Thursday, June 17, 2010

"பன்ச் டயலாக்ஸ் 2010"

வெண் திரையில் அதிர அடிக்கும் இசை...

கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்...

தமிழ்நாட்டில் பிறந்த யாரும் பன்ச் டயலாக் என்பதை அறியாமலோ,தெரியாமலோ அல்லது பேசாமலோ இருந்திருக்க வாய்ப்பேயில்லை... ஏனென்றால், பன்ச் டயலாக்கும் தமிழ்நாடும் பிரிக்க முடியாத ஒன்று..

அதை மனதில் வைத்து "பன்ச் டயலாக்ஸ் 2010" என்கிற புதிய நிகழ்ச்சியில் இன்று நாம் பலதரப்பட்ட வி.ஐ.பி.களை சந்தித்து அவர்களின் லேட்டஸ்ட் "பன்ச் டயலாக்ஸ்" என்னவாக இருக்கும் என்று கேட்டோம்... அவர்கள் சொன்னது இங்கே.... கவிஞர்கள் கொஞ்சம் பெருசா கவிதை மாதிரி பன்ச் டயலாக்ஸ் சொன்னது ரசிக்க வைத்தது.....(சிறிது முன்னே, பின்னே இருந்தாலும்) அப்படியே இதோ உங்கள் பார்வைக்கு)..........

கருணாநிதி : "கொடநாடு உல்லாசி"யே..
ஊரெல்லாம் உன்னை ஏசியே...
வருதே பேசியே..

ஜெயலலிதா : வயது எண்பதை கடந்த ஏழை
என்று தன் வயதையும், வளமையையும்
மறைத்து பேசி வரும் ஒரு கோழை,
அது தமிழ்நாட்டை பிடித்த பீடை...

ஜெக‌த்ர‌ட்ச‌க‌ன் : என் ர‌த்த‌த்தில் குறையாத‌ க்ளூகோஸே...

உன்னை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இங்கே அட்டு பீஸே...
வாழும் வள்ளுவனே... அகில உலக நல்லவனே..
அவனியில் வல்லவன் என்றும் நீ ஒருவனே ....


ரஜினிகாந்த் : சுத்துனா உலகம்...
சும்மா எதாவது சொன்னா கலகம்...
தேவலோக தலைவன் இந்திரன்...
அகில உலகுக்கும் தலைவன் என் “எந்திரன்”...
இது எப்படி இருக்கு!!?? ஹா...ஹா...ஹா...ஹா...

விஜயகாந்த் : ஊத்தற அளவு கம்மி...
விலையோ ரெம்ப அதிகம்...
ரேசன்ல இல்லடா.. பரதேசி...
டாஸ்மாக்ல...ஆங்....
என் விழியே என்றும் சிவப்பு...
அதில் தெரியுதா பாரு நெருப்பு...

கமல்ஹாசன் : நான் விடும் “மன்மத அம்பு”
இது இளைஞர்களுக்கான காதல் விருந்து
இதை வெண்திரையில் வந்து அருந்து
இல்லையேல் பின்னால் நீ வருந்து

விஜய் : நான் சொல்லி அடிச்சா குச்சி..
சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சு..
வானத்துல பறக்கறதுக்கு நான் புறா இல்ல...
அந்த கடலையே கலக்கற “சுறா”....

(யப்பா... போதும்டா சாமி... இதுக்கே நாடு தாங்கலடா.....)

அஜித் : நான் நெறைய பேஸ் மாட்டேன்...

கொஞ்சமா பேஸ்வேன்...
கொஞ்சமா பேஸ்னா அப்றம் நெற்ய பேஸ்வேன்...
புரியுதா... அது!!!

சிம்பு : போட்டியில யாரு மொதல்ல வராங்கன்றது முக்கியம் இல்ல...
யாரு லாஸ்ட்ல ஃபர்ஸ்டா நான் வரேன்ங்கறது தான் முக்கியம்...
ஏதாவது புரிஞ்சா சரி?

தமிழ் கரடி : அஞ்சும், அஞ்சும் பத்து...
நீ எப்போவும் ஊர சுத்து...
தயிர் கடையும் மத்து...
மாட்டுனா, மனவே என்ன நாலு மாத்து மாத்து...

அழகிரி : அண்ணன் அடிச்சா கலங்கும் மதுரை...
பாய்ந்து ஓடியதே பந்தயத்தில் குதிரை..

பேரரசு : கடையில வாங்குனேன் அவல்பொரி...
அண்ணன் கலக்கி அடிச்சா தீப்பொறி..
சுத்தி அடிச்சா சூறாவளி...
சுத்தாம ஆடினா கதகளி...

தங்கர் பச்சான் : என் பேரு தங்கர் பச்சான்..
நான் தங்க தமிழ் நாட்டின் அமிதாப் பச்சன்...
இதை எல்லாருக்கும் சொல்லி வச்சேன்...
இத கேட்ட எல்லாரையும் மிரள வச்சேன்

பரத் : பழத்த பெசஞ்சா பஞ்சாமிர்தம்...
பார்த்து பயந்தா காண்டாமிருகம்...
அதிர வைப்பான் ஆறுமுகம்...
இனிமே எனக்கு ஏறுமுகம்...

விஷால் : ஒண்ணு, ரெண்டு நம்பர்...
இதுல நானும் ஒரு மெம்பர்...
பிராந்தில கலந்தேன் பெப்பர்...
அத வாந்தி எடுக்காம அடிச்சா சூப்பர்...

விவேக் : என் பேச்சால எல்லாருக்கும் வச்சேன் ஆப்பு
இப்போ அதே ஆப்பை, எனக்கே வச்சுக்கிட்டேனே மாப்பு

வடிவேல் : நானு என்னிக்குமே வாய் சொல்லுல வீரர்....
ஆனாலும், என்னிய பார்த்தா பயலுவ எல்லாருக்கும் டெர்ரர்
என்னிய அதட்டி பாக்குறான் சிங்கமுத்து....
அவனுக்கு போடறேன் நான்
நெத்தியில பத்து...

சந்தானம் : நொங்கு எடுத்து, கிழிஞ்சது டங்குவாரு
தேங்காய்ல இருந்து தொங்குது தேங்கா நாரு
சூப்பர் ஸ்டார் கூட நடிச்சேன் அது ஜோரு
ஓட விட்டு எல்லாரையும் சுளுக்கு எடுக்குறேன் பாரு...

கவுண்டமணி : ஒலகத்துல ஒரே அறிவாளி ஜி.டிநாயுடு
என் பக்கத்துல வராதே... அப்டியே நீ ஓடிடு...

செந்தில் : எனக்கு பேச வராது பஞ்ச் டயலாக்கு
கவுண்டரால நான் ஆனேன்
என்னிக்குமே பேக்கு

வைரமுத்து : பிடறி சிலிர்க்க ராஜநடை போட்ட தமிழ் சிங்கம்....
அது தமிழ்நாடு நமக்கு தந்த வாழ்வியல் அங்கம்
கோபாலபுரத்தின் ஒரு அடையாளம்...
தமிழுக்கும், தமிழர்க்கும் அதுவே கடிவாளம்...

அன்று நிலவில் பாட்டி சுட்டாள் ஒரு வடை
அதை அடைய தமிழனுக்கு இல்லை தடை...

வாலி : துள்ளி நடந்து வரும் தமிழே
தத்தி தாவி வரும் குமிழே
வீர நடை போடும் சிங்கமே
மாசு குறையாத தமிழ் தங்கமே

எழுத நினைத்தேன் உன் வரலாறு
அதுக்கு தமிழே எனக்கு தகராறு

கவிஞர் விஜய் :

இருளிலும் ஒளிரும் குமிழே
பகலிலும் மிளிரும் தமிழே
எங்கெங்கு தேடினும் இனியே
பாரிலும் உமக்கில்லை இணையே

36 comments:

பெசொவி said...

//விஜயகாந்த் : ஊத்தற அளவு கம்மி...
விலையோ ரெம்ப அதிகம்...
ரேசன்ல இல்லடா.. பரதேசி...
டாஸ்மாக்ல...ஆங்....//

super!

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//விஜயகாந்த் : ஊத்தற அளவு கம்மி...
விலையோ ரெம்ப அதிகம்...
ரேசன்ல இல்லடா.. பரதேசி...
டாஸ்மாக்ல...ஆங்....//

super!//

**********

வாங்க தலைவா....

முதல் கமெண்ட், அதுவும் பாராட்டி... ஒரே ஜிவ்தான்.....

Chitra said...

ha,ha,ha,ha, ha.... funny!

R.Gopi said...

//Chitra said...
ha,ha,ha,ha, ha.... funny!//

*******

Welcome Chitra....

I am happy that you have enjoyed this posting....

Why the spectacle is so small (in your profile photograph??)

thejamma said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ கலக்குறீங்க.நீண்ட இடைவெளிக்கு பிறகு .............அருமை.-
-தேஜாம்மா

வெங்கட் நாகராஜ் said...

ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு. பன்ச் டயலாக்ஸ் - கலக்கல்.

Ananya Mahadevan said...

கோபி!!!!
முடியலை! எப்புடி சார் இப்புடி எல்லாம்? உஸ்ஸ்ஸ்ஸ்! இப்போவே கண்ணைக்கட்டுதே!!

R.Gopi said...

//thejamma said...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ கலக்குறீங்க.நீண்ட இடைவெளிக்கு பிறகு .............அருமை.-
-தேஜாம்மா//

********

வருகை தந்து, பதிவை படித்து பாராட்டியமைக்கு நன்றி...

40 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வந்து ஒரு அதிரடி பதிவு போடலாம் என்று நினைத்து இந்த பதிவிட்டேன்...

தோழமைகளின் ஆதரவே நிறைய எழுத தூண்டும்...

அதிரடி பதிவுகள் தொடர்ந்து வரும்..

R.Gopi said...

//வெங்கட் நாகராஜ் said...
ரொம்ப நாள் கழித்து ஒரு பதிவு. பன்ச் டயலாக்ஸ் - கலக்கல்.//

*******

வாங்க வெங்கட் நாகராஜ்...

வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு நன்றி...

விடுமுறை முடிந்து பதிந்த முதல் பதிவே அனைவரையும் கவர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி...

R.Gopi said...

//அநன்யா மஹாதேவன் said...
கோபி!!!!
முடியலை! எப்புடி சார் இப்புடி எல்லாம்? உஸ்ஸ்ஸ்ஸ்! இப்போவே கண்ணைக்கட்டுதே!!//

********

ஹா...ஹா... வாங்க அநன்யா மஹாதேவன்...

கண்ணை கட்டியது எல்லாம் சரி... படிக்க பிடித்ததா இல்லையா?

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.. சூப்பரு.

R.Gopi said...

R.Gopi said...
//விக்னேஷ்வரி said...
ஹாஹாஹா.. சூப்பரு.//

******

வாங்க விக்னேஷ்வரி...

நீங்க சிரிக்கறதுல இருந்தே தெரிகிறது பதிவை ரசித்து படித்து இருக்கிறீர்கள் என்று...

பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

Menaga Sathia said...

ஹா ஹா சூப்பர்ர் கோபி!! ஆமா இவ்வளவு நாளா உங்களைக் காணாமே என்ன ஆச்சு???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice kalakkal

ibza said...

இந்த மாதிரி ஒரு ப்ளாக் தான் நா தேடிட்டு இருந்தேன். ரொம்ப நாளைக்கு அப்ப்றம் நான் இது மாதிரி ஒரு பன்ச் கலெக்சன். அருமை.. தொடருங்கள்...
வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிரிச்சிட்டே படிச்சேன்;
படிச்சிட்டும் சரிச்சேன்.

கிரி said...

கோபி எப்படி இருக்கீங்க! ரொம்ப நாளா ஆளைக்காணோம். இன்று தான் நினைத்து உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று இருந்தேன் (நிஜமாத்தான் நம்புங்க!)

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
ஹா ஹா சூப்பர்ர் கோபி!! ஆமா இவ்வளவு நாளா உங்களைக் காணாமே என்ன ஆச்சு???//

*******

வாங்க மேனகா.... விசாரித்ததற்கு மிக்க நன்றி...

40 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வந்து ஒரு அதிரடி பதிவு போடலாம் என்று நினைத்து இந்த பதிவிட்டேன்...

தோழமைகளின் ஆதரவே நிறைய எழுத தூண்டும்...

R.Gopi said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
nice kalakkal//

******

வாங்க ரமேஷ்

பதிவை ரசித்து படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

R.Gopi said...

//Mohamed Ibrahim said...
இந்த மாதிரி ஒரு ப்ளாக் தான் நா தேடிட்டு இருந்தேன். ரொம்ப நாளைக்கு அப்ப்றம் நான் இது மாதிரி ஒரு பன்ச் கலெக்சன். அருமை.. தொடருங்கள்...
வாழ்த்துக்கள்.//

வாங்க மொஹமது இப்ராஹிம் பாய்..

தோழமைகளின் ஆதரவும், உற்சாகப்படுத்துதலுமே என்னை இன்னும் நிறைய எழுத வைக்கும்...

தொடர்ந்து வாருங்கள்... முந்தைய பதிவுகளையும் படித்து மகிழுங்கள்...

R.Gopi said...

//NIZAMUDEEN said...
சிரிச்சிட்டே படிச்சேன்;
படிச்சிட்டும் சரிச்சேன்.//

வாங்க நிஜாம் பாய்... உங்களின் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

R.Gopi said...

//கிரி said...
கோபி எப்படி இருக்கீங்க! ரொம்ப நாளா ஆளைக்காணோம். இன்று தான் நினைத்து உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று இருந்தேன் (நிஜமாத்தான் நம்புங்க!)//

********

வாங்க கிரி... நீங்க கூட நம்ம வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாகுது...

40 நாட்கள் விடுமுறையில் இருந்தேன்.. ஜூன் இரண்டாவது வாரத்தில் தான் திரும்பி வந்தேன்...

போடலாமா வேண்டாமா என்று ரொம்ப யோசித்து இந்த பதிவிட்டேன்..

தோழமைகளின் மெகா ஆதரவு என்னை திக்கு முக்காட வைத்து விட்டது...

butterfly Surya said...

சூப்பர்..

R.Gopi said...

//butterfly Surya said...
சூப்பர்..//

*******

வாங்க பட்டர்ஃப்ளை சூர்யா...

பதிவிற்கு வருகை தந்து, படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

உங்கள் தோழி கிருத்திகா said...

ellame master piece :)
super gopii :)

R.Gopi said...

//உங்கள் தோழி கிருத்திகா said...
ellame master piece :)
super gopii :)//

********

Thanks for your visit and comment Kiruthika...

goma said...

”என் பேச்சுக்குப் பஞ்சம் இருக்கும்
ஆனா பன்ச்சுக்குப் பஞ்சம் இருக்காது”
இது ஆர்.கோபி

R.Gopi said...

//goma said...
”என் பேச்சுக்குப் பஞ்சம் இருக்கும்
ஆனா பன்ச்சுக்குப் பஞ்சம் இருக்காது”
இது ஆர்.கோபி//

**********

வாங்க கோமா...

இருக்கறதுலயே நீங்க அடிச்ச பன்ச் தான் நச் பன்ச்...

நன்றி...

அமுதா கிருஷ்ணா said...

பன்ச் இல்லையென்பதால் என் தம்பி மகன் 4 வயது ராவணன் போக வேண்டாம் என்கிறான்..

R.Gopi said...

//அமுதா கிருஷ்ணா said...
பன்ச் இல்லையென்பதால் என் தம்பி மகன் 4 வயது ராவணன் போக வேண்டாம் என்கிறான்..//

********

ஹா...ஹா...ஹா...

கரெண்ட் ட்ரெண்ட் அப்படியே கரெக்டா சொல்லிட்டீங்க...

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலப்படுத்திய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

shathiesh
krpsenthil
soundarapandian
RDX
vanniinfo
chitrax
mohamedFeros
venkatnagaraj
ananyamahadevan
ambuli
tamilz
suthir1974
nanban2k9
subam
kiruban
ldnkarthik
jollyjegan
chithu
menagasathia
sirippupolice
hemajillary
Riyas363
annamalaiyaan
nitni
karthikvlk

Unknown said...

//நான் சொல்லி அடிச்சா குச்சி..
சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சு..
வானத்துல பறக்கறதுக்கு நான் புறா இல்ல...
அந்த கடலையே கலக்கற “சுறா”....
//

சுறாதான் ஊத்திக்கிச்சே. அப்புறம் எப்படி கலக்குறது கடலை

R.Gopi said...

//jaisankar jaganathan said...
//நான் சொல்லி அடிச்சா குச்சி..
சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சு..
வானத்துல பறக்கறதுக்கு நான் புறா இல்ல...
அந்த கடலையே கலக்கற “சுறா”....
//

சுறாதான் ஊத்திக்கிச்சே. அப்புறம் எப்படி கலக்குறது கடலை//

********

ரிலீஸுக்கு முன்னாடி சொல்லி இருப்பாரு தல...

அப்புறம் தானே ஊத்திக்கிச்சு...

Gayathri said...

எப்படிங்க இப்படிலாம் யோசிகரிங்க?? தமாஷா இருக்கு நன்றி

R.Gopi said...

//Gayathri said...
எப்படிங்க இப்படிலாம் யோசிகரிங்க?? தமாஷா இருக்கு நன்றி//

********

வாங்க காயத்ரி...

என்ன பண்றது.... இவ்ளோ கஷ்டப்பட்டு யோசிச்சு எழுதினா தானே எல்லாரும் வந்து படிக்கறாங்க... அதிலும் ஜெகத் சொல்ற இந்த டயலாக் எனக்கே ரொம்ப பிடிச்சது :

என் ரத்தத்தில் குறையாத க்ளூகோஸே
உன்னை எதிர்ப்பவர் எல்லாம் இங்கு அட்டுபீஸே

manima said...

அன்புள்ள நண்பர்களே, என் பெயர் மணிமாறன்.
சேலம் சொந்த ஊரு.

பெங்களுருவில் தற்போது வாசித்த வருகிறேன்.
என்னக்கு ஊரு சுற்றிபக்க ரொம்ப ஆசை. அப்படித்தானே கொல்லி மலை வந்தேன். நான் கொல்லி மலையில் ஒரு வித்தியாசமான விடுதி கட்டி உள்ளேன், அனைவரும் கொல்லி மலை வருக என வரவேற்கிறேன்.

இப்படிக்கு,

மணிமாறன்
+919739700059
http://wildorchidcamp.com