Tuesday, February 17, 2009

அணில் சிலந்தி



ஏதாவது வேலை கிடைக்குமா, பொழப்பு ஓடுமா, இல்ல இன்னிக்கும் பட்டினியா?? என்று யோசித்தவாறே வாசலுக்கு வந்து செருப்பு போடும்போது, விட்டத்தில் ஒரு பெரிய சிலந்தியை கண்டான் அஷோக்.

இது என்ன ராட்சஷ உருவத்தில் ஒரு சிலந்தி. ஆச்சரியமாய் அதை பார்த்துக்கொண்டே, செருப்பை அணிந்து கொண்டு வீடு விட்டு வெளியேறினான்.

அதே நேரம், அந்த சிலந்தியும், விட்டத்தில் இருந்து கீழிறங்கி, வீட்டை கடந்து, பின்புறம் சென்றடைந்தது. தத்தி தத்தி நடந்து, வீட்டின் பின்புறமுள்ள அடர்ந்த மரங்களுள் தஞ்சம் புகுந்தது.

வேலை தேடி போன அஷோக், வெறுங்கையோடு திரும்பி வந்து, வீட்டின் பின்புறம் சென்று, கை கால் சுத்தம் செய்யப்போனான். பறவைகளின் இனிய நாதம், வண்டுகளின் ரீங்காரம் போன்றவற்றை அனுபவித்தவாறே கைகால்களை சுத்தம் செய்தவன், வேகமாக ஏதோ நகருவது போன்ற சத்தம் கேட்டு, மேலே மரக்கிளையை பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி, அவன் ரத்தத்தை உறையச்செய்வதாய் இருந்தது.

காலையில் அவன் வீட்டினுள் பார்த்த அந்த ராட்சஷ சிலந்தி, ஒரு மர-அணிலை கெட்டியாக பிடித்து, ரத்தத்தை உறிஞ்ச முயற்சித்து கொண்டிருந்தது. அந்த அணில் பரிதாபமாக கதறிக்கொண்டிருந்தது. சிலந்தியின் எட்டுக்கால்களும், அந்த அணிலை பிடித்து வளைத்துகொண்டிருந்தது.

இதை காண சகிக்காத, அஷோக் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து அந்த மரத்தின் மீது வீசி எறிந்தான். சிலந்தி, அந்த அணிலின் பிடியை விடாது, அந்த கல்லின் அடியிலிருந்து மரத்தில் பதுங்கி கொண்டது. பெரிய குச்சி அல்லது கம்பு ஏதாவது கிடைத்தால், அந்த அணிலை காப்பாற்றலாம் என்று நினைத்து, குச்சியை தேடி வீட்டினுள் சென்றான்.

சிலந்தி அந்த அணிலை இழுத்துக்கொண்டு, மரத்தின் மீது மிக மிக வேகமாய் ஏறியது.

பெரிய கம்புடன் வந்த அஷோக், சிலந்தியையும், அணிலையும், சிறிது தேடினான். கிடைக்காமல் போகவே, சோர்வாக வீட்டினுள் சென்றான். காலையில் சென்ற வேலையும் கிடைக்கவில்லை. ஆபத்தில் மாட்டி இருந்த ஒரு அணிலின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை, என்னடா வாழ்க்கை என்று சலித்துக்கொண்டே, உறங்க சென்றான்.

அப்போது, விட்டத்தில் ஏற்பட்ட சத்தம், அவன் உறக்கத்தை கலைத்தது. விட்டத்தில் இருந்த, ஒரு ஓட்டையின் வழியே, அணிலின் வால் தென்பட்டது.
அஷோக், இப்போது உறக்கம் கலைந்து, சுவாரஸ்யமானான். அணில் வெளியே வந்து அதை பார்த்துவிட்டு தூங்கப்போகலாம் என்று. எப்படி இது அந்த சிலந்தியிடம் இருந்து தப்பித்தது? இல்லை, இது வேறு அணிலா?? பல வித யோசனைகளில் இருந்தவனை, ஓட்டையில் இருந்து வந்த அந்த புதுவித மிருகம் பயத்தில் ஆழ்த்தியது.

திகைப்பின் உச்சிக்கே போய், அஷோக் வாய்விட்டு அலறினான். அவன் வாயில் இருந்து உளறல் தொடங்கியது. ...........

அது ........ அது .......... சிலந்தி ........ இல்ல ....... அணில் ....... இல்ல ...... சிலந்தி ... இல்ல அணில் ..... ஆஆஆ ........ஆஆஆ......... அணில் சிலந்தி ...... அணில் சிலந்தி .... அணில் சிலந்தி .........ஒரு புதிய மிருகம்...... வேகமாக கூக்குரலிட்டு ....... தடாலென கீழே மயங்கி விழுந்தான்.

Monday, February 16, 2009

ஒற்றை கண் ஓஜா


விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து ஜாக் தூக்கி எறியப்பட்டான். எவ்வளவு நேரம் அப்படியே தூங்கினானோ தெரியவில்லை.

திடீரென கண்விழித்து பார்க்க முயற்சி செய்த போது, கண்ணின் இமைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி உறவாடியதில், மிகுந்த சிரமத்திற்கிடையில் கண் விழித்த போது, தான் ஒரு அடர்ந்த காட்டில் விழுந்திருப்பது தெளிவாகியது.
இரண்டு நாட்கள் முன் நடந்தவைகளை ஒருமுறை சற்றே ரீவைண்ட் செய்து பார்த்த போது, தான் வந்து கொண்டிருந்த விமானம், விபத்துக்குள்ளானது நினைவுக்கு வந்தது.
தன்னுடன் பயணம் செய்த மற்ற 300 பேரின் கதி என்ன என்று கவலைப்பட்டான். நான் எப்படி பிழைத்தேன் என்றே தெரியவில்லையே??
மிகுந்த களைப்புடன், தடுமாறி எழுந்து, தன்னை சுற்றி நோக்கினான். எங்கும் மையிருட்டு. அந்த கும்மிருட்டில், சிறிது நேரம் பார்வையை செலுத்தியதில், அந்த இருட்டு கண்ணுக்கு பழக்கப்பட்டு, சற்று தூரத்தில், யாரோ விழுந்து கிடந்தது தெரிந்தது. அந்த உருவம் ஈனஸ்வரத்தில் முனகுவதும் கேட்டது. மெதுவாக முன்னேறி, அந்த உருவத்தை அடைந்தான்.
அங்கே, தன்னுடன் பயணம் செய்த ஒரு பெண், அடிபட்டு, வலியில் முனகிக்கொண்டிருந்தாள். மெதுவே அவளை எழுப்பி, அருகில் சிதறி கிடந்த ஒரு தண்ணீர் பாட்டிலில் இருந்து சிறிது தண்ணீர் அவள் வாயில் புகட்டினான். அவள் சிரமமாக கண்விழித்து அவனை பார்த்து, வீலென அலறினாள், மயங்கி சரிந்தாள்.
மயங்கியவளை, மெதுவாக எழுப்பி, நடந்தவைகளை நினைவுபடுத்தி, தன்னுடன் அழைத்து சென்றான். எங்கெங்கு காணினும் இருளடா!!! வெளிச்சத்தை தேடி இருவரும் நடந்து சென்றனர்.
அப்போது ............
திடீரென, ஒரு உருவம் அவர்கள்முன் குதித்தது. அப்போது, இருவரும் திகிலடைந்து அலறிய சத்தம், அந்த அடர்ந்த காடெங்கும் எதிரொலித்தது.

மொசமொசவென உடல் முழுதும் முடியால் மூடிய ஒரு சிறிய உருவம். கன்னங்கரேலென இருந்தது. கழுத்து என்று ஒன்று தனியாக இல்லை. அங்கும் இங்கும் தாவி, அவர்கள் இருவரின் மேலும் அமர முற்பட்டது.
இருவரும் சாமர்த்தியமாக விலகி, விலகி அதற்கு ஆட்டம் காட்டினர். அவர்களின் ஒரே குறிக்கோள் அதை களைப்படைய செய்வதுதான். மேலும் அதை எப்படி சமாளிப்பது என்ற கவலையும், மனதில் ஓடி கொண்டிருந்தது.
இரண்டு கைகளை அகல விரித்து, அவர்களை கன்னத்தில் அறைய முற்பட்டது. அதன் கைகளில் 4 தடித்த விரல்கள் இருந்தன. அந்த விரல்கள் கால்விரல்களை போல பெரியதாக இருந்தன.
முகத்தின் முக்கால் பாகம் இருந்த அந்த புருவமில்லாத ஒற்றை கண்ணால் உருட்டி உருட்டி பார்த்தது.
பக்கத்தில் இருந்த ஒரு கட்டையை எடுத்து ஜாக் அந்த உருவத்தை நோக்கி வீசினான். அது சரியாக அதன் முகத்தில் பட்டு, ரத்தம் கொப்பளித்து வழிந்தது. அது கரும் பச்சை ரத்தம்.
வலி தாங்காமல் அந்த உருவம் ஓலமிட்டது. அந்த உருவத்தின் மரண ஓலம் கேட்டு, தூரத்தில் கும்பல், கும்பலான ஒரு மிருக கூட்டம் அவர்களை நோக்கி ஓடி வந்தது. பயத்தில் இருவரும் மயங்கி சரிந்தனர்.

Tuesday, February 10, 2009

யோதா-3756478 ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக)


(இது ஒரு விஞ்ஞான சிறுகதை அல்ல)

விஜேஷ் - இன்றைய உலகம் எவ்வளவு விசித்திரங்களை உள்ளடக்கி உள்ளது. நாளை அது என்னென்ன மாற்றங்களை காணப்போகிறது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் விஞ்ஞானி.

பேஜோ - அவன் ஆராய்ச்சி கூடத்தில் புதிதாக சேர்ந்துள்ள உதவியாளரிணி (இது தமிழில் புது வார்த்தையோ என்னவோ?).

பேஜோ - இது என்ன உன் பெயர் இவ்வளவு விசித்திரமாக இருக்கிறது என்று கேட்டான் விஜேஷ். இதற்கு முன் இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லையே?

ஏன், உங்கள் பெயர் கூடத்தான் அசாதாரணமாக இருக்கிறது. விஜேஷ், விஜேஷ்....இதுபோல் இரண்டு முறை என்ன, இன்று முழுவதும் கூப்பிட்டாலும், இதில் ஏதோ ஒரு தனி சுகம் உள்ளது என்றாள் பேஜோ.

பேஜோ இதுதான் காதல் என்பதா என்றான் விஜேஷ்.

விஜேஷ், உங்களை பார்த்தாலே ஏதோ ஒரு தனித்துவம் தெரிகிறது. நான் இதுவரை பார்த்த மனிதர்கள் அனைவரிலும் நீங்கள் வித்தியாசமாய் தெரிகிறீர்கள். உங்கள் கண்கள் என்னை எவ்வளவு வசீகரித்து விட்டது, உங்களின் ஒரு பார்வையில் இந்த உலகையே அடிமைப்படுத்தி விடுவது போல, ஆனால் என்ன, காதை மறைக்கும் இந்த கூந்தலை கொஞ்சம் கத்தரித்து, சிறிது உயரமாக காண்பிக்கும் ஷூ அணிந்தால், ரங்கியூர் ராஜகுமாரன் இப்போது பிறந்து வந்தது போல இருப்பீர்கள் என்றாள் பேஜோ.

பேஜோ, கொஞ்சம் அருகில் வாயேன் என்றான் விஜேஷ்.

அருகில் வந்த பேஜோ, ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். கிறக்கமாக கண்மூடி அவனை நெருங்கியவளை, ஒரு ஆழ முத்தம் இட்டான். உயிரே அவளை விட்டு பிரிந்தது போன்ற ஒரு நிலையை அடைந்தாள்.

அறையின் கதவுகள் தானாக சாத்தப்பட்டது போல் உணர்ந்தாள். கிர்ர் என்ற ஒரு ஓசை காதில் ரீங்காரம் இட்டது. தன்னிலை மறந்து, ஒரு மயக்க நிலை அடைந்ததை உணர்ந்தாள். இருப்பினும், கண்கள் முழுதும் மூடாமல், சிறிது மலர்ந்திருந்தது. அங்கே அவள் கண்ட காட்சியில், இருதயம் திடுக்கிட்டு, சிறிது நேரம் துடிக்க மறந்தது. கண்மூடி மயங்கினாள், இதுதான் அவள் பூமியில் கடைசியாக காணப்போகும் காட்சி என்பதை அறியாமலேயே. (வலது கை தன்னிச்சையாக அவளின் கோட் பாக்கெட்டில் இருந்த லேசர் துப்பாக்கியை தொட்டுப்பார்த்தது......... மயக்கமாகுமுன், இடது கை அவளின் வலது காதின் கீழ் பகுதியில் உள்ள ஒரு சுவிட்சை தட்டி விட்டது, நம் பேஜோ கிரகத்திற்கு இந்நேரம் சிக்னல் கிடைத்திருக்குமா?).

அங்கே .............

விஜேஷ், தன் தலையை தனியாக கழட்டினான். இப்போது அவன் முகம் மிகவும் விசித்திரமாக இருந்தது (முன்பு ஒரு முறை விஜேஷை பார்த்து இப்படி சொன்னது ஞாபகம் வந்தது). கண்கள் விடைத்து, வெளியே தெறித்து விழுந்து விடுவது போல இருந்தது. காதுகள் இரண்டு புறமும் நீட்டி கொண்டிருந்தது. அதுபோல் ஒரு வண்ணத்தை இப்போது தான் ஒரு முழு உருவத்தில் பார்ப்பது போல், பச்சையாக இருந்தது.

தன் கைகளால், உடல் முழுக்க உருவி விட்டான். மனித தோல் மறைந்து போய், உடலே ஒரு முதலை தோலால் போர்த்தியது போன்று இருந்தது.

கைகளிலும், கால்களிலும் மூன்று விரல்கள் மட்டுமே இருந்தது. இப்போது தன்மேல் ஒரு ஆரஞ்சு நிற அங்கியை அணிந்தான், ஒரு கைத்தடி எடுத்து கொண்டான். அவன் நடந்த போது, அந்த அறையே அதிர்ந்தது. குள்ளமான அவன் வாத்து நடை போட்டான்.

கையில் இருந்த ஒரு சின்ன டிரான்சிச்டரில், சிகப்பும், பச்சையுமான விளக்குகள் இருபுறங்களிலும் எரிந்து கொண்டிருந்தது. ஒரு கரகரப்பிற்கு பிறகு ஏதோ புரியாத மொழியில் சத்தங்கள் வர, இவனும் ஏதோ அதே மொழியில் சில கரகர வார்த்தைகளை பதிலாய் தந்து விட்டு, அவள் படுத்து இருக்கும் திசையை நோக்கினான்.

உம்ம்ம்...... என் ஒரு முத்தம், கட்டாயமாக உன்னை, ஒரு நான்கு மணி நேரமாவது மயக்கத்தில் ஆழ்த்தி இருக்கும், இல்லையா?? என்றவாறு அவளை நோக்கி அடி எடுத்து வந்தான்.

என் தேவதையே, நீ மறுபடியும் கண்விழித்து எழுந்திருக்கும் போது எங்கள் யோதா கிரகத்தின், அடிமை சாசன பட்டை கட்டிக்கொண்டு, ஏதோ ஒரு யோதா எண்ணை வாங்கிக்கொண்டு, என் அந்தப்புரத்து ராணியாக இருக்கபோகிறாய். ஆனாலும், இந்த முறை என் பூமி வருகை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என் அதிர்ஷ்டம். உன்னை போன்ற ஒரு அழகு தேவதை கிடைக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றான் விஜேஷ் என்கிற யோதா-3756478 எண்ணை தாங்கி கொண்டிருக்கும் யோதா கிரகத்துவாசி.

வெளியே காற்று சுழன்று அடித்தது. விஜேஷ் அவளை, தோளில் தூக்கிக்கொண்டு மொட்டைமாடியை அடைந்தான். அங்கே ஒரு உருண்டையான ஒரு விண்கலம் யோதா கிரகத்தில் இருந்து மாடியில் வந்திறங்கியது.

அதே நேரம் பேஜோ கிரகத்தின் தட்டையான ஒரு விண்கலம் அதே மாடியில் தரை இறங்கியது.

Sunday, February 8, 2009

மூன்றாவது கை


எப்போது ஒரு மனிதனுக்கு 3-வது கை முளைக்கிறதோ, அப்போது இந்த உலகம் அழிவை நோக்கி செல்வதாக / அழிவை நெருங்குவதாக கொள்ளலாம்.

ச்சே. இது என்ன, இப்படி யாரை பயமுறுத்த இந்த கட்டுரை. படித்து கொண்டிருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தாங்கிய அந்த புத்தகத்தை தூக்கி எறிந்தான். பரபரப்புக்காக ஏதாவது எழுத வேண்டியது. படிப்பவர்கள் பயந்து சாகட்டும் என்று தானே. இது என்ன விபரீதம்.

தன்னை தானே நொந்து, மெதுவாக எழுந்து, நடந்து சென்று, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து, ரத்த சிவப்பான ஒரு ஆப்பிளை எடுத்தான். இதை அழுத்தி பிழிந்தால், தோலில் இருப்பது போலவே ஒரு கிளாஸ் ரத்த சாறு வருமா??? ச்சே, என்ன விபரீத யோசனை / நினைப்பு இது. இப்போது படித்தது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து படித்து, எனக்கும் இது போன்ற யோசனைகள் வருகின்றன. சலிப்புடன், குளிர்சாதனப்பெட்டியின் கதவை அறைந்து சாத்தியதில், ஆப்பிள் கை நழுவி கீழே விழப்போனது.

அப்போது அவன் முதுகில் இருந்து 3-வது கை ஒன்று அந்த ஆப்பிளை எட்டிப்பிடித்தது

எனது கிவ்வாய் கிரக அனுபவம்:


நான் ஒரு ஆத்மாவை கண்டேன். அது பரமாத்மாவும் இல்லை, ஜீவாத்மாவும் இல்லை. அது நல்லதா, கெட்டதா என்று கதை முடிவில் விளக்கமுண்டு.
அதற்கு (ஆத்மா) தலை என்று ஒன்று தனியாக இருந்ததா என்று சொல்லத்தெரியாத அளவில் இருந்தது என்று சொல்லும்படி இருந்தது. நான்கு வலுவான கைகள் (???).

அது என்னிடம் கடவுளை பார்க்க ஆசையா என்று கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஆம் என்றேன்.

மேலே பார் என்றது, பார்த்தேன்.வானம் என்றேன்

கீழே பார் என்றது பார்த்தேன். பூமி / நிலம் என்றேன்.

உன்னை பார்க்கிறாயா என்றது. அதற்கும் ஆம் என்றேன். தன் பாக்கெட்டில் கை விட்டு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை நீட்டியது. (யாரிடம் இருந்து அடித்ததோ??).

என் மெல்லிய நகைப்பை கண்டு சிறிது கோபம் கொண்டது போல் முகத்தை வைத்துக்கொண்டது.ஏற்கனவே அழகான அந்த முகம், மேலும் அழகாரமாகியது (அழகிய விகாரம் - இதன் கலவை)

பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கிடைக்குமா?? தன் கெஞ்சும் கரகர குரலில் கேட்டது.

நான் கேட்டேன் டீ, பிஸ்கட் சாப்பிடலாமா என்று!!

சொல்லி முடிக்கக்கூட இல்லை. அது பளீரென்று என்னை ஒரு அறை விட்டதில், அதன் கூர் நகம் முகத்தில் கிழித்து, ரத்தம் வழிந்தது. உடனே, தன் நீண்ட நாக்கை வைத்து, என் கன்னத்தில் வழியும் ரத்தத்தை நக்கியது. கர்ண கொடூர குரலில் சொல்லியது, எங்கள் கிவ்வாய் கிரகத்தில் நாங்கள் விரும்பி சாப்பிடுவது, மனிதர்களின் ரத்தத்தைத்தான், அதுவும் மூணு வேளை கிடைத்தால், தன்யனாவேன் என்றது (இவ்வளவு தூய தமிழ் யாரிடம் பயின்றிருக்கும்??).

வீல் என்று அலறி கண்விழித்தேன். மணி காலை ஆறு.

Thursday, February 5, 2009

ஜல்லிக்கட்டு - உலக நாயகன் ஜெ.கே.ரித்தீஷின் புது ஜல்லி


ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து சுப்ரீம் ஸ்டார், உலக நாயகன் ஜெ.கே.ரித்தீஷ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இவர் தமிழக வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவராக உள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு 1200 கிராமங்களில் நடைபெறுகிறது. 67 ஆயிரம் பேருக்கு மேல் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த வருடம் 200-கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வீர விளையாட்டுக்கு தடை விதிப்பதை அனுமதிக்க முடியாது.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுக்கு ஒரு சான்று. இதை நடத்தியே தீருவோம். இதை நம்பி பல குடும்பங்கள் உள்ளது என்றும், இந்த சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளதாகவும் ஜெ.கே.ரித்தீஷ் கூறினார்.

பின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஜெ.கே.ரித்தீஷ் பண உதவி அளித்தார்.

இருந்தா அள்ளிக்கொடு, இல்லேன்னா சொல்லிக்கொடு

Wednesday, February 4, 2009

இன்றைய மெகா காமெடி


டன்மான டமிலன் கேப்டன் விஜயகாந்த் :

எல்லாரும் தோள்ல போட்டுட்டு போறாங்களேன்னு, இந்த பொட்டி ஒண்ணு வாங்கிட்டேன். இது என்னன்னே தெரியல.
டி.வி.யான்னு பாத்தா, இல்ல, (ஏன்னா இப்போ மானாட மயிலாட வர்ற நேரம்), எந்த சேனலும் வரல. அதனால டி.வி இல்ல.

சரி, ரேடியோவா இருந்தா ஏதாவது தமிழ் செய்தி கேக்கலாம்னு பாத்தா, ரேடியோவும் இல்ல.

அப்போ, இது என்ன பொட்டின்னே தெரியலியே............ பணம் வேற போட்டு வாங்கிட்டோம். நமக்கே ஒன்னும் தெரியல. அதனால நம்ம பசங்களுக்கும் ஒதவாது. என்ன பண்றது ???
கேப்டனின் செல்ல வளர்ப்பு பிராணி :
டேய் டகால்டி, இது என்னன்னு தெரியாமையே வாங்கிட்ட சரி. யார் கிட்டயாவது கேட்டியா, இது என்னன்னு. நீ கேக்க மாட்ட. ஏன்னா, நீ டன்மான டமிலன். கெளரவம் கொறஞ்சிடும்.......

சரி சரி, நானே சொல்றேன். இது என்னன்னு. இது பேருதாண்டா லாப்டாப். இப்போ சொன்னத நியாபகத்துல வச்சுப்பியா, இல்ல டாஸ்மாக் அடிச்சுட்டு மறந்துடுவியா?? கெரகம்டா சபரி நீ ! ஐயோ ஐயோ .................