Sunday, September 27, 2009
அண்ணா விருது.... (இது நீங்கள் நினைப்பது போல் இல்லை...வித்தியாசமான விருது)
Friday, September 25, 2009
பத்தினி....
Sunday, September 20, 2009
கருப்பு தங்கம் பிறந்தநாள் / ஆயில் தோன்றிய கதை...
இன்று உலகமே ஆயில் என்ற அந்த மூன்றெழுத்து மந்திர வார்த்தையால் தான் ஓடுகிறது. இங்கு ஆயில் என்பதை வாகனங்கள் ஓட பயன்படும் எண்ணை (பெட்ரோல், டீசல்...) என்பதாக பொருள் கொள்க...
கருப்பு தங்கத்தின் நூற்றைம்பது வைர ஆண்டுகள்...இதோ உங்கள் பார்வைக்கு...
27 ஆகஸ்ட் 1859
"Colonel' Edwin Drake gathers oil using a pioneering drilling technique.
1870
Stanford Oil is founded by John D Rockfeller. The firm is later dismantled by the US Government - its fragments would become the oil giants Exxon, Mobil and Chevron.
1886
The automobile is invented by Gottileb Daimler and Karl Benz.
1901
Oil is discovered in Texas.
1907
Shell and Royal Dutch merge.
1908
The Anglo-persian Oil Company is created, later known as BP
1908
Compagnie franchise des Petroles forms, later became Total
1912
The first gasoline station in the US opens in Cincinnati.
1914
Oil discovered in Venezula.
1927
Oil is discovered in Kirkuk, Iraq.
1936
Search of Oil in the UAE begins.
1938
Mexico nationalises oil assets, creating the state-run giant, Permex.
1938
Oil is discovered in Saudi Arabia and Kuwait.
1951
Iran nationalises the Anglo-Iranian Oil Company. It is restored in 1953 after a US and British-backed coup.
1958
Oil is discovered in Abu Dhabi.
1960
OPEC is created, with Iran, Iraq, Kuwait, Saudi Arabia and Venezula as founding members. BTW, what is OPEC - ORGANIZATION OF PETROLEUM EXPORTING COUNTIRES.
1973
Arab members of OPEC announce an oil embargo in response to US support for Israel during Yom Kippur war. The embargo prompts brownouts in the US, long waits for gasoline for cars and a dramatic spike in oil prices.
1979
The Islamic Revolution in Iran prompts a renewed spike in oil prices, with barrel prices rising over $20.
1989
The Exxon Valdez spills millions of gallons of oil off the coast of Alaska. The spill has a devastating environmental impact.
1990
Oil Prices reach $40 a barrel ahead of the first Gulf War.
2008
In January, oil prices briefly touch the psychological marker of $100 a barrel amid violence in Nigeria, tension between the US and Venezula and a jittery stock market.
In July continued tensions in Nigeria and Iran, along with a weakened dollar push the price of oil to $147.27 a barrel in New York trading - an all-time high.
In December, the price of oil plummets to $32 a barrel as the global economic slowdown hits.
(Source : 7 DAYS issue dated 03rd September 2009)..
இந்த ஆயிலுக்கு மாற்றாக எரிபொருள் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சி உலகெங்கும், அசுர வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது... யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. அப்படி, ஆயிலுக்கு ஒரு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டால், அது இந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை...
Tuesday, September 15, 2009
க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
இந்தத் தொடரை என்னை எழுத அழைத்தது அருணா மேடம்.....
காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் ....................அவசியம்தான்... காதல் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத பண்டம் போல... வாழ்க்கை நம் முன் இருக்கும்...ஆனால், ருசிக்காது...
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
உலகினில் எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்ந்தவர்கள், அழகும் நிரந்தரமில்லை என்பார்கள்...
பணம் அவசியமா?
பணம்... கண்டிப்பாக ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியமான ஒன்று... ஆனால், அதை தேடும் முயற்சியில் வாழ்வை தொலைத்து விடக்கூடாது...அருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை... பொருள் இல்லாதார்க்கு எவ்வுலகும் இல்லை என்பது வள்ளுவன் வாக்கு...
கடவுள் உண்டா?
கடவுள் உண்டு என்பதே கண்டறிந்த பெரிய, பெரிய ஞானிகளின் கூற்று.. நாமும் எப்போது இரை தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்... அதனூடே சிறிது இறையையும் தேடுவோம்... ஒரு நாள் கண்டிப்பாக அவன் இருப்பதை உணருவோம்... இதைப்பற்றி நான் "வாழ்க்கை" என்ற ஒரு தொடரில் விரிவாக அலச இருக்கிறேன்..
அழகு,காதல்,பணம், கடவுள்?
இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
அருண் (குறட்டை அரங்கம்)
லாரன்ஸ் (படுக்காளி)
பாசகி
அருண் (வால்பையன்)
செல்லதுரை (இதயமே)
"தலை"வர்களே... ரவுண்டு கட்டி அடிக்க தயாராகுங்கள்...
Friday, September 11, 2009
"எந்திரன்" ரஜினிகாந்த் நேர்காணல், பரபரப்பு தகவல்கள்
யப்பா... அதானே பார்த்தேன்... ஷங்கராவது ஒரு வருஷத்துல முடிக்கறதாவது என்று மயங்கி விழுந்து பின் எழுகிறார் நிருபர்...
நன்றி வணக்கம்....ஜெய்ஹிந்த்.....
Tuesday, September 8, 2009
கேப்டன் விஜயகாந்த் அதிரடி மீட்டிங் (பாகம் - 2)
நாங்க ஆச்சிக்கு வந்தா, இதை எல்லாம் தடுப்போம்... அப்புறம், நாங்களே பண்ணுவோம்... என்னது... கொலை, கொள்ளைய பண்ணுவோமான்னு கேக்கறியா?? டேய் பரதேசி... நீ எந்த கச்சிகாரன்னு சொல்லுடா...
என்னது என் கச்சியா?? என் கச்சில இருந்துட்டு தைரியமா என்னிய பத்துன உண்மைய சொன்னதுக்கு ஒரு டேங்ஸ்... ஆனா, இன்னில இருந்து ஒனக்கு சனி உச்சத்துல வந்துட்டான்... கேப்டன் கை காட்டியதும், ஒரு குண்டர் படை அந்த தொண்டரை அள்ளி சென்றது...
என்னதான் உண்மைன்னாலும், அத இப்படி பப்ளிக்கா சொல்லக்கூடாது.. நான் கூட எலக்சன் டைம்ல... எனக்கு எல்லாம் தெரியும்... ஆனாக்க, சொல்ல மாட்டேன்னு சொல்லி கருணாநிதி கிட்டவே ஆட்டம் போட்டேன்... இவன் என்னடான்னா, நம்ம தொழில் ரகசியத்த இப்படி ஒடச்சு பேசறான்... அவன கொண்டுட்டு போய், குடோன்ல வச்சு பட்டைய கெளப்புங்கடா... அந்த பரதேசி இனிமே சாப்பிடறத தவிர எதுக்கும் வாய தொறக்கக்கூடாது... என்று கர்ஜிக்கிறார்...
இவிய்ங்க ஆச்சில நடந்த இன்னொரு அநியாயத்த சொல்லவா? என்று கேட்கிறார்... தொண்டர்கள் பாவம் போல், தலையை ஆட்டுகிறார்கள்...
நான் கடைசியா "மரியாதை"ல நடிச்சேன் இல்ல... நடிச்சேனா இல்லையா, சொல்லுங்கடா?? வாயில என்னடா வச்சு இருக்கீங்க....என்கிறார்...
ஆமாம், தலீவா... ரெண்டு வேசத்துல பின்னிட்டியே தலீவா என்று உணர்ச்சிவசப்பட்டு முன்னால் வந்து கூவிய தொண்டனுக்கு பையில் இருந்து ஒரு ரூ.500 நோட்டு எடுத்து தருகிறார்... நைட்டு செலவுக்கு வச்சுக்கோ, சைட் டிஸ்ஸுக்கும் சேர்த்து, ஒகேவா என்று சொன்னவாறு தன் பேச்சை தொடர்கிறார்...
தேர்தல் சுற்றுப்பயணம் போன எடத்துல எல்லாம் என்னிய பார்த்து "கருப்பு எம்.ஜி.ஆர்."னு மக்கள் வாயார வாழ்த்துனாங்க... எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்துச்சி... ஆனாக்க, இனிமே "எம்.ஜி.ஆர" நீங்க எல்லாரும் "வெள்ளை விஜயகாந்த்"னு கூப்பிடணும்... அத்த என் காதால நான் கேக்கணும்... கூப்பிடுவீங்களா என்று அடித்தொண்டையில் காட்டு கத்தலாக கேட்கிறார்...
கூட்டம் மெய்மறந்து, விசிலடித்து கை தட்டுகிறது... கேப்டன் உற்சாகமாகிறார்... பின்னால் திரும்பி சைகை காட்ட, ஒரு கூஜாவில் இருந்து கேப்டனின் பக்குவத்திற்கு மிக்ஸ் செய்யப்பட்ட "டாஸ்மாக்" ஒரு கிளாஸில் ஊற்றி கொடுக்கப்படுகிறது. அந்த "டாஸ்மாக்"கில் தொண்டை நனைந்தவுடன் கேப்டன் பழைய ஃபார்முக்கு திரும்புகிறார்... உற்சாகமாக உளற தொடங்குகிறார்...
நான் கஸ்டபட்டு நடிச்ச "மரியாதை" படத்த "ஆஸ்கார்" அவார்டுன்னு ஏதோ இருக்காமே, அதுக்கு அனுப்ப மாட்டாய்ங்களாம்... நான் கேக்கறேன்... ஆச்சி உங்க கையில இருந்தா, அதுக்காக, நான் கஸ்டபட்டு நடிச்ச படத்த அனுப்ப மாட்டீய்ங்களா??
அதே மாதிரி, என் இன்னொரு படம் "எங்கள் ஆசான்" இங்க சென்னையில ரிலீஸ் பண்ண விட மாட்டேங்கறாய்ங்க... இது அராஜகம் இல்லையா?? பதில் சொல்லுங்க..
மத்தியில இருக்கற காங்கிரஸும், மாநில அரசு தி.மு.க.வும் இது போல என்னிய தொடர்ந்து வெறுப்பேத்தினா, நான் ஏற்கனவே, முடிவு பண்ணின "டாஸ்மாக்" நுழைவு போராட்டம் தீவிரம் அடையும்...
ஒரு மாசத்துக்கு, எங்கள தவிர யாரும் "டாஸ்மாக்" கடை உள்ளக்கவே நொழைய முடியாது... "டாஸ்மாக்"தான் நாங்க... நாங்கதான் "டாஸ்மாக்"... இது ஓகேவா, பாத்துடுவோமா, நீங்களா, நாங்களான்னு, ஒரு மாசம், உங்க ஆளுங்க, மத்தவிய்ங்க சரக்கு அடிக்காம இருக்க முடியுமா??
போராடறதுன்னு வந்துட்டா, நானே நேர்ல எறங்கிடுவேன்... எல்லா கடைக்கும், நானே நேர்ல போயி, சரக்கு மொத்தமும் வாங்கி, எங்க ஆளுங்கள கூப்பிட்டு கொடுத்துடுவேன். அப்புறம், நீங்க குடிமக்களுக்கு பதில் சொல்லி ஆகணும்... சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்...அப்புறம் ஒங்க இஷ்டம்... என்கிறார்...
நான் பேச ஆரம்பிச்சா, நிறுத்த மாட்டேன்... ஆனாக்க, எனக்கு நெறைய வேலை இருக்கு... அதனால, நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...வர்ட்டா.. ஆங்... என்றவாறு தோள் துண்டை சரி செய்தவாறு, கூலிங் கிளாஸ் அணிந்து, வண்டியில் ஏறுகிறார்...
அதே சமயம், ரோட்டில் ஓரமாய் நின்றிருந்த பேருந்தில், ஜன்னலோரமாய் அமர்ந்திருந்தவர்கள் கேப்டனை பார்த்து கையசைக்கிறார்கள்..ஆனால், ஒரு பெண்ணின் கையிலிருந்த ஒரு சிறு குழந்தை, கேப்டனை நேருக்கு நேராக பார்த்த மாத்திரத்தில் "பூச்சாண்டி", "பூச்சாண்டி" என்று பயத்தில் கதறி, அலறி, வீறிட்டு அழ தொடங்குகிறது...
(இதற்கு மேல எழுதுவதற்கு,என்னாலேயே முடியாததால், தற்போதைக்கு தற்காலிக முற்றும்....)
Sunday, September 6, 2009
கேப்டன் விஜயகாந்த் அதிரடி மீட்டிங் - (பாகம்-1)
முதலில் தே.மு.தி.க தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" கட்சி தொண்டர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்...
இங்க வந்து இருக்கற எல்லாருக்கும் வணக்கம்... நான் ரெம்ப நல்லவன்னு "அம்மா" சொன்னாய்ங்க... அம்மான்னா அவிய்ங்க ஒருத்தருதானா... இவிய்ங்க வேறடா பரதேசி... என் வீட்டம்மா... பிரேமா....
இந்த இடை தேர்தல்ல இரண்டாவது எடத்துக்கு வந்து இருக்கோம்... அடுத்த தேர்தல்ல, மொத எடத்துக்கு வரணும்... அதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க.. அவிய்ங்களுக்கு, நான் தனியா கவனிக்கறேன்...
தலீவா... இந்த தடவ அ.தி.மு.க. போட்டி போடல... அடுத்த தடவ, "தல" கிட்ட சொல்லி, அவிய்ங்களயும் போட்டி போட வேணாம்னு சொன்னா, நம்ம அடுத்த எலக்சன்ல மொத எடத்துக்கு வந்துடுவோம்...
டேய்... பரதேசி... நீ எந்த கச்சி ஆளுடா... மவனே.. நான் அங்க வந்தா, ஒன்னிய பெண்டு எடுத்துடுவேன்.. ஐடியா குடுக்கற மூஞ்சிய பாரு... ஓங்கி குத்தவா? (முஷ்டியை மடக்கி காற்றில் ஓங்கி குத்துகிறார்....)... இதை பார்த்த, முதல் நான்கு வரிசை தொண்டர்கள் படை டர்ராகிறது...
உருப்படியா ஏதாவது சொல்றதுன்னா சொல்லுங்க... இல்ல, வந்த வேலைய பார்க்க போங்க... உள்ளுக்கு ரூம்புல தான் சரக்கு இருக்கு... அடிதடி பண்ணாம, முடிங்க... அந்த பக்கம், பிரியாணி பார்சல் இருக்கு... ஆளுக்கு ஒரு பார்சல் மட்டும் எடுத்துட்டு போங்க... போன தடவ ஆயிரம் பார்சல் வந்தது...அத்த, வந்து இருந்த ஐநூறு ஆளுய்ங்களே ஆட்டைய போட்ட மாதிரி இல்லாம.... என்று ஓவர் சவுண்ட் விடுகிறார்...
மக்களே...நேத்து ஒரு பொஸ்தகம் படிச்சேன்... அது ரொம்ப நல்ல பொஸ்தகம்...
தலீவா... அது இன்னா பொஸ்தகம்?? எதுனா பலான பலானதா??
டேய் அடங்குடா பரதேசி... நான் எல்லா பொஸ்தகமும் தான் படிக்கறேன்... இப்போ கூட என் வண்டியில ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், கல்கண்டு எல்லாம் இருக்கு... திருப்பி போறப்ப படிக்கறதுக்கு... இது வேற பொஸ்தகம்டா.. 1330 குறள், பெரிய தாடி வெச்ச ஒருத்தரு எழுதுனது... (பெரியார் இல்லடா.... கபோதி... இவரு வேற...).. அங்... அவரு பேரு நெனவுல வரலியே... இனிமே டாஸ்மாக் கொஞ்சம் கொறைக்கணும்... எப்போ, எங்க பார்த்தாலும், மங்கலாவே தெரியுது... புத்தி கூட எப்போவும் போலவே மந்தமா, தடுமாறிகிட்டே இருக்குது...
இப்போது மெதுவாக திரும்பி பக்கத்தில் இருக்கும் பண்ரூட்டியை பார்க்க, அவர் திருவள்ளுவர், திருக்குறள் என்று எடுத்து கொடுக்க...
ஆங்... அந்த பொஸ்தகம் பேரு "திருவள்ளுவர்"...எழுதுனது "திருக்குறள்"...
அய்யோ..அய்யோ என்று தலையில் பண்ரூட்டி அடித்து கொள்வதை கவனித்த விஜயகாந்த் தன் சிவந்த விழிகளை பெரிதாக்கி, உருட்டி பார்க்க.... பண்ரூட்டி அலறிக்கொண்டே பின்னால் சாய்கிறார்...
அவர் சாய்வதை பார்த்த சிலர், சோடா கேட்க, ஒரு தொண்டர், ஒரு ஃபுல் பாட்டிலும், சோடாவும், கிளாஸூம்... கூடவே சிப்ஸூம் எடுத்து வருவதை பார்த்து கேப்டன் கர்ஜனை செய்கிறார்...
சோமாறி... மயங்கி விழுந்தவனுக்கு, மொதல்ல வெறும் சோடா குடுடா... எழுப்பி, வேணுமான்னு கேட்டு சரக்கு கலக்கி குடு... எல்லாத்தையும், நானே சொல்லி தரணுமாடா. எவ்ளோ வருசம் என்கூட இருக்க... இது கூட தெரியலியா என்று ஜெர்க்குகிறார்...
சரி. சரி.. மொதல்ல அவர எழுப்பி உள்ளார இருக்கற ரூம்புல படுக்க வைங்க... என்னோட ஏ.சி.ரூம்புக்கு யாரும் போயிடாதீங்க... அங்க எனக்கு தனியா காய்ச்சின பெஸல் சரக்கு இருக்கு...தப்பித்தவறி அத எடுத்து யாராவது அடிச்சு காலி பண்ணுணீங்க, மவனே, ஒரு பய இந்த எடத்த விட்டு உருப்படியா போக முடியாது...என்று சவுண்ட் விடுகிறார்...
பெருமூச்சு வாங்கி விட்டு, சிறிதே போதை தெளிந்த நிலையில், அந்த பொஸ்தகம் பேரு "திருக்குறள்", அத்த எழுதுனவரு அந்த பெரிய தாடி வெச்ச "திருவள்ளுவர்" என்று சரியாக சொல்லிவிட்டு, ஹீ...ஹீ... என்று இளிக்கிறார்... அப்போது பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு தொண்டர் ஃபோட்டோ எடுக்க... அந்த ஃபோட்டோவ வெளியே பெரிசா போஸ்டர் அடித்து ஒட்ட சொல்கிறார்...
பொஸ்தகம் முழுசா படிச்சேன்... அதுல ஒரு கொறளு நெனவுக்கு வந்துச்சு... சொல்லவா என்று கூட்டத்தை பார்த்து கேட்க.. பசியில் எல்லா தலையும் ஒரு புறமாய் சாய, கேப்டன் சரி என்கிறார்கள் என்று எண்ணி, உற்சாசமாகி சொல்ல ஆரம்பிக்கிறார்...
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து...
அப்படின்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? சொல்றேன் கேளுங்க...
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்று கூறப்படுவது..
ஆனா, இப்போ கருணாநிதி ஆச்சில மக்களுக்கு நோய் வருது... விளைச்சலே இல்ல.. பொருளாதார வளம் அவரு வீட்டுல மட்டும் தான் இருக்கு... இன்ப நிலை.. கலைஞர் டி.வி.ல காட்டுற "மானாட மயிலாட" தான் இன்ப நிலையா?? உரிய பாதுகாப்பு... நாட்டுல எங்க இருக்கு பாதுகாப்பு...
(யப்பா... ஒரெ ஒரு கொறளு சொல்றதுக்குள்ளவே, வேர்த்து, விறுவிறுத்து, நாக்குல நொரை தள்ளிப்போச்சு.. இனிமேல அந்த கொறளு பொஸ்தகத்த கண்ணால கூட பாக்க கூடாதுடா அய்யனாரே...).
இன்னும் நெறைய விசயம் இருக்கு... அடுத்த வாரம் மீட்டிங்ல சொல்றேன்... போயி எல்லாரும், வந்த வேலைய தொடங்குங்க... சரக்கு, பிரியாணி எல்லாம் உள்ளாக்க இருக்கற ரூம்புல இருக்கு...நான் வர்ட்டா..ஆங்ங். என்று சொல்லிவிட்டு பின்வாசல் வழியாக மாடியில் இருக்கும் தன் ரூம்புக்கு எஸ்கேப் ஆகிறார்...
(பின்குறிப்பு : ஒரு காமெடி பதிவு எழுத சொன்ன மிஸஸ்.மேனகா சத்யாவிற்காக இந்த பதிவு...)
Friday, September 4, 2009
ஜில்... ஜிலீர்.... ஒரு ஐஸ்கிரீரீரீம்ம்ம்ம் ரிப்போர்ட்
இப்படியாக, ஐஸ் கிரீமின் அறிமுகத்தை தெரிந்து கொண்ட நாம், எந்தெந்த நாடுகள் மற்றும் நாட்டு மக்கள், நிறைய ஐஸ் கிரீம் சாப்பிடுகின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்...
1. United States
உலகின் டாப் 15, அதாவது, மிகவும் விரும்பத்தக்க ஐஸ்கிரீம்களின் பட்டியல் மற்றும் அதன் சதவீதத்துடன், இதோ...