Monday, April 6, 2009

"தமிழ் பேரரசு" - மன்சூர் அலி கான் காமெடி கிச்சு கிச்சு கட்சி


மன்சூர் அலி கான்.

"கேப்டன்" விஜயகாந்த் அவர்களால் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். பின் ஏராளமான படங்களில் வில்லனாகவே நடித்தவர்.

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டார் என்று அவர் மீது ஒரு வழக்கு இருந்தது. அந்த வழக்கில் இருந்து சமீபத்தில்தான் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் "கையில காசு, வாயில தோசை" என்ற மெகா பட்ஜெட் படம் ஒன்றை எடுத்து வருகிறார். அந்த படத்திற்கு கதை, வசனம், இசை இவரே (ஹீரோவும் இவர்தானாம்!!). இதற்குமுன் பல வெற்றி (வெட்டி) படங்களில் ஹீரோவாக நடித்துள்ளதாக அவரே தெரிவித்தார். அந்த படங்கள் வருமாறு :

ராஜாதி ராஜ, ராஜ கம்பீர ........................ காத்தவராயன் .....

என்னை பார் யோகம் வரும்

இப்போ சொல்ல வந்த மேட்டர் என்னன்னா, இப்படியாகப்பட்ட படிப்படியான சினிமா வளர்ச்சி கண்ட நம் அண்ணன் மன்சூர் அலிகான், இப்போது எல்லோரும் செய்யும் அதே தொழிலை / வேலையை செய்துள்ளார், அதாங்க கட்சி ஆரம்பிப்பது. தன் கட்சிக்கு ஒரு அட்டகாசமான பெயரையும் சூட்டி விட்டார். அந்த பெயர் :

"தமிழ் பேரரசு"

இந்த புதுக்கட்சியின் பெயருக்கும் டைரக்டர் பேரரசுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

தன் புதிய கட்சி, இங்குள்ள தேசிய கட்சிகள் மற்றும் நடிகர்களின் கட்சிகளான தே.மு.தி.க., ச.ம.க., ல.தி.மு.க., அ.இ.நா.ம.க. மற்றும் பல இத்துப்போன லெட்டர் பேட் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

(சமீபகாலமாக விஜயகாந்த் அவர்களை வெகு கடுமையாக விமர்சித்து வரும் மன்சூர் அலிகான், விஜயகாந்தை கேப்டன் என்று அழைப்பதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

விஜயகாந்த் "கேப்டன்"னா, கப்பலுக்கா, கிரிக்கெட் டீமுக்கா, ஹாக்கி டீமுக்கா என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பி உள்ளார்).

13 comments:

கிரி said...

//"தமிழ் பேரரசு" - மன்சூர் அலி கான் காமெடி கிச்சு கிச்சு கட்சி//

:-))))))))

R.Gopi said...

வாங்க கிரி

இந்த அரசியல் பரபரப்புல நீங்க வந்ததையே கவனிக்கல.

நான் என்ன புது கட்சியா தொடங்கப்போறேன், ஏன் இந்த பரபரப்புங்கரீங்களா??

நீங்க வேற தல, இருக்கற கட்சிய எண்ணி முடிக்கவே ஆயுசு போதாது போல இருக்கு, இதுல எங்க முடிவு பண்ணி, ஒட்டு போட்டு ......... அட போங்கப்பா......

Vishnu - விஷ்ணு said...

யாருக்கு போட்டியா இருக்கோ இல்லையோ, நிச்சயம்
ல.தி.மு.க. அ.இ.நா.ம.க பெரும் நெருக்கடி இருக்கும். ஆனாலும் விஜய டி.ஆரின் சூராவளி சுற்றுபயணத்தில தாக்கு பிடிக்குமா "தமிழ் பேரரசு".இந்த முப்பெரும் கட்சிகள் சேர்ந்து கூட்டணி வச்சுகிட்ட நிச்சயம் 2012ல கோட்டைய புடிச்சிருவாங்கப்பா


ஒரு சின்ன டவ்வுட்டு ல.தி.மு.கவ்வுக்கு இலட்சகணக்கான ஒட்டு வங்கி இருக்குனு விஜய டி.ஆர் ஒரு பேட்டில சொல்லிருக்காரு.
(ஆம ஓட்டு வங்கினா ரிசர்வ் பேங்க் கன்ட்ரோல வருமா இல்ல தனிபட்ட பைனான்ஸ் கம்பெனியா?)

R.Gopi said...

வாங்க விஷ்ணு

நிகழ்கால அரசியல என்ன அலசு அலசி இருக்கீங்க.

நீங்க சொல்ற "டெர்ரர் கூட்டணி" மட்டும் ரெடி ஆச்சுன்னா, இந்த தமிழ்நாட்ட எந்த "பாடிகாட் முனீஸ்வரனும்" காப்பாத்த முடியாது.

R.Gopi said...

//(ஆம ஓட்டு வங்கினா ரிசர்வ் பேங்க் கன்ட்ரோல வருமா இல்ல தனிபட்ட பைனான்ஸ் கம்பெனியா?)//

********

விஷ்ணு

டெர்ரர் ராஜேந்தர் எல்லாம் ரிசர்வ் வங்கி அல்ல, இருக்கறத சுருட்டிட்டு ஓடற பைனான்ஸ் கம்பெனி தான்.

. said...

சினிமாவில தான் இந்த பயலுக தொல்லை தாங்க முடியலைன்னு ஒய்வு குடுத்து வீட்டுக்கு அனுப்பிச்சா கட்சி ஆரம்பிக்கிறேன் பேர்வழினு கிளம்பிட்டா நாம என்ன செய்யுறது.

கிரி அண்ணே கிச்சு கிச்சு இன்னு சொல்றாக, விஷ்ணு அண்ணே ரவுண்டு கட்டி ஒரு டெரர் கூட்டணி வைச்சு கும்மி அடிக்கிறாங்க.

இல்லை தெரியாமதான் கேட்கிறேன், நம்ம லாரி டிரைவர் ராஜாகண்ணு ஆரம்பிச்ச --- ஆரம்பத்திலே பிச்சி போட்ட ஒரு கட்சி என்ன ஆச்சு. கண்ணாடி தம்பி பாக்யராஜ் தொடக்கி போட்ட ஒரு குட்சி சாரி கட்சி என்ன ஆச்சு. இதெல்லாம் சேர்த்து போட்டா தமிழ்நாடு தாங்காது அண்ணே.

R.Gopi said...

வாங்க படுக்காளி .......

நகைச்சுவை அரசர் ஆயிட்டீங்களே "தல".

அரசியல்னாவே இப்போ, படா காமெடி ஆயிடுச்சு இல்ல.......

நீங்க சொன்ன மாதிரி, காணாமல் போன ஆளுங்கள தேடினா, இப்போ கட்சி வச்சு இருக்கறவங்கள விட அதிகமா இருக்கும்.

சித்து said...

இவன் போன்ற காமுகர்கலெல்லாம் கட்சி எந்த தைரியத்தில் ஆரம்பிக்கிறார்கள்? மக்கள் அனைவரும் மாக்கள் என்று நினைத்து விட்டாரோ?? நம் நாடு இவ்வளவு இழிவான நிலையில் உள்ளதை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன்.

R.Gopi said...

வருகைக்கும், கருத்து பகிர்தலுக்கும் நன்றி "நான் அவன் இல்லீங்கோ" அவர்களே,

நோட்டயும், இலவசமா குடுத்தா எதையும் வாங்கிட்டு ஓட்டு போடறவங்க இருக்கற ஊர்ல, யாரும், எதுவும் செய்ய முடியும்தானே??

தங்கள் கருத்து நன்று. ஆனால், நம் மக்கள் செவிட்டு தவளைகள் (இலவசங்கள் அவர்களின் காதுகளை பஞ்சு கொண்டு அடைத்துவிடும்).

சித்து said...

நம் நாட்டு மக்களுக்கு இன்றைய சூழ்நிலையில் இருக்கும் ஒரே உரிமை (கடமையும் கூட) ஓட்டு போடுவது மட்டும் தான், ஆனால் அதையே சாராயத்துக்கும் பிரியாணிக்கும், பணத்துக்கும் (அந்த பணமும் டாஸ்மாக் தவிர வேறு எதுக்குமே பயன் படுத்துவதில்லை). இப்பொழுதே இப்படி என்றால் நம் சந்ததியினர் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ. உங்கள் வலைபூக்கள் மிக அருமை. நன்றி.

R.Gopi said...

சரியாய் சொனீங்க "நான் அவன் இல்லீங்கோ"

குடிமக்கள் (இப்படி சொல்லி சொல்லியே, குடிக்காதவங்களையும் "டாஸ்மாக்" கடைக்கு வர வச்சுட்டாங்க இந்த பாழாப்போன அரசியல்வாதிங்க) தன் கையில் இருக்கும் ஒரு உரிமையான, வாக்கையும் விலை கொடுத்து வாங்கப்பட்டு, பின் அந்த விலையையும் "டாஸ்மாக்" கடை கொண்டு பிடுங்கப்பட்டு, பின் கொடுத்தவர் கல்லாவுக்கே வந்து சேரும் இந்த கொடுமைய யார் வந்து மாத்த போறாங்களோ?

உங்கள் மேலான கருத்துக்கும், தொடர் வருகைக்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி.

Joe said...

//
விஜயகாந்த் "கேப்டன்"னா, கப்பலுக்கா, கிரிக்கெட் டீமுக்கா, ஹாக்கி டீமுக்கா என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பி உள்ளார்
//

கேட்டான்ல, கேட்டான்ல, கேட்டான்ல, நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்டான்ல?

R.Gopi said...

//கேட்டான்ல, கேட்டான்ல, கேட்டான்ல, நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்டான்ல?//

*************

வருகைக்கு நன்றி ஜோ

உங்க கமெண்ட் சூப்பர்.