ஏதாவது வேலை கிடைக்குமா, பொழப்பு ஓடுமா, இல்ல இன்னிக்கும் பட்டினியா?? என்று யோசித்தவாறே வாசலுக்கு வந்து செருப்பு போடும்போது, விட்டத்தில் ஒரு பெரிய சிலந்தியை கண்டான் அஷோக்.
இது என்ன ராட்சஷ உருவத்தில் ஒரு சிலந்தி. ஆச்சரியமாய் அதை பார்த்துக்கொண்டே, செருப்பை அணிந்து கொண்டு வீடு விட்டு வெளியேறினான்.
அதே நேரம், அந்த சிலந்தியும், விட்டத்தில் இருந்து கீழிறங்கி, வீட்டை கடந்து, பின்புறம் சென்றடைந்தது. தத்தி தத்தி நடந்து, வீட்டின் பின்புறமுள்ள அடர்ந்த மரங்களுள் தஞ்சம் புகுந்தது.
வேலை தேடி போன அஷோக், வெறுங்கையோடு திரும்பி வந்து, வீட்டின் பின்புறம் சென்று, கை கால் சுத்தம் செய்யப்போனான். பறவைகளின் இனிய நாதம், வண்டுகளின் ரீங்காரம் போன்றவற்றை அனுபவித்தவாறே கைகால்களை சுத்தம் செய்தவன், வேகமாக ஏதோ நகருவது போன்ற சத்தம் கேட்டு, மேலே மரக்கிளையை பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி, அவன் ரத்தத்தை உறையச்செய்வதாய் இருந்தது.
காலையில் அவன் வீட்டினுள் பார்த்த அந்த ராட்சஷ சிலந்தி, ஒரு மர-அணிலை கெட்டியாக பிடித்து, ரத்தத்தை உறிஞ்ச முயற்சித்து கொண்டிருந்தது. அந்த அணில் பரிதாபமாக கதறிக்கொண்டிருந்தது. சிலந்தியின் எட்டுக்கால்களும், அந்த அணிலை பிடித்து வளைத்துகொண்டிருந்தது.
இதை காண சகிக்காத, அஷோக் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து அந்த மரத்தின் மீது வீசி எறிந்தான். சிலந்தி, அந்த அணிலின் பிடியை விடாது, அந்த கல்லின் அடியிலிருந்து மரத்தில் பதுங்கி கொண்டது. பெரிய குச்சி அல்லது கம்பு ஏதாவது கிடைத்தால், அந்த அணிலை காப்பாற்றலாம் என்று நினைத்து, குச்சியை தேடி வீட்டினுள் சென்றான்.
சிலந்தி அந்த அணிலை இழுத்துக்கொண்டு, மரத்தின் மீது மிக மிக வேகமாய் ஏறியது.
பெரிய கம்புடன் வந்த அஷோக், சிலந்தியையும், அணிலையும், சிறிது தேடினான். கிடைக்காமல் போகவே, சோர்வாக வீட்டினுள் சென்றான். காலையில் சென்ற வேலையும் கிடைக்கவில்லை. ஆபத்தில் மாட்டி இருந்த ஒரு அணிலின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை, என்னடா வாழ்க்கை என்று சலித்துக்கொண்டே, உறங்க சென்றான்.
அப்போது, விட்டத்தில் ஏற்பட்ட சத்தம், அவன் உறக்கத்தை கலைத்தது. விட்டத்தில் இருந்த, ஒரு ஓட்டையின் வழியே, அணிலின் வால் தென்பட்டது.
அஷோக், இப்போது உறக்கம் கலைந்து, சுவாரஸ்யமானான். அணில் வெளியே வந்து அதை பார்த்துவிட்டு தூங்கப்போகலாம் என்று. எப்படி இது அந்த சிலந்தியிடம் இருந்து தப்பித்தது? இல்லை, இது வேறு அணிலா?? பல வித யோசனைகளில் இருந்தவனை, ஓட்டையில் இருந்து வந்த அந்த புதுவித மிருகம் பயத்தில் ஆழ்த்தியது.
அஷோக், இப்போது உறக்கம் கலைந்து, சுவாரஸ்யமானான். அணில் வெளியே வந்து அதை பார்த்துவிட்டு தூங்கப்போகலாம் என்று. எப்படி இது அந்த சிலந்தியிடம் இருந்து தப்பித்தது? இல்லை, இது வேறு அணிலா?? பல வித யோசனைகளில் இருந்தவனை, ஓட்டையில் இருந்து வந்த அந்த புதுவித மிருகம் பயத்தில் ஆழ்த்தியது.
திகைப்பின் உச்சிக்கே போய், அஷோக் வாய்விட்டு அலறினான். அவன் வாயில் இருந்து உளறல் தொடங்கியது. ...........
அது ........ அது .......... சிலந்தி ........ இல்ல ....... அணில் ....... இல்ல ...... சிலந்தி ... இல்ல அணில் ..... ஆஆஆ ........ஆஆஆ......... அணில் சிலந்தி ...... அணில் சிலந்தி .... அணில் சிலந்தி .........ஒரு புதிய மிருகம்...... வேகமாக கூக்குரலிட்டு ....... தடாலென கீழே மயங்கி விழுந்தான்.
1 comment:
இது.... கதை..... திகில் ........ இல்லை .......... திகில் கதை ...........
திகில் கதை சக்ரவர்த்தி , ஏன் இந்த கொலை வெறி.
கதை பயங்கரம்னா, படம் அதை விட திகிலா இருக்கு.
எங்க எல்லார் துக்கத்தையும் கெடுக்க எதாவது பயங்கர திட்டமா.
சும்மா சொல்ல கூடாது. திகில் கதை சூப்பர்.
Post a Comment