Monday, January 17, 2011
கருப்பு எம்.ஜி.ஆர், வெள்ளை விஜயகாந்த்
Monday, January 10, 2011
வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம்
கவிதை ….. கவிதை! காற்று வாங்க போன போது??? … (அப்படியெல்லாம் காற்று வாங்க கவிதை போகுமா என்ன…. வார்த்தை கிடைக்காம கவிஞர்தான் காத்து வாங்குவாரு… கவிதையின் ஒரு பகுதியில் வார்த்தை அடைத்துக்கொள்ளாமல் காகிதம் கூட வெற்று இடங்களாய் காற்று வாங்கும்)
காற்று வாங்க சென்ற நம் கவிதை, நம்ம சென்னை மாநகர ”டெர்ரர் கரண்ட் கபாலி” கையில் சிக்கிக் கொண்டது. போனால் என்ன, சிக்கிக் கொண்டால் என்ன, எங்கு சென்றாலும் மனதை நெகிழ்த்தி மகிழ்ச்சி தருவது தானே நம் கவிதையின் வேலை, கலக்குவதே என் பணி என்று சொல்லி கவிதை தன் வேலையை தொடங்கி விட்டது.
லவ்வுல நான் ஜிவ்வாயிட்டேன்
லவ்வ ஜிவ்வாக்கி கவுஜ எழுதி
எடுத்துகினு வாய்யா
அப்பாலிக்கா பார்க்கலாம்…. நம்ம லவ்வு
எஸ்ஸா…. நோ - வான்னு
நோவாம என் கையில
சொல்லிருச்சு நம்ம டாவு
மெரிசலாயிட்டேன் நானு
மெர்ஸியே இல்லாத நீனு
ஒன் பேருல மட்டும் கீது மெர்ஸி
அங்க மேயுற பசு பேர் ஜெர்ஸி
இந்தாம்மே… என் இண்டிமேட்டு…
நான் இப்போ ஒன் கிட்ட அப்பீட்டு
லவ்வுல இப்போ லீக்காயிட்டேன்
ஜிவ்வுன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன்
என் லைஃப்ல ஃபர்ஸ்ட்டு
நீதாம்மே லாஸ்ட்டு
நீ இருந்தாதேன் பெஸ்ட்டு
இதான் என் இண்ட்ரெஸ்ட்டு
நீ இல்லாங்காட்டி
லைப்ஃபே வேஸ்ட்டு
குட்சேன் சூப்பரா ஒரு பூஸ்டு....
நீ சரவண பவன் ஃபுல் மீல்ஸ் கணக்கா
வயிறையும் மனசையும் ரொப்புவ
அந்த பில்லு கையில வர்றப்போ
அத்த இந்த மாமன் பையில சொருகுவ
பப்பரப்பேன்னு சொல்லி சொல்லி
இருட்டுல பயமும் காட்டுவ
கொக்கரக்கோன்னு கூவுற சேவலை
கோணி எடுத்து தொரத்துவ.
உங்க நைனா
அவரு
நமக்கு சைனா
ரிலிஜன் சொல்லி நம்மள
பேஜாராக்குறாரு ஃபைனா...
ரீஜெண்டா சொல்றேன்
கடவுளு படைச்சது
ரெண்டே ரெண்டு குரூப்பு தேன்...
ஒண்ணு மேல்
இன்னொன்னு ஃபீமேல்
அதுக்கு மேல
எதுவுமே லேது!
எனக்கோசரம் நீ
உனக்கோசரம் நான்
எனக்கு நீ அல்வா
உனக்கும் நான் அல்லவா
மொள்ளமா வாம்மா கண்ணு
வந்தா நாயர் கடையில துன்னலாம் பன்னு
புள்ள குட்டி பெத்துகிட்டா
ஒறவு எல்லாம் ஒண்ணாயிரும்
ஒண்ணு ரெண்டு வருசத்துல
எல்லாமே நல்லாயிரும்
கரீட்டா அன்னிக்கே சொன்னானே
கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம்....
ஆ….. மாமு!
இது கூட கவிஜை மாதிரி தேன் கீது
இதுக்கு மேல சொல்ல எதுவுமே லேது
இத்த குடுத்து நம்மாள கவுத்திர்றேன்
படிச்சுட்டு மொறச்சா, எஸ்கேப் ஆயிடறேன்...
ஆல் த பெஸ்ட் சொல்லு நைனா
என் லவ்வு சக்சஸ் ஆகட்டும் ஃபைனா…
(லாரன்ஸ் / ஆர்.கோபி)