Monday, October 19, 2009

உயிரின் உயிரே...உயிரின் உயிரே


ஏங்க.... ஏன் இவ்ளோ லேட்..... இன்னிக்கும் அந்த உபன்யாசம்தான் போயிட்டு வரீங்களா? உங்களுக்கு இது எப்படித்தான் அலுக்காம இருக்கோ? என்றாள் கோமதி.......தன் மூக்கு கண்ணாடியை கழற்றிக்கொண்டே....

கோமதி... இப்படி இந்த அழுகாச்சி சீரியல நாள் முழுக்க உட்கார்ந்து பாக்கறத விட, நான் இப்போ கேட்டுட்டு வந்த உபன்யாசம் எவ்வளவோ மேல்.... சின்ன வயசுல இதெல்லாம் கேட்டு இருந்தா, நான் வாழ்க்கைல இன்னும் கூட கொஞ்சம் நல்லவனா இருந்திருப்பேனோ என்னவோ என்றார் ராகவன்...
இப்போ மட்டும் என்னங்க, நீங்க எங்க மேல காட்டுற அன்பு மாதிரி எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்து மேல காட்ட ஆரம்பிச்சாங்கன்னா, இந்த உலகத்துல, சண்டை, சச்சரவு எதுவுமே வராதுங்க....

அதுவும், உங்க செல்ல மகளுக்கு ரெட்டை குழந்தை பொறந்து இருக்குன்னு கேள்விப்பட்டதில் இருந்து, அவங்கள பார்க்க கனடாவுக்கு எப்போ போறோம், எப்போ போறோம்னு நீங்க ஒரு நாளைக்கு பத்து, இருபது தடவையாவது கேட்டுட்டே இருக்கீங்க...
நான் கூட அப்படியே, நியூ யார்க்-ல இருக்கற நம்ம பையனையும் பாத்துட்டு வந்துடலாம்னு ஒரு ப்ளான் போட சொன்னேன். ரெண்டு ஊரையும் பார்த்துடலாம், ரெண்டு பசங்களையும் பாத்தா மாதிரி ஆச்சு... அப்படியே, பேர குழந்தைகளையும் கொஞ்ச நாள் கொஞ்சிட்டு வரலாம், என்ன சொல்றீங்க என்றாள்.
அது வந்து கோமதி, நம்ம பொண்ணு, மாப்பிள்ளை சொக்க தங்கம்.... அவங்கள பாக்கற சாக்குல அப்படியே பேர பசங்களையும் பாத்துடலாம். ஆனா, நம்ம மருமகளுக்கு அவ்வளவு ஒண்ணும், நம்ம பேர்ல ஒரு மரியாதையோ, பாசமோ இல்லையே, போன தடவ இங்க வந்தப்போ, நம்ம கூட எவ்ளோ சண்டை போட்டா?, அதனாலதான் அங்க ஏன் போகணும்னு யோசிக்கறேன் என்றார் ராகவன்...

இத பாருங்க... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க..... நாம ஒண்ணும் அவங்கள பாக்கறதுக்காக அவ்ளோ தூரம் போகல.... கனடா வரைக்கும் போறோமே, இன்னொரு 550 கிலோமீட்டர் போனா, அப்படியே பையன், மருமகள், பேர பசங்கள பாத்துட்டு வருவோமேன்னு சொல்றேன்.... நல்லா, யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க... நீங்க எது சொன்னாலும் எனக்கு ஓகேதான் என்றாள் கோமதி...
நான் எவ்ளோ சொன்னாலும், நீ கேக்க போறது இல்ல கோமதி... அதுவும் இல்லாம எனக்கு நீ, உனக்கு நான்னு ஆனதுக்கப்புறம், உன்னோட சந்தோஷம்தான் என் சந்தோஷம்... சரி, நீ சொல்ற மாதிரியே ஒரு டூர் போடுவோம், பையன், பொண்ணு, பேர பசங்க எல்லாரையும் பாத்துட்டு வந்துடுவோம்...ஓகேவா என்றார் ராகவன்..... கோமதி முகத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரசித்தவாறு.....

பிரமாதம், வெல்டன் என்ற குரலுடன், கை தட்டிக்கொண்டே கோல்டு ஃப்ரேம் போட்ட தன் மூக்கு கண்ணாடியை கழற்றியபடி, மேகா.... வயது 55, அந்த பள்ளியின் பிரின்சிபால்...
மேடையேறி வந்து, மைக் பிடித்து சொன்னார்......
இந்த வருட பள்ளி ஆண்டுவிழாவின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"யில் 8-வது வகுப்பில் படிக்கும் ராகேஷ் மற்றும் ஷீதல் ஆகிய இருவரும் ராகவன் தாத்தா, கோமதி பாட்டியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள்.... அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது.
அவர்களை போலவே உலகில் உள்ள எல்லா தம்பதியரும் ஒற்றுமையுடனும், அன்னியோன்யமாக வாழ்ந்து விட்டால், வாழ்க்கையில் சண்டை, சச்சரவு என்பதற்கான பேச்சே இல்லை, மற்ற பல குடும்ப பிரச்சனைகளுக்கும் வழியே இல்லை என்றார் பிரின்ஸிபால் மேகா.
ஆகவே இந்த வருடத்தின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"க்கான விருதை அவர்களுக்கே வழங்குகிறேன் என்று பிரின்ஸிபால் மேகா சொன்ன போது, கை தட்டலால் அரங்கே அதிர்ந்தது....

Monday, October 12, 2009

வெல்டன் வெங்கி

இந்த வருடத்தின் நோபல் பரிசு. வெங்கிடராமன் ராதாகிருஷ்ணன் அவர்களின் வேதியியல் ஆராய்ச்சிக்காக என ஊடகங்கள், அரசு பாராட்டும்போது தான் நமக்கு தெரிகிறது.

சொல்லவே இல்ல, சொல்லாமலே இப்படி ஒரு தேர்வு, போட்டி முடிவு எல்லாமா. !!! சத்தம் இல்லாம நடக்குதே. சரி தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமாவது என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்ப்போமே, என யோசித்ததில் எழுதியதுதான் இந்த பதிவு.

1900 வருடம் தொடங்கப்பட்ட சர்வதேச அளவிலான இலக்கியம், அறிவியல், சமூகம் சார்ந்த துறைகளுக்கு அளிக்கப்படும் மிக உயரிய பரிசு, அடையாளம். படத்தில் உள்ள ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்ததற்கு.

இந்திய சரித்திரம் சிலிர்க்கும் நாள். ஈன்ற பொழுதினும் பிரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டாள் நம் இந்திய தாய். நம்ம வெங்கிடராமன் ராதாகிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கிய ஒன்பதாவது இந்தியர். ம‌ற்ற எட்டு பேர் யாரென்றும் பார்த்து விடுவோம்...

1. Rabindranath Tagore (1861 - 1941) Nobel Prize for Literature (1913)
2. Sir C.V. Raman (Chandrasekhara Venkata Raman)(1888 - 1970)Nobel Prize for Physics (1930)
3. Dr. Hargobind KhoranaNobel Prize for Medicine and Physiology (1968)
4. Dr. Subramaniam ChandrasekarNobel Prize for physics (1983)
5. Mother Teresa (1910 - 1997)Nobel Prize for peace (1979)
6. Dr. Amartya SenNobel Prize for Economics (1998)
7. Other Nobel Prize Laureates related to IndiaRudyard Kipling (1865-1936)
8. V.S. Naipaul (1932- )

ரிபோசோம் தான் உடலில் புரோட்டின் தயாரிக்குது. தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான்.எல்லோருக்கும் ரிபோசோம் தான். அதனுடைய தன்மையை பரிமாணத்தை எக்ஸ் ரே மூலமாய் கலாய்ச்சு, படம் போட்ட்து தான் இவர் சாதனை. காய்ச்சல், ஜலதோஷம் எனும் உபாதைக்காக நாம் சாப்பிடும், ஆண்டிபயாடிக் எப்படி இதனுடன் ஒட்டிக்கொள்கிறது, உறவாடுகிறது என்பதை விளக்கும் மூலக்கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.

இதில் ஆச்சர்யம் உலகில் மூவர் இந்த ஒரே ஆராய்ச்சியில் தனித்தனியாய் ஈடுபட்டு, ஒரே எக்ஸ் ரேயின் மூலமாய் தீர்வும் கண்டுள்ளனர். எனவே எல்லோருக்கும் பரிசு பணம் பங்கிட்டு கொடுக்கப் பட்டு உள்ளது. நம்மாளின் பங்கு ரூ.7.3 கோடி (இது நம்ம வைகைப்புயல் வடிவேலு சம்பாதிப்பதை விட குறைவுங்கோ...).

இது மனிதனை மனித உயிரை இன்னும் கொஞ்சம் நொண்டி அடிக்க வைக்கும். ஊசலாடும் உயிரை இன்னும் கொஞ்சம் ஊதி விடும்.

சிதம்பரம் பெற்றுத் தந்த சீரிய சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள். இது டிரைலர் தான் இன்னும் என் ஆராய்ச்சி முடிவு பெறட்டும் மெயின் பிக்சர் இன்னும் இருக்கே என்ற அவரது தன்னம்பிக்கையும் தன்னடக்கத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.

இதை செய்தியாய் வெளியிடும் சர்வதேச பத்திரிக்கை இந்த பதிவை வேறு திசைக்கு கூட்டிச் செல்கிறது.

இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கர் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கர் என்று தானே கொண்டாடுகிறது.

சிதம்பரத்து மண்ணும் தில்லை அம்பலமும் அன்னியமாகி விட்டதே. சட்டென இடைமறித்து ஒரு சிந்தனை. இல்லை இதில் இந்தியன் எனும் அடையாளம் தேடுவது தவறோ!!

1979ல் அன்னை தெரசாவின் நோபல் பரிசை, நமது என்று கொண்டாடிய மனது, அவர் வந்தடைந்த பூமிதானே நம் இந்தியா என பார்க்க மறந்ததே.

அன்று பார்த்தது மனிதத்தை தானே. மனித நேயம் தானே.

பின்குறிப்பு : ஒண்ணுக்கும் உதவாத "அந்த விஷயங்களுக்கான மெனு கார்ட்" போன்ற ரேட் மேட்டர வரிஞ்சு கட்டிக்கொண்டு எழுதும் பல, சில ஊடகங்கள், வலைப்பதிவர்கள் "வெங்கி"யின் இந்த "நோபல்" சாதனை விஷயத்தை மறந்துவிட்டதே என்பது தான் ஆற்றாமை.

Friday, October 9, 2009

மொக்கையிலும் மொக்கை...இது மெகா மொக்கைடா யப்பா...தாங்க முடியலேடா சாமி...
உலக மகா மொக்கைஸ்...பெரிய லிஸ்ட்டட்ட்ட்ட்ட்ட்ட்......
எனக்கு ஒரு சந்தேகம்...

நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.

ஓவியக் கலைன்னா படம் வரையறது.

அப்ப தவக்களைன்னா?

- நடு ரோட்டில் புரளாமல் படுத்துக் கொண்டு யோசிப்போர் சங்கம்

வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.

உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார்.

இன்றைய தத்துவம் 2

என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,
அதால,
டிகிரி வாங்க முடியாது!!!

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்

நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கணும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

குங்குமம்

குங்குமம் - இந்த வாரம்
சந்தனம் - அடுத்த வாரம்!!!

மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!

நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...
நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....
நாட்டாமை : அட என்றா??
பசுபதி : அதான் என்றோம்ல!!
நாட்டாமை : ?!?!

டப்பிங் படங்கள்

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).
செவ்வாய் : எட்டுக்கால் ஏழுமலை (Spider Men)
புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)
வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)
வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)
சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சூப்பரா ஒரு மேட்டர் சொல்லியிருப்பேன்.

சர்வே

தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில் 'நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?' என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.

7.53% - ஆம்.
0% - இல்லை.
92.47% - நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல
மீண்டும் சர்தார்

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.

சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

மீண்டும் மீண்டும் சர்தார்

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார்.
சரி, அடுத்த கேள்வி!
1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் சர்தார்ஜி

பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?

கோபு : ஏண்டா அவ‌னை போட்டு அடிக்க‌றாங்க‌... அவ‌ன் ந‌ல்ல‌வ‌ன் ஆச்சே..

பாபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

குறுக்கே

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

இம்சை அரசன் 24ம் புலிகேசி

அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.

இ.அ.24.பு : ஐயகோ! இப்பொழுது என்ன செய்வது? ஆங்! 'ஓலை sending failed' என்று திருப்பியனுப்பிவிடு.

இது யார் சொத்து?

போலீஸ் : ஏண்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?
சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மெண்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்
(எங்கோ, எப்போதோ, யாரோ எனக்கு மெயிலில் அனுப்பியது....)

Saturday, October 3, 2009

பொன்மொழிகள்...(எங்கோ, எப்போதோ ப‌டித்த‌து....)

வாழ்வில் நாம் நிறைய "பொன்மொழி"களை கேட்டு இருக்கிறோம்... படித்திருக்கிறோம்...

அவை பெற்றோரிடமோ...ஆன்மீக பெரியவர்கள், கற்றறிந்தோர், சான்றோர், பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்...இப்படி யாரிடம் இருந்தும் வந்ததாக இருக்கலாம்...அல்ல‌து ஏதாவ‌து புத்த‌க‌த்தில் வந்திருக்க‌லாம்...

அப்படிப்பட்ட சில பொன்மொழிகளை நாம் இந்த பதிவில் பார்ப்போம்...

இவற்றை நாம் படிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாது, அவற்றை வாழ்வில், பின்பற்றவும் செய்தோமானால், வாழ்வின் பல நலங்களையும், வளங்களையும் நாம் அடைவது உறுதி...

Don't compare yourself with any one in this world. If you compare, you are insulting yourself.

Don't compare your wife / husband with any one in this world. If you compare, you are not fit to be their life partner.

Don't complain about others; change yourself if you want peace.

It is easier to protect your feet with slippers than to cover the earth with carpet.

No one can go back and change a bad beginning, but anyone can start now and create a successful ending.

Easy is to judge the mistakes of others. Difficult is to recognize our own mistakes.

If a problem can be solved, no need to worry about it. If a problem cannot be solved what is the use of worrying?

Nothing can be changed by "Changing the Face". But everything can be changed by "Facing the Change".

Be bold when you loose and be calm when you win.

No one will manufacture a lock without a key. Similarly god won't give problems without solutions.

Every successful person has a painful story. Every painful story has a successful ending. Accept the pain and get ready for success.

Heated gold becomes ornament. Beaten copper becomes wires. Depleted stone becomes statue. So the more pain your get in life you become more valuable.

Mistakes are painful when they happen. But years later collection of mistakes is called experience, which leads to success.

Life laughs at you when you are unhappy...
Life smiles at you when you are happy...
Life salutes you when you make others happy...

If you miss an opportunity don't fill the eyes with tears. It will hide another better opportunity in front of you.

Thursday, October 1, 2009

இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் (02.10.09)


அகிம்சையை போதித்த அண்ணலே
அவனியில் நாங்கள் படுவது இன்னலே

வெள்ளையரை விரட்டி வாங்கிய சுதந்திரம் அன்றுகொள்ளையரிடம் சிக்கி தவிக்கிறோம் இன்று

அன்று நீ சுற்றினாய் அந்நிய‌ரை எதிர்த்து ராட்டை
இன்றோ அயோக்கிய‌ர்க‌ள் பணம் கொடுத்து ஓட்டு வேட்டை

உனக்கு மரியாதை செய்யும் விதமாய் டாஸ்மாக் விடுமுறை இன்றுதெரிந்தே வாங்கி வைத்தார்கள் டாஸ்மாக் ஒரு நாள் முன்பு

அஹிம்சையை போதித்த உனக்கு
மாலை யார் முதலில் போடுவது என்றெழுந்த சண்டை, கைகலப்பாகி உடைந்தது பல மண்டை

மண்டை உடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்...

அப்போது வெடித்த வன்முறை
மூடப்பட்ட கடைகள்
பற்றி எரியும் பேருந்துகள்,
காலவரையற்ற மூடலில் பள்ளிகள்

உனக்காக ஒரு நாள் கூட அஹிம்சையை கடைப்பிடிக்கமுடியாத அயோக்கிய அரசியல்வாதிகள்
நீ இன்று இங்கு இருந்து இவையெல்லாம் கண்டால் உன் கைத்தடி கொண்டு, அவர்களின் மண்டையை உடைப்பாய் என்பது திண்ணம்...

ஆயுதங்களை புறக்கணித்து,
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிக்கும் நாளே அனைவருக்கும் உண்மையான காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

இப்போதிருக்கும் நிலையில் அது எதுவும்
நடக்க வாய்ப்பே இல்லாமல்
ஊரெங்கும் திண்டாட்டம்...
இந்நிலை என்று மாறுமோ?
நம் ஊர் என்று திருந்துமோ?

வருடத்தின் ஒரு நாளில் அவரின் சிலைக்கு மாலை போடுவதை காட்டிலும், அன்னாரின் அஹிம்சை கொள்கையை வாழ்நாளில் கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை...

ஆகவே... அண்ணலை மதிப்போம்

அஹிம்சையை போற்றுவோம்...

ஜெய்ஹிந்த்...

நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்...