Monday, February 28, 2011

மஹா சிவராத்திரி விரதம் - ஓம் நமசிவாய

ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,ஓம் நாம சிவாய ,

மஹா சிவராத்திரி விரதம்

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 02.03.2011 புதன்கிழமை அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது.

தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். மகா சிவராத்திரியின் மேன்மையை ஆக

மங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என்று பொருள்படும்.

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. மற்ற எல்லா சிவராத்திரிகளையும் விட இதுவே சிறப்புடையதும். பல்வேறு வகையான பெரிய நலன்களை வழங்குவதாலும், மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் ஒருசேர வழங்குவதாலும், இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணம் கூறும் விரதங்களின் விளக்கங்கள்.

நித்ய சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். நித்திய சிவராத்திரி விரதம் இருக்க விரும்புபவர்கள் தொடர்ந்து 24 முறை இருக்க வேண்டும். பெண்கள் 24 முறை விரதம் இருக்கலாம்.


பட்ச சிவராத்திரி:


தை மாதம் தேய்பிறை பிரதமை முத
ல் 13 நாட்கள் தொடர்ந்து ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு 14ம் நாளான சதுர்த்தசி அன்று முழுமையாக சாப்பிடாமல் இருந்து அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வில்வமாலை அணிவித்து சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.


மாத சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.


யோக சிவராத்திரி:


ஏதாவது ஒரு திங்கட்கிழமையில் பக
லிலும் இரவிலும் முழுமையாக அமாவாசை திதி இருந்தால் அது யோக சிவராத்திரி ஆகும். இந்த யோகா சிவராத்திரி ‌மிகவு‌ம் அரிதாக வரும்.

மகா சிவராத்திரி :

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை :

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.


சிவராத்திரி விரத முறைகள் :

சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி,அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீ கோகர்ணம் ஆகும்.


திருச்சிற்றம்பலம்

Wednesday, February 23, 2011

"பஸ் டே” - அராஜக கொண்டாட்டங்கள்



”பஸ் டே” கொண்டாட்டங்கள்

இன்றைய இந்தியா அயோக்கிய அரசியல்வாதிகளிடம் மட்டும் சிக்கி தவிக்கவில்லை... சில பல அராஜக, அயோக்கிய மாணவர்கள் கையிலும் சிக்கித்தான் தவிக்கிறது.. இளைஞர்களே கனவு காணுங்கள், நம் நாடும் நாளை வல்லரசாக மாறும் என்று... இளைஞர்களே... இன்று நீங்கள் வாழ்வில் செய்யும் எந்த விஷயங்களும், எடுக்கும் எந்த நல்ல முடிவுமே வருங்காலத்தில் நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் என்று இன்று இருக்கும் பல நல்லவர்கள் உங்களை பற்றி
உயர்வாக நினைத்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் செய்வது என்ன?

ஒவ்வொரு வருடமும் ”பஸ் டே” கொண்டாட்டங்கள்....

ஆஹா... பஸ் டே கொண்டாட்டமா, தாராளமாக கொண்டாடுங்களேன்... பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து குடும்பங்களும் எப்படி மகிழ்ச்சியாக தன் சுற்றம் சூழ மகிழ்வாக கொண்டாடுகிறோமோ அப்படித்தானே இந்த பஸ் டே கொண்டாட்டமும்..

இந்த கொண்டாட்டத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
* மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பஸ் டிப்போக்களுக்கு சென்று, அழுக்கடைந்து காணப்படும் பேருந்துகளை வெளிப்புறம் நன்றாக தண்ணீர் விட்டு அலம்பி, உட்புறம் நன்றாக சுத்தம் செய்து, பொதுமக்கள் முகம் சுளிக்காமல் பயணம் செய்யும் வகையில் செய்யலாம்...

* வருடம் முழுதும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பள்ளி குழந்தைகள் என்று எல்லோரையும் பத்திரமாக செல்லும் இடம் சேர்க்கும் வாகன ஓட்டுநர்கள், பேருந்தில் டிக்கெட் கொடுக்கும் நடத்துநர்கள் ஆகியோருக்கு ஏதேனும் பதில் மரியாதை செய்யலாம்...

* பேருந்தில் பயணிக்கும் சக பயணியர்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருக்கலாம்...

* தான் கல்லூரிக்கு செல்வது படிப்பதற்கே, மற்றபடி தான் எந்த வேலையையும் (மாணவர்களை கவனித்து கொள்ளும் தந்தை, அண்ணன்கள் போல்) செய்யாமல், வெறுமே புத்தகங்களை கையிலேந்தி வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்து, அவர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை கிரகித்து அதை தன் வாழ்நாளுக்கு உபயோகப்படுத்துதலாம்...

ஆனால் ”பஸ் டே” என்ற பெயரில் அந்த தினத்தில் சென்னையெங்கும் நடக்கும் கூத்துகள் என்ன?

பேருந்துகளில் உடன் பயணிக்கும் பயணிக்கும் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் பெரிதாக ஓசையெழுப்புவது...

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பெண் பயணிகளை கிண்டல் செய்வது

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பயணிகள் யாரேனும் இந்த நடவடிக்கைகளை தட்டிக்கேட்க முன்வந்தால் அவர்களை கும்பலாக சேர்ந்து நையப்புடைத்து காயப்படுத்துவது

பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி நின்று கொண்டு ஆட்டம் என்ற பெயரில் அனைத்து கன்றாவிகளையும் செய்வது

பேருந்துகள் செல்லும் வழியெங்கும் சாலைகளில் இருக்கும் கடைகளை அடைக்க சொல்வது, கடைகளை சூறையாடுவது, பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் பயணியர்களை ஏசுவது, பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பெண்களை கண்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு அசிங்கமான வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதில்லை (உபயம் : இன்றைய கேவலமான திரைப்படங்கள்).... எதிர்ப்படும் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவது....

நாட்டின் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் காவலர்கள் இந்த அராஜக மாணவர்களின் அட்டகாசங்கள், கூத்துக்கள் அத்துமீறாமல் இருக்க, பெரும்படையாக இவர்களுடன் பலதரப்பட்ட வாகனங்களில் கூடவே ஊர்வலம் வர செய்வது...

இதெல்லாம் இந்த படிக்கும் வயதில், இளைஞர்கள் / மாணவர்கள் செய்ய காரணம் என்ன? இன்றைய அக்கிரம அரசியல்வியாதிகள் தான்...

போன வருடம் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? இதோ, இந்த வருடமும் இந்த “பஸ் டே” கொண்டாட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றனர்... ஏராளமான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்... பெண் காவல்துறை அதிகாரியை கொச்சையான, ஆபாசமான வார்த்தைகள் சொல்லி அவமானப்படுத்தி உள்ளனர்... ஏன், இவர்கள் வீடுகளில் பெண்கள் இல்லையா, அவர்களை இப்படி தான் நடத்துகிறார்களா? இது தான் இவர்கள் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்ளும் பாடமா?

இந்த மாணவர்களின் கடமை தான் என்ன?

இன்றைய சூழலின் மிகுந்த சிரமங்களுக்கிடையில் இவர்களை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்... நன்றாக உணர்ந்து படிப்பது ஒன்று மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்...... எப்படி உணவருந்த வீட்டில் உட்காரும் போது, உணவை ருசித்து சாப்பிடுகிறார்களோ, திரையரங்குகளுக்கு சென்றால் திரைப்படத்தை ரசித்து பார்க்கிறார்களோ, அதே போல் கல்லூரியில் படிக்கும் அந்த 3-4 வருடங்கள் அவர்களின் முழு கவனமும் படிப்பின் மீது மட்டுமே இருக்க வேண்டும்...

அனைத்து விதமான தீய பழக்கங்களில் இருந்தும் கவனமாக ஒதுங்கி இருக்க கற்றுக்கொள்ளலாம்... முடிந்த வரை அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியிலாவது உதவியாக இருக்கலாம்... தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு எந்த அநாவசிய செலவையும் வைக்காமல் இருக்க குறைந்தபட்சம் முயற்சிக்கவாவது செய்யலாம்... ஓய்வு நேரங்களை தன் வாழ்வை வளமாக்கும் வழியில் நூலகங்களில் சென்று செலவிடலாம்... அயோக்கிய அரசியல்வாதிகள் பின்னால் சென்று, கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது, கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தில், தன் பகுதியில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்...

இனி வரும் காலங்களிலாவது படிக்கும் வேளையில் இந்த மாணவர்கள் அயோக்கிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து வாழ்வை தொலைக்காமல், படிப்பு மட்டுமே குறிக்கோளாக வைத்து நன்கு படித்து, தன் குடும்பத்திற்கும், எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் நல்ல பெயர் எடுத்து கொடுத்தால், அதே நல்ல பெயர் மற்றவர்களால் இவர்களையும் வந்தடையும்...

செய்வார்களா இன்றைய மாணவர்கள்?? இல்லையென்றால், இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தானா?

நம் நாட்டின் இன்றைய நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாத ஒரு சராசரி குடிமகன்..

(ஆர்.கோபி)

Monday, February 14, 2011

ஆட்டைய போட்ட ஆண்டிமுத்து ராசா

எனது நண்பர் காவிரிமைந்தன் அவர்கள் இன்றைய ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகளின் அடுத்தவர் பணத்தை ஆட்டையை போட்டு சொகுசு வாழ்க்கை நடத்தும் நிலைமையை எண்ணி மனம் நொந்து எழுதிய சில வரிகள் இதோ :

ராஜாதி ராஜாக்கள் கூட வாழாத வாழ்க்கையை
வாழத்தான் தெரிந்திருக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகள்!

அன்றாட வாழ்க்கைக்கே அல்லலுறும் அவலங்கள் அரங்கேறும் இந்தியாவில் - இதுதான் சுதந்திரமா?

இதைத்தான் நாம் போராடிப் பெற்றோமா?

விழிப்புணர்வு ஒரு துளியும் நம்மிடத்தில் இல்லாத வரை..

இவையெல்லாம் தொடர்கதையே!


************


ஆண்டிமுத்து ராசா, நாட்டை ஆட்டையை போட்டது நம் அனைவருக்கும் தெரியும்... அப்படி கிடைத்த அந்த சொற்ப பணத்தில் (வெறும் 1,70,000 கோடிகள் தான்), அந்த பரம ஏழை கட்டிய அவரின் “சிறிய வீட்டை” பாருங்கள்...

Tuesday, February 8, 2011

யப்பா.... நம்ம இந்தியா எம்மாம் பெருசு!!


வலை தோழமைகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.... மீண்டும் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மெத்த மகிழ்ச்சி....

எங்கள் “சித்தம்” குறும்படத்திற்கு தோழமைகள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி...

சமீபத்தில் நான் கண்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்... அந்த விஷயம் பார்த்த நான் ஆடி போய் விட்டேன்...

உதாரணமாக, நம் உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை அளவு நம் அண்டை நாடான பாகிஸ்தானை விட அதிகம்...

நம் தமிழ்நாட்டின் மக்கள் தொகை இங்கிலாந்து நாட்டை விட அதிகம்....

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள தகவல்கள் உங்களையும் ஆச்சரியப்படுத்தும் என்று நினைக்கிறேன்...



நாம் மீண்டும் மீண்டும் இந்த மக்கள்தொகை பெருக்கத்தில் நிகழ்த்தும் சாதனைகளை சற்றே திசைதிருப்பி வேறு பல வழிகளிலும் முயற்சித்தால், உலகளவில் அனைத்து துறைகளிலும் சாதனை முத்திரை பதிக்க இயலும்...

முடிந்தால் முடியாதது எதுவுமில்லை... அனைத்து துறைகளிலும் சாதனை செய்ய முயற்சிப்போம்... சாதனை செய்வோம்...


(ஆர்.கோபி)