Monday, December 29, 2008

சில வரி சிறுகதைகள்

எல்லாராலும் கதை எழுதும் சூத்திரத்தை எல்லோருக்கும் கற்று தர இயலாது. நானும் பல இடங்களில், பலவற்றை படித்து, கதை எழுதுவது எப்படி என்று கற்றுக்கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த சிறு கதைகளை உங்கள் பார்வைக்கு அரங்கேற்றுகிறேன்.

இது ஒன்றும் உலக சரித்திரத்தை மாற்றப்போகும் கதைகளோ அல்லது புவியின் பூகோளத்தை புரட்டிப்போடும் கதைகளோ அல்ல. என் மனதில் தோன்றிய, சின்னஞ்சிறு கதைகள். உங்களுக்கு இந்த கதைகளில் ஏதாவது பிடித்தால், பின்னூட்டத்தில் எனக்கு தெரியப்படுத்துங்கள். இதை ஆங்கிலத்தில், பிரபலமாக ஒன் லைனர் என்று சொல்வார்கள் ...... எழுத்தாளர் சுஜாதா கூட சிவாஜி படத்தின் கதையை கேட்ட போது : அமெரிக்காவில் இருந்து வரும் கதையின் நாயகன், முதல் பாதியில் விழுகிறான், இரண்டாம் பாதியில் எழுகிறான் என்று சொல்லி இருப்பார் ...... அப்படியாகத்தான் இதுவும் :

ஒன்று :

ஒரு குண்டான பெண் / யுவதி, தன் உடல் எடையை குறைத்து, திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முயற்சிக்கும் கதை - சதை கொறயும்போல்.

இரண்டு :

படத்தின் கதாநாயகன், தன் பெற்றோர்களை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க அண்ணன், தம்பி என்று மூன்று வேடம் இட்டு ஜப்பான் எக்ஸ்போவில் அவர்களை கண்டு பிடிக்கும் கதை - ஜப்பானில் ஜானகிராமன்

மூன்று :

கேடி பக்கிரி தன் திருட்டு தொழிலை விட்டு, நல்லவனாக மாறி, பிழைக்க பொட்டிகடை வைக்கும் கதை - பக்கிரியின் பேக்கரி

நான்கு :

காட்டில் மறைந்து வாழ்க்கை நடத்தி வந்த கேடி, மனம் திருந்தி வந்து நாட்டுக்குள் நல்லவனாக வாழ முயற்சிக்கும் கதை - காட்டாள் கனகராஜ்

ஐந்து :

ஜெயிலில் இருந்து திரும்பிய அருமைநாயகம், திருந்தி வாழ நினைத்து, சிறுதொழில் ஆரம்பித்த கதை - அருமைநாயகம் ஆப்பக்கடை.

ஆறு :

சிறு வயதில் பிரிந்த இரட்டை குழந்தைகள், எதிர்பாரா விதமாக, நேருக்கு நேர் சந்தித்த கதை - டபுள் டிராக் டகால்டி.

ஏழு :

யாருக்கும், எதுவும், எப்போவும் புரியாத, கயோஸ் தியரி உள்ளிட்ட இதர பல டகால்டிகள் நிறைந்த மர்ம விஞ்ஞான த்ரில்லர் - தசாவதாரம்

எட்டு :

ஆத்திகம் பேசும் அன்பருக்கெல்லாம், நாத்திகம் பேசும் அருமைநாயகம் அண்ணன் ஆன கதை - ஆழ்வார்பேட்டை ஆண்டவர்

ஒன்பது :

குரும்பூர் எக்ஷிபிஷனில் தொலைந்து போன குப்புசாமி, பின்னாளில் பெயர் மாற்றி, பெரம்பூரில் பெரிய தொழில் அதிபர் ஆன கதை - குரும்பூர் குப்புசாமியும், பெரம்பூர் பெரியசாமியும்.

பத்து :

குரங்காட்டி ஒருவன், ஒரு பெண் குழந்தையை, தெருவின் கண்டெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த கதை - குரங்கு குசலா.

பதினொன்று :

விஞ்ஞானமும், ஐக்ஞானமும், மெயக்ஞானமும், மருத்துவமும், இதர பல டகால்டிகளும் இணைந்து கை கோர்த்து, நம்மை மண்டை காய வைத்த கதை - தசாவதாரம்

பன்னிரெண்டு :

மூணாம்பு மட்டுமே படித்து, திண்ணையில் கால் ஆட்டி, வெட்டியாக பொழுதை கழித்த பூவை புண்ணாக்குசாமி (தங்கர் பச்சான்), பட்டணம் வந்து பெயர் மாற்றி, பெரிய டகால்டி மருத்துவர் ஆன கதை - மருத்துவர் மன்னார்சாமி பி.ஏ.பி.எல்.

பதிமூன்று :

தன்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த தன் தொகுதி மக்களே, தன்னை ஒரு நாள் நைய புடைத்ததை, படத்தின் நாயகன் உருக்கமாக விவரிக்கும், கண்ணீர் காவியம் - கரடி கரயும்போல்

பதினான்கு :

சாமியார் ஒருவர், திடீரென சாப்பிட வந்த போது, அவருக்காக, அவசரம், அவசரமாக, மாமி சமையல் செய்த கதை - திகம்பர சாமியாரும், திடீர் ரசமும்.

பதினைந்து :

நாட்டுப்புறத்தில் எல்லோரையும், ஏமாற்றி தொழில் செய்து வந்த டுபான் வைத்தியர் டங்குவார் டகால்டிசாமி, ஒரு நாள், கையும், களவுமாக, ஊர் மக்களிடம் பிடிபட்ட கதை - வெள்ளையாய் ஒரு பச்சிலை

பதினாறு :

கரடி ராஜேந்தரை ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து, ஏமாற்றி, ஒரு கிழவியை கல்யாணம் செய்து வைத்தவுடன், கரடி கண் கலங்கி, அழுது கொண்டே சொன்ன கதை - வெள்ளந்தி வீராசாமியும், ஒச்சம்மா கிழவியும்

பதினேழு :

சரக்கு அடிப்பதையே தொழிலாக கொண்டவன், ஊரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டவுடன், சிறிதும் மனம் கலங்காமல், தானே சுயமாக, சரக்கு காய்ச்சி, அடிக்க ஆரம்பித்த கதை - சல்பேட்டா சபரி

பதினெட்டு :

கரடி ராஜேந்தர், சிறிது உடல் இளைத்து, தாடி வளர்த்து, ஒரு சூப்பர் கேரக்டர் பண்ண முயற்சித்த கதை - ஒல்லி கரடியும், ஒன்றரை அடி நீள தாடியும்

பத்தொன்பது :

எலிமெண்டரி ஸ்கூல் வாசலில், தகரவாய் தங்கர் பச்சான், பொட்டி கடை வைத்து, ஸ்கூல் பசங்களை ஏமாத்தி, சிலேட்டு வித்த கதை - மூன்று ரூபாய் ஸ்லேட்டு

இருபது :

உலகில் உள்ள அனைத்து டகால்டிகளையும், தன் ஒரே படத்தில் கொண்டு வர அகில உலக தொல்லை நாயகன் முயற்சிக்கும் கதை - மர்மயோகி

5 comments:

மடல்காரன்_MadalKaran said...

கதை எல்லாமே சூப்பர்..! கோடம்பாக்க கதவுகள் உங்களுக்கு திறந்து இருக்கு.. இப்ப இருக்கற சீரியலுக்கு பதில் இது போல சுருக் நருக் கதைகள் தான் தேவை.

Unknown said...

நண்பா நல்லா இருக்கு.ஆனா.....?

ஒரே டைப்பா இருக்கே? வித விதமா
கொடுங்க.stereotypeஆகாம இருக்கும்.அலுப்புத் தட்டாம படிக்கலாம்.

R.Gopi said...

//கே.ரவிஷங்கர் said...

நண்பா நல்லா இருக்கு.ஆனா.....?

ஒரே டைப்பா இருக்கே? வித விதமா
கொடுங்க.stereotypeஆகாம இருக்கும்.அலுப்புத் தட்டாம படிக்கலாம். //

************

வருகைக்கு நன்றி மடல்காரன் மற்றும் ரவிசங்கர்

இருவரின் இருவேறு கருத்துக்களும் என் எழுத்தை மேலும் உற்சாகப்படுத்தும்.

வரும் காலங்களில், ரவிஷங்கரின் கருத்து எடுத்துக்கொள்ளப்படும்.

நண்பர்களே, தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்தக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

rajini rasikan said...

உலகில் உள்ள அனைத்து டகால்டிகளையும், தன் ஒரே படத்தில் கொண்டு வர அகில உலக தொல்லை நாயகன் முயற்சிக்கும் கதை - மர்மயோகி
//////////////


ennda onakku romba aricha sovathula poi sorinchukko....

P.P.S.Pandian said...

ஜோக்கிரி அண்ணா எப்பூடி இப்டி . P.Sermuga Pandian