Saturday, April 24, 2010

எந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து


பங்கேற்போர் : இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு
வைரமுத்து.

ஏ.ஆர்.ரஹ்மான் : என்னை தேடி வந்திருக்கற உங்கள் இருவருக்கும் என்
காலை வணக்கம்..

பரஸ்பர வணக்கங்கள் முடிகிறது.

வைரமுத்து : தம்பி ரஹ்மான் அவர்கள் சூப்பர் ஸ்டார் நடிக்கும், அகிலத்தை அதிர செய்யப்போகும், பிரம்மாண்டமான "எந்திரன்" திரைப்படத்தில் 5 பாடல்கள் இருப்பதாக என்னிடம் மெட்டமைத்து காட்டினார். ஆஹா, அந்த மெட்டு, அத்தனையும் தேன் சொட்டு, அவை அனைத்தும் சூப்பர் ஹிட்டு.....எனக்கு ஆசை அதிகம் இல்லை. ஆகவே, அந்த 5 பாடல்களை தவிர படத்தின் மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதட்டும்.......


வாலி : தம்பி வைரமுத்து அவர்களே எனக்கு தமிழும் தெரியும், ஞான் கணக்கும் அறியும்........

வைரமுத்து : ஒன்றே சொன்னீர்கள், நன்றே சொன்னீர்கள், அதையும் இன்றே சொன்னீர்கள். பல்லில் அடிபட்டால் பல்வலி, ஒரு பாடலின் முதல் வரி பல்லவி. இதோ, சூப்பர் ஸ்டார் அறிமுகமாகும் "எந்திரன்" பட பாடலின் பல்லவி :

எந்திரன் எந்திரன் எந்திரன்
எதிர்காலம் அறிந்த எந்திரன்
இவன் தந்திரன், தந்திரன், தந்திரன்
புவியை ஆள வந்த இந்திரன்

வாலி : ஐயோ, ஐயோ, இது என்ன தமிழுக்கு வந்த சோதனை....... முதல் வரியில் ஏன் படத்தின் பெயர் வரவேண்டும்..... ரஹ்மான் அவர்களே. ..... இதோ என் பாடலை கேளுங்கள்..........

வா வா வா வா வா வசீகரா
அந்த வானமே வசப்படுமே வசீகரா
தா தா தா தா தா வசீகரா
உன் சம்மதம் தாடா வசீகரா ........

வைரமுத்து : கவியே இது என்ன தமிழா? நீங்கள் இதுவரை இந்த வடுகப்பட்டி காரனின், தமிழை முழுமையாக கேட்டதில்லை என நினைக்கிறேன்... இதோ, ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமாக, என் தமிழ் உங்கள் செவிகளுக்கு :

குப்பியில் இருந்து கரு மை எடுத்து,
அதில் என் தமிழை கலந்து,
நான் எழுதும் பாடல் கேட்டு,
தமிழ் சேவல் கொக்கரிக்கும்,
தமிழ் சோடா கொப்பளிக்கும்.

இது எப்படி இருக்கிறது முதுமை கவி வாலி அவர்களே?

ஏ.ஆர்.ரஹ்மான் : ஆஹா, ஆஹா.... வைரமுத்து அவர்களே... நான் சமீப காலத்தில் கேட்ட மிக நல்ல தமிழ் வரிகள் இவைதான்...... வாழ்த்துக்கள்......

வாலி : பொறாமையின் பிறப்பிடமே, வஞ்சகத்தின் இருப்பிடமே, கொஞ்சம் அடக்கி வாசி... என் பாடலை நீ நன்கு வாசி, பின் நீ எழுதுவது தமிழ் தானா என்று யோசி!!

வைரமுத்து : எதுகை மோனைகளை சொல்லி, நீ எழுதும் தமிழ் உயிர்கொல்லி. தமிழ் மக்கள் தமிழை மறக்க நீங்கள் எடுக்கும் முயற்சி விரைவில் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் : கவிஞர்களே, பாடல் ஏதாவது இருக்கா இல்லையா, தேறுமா?? எனக்கு வேறு படங்களின் வேலைகளும் இருக்கின்றன..... பல ஹிந்தி படங்கள் ஏற்கனவே பெண்டிங்கில் இருக்கிறது.....

வாலி : ரோபோக்களை கட்டி மேய்க்கும் நம் நாயகனுடன் படத்தின் நாயகி கிடைக்கும் ஒய்வு நேரத்தில், ஆடிப்பாடும் அடுத்த டூயட் பாடல் இதோ ........

என் தலைவா நீ ஒன்று
நான் சேர்ந்தால் நாம் இரண்டு
நம் மழலை வந்தால் நாம் மூன்று
நான் மறை வேதமோ நான்கு.........

வைரமுத்து : இது என்ன டூயட் பாடலா இல்லையென்றால் LKG பாடலா??. ரஹ்மான் அவர்களே, இதை கேளுங்கள்........

என் தலைவா நீ ஓடி வா வா
ஓடி வந்து அணைக்க வா வா
தர வேண்டும் கோடி முத்தம்
அதுவும் இனிக்கும் நித்தம் நித்தம்

வாலி : அடடா, இவன் கொஞ்சம் நல்லாவே தமிழ் எழுதுவான் போல இருக்கே... ரஹ்மான நம்ம பக்கம் வளைக்க ட்ரை பண்ணுவோம்..... ரஹ்மான், இந்த பாட்டு கேளுங்க.....

தலைவா நீ சிலிகான் சிங்கம்
உனக்காகத்தானே என் அங்கம்
காத்திருக்கு சீக்கிரம் வாடா
போத்திக்கத்தான் போர்வையாய் வாடா

ஏ.ஆர்.ரஹ்மான் : வாலி அண்ணா, இந்த பாட்டு சூப்பர். இத ஒகே பண்ணிடலாம். நெக்ஸ்ட்.

வைரமுத்து : ஆஹா, வாய்ப்பு நழுவி விட்டதே?? என்ன செய்யலாம்?? வாலி அவர்களே, முன்பு கூட, நீங்கள் ஒரு பாடல் எழுதினீர்கள்... ”அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே” என்று...... நீர் எழுதிய அந்த பாடலில் குறை இருந்தது புளுகு கவிஞரே !!!

வாலி : வேண்டாம் அன்பரே....அந்த பாடலை குறைகூறினால் பொறுத்து கொள்ள மாட்டேன்..... அம்மா என்றழைக்காத ஒரு உயிர் உண்டோ, இந்த பூமியில்??

வைரமுத்து : எந்த சர்ப்பமாவது அம்மா என்று சீறியதை கேள்விப்பட்டு இருக்கிறீரா? இல்லை, எந்த கரடியாவது அம்மா என்று கதறியதை காட்ட முடியுமா?? நான் கண்ட கருங்குயில் கூட கூ கூ என்று தானே கூவுகிறது? இதில் இருந்தே தெரிய வில்லை, நீர் ஒரு புளுகு மூட்டை கவிஞர் என்று?

ஏ.ஆர்.ரஹ்மான் : ஐயோ, இவனுங்க ரெண்டு பேரோட இம்சை தாங்க முடியலையே... பாட்டு எழுத கூப்பிட்டா, இவனுங்களோட சண்டையில இந்த தமிழை கேட்டு கேட்டு, என் தலையே வீங்கி போச்சே....... மொதல்ல இவனுங்கள தொரத்த ட்ரை பண்ணுவோம்......

சரி சரி கவிஞர்களே, உங்க ரெண்டு பேருக்குமே ஆளுக்கு 3 பாட்டு குடுத்துடலாம்னு நெனச்சு, "எந்திரன்" படத்துல பாட்டுங்கள 5-ல இருந்து, 6-ஆ மாத்தினேன். ஆனா, இப்போ உங்களோட இந்த சூப்பர் மூட பார்த்த உடனே, அத கெடுக்காம, அந்த 6 பாட்டுக்களையும் அப்படியே நா.முத்துகுமார், பா.விஜய் இந்த ரெண்டு பேரை வச்சு எழுத சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்.....
அப்போதான், ”பல்லேலக்கா பல்லேலக்கா” மாதிரி ஹிட் பாடலும், ”ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்” மாதிரி புரியாத சூப்பர் ஹிட் ஆகர பாட்டுங்க எல்லாம் கிடைக்கும்......... அப்புறம் வேற படத்துக்கு உங்க ரெண்டு பேரையும் கூப்பிடறேன்....... வணக்கம் ......

பாடல் எழுத சான்ஸ் கிடைக்காது என்று தெரிந்த உடன், இரண்டு கவிஞர்களும் ஒருவர் ஜிப்பாவை ஒருவர் கிழிக்க ஆரம்பிக்க, கவிஞர்களின் கையில் இருந்த பாடல் புத்தகங்கள் காற்றில் பறக்க ஆரம்பிக்க....இந்த சாக்கில் வாலி, வைரமுத்து மேல் தன வாய் தாம்பூலத்தை பீய்ச்சி அடிக்க, அங்கே, ரத, கஜ படைகள் ஏதுமின்றி ஒரு போர் உருவாவதை கண்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தன் ரெகார்டிங் ஸ்டூடியோவின் பின்வாசல் வழியாக தலை தெறிக்க ஓடுகிறார்.......

ஆர்.கோபி

(நெடு நாட்களுக்கு முன் எழுதியது......)

31 comments:

ரோகிணிசிவா said...

ஏங்க இப்பிடி ?????

R.Gopi said...

//ரோகிணிசிவா said...
ஏங்க இப்பிடி ?????//

*******

ஏங்க எப்படி??

நல்லா தானே போயிட்டு இருக்கு!!??

Aba said...

//வாலி : பொறாமையின் பிறப்பிடமே, வஞ்சகத்தின் இருப்பிடமே, கொஞ்சம் அடக்கி வாசி... என் பாடலை நீ நன்கு வாசி, பின் நீ எழுதுவது தமிழ் தானா என்று யோசி!!//

பாத்து... சுக்ரீவன் வந்துடப் போறாரு..

Aba said...

//என் தலைவா நீ ஒன்று
நான் சேர்ந்தால் நாம் இரண்டு
நம் மழலை வந்தால் நாம் மூன்று
நான் மறை வேதமோ நான்கு.........//

இதைத்தானே நம்ம கந்தசாமியில ஒன் டூ த்ரீ ன்னு பாடுறாங்க ஸ்ரேயா?

//வாலி : வேண்டாம் அன்பரே....அந்த பாடலை குறைகூறினால் பொறுத்து கொள்ள மாட்டேன்..... அம்மா என்றழைக்காத ஒரு உயிர் உண்டோ, இந்த பூமியில்?//

இவர் என்ன அதிமுக காரரா? அம்மா அம்மான்னு உருகுறாரு? வீட்டுக்கு ஆட்டோ வரும் ஜாக்கிரத!

Aba said...

//ரத, கஜ படைகள் ஏதுமின்றி ஒரு போர் உருவாவதை கண்டு//

ஆகா... நீரே பாட்டெழுதலாம் போலிருக்கே!

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா..... வைரமுத்து சார், வாலி சார் போடுற "சண்டையும்" எந்திரன் படத்தில் இருக்குனு சொல்லி முடிப்பீங்களோ என்று நினைத்தேன்.

S Maharajan said...

super tahala
thaivaruku yetra varigal

Paleo God said...

//தமிழ் சோடா கொப்பளிக்கும்//

புல்லரிக்குதுங்க கோபி!

:))

Simple_Sundar said...

ஹா...ஹா.. .ஹா... சற்று முன்பே இதை பற்றி தெரிந்திருந்தால் குமுதம் அல்லது விகடனில் இதை வெளியிட முயற்சித்திருக்கலாம். படப்பிடிப்பு முடிந்து பட ரிலீஸ் பற்றி பேசும் இந்த தருணம் டூ லேட். எனிவே, கலக்கல் காமெடி கலாட்டா.

- சுந்தர்
Onlysuperstar.com

R.Gopi said...

//கரிகாலன் said...
//வாலி : பொறாமையின் பிறப்பிடமே, வஞ்சகத்தின் இருப்பிடமே, கொஞ்சம் அடக்கி வாசி... என் பாடலை நீ நன்கு வாசி, பின் நீ எழுதுவது தமிழ் தானா என்று யோசி!!//

பாத்து... சுக்ரீவன் வந்துடப் போறாரு..//

*********

எனக்கும் அதே பயம் தான் தலைவா..

R.Gopi said...

//கரிகாலன் said...
//என் தலைவா நீ ஒன்று
நான் சேர்ந்தால் நாம் இரண்டு
நம் மழலை வந்தால் நாம் மூன்று
நான் மறை வேதமோ நான்கு.........//

இதைத்தானே நம்ம கந்தசாமியில ஒன் டூ த்ரீ ன்னு பாடுறாங்க ஸ்ரேயா?

//வாலி : வேண்டாம் அன்பரே....அந்த பாடலை குறைகூறினால் பொறுத்து கொள்ள மாட்டேன்..... அம்மா என்றழைக்காத ஒரு உயிர் உண்டோ, இந்த பூமியில்?//

இவர் என்ன அதிமுக காரரா? அம்மா அம்மான்னு உருகுறாரு? வீட்டுக்கு ஆட்டோ வரும் ஜாக்கிரத!//

*******

ஸ்ரேயா கந்தசாமில பாடுனது இத தானா??

அதிமுக, ஆட்டோன்னு ஒரே ரைமிங்கா இருக்கே... மிரட்டுறதுல என்ன தல ரைமிங்...

R.Gopi said...

// கரிகாலன் said...
//ரத, கஜ படைகள் ஏதுமின்றி ஒரு போர் உருவாவதை கண்டு//

ஆகா... நீரே பாட்டெழுதலாம் போலிருக்கே!//

********

நான் தயார்... இதோ உங்களை குறித்து ஒன்று, இரண்டு, மூன்று என்று பாட்டு எழுதவா??

R.Gopi said...

//Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா..... வைரமுத்து சார், வாலி சார் போடுற "சண்டையும்" எந்திரன் படத்தில் இருக்குனு சொல்லி முடிப்பீங்களோ என்று நினைத்தேன்.//

********

ஹலோ சித்ரா...

நீங்க வெறுமனே பதிவுகள் மட்டும் போடற பதிவர்னு நெனச்சேன்... இல்ல... இந்த இடத்துல ஒரு ஃபைட் வச்சுடலாம்னு சொல்ற ஸ்டண்ட் மாஸ்டர்னு சொல்லாம சொல்றீங்களே...

R.Gopi said...

//S Maharajan said...
super tahala
thaivaruku yetra varigal//

*******

வாங்க மகராஜன்...

இதே மாதிரி வரிகளோட நெஜமாவே பாட்டு வந்தா நான் பொறுப்பு இல்லேங்க...

R.Gopi said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
//தமிழ் சோடா கொப்பளிக்கும்//

புல்லரிக்குதுங்க கோபி!

:))//

*********

ஹா...ஹா...ஹா... வாங்க சங்கர்...

முத்தமிழோடு பொங்கு தமிழையும் முயற்சி செய்ததில் இங்கு தமிழ் சேவலும் கொக்கரித்தது... தமிழ் சோடாவும் கொப்பளித்தது... சரிதானே சங்கர்...

R.Gopi said...

//Simple_Sundar said...
ஹா...ஹா.. .ஹா... சற்று முன்பே இதை பற்றி தெரிந்திருந்தால் குமுதம் அல்லது விகடனில் இதை வெளியிட முயற்சித்திருக்கலாம். படப்பிடிப்பு முடிந்து பட ரிலீஸ் பற்றி பேசும் இந்த தருணம் டூ லேட். எனிவே, கலக்கல் காமெடி கலாட்டா.

- சுந்தர்
Onlysuperstar.com//

********

வாங்க சுந்தர்....

நம்ம தோழர்கள் அனைவரும் படிச்சு என்ஜாய் பண்ணினா, அதுவே எனக்கு போதும் தலைவா...

infopediaonlinehere said...

sariyana buildup

R.Gopi said...

//infopediaonlinehere said...
sariyana buildup//

******

அட... கரீட்டா சொன்னபா...

டேங்க்ஸ்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// பல்லில் அடிபட்டால் பல்வலி, ஒரு பாடலின் முதல் வரி பல்லவி.//

ஆகா... வைய்யிரமுத்து பிச்சு ஒதர்றாருனு பார்த்தா,
ரெண்டு பேரையுமே துணியைப் பிச்சிக்க வெச்சிட்டீங்களே!
(ஆனாலும் ஓட்டவாலி, வய்யிரமுத்து ரெண்டு பேர்
ஃபோட்டோ அருமை)

R.Gopi said...

//NIZAMUDEEN said...
// பல்லில் அடிபட்டால் பல்வலி, ஒரு பாடலின் முதல் வரி பல்லவி.//

ஆகா... வைய்யிரமுத்து பிச்சு ஒதர்றாருனு பார்த்தா,
ரெண்டு பேரையுமே துணியைப் பிச்சிக்க வெச்சிட்டீங்களே!
(ஆனாலும் ஓட்டவாலி, வய்யிரமுத்து ரெண்டு பேர்
ஃபோட்டோ அருமை)//

*********

வாங்க நிஜாம் பாய்....

ரொம்ப ரசிச்சு இருக்கீங்க பதிவை...

மிக்க நன்றி...

impotenta said...

Thanks :)

R.Gopi said...

இந்த பதிவிற்கு தமிழிஷில் வாக்களித்து பதிவை பிரபலப்படுத்திய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....

menagasathia
anubagavan
chitrax
annamalaiyaan
palapattarai
VGopi
kosu
idugaiman
jegadeesh
boopathee
ashok92
subam
jollyjegan
chuttiyaar
sudha
mohanpuduvai
venkatnagaraj

R.Gopi said...

//impotenta said...
Thanks :)//

******

நன்றி தலைவா...

Anonymous said...

இந்தக் கவிதையை எல்லாம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரெபர் பண்ணீங்கனா உங்களுக்குத் தான் சான்ஸ்.. விடாதீங்க!

R.Gopi said...

//ஜெயந்தி said...
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html//

*******

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜெயந்தி... இதோ வருகிறேன்...

R.Gopi said...

//ராதை said...
இந்தக் கவிதையை எல்லாம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ரெபர் பண்ணீங்கனா உங்களுக்குத் தான் சான்ஸ்.. விடாதீங்க!//

*******

வாங்க ராதை... ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க... நன்றி... அதுவும் உங்க கமெண்ட்... யப்பா...

Unknown said...

யந்திரன் பாத்துட்டுதான் அடுத்த பதிவா. தாங்கமுடியலை தல. சீக்கிர,ம்

R.Gopi said...

//jaisankar jaganathan said...
யந்திரன் பாத்துட்டுதான் அடுத்த பதிவா. தாங்கமுடியலை தல. சீக்கிரம்//

********

வாங்க ஜெய்சங்கர்...

என் அடுத்த அதிரடி காமெடி பதிவு ரெடியாயிட்டு இருக்கு... விரைவில் பதிவேறும்...

நன்றி தலைவா....

r.v.saravanan said...

கலக்கல் கோபி

R.Gopi said...

// r.v.saravanan said...
கலக்கல் கோபி//

********

வாங்க சரவணன்....

பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

Samraj.M said...

arumai arumai gopi ji ..vazthukkal