Saturday, April 11, 2009

"ட்ரிபிள் ட்ராக் டகால்டி" - மன்சூர் அலிகான், விஜய டி.ராஜேந்தர், சரத் குமார்

நாடாளுமன்றத்திற்கு தேர்தல் அறிவித்தாலும் அறிவித்தார்கள். தினம் பலப்பல காமெடி காட்சிகள் தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. இதோ, தமிழகத்தின் லேட்டஸ்ட் கிச்சு கிச்சு காமெடி காட்சி.

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சில தினங்களுக்கு முன்புதான், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன் பெயர் கூட "தமிழ் பேரரசு" என்று அறிவித்தார். இடையில் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை.இப்போது, திடீரென அந்த முடிவை மாற்றிக்கொண்டு, டி.ராஜேந்தருக்கு சால்வை அணிவித்து வீர வாளை பரிசாக வழங்கி லட்சிய தி.மு.க.வில் இணைந்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய ராஜேந்தர்,

இந்த இணைப்பின் மூலம், தமிழ்நாட்டின் "டெர்ரர் கூட்டணி" இதுதான் என்று பெயரெடுத்து விட்டதாக அறிவித்தார். இது தவிர, இந்த "டெர்ரர் கூட்டணி"யில் மற்ற பல அகில உலக கட்சிகளான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை தேர்தலுக்கு முன் இணையும் என்றும் ராஜேந்தர் கூறினார்.

தான், மன்சூர் அலிகான், சரத் குமார் போன்ற இருவருடன் இணைந்து ஒரு மெகா படம் தயாரித்து, நடிக்க உள்ளதாகவும், தேர்தல் முடிந்து, மத்தியில் ஆட்சி அமைப்பது பற்றி பொதுக்குழு கூட்டி, முடிவு செய்துவிட்டு, பின் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாக விஜய டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

படத்தின் பெயர் பற்றி கேட்டபோது, பல புதுமையான பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், அதில் "ட்ரிபிள் ட்ராக் டகால்டி" என்கின்ற பெயர் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த படம் தமிழ் பேசும் மக்களுக்காக ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

பிறகு மன்சூர்அலி கான் கூறுகையில்,

இலங்கை தமிழர்களை காக்க கூட்டு பிரார்த்தனைக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது. சினிமாவில் மட்டும் கதாநாயகியை காப்பாற்றுவதற்கு வில்லன்களை பந்தாடுகிறார். நிஜத்தில் தமிழர்களை பாதுகாக்க மண்டியிட வேண்டும் என்கிறார்.

மேலும், ராஜேந்தர் தமிழ் இன உணர்வுமிக்கவர். அவருடன் இணைந்து இலங்கை தமிழருக்காக குரல் கொடுப்போம் என்றார்.

டி.ராஜேந்தரின் டண்டணக்கா பாடல் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாலும், அவரின் தமிழை எப்போதும் கேட்டு கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் அவருடன் கூட்டணி அமைத்ததாக மன்சூர் அலிகான் கூறினார்.

(ராஜேந்தர் தமிழ்நாட்டில் இருந்து பேசினால், நேரடியாக இலங்கைக்கே கேட்கும் வகையில் அவரின் பேச்சு / குரல் இருப்பதாகவும், மற்றும் விஜய டி. ராஜேந்தர் தமிழ் நன்றாக பேசுவதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்).

5 comments:

கிரி said...

//மன்சூர் அலிகான், சரத் குமார் போன்ற இருவருடன் இணைந்து ஒரு மெகா படம் தயாரித்து, நடிக்க உள்ளதாகவும், தேர்தல் முடிந்தவுடன் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்று விஜய தி.ராஜேந்தர் தெரிவித்தார்.//

ஐயய்யோ! என்னடா இது தமிழகத்திற்கு வந்த சோதனை

cdhurai said...

Gopi..Congrats...keep..it.upp

R.Gopi said...

வாங்க கிரி (ஆளையே காணுமே), செல்லதுரை,

இந்த தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்தான் எத்தனை எத்தனை காமெடியன்கள் இருக்காங்கன்னு தெரியுது.

டி.ராஜேந்தர், மன்சூர் அலிகான், சரத்குமார், கார்த்திக் இப்படி எத்தனை பேர்......

எது எப்படியோ, நமக்கு பொழுது நல்லா போகுது ........

Anonymous said...

இதை உண்மைன்னும் நம்ப முடியலை. பொய்யின்னும் நம்ப முடியலை. அப்படி எழுதியிருக்கீங்க.

R.Gopi said...

//shirdi.saidasan@gmail.com said...

இதை உண்மைன்னும் நம்ப முடியலை. பொய்யின்னும் நம்ப முடியலை. அப்படி எழுதியிருக்கீங்க.//

***********

சாய்தாசன் சார்,

வாங்க, வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க.

அரசியல்ல நடக்கற எல்லாமே காமெடிதானே சார்.

கண்டிப்பா, இதுவும் காமெடி தான்.

உங்கள் கருத்துக்கு நன்றி.