ஏங்க.... ஏன் இவ்ளோ லேட்..... இன்னிக்கும் அந்த உபன்யாசம்தான் போயிட்டு வரீங்களா? உங்களுக்கு இது எப்படித்தான் அலுக்காம இருக்கோ? என்றாள் கோமதி.......தன் மூக்கு கண்ணாடியை கழற்றிக்கொண்டே....
கோமதி... இப்படி இந்த அழுகாச்சி சீரியல நாள் முழுக்க உட்கார்ந்து பாக்கறத விட, நான் இப்போ கேட்டுட்டு வந்த உபன்யாசம் எவ்வளவோ மேல்.... சின்ன வயசுல இதெல்லாம் கேட்டு இருந்தா, நான் வாழ்க்கைல இன்னும் கூட கொஞ்சம் நல்லவனா இருந்திருப்பேனோ என்னவோ என்றார் ராகவன்...
இப்போ மட்டும் என்னங்க, நீங்க எங்க மேல காட்டுற அன்பு மாதிரி எல்லாரும் அவங்க அவங்க குடும்பத்து மேல காட்ட ஆரம்பிச்சாங்கன்னா, இந்த உலகத்துல, சண்டை, சச்சரவு எதுவுமே வராதுங்க....
அதுவும், உங்க செல்ல மகளுக்கு ரெட்டை குழந்தை பொறந்து இருக்குன்னு கேள்விப்பட்டதில் இருந்து, அவங்கள பார்க்க கனடாவுக்கு எப்போ போறோம், எப்போ போறோம்னு நீங்க ஒரு நாளைக்கு பத்து, இருபது தடவையாவது கேட்டுட்டே இருக்கீங்க...
நான் கூட அப்படியே, நியூ யார்க்-ல இருக்கற நம்ம பையனையும் பாத்துட்டு வந்துடலாம்னு ஒரு ப்ளான் போட சொன்னேன். ரெண்டு ஊரையும் பார்த்துடலாம், ரெண்டு பசங்களையும் பாத்தா மாதிரி ஆச்சு... அப்படியே, பேர குழந்தைகளையும் கொஞ்ச நாள் கொஞ்சிட்டு வரலாம், என்ன சொல்றீங்க என்றாள்.
நான் கூட அப்படியே, நியூ யார்க்-ல இருக்கற நம்ம பையனையும் பாத்துட்டு வந்துடலாம்னு ஒரு ப்ளான் போட சொன்னேன். ரெண்டு ஊரையும் பார்த்துடலாம், ரெண்டு பசங்களையும் பாத்தா மாதிரி ஆச்சு... அப்படியே, பேர குழந்தைகளையும் கொஞ்ச நாள் கொஞ்சிட்டு வரலாம், என்ன சொல்றீங்க என்றாள்.
அது வந்து கோமதி, நம்ம பொண்ணு, மாப்பிள்ளை சொக்க தங்கம்.... அவங்கள பாக்கற சாக்குல அப்படியே பேர பசங்களையும் பாத்துடலாம். ஆனா, நம்ம மருமகளுக்கு அவ்வளவு ஒண்ணும், நம்ம பேர்ல ஒரு மரியாதையோ, பாசமோ இல்லையே, போன தடவ இங்க வந்தப்போ, நம்ம கூட எவ்ளோ சண்டை போட்டா?, அதனாலதான் அங்க ஏன் போகணும்னு யோசிக்கறேன் என்றார் ராகவன்...
இத பாருங்க... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க..... நாம ஒண்ணும் அவங்கள பாக்கறதுக்காக அவ்ளோ தூரம் போகல.... கனடா வரைக்கும் போறோமே, இன்னொரு 550 கிலோமீட்டர் போனா, அப்படியே பையன், மருமகள், பேர பசங்கள பாத்துட்டு வருவோமேன்னு சொல்றேன்.... நல்லா, யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க... நீங்க எது சொன்னாலும் எனக்கு ஓகேதான் என்றாள் கோமதி...
நான் எவ்ளோ சொன்னாலும், நீ கேக்க போறது இல்ல கோமதி... அதுவும் இல்லாம எனக்கு நீ, உனக்கு நான்னு ஆனதுக்கப்புறம், உன்னோட சந்தோஷம்தான் என் சந்தோஷம்... சரி, நீ சொல்ற மாதிரியே ஒரு டூர் போடுவோம், பையன், பொண்ணு, பேர பசங்க எல்லாரையும் பாத்துட்டு வந்துடுவோம்...ஓகேவா என்றார் ராகவன்..... கோமதி முகத்தில் பொங்கிய மகிழ்ச்சியை ரசித்தவாறு.....
பிரமாதம், வெல்டன் என்ற குரலுடன், கை தட்டிக்கொண்டே கோல்டு ஃப்ரேம் போட்ட தன் மூக்கு கண்ணாடியை கழற்றியபடி, மேகா.... வயது 55, அந்த பள்ளியின் பிரின்சிபால்...
மேடையேறி வந்து, மைக் பிடித்து சொன்னார்......
இந்த வருட பள்ளி ஆண்டுவிழாவின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"யில் 8-வது வகுப்பில் படிக்கும் ராகேஷ் மற்றும் ஷீதல் ஆகிய இருவரும் ராகவன் தாத்தா, கோமதி பாட்டியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள்.... அவர்களின் நடிப்பும் படு தத்ரூபமாக இருந்தது.
அவர்களை போலவே உலகில் உள்ள எல்லா தம்பதியரும் ஒற்றுமையுடனும், அன்னியோன்யமாக வாழ்ந்து விட்டால், வாழ்க்கையில் சண்டை, சச்சரவு என்பதற்கான பேச்சே இல்லை, மற்ற பல குடும்ப பிரச்சனைகளுக்கும் வழியே இல்லை என்றார் பிரின்ஸிபால் மேகா.
ஆகவே இந்த வருடத்தின் "சிறந்த இருவர் நடிப்பு போட்டி"க்கான விருதை அவர்களுக்கே வழங்குகிறேன் என்று பிரின்ஸிபால் மேகா சொன்ன போது, கை தட்டலால் அரங்கே அதிர்ந்தது....