Monday, August 31, 2009

ஜோருக்கு ஜோர் - க‌லைஞானி க‌மல்ஹாச‌ன் நேர்காண‌ல்


இன்றைய ஜோருக்கு ஜோர் வி.ஐ.பி. நிகழ்ச்சியில் நாம் காணவிருக்கும் பிரபலம்... நடிகர், பாடகர், வசனகர்த்தா, திரைக்கதையாசிரியர், கவிஞர் என்ற பல்வேறு திறமைகளை ஒருங்கே உள்ளடக்கிய கலைஞானி கமல்ஹாசன் அவர்கள்..
வணக்கம் கமல் சார்...
இந்த நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கும் தங்களுக்கு என் வணக்கம்.... வந்தாரை வரவேற்கும் பண்பு எனக்கு என் முன்னோர்கள் கற்று கொடுத்தது.. அந்த நல்ல பண்பை தமிழ் திரையுலகமும் தொடர வழி வகுத்திருக்கிறது..
ஆகவே, இந்த இனிய மாலை பொழுதில் நாம் பல்வேறு தரப்பட்ட விஷயங்களை பற்றி உரையாட இருக்கிறோம்... இது சம்பிரதாயமான கேள்வி, பதில் நிகழ்ச்சியாக இல்லாமல், ஒரு உரையாடல் போல் இருந்தால், நான் மிகவும் மகிழ்வேன்...
அப்படியே செய்து விடுவோம் சார்... நாங்க எல்லாரும், எப்போவும், தெரிஞ்சுக்க ஆசைப்படற அபூர்வ சகோதரர்கள் படத்துல வர்ற "அப்பு" பத்தி ஏதாவது சொல்லுங்களேன்..
சொல்றேன்.. சின்ன வயசுல, எங்க வீட்டு பக்கத்துல ஒரு குட்டை இருந்தது... அதுல, "குப்பு"ன்னு ஒரு குள்ளமான பையன் வந்து, டைவ் அடிப்பான், நீச்சல் அடிப்பான், மீன்கள் பிடிப்பான்..பல சாகசங்கள் செய்வான்...
ஆனாலும், அவனை பார்க்கும் அனைவரும், கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பாதே என்று சொல்லி கேலி செய்வார்கள்...

அன்று முடிவு செய்தேன்...குட்டையானவர்கள் கெட்டவர்கள் இல்லை என்று நிரூபிப்பது என்று...
பின்னாளில், வெண்திரையில், அதை நிரூபித்தேன்... எனவே, அந்த அபூர்வ சகோதரர்கள் படமும், அதில் வரும் குள்ள "அப்பு"வும், உலகத்தில் உள்ள அனைத்து குள்ளர்களுக்கும் சமர்ப்பணம்...
இப்போது நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் "உன்னை போல் ஒருவன்" படம் பற்றிய ஒரு கேள்வி.. அது, நீங்கள் ஏற்கனவே நடித்து வெளிவந்த "எனக்குள் ஒருவன்" படம் போல் இருக்குமா?
உங்களின் முதல் கேள்வியே கோணலாக உள்ளது... இரண்டும் நான் நடித்த படங்கள் என்பதை தவிர எந்த ஒற்றுமையும் இல்லை... அவன் உன்னை போல், என்னை போல், நம்மை போல் ஒரு கோபமுற்ற இளைஞன் என்பதை தவிர ஒன்றுமில்லை.. நீங்கள் என்னை கோபமுற செய்யாமல் கேள்விகளை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
ஹ்ம்ம்...கந்தசாமி??
சிறு வயதில் எனக்கொரு தோழன் இருந்தான்... அவன் பெயர் கந்தசாமி... அவன் படிப்பில் சுட்டி... விளையாட்டில் கெட்டி... மொத்தத்தில் சிறு வயதில் எனக்கு போட்டி.
சார்... நான் கேட்க வந்தது விக்ரம் நடித்த "கந்தசாமி" படம் பற்றி...
ஓ... நான் படத்தை இன்னும் பார்க்கவில்லை. ஆகவே, அதை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை... படம் சிறப்பு காட்சி பார்த்தவர் ரஜினிதான். அதனால், இந்த கேள்வியை நீங்கள் ரஜினியிடம் தான் கேட்க வேண்டும்...
அஜித் நடிக்கும் "அசல்"??
அதை இயக்கும் சரண் என் நண்பர்... என்னை வைத்து வசூல்ராஜா எடுத்து அரங்குகளில் வசூலை அள்ளியவர்... மற்றபடி, எனக்கு அசலை விட "நகல்"தான் பிடிக்கும்... சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூட எனக்கு ராவணன் பிடிக்கும் என்று சொன்னேனே..
வேட்டைக்காரன்?
புரட்சிதலைவர் நடித்த ஒரு மாபெரும் வெற்றிப்படம்... நான் சிறுவயதில் பார்த்து ரசித்த படம்... என் அபிமான நடிகை சாவித்திரி நடித்த படம்...
கமல் சார்... நான் கேட்க வந்தது விஜய் நடிக்கும் "வேட்டைக்காரன்" பற்றி?
ஓ.... இது போன்று பழைய படங்களின் தலைப்பை புதிய படங்களுக்கு வைக்கும்போது குழப்பம் நேரிடுகிறது... அதை பற்றி சொல்வதற்கு சுவாரசியமாகவோ, புதிதாகவோ ஒன்றும் இருக்காது..
அவரின் முந்தைய படங்களான "குருவி" "வில்லு" படங்களின் கலவையாக தான் நான் பார்க்கிறேன்... ஒரு வாரம் ஓடும் என்று அவருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியும் என்பது அவருக்கு தெரியும்...
இத நீங்க சொல்றதுக்கு காரணம், உங்கள் பழைய படங்களின் பெயரை மீண்டும் எந்த தயாரிப்பாளரும் வைக்க முன்வராததாலா??
ஏற்கனவே சொன்னதுபோல், நீங்கள் என்னை தொந்தரவு செய்வதில் குறிப்பாய் இருக்கிறீர்கள்... என் "மகராசன்", "மங்கம்மா சபதம்" பட டைட்டில்களை வையுங்களேன் என்றால் யார் கேட்கிறார்கள்.
நான் அள்ளி கொடுக்காவிட்டாலும், கிள்ளி கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன்.. இப்போதும் "மகராசன்" படம் ரீமேக் செய்யப்பட்டால், அதற்கு நான் பத்து நாட்கள் கால்ஷீட் தருகிறேன்...
"எந்திரன்"?
எனக்கு தேவர் சபையில் இருக்கும் இந்திரனை தான் தெரியும்... நான் நடித்த பழைய படம் "இந்திரன் சந்திரன்" தெரியும்... யார் இந்த எந்திரன்?
சார்.. சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடிக்கும் படம் ... ஷங்கர் டைரக்ஷன்... பிரம்மாண்ட படம்...முதலில் கூட நீங்கள் நடிப்பதாக இருந்து, பின் அவ்வளவு பெரிய பட்ஜெட் உங்களை நம்பி யாரும் போடாததால், இப்போது ரஜினி நடிக்கிறாரே??
இல்லை.. இதில் எள்ளளவும் உண்மையில்லை... ரஜினியை வைத்து இயக்குமாறு ஷங்கருக்கு நானே பரிந்துரை செய்தேன்.. அதன் இரண்டாம் பகுதியை நானே இயக்கி நடிக்கும்போது உங்களுக்கு அந்த உண்மை புரியும்...
நீங்கள் நடித்த "நாயகன்" படத்தை ஜே.கே.ரிதீஷ் என்கிற நடிகர், தற்போதைய ராமநாதபுரம் எம்.பி. ரீமேக் செய்ததை பற்றி??
அது தமிழ் சினிமாவில் ஒரு கருப்பு அத்தியாயம்... அது பற்றி நினைத்தாலே என் மனம் குமுறுகிறது...
இன்றைய தமிழ் சினிமா?
அதற்கு ஆக்ஸிஜன் தருவதற்கு நான் பல வழிகள் வைத்துள்ளேன்... "உன்னை போல் ஒருவன்" பட ரிலீஸின் போது அதைப்பற்றி அறிவிப்பேன்... இப்போது எனக்கு நிறைய பணிகள் உள்ளது... பாரதி வருகிறேன் என்று அலைபேசியில் தெரிவித்தார்...பாரதி என்றால் பாரதிராஜா இல்லை... இவர் சந்தானபாரதி... கொஞ்சம் நீராகாரம் அருந்தும் பழக்கம் உள்ளவர்.. அப்படியே என் அடுத்த படம் பற்றி விவாதமும் நடைபெற போகிறது... பிற‌கு சந்திப்போம்...
சார்... அந்த புது ப‌ட‌த்தை ப‌ற்றி....

சுருக்கமா, விளக்கி சொல்கிறேன்...ப‌ட‌த்தோட‌ பெய‌ர் "உய‌ர‌மாய் ஒரு குள்ள‌ன்".. 2 அடி உய‌ர‌த்துல‌ இருக்க‌ற‌ ஒருத்த‌ன், 3 அடி உய‌ர‌ம் இருப்ப‌வ‌னை பார்த்து ஏக்க‌ம் கொள்கிறான்... அந்த‌ 3 அடி குள்ள‌ன், வேறு ஒரு 5 அடி உய‌ர‌த்தில் இருப்ப‌வ‌னை பார்ப்ப‌து போல் காட்சி வைத்து, அவ‌ன் இவ‌னிட‌ம், நீ 2 அடி உய‌ர‌த்தில் இருப்ப‌வ‌னை பார்த்து ஆறுத‌லும், தேறுத‌லும் கொள் என்ப‌து போன்ற‌ ஒரு க‌ருத்தை சொல்வ‌துதான் இந்த‌ "உய‌ர‌மாய் ஒரு குள்ள‌ன்" ப‌ட‌த்தின் க‌தை...
நன்றி வணக்கம்...

Friday, August 28, 2009

சங்கி மங்கி ‍- அதிரடி டெர்ரர் கூட்டணி (27.08.09)


எலே சங்கி... பார்த்து எம்புட்டு நாளாச்சுடா ராசா... சொகமா கீறியா..??
வாலே மங்கி... நானும் வெரசா வந்து ஒன்னிய பாக்கணும், பாக்கணும்னு நெனச்சிகினு இருந்தேன்... இன்னிக்கிதான் நேரம் கெடச்சு...
சரி...சரி...ஊருக்குள்ள இன்னாடா மேட்டரு??

அத்த ஏண்டா கேக்கற.... நெறைய மேட்டரு இருக்குடா... சொல்றேன் கேட்டுக்கோ..

சேரனோட‌ "பொக்கிஷம்"ன்ற காலி டப்பா படம் வந்துச்சே... அது ரிலீஸான அல்லா எடத்துலயும் டான்ஸ் ஆடிடிச்சு..

ஆனா, அந்த படத்த தூக்கி நிறுத்தறதுக்காக சேரன், பத்மப்ரியா ரெண்டு பேரும் படம் ஓடற (???) பத்து ஊருக்கு போயி, சைட்ல குச்சி எல்லாம் நட்டு அந்த பொக்கிஷத்த ...
போடாங்க ... ஏண்டா என்னிய‌ வெறியேத்தற‌... வேற மேட்டரு எதுனாச்சும் இருந்தா சொல்லுடா..

சரிடா... டென்சனாவாத... இத்த கேளு...ஷோபனான்னு ஒரு பொண்ணு ஆக்ட் குடுத்துகினு இருந்துச்சே.. தெரியுமா?

தெரியும்டா... தளபதி படத்துல தலைவர் கூட ஆக்ட் குடுத்துச்சி...அதுக்கு இன்னா?

அது, சினிமால இருந்து போய், நாட்டிய பள்ளி தொடங்கிடிச்சி.. ஷோபனாவோட "மாயா ராவண்" அப்படின்ற‌ ஒரு ப்ரோக்ராம் டிவிடி வெளியிட்டாரு நம்ம ஒலக நாயகன் கமல்தாசன்.. அப்போ அவரு சொன்னத அப்படியே சொல்றேன்... அது இன்னான்னு புரிஞ்சா நீ புத்திசாலி, புரியலேன்னா, நீ அதிர்ஷ்டசாலி....

"நான் ராவணனின் ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும். தமிழக கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆன்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திலிருந்தே எங்களுக்கு பெருமை பேச தெரியாது. மற்றவர்கள் பேசினால்தான் உண்டு.

கலையும் கமர்ஷியலும் எண்ணையும் தண்ணீரும் போல. இரண்டும் கலக்காது. ஆனால் நல்ல சமையல்காரர்களுக்கு அது சாத்தியம். ஷோபனா நல்ல சமையல்காரர். அவர் ராவணாவை படைத்தது போல நரகாசுரனையும் தனது நாட்டியத்திற்குள் கொண்டு வர வேண்டும். இங்கு செல்விகள் நாட்டியம் ஆடினார்கள். அதை பார்த்ததும் எனக்கு போன ஜென்மத்தில் இருந்தது போல தோன்றியது. பயிற்சி இல்லாதவன் கலை பற்றி பேச அருகதை இல்லாதவன். ஆனால் அதை மதிக்கிற பண்பும், பணிவும் என்னிடம் இருக்கிறது. வைரத்தை தோண்டி எடுப்பதை போல திறமையை தோண்டி எடுக்க வேண்டும். ஷோபனா ஒரு வைரம்".

இன்னாடா எதுவும் பிரியிதா??

டேய்... வேணாம்டா... என்னிய எவ்ளோ அடி வேணும்னாலும் அடிச்சிக்கோ... ஆனா.. சத்தியமா, இந்த மேரில்லாம் ரவுசு பண்ணாத.... ஏற்கனவே மண்டை காயுதுடா...

ஏண்டா.. நம்ம டைரடக்கரு மிஷ்கின், ஒலக நாயகன் கமல்தாசன வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு பேசிட்டு இருந்தாரே... இன்னாடா ஆச்சு...

அதுவா...அல்லாரும், அவரு மர்மயோகி படத்த எடுக்க போறாருன்னு பேசிகினாங்கோ.. ஆனா, மேட்டர் இன்னான்னா, அந்த டகால்டிய நீயே பாரு :

"ஸ்விங் வோட் என்ற படத்தைதான் அங்கேங்கே திருத்தம் செய்து தமிழுக்காக உருவாக்கியிருந்தாராம் மிஷ்கின்.
இந்த படத்தின் கதை என்ன? பிரதமர் நிற்கும் தொகுதியில் தேர்தல் முடிந்து வோட்டு எண்ணிக்கை நடக்கிறது. விழப்போகிற ஒரே ஒரு தபால் வோட்டை வைத்துதான் பிரதமர் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை. அந்த ஒரு வோட்டு ஒரு இராணுவ வீரனுடையது. அவனை எப்படியாவது கன்வின்ஸ் செய்து அந்த வோட்டை தானே பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமரே அவனது வீட்டுக்கு போகிறார். தனது வோட்டு வேண்டும் என்றால் நீங்கள் இந்த திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறான் இராணுவ வீரன். பிரதமர் அவன் கேட்பதையெல்லாம் செய்தாரா? மக்களுக்கு உதவுகிற அந்த திட்டங்கள் நிறைவேறியதா?

முதலில் இந்த கதையை பிடித்திருப்பதாக சொல்லி நடிக்க ஒப்புக் கொண்ட கமல், அரசியல்வாதிகளுக்கு எதிரான தோற்றத்தை உருவாக்கப் போகும் இந்த கதையில் நடிப்பதா என்று பிறகு யோசித்தாராம். விளைவு? “வேற கதை இருந்தா சொல்லுங்களேன் மிஷ்கின்” என்ற பதில் வந்திருக்கிறது அவரிடமிருந்து. அதுவும் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துவிட்டாராம்."
டேய் மங்கி.... போதும்டா, இந்த மூணு நூஸ கேட்டே, நான் நொந்து போன நூடுல்ஸ்மாதிரி ஆயிட்டேன்... ஆள விடுடா சாமி... நான் எஸ்கேப் ஆயிடறேன்....

Monday, August 24, 2009

அட்ராட்ரா நாக்க‌ முக்க‌ நாக்க‌ மு.க‌., மு.க‌.


என் அருமை தமிழே, அருமை தமிழின் தம்பி கன்னடமே... மற்றொரு அருமை தம்பி எடியூரப்பாவே... என் அருமை உடன்பிறப்பே... நீ இன்று இந்த உலகில் வாங்க முடியாதது துவரம்பருப்பே..

இன்று இந்த மாபெரும், வரலாற்று சிறப்பு மிக்க "ஐயன் சிலை" திறப்பு விழா உலகெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதை எதிரணியினர் பல கோடி கொள்ளி கண்களுடன் பார்ப்பதை அன்றே வள்ளுவர் என்னிடம் சொன்னார்.....
ஒரு கட்டு சுள்ளியில் ஒரு சுள்ளி நல்ல சுள்ளி
எதிரணியின் கண்களிலோ என்றென்றும் ஓராயிரம் கொள்ளி
நாம் இன்று இந்த மகத்தான உலக சாதனையை செய்துள்ளோம்... இதை காண அந்த வள்ளுவர் இல்லையே என்று என் மனம் கவலை கொண்டாலும், வாழும் வள்ளுவனான நான் கண்டுகளித்ததை கண்டு என் தமிழினம் உவகை கொண்டதே....

அவர் கண்டால் என்ன, நீங்கள் கண்டால் என்ன என்று காலை அருமை தம்பி ஆற்காட்டார் சொன்னாரே. அவரல்லவோ தீர்க்கதரிசி...
உங்களுக்கே தெரியும்... நான் புகழ்ச்சியை விரும்பாதவன் என்று.... ஆனாலும், வரும் வழியில் எனக்கு நிறைய அளவில் கட் அவுட்டுகள் வைக்கப்படவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்...

புகழை தேடி அலைபவனல்ல நான்... புகழ் என்னை தேடி வரும்... இதோ வந்துவிட்டதே... வாருங்கள் கவிஞர் புகழேந்தி அவர்களே.... இந்த விழா சிறப்பாக நடைபெறுகின்ற நேரத்தில், எங்களை வாழ்த்தி ஒரு வெண்பா பாடுங்கள் என்று நான் கேட்கமாட்டேன்... ஆனால், நீங்களாக பாடுவீர்கள் என்று எனக்கு தெரியும்...
ஒரு ரூபாய்க்கு அரிசியும், 50 ரூபாய்க்கு மளிகையும், மிக குறைந்த அளவே மின்சார கட்டணமும் செலுத்த வைத்தது என் அரசு...

மின்வெட்டு அமலில் இருந்ததால், மின்சார தேவையே இல்லை... அதுதான் மின்சார கட்டணமும் குறைவு என்று ஒருவர் சொன்னார்.. அவர் எதிர் கழக தொண்டராகத்தான் இருப்பார்... அடுத்தவரின் சாதனைகளை கூட சோதனையாக பார்க்கும் உயர்ந்த மனது அவருக்கு...

நிகழ்ச்சிக்கு வரும் வழியில் தம்பி எடியூரப்பா அவர்கள் என்னிடம் "மானாட மயிலாட" படப்பிடிப்பை மைசூர் பிருந்தாவன் தோட்டத்தில், இயற்கை எழில் சூழ்ந்துள்ள பசுமை பிண்ணனியில் வைத்துக்கொள்ளுமாறு கூறினார்...

தம்பிகள் ஆற்காட்டார், துரைமுருகன், பொன்முடி ஆகியோரிடம் கலந்தாலோசித்து, நல்ல முடிவு எடுப்பதாக கூறினேன்... அந்த நிகழ்ச்சி, இங்கு உதயா டி.வி.யிலும் ஒளிபரப்ப வழி செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்..
அட்ராட்ரா நாக்க முக்க, நாக்க முக்க என்ற இனிய தமிழ் பாடல் உலகெங்கும் உலா வந்து, உலகத்தமிழர்கள் செவியை அடைந்து, அனைவராலும் நன்கு ரசிக்கப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது... அந்த பாடலை கழகத்தின் கொள்கைப்பாடலாக அறிவிக்கலாமா என்று இரவு அறிவாலயத்தில் கூட்டம் கூட்டி முடிவு செய்யப்படும்....

இப்போது இந்த வயதில் இளையவனான எனக்கு "அண்ணா விருது" வழங்கி தமிழகம் உவகை காணுகிறது... அவர்களின் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய செய்யப்போகிறேன். இன்னும் என்னென்ன விருது பாக்கி உள்ளதோ, அவை அனைத்தையும் சீக்கிரம் எனக்கு தந்துவிடுங்கள்...

ஏனெனில் :

விருது வாங்கும் தகுதி உள்ள ஒரே உலக தமிழன் நானே...
உலகில் பிறர் யாரும் அதை வாங்க நினைப்பது வீணே..

வாழ்க அண்ணா நாமம்..
நானும் போடுவேன் உங்களுக்கு நாமம்...

(அடுத்த அதிரடி பதிவு : பட்டு மாமியும், பட்டு புடவையும்)

Sunday, August 23, 2009

சங்கி-மங்கி - அதிர‌டி டெர்ர‌ர் கூட்ட‌ணி
ஏலே சங்கி...... ஊருக்குள்ள இன்னாடா மேட்டரு......

எலே எடுபட்ட பயலே மங்கி..... ஊரு இன்னாடா ஊரு.... ஒலக விஷயமே சொல்றேண்டா... கேளுடா.... மக்கா .......துபாய் மேட்டரு...கந்தசாமி, உன்னை போல் ஒருவன் மேட்டரு, சினேகா மேட்டரு, "தல" சிலை தொறந்த மேட்டரு, ஜெஸ்வந்த் சிங் பி.ஜே.பி.கல்தா மேட்டரு.... அல்லாத்தையும் கேளு....

துபாயில இம்புட்டு நாளு அவிய்ங்க ஊரு துட்டு 6,000௦௦௦ இருந்துச்சுன்னா, அல்லாரும் குடும்பத்தோட கும்மி அடிக்கலாம்னு சொன்னாய்ங்க..... நேத்து ராவிக்கு திடுதிடுப்னு சம்பளம் 10,000௦ இருந்தாதான் குடும்பத்தோட கும்மி அடிக்கலாம்னு சொல்லிட்டாய்ங்க... இவ்ளோ நாளு அங்க புள்ள, குட்டிகளோட இருந்தவிய்ங்க அல்லாரையும் அவுக வூட்டுக்காரைய்ங்கள இங்கன அனுப்பிட்டாகளாம்....

அட....இது இன்னாபா அக்குறும்பா இருக்குது......

அட...இது இன்னாபா... இத்தவிட அக்குறும்பு எல்லாம் நடக்குது நாட்டுல.... அத்தையும் சொல்றேன்..கேட்டுக்கோ...

நம்ம பீமன் இல்ல... அதாம்பா விக்ரமு... அவரு நடிக்கற "கந்தசாமி"ன்ற படம் ஒலகம் முயுக்க‌ 900 தியேட்டர்ல ரிலீஸ் பண்றாராம் "தாணு" அண்ணாத்த.... இதுனால நம்ம ஒலக நாயகன் படம் கூட ரிலீஸ் பண்ண முடியலியாம்...

டேய்...இன்னாடா இப்படி கூவுற .... இப்போ ஒலக நாயகனோட டாவு டர் ஆயிட்சா??? இவருக்கே இப்டின்னா, மிச்சவங்க‌ கதி எல்லாம் இன்னாடா ஆவும்...?

நாட்டுல பெரிய ஆளுங்க நெலமை ரெம்ப மோசம்டா... இதுல தப்பிச்சது நீயும், நானும்தான்...

அட.... இன்னாடா இப்டி சொல்ற?

பின்ன இன்னாடா... சினேகா பின்னாடி லோலோன்னு சுத்துனானே ஒரு கபோதி, அவன் பெரிய தொழிலதிபராம்.. புண்ணாக்கு விக்கறானா இன்னான்னு தெர்ல.. அவிய்ங்களுக்கு ரெம்ப செலவு பண்ணி கீறானாம்... குடுத்தப்போ எல்லாம் துட்ட வாங்கிகினு இப்போ டாணாகாரனாண்ட சொல்டாங்கோன்னு கூவறானாம்...

"ரெண்டு பெருசுங்க" சிலை தொறந்துச்சே... அந்த நூஸு ஏதும் கீதாபா?

சிலைய தொறந்தப்புறம், சிலைக்கு பக்கத்துல நாலஞ்சு பேர பாராக்கு போட்டு சிலைய கண்டுக்கங்க‌டான்னு சொன்னா, அவுனுங்க பராக்கு பாத்துகினு அங்கிட்டும், இங்கிட்டும் சுத்திகினு கீறாய்ங்களாம்... சிலை திறப்பு ஓகே.. இங்க கொஞ்சம் தண்ணியும் தொறந்து வுடறான்னா, மாட்டேன்றான்... அத்த பத்தி ஒண்ணுமே கேக்காம நம்ம "தல" ரிடன் வுட்டாரே....அத்த‌ ப‌த்தி....ஏதாவ‌து.....

டேய்... சத்தம் போட்டு பேசாதடா... இதெல்லாம் "நுண்ணரசியல்".. ஒனக்கும், எனக்கும் ஒண்ணுமே தெரியாது... மேட்டரு அவிய்ங்க காதுக்கு போயிட்சுன்னா, நம்ம பொயப்பு நாறிடும்... ந‌ம்ம டங்குவார அறுத்துடுவானுங்க..க‌ம்முனு கெடடா‌ க‌யிதே...

ஜஸ்வந்த் அண்ணாத்தக்கி பி.ஜே.பி.ல இருந்து கல்தா குடுத்துட்டாய்ங்களாமே... இன்னா மேட்டரு... அத்த‌ ப‌த்தி சொல்லுபா...

அது ஒன்ணும் இல்லடா...அவரு ஏதோ சுயசரிதை எய்தறேன்னு சொல்லி, வேலில போன ஓணான எடுத்து, பைஜாமா உள்ள வுட்டுகினாருப்பா... இப்போ, ஓணான் பைஜாமால படா டேமேஜ் பண்ணிச்சு... க‌த‌ர்றாரு... இன்னாத்த‌ சொல்ற‌து.. எல்லாம் கெர‌க‌ம்டா.....

சர்தான்பா... போதும்... போதும்... இத்தோட நிறுத்திக்க... இத்த கேட்டாவே "தல" சுத்துது... அட சுத்தறது என் தலப்பா... மிச்ச மீதி இருந்தா அப்பாலிக்கா சொல்லு... சுருக்கா போயி, அங்க கீற கபாலிய கூட்டிகினு நேர போயி ஒரு ஃபுல்"டாஸ்மாக்" வுட்டாதான் சரிப்படும்....அப்போ வர்ர்ட்டா...

Friday, August 21, 2009

விடுக‌தையா இந்த‌ வாழ்க்கை... விடை த‌ருவார் யாரோ!?


ஐயோ...... இதுக்கெல்லாம் யாராவது பதில் சொல்லுங்களேன்.......

"சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்".... இந்த பாடலை ஏன் இதுவரை யாருமே ரீமிக்ஸ் செய்யவில்லை?

இளைய திலகம் பிரபு நடித்த "சின்னத்தம்பி" சூப்பர் ஹிட்..... கேப்டன் விஜயகாந்த் நடித்த "பெரியண்ணா" மரண அடி..... ஏன்?? "அண்ணா"வை விட "தம்பி" ஒசத்தியா?

முரளி நடித்த எதிர்மறை தலைப்பு கொண்ட படங்கள் "பகல் நிலவு" மற்றும் "இரவு சூரியன்" ரெண்டு படமுமே ஓடவில்லை...... ஏன்??

தகரவாய் தங்கர் பச்சான் இயக்கி நடிக்கும் "வெள்ளையாய் ஒரு பச்சிலை" படம் எப்போது வெளிவரும்?

பாண்டியராஜன் இயக்கி, நடித்த ஆண்பாவம் என்ற படம் ஹிந்தியில் "ஸச்சா ப்யார்" என்ற பெயரில் ஜூஹி சாவ்லாவை நாயகியாக வைத்து தயாரிக்கப்பட்டது.... இந்த படம், வெளிவருமா வராதா?

கமல்ஹாசன் நடிக்கும் "உன்னை போல் ஒருவன்" படமும் வழக்கம் போல், ஆஸ்கர் கதவை தட்டி விட்டு வருமா? கிடைக்காத வெறுப்பில், ஆஸ்கர் அமெரிக்கர்களுக்கானது என்று வழக்கம் போல் படம் ஓட்டுவாரா?

அரசியல் வெடி புஸ்வானம் ஆன நிலையில் கேப்டனின் சினிமா எதிர்காலம்??

கேப்டனின் கடைசி வெளியீடான "எங்கள் ஆசான்" படம் ரிலீசான எல்லா இடங்களிலும் பப்படம் ஆன நிலையில் சென்னையில் ரிலீஸ் ஆகுமா, ரிலீசானால் ஹிட் ஆகுமா?

சிம்புவின் "சிலும்பல்" இதோடு அடங்கிவிடுமா? இல்லை இன்னும் தொடருமா?

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா... நீ தொட்டு கொள்ள சிக்கன் தரட்டா என்ற கவித்துவமான பாடலுக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை?

கட்டு கட்டு கீரக்கட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு என்று தொடங்கும் டூயட் பாடல் எந்த கவிஞரால்(??) இயற்ற(??)ப்பட்டது?

Tuesday, August 18, 2009

அதிரடி டைரக்டர்கள் 2010 - ஒரு சிறப்பு பார்வை2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி வரை வெளிவந்த படங்களில் "நாடோடிகள்" தவிர எந்த படமும் போணியாகாத‌ நிலையில், கோலிவுட் டைரக்டர்கள் ஒன்று கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கிறார்கள்...

செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை தெரிந்து கொள்வோம், வாருங்கள்.....

**************

பேசாம நாம பழைய வ்யாவாரத்துக்கே போயிடலாம்னே.... புண்ணாக்க நோண்டிட்டு, புளிய உருட்டிட்டு...... என்னவோ செய்யலாம்..... இங்க, நேத்து வந்த பயலுவ எல்லாம், நம்ம வந்தா மருவாத குடுக்கறதில்ல..... காலு மேல காலு போட்டு இருக்கானுவ.... என்று "பூமநாராயணன்" சீறினார்.....

இன்னிக்கி தான்யா சரியா சொன்னீரு.... என் படத்துல நடிக்கற ஹீரோ, ஹீரோயின் பண்ற அலப்பறை கூட தாங்கலேய்யா என்று "டிங்கர் பிச்சான்" பொருமினார்.... அதுலயும், அந்த விஜயகாந்து படம் "எங்கள் ஆசான்" வந்தது பாருங்க.... அய்யோ...அய்யோ.. ரெண்டு, மூணு ஷோ தான் ஓடுச்சு.... அதுக்கே.. தியேட்டர் ஆப்பரேட்டருங்க 10/20 பேரு கீழ்ப்பாக்கத்துல அட்மிட் ஆயிட்டானுவக...

கரெக்டுங்க.... என் படத்துல பாருங்க.... ஒப்பனிங் சீன்ல ஹீரோ ரயில்ல வந்து எறங்கரார்னு அந்த "பிஜய்" கிட்ட கதை சொல்றேன்.... ஹெலிகாப்டர்ல வந்து எறங்கற மாதிரி சீன் வைய்யுன்னு பெரிய சீன் போடறாரு... "கொட்டாம்பட்டி"க்கு வர்ற ஹீரோக்கு எதுக்குங்க ஹெலிகாப்டர்..... என்று "பீரரசு" நறநறக்கிறார்.
பேசுறது எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசிட்டு என்னை மட்டுமாவது அனுப்புங்க... இன்னிக்கி ஏ.வி.எம்.ல "தந்திரன்' படத்தோட கிளைமாக்ஸ் ஷூட்டிங் இருக்கு என்று அவசரப்படுத்துகிறார் டைரக்டர் "பங்கர்"...இவனுங்களும், இவனுங்க இம்சையும் என்றபடி...

நான் இங்க எதுக்கு வந்தேன்னே தெரியல என்றபடி மோட்டுவளையை பார்த்தபடி தாடையை சொரிந்தார் "பவுதம் பேனன்". இந்த மாதிரி ஷாட் வச்சா நல்லா இருக்குமா இல்ல "ப‌ம்பு"வும் "பிரிஷா"வும் வானத்து மேல‌ இருந்து பறந்து வ‌ர்ற‌ மாதிரி ஒரு ஷாட் வ‌ச்சு அச‌த்திடுவோமா என்று தனக்கு தானே பேசி சிரித்துக்கொண்டிருந்தார்...

"ஏழாம் வடை" படத்தோட ஷூட்டிங் நிறுத்திட்டு இந்த மீட்டிங் வந்து இருக்கேன்.. அங்க எல்லாரும் எனக்காக வெயிட்டிங்... சொல்றத எதுன்னாலும் சீக்கிரம் சொல்லுங்க என்று கர்ஜித்தார் "கந்தர் கி".
அப்போது "தமிழ் கரடி" ஆவேசமாக சவுண்ட் விட்டுக்கொண்டு உள்ளே வர அந்த ஏரியாவே டெர்ரராகிறது....
யார் கிட்ட, என்கிட்டயேவா..... நான் தமிழன்டா.....தமிழன்..... யூத்து... தெரியும்ல... இன்னும் நான் யூத்து என்று விரலை சொடுக்கியபடி எனக்கு தமிழ் மட்டும் இல்ல.... இங்கிலீஷும் தெரியும்.....
வர்றியா..... ஒரு மேடை போட்டு ABCD சொல்லுவோம்.... யாரு மொதல்ல சொல்லி முடிக்கறாங்கன்னு பாப்போமா..... "பனை மரத்துல வவ்வாலா இந்த கரடி கிட்ட சவாலா"!!! இத பத்து தடவை மவுண்ட் ரோடு நடுவுல நின்னு கத்தி சொல்லுவியா? நான் சொல்லுவேன் என்றெல்லாம் சவுண்ட் விடுவதை பார்த்து அனைவரும் மூச்சு விட மறந்தனர்....
ஐயோ.....இன்னிக்கி செத்தோம் என்று எல்லாரும் கோரசாக மனதிற்குள் கூவினர்..... கரடி எங்கேயோ வெளியூர்ல ஷூட்டிங் போயிடுச்சுன்னு சொன்னதாலதான், இன்னிக்கி இந்த மீட்டிங் வச்சோம்.... ஆனா, கரடி எப்படியோ தப்பிச்சு இங்க வந்துடுச்சே, இன்னிக்கி நம்ம எல்லாரோட கதையும் சங்குதான், அபீட்டுதான் என்று நினைத்தனர்...
என்னையா நடக்குது இந்த நாட்டுல..... ஒரு தமிழனுக்கு உள்ளே வர அனுமதி இல்லையா..... ...... என் அடுத்த படம் வரட்டும்.... ஆல் ஓவர் தி வேல்ட் ஒரே ஒரு ஹீரோதான்.... அது நான்தான்....

கோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஹாலிவுட், பிளைவுட்னு எல்லா வுட்டும் என்கிட்டே வந்து கால்ஷீட் கேட்டு நிக்கும்..... என்றெல்லாம் பிதற்றுவதை பார்த்து "பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் எல்லாம் டெர்ரர் ஆகிறார்கள்...

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, தான் ஏற்கனவே எழுதி வைத்த தீர்மானங்களை டைரக்டர்கள் சங்க தலைவர் "பூமநாராயணன்" வாசித்தார்....

***********************

இனிமேல் நடிகர், நடிகைகளுக்கு கேரவன் வண்டி கிடையாது..... டெண்ட் கொட்டகைதான்.

விதவிதமான ஜூஸ் கிடையாது..... வெறும் தண்ணீர்தான்.... வேண்டுமானால் சிறிது ஐஸ் மட்டும் போட்டு..

படத்துல மொத்தம் 5 டிரஸ்தான் .....

மத்தியானம் சாப்பாடு வெறும் கம்பங்கூழும், பச்சை மிளகாயும்தான்.... வெங்காயம் வேணும்னா, அவிய்ங்கவிய்ங்க வீட்டுல இருந்துதான் எடுத்து வரணும்...

லன்ச் டயத்துல தூங்கறதுக்கு ஆளுக்கு ஒரு பாய் மட்டுமே தரப்படும். போர்வை வேண்டுமென்றால் அவரவர்கள் வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும். அது அவர்கள் இஷ்டம். இதில் நிர்வாகம் தலையிடாது.

வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வருவதற்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்.....

தமிழ் படங்களின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.... இது ரொம்ப முக்கியம்....
நடிப்பவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும்.
இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படாதவர்கள், தானே சொந்தமாக படம் தயாரித்து நடிக்கட்டும் என்று இந்த சங்கத்தின் சார்பாக கூறிக்கொள்கிறேன்.....என்று அறிக்கையை வாசித்து முடித்தார்.....

இதை கேட்ட "பீரரசு" "கரடி" போன்ற ஹீரோ டைரக்டர்கள் கொதித்து எழுந்தனர்......

நீங்கள் போடும் சட்டம் எல்லாம், ஹீரோவாக மட்டும் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் பொருந்தும்...... எங்களை போன்ற படைப்பாளிகளுக்கு பொருந்தாது என்று ஜெர்க்கினர்....

படைப்பாளி என்ற வார்த்தையை கேட்டதும் நன்றாக தூங்கி கொண்டிருந்த "டிங்கர் பிச்சான்"...சட்டென்று எழுந்து கரடி, பீரரசு, கிந்தர் எல்லாம் படைப்பாளிகள் இல்லை.... அழிப்பாளிகள்.... இந்த படவுலகில் படைப்பாளி என்றால் அது இந்த "டிங்கர் பிச்சான்" மட்டும்தான் என்று ஓவர் அலப்பறை விடுகிறார்....

இதை கேட்ட "பீரரசு" மற்றும் "கரடி" ஆகியோர் சங்கமாவது.... சுங்கமாவது.... கலைங்கடா எல்லாத்தையும் என்றபடி தன் தலையை கலைத்து, சட்டையை கிழித்துக்கொண்டு "டிங்கர் பிச்சான்" நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர்....

நிலைமை மோசமாவதை கண்ட "பூமநாராயணன்" சங்கத்தின் பின் வாசல் வழியாக பாய்ந்து தாவுகிறார்.... "கரடி" மற்றும் "பீரரசு" அவரை அடிக்க கையில் அரை செங்கல் எடுத்து துரத்துகின்றனர்......

மொத்தத்தில் அந்த ஏரியாவே "கலீஜ்" ஆகிறது.... ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா?

Monday, August 17, 2009

கப்சா டைம்ஸ் சினிமா செய்திகள் - 01.01.2012


"எந்திரன் பாகம்-II" தான் என் கடைசி படம்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

எனது "மருதநாயகம்" படம், மருதநாயகி என்று பெயர் மாற்றம்..... ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க நானே அந்த படத்தை இயக்குகிறேன்..... கலைஞானி கமல்ஹாசன்....

மன்சூர் அலிகான், அரசியலில் காமெடியனானதை தொடர்ந்து தன் அடுத்த படத்தை அறிவித்தார்..... படத்தின் பெயர் - "டம் டம் டமாக்கா...டும் டும் டுமாக்கா, தாம் தூம், அன்றும், இன்றும், என்றும் நான் ஆல் டைம் டகால்டி".....

வைகைப்புயல் வடிவேல் டாஸ்மாக்கையும், இரவு ஆட்டத்தையும் சிறிது குறைத்து கொண்ட பின், லேட்டஸ்டாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.... படத்தின் பெயர் "எமலோகத்தில் ஏழுமலை".

இந்த படத்தில் தனக்கு ஜோடியாக ஹீரோயினாக "திரிஷா"வையும், அசினையும் நடிக்க வைக்குமாறு வடிவேல் டைரக்டரிடம் சொல்லியதாக காத்து வழியாக காதை வந்தடைந்த செய்தி..

தமிழில் பெயர் வைத்தால் தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு.... தமிழக அரசு அறிவிப்பு... இதை தொடர்ந்து, ஜெட் லி நடித்த ஆங்கில டப்பிங் படத்திற்கு "மரண அடி மன்னாரு" என்று சுத்தமான தமிழ் பெயர் சூட்டப்பட்டதாக ராமநாராயணன் அறிவித்தார்..

"வெட்டி வீராசாமி-II". எனது அடுத்த படம் என்று விஜய டி.ராஜேந்தர் அறிவித்தார். இந்த படத்தில் அவர் முதன் முதலாக மூன்று வேடம் போடுகிறார் என்றும் தகவல்... மூன்று ஜோடிகள்.... ஆனால், யாரையும் தொடாமல் நடிப்பேன் என்று கூக்குரல் விடுத்தார்....

ராமநாராயணன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் தயாரிப்பதாக அறிவித்தார்.. படத்தின் பெயர் "ஆடுடா ராமா", ஹீரோ டெர்ரர் ஸ்டார் ஜெ.கே.ரித்தீஷ்.... இந்த படத்தை ஆங்கிலத்தில் "100 MONKEYS" என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்போவதாக‌ ராமநாராயணன் அறிவித்தார்..

"தசாவதாரம்" படத்தில் மேக்கப்புக்கு பயன்படுத்த, பெருமளவில் மைதா மாவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக கமலின் ஆஸ்தான மேக்கப்மேன் "மைக்கேல் வெஸ்மோர்" கைதாகிறார்....அரசின் தீர்ப்பு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருப்பதாக பல்பொருள் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் பங்காரு பாபு தெரிவித்தார்...

தங்கர் பச்சான், புதிய படத்தை அறிவித்தார்..... கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது... படத்தின் பெயர் "தகரத்தில் ஒரு பித்தளை டப்பா".

டைரக்டர் பாலா, தன் அடுத்த படத்தை கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து படம் பிடிக்க போகிறார்.... விஜய டி.ராஜேந்தர் தான் ஹீரோ, படத்தின் பெயர் "நான் கரடி".

ஆஸ்கர் கனவு நாயகன் கமல்ஹாசன் ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் படம் "உயரமாய் ஒரு குள்ளன்".

நடிகர் பாண்டியராஜன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை ஏ.வி.எம்.மில் நடைபெற்றது... அதில் அவர் நெகடிவ் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் "குட்டையானவன் கெட்டவனா"?.

நடிகர் நாசர் கதாநாயகனாக நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டது.... அவரே தயாரிப்பாளர்.... படத்தின் பெயர் "குல்லா போட்ட நவாபு, செல்லாது உன் ஜவாபு"...

கோவை சரளா வெகு நாட்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் படத்தின் பெயர் "குரங்கு குசலா"... இதில், இவர் நாயகியாக நடிக்கிறார்.

நடிகர் நெப்போலியனின் அடுத்த படம் பூஜை..... படத்தின் பெயர் "எட்டு பட்டியும் பட்டா பட்டியும்"....குஷ்பு ஜோடி என்று தெரிகிறது.

வினு சக்கரவர்த்தி அதிரடி வேடத்தில் நடிக்கும் படம் "அட்டை கரி ஆறுமுகம்".

ரிடயர்ட் ஆன முன்னாள் நடிகை ரஞ்சிதா மீண்டும் நடிக்க வந்து, கதாநாயகியாக நடிக்கும் படம் "ஆத்தி இது வாத்து கூட்டம்"..... இதில், டைரக்டர் பாரதிராஜா "டவுசர் பாண்டி"
என்பவரை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.

டைரக்டர் பேரரசு தன் அடுத்த அதிரடி படம் தொடங்கினார்... படத்தின் ஹீரோ ராஜ்கிரண், வில்லன் பேரரசு....படத்தின் பெயர் - "கொண்டி தோப்பு கஜா"....

கேப்டன் விஜயகாந்த் தன் சரிந்த மார்கெட்டை நிமிர்த்த, சொந்த படம் தயாரிக்கிறார்..... படத்தின் பெயர் "பெரிய செட்டியார்".... இது தன் முந்தைய பழைய கிளாஸிக் படமான "சின்ன கவுண்டர்" போல பட்டையை கிளப்பும் என்று தெரிவித்தார்.....

பூஜைக்கு "கேப்டன்" முழு பாட்டில் "டாஸ்மாக்"கை காலி செய்து விட்டு சிவந்த கண்களுடன் வந்திருந்ததால், தள்ளாடியபடியே தன் காரை நோக்கி போனதாக, காககையார், கழுகார், குருவியார், பருந்தார் மற்றும் டாஸ்மாக்கார் தெரிவித்தனர்.

எஸ்.ஜே.சூர்யா நீண்ட நாட்களுக்கு பிறகு டைரக்ட் செய்து நாயகனாக நடிக்கும் படம் "கும்மிருட்டில் கும்தக்கா"..

நடிகர் பார்த்திபனின் அடுத்த படம் "மக்களோட மங்காத்தா".

சத்யராஜ், தன் மகன் சிபிக்காக தயாரித்து, இயக்கும் படம் "மாண்புமிகு மொக்கசாமி".... இதில் சத்யராஜின் ஜோடியாக நமீதா நடிக்கிறார்.. சிபியின் ஜோடியும்
நமீதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கிரண், உக்கிரமான அதிரடி நாயகன் வேடத்தில் நடிக்கும் படம் "காளி கோவில் கபாலி". இதில் சண்டை காட்சிகள் பிரதானமாக இருக்கும் என்று தெரிகிறது.

காமெடி நடிகர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் சின்னி ஜெயந்த் _ முரட்டு நாயகன், அறியாத பையன், காலேஜ் யூத் என்று மூன்று வேடங்களில் நடிக்கும் புது படம் - "ஜில்பான்சோ, பல்பான்சே, பில்பான்சி"......

இப்போது புதிதாக சேம்பரில் பதிவு செய்யப்பட தமிழ் படங்களின் பெயர்கள்....

அயனாவரத்தில் ஒரு அப்புசாமி
அக்ரகாரத்தில் ஒரு அண்ணாசாமி
மாயவரத்தில் ஒரு மன்னார்சாமி
பரமக்குடி பல்டி நாயகம்
ஜப்பானில் ஜானகிராமன்
அறந்தாங்கியில் அர்த்தநாரி
அமெரிக்காவில் பேரிக்கா
இந்தியாவில் விந்தியா
ஈரானில் பூரான்
கமுதியில் கபோதி
ஏர்வாடியில் ஒரு மார்வாடி
பூட்டானில் ஒரு சேட்டன்
மாயவரத்தில் ஆரவாரம்
சுங்குவாரில் கிழிந்த டங்குவார்
ஆழ்வார்பேட் ஆண்டவர்
மலேசியாவில் மன்னாரு
அதிரடி தொடரும்.....

Saturday, August 15, 2009

பேர‌ கேட்டாலே சும்மா அதிருதுல்ல‌ - (ப‌குதி - 10)


எழுத்தாளர் பாலகுமாரன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான தன் நட்பு குறித்தும், ரஜினி குறித்து அவர் நினைப்பதுமான பல விஷயங்களை சொல்ல எழுதியதுதான் "சூரியனோடு சில நாட்கள்" என்ற புத்தகம்.... ரஜினியை பற்றி பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் ஒவ்வொரு ரஜினி ரசிகனும் விரும்பி படிக்கக்கூடிய அளவில் இருக்கும் என்பது ஒரு சிறப்பு.... கிடைத்தால் (தேடித்தான் பாருங்களேன்,கிடைக்கும்), படித்துப்பாருங்கள்.

***************

தொடர்ந்து பத்து பகுதிகளாக‌ வந்த இந்த "பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" தொடரை தொடர்ந்து வருகை தந்து படித்து, கருத்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.....

இப்போது இந்த தொடருக்கு "முற்றும்" என்று போட மனது வரவில்லை என்றாலும், வேறு சில பதிவுகளை போட வேண்டும் என்பதால் இது வெறும் தற்காலிக முற்றும்தான்.... ஏனெனில், சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி எழுத ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று...

இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த தொடரில், நான் கூடியவரை, அவரை பற்றி நிறைய பேருக்கு தெரியாத சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக நினைவு... இந்த தொடரின் மூலமாக எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்...

இந்த தொடர் மற்றும் ரஜினியையும் வெகுவாக ரசிப்பவர்களும், என் நண்பர்களுமான :

சிம்பிள் சுந்தர் என்கிற சூப்பர் சுந்தர் (சென்னை)
அருண் என்கிற அருணாச்சலம் (பெங்களூரு)
கல்யாண் (பெங்களூரு)
தினகர் (அமெரிக்கா)
ஈ.ரா.(சென்னை)
வினோஜாஸன் (சென்னை)
கிரி (சிங்கப்பூர்)
லாரன்ஸ் (ஷார்ஜா)
அபுதாகீர் (துபாய்)
பஹ்ரைன் பாபா என்கிற ராம் (தற்போது ஷார்ஜா வாசம்)சிவசங்கர் (அபுதாபி வாசம்)
பாட்சா (திருச்சி, தற்போது துபாய்)
நிர்மல் (துபாய்)
வால் பையன் (ஈரோடு அருண்)
தண்டோரா
நட்புடன் ஜமால் (சிங்கப்பூர்)
தர்மா (சிங்கப்பூர்)
செல்லதுரை (துபாய்)
நரசிம்மன் (ஷார்ஜா)
ராமசந்திரன் (ஷார்ஜா)
சாரதி (ஷார்ஜா)
ரஜினி ராம்கி (சென்னை)
ஷாஜஹான் (தற்போது இந்தியா)
நட்டு என்கிற நடராஜன் (இங்கிலாந்து)
ராஜ் நாராயண் (சிங்கப்பூர், தற்போது பெங்களூரு)
ஷங்கர் பாபு (துபாய்)
பாசகி (இந்தியா)
காமேஷ்
கயல்விழி நடனம்
மற்றும் கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்....

முக்கிய பின்குறிப்பு :

1) இந்த நண்பர்கள் பட்டியலில் பல பெயர்கள் விடுப்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்....

2) இன்று அகில உலக சினிமா ரசிகர்கள் மற்றும் அனைத்து ரஜினி ரசிகர்களின் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பெயர் "எந்திரன்".
சூப்பர் எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களின் "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" கதைகளை படித்து விட்டு, இதைபோல் "எந்திரன்" இல்லையே என்று டைரக்டர் ஷங்கர் அவர்களையோ, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களையோ யாரும் வசைபாட வேண்டாம் என்று முன்கூட்டியே வேண்டுகோள் விடுக்கிறேன்...

ஏனெனில், எழுத்தில் வந்ததை அப்படியே திரையில் கொண்டு வருவது என்பது இயலாத காரியம்... பல்வேறு மாற்றங்களுடன் தான் 'எந்திரன்" திரைக்கு வர இருக்கிறது....

இந்தியாவின் மிக மிக பிரம்மாண்டமான படைப்பாகவும், அகில உலகையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாகவும் "எந்திரன்" படம் உருவாகி வருகிறது....இதை சமீபத்தில் வரும் செய்திகளும் உறுதி செய்கிறது......

எனவே, 2010_ஆம் ஆண்டு தொடக்கத்திலோ அல்லது கோடை விடுமுறையின் போதோ "எந்திரன்" வருவார். அவரை பாருங்கள்....ரசியுங்கள்....பிரம்மிப்படையுங்கள்.

(தற்காலிக முற்றும்....)

Wednesday, August 12, 2009

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - (பகுதி - 9)


நீங்கள் ரசித்து வாசித்து வந்த இந்த தகவல்கள் சிலவற்றை, வானொலி மூலமாய் அமீரகத்தில் சில பேர் கேட்டு இருக்க கூடும்.
நானும் நண்பர் லாரன்ஸ் அவர்களும் இணைந்து மற்ற பல நண்பர்களின் (அபுதாகீர் உட்பட) உதவியுடன், அமீரகத்தின் ஒரே தமிழ் வானொலியான SHAKTHI FM ரேடியோ ஊடாக, 2006, 2007, 2008 (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஆடியோ லின்க் இதோ..http://www.rajinifans.com/detailview.php?title=960) ஆகிய‌ வருடங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று சிறப்பு நிகழ்ச்சிகள் செய்தோம். கடவுள் அருள் இருப்பின் இந்த வருடமும் அந்த நிகழ்ச்சி நடைபெறும்.....

2007 மற்றும் 2008 வருடங்களில் நாங்கள் துபாயிலிருந்து தொலைபேசி / அலைபேசி வழியாக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தொடர்பு கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான இந்த நிகழ்ச்சியை பற்றி விளக்கி கூறி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம்....

வெகுநேரம் ரஜினியை பற்றியும், ரஜினியின் உயர்ந்த பண்பு, நேர்மை, உழைப்பு, உதவும் குணம் (வலது கை கொடுப்பது இடது கை அறியாத வகையில்) போன்ற விஷயங்களை எல்லாம் பற்றி பேசிய அவர், மேலும் கூறிய ஒரு சுவாரசியமான விஷயம் இதோ :

"நான் சமீபத்தில் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி எழுதிய புத்தகம் "பிருந்தாவனம்". அந்த புத்தகத்தின் முன்னுரையில் தமிழகத்தில் ஸ்ரீ ராகவேந்திரரை அறிமுகம் செய்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த புத்தகம் சமர்ப்பணம் என்று எழுதியுள்ளேன் என்று கூறினர்....

********************
ரஜினிகாந்த் அவர்களின் பெரும்பாலான தமிழ் படங்கள் (தற்போதெல்லாம்) தெலுங்கில் உடனுக்குடன் டப்பிங் செய்யப்பட்டு தமிழ் பதிப்புடனேயே வெளியிடப்படுகிறது.... ஆனால், முன்பு அப்படி இல்லை.... எப்போதிலிருந்து இப்படி?
மெகா ஹிட் படம் "பாட்சா" வரை தெலுங்கில் ரஜினிக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லை.... ஆனால், எல்லா படங்களும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும்....பாட்சா தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக் உரிமையுடன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை தொடர்பு கொண்டபோது, அவர் "பாட்சா" படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை...

ஆக‌வே..."பாட்சா" படத்தை எப்போதும் போலவே டப்பிங் செய்து வெளியிட்டார்கள்... பின்னணி பாடகர் மனோ டப்பிங் குரல் கொடுத்தார் (கடைசியாக வெளிவந்த "சிவாஜி தி பாஸ்" வரை மனோ தான் ரஜினிக்கு தெலுங்கில் டப்பிங், கமலுக்கு எஸ்.பி.பி) .... படம் வெளியாகி பட்டையை கிளப்பியது... சிரஞ்சீவி கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதற்காக வருந்தினார்...

அதிலிருந்து ரஜினியின் எல்லா படங்களும் தெலுங்கில் உடனுக்குடனாக வெளியாகும்... சிவாஜி தி பாஸ் அதிகபட்சமாக 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டு தூள் கிளப்பியதைதான் நாம் அனைவரும் அறிவோமே !! 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட தெலுங்கு பதிப்பு, ரூ.27 முதல் ரூ.30 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று செய்தி வந்தது....

சென்னை, ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் ஒரே நேரத்தில் வெளியானது கூட ஒரு சாதனைதான்....

சென்னையில் கேஸினோ திரையரங்கில் தெலுங்கு பதிப்பு வெளியானது....

********************
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வந்த "நான் மகான் அல்ல" என்ற படம் முதலில் "நான் காந்தி அல்ல" என்ற பெயரில் தான் தயாரிக்கப்பட்டது.. சென்சார் போர்டு ஆட்சேபத்தின் பேரில் "நான் மகான் அல்ல" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது... இது, ஹிந்தியில் சத்ருகன் சின்ஹா நடித்த "விஸ்வநாத்" என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது தெரியுமா?

********************
மறைந்த முன்னாள் இயக்குனர் ராஜசேகர் அவர்களின் டைரக்ஷனில் வெளிவந்த "தர்மதுரை" முதலில் "காலம் மாறிப்போச்சு" என்ற பெயரில்தான் தயாரிக்கப்பட்டது..... பின்புதான் "தர்மதுரை" என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவந்தது..

*********************
இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய படம்தான் "ராஜாதி ராஜா"....

இதில், ரஜினியின் இளமையான தோற்றமும், ரஜினியின் உடைகளும், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையும், பாடல்களும் ஒன்றாக கை கோர்த்து படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரிந்தது....

இந்த படத்தில் எல்லா பாடல்களும் பெரிய ஹிட்.... "மீனம்மா, மீனம்மா கண்கள் மீனம்மா, "மாமா ஒன் பொண்ண கொடு ஆமா சொல்லி கொடு", "எங்கிட்ட மோதாதே நான் ராஜாதிராஜனடா" "மலையாள் கரையோரம் கவி பாடும் குருவி" "என் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசையில்லயா" மற்றும் இசைஞானி இளையராஜா இயற்றி, (இதுவே பலருக்கு நியூஸ்தானே?!).இசையமைத்த ஒரு பாடல் "வா வா மஞ்சள் மலரே.

படம் வெளிவந்தது... திரைவிமர்சனத்தில், வழக்கம் போலவே வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம் ரஜினியை பற்றி வாருவதற்கு ஏதாவது செய்தி படத்தில் உள்ளதா என்று விளக்கெண்ணை ஊற்றி பார்த்தன.... அதிலும் "குமுதம்" படத்தை பார்த்து விட்டு பின்வருமாறு எழுதியது....

வா வா மஞ்சள் மலரே என்ற டூயட் பாடலில் ஒரு வரி வருகிறது.... வாச கருவேப்பிலையே உன் நேசம் வந்து சேர்ந்தம்மா என்று..... டூயட் பாடலில் கருவேப்பிலைக்கு என்ன வேலை??

அதே குமுதம் இன்று அதன் திரை விமர்சனத்தில், இந்த‌ பாட‌ல்க‌ளை எல்லாம் ப‌ற்றி ஒன்றுமே எழுதுவ‌தில்லையே...ஏன்??

நாக்க‌ முக்க‌ நாக்க‌ முக்க‌
க‌ட்டு க‌ட்டு கீர‌க்க‌ட்டு, புட்டு புட்டு குழாப்புட்டு
டேய்...கைய‌ வ‌ச்சுக்கிட்டு சும்மா இருடா!!!
குருவியோட‌ பாட்டு, கொளுத்துங்க‌டா வேட்டு, என் வீட்டு செங்க‌ல் நீ, என் சாப்பாட்டுல‌ உப்பு க‌ல்லு நீ....

இந்த பாடல்கள் எல்லாம் என்ன கவித்துவம் நிறைந்த பாடல்களா? நீங்களே சொல்லுங்க மக்களே.......

***************
ஜி.வி.பிலிம்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் டைரக்ஷனில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "தளபதி" படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பதை நாம் அனைவரும் அறிவோம்... குறிப்பாக இங்கு நான் சொல்ல வந்த விஷயம், அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போது, அட ஆமாம் என்று சொல்லக்கூடிய‌ விஷயம்.. அதாவது :

"காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே" என்ற முழு பாடலும் ஸ்லோ மோஷனில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.....

(இன்னும் கொஞ்சமே வரும் ........)

Sunday, August 9, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-8)


கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் ஜெய்கணேஷ் நடித்த வேடத்தில், தெலுங்கில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார். இது, ரஜினிக்கு முதல் தெலுங்கு படம்...... பெயர் "அந்துலேனி கதா".
*******************
"BLOODSTONE' என்ற ஆங்கில படத்தில் நடித்ததற்காக "இந்தியன் எக்ஸ்பிரஸ்" நிறுவனம் அவருக்கு 1988-ம் ஆண்டின் "சாதனையாளர்" (BEST ACHIEVER AWARD) விருது அளித்தது... அந்த விருதை வாங்கி கொண்டு, ரஜினி அவர்கள் விழா மேடையில் தன்னடக்கத்துடன் சொன்னது..

"IT IS NOT AN ACHIEVEMENT, BUT AN OPPORTUNITY".
*****************

"புன்னகை மன்னன்" படத்தின் 100-வது நாள் விழா, ஆனந்த் தியேட்டர் வளாகத்தில், கே.பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது... அந்த விழாவின், முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பை பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறினார் :

HE IS AN INSTITUTION BY HIMSELF
*********************

சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட "ப்ரியா" படம்தான் தமிழின் முதல் "ஸ்டீரியோபோனிக்" இசை கொண்ட படம் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

அந்த "ஸ்டீரியோபோனிக்" இசையை "ப்ரியா" படத்திற்கு அமைக்க பெரும் அளவில் உதவி புரிந்த பின்னணி பாடகர் "ஜேசுதாஸ்" அவர்களுக்கு நன்றி செய்யும் விதமாக, இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஜேசுதாஸ் அவர்களையே பின்னணி பாட வைத்தார்.
*********************

கதாசிரியர், வசனகர்த்தா போன்ற பலமுகங்களை கொண்டவரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பருமான எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் பெண்ணின் திருமண விழாவில் எத்தனையோ நண்பர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், பாலகுமாரன் அவர்கள், ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொண்டதை சிலாகித்து சொன்னதை பாருங்களேன்....

கேள்வி : ரஜினிகாந்த், உங்கள் இல்ல திருமணத்திற்கு வந்திருந்து, உங்கள் செல்ல மகளை வாழ்த்தினாராமே?

பாலகுமாரன் பதில் : ஆமாம்....அது என் பாக்கியம்....எங்கள் மூத்தோர் செய்த புண்ணியம்...என் குழந்தையின் நல்வாழ்க்கைக்கு கிடைத்த நல்ல சகுனம்.... வாழ்நாளின் இறுதிவரை நான் சந்தோஷப்பட்டு, நன்றியோடு நினைத்து கொண்டிருக்கிற விஷயம். திருமண வரவேற்பின் போது, வந்து ஏழு நிமிடங்கள் நின்று கவுரப்படுத்திய அவரின் வருகைக்கு பிறகு மனசெல்லாம் நிறைந்து போயிற்று...

ரஜினி அந்த திருமண வரவேற்பிற்கு வந்த அந்த தருணத்தை எழுத்தாளர் பாலகுமாரன் இவ்வாறு விவரிக்கிறார்..

"குண்டலினி சக்தி எழும்போது ஒரு மனிதருக்கு எத்தனை பரபரப்பு உள்ளத்திலும், உடம்பிலும் ஏற்படுமோ, அப்படியொரு பரபரப்பு திருமண வரவேற்பில் திரு.ரஜினிகாந்தின் வருகையின்போதும் எல்லோருக்கும் ஏற்பட்டது...பாதுகாப்பின் காரணமாக எங்கேயும் அதிகம் போகாத அவர் என் மீது அன்பு வைத்து, என் குழந்தையை நேரடியாக ஆசீர்வதித்தது, நாங்கள் செய்த பாக்கியம்....அவருக்கு எங்கள் வீடு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.....
******************

அமிதாப் பச்சன் "கோன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்த போது, ஒருமுறை கலந்து கொள்ள வந்திருந்த போட்டியாளரின் பெயர் "ரஜினிகாந்த்". அவர் பெயரை கேட்டவுடன், அமிதாப் பச்சன், அந்த போட்டியாளரிடம் :

ரஜினிகாந்த் என்றொரு மாபெரும் தென்னிந்திய நடிகர் உள்ளார்...... அவர் என் சிறந்த நண்பர் என்று கூறினார்...... பார்வையாளர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பியது என் நினைவுக்கு வருகிறது......
*********************

"சிவாஜி தி பாஸ்" திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்கள் முன்பு வந்த ஆனந்த விகடன் இதழில் படத்தின் வசனகர்த்தா "சுஜாதா" அவர்க கூறியது....

"நான் சில நகை வாங்க வேண்டும் என்று பிரின்ஸ் ஜுவல்லரி சென்றிருந்தேன்..... அங்கு இருந்த சேல்ஸ்மேன் எனக்கு பலவேறுபட்ட நகைகளை எடுத்து காண்பித்தார்.... அதில், நான் சிலவற்றை செலக்ட் செய்தவுடன், என்னிடம் வந்து, சிவாஜி படத்தின் கதை என்ன என்று கூறினால், பில் அமௌன்டில் சில ஆயிரங்கள் குறைப்பதாக சொன்னார்........ என்னால், சிறிதும் நம்ப முடியவில்லை.... சிவாஜி படத்தின் இந்த அளவு தாக்கத்தை....."
**********************

கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து "வேலைக்காரன்" என்ற படம் வெளிவந்தது.... இது, அமிதாப் பச்சன் ஹிந்தியில் நடித்த "நமக் ஹலால்" என்ற படத்தின் தமிழ் ரீமேக்.

இளையராஜா இசை.... கவிஞர் மு.மேத்தாவின் பாடல்கள் மிக நன்றாக இசைக்கப்பட்டு இருந்தது...

அதில் வரும் ஒரு சூப்பர் ஹிட் டூயட் பாடல் "வா வா வா கண்ணா வா". இது காஷ்மீரில் படமாக்கப்பட்டது..... இந்த பாடலின் இடையில் வரும் வரிகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்..... இது என்ன புதுமை...... காதல் பாடலின் வரிகள் "மத நல்லிணக்கத்தை" சொல்கிறது என்று....

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் அஞ்சும் இந்த நெஞ்சமே

ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதிமன்றம் போகுமே
பேச தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே...

இப்படி வந்து கொண்டிருக்கும் பாடலின் இடையே வரும் அந்த அற்புதமான வரிகளை இங்கே பாருங்களேன்....

"தாஜ்மகாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில், மதங்கள் ஒன்று சேரலாம்".....

எப்படி.......சும்மா அதிருதுல்ல..........
(தொடரும்......)

Friday, August 7, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-7)

வேற்று மொழி நடிகர்கள் ரஜினியுடன் இணைந்து நடித்த தமிழ் திரைப்படங்கள்.
மோகன்பாபு : கர்ஜனை, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்கள்.
விஷ்ணுவர்தன் : "விடுதலை" மற்றும் "ஸ்ரீ ராகவேந்திரர்" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
அம்பரீஷ் : "ப்ரியா" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்.
சிரஞ்சீவி : "ராணுவ வீரன்", "மாப்பிள்ளை" படங்களில் உடன் நடித்து இருப்பார். மம்மூட்டி : "தளபதி" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
மது : "தர்மதுரை" படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்து இருப்பார்.
அம்ரீஷ் பூரி : "தளபதி" மற்றும் "பாபா" படங்களில் வில்லனாக நடித்து இருப்பார்.
கன்னட நடிகர் ஒருவர் ரஜினியின் தம்பியாக "பாட்சா" படத்தில் நடித்து இருப்பார்.
கன்னட நடிகர் ரவிச்சந்திரன் "நாட்டுக்கு ஒரு நல்லவன்" என்ற படத்தில் ரஜினியுடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்து உள்ளார்.
மறைந்த முன்னாள் நடிகர் கன்னட பிரபாகர் அவர்கள் "தாய் மீது சத்தியம்", "அண்ணாமலை", "முத்து" உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
ஷீலா அவர்கள் ரஜினியுடன் "சந்திரமுகி" படத்தில் உடன் நடித்து இருப்பார்.
ஜெயபாரதி அவர்கள் ரஜினியுடன் "முத்து" படத்தில் நடித்து இருப்பார்....
மேலும் சில தகவல்கள்.

கே.பாலச்சந்தர் டைரக்ட் செய்த "நிழல் நிஜமாகிறது" தமிழ் படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது, தமிழில் கமலஹாசன் ஏற்று நடித்த வேடத்தை ரஜினிகாந்த் அவர்கள் நடித்தார்.

நான்கு மொழிகளில் எடுக்கப்பட்ட படமான "நாட்டுக்கு ஒரு நல்லவன்" தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசானது. ஆனால், அதன் ஹிந்தி பதிப்பான "ஷாந்தி கிராந்தி" இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

ரஜினி அவர்கள் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவுடன் தமிழிலிருந்து இருவருக்கு ஹிந்தி படங்களில் பணிபுரிய வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

1. ஜூடோ ரத்னம் - ரஜினி நடித்த "ஜான் ஜானி ஜனார்தன்", "கங்குவா" போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றினார்.

2.காமெடி நடிகர் செந்தில் ரஜினி நடித்த "பூல் பனே அங்காரே" படத்தில் நடித்து இருப்பார். கரகாட்டக்காரன் படத்தில் செய்த "வாழைப்பழ" காமெடியை இதில் மாற்றி "பான் பீடா" காமெடி செய்து இருப்பார்.

1987-88 வருடத்தில் அமிதாப் பச்சன் தலைமையில் ஒரு குழு ஸ்டார்நைட் நிகழ்ச்சிக்காக "இங்கிலாந்து" சென்றது. அதில், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கேர், கோவிந்தா, ஸ்ரீதேவி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இதில் விசேஷம் என்னவென்றால், இந்த சமயத்தில்தான், ரஜினியின் ஹேர்ஸ்டைல் மாறியது. சூப்பர் ஸ்டாரின் அந்த புதிய ஹேர்ஸ்டைல் அனில்கபூரின் ஹேர்ஸ்டைலை போலிருந்தது. இந்த புதிய ஹேர்ஸ்டைல்தான் "குருசிஷ்யன்" படத்தில் தொடங்கியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து அடிதடி படங்களிலேயே நடித்து வந்த காலகட்டத்தில் வெளிவந்த மிக முக்கியமான படம், மறைந்த முன்னாள் டைரக்டர் ராஜசேகர் டைரக்ஷனில் வெளிவந்த "தம்பிக்கு எந்த ஊரு". இந்த படம்தான், ரஜினியின் காமெடி / நகைச்சுவை நடிப்பை முழுதுமாக வெளிகொணர்ந்தது என்றால், அது மிகையாகாது.

இந்த படம் வெளியீட்டின் போது, படத்தின் போஸ்டர்களில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுவரை மோதலில் தூள் கிளப்பி வந்த ரஜினிகாந்த், இப்போது, காதலிலும் தூள் கிளப்புகிறார்.

இதுவரை கைகலப்பில் தூள் பரத்தி வந்த ரஜினிகாந்த், இப்போது கலகலப்பிலும் தூள் பரத்துகிறார்.

1977-ம் வருடத்தில் 15 படங்களிலும், 1978-ம் வருடத்தில் 20௦ படங்களிலும் நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

(இன்னும் வரும்....)