Sunday, April 11, 2010

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”

நடிகர் "குஜய்" கட்சி ஆரம்பிக்க போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்தது.... அது நமுத்து போன பட்டாசு ஆன பின், இப்போது தன் புது படமான “சுறா”வை ஒட்டி, மீண்டும், தன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் டகால்டி படலத்தை நடிகர் “குஜய்” துவங்குகிறார்....

பேட்டி கொடுக்கிறார்... கை சொடுக்குகிறார்... எஸ்.ஏ.சி... முகத்தில் லேசாக புன்னகை பிறக்கிறது... இந்த வாட்டி நெஜமாவே வந்துடுவானோ, அப்படின்னா... வேளாங்கன்னிக்கு பாத யாத்திரை போகலாமா என்றெல்லாம் யோசனையில் ஆழ்கிறார்.. பரபரப்பான இந்த செய்தியை கேட்டவுடன்... தமிழ்நாட்டில் மீண்டும் புது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ஜூரம் வருகிறது...

கீபாலபுரம், மைலாபுரம், கீயஸ் கார்டன், கிஜயகாந்த் அலுவலகம், பீரரசு அலுவலகம், நடிகர் பிஜித் அலுவலகம் எல்லாம் தீப்பற்றி கொள்கிறது...

"முத்தமிழ் காவலர், வக்கீல் வலைஞர்" (நல்லா நோட் பண்ணுங்க... இவர் டாக்டர் இல்லை....) தன் இரு கரங்களான போர்காட்டாரையும், பொறைகிருகனையும் அலைபேசியில் மிக மிக அவசரம் என்று அழைக்கிறார்...... அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் கீபாலபுரத்தில் ஆஜர்......

வலைஞர் : என்னாய்யா, நாம இப்போதான் ஒருவழியா "சூப்பர் ஸ்டார் குஜினி"ய அரசியல் பேசக்கூடாதுன்னு வாய அடச்சு வச்சு இருக்கோம்.... அதுக்குள்ள, இது என்னய்யா சின்னதா ஒரு ”சுறா”ன்ற பேருல புது தலைவலி..... போட்டுருவோமா!!??

போர்காட்டார் : அய்யோ வேணாம் தலைவரே...... அவன் கெடக்கான் பிஸ்கோத்து பய, பச்ச மண்ணு..... அவன இங்கன கூட்டியாந்து, நம்ம மணிபர்ஸ் வாயர் சிரிக்கறத ஒரு தபா பார்க்க சொல்லுவோம்..... அப்புறம் ஆயிசுக்கும் புது கட்சி, பழைய கட்சின்னு எல்லாம் பேச மாட்டான்.......

பொறைகிருகன் : ஆமாம் தலைவரே..... போர்காட்டார் சரியாதான் சொல்றாரு என்று சொல்லி தன் மணிபர்ஸ் வாயை திறந்து சிரிக்க.... அதை எதேச்சையாக பார்த்த போர்காட்டாரே ஒரு நிமிடம் ஆடி போய்விடுகிறார்.....

போர்காட்டார் : யோவ்... நீயி சும்மா இருக்க மாட்டியா..... நீ சிரிக்கறத பாத்தா எனக்கே கதிகலங்குது.....அந்த குட்டி பையன் "குஜய்" என்ன பாடுபட போறானோ? தலைவா, நான் அந்த சின்ன பையன அலைபேசில நீங்க கூப்பிடறதா சொல்லி கூப்பிடறேன்..... இங்கன வச்சு, அர்ச்சனை, ஆராதனை, அபிஷேகம் எல்லாம் பண்ணி, சின்னதா ஒரு காணிக்கை குடுத்து அனுப்பி வைப்போம்........

அங்கே....கீயஸ் கார்டனில் ”பயலலிதா” முன் பம்மிய நிலையில், வாய் மூடி, முட்டி போட்ட நிலையில் "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" மற்றும் சில ரத்தத்தின் ரத்தங்கள்...

பயலலிதா : நீங்க எல்லாம், என்னய்யா பண்ணி கிழிக்கறீங்க.... காலைல இருந்து, சாயங்காலம் வரைக்கும், கட்சி ஆஃபீஸ்ல வெட்டி அரட்டை... மத்தியானம் டாஸ்மாக் சரக்கு, பிரியாணி... சரி...நம்ம கையில இப்போ ஆட்சிதான் இல்ல... அட்லீஸ்ட், இந்த மாதிரி சின்ன சின்ன “சுறா”ங்கள கூட நம்ம கண்ட்ரோல்-ல வைக்க முடியலியா? இதெல்லாம் பண்றதுக்கு கூட ஆட்சி கையில வேணும்னு சொல்லாதீங்க.. கேக்கவே வெக்கமா இருக்கு எனக்கு...

பயலலிதாவின் உக்கிரமான அர்ச்சனையை நெடுநாட்களுக்கு பிறகு வாங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" மற்றும் க்ரூப் எல்லாம் கிலியடித்து பம்முகிறார்கள்......

போயி என்ன ஏதுன்னு பாத்து, அந்த பையன இங்க கூட்டிட்டு வாங்க, கொஞ்சம் வேப்பிலை அடிச்சு, தாயத்து கட்டி குங்குமம் குடுப்போம்...... அப்புறம் பாருங்க.. அவன் கதியை என்கிறார்...

பூமதாஸ் : என்ன கிழிக்கறீங்கய்யா.... ஒவ்வொரு நடிகன், அரசியலுக்கு வரும் போதும், நாம கஷ்டப்பட்டு, அவங்க நடிச்ச படப்பொட்டிய தூக்கி போய், கொளுத்தறதும்..... அவனுங்களோட ரசிகனுங்கள அடிக்கறதும் .... பெரிய லெவல் ரோதனையா போச்சேப்பா..இத இப்போவே, முடிச்சாகணும்.....

நீங்க என்ன பண்றீங்க.... அவன் நடிச்ச படம் ஏதாவது தியேட்டர்ல ஓடுச்சுன்னா (கண்டிப்பா ஏதாவது ஒரு படமாவது ஓடும்யா... இன்னும் அவன் நெலமை அவ்ளோ மோசமாகல...), அங்க போய் ரகளை பண்ணுங்க.... தியேட்டர் உள்ளார போற பத்து, இருவது பேரையும் நல்லா நடுரோட்டுல வச்சு சாத்துங்க.. முடிஞ்சா, அந்த படப்பொட்டிய எடுத்து, ரோட்டுல போட்டு தீ வச்சு கொளுத்துங்க...

கிஜயகாந்த் : ஏயி.... நீ என்ன பெரிய இவனா..... பெரிய ஆளு ஆயிட்டியா.. என்னிய பத்தி தெரியும் இல்ல.. ஒரு ஃபுல் உள்ளார வுட்டு, வாந்தி எடுத்தா, மொத்த தமிழ்நாடும் நாறிடும்.. நான் மொதல்ல ஒரு படத்துல ஒனக்கு நடிச்சு குடுக்கலேன்னா, நீ இப்போ, இவ்ளோ பெரிய ஆளா ஆயிருப்பியா??

மவனே.... வந்த வழியே ஓடிடு..... இல்ல.... நடக்கறதே வேற ... என்று "குஜய்" வந்தால் பேச வேண்டிய டயலாக்கை ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறார்...

கண்கள் கோவைப்பழமாக சிவக்க ஆரம்பிக்கிறது.... கை நேராக, டீப்பாயில் இருக்கும் "டாஸ்மாக்" சமாசாரத்தை எடுக்க, நொடியில் பாதி பாட்டில் காலியாகிறது........ மச்சான் "கிதீஷ்" கிலியடித்து பார்த்து கொண்டிருக்கிறார்.. இன்னிக்குன்னு பார்த்து அக்கா கூட ஏதோ கல்யாணம்னு சொந்த ஊருக்கு போயிடுச்சி... உள்ள வுட்ட சரக்குக்கு இன்னிக்கி ஐயனாரு மலையேற போறாரு, என்னான்னா நடக்கப்போவுதோ என்று கூவிக்கொண்டே பக்கத்து ரூமுக்கு தாவி பதுங்குகிறார்......

பீரரசு : வர்ரேன், வர்ரேனு சொல்றவன் எல்லாம் அரசியலுக்கு வரது இல்ல... ஆனா, நீங்க அரசியலுக்கு வரவே மாட்டீங்கன்னு நெனச்சேன். ஆனா, வந்துட்டீங்க என்று ஒரு பெரிய பிட் போடுகிறார்........... இந்த டயலாக் நம்ம "குஜய்" வர்றப்போ பேசினா எடுபடுமா? அடுத்து ஏதாவது படம் டைரக்ட் பண்ண சான்ஸ் கிடைக்குமா என்று தன் எடுபிடிகளிடம் கேட்கிறார்..... அண்ணே, இது சூப்பர் டயலாக்னே, அடுத்த படம் கன்ஃபார்ம்டா நமக்கு தாண்ணே என்று கோரசாக கும்மியடிக்கிறார்கள் எடுபிடிகள்..... நைட் கிடைக்கப்போகும் சரக்கை மனதில் வைத்து......

குஜய் : ண்ணாவ்...... வணக்கம்ணாவ்....சார்.....குட்மார்னிங் சார்.... இல்ல இல்ல.... வணக்கம் அய்யா, இதுதான் சரி என்று சொல்லிக்கொண்டே கைகூப்பிய படி கீபாலபுரம் வீட்டில் நுழைகிறார்......
இளைய தமிழே வருக.....இந்தியாவை காக்க வருக, இளைய தளபதியே வருக, எங்கள் தி.மு.கழகத்தை காக்க வருக என்று எழுதிய போர்ட் தாங்கி பிடித்தபடி, போர்காட்டார் வீட்டு வாசலில் நிற்கிறார்....... போர்ட் லேசாக தள்ளாடுகிறது...

வலைஞர் : வாங்க தம்பி.... நீங்களும் உங்கள் சுற்றமும் நலமா..... என்று உப்பு காகிதத்தை தகரத்தில் தேய்த்த குரல் கேட்டு, அந்த திசையை நோக்கி ஒரு பெரிய கூழை வணக்கம் போடுகிறார்....

உள்ள வாங்க தம்பி... எனக்கு வாகை சந்திரசேகரும், எஸ்.ஏ.சந்திரசேகரும் இரு கண்கள், சங்கிலி கொடுத்த பாபாவையும் பிடிக்கும், நல்ல சங்கீதத்தை கொடுத்த உங்க அம்மா ஷோபாவையும் பிடிக்கும் என்றெல்லாம் வழக்கமான பாணியில் போடும் பிட்டை போடுகிறார்....

தம்பி.... நம்ம பசங்க இப்போதான் உங்க அரசியல் முடிவு பத்தி, என் கிட்ட சொன்னாங்க....... நீங்க நிஜமாவே நாட்டுக்கு ஏதாவது நல்லது பண்ணனும், மக்களுக்கு உதவி பண்ணனும்னு நெனச்சா, படம் நடிக்கறத நிறுத்திடுங்க. அதவிட ஒரு பெரிய உதவி வாழ்க்கையில நீங்க பண்ண முடியாது...

இல்ல... அது முடியாது, கட்சிதான்னா.... நீங்க வாங்க.... ஒங்கள மாதிரி இளைஞர்கள் தான் இன்றைய அரசியலுக்கு தேவை ...... ஏன், கஷ்டப்பட்டு புது கட்சி தொடங்கணும்... நம்ம தி.மு.கழகம் தான் இருக்கே, ஒங்கள மாதிரி, அரசியல் ஆசை உள்ள இளைஞர்களுக்கு அடைக்கலம் தர்றதுக்கு... வந்து சேர்ந்துடுங்களேன்...

இல்லேன்னா. நீங்க நிறைய தியாகம் பண்ண வேண்டி இருக்கும்.. வீட்டுக்கு வந்து இன்கம் டேக்ஸ் ரெய்டுனுவாங்க...ஒங்க கல்யாண மண்டபத்த இடிச்சு... பாலம் கட்டணும்னு சொல்லுவாங்க... இல்ல... இதெல்லாம் வேணாம்... என்னோட டீல் ஓகேன்னா, நான் உடனே வந்து உங்க “சுறா” பட ப்ரீமியர் பார்த்து படம் அருமை, இது போன்றதொரு படம் நான் கடைசி பத்தாண்டுகளில் பார்த்ததில்லை என்று அறிக்கை விடுகிறேன்...... அது நாளையே நம்ம “குரசொலி”ல வர்ற மாதிரி பண்ணி விடுகிறேன் என்கிறார்.

குஜய் : வணக்கம் அய்யா..... ஒங்களுக்கு தெரியாத மேட்டர் இங்க ஒண்ணும் நடக்கறது இல்ல.... வரிசையா.... கூட்ஸ் வண்டி கணக்கா, என்னோட நாலு படமும் படுத்துடுச்சு....... அதான், ஒரு அரசியல் பில்ட்-அப் குடுத்து நம்ம சினிமா மார்கெட் சரி பண்ணினா... “சுறா” கரை ஏறும்..... இல்லேன்னா, நாலு படத்தோட சேர்ந்து இது அஞ்சு ஆயிடும்... நானும் அப்பீட்டு ஆயிடுவேன்.. அப்புறம் நீங்க சொன்ன ரெய்டு, மண்டபம் இடிப்பு மேட்டர் பத்தி எல்லாம் என்னோட நைனா கிட்ட சொல்றேன், அவர் கிட்டவே பேசிக்கோங்க என்று சொல்லி லேசாக விசும்புகிறார்...
வலைஞர் : என் அருமை தம்பி ... அன்பு உடன்பிறப்பே.. இதற்காக நீ இவ்வளவு கலங்க வேண்டாமே..... உன் அடுத்த படத்த, நானே "விதியநிதி" யிடம் சொல்லி தயாரிக்க சொல்கிறேன்.... நானே கதை, வசனம் எழுதுகிறேன்..... பெரிய பட்ஜெட்டில் தயாரித்து விடுவோம்...... "புலியின் மீசை" படம் பேரு... எப்படி........ அப்படியே "விரச ஒலி"ல ஒரு கவிதை எழுதி இந்த படத்த மக்களுக்கு அறிமுகம் செய்து விடலாம்..

குஜய் : பெரிய பட்ஜெட் ஓகே...... விதியநிதி கூட ஓகே.... இப்போதான் "வேட்டைக்காரன்" படுத்துச்சு.... அடுத்த படமும் பப்படமா .... இதுல, தாத்தா கதை வசனமா?, சொந்த செலவுல சூன்யமா நான் எஸ்கேப் என்று கதறியபடி, காம்பவுண்ட் சுவர் தாவி குதித்து, ரோட்டில் உருண்டு, பின் எழுந்து ஓடுகிறார்....... கழக உடன்பிறப்புக்கள் பெரும் படையாக கிளம்பி அவரை மடக்க பல வண்டிகளில் பறக்கிறார்கள்...

வழியில், ஒரு வாகனம் ”குஜயை” மடக்கி "கீயஸ் கார்டன்" தூக்கி போகிறது.....கீயஸ் கார்டனில் நுழைந்த வண்டி, நடிகர் "குஜயை" கீழே இறக்கி விடுகிறது. "தண்ணீர்செல்வம்" "குஜயை" எழுப்பி பயலலிதா முன்பு நிறுத்துகிறார்.

திருதிருவென முழித்த "குஜய்" பயலலிதாவை பார்த்து, அய்யோ.. யானை, பெரிய சைஸ்ல வெள்ளை யானை, பயமாருக்கு, காப்பாத்துங்கோ என்று அலறுகிறார்......

“பயலலிதா” முகம், பரங்கி பழம் போல சிவக்கிறது... இந்த மரியாதை தெரியாத சின்ன பையனை உடனே இந்த தோட்டத்துல இருந்து வெளில தூக்கி போடுங்க, இவன தமிழ்நாட்டுல இனிமே எங்கேயும் நான் பார்க்கக்கூடாது, என்ன மூட் அவுட் பண்ணிட்டான்... நான் ஒரு ரெண்டு வருஷம் போய் “வடநாடு” எஸ்டேட்ல தங்கிட்டு வர்றேன்... ஏதாவது தலை போற அவசரம்னா, எனக்கு மெதுவா தகவல் கொடுங்க...நௌவ் யு ஆல் கேன் கோ அவுட் ஃப்ரம் ஹியர் என்ற பிளிறல் குரல் கேட்டதும், அந்த அக்கினி அனலில் பொசுங்கிய "தண்ணீர்செல்வம்", "பயகுமார்" எல்லாம் தலை தெறிக்க ஓடுகிறார்கள்......

கேப்டன் கிஜயகாந்த் மடித்து கட்டிய வேட்டியுடன், வெட்டி பீரரசுவை துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு வண்டியில் ஏறி, "குஜய்" எங்கே இருக்கிறார் என்று தேடுகிறார்.. அந்த டகால்டி பய “குஜய்’ கெடச்சா, நாம ரெண்டு பெரும் சேர்ந்து அவன ஒரு வழி பண்ணனும்பா...... என்று சொல்லிவிட்டு.....
திடீரென்று ......டேய் பரதேசி... டாஸ்மாக் கடைய பாத்துட்டும் வண்டிய நிறுத்தாம போனா என்னடா அர்த்தம், என்னிய பார்த்தாக்க ஒனக்கு அவ்ளோ நக்கலா போச்சா என்று தனது வலது உருட்டுக்கட்டையை (வலது கையைத்தான்) "பீரரசு" நோக்கி வீசுகிறார்... உருட்டுக்கட்டை அடி வாங்கிய பீரரசு ஓடும் வண்டியிலிருந்து நடுரோட்டில் விழுந்து எழுந்து ஓடுகிறார்..... ”கிஜயகாந்த்” சென்ற வண்டி டாஸ்மாக் கடையை பார்த்தவுடன், பிரேக் போடாமலேயே திடீரென்று நிற்கிறது......

”பிஜித்” தன் அடிபொடிகளிடம், அந்த டகால்டி ”குஜய்” அடுத்து என்ன செய்யப்போறாருன்னு தெரிந்து தன்னிடம் சொல்ல வேண்டும் என்று கர்ஜிக்கிறார்...

அவரு அந்த மேட்டர் ஓகே பன்ணாக்க, நானும் அதே மேட்டர ஓகே பண்ணனும் என்றவுடன், எந்த ”குஜிலி”ய தல என்றவரிடம்... மேட்டர்னா எப்போவும் அது இல்லடா..... இப்போ மேட்டர்னு நான் சொன்னது ”குஜய்” அரசியல் மூவ் பத்தி என்று கன்னத்தில் பளீரென்று அறைந்து சொல்கிறார்...

எல்லோரும் "குஜய்" எங்கிருக்கிறார் என்று வலை போட்டு தேடி கொண்டிருக்க.. அவரோ...... அவரின் புது பட நாயகியுடன் ஹைதராபாத் ராமோஜிராவ் கார்டனில் ........ கொண்டிருந்தார் (அந்த டேஷ் பத்தி தப்பா எதுவும் நினைக்காதீங்க, டூயட் பாடி கொண்டிருந்தார்)............

மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி
நான் இப்போ தொடங்க போறேன் கட்சி....

இச்சு இச்சு இச்சு...இச்சு...இச்சு
ஒன் கன்னத்துல நானும் தர்றேன் இச்சு
வச்சு வச்சு வச்சு...வச்சு
ஒன் மனசுக்குள்ள என்ன நீயும் வச்சு...

(இது டூயட்டா, இல்ல கட்சியின் கொள்கை பாடலா என்iறு யாருக்கும் தெரியாது, இந்த டெர்ரர் பாடலை எழுதிய கவிஞர், டைரக்டர் பீரரசு உட்பட...) ...
(முன்பு எழுதிய இந்த பதிவு இப்போது சில மாற்றங்களுடன் மீள்பதிவாக)

46 comments:

Ananya Mahadevan said...

Heights of Nayyaandi! kalakkal!

R.Gopi said...

//அநன்யா மஹாதேவன் said...
Heights of Nayyaandi! kalakkal!//

*******

வாங்க அநன்யா...

வருகை தந்து, பதிவை படித்து, மகிழ்ந்து, பாராட்டியமைக்கு நன்றி...

அண்ணாமலையான் said...

நடத்துங்க....

R.Gopi said...

//அண்ணாமலையான் said...
நடத்துங்க....//

*******

சரி தலைவா...

அவரும் நல்லா தான் காமெடிய நடத்திட்டு இருக்காரு....

Menaga Sathia said...

செம காமெடியா இருந்துச்சு கோபி...

Chitra said...

அது நமுத்து போன பட்டாசு ஆன பின், இப்போது தன் புது படமான “சுறா”வை ஒட்டி, மீண்டும், தன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் டகால்டி படலத்தை நடிகர் “குஜய்” துவங்குகிறார்....

......ha,ha,ha,ha.....
சான்சே இல்லை. அரசியல் நாடி துடிப்பு நன்றாக தெரிந்து வைத்து இருக்கீங்க.

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
செம காமெடியா இருந்துச்சு கோபி...//

********

வாங்க மேனகா...

ரொம்ப ரசிச்சி படிச்சீங்க போல இருக்கே...

நன்றி... நன்றி...

R.Gopi said...

//Chitra said...
அது நமுத்து போன பட்டாசு ஆன பின், இப்போது தன் புது படமான “சுறா”வை ஒட்டி, மீண்டும், தன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் டகால்டி படலத்தை நடிகர் “குஜய்” துவங்குகிறார்....

......ha,ha,ha,ha.....
சான்சே இல்லை. அரசியல் நாடி துடிப்பு நன்றாக தெரிந்து வைத்து இருக்கீங்க.//

******

வாங்க சித்ரா...

இல்லையா பின்ன... எவ்ளோ பார்த்து இருக்கோம்...

Unknown said...

இதுக்கு விஜய் பேட்டிய நேராவே போட்டிருக்கலாம். அதுவே காமடியாத்தான் இருந்தது

R.Gopi said...

//jaisankar jaganathan said...
இதுக்கு விஜய் பேட்டிய நேராவே போட்டிருக்கலாம். அதுவே காமடியாத்தான் இருந்தது//

அப்போ... அவர் பேட்டி எல்லாம் குடுக்கறாரா... சரி...சரி... நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்...

Unknown said...

//அப்போ... அவர் பேட்டி எல்லாம் குடுக்கறாரா... சரி...சரி... நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்...//

அவரு அரசியல்ல இறங்குறத பத்தி சொல்லியிருந்தாரு. ஒரே காமடி. பெரிய தலைவர் கூட அந்த வார்த்தை உபோயோகபடுத்த மாட்டாங்க

R.Gopi said...

//jaisankar jaganathan said...
//அப்போ... அவர் பேட்டி எல்லாம் குடுக்கறாரா... சரி...சரி... நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்...//

அவரு அரசியல்ல இறங்குறத பத்தி சொல்லியிருந்தாரு. ஒரே காமடி. பெரிய தலைவர் கூட அந்த வார்த்தை உபோயோகபடுத்த மாட்டாங்க//

*******

ரைட்டு... அப்போ பெரிய லெவல் காமெடி ஸ்டார்ட் ஆயிடுச்சி...

Anonymous said...

ayya jokkiri room pottu yositheero arumai

R.Gopi said...

//Anonymous said...
ayya jokkiri room pottu yositheero arumai//

********

வாங்க தல...

ரூம் போடாமலே எழுதினது தான் இது.. நன்றி...

R.Gopi said...

//www.bogy.in said...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in//

**********

மிக்க நன்றி...

தங்களுக்கும் என் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

Paleo God said...

3 இடியட்ஸ் படத்துக்கு தமிழ்ல என்னா பேர் தலீவா??

:))

R.Gopi said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
3 இடியட்ஸ் படத்துக்கு தமிழ்ல என்னா பேர் தலீவா??

:))//

*********

வாங்க தல...

மார்க்கெட்ல விசாரிச்சு பார்த்தேன்... டைட்டில் அனேகமா இதுவாதான் இருக்கும்னு சொல்றாங்க...

“அஜய்...பிஜய்...குஜய்”

பத்மா said...

SEMA COMEDY NICE

சொல்லச் சொல்ல said...

சரி கடிய சூப்பர் காமெடியா ஆக்கிட்டீங்க!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.
கலக்கிட்டீங்க.
கலங்கிடுச்சி, எல்லோருக்கும்.
அதாவது வலைஞர், பயலலிதா, குஜயகாந்த்,
பூமதாஸ், பிஜித் ஆகியோருக்கு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் //

தலைப்பு- நக்கல் திலகம்

R.Gopi said...

//padma said...
SEMA COMEDY NICE//

********

வருகை தந்து, பதிவை படித்து சிரித்தமைக்கு நன்றி பத்மா அவர்களே..

R.Gopi said...

// சொல்லச் சொல்ல said...
சரி கடிய சூப்பர் காமெடியா ஆக்கிட்டீங்க!//

*********

வாங்க சொல்ல சொல்ல...

ரசித்து படித்தமைக்கு மிக்க நன்றி...

R.Gopi said...

//NIZAMUDEEN said...
பதிவு ரொம்ப பெரிசா இருக்கு.
கலக்கிட்டீங்க.
கலங்கிடுச்சி, எல்லோருக்கும்.
அதாவது வலைஞர், பயலலிதா, குஜயகாந்த்,
பூமதாஸ், பிஜித் ஆகியோருக்கு.//

//NIZAMUDEEN said...
//தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் //

தலைப்பு- நக்கல் திலகம்//

****

வாங்க நிஜாம் பாய்... முதன் முதலாக வருகை தந்து, பதிவை ரசித்து படித்து, பாராட்டிய தோழமைக்கு மிக்க நன்றி...

Matangi Mawley said...

dr. vijay vaazhka!

gr8 sir.. really cool blog!!

R.Gopi said...

//Matangi Mawley said...
dr. vijay vaazhka!

gr8 sir.. really cool blog!!//

*********

Welcome Matangi for your maiden visit and encouraging comments...

Anonymous said...

அட யாருப்பா என்னோட பதிவை எல்லாம் ரொம்ப நீளம்னு சொன்னது. ஒரு தடவை இதை எட்டிப்பாருங்க முதல்ல.

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாக்கிடுச்சு.

R.Gopi said...

//அனாமிகா துவாரகன் said...
அட யாருப்பா என்னோட பதிவை எல்லாம் ரொம்ப நீளம்னு சொன்னது. ஒரு தடவை இதை எட்டிப்பாருங்க முதல்ல.

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாக்கிடுச்சு.//

*********

வாங்க அனாமிகா...

இந்த பதிவு என்ன அம்புட்டு பெரிசாவா இருக்கு??

எனிவே... வருகை தந்து, பதிவை படித்து, வாய் விட்டு சிரித்தமைக்கு மிக்க நன்றி...

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி....

mohamedFeros
annamalaiyaan
venkatnagaraj
menagasathia
chitrax
anubagavan
tamilz
paarvai
jntube
tharun
Mahizh
Kummachi
chanthru
eroarun
palapattarai
ananyamahadevan

குசும்பன் said...

சூப்பரு:)

R.Gopi said...

//குசும்பன் said...
சூப்பரு:)//

*********

வாங்க தல...

பதிவு சூப்பருன்னு சொன்னதுக்கு ஒரு பெசல் டேங்க்ஸ்...

பாசகி said...

ஜி செம ந(கல)க்கல் :)

R.Gopi said...

// பாசகி said...
ஜி செம ந(கல)க்கல் :)//

**********

வாங்க பாசகி...

நீங்க எல்லாம் படிச்சு நல்லா கீதுன்னு சொன்னா கேக்கறதுக்கு நெம்ப குஸியா கீதுபா...

டேங்க்ஸ்...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கிறேன். எனது வலையத்துக்கு வந்து பாருங்களேன்.

http://maunarakankal.blogspot.com/2010/04/blog-post_22.html

R.Gopi said...

//ஜெஸ்வந்தி said...
உங்களுக்கு ஒரு விருது தந்திருக்கிறேன். எனது வலையத்துக்கு வந்து பாருங்களேன்.

http://maunarakankal.blogspot.com/2010/04/blog-post_22.html//

*********

விருதா?? எனக்கா?/ சொக்கா...

இதோ வருகிறேன்...

Anonymous said...

என்னங்க அது விஜய்னாலே எல்லாருக்கும் ஒரு கேலியும் கிண்டலுமா போச்சு.இத நான் வன்மையாக கண்டிக்கிறேன்.யார் யாரோ அரசியலுக்கு வரப்போ இவர் ஏங்க வர கூடாது.?போற போக்கை பாத்தா "வருங்கால ஜனாதிபதி வையாபுரி வாழ்க"னு நீங்க போஸ்ட்டர் பார்த்தாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை:)
பதிவை ரசிச்சேன் கோபி.

Unknown said...

arumai sir
How is this Vijay Kadi's?
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_11.html

R.Gopi said...

//Ammu Madhu said...
என்னங்க அது விஜய்னாலே எல்லாருக்கும் ஒரு கேலியும் கிண்டலுமா போச்சு.இத நான் வன்மையாக கண்டிக்கிறேன்.யார் யாரோ அரசியலுக்கு வரப்போ இவர் ஏங்க வர கூடாது.?போற போக்கை பாத்தா "வருங்கால ஜனாதிபதி வையாபுரி வாழ்க"னு நீங்க போஸ்ட்டர் பார்த்தாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை:)
பதிவை ரசிச்சேன் கோபி.//

********

அரசியலுக்கு வரும் அண்ணன் வையாபுரியையும் வரவேற்போம் அம்மு...

பதிவை ரசித்ததற்கு மிக்க நன்றி...

R.Gopi said...

//david said...
arumai sir
How is this Vijay Kadi's?
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_11.html//

*******

Welcome David....

Thanks for ur visit and comment.

Will come to your blog, read and comment there...

mrs. Krishnan said...

YEI...

YEI...

AZHUDHUTTU IRUKOMLA...

R.Gopi said...

//mrs. Krishnan said...
YEI...

YEI...

AZHUDHUTTU IRUKOMLA...//

*****

ஆ...ஹா.... அழறீங்களா!!

சாரி... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..

mrs. Krishnan said...

Azharadhu naan illingo. Namma Ilaya Thalapathidhan. Villu interview stylela padikavum.

R.Gopi said...

//mrs. Krishnan said...
Azharadhu naan illingo. Namma Ilaya Thalapathidhan. Villu interview stylela padikavum.//

********

ஹா...ஹா...ஹா... அவர விட மாட்டீங்க போல இருக்கே....

Anonymous said...

காவலன் பொங்கல் சூப்பர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை, அருமை, வெகு அருமை. வரிக்குவரி மிகவும் ரசித்து ருசித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

எல்லாப் பெயர்களும் நன்றாக பொருத்தமாக தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மிகவும் ரசித்தவை:

//ஒரு ஃபுல் உள்ளார வுட்டு, வாந்தி எடுத்தா, மொத்த தமிழ்நாடும் நாறிடும்.. //

// சொந்த செலவுல சூன்யமா நான் எஸ்கேப் என்று கதறியபடி, காம்பவுண்ட் சுவர் தாவி குதித்து, ரோட்டில் உருண்டு, பின் எழுந்து ஓடுகிறார்.......//

//நௌவ் யு ஆல் கேன் கோ அவுட் ஃப்ரம் ஹியர் என்ற பிளிறல் குரல் கேட்டதும், //

//என்று யாருக்கும் தெரியாது, இந்த டெர்ரர் பாடலை எழுதிய கவிஞர், டைரக்டர் பீரரசு உட்பட...) ...//

வாழ்த்துக்கள். நகைச்சுவைப்பணி தொடரட்டும்.

R.Gopi said...

//வை.கோபாலகிருஷ்ணன் said...
அருமை, அருமை, வெகு அருமை. வரிக்குவரி மிகவும் ரசித்து ருசித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள்.

எல்லாப் பெயர்களும் நன்றாக பொருத்தமாக தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளன.//

*****

கோபால் சார்...

வருகை தந்து, பதிவை படித்து, மகிழ்ந்து கமெண்டியமைக்கு மிக்க நன்றி...