Sunday, June 7, 2009

GREAT COMEDY - பகுதி 2கவுண்டமணி
செந்தில்
வடிவேல்
விவேக்
சின்னி ஜெயந்த்

கவுண்டமணி : இங்க வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம்.


எல்லா நடிகர்கள் : வாங்க, வாங்க.... வணக்கம் கவுண்டரண்ணே......


கவுண்டமணி : டேய்...உங்க எல்லார் வணக்கத்தையும் தூக்கி, அந்த குப்பை தொட்டி மூஞ்சி மேல போடுங்க (வடிவேலை காட்டுகிறார்).

உங்களுக்கு யாரும் வணக்கம் சொல்லலேடா, வீங்குன மண்டையனுங்களா!!! நான் இந்த நிகழ்ச்சி பாக்கறவங்களுக்கு வணக்கம் சொன்னேன். நீங்க எல்லாம் ஒரு மார்க்கமானவனுங்கன்னு எனக்கு தெரியும்.. அதுவும் இல்லாம, இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா கிட்ட வணக்கம் வாங்கற தகுதி இங்க இருக்கற ஒரு மூஞ்சிக்கு கூட இல்லியேடா நாராயணா ...... படுவா... சத்தம் எதுவும் வராம இருக்கணும் தெரியுதா.... இல்ல... ஒங்க எல்லாரோட குரல் வளையையும் கடிச்சு துப்பிடுவேன்.

சின்னியை பார்த்து : டேய்... ஒன்ன இதுக்கு முன்னாடி எங்கயோ பாத்து இருக்கேனேடா?? அப்போ ஒனக்கு கொம்பு இருந்துச்சு.... கூட்டாளிங்களோட ஒரு குளத்த அசிங்கம் பண்ணிட்டு இருந்தியேடா... அப்ப, நான் கூட ஒன்ன கூப்பிட்டு, ஒரு வாளில புண்ணாக்கு, கழனி தண்ணி எல்லாம் வச்சேனே, ஞாபகம் இருக்கா?? இல்ல பழச எல்லாம் மறந்துட்டியாடா??

செந்திலை பார்த்து : டேய், தீஞ்சு போன தேங்காமூடி மண்டையா, உன்னோட முழியே சரியில்லையே?? ஏதாவது ஏடாகூடம் பண்ணலாமுன்னு யோசிக்கறியா?? அப்படி ஏதாவது நடந்தா, இங்க ஒரு கொல விழும்டா முக்கா மண்டையா!!

வடிவேலை பார்த்து : டேய், அமாவாசைக்கு பொறந்தவனே.... இன்னாடா லுக்கு, படுவா, கண்ணா நோண்டி காக்காவுக்கு போட்டுடுவேன்....ஆத்தாவுக்கு கெடா வெட்டுறதுன்னு வேண்டிட்டு இருக்கேன்.... அதுக்கு பதிலா, ஒன்ன பலி போட்டுடுவேன், எந்த டகால்டியும் எங்கிட்ட வேண்டாம்.....

செந்தில் : அண்ணே... நீங்க எங்களுக்கு வணக்கம் சொல்லலேன்னா பரவாயில்லேண்ணே... நாங்க எல்லாம் உங்களுக்கு வணக்கம் சொல்லி ஆகணும்னே.. ஏன்னா... நீங்க எங்க எல்லாருக்கும் சீனியர் ஆச்சே....


வடிவேல் : ஆமாம்ணே... நீங்க வழி விடவே தான், நாங்க எல்லாம் உள்ள வர முடிஞ்சது.....இப்போ மேல வந்து ஒக்கார முடிஞ்சது....ஏதோ, இன்னிக்கி உங்க புண்ணியத்துல, தம்பி சூர்யாவ விட கொஞ்சம் ஜாஸ்தி சம்பளம் வாங்கறேன்... இப்ப வர வழியில மதுரை எவ்ளோன்னு சொம்மா ஒரு வெல கேட்டேண்ணே .... ரேட் கொஞ்சம் படியல... வந்துட்டேன் ....

ஏன்னா .....பொறந்த ஊர அப்படியே கொஞ்சம் வாங்கி போடலாம்னுதான்..... பாப்போம்.... படியாம எங்க போக போகுது ..... யப்பா, என்னா வெயிலு, என்னா வெயிலு..... ஏம்பா, அந்த ஏசிய கொஞ்சம் கூல் இங்க்ரீஸ் பண்ணுங்க.....

விவேக் : எலே, நேரம்லே ஒனக்கு... ஊர்ல கவுத்து கட்டில்ல மல்லாக்க படுத்து, கால ஆட்டிட்டு, விசிறியால முதுகு சொரிஞ்சு, வானத்த பாத்து, கொசுவோட குடும்பம் நடத்துனவன் எல்லாம், இன்னிக்கி ஓசில ஏசி பாத்துட்டு ஏசிங்கறான்... கூல் இங்க்ரீஸ் பண்ணுங்கறான்.. சரி, அத விடுங்க... அத பத்தி பேசினோம்னா, அது, அவன் ஊரு குட்டைய விட நாத்தமா இருக்கும்...

நாம எல்லாம் இன்னிக்கி இருக்கற பிசி ஷெட்யூல்ல இங்க வந்ததே அதிகம், கவுண்டர் அண்ட் செந்தில் இந்த பிசிங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்றதையே மறந்து இருப்பாங்க... ஹா ஹா .... GREAT COMEDY ...

ஆண்டவன் கெட்டவங்களுக்கு சொறி மட்டும் கொடுப்பான்... ஆனா, நல்லவங்களுக்கு அவனே ஆளையும் அனுப்பி சொறிஞ்சு விடுவான்... எப்படி... என்னோட பன்ச் டயலாக்.. So, ஸ்டாப் ஆல் திஸ் நான்சென்ஸ்.....

கவுண்டமணி : இங்கிலீசு..... எங்கிட்ட ..... டேய், தகர டப்பா தலையா...சொல்லுடா, ரொம்ப பேசினான்னா, அவன் நாக்குல சூட்டுகோல் வச்சு தீச்சுடுவேன்னு.. டேய், என்னாடா பன்ச் டயலாக், பஞ்சு மிட்டாய் டயலாக்...அந்த காலத்துல நான் பேசாத ப்ன்ச் டயலாகாடா?? அதுவும் நான் கொஞ்ச நாள் அங்க இங்க நகர்ந்தா, சைக்கிள் கேப்ல உள்ள பூந்தவன் எல்லாம் இன்னிக்கு பெரிய காமெடியனாடா??

கேட்டா பன்ச் டயலாக் பேசறான்... சீறும் சிங்கம், பாயும் புலிங்கறான்... நான் கேக்கறேன்.... இந்த புலி புலின்னு சொல்றியே... கொட்ட எடுத்ததா, இல்ல கொட்ட எடுக்காததா?? இன்னாடா, ஜார்ஜ் புஷ் தம்பி மாதிரியே பேசற.... ங்க்கொக்க மக்கா, வரேண்டா .........


சின்னி : ஆஹ்ங்க்.... ஏன் எல்லாரும் ரொம்ப கோவமா இருக்கீங்க... நாம எல்லாரும் நகைச்சுவை கலைஞர்கள்....நமக்கு கோவமே வரக்கூடாது...


கவுண்டமணி : பளார் .....பளார்..... என்று சின்னி ஜெயந்தை அறைகிறார்.....
சின்னி : அண்ணே... ஏன் என்ன அடிச்சீங்க ... வேணாம்...எனக்கு கெட்ட கோவம் வரும்... அப்புறம் அங்க வந்து ஒங்க காது ரெண்டையும் கடிச்சுடுவேன்.. ஆங்க்.......


கவுண்டமணி : வாடா ராசா வா... இந்த டகால்டி வுடுவேன்னுதான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணினேன். இப்போ என்ன சொன்ன... கெட்ட கோவம் வருமா, கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்ன, நாம எல்லாரும் நகைச்சுவை கலைஞர்கள்....நமக்கு கோவமே வரக்கூடாதுன்னு......

one ஸ்டெப் பேக்.... வாய் இருந்தா எத வேணும்னாலும் பேசுவியாடா, தவள வாயா.... இனிமே ஏதாவது பேசின, உன் மூக்குல, குச்சிய விட்டு நோண்டிடுவேன்... இல்ல பட்டாச கொளுத்தி வாய் உள்ள போட்டுடுவேன்... உனக்கு காமெடியே வராது.... ஆனா, தைரியமா எல்லார்கிட்டயும் நீ பெரிய காமெடியன்னு சொல்லிட்டு திரியற ....இனிமே இது மாதிரி ஏதாவது நீ சொன்னன்னு எனக்கு தெரிஞ்சது... மவனே ... அன்னிக்கு ஒனக்கு சங்குதான்.... போ......ராசா போ.....

வடிவேல் : ஏண்ணே ... ஏன் இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்கீங்க....இதுல இருந்தே ஒங்கள பத்தி எங்க எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னே.... உஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா...இப்பவே கண்ண கட்டுதே .......


கவுண்டமணி : டேய், கருவாயா... நீ என்ன நெல்சன் மண்டேலா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரனா?? இல்ல ஒபாமா வீட்டுக்கு எதிர்வீடா? ரொம்ப சொறியரியேடா..... சரி மேல சொல்லு....

வடிவேல் : இல்லேண்ணே..... கோவம் இருக்கற எடத்துல தான் நல்ல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க ... அந்த மேட்டர சொல்ல வந்தேண்ணே.... இப்ப சொல்ரேண்ணே... நீங்க ரொம்ப நல்லவருன்னு..........ஹீ ஹீ .......

கவுண்டமணி : டேய்.....ஸ்டாப்....நான் என்னிக்காவது உன் கிட்ட நல்லவன்னு சொல்லி இருக்கேனா??இல்ல இந்த நாட்டுல என்ன பத்தி யார்கிட்டயாவது என்ன பத்தி கேட்டு அவங்க நான் நல்லவன்னு உங்கிட்ட சொன்னாங்களா?? ஒனக்கு எப்படிடா தெரியும்.... இல்ல என்ன எப்பவாவது ஸ்கேல் வச்சு அளந்து பாத்தியா??

மவனே...பேசணும்னுறதுக்காக ஏதாவது ஏடாகூடமா பேசின, ஒன் வாய தொறந்து அணுகுண்டு வெச்சுடுவேன்...அப்புறம் நீ பேசுறதுக்கு வாயே இருக்காது...நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், நீ ஏதோ எல்லாருக்கு ISO சர்டிஃபிகேட் குடுக்கற மாதிரியே பேசுறியே... படுவா... நீ குடுக்கற சர்டிஃபிகேட்ட கொண்டு போய், பழைய பேப்பர் கடையில போட்டா, ஒரு பிடி பொட்டு கடல கூட தர மாட்டான்......இல்ல ஒரு கொட்ட எடுத்த பேரீச்சம்பழம் கூட தரமாட்டான்..... பேரீச்சம் பழத்த எடுத்துட்டு அந்த கொட்டய தான் தருவான்.......சர்டிஃபிகேட் குடுக்கற மூஞ்சிய பாரு... நல்லா கரி புடிச்ச சட்டியாட்டமா!!! அந்த தவள வாயன கூட்டிட்டு எங்கியாவது ஓடிபோயிடு....

சின்னி : ஐ அப்ஜெக்ட் இட் யுவர் ஆனர்....... ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...ரஜினிதான் சூப்பர் ஸ்டார்...... palpaanso ... pilpaansi ........

கவுண்டமணி : டேய், பாத்தியா, நாடு எவ்ளோ கெட்டு போயிடுச்சுன்னு .... இங்க பாரு, தவள எல்லாம் இங்கிலீஷ் பேச ஆரம்பிச்சுடுச்சு......

விவேக் : ஹல்லோ .... உங்களுக்கு இங்கிலீஷ் தெரியலேன்னா, சும்மா இருங்க... அந்த சின்னிய ஏன் இன்சல்ட் பண்றீங்க..... தம்பி சின்னி.... நீ நல்லா இங்கிலீஷ் பேசுப்பா.... அண்ணே, திஸ் இஸ் டூ மச்......

கவுண்டமணி : வாங்க, சின்ன கொலைவாணரே.... இல்ல சின்ன கலைவாணரே .... உங்களோட வீடு என்ன ஆக்ச்ஃபோர்டு யூனிவர்சிட்டி பக்கத்துலயா?? இல்ல, நீங்க கேம்பிரிட்ஜ் யூனிவர்சிடில படிச்சீங்களா?? மூணாம்புல 7 வருசம் படிச்ச நாயி நீ..........

செந்தில் : டென்சன் ஆகாதீங்கப்பா... அண்ணே...இப்படியே பேசிட்டு இருந்தா எப்படிண்ணே...வாங்க சாப்பிடலாம்... சோறு தீந்துட போகுது.....

கவுண்டமணி : இவன் இம்சை வேற.... டேய் டப்பா தலையா, நீ தின்னு தின்னுதான் இப்படி பூசணி மாதிரி வீங்கி இருக்கியே.... இன்னும் சாப்பாடு சாப்பாடுன்னு அலையறியேடா....நீ, இன்னும் பெருத்தா ஒன் ஒடம்பு தாங்குமாடா??? இல்ல ஒனக்கு சோறு போட்டு இந்த நாடு தாங்குமாடா?? மக்களே, நல்லா யோசிச்சு நீங்களே ஒரு முடிவு பண்ணுங்க.....இந்த பன்னிக்கு இன்னும் சோறு போடனுமான்னு......... டேய், இன்னிக்கு என்னடா, புதுசா, பேண்ட் எல்லாம் போட்டு இருக்க, நீ எப்பவும் கோமணம் தவிர எதுவும் கட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல......

செந்தில் : இல்லேண்ணே... இந்த ப்ரொக்ராம் முடிஞ்சதும், பேண்ட் அவுத்துடரேன்.....உள்ள, ரெடியா கோமணமிருக்குண்ணே..........

விவேக் : என் இனிய வில்லேஜ் மக்களே.... இந்த 21ஸ்ட் சென்சுரில கோமணம், ஆமணம்னு... நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா..... வெளியே போய் ஒலகத்த பாருங்கடா.. அவன் அவன் இன்டெர்னெட்ங்கறான்.. செல் ஃபோன்ங்கறான்... எஸ்.எம்.எஸ்.ங்கறான்.... எம்.எம்.எஸ்.ங்கறான்.. லாப்டாப்ங்கறான்...

நீங்க என்னடான்னா, ஆடு, மாடு மேச்சுட்டு, குச்சி வச்சு பல்லு தேச்சுட்டு, ஓரமா போய் ஒக்காந்து சரக்கு அடிச்சுட்டு, கம்மா கரை, ஆத்தங்கரை எல்லாத்தயும் நாஸ்தி ப்ண்றேங்க... திருந்தவே மாட்டேன்னு சொல்லாம, கொஞ்சம் திருந்த ட்ரை பண்ணுங்கடா.........

வடிவேல் : அல்லோ, அல்லல்லோ.. எச்சூஸ் மி... நீங்க ரெம்ப பேசரீங்க சார்... பேசாம, நீங்க வாரத்துக்கு ஒரு எட்டு நாள் மௌன விரதம் இருக்கறது ஒங்களுக்கும், இந்த ஊருக்கும் நல்லது.. ஹேய்.... கிட்ட வராத மேன்...... அப்புறம் நான் ஊம்ம் பண்ணிடுவேன்.....

கவுண்டமணி : டேய் கருவாட்டுதலையா..... சீ ... நகருடா.... என்னடா அவன ஊஹ்ம் பண்ணிடுவேன்னு சொல்லிட்டு எங்கிட்ட வர்ற... தள்ளி போயிடு...படுவா...இல்ல மரியாதை கெட்டு போயிடும்.... டேய் நாரவாயா இது விஜயகாந்த் நடிச்ச மரியாதை இல்லடா......... வேறடா ..... ஐயோ இவனும் இவனோட இம்சையும்.......... ஒரே குஷ்டமப்பா.... ச்சே கஷ்டமப்பா .....

நீ இப்பத்தான் ஒரு உருப்படியான பேச்சு பேசி இருக்க...ஆனா, என்ன ஏதோ பெரிய சிந்தனை சிற்பி மாதிரி பேசர.... நீ என்ன ஜி.டி.நாயுடு பேரனா?? அது எப்படிடா, ஒண்ணாம்பு படிச்சுட்டு, இவ்ளோ தெளிவா பேசற... நீ ஆளு மட்டும்தான் மாடு மாதிரி வளந்து இருக்கேன்னு நெனச்சேன்.... ஆனா, பரவாயில்லடா, மூளை கூட கொஞ்சம் வளர்ந்திருக்கு... கீப் இட் அப்.......

வடிவேல் : ஏண்ணே... இப்ப அத எல்லாம் கெளர்ரீங்க........ நல்லது சொன்னா, சொல்றது யாருன்னு பாக்க கூடாதுண்ணே, சொல்ற விசயம் நல்லதான்னு மட்டும்தான் பாக்கணும்.

கவுண்டமணி : அட்ரா அட்ரா அட்ரா சக்க..... நேத்திக்கு வரைக்கும் மாட்டுக்கு மேல ஒக்காந்து சவாரி செஞ்சவன் எல்லாம் இன்னிக்கு ஹை கோர்ட் லாயர் மாதிரி பேசறான்.......சரி, நாடு கெட்டு போச்சு, வேற என்ன சொல்ல .... நீ சொல்லுடா.... டேய் ... நீங்க எல்லாரும் எது வேணும்னாலும் சொல்லுங்கடா... கேட்டுக்கறோம்... ஆனா, மவனே, ரொம்ப நாள் தாங்காதுடா, சொல்லிட்டேன்......

செந்தில் : அண்ணே, நீங்க அந்த பக்கம் திரும்பி பேசிட்டு இருந்தப்ப, இந்த சின்னி ஒங்கள பாத்து பழிப்பு காட்டுறாண்ணே.......

கவுண்டமணி : டேய் தவளவாயா, அந்த பக்கம் திரும்பினா பழிப்பு காட்டுவ, இந்த பக்கம் பாத்தா, பாபா ப்ளாக் ஷீப் பாட்டு பாடுவ.... மகனே, உன் டகால்டிய எல்லாம் எங்கிட்ட வச்சுக்காத... நான் பொல்லாதவன்.... மோசமானமாவன்... ஒழுங்கு மரியாதையா சொல்றேன்... 3 எண்றதுகுள்ள இங்க இருந்து ஓடிடு... இல்ல, வாயில தார் உருண்டைய திணிச்சுடுவேன்...... இல்ல இந்த கருவாயன் நடிக்கற படத்துல இருந்து அவன தூக்கிட்டு நீ நடி, அவன விட நீ எவ்வளவோ பெட்டர்.

வடிவேல் : சார், என் படத்துல யார தூக்கணும், யார நடிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும்.... சோ... யூ ப்ளீஸ் ஷட் அப்..............வேணும்னா, நீங்க சரின்னு சொன்னா, உங்கலுக்கு ஒரு சின்ன வேசம் என் படத்துல தரேன்...... எனக்கு பெரியப்பாவா நடிங்க... சின்னி பய எல்லாம் வேணாம்.... டேய் சின்னி, போய் பக்கத்து கடைல அண்ணன் பேர சொல்லிட்டு, குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தின்னுட்டு இந்த ஊர விட்டு ஓடிடுடா.....

கவுண்டமணி : டேய் சொறி தலையா.... நீ எனக்கு வேஷம் தர்றியாடா?? இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா எங்கேயோ இருக்க வேண்டியவண்டா... இந்த பட்டிக்காட்டுல வந்து மாட்டிக்கிட்டேன்.......நான், இளைச்சா, நாய் வந்து நக்கி பார்க்கும்னு எனக்கு அன்னிக்கே ஒரு ஜோசியக்காரன் சொன்னான்... அத, நான் அன்னிக்கு நம்பல, ஆனா, மவனே, இன்னிக்கு நம்பறேண்டா...........நீ கிட்ட வந்து என்ன நக்காதடா .......

செந்தில் : அண்ணே, சீக்கிரம் போய் சைக்கிள் கடைய தொறக்கணும்னே.... முழு நாளு லீவு விட்டா அண்ணி கோவிச்சுக்கும்ணே.... வேலைய முடிச்சு சீக்கிரம் வீட்டுக்கு வந்தா, ஏதோ பொரி உருண்டை எல்லாம் தரேன்னு சொன்னாங்கண்ணே........

கவுண்டமணி : டேய் நசுங்கி போன தார் டப்பா தலையா..... நானே, ரொம்ப நாள் கழிச்சு கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கேன்... அது ஒனக்கு பிடிக்கலியாடா... ஏண்டா, அந்த அண்ணி, நொண்ணின்னு சொல்லி அந்த பன்னிய ஞாபகப்படுத்தற ......... நானே அந்த வீங்கி போனவள கொஞ்ச நேரம் மறந்து இருந்தேன்...

இந்த தவள வாயன், கருவாயன், ஆக்ஸ்ஃபார்ட் ப்ரொஃபெஸ்ஸர், எல்.கே.ஜி பாப்பா இதுங்களோட வெளையாடிகிட்டு இருந்தேன்.... போடா, இனிமே, அண்ணி அது இதுன்னு சொல்லி என்ன பயமுறுத்துன, படுவா, காதுல கரப்பான் பூச்சிய பிடிச்சு விட்டுடுவேன்.

வடிவேல் : ஹல்லோ.... ரெம்ம நேரமா இந்த ஆளு, வெட்டி பேச்சு பேசிட்டு இருக்காறு...... இந்த ஆளுக்குத்தான் வேலை இல்ல.... நம்ம போயி, நம்ம வேலைய பாப்போம்... அப்ப நான் கெளம்பவா?? சூட்டிங்குக்கு டயம் ஆச்சு...... ஷங்கர், கமல் எல்லாம் வெயிட் பண்றாங்க.......காலைல ஏ.வி.எம்.ல சூட்டிங்..... மும்தாஜோட இரு கும்மாங்குத்து பாட்டு, நைட்டு.........

கவுண்டமணி : நைட்டு எங்கடா, இண்டோர் ஷூட்டிங்? தம்பி.... போதும்டா.... நீ இப்போ எல்லாம் நெறைய நைட் ஷோ பாக்க போறன்னு பசங்க சொன்னாங்க...... வேணாம்டா ராசா.... என்ன பாரு.... நெறைய நைட் ஷோ பாத்துட்டு இப்போ எப்படி இருக்கேன்னு.......

என்னவோ, நீ ஒருத்தன் நடிச்சுத்தான் தமிழ் படத்துக்கு ஆஸ்கார் அவார்ட் வாங்கி குடுக்கற மாதிரி பேசற........நாங்களும் நடிச்சு இருக்கோம் ராசா..... நீ சொன்னியே ஷங்கரு... அவரோட மொதல் படத்துல நடிச்சதே நானும், இந்த வெந்தும், வேகாத மண்டையனும்தான்.....

நீயும் பழச மறந்துடாத... ராஜ்கிரண் படத்துல நான் ஒனக்கு கொடுத்தது எல்லாம் ஞாபகம் இருக்கா?? இல்ல, இப்ப ஏதாவது ஞாபகப்படுத்தணுமா??

சின்னி : ஆஹ்ம்ம்.... நானும் கெளம்பறேன்..... ரஜினி எனக்காக வெயிட் பண்றாரு......"எந்திரன்" படத்தோட கிளைமாக்ஸ் காட்சி எனக்காக வெயிட்டிங்.......இப்போ தான் ஷங்கர் ஃபோன் பண்ணினாரு......ஒரு கில்பான்ஸி, இந்த பல்பான்ஸியோட, ஜில்பான்ஸி பண்ண கூப்பிடுது......

விவேக் : ஓகே.... இனிமே உங்களோட பேசி பிரயோஜனம் இல்ல... தேஜாஸ்ரீயும், சாயாசிங்கும் எனக்காக வெயிட்டிங்..... சூப்பர் டூயட் பாக்கி இருக்கு...படம் பேரு சொல்லி அடிப்பேன்...இது முடிஞ்சா, ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் தமிழ்ல பண்றேன்..... வர்டா..........

கவுண்டமணி : டேய், நானும் பாக்கறேன்... அவன் என்னடான்னா சொல்லி அடிப்பேன்றான்...... யாரடா சொல்லி அடிப்ப... நான் ஒன்ன சொல்லாமயே அடிப்பேண்டான்னு சொன்னா, அது அவனோட படம் பேருங்கறான்... ஏதோ என்ன பழி வாங்கற மாதிரியே படத்துக்கு பேரு வச்சு இருக்கான்... இந்த தவள வாயன், ஜில்பான்ஸி, பல்பான்ஸிங்கறான்....எந்திரன் படத்துல ரஜினியோட கிளைமாக்ஸ் அது இதுன்னு சொறியறான்.......அந்த கருவாயன் என்னடான்னா, மும்தாஜ், கும்தாஜ்ங்க்றான்...... கில்மா, ஜல்ஸாங்கறான்..... இது பத்தாம வாரத்துக்கு 4-5 நாளு நைட்டு ஷூட்டிங் வேற பாக்கறான்.........

அப்ப, நான் இங்க என்ன இளிச்சவாயனா?? வரேண்டா, கூடிய சீக்கிரம் வரேன்.. டிரிபிள் ஆக்ஷன் ரோல் ஒண்ணு ரெடி பண்ணிட்டு இருக்கேன்... ஒரு போலீஸ் ஆஃபீசர், ஒரு காலேஜ் ஸ்டூடன்ட், அப்புறம் ஒரு நாட்டாமை கேரக்டர், அந்த படம் மட்டும் வரட்டும்டா, மவனே, இந்த ஆல் இந்தியா சினி ஃபீல்டே என் கையிலடா......... கவுண்டனின் சவுண்ட் அதிகமாவதை கண்டு, அனைவரும் திகிலடைந்து, அங்கங்கு கிடைக்கும் வழியாக எஸ்கேப் ஆகிறார்கள்........

7 comments:

Anonymous said...

எல்லா நகை சுவை அரசர்களையும் ஒரே மேடையில் பார்க்கும் வாய்ப்பு நமக்கு இல்லை. ஆனால் உங்கள் புண்ணியத்தில் அத்தனை பேரையும் ஒரு சேர பார்க்கிறோம்

சூப்பர் ............

அது சரி இந்த படங்களை
எங்கே பிடிக்கிறீர்கள்
சூப்பர் தலை

Joe said...

கலக்கிட்டீங்க போங்க!
கவுண்டமணி என்னைக்கிமே கிங் தான்.

கொஞ்சம் நீளம் அதிகம்! ராத்திரி படிச்சதுனாலே பாதியில தூங்கிட்டேன். ;-)

கிரி said...

கவுண்டர் ரசிகன் நான். :-))))) அடி! தூள் பண்ணிட்டீங்க .. ஹி ஹி ஹி அவர் எந்த தலைய (அஜித் அல்ல) சொன்னாலும் செம காமெடி தான்

R.Gopi said...

//கிரி said...
கவுண்டர் ரசிகன் நான். :-))))) அடி! தூள் பண்ணிட்டீங்க .. ஹி ஹி ஹி அவர் எந்த தலைய (அஜித் அல்ல) சொன்னாலும் செம காமெடி தான்//

******

Thanks Giri.....

Yes, those who like comedy will definitely have a like at GOUNDAMANI and i am no exception, too.

Innum niraiya irukku.

R.Gopi said...

//Joe said...
கலக்கிட்டீங்க போங்க!
கவுண்டமணி என்னைக்கிமே கிங் தான்.

கொஞ்சம் நீளம் அதிகம்! ராத்திரி படிச்சதுனாலே பாதியில தூங்கிட்டேன். ;-)//

*****

Mr.Joe

Fullaa padinga. enjoy pannunga. appuram ungaloda comment sollunga

சுந்தர் said...

பட்டய கிளப்பி இருக்கீங்க , கவுண்டர் படம் வராத குறையை தீர்த்து வைத்து விட்டீங்க

R.Gopi said...

//தேனீ - சுந்தர் said...
பட்டய கிளப்பி இருக்கீங்க , கவுண்டர் படம் வராத குறையை தீர்த்து வைத்து விட்டீங்க//

*********

Welcome Theni Sundar. Thanks for your maiden visit and encouraging comments.

I am happy that you enjoyed it.

Do come regularly and enjoy reading all articles.

Also visit www.edakumadaku.blogspot.com (my other blog). You will enjoy that blog also.