Wednesday, December 30, 2009

சந்திரமுகி (ரீவைண்ட் ௨005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம்

நடிகர் விஷ்ணுவர்த்தன் மரணம் என்ற செய்தி கேட்டபோது அதிர்ச்சியும் அவரது ஆன்மா சாந்தியடையவும் மனது பிரார்த்தித்தது...

அவரது ”ஆப்த மித்ரா” மனதில் நிறைந்தது, அதன் வெற்றியும் அதன் தமிழாக்கத்தில் அவரது ஆத்ம நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினியும் அடைந்த வெற்றியும் அதன் சூழலும் மனதில் நிழலாடியது. கன்னடத்தில் "கில்லாடி கிட்டு", "கலாட்டா சம்சாரா" மற்றும் தமிழில் "விடுதலை", "ஸ்ரீ ராகவேந்திரர்" (சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் 100 வது திரைப்படம்) படங்களிலும் இணைந்த நிகழ்வும் மனதில் வருடோடியது. வருடத்தின் இறுதி பதிவில் சில சாதனைகள் பட்டியலிடும் போது, மனம் ஆக்கபூர்வமாய் ஆகும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இனிய மனங்கனிந்த 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமைக்கும் அவர் தம் குடும்பத்துக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் “சந்திரமுகி”. ”மணிச்சித்ரதாழ்” என்ற மலையாள படத்தின் கன்னட பதிப்பான ”ஆப்தமித்ரா” விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி அடைந்திருந்த நிலையில், ரஜினிகாந்த், தமிழில் ரீமேக் செய்து நடித்த படம்... 2002௦ ஆம் ஆண்டில் வெளிவந்த “பாபா” படம் சரியாக வெற்றியடையாத நிலையில் 3 வருடங்கள் எந்த படமும் நடிக்காத நிலையில் இருந்த ரஜினிகாந்த் அவர்கள் 2005 ஆம் ஆண்டில் நடித்து “சந்திரமுகி” வெளிவந்தது...

”சந்திரமுகி” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அவர்கள் சொல்லிய “நான் யானை இல்லை, குதிரை.... விழுந்தா சட்டென்று எழுந்துடுவேன்” என்ற டயலாக் ரொம்ப பிரசித்தம்…

இனி ”சந்திரமுகி” படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை ரீவைண்ட் செய்து, உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்... என்ன இருந்தாலும், பழைய நினைவுகளை அசைபோடுவது ஒரு தனி சுகம்தானே நண்பர்களே...

நாட்களாக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் படம் எடுக்காத நிலையில், ரஜினி அவர்கள் ராம்குமார் அவர்களை தொடர்பு கொண்டு, தயாரிக்க சொன்ன படம் தான் “சந்திரமுகி”.

தமிழில் 800 நாட்களுக்கு மேல் ஓடி, அதிக நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் 100 நாட்களை கடந்து ஓடிய தமிழ்ப்படம்...

ஜப்பானிலும் பெரிய வெற்றியை ஈட்டிய படம்..

முதன் முதலாக இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்கள் ரஜினி நடித்த படம் ஒன்றுக்கு இசையமைத்த படம்.

ஜோதிகா (கிளைமாக்ஸ் காட்சியில் தன் கோழி முட்டை கண்ணை உருட்டி ”ரா ரா சரசக்கு ரா ரா” என்ற போது அரங்கே அதிர்ந்தது), வடிவேல் நடிப்பு (மாப்பு, வெச்சுட்டான்யா ஆப்பு டயலாக் கேட்டபோது ரசிகர்களின் கரகோஷம் பட்டாசாய் வெடித்தது) வெகுவாக பாராட்டப்பட்ட படம்.

ஆந்திர பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான டப்பிங் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் சந்திரமுகி... அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வசூல் செய்த மற்ற தமிழ் படங்கள் அந்நியன் மற்றும் கஜினி...

படத்தின் தொடக்கத்தில் ரஜினி அவர்கள் வித்யாசாகர் அவர்களிடம் இந்த படத்தில் 6 பாடல்கள் இடம் பெறப்போகிறது... அதில், பாதிக்கு பாதி, அதாவது குறைந்தது 3 பாடல்களையாவது சூப்பர் ஹிட் பண்ணனும் என்று சொன்னதாகவும், அதற்கு வித்யாசாகர், ஏன் சார் 3 பாடல்கள், 6 பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக்கி காட்டுகிறேன் என்றதாகவும், ரஜினி அவர்கள் அதை நம்பாதது போன்ற ஒரு பார்வை பார்த்ததையும் வித்யாசாகர் ஒரு பேட்டியில் விவரித்தார்... பின்னர் படம் வெளிவந்து மகத்தான் வெற்றி பெற்ற நிலையில், ”சந்திரமுகி” வெற்றி விழாவில் ரஜினி அவர்களே இதை குறிப்பிட்டு தம்மை பாராட்டியதாகவும் தெரிவித்தார்...

ஆரம்பப்பாடலான “தேவுடா தேவுடா” ஒரு மெகா ஹிட் பாடல்... இந்த பாடல் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளர்களை உயர்வாக சித்தரித்தது...

“சாக்கடைக்குள் போயி, சுத்தம் செய்யும் பேரு
நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு
நதி நீரில் நின்று துணி தோய்ப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு

எந்த தொழில் செய்தாலென்ன செய்யும் தொழில்
தெய்வமென்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே!!”

கொக்கு பற பற, கோழி பற பற என்ற பட்டம் விடும் பாடல்...

இந்த பாடலின் ஆரம்பம் வெகு விளையாட்டாக இருக்கும்... ஆயினும், இடையில் சில கருத்துக்களை வெகு அழகாக சொல்லி இருப்பார்கள்...

“மீனாட்சி அம்மனை பார்த்தாக்க
கந்து வட்டியோட கொடுமைய போக்க சொல்லு
ஸ்ரீரங்கநாதர பார்த்தாக்க
தலைகாவேரிய அடிக்கடி வரச்சொல்லு”

கந்து வட்டிக்கு மதுரை பெயர் போனது என்பதும், காவிரி நீர் பகிர்வு ஒரு தீராத பிரச்சனை என்பதையும் நாம் அறிவோம்...

அத்திந்தோம், திந்தியும் தோம்தன திந்தாதிருந்தோம்...

இது மலையாள நாட்டுப்புற பாடலை சாயல் கொண்டிருந்த படம்... இந்த பாடலிலும், சில கருத்துக்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கும்...

“ஆறு மனமே ஆறு, இங்கு அனைத்தும் அறிந்ததாரு
அறிவை திறந்து பாரு, அதில் இல்லாததை சேரு
அட... எல்லாம் தெரிந்த, எல்லாம் அறிந்த ஆளே இல்லையம்ம்மா...”

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா


இந்த டூயட் பாடல், வெகு ரம்மியமாக படமாக்கப்பட்டிருக்கும்.... பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத ரஜினி, நயன்தாரா நடிப்பில் பாடல் வெகுவாக பிரபலமானது.... ஜோர்டான் நாட்டில் படமாக்கப்பட்டது என்று நினைவு... வெகு நாட்களுக்கு பிறகு ஹிந்தியின் மிக பிரபலமான பிண்ணனி பாடகி ஆஷா போஸ்லே, இசையமைப்பாளர் வித்யாசாகரின் விருப்ப பாடகர் மது பாலகிருஷ்ணனுடன் (இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பது தெரியுமா??) இணைந்து பாடிய தமிழ் பாடல் இது... இந்த பாடலை பற்றிய இன்னொரு சுவையான தகவல்... சந்திரமுகி படத்திற்காக போடப்பட்ட பாடல் அல்ல இது... வித்யாசாகர் அவர்கள் வேறு ஒரு படத்திற்கு போட்ட இந்த ட்யூன், அந்த படத்தின் டைரக்டரால் நிராகரிக்கப்பட்டது... பின், அது வாசு/ரஜினி கூட்டணிக்கு இசைத்து காட்டப்பட்டு, ஓகேவாகி............ பின் நடந்தது எல்லாம் வரலாறு....

அண்ணனோட பாட்டு, ஆட்டம் போடுடா

இந்த வெகுஜனங்களை கவர்ந்த பாடல், பெரிய வெற்றியை பெற்றது... இந்த பாடலிலும், ரஜினி டச் இருக்கும்... பாருங்கள்...

“உள்ளம் தெளிவாக வை... எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை

கண் இமைக்கும் நொடியில் எதுவும் நடக்கும்
அது எனக்கு தெரியும், நாளை உனக்கு புரியும்
அஞ்சுக்குள்ள நாலை வை, ஆழம் பார்த்து காலை வை”

கிளைமாக்ஸ் பாடலான :

”ரா ரா, சரசக்கு ரா ரா”

யாராலும் கற்பனை பண்ணி பார்க்க முடியாத ஒரு விஷயம் நடந்தது.... ஒரு தெலுங்கு பாடல், தமிழ்ப்பதிப்பில், முழுதாக இடம் பெற்று, பெரிய வெற்றியையும் பெற்றதை என்னவென்று சொல்வது... இதில் ரஜினியின் ட்ரேட் மார்க் வில்லத்தன நடிப்பு ”வேட்டையன்” என்ற கேரக்டரில் வெளியாகி வெகுவாக ரசிக்கப்பட்டது... அதிலும், குறிப்பாக அந்த குலை நடுங்க வைக்கும் “லக்க லக்க லக்க லக்க” டயலாக்... தியேட்டரில் பொறி பறந்ததை மறக்க முடியுமா?!!

இந்த படத்தின் இசை சேர்ப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு நாள், வித்யாசாகர் காரில் பயணித்து கொண்டிருந்த போது, சிக்னலில் அவர் காருக்கு பக்கத்தில் வந்து நின்ற ஒரு வாகனத்திலிருந்து ஒரு பெரிய போலீஸ் அதிகாரி இவரை பார்த்து, சார், நீங்க வித்யாசாகர் தானே, சந்திரமுகி படத்தில் தலைவருக்கு அட்டகாசமா ட்யூன் போடுங்க என்று சொன்னதை ஒரு பேட்டியில் வித்யாசாகர் சிலாகித்து சொன்னார்... ரஜினி அவர்களின் ரீச் எந்த அளவு இருக்கிறது என்று மிகவும் வியப்புற்றதாக குறிப்பிட்டார்...

(பின்குறிப்பு : லக்க லக்க லக்க லக்க டயலாக் உருவான கதை ) :

ரஜினி அவர்கள் ஒரு முறை நேபாள நாட்டிற்கு சென்றிருந்த போது, கூட்டமாக மக்கள் ஒரு பெண்ணை அழைத்து (இழுத்து என்பதுதான் சரி) சென்றதை பார்த்ததாகவும், அவர்கள் லக்க லக்க லக்க லக்க என்ற ஒரு விநோத சப்தம் எழுப்பியதாகவும், அவர்களிடம் என்ன செய்கிறீர்கள், யார் இந்த பெண் என்று விசாரித்தபோது, அந்த பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கிறது என்றும், சிகிச்சைக்கு மந்திரவாதியிடம் அழைத்து / இழுத்து கொண்டு செல்வதாக கூறியதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்... எங்கோ நேபாள நாட்டில் அவர் கேட்ட ஒரு விஷயம் ஒரு தமிழ் படத்தில் இடம்பெற்று, பின் அதுவே உலகளவில் அறியப்பட்டதையும் என்னவென்று சொல்வது!!??

ஆகவே.....நாம் அனைவரும் ஒன்று கூடி உரக்க சொல்லுவோம்... லக்க லக்க லக்க லக்க......

நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியான 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...........

23 comments:

M Arunachalam said...

கோபி,

2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திரு. விஷ்ணுவர்தன் அவர்கள் மறைவுக்கு அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.

இயக்குனர் பி. வாசு அவர்களின் 'ஆப்தமித்ரா' படம் எடுத்து முடிக்கும் வேளையில், அந்த படத்தில் நடித்த சௌந்தர்யா அவர்கள் அகால மரணம் அடைந்தார். இப்போது, அதே பி. வாசு அவர்களின் இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் 'ஆப்த ரட்சகா' படம் (இது ஆப்தமித்ராவின் 2 ஆம் பாகமாம்)
எடுத்து முடியும் நிலையில் இருக்கும்போது, அப்படத்தின் நாயகர் விஷ்ணுவர்தன் திடீர் மாரடைப்பினால் காலமாகிவிட்டார். Is Director P. Vasu's Kannada films are jinxed? God alone knows.

சந்திரமுகி கடைசி பாடலான 'அண்ணனோட பாட்டு' பாடலின் பல்லவி முடியும்போது வரும் கடைசி வரிகள் என்ன என்று படம் வெளியான காலத்திலிருந்து இன்றுவரை புரிய படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன். எத்தனை முறை கேட்டும், அவ்வரிகள் பிடிபட மாட்டேன் என்கிறது. நீங்களும், சைக்கிள் காப்பில் அந்த வரிகளை கண்டு கொள்ளவே இல்லை. Can you help please?

'கொஞ்ச நேரம்' பாடல் மிக அழகான டியூனில் அமைந்த பாடல். ஆனால், ஆஷாவின் இப்போதைய குரல் அப்பாடலின் இனிமையை கெடுத்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன்.

மற்ற மொழி பாடல்களையும் தமிழ் படத்தின் வெற்றி பாடலாக்கும் தில் மற்றும் திறமை ரஜினி படங்களுக்கே உண்டு. உதாரணம்: முத்து - குலுவாலிலே (ஆரம்பம் மலையாளம்); அருணாசலம் - மாத்தாடு மாத்தாடு மல்லிகே (ஆரம்பம் கன்னடம்); சந்திரமுகி - ரா ரா (முழுதும் தெலுங்கு).

Raju said...

சுவாரஸியம் கோபு அண்ணே.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//M Arunachalam said...
கோபி,

2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திரு. விஷ்ணுவர்தன் அவர்கள் மறைவுக்கு அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுவோம்.

இயக்குனர் பி. வாசு அவர்களின் 'ஆப்தமித்ரா' படம் எடுத்து முடிக்கும் வேளையில், அந்த படத்தில் நடித்த சௌந்தர்யா அவர்கள் அகால மரணம் அடைந்தார். இப்போது, அதே பி. வாசு அவர்களின் இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் 'ஆப்த ரட்சகா' படம் (இது ஆப்தமித்ராவின் 2 ஆம் பாகமாம்)
எடுத்து முடியும் நிலையில் இருக்கும்போது, அப்படத்தின் நாயகர் விஷ்ணுவர்தன் திடீர் மாரடைப்பினால் காலமாகிவிட்டார். Is Director P. Vasu's Kannada films are jinxed? God alone knows.

சந்திரமுகி கடைசி பாடலான 'அண்ணனோட பாட்டு' பாடலின் பல்லவி முடியும்போது வரும் கடைசி வரிகள் என்ன என்று படம் வெளியான காலத்திலிருந்து இன்றுவரை புரிய படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன். எத்தனை முறை கேட்டும், அவ்வரிகள் பிடிபட மாட்டேன் என்கிறது. நீங்களும், சைக்கிள் காப்பில் அந்த வரிகளை கண்டு கொள்ளவே இல்லை. Can you help please?

'கொஞ்ச நேரம்' பாடல் மிக அழகான டியூனில் அமைந்த பாடல். ஆனால், ஆஷாவின் இப்போதைய குரல் அப்பாடலின் இனிமையை கெடுத்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன்.

மற்ற மொழி பாடல்களையும் தமிழ் படத்தின் வெற்றி பாடலாக்கும் தில் மற்றும் திறமை ரஜினி படங்களுக்கே உண்டு. உதாரணம்: முத்து - குலுவாலிலே (ஆரம்பம் மலையாளம்); அருணாசலம் - மாத்தாடு மாத்தாடு மல்லிகே (ஆரம்பம் கன்னடம்); சந்திரமுகி - ரா ரா (முழுதும் தெலுங்கு).//

********

நீங்கள் சொன்ன விஷயங்களை அசை போடுகிறேன்... ஆம்... இந்த விஷயம் (பி.வாசு, கன்னட படங்கள்) கடவுளுக்கு மட்டுமே தெரியும்...

//நீங்களும், சைக்கிள் காப்பில் அந்த வரிகளை கண்டு கொள்ளவே இல்லை. Can you help please?//

கண்டிப்பாக தலைவா...

இந்த தெலுங்கு, மலையாளம், கன்னட ஆரம்ப வரிகள் விஷயம் சுவாரசியம்...

R.Gopi said...

//ராஜு ♠ said...
சுவாரஸியம் கோபு அண்ணே.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

********

மிக்க நன்றி தலைவா..... உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

Abu said...

Dear Gopi,

Wish You a Happy New Year !

My hearty wishes to all friends and this blog readers.

Chandramukhi " Konja Neram " shooted not it Jordan, it was shooted in "TURUKY".

Regards
Abu

R.Gopi said...

// Abu said...
Dear Gopi,

Wish You a Happy New Year !

My hearty wishes to all friends and this blog readers.

Chandramukhi " Konja Neram " shooted not it Jordan, it was shooted in "TURUKY".

Regards
Abu//

*********

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப்பேச கூடாதா... அந்த நேரம் அந்தி நேரம் என்று தொடங்கும் பாடல் “ஜோர்டான்” நாட்டில் படமாக்கப்பட்டதாக நினைவு என்று எழுதி இருந்தேன்...

இங்கு வருகை தந்த எனதருமை நண்பர் அபுதாகீர் அவர்கள் அந்த பாடல் “துருக்கி”யில் படமாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்... அவருக்கு என் நன்றி...

எந்திரன் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்க்க இங்கே செல்லுங்கள்.....

www.directorshankaronline.com

RAMYA said...

மிகவும் சிரத்தையுடன் கூடிய இடுகை கோபி!

அதீத பொறுமையுடன் கூடிய அழகான இடுகையும் கூட..

அருமையா தொகுத்து வழங்கி இருக்கீங்க. அபாரமான தொகுப்பு..

பாட்டுக்களின் அணிவகுப்பையும் உங்களின் ஆர்வத்தையும் நான் மிகவும் பாராட்டுறேன் கோபி.

எனக்கும் விஷ்ணுவர்த்தனன் ரொம்ப பிடிக்கும். அருமையான நடிகர், நல்ல மனிதர் என்று கூறுவார்கள்.

அவரின் ஆன்மா சாந்தியடை பிரார்த்திக்கிறேன்.

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபி!

R.Gopi said...

// RAMYA said...
மிகவும் சிரத்தையுடன் கூடிய இடுகை கோபி!

அதீத பொறுமையுடன் கூடிய அழகான இடுகையும் கூட..

அருமையா தொகுத்து வழங்கி இருக்கீங்க. அபாரமான தொகுப்பு..

பாட்டுக்களின் அணிவகுப்பையும் உங்களின் ஆர்வத்தையும் நான் மிகவும் பாராட்டுறேன் கோபி.

எனக்கும் விஷ்ணுவர்த்தனன் ரொம்ப பிடிக்கும். அருமையான நடிகர், நல்ல மனிதர் என்று கூறுவார்கள்.

அவரின் ஆன்மா சாந்தியடை பிரார்த்திக்கிறேன்.//

***********

பாராட்டுக்கு மிக்க நன்றி ரம்யா...

R.Gopi said...

//RAMYA said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபி!//

********

வாழ்த்துக்கு நன்றி ரம்யா....

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Unknown said...

எனக்கும் விஷ்ணுவர்த்தனன் ரொம்ப பிடிக்கும். அருமையான நடிகர், நல்ல மனிதர் என்று கூறுவார்கள்.

அவரின் ஆன்மா சாந்தியடை பிரார்த்திக்கிறேன்.

R.Gopi said...

//jaisankar jaganathan said...
எனக்கும் விஷ்ணுவர்த்தனன் ரொம்ப பிடிக்கும். அருமையான நடிகர், நல்ல மனிதர் என்று கூறுவார்கள்.

அவரின் ஆன்மா சாந்தியடை பிரார்த்திக்கிறேன்.//

*******

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஜெய்சங்கர்....

பாசகி said...

விஷ்ணுவர்தன் அவர்களோட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரொம்ப ஆழமா எழுதிருக்கீங்க, இவ்வளவு விசயத்தை கோர்வையா படிக்க சுவாரசியமா இருக்கு.

//எத்தனை முறை கேட்டும், அவ்வரிகள் பிடிபட மாட்டேன் என்கிறது. நீங்களும், சைக்கிள் காப்பில் அந்த வரிகளை கண்டு கொள்ளவே இல்லை. Can you help please?//

பதிவு படிக்கும்போது எனக்கு வந்த அதே சந்தேகம். அர்த்தம் சொல்லுங்க :)

R.Gopi said...

//பாசகி said...
விஷ்ணுவர்தன் அவர்களோட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ரொம்ப ஆழமா எழுதிருக்கீங்க, இவ்வளவு விசயத்தை கோர்வையா படிக்க சுவாரசியமா இருக்கு.

//எத்தனை முறை கேட்டும், அவ்வரிகள் பிடிபட மாட்டேன் என்கிறது. நீங்களும், சைக்கிள் காப்பில் அந்த வரிகளை கண்டு கொள்ளவே இல்லை. Can you help please?//

பதிவு படிக்கும்போது எனக்கு வந்த அதே சந்தேகம். அர்த்தம் சொல்லுங்க :)//

-*-*-*-*-*-*-*-*

வாங்க பாசகி... உங்களுக்கும் சந்தேகம் வந்து விட்டதா... சரி, விரைவில் தீர்த்து வைக்கிறேன்...

R.Gopi said...

அருமை தோழமைகள் அருணாசலம் மற்றும் பாசகி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க “அண்ணனோட பாட்டு” பாடலின் வரிகள் (ஆங்கிலத்தில்) ....

---------

F : Valthurean valthurean varum pengalukku valthurean
Ponna petha thayare potharama keturenga
Mapillaya pethavaga manam mangalama keturunga
Sunnambu pola suvicha mugathukka enga sooriyanar Vamusam
Enganga vaachucho
Vethila pola sericha mugathukkae santhiranaar vamsam Engange vahucho
Annanoda paatu

M: Are are are are are

M:
Oh Oh Annanoda paatu Ah ah attam poduda
Ah Ah akkaraiya ketta ah ah artham nooruda
Podu sakkai podu podu pootaa alanthu poduda
Nerthu kartil odi pochu indre valnthu paruda

Chorus:
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu

M:
Oh Oh Annonda paatu Ah ah attam poduda
Ah Ah akkaraiya ketta ah ah artham nooruda
Ah ah
Ah ah
Ah ah
Ah ah

[Music]

M:
Anbin uravayiru ...unmai maravathiru ..
...Nooru aandu varai valvil valamai iru ...

F:
Valai poopola vetkam paaru...
manasukkulae thaan mathappu...

M:
Iravil inimathaan thuukam eathu marbil thangathu maraappu

F:
Nee ariya vishayam.. Oh...athu naalai puriyum.. Oh..

M:
Avan moochukatril un selai eriyum ...

M & F:
Oh Kookarakoo Seyval Vanthu Kooli Kita Maatikitthu

Chorus:
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu

M:
Oh Oh Annanoda paatu Ah ah attam poduda
Ah Ah Akkaraiya ketta ah ah artham nooruda...

M: Ipduchuuudu....

[Music]

M:
Ullam thelivaha vai ennam uyarvaka vai
Vaalum kallam ellam manil mariyathai vai
vaerkal illatha maramum unda sonthakalil nee nilllaen ma
Nee ninna pinnalae oorae ketkum athukul thambattam koodathema
Kan imaikum nodiyil ada ethuvum nadakkum
Ithu ennakku theriyum nallai unakkum puriyum .....

M:
Hey Anju Kulla Naala Vei ,Aalam Parthu Kaalai Vei

Chorus:
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu

M:
Oh Oh Annonda paatu Ah ah attam poduda
Ah Ah akkaraiya ketta ah ah artham nooruda
Podu sakkai podu podu pootaa alanthu poduda
Nerthu kartil odi pochu indre valnthu paruda

Chorus:
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu
Agarnthvilla nagarthu peasu

கிரி said...

//ஆந்திர பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான டப்பிங் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் சந்திரமுகி... அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வசூல் செய்த மற்ற தமிழ் படங்கள் அந்நியன் மற்றும் கஜினி...//

அதிகவசூல் குவித்த படங்கள் முறையே அந்நியன் சந்திரமுகி கஜினி

அங்கு வெளியான தெலுங்கு படங்களை விட வசூல் அதிகம்

இந்தப்படம் முதலில் பார்த்து (பிரிவியு ஷோ) பார்த்து நான் நொந்த கதை பெரிய கதை.. அதன் பிறகு மறுபடியும் பார்த்து என்ஜாய் பண்ணின கதை சூப்பர் கதை ;-)

Rajalakshmi Pakkirisamy said...

Happy New Year!!!

R.Gopi said...

// கிரி said...
//ஆந்திர பிரதேசத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான டப்பிங் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் சந்திரமுகி... அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றி பெற்று வசூல் செய்த மற்ற தமிழ் படங்கள் அந்நியன் மற்றும் கஜினி...//

அதிகவசூல் குவித்த படங்கள் முறையே அந்நியன் சந்திரமுகி கஜினி

அங்கு வெளியான தெலுங்கு படங்களை விட வசூல் அதிகம்

இந்தப்படம் முதலில் பார்த்து (பிரிவியு ஷோ) பார்த்து நான் நொந்த கதை பெரிய கதை.. அதன் பிறகு மறுபடியும் பார்த்து என்ஜாய் பண்ணின கதை சூப்பர் கதை ;-)//

*******

சரிதான் கிரி... எனக்கும் அப்படியே. முதன் முதலாக பார்த்த போது, பிடிக்கவில்லை... பின் நடந்தது வரலாறு...

2005 தமிழிலிருந்து டப் ஆன படங்களில் சந்திரமுகி வசூலே அதிகம்... பிறகே அந்நியன் மற்றும் கஜினி...

R.Gopi said...

//Rajalakshmi Pakkirisamy said...
Happy New Year!!!//

*********

உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராஜி...

பெசொவி said...

ரஜினி பற்றி எழுதுவதென்றால், என்னமாய் எழுதுகிறீர்கள், வாவ்! வாழ்த்துகள்!

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ரஜினி பற்றி எழுதுவதென்றால், என்னமாய் எழுதுகிறீர்கள், வாவ்! வாழ்த்துகள்!//

-*-*-*-*-*-*-*-*


வாங்க பாஸ்..........

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை... எல்லா பதிவுகளுமே ஒரே மாதிரி டெடிகேஷனோடு தான் எழுதப்படுகிறது...

இருப்பினும், ”தலைவர்” என்றால் ஸ்பெஷல் இல்லையா.... அதான்..... கொஞ்சம் கூடுதலாக ஏதோ உங்களுக்கு தெரிகிறது....

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.............

Mrs. Krishnan said...

லக்க லக்க
லக்க லக்க டயலாக் உருவான
கதை pudhu thagaval

R.Gopi said...

// Mrs. Krishnan said...
லக்க லக்க
லக்க லக்க டயலாக் உருவான
கதை pudhu thagaval //

*******

தலைவர் பற்றி எழுதிய “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” தொடரில் கூட நிறைய புதிய விஷயங்கள் (நிறைய பேருக்கு தெரியாத விஷயங்கள்) உள்ளன... 10 பாகங்களையும் படித்து பார்க்குமாறு வேண்டுகிறேன்...