Tuesday, April 28, 2009

மெகா காமெடி (பகுதி 1)


இன்றைய மொக்கை நிகழ்ச்சி - ஜோக்கிரிஸ் @ பக்கிரிஸ் டாட் காம்.
இன்றைய நிகழ்ச்சிக்கு வந்து இருக்கும் விருந்தினர்கள் யார் யார் என்று பார்ப்போமா?

1. தவளை வாய் பேரரசு
2. கில்மா எஸ்.ஜே.சூர்யா
3. விரல் வித்தை சிம்பு
4. கரடி ராஜேந்தர்
5. கேப்டன் விஜயகாந்த்
6. டமில் குடிதாங்கி

பேரரசு : எல்லாருக்கும் வணக்கம். கேப்டன், நம்ம "தர்மபுரி" படம்தான் படுத்துடிச்சி. வேணும்னா, மறுபடியும், "மர்மபுரி"ந்னு பேரு வச்சு ஒரு புது ரூட்டுல கதை ரெடி பண்ணுவோம். ஒப்பனின் சீன்ல, உங்கள் ஒரு பீரங்கியால சுடராங்க. உங்கள அடிச்ச அந்த பீரங்கி குண்டு, வில்லன் இருக்கற ஊர்ல போயி விழுது. அத பாத்து வில்லன் எல்லாம் அலறராங்க.

கேப்டன் : டேய், நீ இன்னும் ரிடர்ட் ஆகலியாடா....... 1992-ல ஊர்ல இருந்து திருட்டு ரயில் ஏறி வந்த. 1993-ல டீ கடையில இருந்து பன் திருடி, அடி வாங்கின... 1994-ல போஸ்டர் ஒட்டுன, அப்புறம் அந்த பிரஸ் ஒனரோட பொண்ண கசமுசா பண்ணினதால அங்கேயும் அடிச்சு தொரத்துனாங்க...... அப்புறம் பத்து வருசம் எங்கேயோ போயி, என்னவோ பண்ணி, 2003-ல சினிமா உள்ள வந்த.. ரெண்டு, மூணு படம் பண்ணின, மறுபடியும் காணாம போயிட்ட..........

பேரரசு : போதும் தலைவா, போதும்..இந்தாங்க சோடா குடிங்க..... இப்படி பேசி பேசியே, எல்லா படத்தோட ரீலும் அறுந்து தொங்கினது ஞாபகம் வரலியா?? இந்த பழக்கத்த நீங்க இன்னும் விடலியா?? நாடு தாங்குமா, மக்கள் தாங்குவாங்களா, யோசிங்க கேப்டன்.

கேப்டன் : டேய் பரதேசி, பேசினாதாண்டா தமிழன்.... என் கல்யாண மண்டபத்த இடிச்சுட்ட இல்ல... அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.. மௌண்ட் ரோட்ல நீச்சல் குளம் கட்டுவேன்....

பேரரசு : என்னது, மண்டபமா, நான் இடிச்சேனா?? அய்யோ அய்யோ, ஒரு எழவும் புரியலியே...... "மரியாதை" படத்தோட பாக்ஸ் ஆஃபீஸ் எஃபக்டா?? மௌண்ட் ரோடு நடுவுல நீச்சல் குளமா, அம்மா சொன்னது சரியாத்தான் இருக்கு.... நேத்து நைட்டு அடிச்சது இன்னும் தெளியல போல இருக்கு.......

எஸ்.ஜே. சூர்யா : ஹலோ, அத விடுங்க...... நான் இப்போ ஒரு வில்லேஜ் சப்ஜெக்ட் திருமகன் பண்ணியாச்சு, என்னது .......போணி ஆகலியா... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்... அடுத்து இப்போ "மருமகன்" மாடர்ன் சிட்டி ஸ்டோரி......ஐஷ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத், ஷ்ரெயா சரண்னு மூணு ஹீரோயின். ஒப்பனிங்க் சீன்ல அமெரிக்கால இருந்து வரேன். கம்ப்யூட்டர் எஞ்சினியர் ரோல் எனக்கு.

சிம்பு : மாப்ஸ், நிறுத்து... நிறுத்து........ ரொம்ப சுத்தாத....... யாரு காதுலயாவது விழுந்தா அப்புறம் ஆட்டோல ஏத்தி நேரா கீழ்ப்பாக்கம் கொண்டு போயிட போறாங்க.......ஒன்ன, உள்ளூர்ல பாக்கரவனே பயந்து செதர்ராங்க..... இதுல பாலிவுட் டகால்டி எல்லாம் எதுக்கு..... அதெல்லாம், என்ன போல ரொமாண்டிக் ஹீரோ பண்ண் வேண்டியது மாப்ஸ்...........

டி.ஆர்.: கொலைவெறி பாய்ச்சலில் உள்ளே பாய்கிறார்....... ஏ, நகரு நகரு, விலகு விலகு, வரது யாரு டி.ஆரு. டேய், நான் ப்ண்ணுவேன் ரகள..... வேணாம்னா கொடு ஒன் மகள.......
பேரரசு : அய்யோ, கரடியும் அவன் பையனும் பண்ற இம்சை தாங்க முடியலியே .... பேசாம ரெண்டு பேரையும் போட்டு ஒரு படம் எடுத்து கதைய முடிச்சுடுவோமா? அதுதான் நமக்கு கை வந்த கலை ஆச்சே......
மனுசங்கள போட்டு படம் எடுக்கற டைரக்டர் யாருமே இந்த கரடிய வச்சு படம் எடுக்க போறதுல்ல..அதனால நானே ஒங்கள போட்டு "பீராச்சாமி"ன்னு படம் எடுக்கலாம்னு இருக்கேன்......
ஓப்பனிங் சீன்ல, நீங்க நேரா ஒரு டாஸ்மாக் கடைக்கு போய், வில்லன எல்லாம் அடிச்சுட்டு சொல்ரீங்க......பீருல மோரு ஊத்தி அடிச்சா அவன் வீராச்சாமி, ஆனா பீரையே மோரா அடிச்சா அவந்தான் இந்த பீராச்சாமி.............

டி.ஆர் : நான் கொஞ்ச நாளா எடுத்தேன் ரெஸ்டு.... நான் அடுத்து தரப்போற படம் பெஸ்டு.. கிழக்குன்னா ஈஸ்டு....... மேற்குன்னா வெஸ்டு... என்ன தவிர எல்லாரும் வேஸ்டு.

டமில் குடிதாங்கி : யாரங்கே... எங்கும் தமிழ், எதிலும் தமிழ். தமிழன்றி ஒரு வார்த்தை கூட என் காதில் விழலாகாது.... மரம் வெட்டுவோம், ரோடு வெட்டுவோம்....மக்களை அல்லல்படுத்துவோம்.... இதுவே எங்கள் கொள்கை.........

டி.ஆர் : வாழ்வே மாயம். டப்பால பெருங்காயம்....சாம்பார்ல வெங்காயாம்.. கடல்ல அலை எப்போ ஒயும்.

எஸ்.ஜே.சூர்யா: டப்பால பெருங்காயம்...சாம்பார்ல வெங்காயம்..லேசா அடிபட்டா வெறுங்காயம். இவரோட வீராசாமி படம் பார்த்து விட்டு, எனக்கு கூட கழண்டுடுச்சு நட்டு.

டி.ஆர் : டேய். இவன் என்ன பண்றான் இமிடேட்டு.....இவன கிட்ட கூப்பிட்டு, நாலு தட்டு தட்டு... திருப்பி சொன்னா ரிபீட்டு.. சொல்லலேன்னா அபீட்டு.......ஏ, டண்டணக்கா, டனக்கு டக்கா........

சிம்பு : யப்பா, நீ இந்த டகால்டிய நிறுத்தவே மாட்டியா... மானம் போகுதப்பா.........
டி.ஆர். : கண்ணீருடன்....... நிறுத்திட்டேன் தம்பி, நிறுத்திட்டேன்.......

கேப்டன் : தம்பி சிம்பு, நாம ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்..... படம் பேரு "பப்படம்"...சூட்டிங்க் ஃபுல்லா உக்கடம்......சே .... இந்த கருமாந்திரம் புடிச்ச கரடிய பாத்து பாத்து நமக்கும் அப்படியே பேச்சு வருது..... பப்படம், உக்கடம்னு.....

படத்தோட கதை கேளு தம்பி சிம்பு.... நீயும் நானும் "கொட்டாச்சி" கிராமத்துல இருந்து கட்ட வண்டி ஏறி, மெட்ராசுக்கு வரோம்...கொட்டாச்சில நம்ம குடும்பத்த அழிச்ச வில்லனுங்கள தேடிட்டு.......எனக்கு ஒரு 15 ஃபைட்டு.... ஒனக்கு ஒரு 5 ஃபைட்டு..... 15 ரீலு படத்துல மொத்தம் 20 ஃபைட்டு.... ரயில்ல, மலை மேல....கடல்ல...மேட்டுல...பள்ளத்துல... இப்படி பாக்கற எடத்துல எல்லாம் ஃபைட்டு வச்சு பட்டைய கெளப்புவோம் ..... மொத்தம் 10 ஃபைட்டு மாஸ்டருங்க இந்த படத்துல நம்மளோட வேல செய்வாங்க..........

சிம்பு : அண்ணே, சொல்லுறேன்னு தப்பா நெனக்காதீங்க... இப்போத்தான் உங்களோட "மரியாதை" படம் ரிலீஸ் ஆகி, ரெண்டு ஷோ முடிஞ்சு, பொட்டி எல்லாம் திரும்பி வந்துட்டு இருக்காம்.. ப்ரொட்யுசர் சட்டைய கிழிச்சுட்டு ரோட்டுல திரியராறாம்.....எதுக்கும், நீங்க கொஞ்ச நாளு அந்த ஆளோட கண்ணுல படாம விருத்தாசலம் போயிடுங்க.... தப்பிச்ச மாதிரியும் இருக்கும், தொகுதிய பாத்த மாதிரியும் இருக்கும்.....

கேப்டன் : யேய்..... நான் பச்சை தமிழன்....நீல தமிழன்.... மஞ்சல் தமிழன்.... சிவப்பு தமிழன்..........சூட்டிங்க் போனா கூட எம்.ஜி.யார் வண்டிய தான் எடுத்துட்டு போறேன்....நான் எது பண்ணினாலும் ஒரு அர்த்தம் இருக்கும்......நாளைய தமிழ்நாடு என் கையிலதான்.... அப்போ வருசத்துக்கு 10 படம் நடிப்பேன்....எல்லாருக்கும் ஃப்ரீ ரேசன் குடுப்பேன்....ஃப்ரீ ரேடியோ....

தமிழ்குடிதாங்கி : அய்யகோ...இவன் தொல்லை தாங்க முடியவில்லையே..... சரி இந்த வசனம் எடுத்து விடுவோம்.....அப்பவாவது நிறுத்துகிறானா என்று பார்ப்போம்... தம்பி, யாரோ ராமாவரம் தோட்டத்தில் இருந்து, ஒரு வண்டி காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்களாம்.... கேள்விப்பட்டீர்களா??

கேப்டன் : இந்த நீல, சிகப்பு, பச்சை எம்.ஜி.ஆர் எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டான்...ஏன்னா, என்னோட கூட்டணி இப்போ மக்களோட......இந்த அரசாங்கம், என் தொகுதிக்கு எதுவுமே பண்ணல.....
நான் கூட பரிதாபப்பட்டு இவங்கள காப்பாத்த நெனச்சுத்தான், என்னோட "மரியாதை" படத்துல இங்க ரிலீஸ் பண்ணல....எங்க ஊர் ரேசன் கடையில மக்களுக்கு அஸ்கான்னு சொல்லி, உப்ப போட்டாங்களாம்..... இதுக்கு இவிங்க பதில் சொல்லியே ஆகணும்.

எஸ்.ஜெ.சூர்யா : இந்த பில்ட்-அப் சூப்பரா இருக்கே... பேசாம நாம கூட ஒரு கட்சி ஆரம்பிக்கரோம்னு சொல்லி பாக்கலாமா?? இலவசமா பப்ளிசிட்டி ஆச்சே....நமீதா கிட்ட எப்படியாவது பேசி, கட்சியோட கொ.ப.செ. ஆக்கிருவோம்.....அப்படியே ஏ.ஆர்.ரகுமானுக்கு போன் போட்டு, "எந்திரன்" படத்துல ரஜினி ரிஜக்ட் பண்ணின பாட்டு இருந்தா, அதை ஆட்டை போட்டு, கட்சியோட கொள்கை பாட்டா மாத்திடுவோம்......

பேரரசு : தம்பி சூர்யா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து, சிம்புவ செகண்ட் ஹீரோவா போட்டு, ஒரு படம் பண்ணுவோமா?? அந்த படம், என் "தர்மபுரி'ய விட பெட்டரா இருக்கும்....... உங்க முடிவு சொல்லுங்க....

கேப்டன் : டேய் பரதேசி, ஒனக்கு இன்னும் சரியா ஒரு நிமிஷம் டைம் தரேன்...அதுக்குள்ள, இந்த தமிழ்நாட்ட விட்டு ஓடி போயிடு.......ஏற்கனவே, "தர்மபுரி" ஊர் பக்கம் கூட போக முடியல..... நீ என்னிய வச்சு அந்த பேருல படம் எடுத்ததுல இருந்து..... இப்போ, அந்த தம்பி சூர்யாவ, காலி பண்ண ப்ளான் பண்றியா??

பேரரசு : இவன் கொடுமைய தாங்கலியே..... கேப்டன், நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் நடிப்போம்..... நீங்க ஹீரோ....நான் ஒங்க தம்பி... கதைப்படி, நீங்க என் அண்ணன், லாரி ட்ரைவர், நான் ஆட்டோ ட்ரைவர்.. நான் "பாட்சா" ஸ்டைலில விரல் எல்லாம் சுத்தி, சுத்தி டயலாக் பேசுவேன்.....

டி.ஆர் : என் பையன் சிம்பு, அவன் கிட்ட இருக்குது பண்பு, எப்போவுமே இல்ல வம்பு, என்னை நீ நம்பு....

எஸ்.ஜெ.சூர்யா : இந்த ஆளு கொடச்சல் தாங்க முடியலியே .... தப்பி தவறி கூட, இவங்ககிட்ட நயன்தாரா பேர சொல்ல கூடாது. சொன்னாக்க தொலைஞ்சோம்.... பழத்த நசுக்கி, கொட்டைய எடுத்துடுவானுங்க....

தமிழ்குடிதாங்கி : இந்த சினிமாவ ஒழிச்சாதான், நாடு உருப்படும்... இல்லேன்னா, இந்த டி.ஆர்.மாதிரி கரடி எல்லாம் ஹீரோ வேஷம் போட்டு மக்கள எல்லாம் பயமுறுத்தும்....சொல்ல வேண்டிய எடத்துல சொல்லி, இனிமே நைட் ஷோ மட்டும்தான் தியேட்டர்ல காட்டணும்னு சட்டம் போட சொல்லணும்...........

தமிழ்குடிதாங்கி பேச்சை கேட்டு எல்லாரும் தலைதெரிக்க ஓடுகிறார்கள்........... டி.ராஜேந்தர், ஜன்னல் வழியே வெளியே தாவுகிறார்............

Monday, April 20, 2009

பர்ந்து பர்ந்து பர்ந்து அடிப்பேன் .......









மக்களே,

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து, வாக்குப்பதிவு விரைவில் நெருங்கும் நிலையில் நீங்கள் இன்னும் சில தினங்களில், நம் "தலை"கள் புண்ணியத்தில் வாக்காள பெருமக்களாக போகிறீர்கள்.

அதற்குள் பர்ந்து பர்ந்து அடிக்கும் இந்த அதிரடி பதிவு உங்கள் பார்வைக்கு .........

நம்ம ஹீரோஸ் எதிரிகளை எல்லாம் பர்ந்து, பர்ந்து, பர்ந்து அடிச்சு, ஒரு சின்ன சிராய்ப்பு கூட இல்லாம கீழே விழுகிறார்களே, அது எப்படின்னு இந்த புகைப்படங்களை பார்த்தால் தெரியும்.

இனிமே,எந்த ஹீரோவாவது வில்லனையோ அல்லது வில்லனின் அடியாட்களையோ பர்ந்து பர்ந்து அடித்து, அந்தரத்தில் தொங்கினால், ஆச்சரியத்தில் வாய் பிளக்க வேண்டாம், வாய் பிளந்து, உதடு குவித்து, உங்கள் சக்தி அனைத்தையும் சேர்த்து பிகில் அடிக்க வேண்டாம் என்றும் எங்கள் சங்கத்தின் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

(இதில் மிக முக்கியமாக, சண்டை காட்சிகள் வெண் திரையில் அதி பயங்கரமாக தோன்ற வேண்டும் என்பதற்காக பெரிய தொப்பையுடன் கூடிய (டாஸ்மாக் உபயம்) ஹெவி வெயிட் ஹீரோக்களை (குறிப்பாக விஜயகாந்த்) கம்பி கட்டி மேலே தூக்கி, பின் தரையில் பத்திரமாய் இறக்கி விடும் உங்கள் க்ரூப்புக்கு ஒரு பெரிய ஓ).
நான் இந்த மாதிரி சண்டைக்காட்சியின் போது, கம்பி அறுந்து விழாம இருக்கணுமே என்று வேண்டிக்கொள்வேன்.

Tuesday, April 14, 2009

தேர்தல் பரபரப்பு - விஜயகாந்த், வடிவேலு கடும் மோதல்


தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்.
விஜயகாந்த் எங்கெங்கு எல்லாம் போய் பிரச்சாரம் செய்கிறாரோ, அங்கெல்லாம் பின்தொடர்ந்து, அவர் கூறியது அனைத்தும் பொய் பிரச்சாரம், சிறுவயதில் இருந்தே உண்மை எதையும் அவர் பேசியதில்லை, அதை நம்பி அவர் கட்சியினருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று சக ஊர்காரரும், காமெடி நடிகருமான வடிவேலு கூறி வருவதாக நம்பத்தகாத வட்டார செய்திகள் கூறுகின்றன.

இதை அறிந்த விஜயகாந்த், வடிவேலுவை மடக்க ஒரு வியூகம் வகுத்தார் என்றும், அந்த வியூகத்தில் வடிவேலு சற்றும் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டார் என்றும், அங்கு நடந்த பயங்கர மோதலில், கேப்டன் விஜயகாந்த் பல வேறு வடிவங்களை கொண்ட விதவிதமான ஆயுதங்களை உபயோகப்படுத்தி, வடிவேலுவை தாக்கவில்லை என்றும் பரபரப்பற்ற டகால்டி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மேல் விபரங்கள் அறிய மேலே உள்ள புகைப்படங்களை பார்க்கவும்.

(மேற்கூறிய திடுக்கிடும், அதிர்ச்சி கலந்த செய்தி சிறிதும் உண்மை கலக்காத 100% அக்மார்க் டகால்டி செய்தி என்பதை எங்கள் சங்கம் சார்பில் உறுதி படுத்துகிறோம்)

Sunday, April 12, 2009

ரீவைன்ட் : சிவாஜி தி பாஸ் (2007)



ஏ.வி.எம் அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில், நட்சத்திர டைரக்டர் ஷங்கர் டைரக்ட் செய்ய, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த, மிக பெரிய வெற்றி படம் "சிவாஜி தி பாஸ்" படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய பாடல்கள் வருமாறு :

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் (வாஜி வாஜி பாடல்)
சஹானா சாரல் தூவுதோ, சஹாரா பூக்கள் பூத்ததோ

இந்த இரு பாடல்களுக்காக வைரமுத்து அவர்கள் பல பாடல்கள் எழுதினர். எப்படி என்றால், இந்த இரு பாடல்களை டைரக்டர் ஷங்கர் முடிவு செய்து, பதிவு செய்வதற்கு, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல பாடல்கள் அளவு சரணம் எழுதி உள்ளார்.
படத்தில் இடம் பெற்ற அந்த இரு பாடல்கள் போக, டைரக்டர் ஷங்கர் அவர்களால், நிராகரிக்கப்பட்ட சில பாடல் வரிகள், இதோ உங்கள் பார்வைக்கு.
பாடல் 1 :
ரஜினி : அழகே அழகே நீ ஆறடி பனித்துளியா?
வைரத்தூளை உரமாய் தூவி, வளர்த்த புஷ்பம் நீ
என் தேகம் எங்கும் சுற்றி திரியும் ரெண்டாம் ஜீவன் நீ
ஷ்ரேயா : என் கற்பு பாறை உருக செய்யும் கறுப்பு வெய்யிலும் நீ
என் தாவணி ஓரம் ஈரம் செய்யும் தனியார் மழையும் நீ
ரஜினி : என் ஆன்மா என்னும் பள்ளத்தாக்கில் அலையும் மேகம் நீ
என் அடிவானத்தை இரண்டு செய்ய அடித்த மின்னல் நீ
ஷ்ரேயா : உள்ளக்காட்டில் மையம் தேடி, நகரும் நதியும் நீ
என் உள்ளே புகுந்து உயிரில் மிதந்து உடையும் முத்தம் நீ
******************
பாடல் 2 :
ஷ்ரேயா : ஒரு பார்வையில் உறைந்து விட்டேன்
உங்கள் கண்ணடியில் உள்ள கதகதப்பில்
வெயில் காய்வதற்கே இதோ இதோ வந்தேன்.
ரஜினி : மன்மத பூக்கிடங்கே, உன்னை எந்தன் மார்புக்குள் அடைகாப்பேன்
உனது உயிர் அடிக்கடி சரிபார்ப்பேன்
உனது நகம் வளர்கிற இசை கேட்பேன்
ஷ்ரேயா : உம்முடைய வார்த்தையில் வடியும்
வாஞ்சையின் கசிவில் நடுநெஞ்சு நனைகின்றேன்.
(நண்பர்களே, உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன).

Saturday, April 11, 2009

"ட்ரிபிள் ட்ராக் டகால்டி" - மன்சூர் அலிகான், விஜய டி.ராஜேந்தர், சரத் குமார்

நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவித்தாலும் அறிவித்தார்கள். தினம் பலப்பல காமெடி காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. இதோ, தமிழகத்தின் லேட்டஸ்ட் கிச்சு கிச்சு காமெடி காட்சி.

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சில தினங்களுக்கு முன்புதான், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன் பெயர் கூட "தமிழ் பேரரசு" என்று அறிவித்தார். இடையில் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை.இப்போது, திடீரென அந்த முடிவை மாற்றிக்கொண்டு, டி.ராஜேந்தருக்கு சால்வை அணிவித்து வீர வாளை பரிசாக வழங்கி லட்சிய தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜேந்தர்,

இந்த இணைப்பின் மூலம், தமிழ்நாட்டின் "டெர்ரர் கூட்டணி" இதுதான் என்று பெயரெடுத்து விட்டதாக அறிவித்தார். இது தவிர, இந்த "டெர்ரர் கூட்டணி"யில் மற்ற பல அகில உலக கட்சிகளான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை தேர்தலுக்கு முன் இணையும் என்றும் ராஜேந்தர் கூறினார்.

தான், மன்சூர் அலிகான், சரத் குமார் போன்ற இருவருடன் இணைந்து ஒரு மெகா படம் தயாரித்து, நடிக்க உள்ளதாகவும், தேர்தல் முடிந்து, மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றி பொதுக்குழு கூட்டி, முடிவு செய்துவிட்டு, பின் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாக விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

படத்தின் பெயர் பற்றி கேட்டபோது, பல புதுமையான பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அதில் "ட்ரிபிள் ட்ராக் டகால்டி" என்கின்ற பெயர் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த படம் தமிழ் பேசும் மக்களுக்காக ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பிறகு மன்சூர்அலி கான் கூறுகையில்,

இலங்கை தமிழர்களை காக்க கூட்டு பிரார்த்தனைக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் மட்டும் கதாநாயகியை காப்பாற்றுவதற்கு வில்லன்களை பந்தாடுகிறார். நிஜத்தில் தமிழர்களை பாதுகாக்க மண்டியிட வேண்டும் என்கிறார்.

மேலும், ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம் என்றார்.

டி.ராஜேந்தரின் டண்டணக்கா பாடல் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாலும், அவரின் தமிழை எப்போதும் கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவருடன் கூட்டணி அமைத்ததாக மன்சூர் அலிகான் கூறினார்.

(ராஜேந்தர் தமிழ்நாட்டில் இருந்து பேசினால், நேரடியாக இலங்கைக்கே கேட்கும் வகையில் அவரின் பேச்சு / குரல் இருப்பதாகவும், மற்றும் விஜய டி. ராஜேந்தர் தமிழ் நன்றாக பேசுவதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்).

Monday, April 6, 2009

"தமிழ் பேரரசு" - மன்சூர் அலி கான் காமெடி கிச்சு கிச்சு கட்சி


மன்சூர் அலி கான்.

"கேப்டன்" விஜயகாந்த் அவர்களால் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். பின் ஏராளமான படங்களில் வில்லனாகவே நடித்தவர்.

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டார் என்று அவர் மீது ஒரு வழக்கு இருந்தது. அந்த வழக்கில் இருந்து சமீபத்தில்தான் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் "கையில காசு, வாயில தோசை" என்ற மெகா பட்ஜெட் படம் ஒன்றை எடுத்து வருகிறார். அந்த படத்திற்கு கதை, வசனம், இசை இவரே (ஹீரோவும் இவர்தானாம்!!). இதற்குமுன் பல வெற்றி (வெட்டி) படங்களில் ஹீரோவாக நடித்துள்ளதாக அவரே தெரிவித்தார். அந்த படங்கள் வருமாறு :

ராஜாதி ராஜ, ராஜ கம்பீர ........................ காத்தவராயன் .....

என்னை பார் யோகம் வரும்

இப்போ சொல்ல வந்த மேட்டர் என்னன்னா, இப்படியாகப்பட்ட படிப்படியான சினிமா வளர்ச்சி கண்ட நம் அண்ணன் மன்சூர் அலிகான், இப்போது எல்லோரும் செய்யும் அதே தொழிலை / வேலையை செய்துள்ளார், அதாங்க கட்சி ஆரம்பிப்பது. தன் கட்சிக்கு ஒரு அட்டகாசமான பெயரையும் சூட்டி விட்டார். அந்த பெயர் :

"தமிழ் பேரரசு"

இந்த புதுக்கட்சியின் பெயருக்கும் டைரக்டர் பேரரசுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

தன் புதிய கட்சி, இங்குள்ள தேசிய கட்சிகள் மற்றும் நடிகர்களின் கட்சிகளான தே.மு.தி.க., ச.ம.க., ல.தி.மு.க., அ.இ.நா.ம.க. மற்றும் பல இத்துப்போன லெட்டர் பேட் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

(சமீபகாலமாக விஜயகாந்த் அவர்களை வெகு கடுமையாக விமர்சித்து வரும் மன்சூர் அலிகான், விஜயகாந்தை கேப்டன் என்று அழைப்பதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

விஜயகாந்த் "கேப்டன்"னா, கப்பலுக்கா, கிரிக்கெட் டீமுக்கா, ஹாக்கி டீமுக்கா என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பி உள்ளார்).

Saturday, April 4, 2009

"கேப்டன் தேர்தல் பிரச்சாரம்" - முறியடிக்க டெர்ரர் கூட்டணி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் "தே.மு.தி.க." தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" அறிவித்துள்ளதை தொடர்ந்து, அவரை வீழ்த்த பலவித வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக பலதரப்பு நம்பத்தகாத வட்டாரத்தில் இருந்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதில் பிரதானமாக :
மதுரைக்கார காமெடி புயல் வடிவேலு
"தமிழ் கரடி" விஜய டி.ராஜேந்தர்
இந்த இருவரும் கேப்டனை வீழ்த்த பலவேறு முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில், விஜயகாந்த் தன்னை பெரிய தியாகியாக முன்னிறுத்தி ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேச முயற்சித்ததை கண்டித்த விஜய டி.ராஜேந்தர், ஒரு மேடையில் விஜயகாந்தை புகழ்ந்து பாடிய கவிதை இதோ, உங்கள் பார்வைக்கு........

"இரவினில் பிராந்தி
கரங்களில் ஏந்தி
சுவைக்கவோ பூந்தி
தேடுவது சாந்தி
காலையில் வாந்தி
ஆக முடியுமா காந்தி"

வடிவேலு தன் பங்குக்கு சொன்னது :

"டேய், நான் மதுரக்காரன், அதுலயும் பெரிய ரோசக்காரன். எண்ணிய அடிச்சு அழவிட்ட ஒன்ன, இந்த தேர்தல்ல அழவைக்காம விடமாட்டேண்டா. ஒனக்கு ஒரு சீட்டு கூட கெடைக்காம பண்றேண்டா"

இதுபோன்ற பெரிய சிக்கலான சூழ்நிலையில், இப்போது இந்த இருவரும் (கரடியும் குடிவேலுவும்) விஜயகாந்த் அவர்களை எதிர்த்து பொதுகூட்டங்களிலும், மேடையிலும் பேசப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஏற்கனவே, தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க. , பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற பெரிய கட்சிகளை எதிர்த்து தனியாக போட்டியிடும் விஜயகாந்த், இந்த இருவர்களின் இம்சையையும் தாங்க வேண்டும். போட்டியிட வேண்டும். இதன் முடிவு, கண்டிப்பாக அவருக்கு சாதகமாக இருக்காது என்பது "டகால்டி கருத்து கணிப்பு" ஒன்று வெளிவந்துள்ளது.

எது எப்படியோ, விஜயகாந்த் இந்த தேர்தலில் கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளார் என்பது தெளிவாகிறது.

(இந்த செய்தி காக்கையார், பருந்தார், கழுகார், குருவியார் வரிசையில் ஒரு "டாஸ்மாக்கார்" சொன்னது...... ஏன்னா, கேப்டன் சம்பந்தப்பட்ட விஷயத்த ஒரு "டாஸ்மாக்கார்" சொல்றது தான பொருத்தமா இருக்கும்.....).