட்டாப்பட்டி அணிந்து நடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமை அண்ணனுக்கு உண்டு).

இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியராக வருகிறார் ராமராஜன். வழக்கம்போல கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அவரது ரசிகர்கள் (!!???) எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்டதாக அசத்தலாக தயாராகிறதாம்.

படத்தின் முக்கிய பலமாக வடிவேலு நடிக்கிறார். இதுவரை கவுண்டமணியுடன் மட்டுமே கலக்கி வந்த ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மதுரை மண்ணின் மைந்தருடன் இணைந்து காமெடி பண்ண தயாராகிறார். (வடிவேலு இந்த படத்துல அண்ணன் ”மேதை”யோட மேட்டர முடிச்சுடுவாருன்னு நெனக்கறேன்).

புதுமுக நாயகி ஒருவர் ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா. பாடல்கள் ரிலீஸாகி பட்டைய கெளப்புதாமாம்...

“மேதை” அறிமுக காட்சியில் வரும் :

என்னோட பட்டாப்பட்டிக்கு பதில் சொல்ல
இந்த பதினெட்டு பட்டிலயும் ஆளில்ல

என்ற பாடல் சூப்பர் ஹிட்டாம்... மெய்யாலுமா தல??

மதுரை அருகே மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் நடக்க இருக்கிறது.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.

தன் புதிய படமான “மேதை” பற்றி சொல்லும் போது, முன்பு சிவாஜி நடித்து வெளிவந்த படிக்காத மேதை அளவு இருக்கும் என்று கூறினார்...

(இந்த படத்தில் ரீ-எண்ட்ரி ஆவதன் மூலம் ”மேதை கி"ராமராஜன்" திரையுலகில் முன்னணியில் இருக்கும் டெர்ரர் ஸ்டார்ஸ் டி.ராஜேந்தர், ஜெ.கே.ரித்தீஷ் மற்றும் யுனிவர்சல் ஹீரோ சாம் ஆண்டர்சன் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று அகில உலக கி"ராமராஜன்" ரசிகர் மன்றம்? தெரிவித்துள்ளது).

21 comments:

பெசொவி said...

சூடான தகவல்கள்.....சுவையான கருத்துகள்......."கி"ராமராஜனின் புகழைப் பரப்பும் மற்றுமொரு பதிவு!

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
சூடான தகவல்கள்.....சுவையான கருத்துகள்......."கி"ராமராஜனின் புகழைப் பரப்பும் மற்றுமொரு பதிவு!//

******

நன்றி தலைவா.....

Gayathri said...

ஏதான சொன்ன வம்பா போகும்..பெரிய ஹீரோக்கள் எல்லாரும் கொடுமை படுத்தும் பொழுது இவர மட்டும் என் நாம திட்டனும் பாவம் இவரோட சில படங்களும் நல்லத்தான் இருக்கு...

R.Gopi said...

//Gayathri said...
ஏதான சொன்ன வம்பா போகும்..பெரிய ஹீரோக்கள் எல்லாரும் கொடுமை படுத்தும் பொழுது இவர மட்டும் என் நாம திட்டனும் பாவம் இவரோட சில படங்களும் நல்லத்தான் இருக்கு...//

********

வாங்க காயத்ரி...

வம்பெல்லாம் ஒண்ணும் இல்ல... எல்லாரும் மொக்கை படம் நடிச்சு இருக்காங்க... யார் இல்லேன்னு சொன்னாங்க...

ராமராஜன நாம யாரும் திட்ட வேண்டாம்... இவரோட சில படமும் நல்லா தான் இருந்தது...

Menaga Sathia said...

என்னவோ போங்க....இப்படி ஒரு படம் ரிலிஸ் ஆகப்போகுதுன்னு இப்பதான் தெரிந்தது...ம்ம்ம்

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
என்னவோ போங்க....இப்படி ஒரு படம் ரிலிஸ் ஆகப்போகுதுன்னு இப்பதான் தெரிந்தது...ம்ம்ம்.//

******


வாங்க மேனகா....

என்னவோ போங்க... இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆகுதுன்னு உங்களுக்கு தெரியாதுன்னு “மேதை”க்கு தெரிஞ்சா நெம்ப வருத்தப்படுவாரு... சொல்லிட்டேன்...

R.Gopi said...

இந்த பதிவிற்கு தமிழிஷ்/இண்ட்லி கூட்டணியில் வாக்களித்து பதிவை பிரபலப்படுத்திய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

இந்த பதிவு பாப்புலர் ஆனது போல், “மேதை” படமும் பாப்புலர் ஆகி பட்டையை கிளப்பட்டும். என்ன ஒண்ணு, “எந்திரன்” கூட மட்டும் ரிலீஸ் பண்ணாம இருக்கணும்.. கி”ராமராஜன்” ஐடியா என்னவோ, தெரியலியே!!

திவ்யாஹரி said...

அவர் நடிச்ச 13 படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனதாம் கோபி.. யாரும் இப்படி தொடர்ந்து ஹிட் கொடுக்கலாம்.. எவ்வளவோ பார்க்குறோம் இதை பார்க்க மாட்டமா?

deen_uk said...

unga lollukku alave illama potchu gopi!!! paavam patta patti dowsar..!! padam varum munnalaye dowsara kilitchutteengale!!
(how can i type the comments in tamil? coz there is no option to do that?)
(i think tht u remember me gopi.do u remember tht i replied a comment 4 u in onlysuperstar?)

R.Gopi said...

//திவ்யாஹரி said...
அவர் நடிச்ச 13 படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனதாம் கோபி.. யாரும் இப்படி தொடர்ந்து ஹிட் கொடுக்கலாம்.. எவ்வளவோ பார்க்குறோம் இதை பார்க்க மாட்டமா?//

*********

வாங்க திவ்யா...

நானும் அவரோட மேதையை வாழ்த்தி தானே கமெண்டியுள்ளேன்.. கீழே பாருங்க...

//இந்த பதிவு பாப்புலர் ஆனது போல், “மேதை” படமும் பாப்புலர் ஆகி பட்டையை கிளப்பட்டும். //

புறா, குருவி எல்லாம் பார்த்தவங்க இனிமே தைரியமா எந்த படம் வேணும்னாலும் பார்க்கலாம்...

R.Gopi said...

//deen_uk said...
unga lollukku alave illama potchu gopi!!! paavam patta patti dowsar..!! padam varum munnalaye dowsara kilitchutteengale!!
(how can i type the comments in tamil? coz there is no option to do that?)
(i think tht u remember me gopi.do u remember tht i replied a comment 4 u in onlysuperstar?)//

*******

வாங்க தீன் பாய்...

நலம் நலமறிய ஆவல்...

தமிழில் டைப்ப அழகி அல்லது NHM ரைட்டர் டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளுங்கள்...

உங்கள மறக்க முடியுமா “தல”?

Unknown said...

//அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”"//

repeataaaaaaaaaaaaaiiiiiiiiiiiiiii

R.Gopi said...

//jaisankar jaganathan said...
//அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”"//

repeataaaaaaaaaaaaaiiiiiiiiiiiiiii//

வாங்க தலைவா...

ரொம்ப நாள் ஆச்சே பார்த்து.... வருக வருக....

Anonymous said...

பதிவெல்லாம் நல்லா தான் இருக்கு..
அதெல்லாம் சரி..
அது யாருங்க நம்பத்தகுந்த வட்டாரம்??

R.Gopi said...

//Indhira said...
பதிவெல்லாம் நல்லா தான் இருக்கு..//

சரி... நன்றி...

//அதெல்லாம் சரி..
அது யாருங்க நம்பத்தகுந்த வட்டாரம்??//

நம்பத்தகுந்த வட்டாரம்னு எங்க சொல்லி இருக்கேன்.... நம்பத்தகாத வட்டாரம்னு தானே சொல்லி இருக்கேன்!!!!

வருகை தந்து, பதிவை படித்து, கமெண்டியதற்கு மிக்க நன்றி இந்திரா..

ஜெட்லி... said...

துபாய்ல முன்னாடியே படத்தை பார்த்துட்டு சொல்லுங்க...
படம் கண்டிப்பா மெகா ஹிட்...ஹிட் ...ஹிட்

R.Gopi said...

// ஜெட்லி... said...
துபாய்ல முன்னாடியே படத்தை பார்த்துட்டு சொல்லுங்க...
படம் கண்டிப்பா மெகா ஹிட்...ஹிட் ...ஹிட்//

***********

ஹலோ ஜெட்லி....

ஒரு மேட்டர் தெரியுமா... துபாய்ல ”சிவாஜி”, “எந்திரன்” மாதிரி சின்ன சின்ன படங்கள் தான் ரிலீஸாகும்....

“மேதை” போன்ற பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதில்லை...

ஊர்ல நீங்க எல்லாரும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க தல...

R.Gopi said...

இந்த பதிவிற்கு தமிழிஷ் / இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.......

soundarapandian
gokula15sai
RDX
menagasathia
tharun
Karthi6
suthir1974
kiruban
arasu08
boopathee
paarvai
kosu
kvadivelan
amalraaj
subam
Kummachi
venkatnagaraj
niron
jetliidli

அன்புடன் அருணா said...

அட!அப்பிடியா??

R.Gopi said...

//
அன்புடன் அருணா said...
அட!அப்பிடியா?//

*******

அட ஆமாமுங்கோ.....

Unknown said...

Ippa Methai ya.. ithukku munnadi Velannu oru padam panratha kathuvakkula oru seithi athu innachu munnal MP romba kalaikkatheenga avaru azhthuduvaru..

Nice one gopi,