Thursday, June 17, 2010

"பன்ச் டயலாக்ஸ் 2010"

வெண் திரையில் அதிர அடிக்கும் இசை...

கையில் இருக்கும் பத்து விரலும் பல வித இசைக்கு ஏற்ப தாளமிட்டு சுழலும் ஒரு நிலை... அது தான் பன்ச் டயலாக்...

தமிழ்நாட்டில் பிறந்த யாரும் பன்ச் டயலாக் என்பதை அறியாமலோ,தெரியாமலோ அல்லது பேசாமலோ இருந்திருக்க வாய்ப்பேயில்லை... ஏனென்றால், பன்ச் டயலாக்கும் தமிழ்நாடும் பிரிக்க முடியாத ஒன்று..

அதை மனதில் வைத்து "பன்ச் டயலாக்ஸ் 2010" என்கிற புதிய நிகழ்ச்சியில் இன்று நாம் பலதரப்பட்ட வி.ஐ.பி.களை சந்தித்து அவர்களின் லேட்டஸ்ட் "பன்ச் டயலாக்ஸ்" என்னவாக இருக்கும் என்று கேட்டோம்... அவர்கள் சொன்னது இங்கே.... கவிஞர்கள் கொஞ்சம் பெருசா கவிதை மாதிரி பன்ச் டயலாக்ஸ் சொன்னது ரசிக்க வைத்தது.....(சிறிது முன்னே, பின்னே இருந்தாலும்) அப்படியே இதோ உங்கள் பார்வைக்கு)..........

கருணாநிதி : "கொடநாடு உல்லாசி"யே..
ஊரெல்லாம் உன்னை ஏசியே...
வருதே பேசியே..

ஜெயலலிதா : வயது எண்பதை கடந்த ஏழை
என்று தன் வயதையும், வளமையையும்
மறைத்து பேசி வரும் ஒரு கோழை,
அது தமிழ்நாட்டை பிடித்த பீடை...

ஜெக‌த்ர‌ட்ச‌க‌ன் : என் ர‌த்த‌த்தில் குறையாத‌ க்ளூகோஸே...

உன்னை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் இங்கே அட்டு பீஸே...
வாழும் வள்ளுவனே... அகில உலக நல்லவனே..
அவனியில் வல்லவன் என்றும் நீ ஒருவனே ....


ரஜினிகாந்த் : சுத்துனா உலகம்...
சும்மா எதாவது சொன்னா கலகம்...
தேவலோக தலைவன் இந்திரன்...
அகில உலகுக்கும் தலைவன் என் “எந்திரன்”...
இது எப்படி இருக்கு!!?? ஹா...ஹா...ஹா...ஹா...

விஜயகாந்த் : ஊத்தற அளவு கம்மி...
விலையோ ரெம்ப அதிகம்...
ரேசன்ல இல்லடா.. பரதேசி...
டாஸ்மாக்ல...ஆங்....
என் விழியே என்றும் சிவப்பு...
அதில் தெரியுதா பாரு நெருப்பு...

கமல்ஹாசன் : நான் விடும் “மன்மத அம்பு”
இது இளைஞர்களுக்கான காதல் விருந்து
இதை வெண்திரையில் வந்து அருந்து
இல்லையேல் பின்னால் நீ வருந்து

விஜய் : நான் சொல்லி அடிச்சா குச்சி..
சொல்லாம அடிச்சு சொக்கா கிழிஞ்சு போச்சு..
வானத்துல பறக்கறதுக்கு நான் புறா இல்ல...
அந்த கடலையே கலக்கற “சுறா”....

(யப்பா... போதும்டா சாமி... இதுக்கே நாடு தாங்கலடா.....)

அஜித் : நான் நெறைய பேஸ் மாட்டேன்...

கொஞ்சமா பேஸ்வேன்...
கொஞ்சமா பேஸ்னா அப்றம் நெற்ய பேஸ்வேன்...
புரியுதா... அது!!!

சிம்பு : போட்டியில யாரு மொதல்ல வராங்கன்றது முக்கியம் இல்ல...
யாரு லாஸ்ட்ல ஃபர்ஸ்டா நான் வரேன்ங்கறது தான் முக்கியம்...
ஏதாவது புரிஞ்சா சரி?

தமிழ் கரடி : அஞ்சும், அஞ்சும் பத்து...
நீ எப்போவும் ஊர சுத்து...
தயிர் கடையும் மத்து...
மாட்டுனா, மனவே என்ன நாலு மாத்து மாத்து...

அழகிரி : அண்ணன் அடிச்சா கலங்கும் மதுரை...
பாய்ந்து ஓடியதே பந்தயத்தில் குதிரை..

பேரரசு : கடையில வாங்குனேன் அவல்பொரி...
அண்ணன் கலக்கி அடிச்சா தீப்பொறி..
சுத்தி அடிச்சா சூறாவளி...
சுத்தாம ஆடினா கதகளி...

தங்கர் பச்சான் : என் பேரு தங்கர் பச்சான்..
நான் தங்க தமிழ் நாட்டின் அமிதாப் பச்சன்...
இதை எல்லாருக்கும் சொல்லி வச்சேன்...
இத கேட்ட எல்லாரையும் மிரள வச்சேன்

பரத் : பழத்த பெசஞ்சா பஞ்சாமிர்தம்...
பார்த்து பயந்தா காண்டாமிருகம்...
அதிர வைப்பான் ஆறுமுகம்...
இனிமே எனக்கு ஏறுமுகம்...

விஷால் : ஒண்ணு, ரெண்டு நம்பர்...
இதுல நானும் ஒரு மெம்பர்...
பிராந்தில கலந்தேன் பெப்பர்...
அத வாந்தி எடுக்காம அடிச்சா சூப்பர்...

விவேக் : என் பேச்சால எல்லாருக்கும் வச்சேன் ஆப்பு
இப்போ அதே ஆப்பை, எனக்கே வச்சுக்கிட்டேனே மாப்பு

வடிவேல் : நானு என்னிக்குமே வாய் சொல்லுல வீரர்....
ஆனாலும், என்னிய பார்த்தா பயலுவ எல்லாருக்கும் டெர்ரர்
என்னிய அதட்டி பாக்குறான் சிங்கமுத்து....
அவனுக்கு போடறேன் நான்
நெத்தியில பத்து...

சந்தானம் : நொங்கு எடுத்து, கிழிஞ்சது டங்குவாரு
தேங்காய்ல இருந்து தொங்குது தேங்கா நாரு
சூப்பர் ஸ்டார் கூட நடிச்சேன் அது ஜோரு
ஓட விட்டு எல்லாரையும் சுளுக்கு எடுக்குறேன் பாரு...

கவுண்டமணி : ஒலகத்துல ஒரே அறிவாளி ஜி.டிநாயுடு
என் பக்கத்துல வராதே... அப்டியே நீ ஓடிடு...

செந்தில் : எனக்கு பேச வராது பஞ்ச் டயலாக்கு
கவுண்டரால நான் ஆனேன்
என்னிக்குமே பேக்கு

வைரமுத்து : பிடறி சிலிர்க்க ராஜநடை போட்ட தமிழ் சிங்கம்....
அது தமிழ்நாடு நமக்கு தந்த வாழ்வியல் அங்கம்
கோபாலபுரத்தின் ஒரு அடையாளம்...
தமிழுக்கும், தமிழர்க்கும் அதுவே கடிவாளம்...

அன்று நிலவில் பாட்டி சுட்டாள் ஒரு வடை
அதை அடைய தமிழனுக்கு இல்லை தடை...

வாலி : துள்ளி நடந்து வரும் தமிழே
தத்தி தாவி வரும் குமிழே
வீர நடை போடும் சிங்கமே
மாசு குறையாத தமிழ் தங்கமே

எழுத நினைத்தேன் உன் வரலாறு
அதுக்கு தமிழே எனக்கு தகராறு

கவிஞர் விஜய் :

இருளிலும் ஒளிரும் குமிழே
பகலிலும் மிளிரும் தமிழே
எங்கெங்கு தேடினும் இனியே
பாரிலும் உமக்கில்லை இணையே