தமிழ் படங்கள் ஒரு கருத்தை சொல்லக்கூட முயற்சிக்காதது ..... இது இந்த காலம்....
ஏதேனும் நல்ல கருத்தை தன் பாடல் வழியாக சொல்ல முயற்சிக்கும் கவிஞர்களை கூட, எதுவும் சொல்லாதே..... அர்த்தமற்ற வார்த்தைகளை போட்டு பாடலை எழுதி முடி.... நாங்கள் இசையால் அதை நிரப்பிக்கொள்கிறோம் என்று சொல்லி பாடல்களை எழுத வைத்து, இசையமைத்து, கண்ட மேனிக்கு படம் பிடித்து, ரிலீஸ் செய்வதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்... எப்படி அந்நாளில் பாடலில் வரிகளுக்கு முக்கியத்துவம் இருந்ததோ, அதே போல், இன்றைய சூழலில், பாடல் வரிகளுக்கான முக்கியத்துவத்தை அதிரடி இசை எடுத்துக்கொள்கிறது...
ஆனாலும் இன்றைக்கு சில நல்ல டைரக்டர்கள், நல்ல பாடலாசிரியர்களை கொண்டு, பல நல்ல பாடல்களை வழங்க முற்படுவதையும் காண்கிறோம்... வைரமுத்து, தாமரை போன்ற கவிஞர்கள் பல நல்ல பாடல்களை நம்மிடையே சமீப காலத்தில் படைத்ததை மறுப்பதற்கில்லை...
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படங்களில் பெரும்பாலும், பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகி, ஆடியோ விற்பனையில் சாதனை படைப்பதை நாம் அறிவோம்... படத்தின் ஒரு சில பாடல்களின்றி, அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் ஆகும்....... அவர் தம் படங்களின் பாடல்களில் நிறைய கருத்துக்களை சொல்வார்... அந்த கருத்துக்களை அடக்கிய பாடல்கள் பெரிய அளவில் மக்கள் மனதில் எடுபடுவதையும் நாம் கண்டிருக்கிறோம்... அப்படி ஒரு பாடலை பற்றியது தான் இந்த பதிவு.....
1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கி, ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் பேனரில் தயாரித்து வெளிவந்து, மெகா ஹிட் ஆன படம் “பாட்சா” என்பதை உலகறியும்..... ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் “பாட்சா” படத்திற்கு உண்டு....
அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதியிருந்தார்.... பிரமாதமான இசையை தேனிசை தென்றல் தேவா அவர்கள் வழங்கினார்....
இங்கே நாம் பார்க்கவிருப்பது அந்த படத்தில் வாழ்க்கையை மிக சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கிய இந்த “ரா ரா ரா ராமய்யா, எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா” என்ற பாடல்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் எங்கேயோ, எப்போதோ படித்த ஒரு சித்தரின் சிந்தனையை வைரமுத்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, உடனே வைரமுத்து அவர்கள், அந்த கருத்தை ஒரு பாடல் எழுத, அதுவே பின்வரும் இந்த பாடல்....பாருங்களேன்....
ரா ரா ரா ராமய்யா....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா...
இக்கட ரா ரா ரா ராமய்யா....
அதை புட்டு புட்டு வைக்கபோறேன் பாரய்யா ....
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
அதை புத்திக்கு எட்டும் படி சொல்லப்போறேன் கேளய்யா
இக்கட ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமய்யா
என்று தொடங்கும் அந்த பாடல், பின் வரும் 8, 8 ஆக வாழ்க்கையை பிரிக்கும் விஷயங்களை உள்ளடக்கியது....
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல
************
அந்த காலத்தில் சித்தரின் மனதில் எழுந்த இந்த கருத்து, இதோ இங்கே பாடலாக தரப்பட்டுள்ளது....
இந்த பாடலும், அதன் கருத்தும், தற்போது இன்றைய நடைமுறைக்கு ஒப்பானதா? ஆம் என்றால் எப்படி?
உங்கள் கருத்தை சொல்லுங்களேன் தோழமைகளே!!
48 comments:
உண்மை அந்த பாடம் ஒரு சிறந்த தத்துவ பாடல். இசையுடன் கேட்க இனிமையாக இருக்கும்.
//
எஸ்.கே said...
உண்மை அந்த பாடம் ஒரு சிறந்த தத்துவ பாடல். இசையுடன் கேட்க இனிமையாக இருக்கும்//
********
முதலில் வருகை தந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....
கோபி சார்
மூன்றாம் எட்டில் நிச்சயம் இப்போதைக்கு திருமணம் நடப்பது இல்லை . நாலாம் எட்டுக்குள்ள நடக்கறது தான் நடைமுறை .ஒரு எட்டு வருஷம் வித்யாசம் இருக்கு ரெண்டாம் எட்டையும் மூணாம் எட்டையும் கல்விக்கு ஒதுக்கிட்ட கணக்கு சரியா இருக்கும் :
// dr suneel krishnan said...
கோபி சார்
மூன்றாம் எட்டில் நிச்சயம் இப்போதைக்கு திருமணம் நடப்பது இல்லை . நாலாம் எட்டுக்குள்ள நடக்கறது தான் நடைமுறை .ஒரு எட்டு வருஷம் வித்யாசம் இருக்கு ரெண்டாம் எட்டையும் மூணாம் எட்டையும் கல்விக்கு ஒதுக்கிட்ட கணக்கு சரியா இருக்கும் ://
*******
வாங்க சுனில் சார்....
உங்களின் கூற்றுப்படி, அந்த காலத்தில் சித்தர் சொன்னது, இந்த காலத்திற்கு பொருந்தாது என்கிறீர்கள்...
சரி....
அறுபத்து நாலுக்கு மேலே நிம்மதி இல்லை என்று சொன்னாலும் ஆயிரம் ஊசி போட்டுக்கொண்டாவது ஆயுசு நீளாதா என்று காத்திருக்கிறோம்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
செம பாட்டு! தலைவர் படத்துல பாடுனா அதுக்கு வெய்ட்டு! :-)
அவனவனுக்கு வாழ்கையில ஆயிரம் பிரச்சனைகள் உண்டு இந்த தட்டு எல்லாம் ஒழுங்கா அனுபவிக்க முடியாது
எட்டு வைத்து எட்டு வைத்து - எட்டு திக்கும் கொடி கட்டி பறக்குது!
//RVS said...
அறுபத்து நாலுக்கு மேலே நிம்மதி இல்லை என்று சொன்னாலும் ஆயிரம் ஊசி போட்டுக்கொண்டாவது ஆயுசு நீளாதா என்று காத்திருக்கிறோம்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.//
**********
ஹா...ஹா.... வாங்க ஆர்.வி.எஸ்.
இதுவும் ஒரு கோணத்தில் பார்த்தால் சரியே...
வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
//கிரி said...
செம பாட்டு! தலைவர் படத்துல பாடுனா அதுக்கு வெய்ட்டு! :-)//
*********
வாங்க கிரி...
உண்மைதான்.... இது நல்ல வாழ்வியல் கருத்தை உள்ளடக்கிய பட்டையை கிளப்பும் பாடல் தான்...
//யாதவன் said...
அவனவனுக்கு வாழ்கையில ஆயிரம் பிரச்சனைகள் உண்டு இந்த தட்டு எல்லாம் ஒழுங்கா அனுபவிக்க முடியாது//
*****
வாங்க யாதவன் சார்...
பிரச்சனை இல்லாத மனிதனே இல்லைன்னு சொல்றீங்க... அது மிக சரி...
// Chitra said...
எட்டு வைத்து எட்டு வைத்து - எட்டு திக்கும் கொடி கட்டி பறக்குது!//
*****
வாங்க சித்ரா மேடம்...
நீங்க பாடின பாட்டு கூட நல்லா தான் இருக்கு...
சுனில் கிருஷ்ணன் தவிர, யாருமே பாடல் பற்றி நான் கேட்டதை விளக்கவில்லையே!!?
இந்த பதிவிற்கு “இண்ட்லியில்”வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...
menagasathia
tamilsowmiya
maragadham
rvsm
giriblog
kavikkilavan
RDX
chitrax
ldnkarthik
kosu
urvivek
paarvai
swasam
chuttiyaar
Rajeshh
suthir1974
idugaiman
easylife
Thanks.
/மூன்றாம் எட்டில்
செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில்
பெறாதது குழந்தையுமல்ல/
Thirumanam, kuzhandhai rendume naalam 8la(25 to 32) dhan ippo perumbalanorku nadakudhu.
Moonaam 8il thedadhadhu velayum illainu 1 line add panniduvom.
64ku mela nimmadhi illainkaradhu ippo ooralavuku poruthamdhan.
//Mrs. Krishnan said...
Thanks.
/மூன்றாம் எட்டில்
செய்யாதது திருமணமல்ல
நான்காம் எட்டில்
பெறாதது குழந்தையுமல்ல/
Thirumanam, kuzhandhai rendume naalam 8la(25 to 32) dhan ippo perumbalanorku nadakudhu.
Moonaam 8il thedadhadhu velayum illainu 1 line add panniduvom.
64ku mela nimmadhi illainkaradhu ippo ooralavuku poruthamdhan.//
*********
திருமணம், அதை தொடர்ந்து குழந்தை பெறுதல் இரண்டுமே நாலாம் எட்டில்தான் இன்றைய தேதியில் நடைபெறுகிறது என்ற உங்களின் கூற்று உண்மைதான்...
மூணாம் எட்டில் தேடாதது வேலையுமல்ல... (சேர்த்து விட்டேன்..)
8ஆம் 8க்கு மேல இருந்தா நிம்மதி இல்லங்கறத மட்டும் தான் நீங்க சரிங்கறீங்க...
விரிவான கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மேடம்...
/8ஆம் 8க்கு மேல
இருந்தா நிம்மதி இல்லங்கறத மட்டும்
தான் நீங்க சரிங்கறீங்க .../
oru chinna thirutham. Idhu mattumdhan sarinu sollalai sir. Indha kaalathukku 3rd, 4th thavira meedhi ellam saridhan nu ninaikaren ninaikaren.
//Mrs. Krishnan said...
/8ஆம் 8க்கு மேல
இருந்தா நிம்மதி இல்லங்கறத மட்டும்
தான் நீங்க சரிங்கறீங்க .../
oru chinna thirutham. Idhu mattumdhan sarinu sollalai sir. Indha kaalathukku 3rd, 4th thavira meedhi ellam saridhan nu ninaikaren ninaikaren.//
********
என் சந்தேகத்தை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி திருமதி கிருஷ்ணன் அவர்களே...
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
-- எத்தனை விளையாட்டுக்களையும், ஆட்டங்களையும் பிற்காலத்தில் போட்டாலும், மழலைகளும், குழந்தைகளும் காட்டும் விளையாட்டுக்கு ஈடு கிடையாது என்பதேபொருள்..
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
--இரண்டரை வயதிலேயே கொண்டு போய் புத்தக மூட்டையைக் கொடுக்காமல், ஏழு வயது வரை நல்ல போதனைகளையும், பழக்கங்களையும், அன்பையும், சகிப்புத்தன்மையயும், விட்டுக் கொடுத்தலும் கற்றுக்கொடுத்து, முதலில் மனிதனாக மாறச் செய்து, பிறகுதான் கல்விக்கு கொண்டு செல்ல வேண்டும்..அப்பொழுது ஆழமாக உள்வாங்கிக் கொள்வார்கள்.. (அந்தக்காலத்தில் ஏழு வயதிற்கு மேல் தான் குருகுலத்திற்கு அனுப்புவார்கள். ) அதுவரை கடமை பெற்றோர்களுக்குத்தான் உண்டு.
--மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
இதுதான் மிகச் சரியானது... காலத்தினால் இன்று தள்ளிப் போகிறது.. ஆனால் இளமையில் அனுபவிப்பவன், தவறான வழியில் செல்ல மாட்டான், கவனமும் சிதறாது.. இன்றைக்கும் அரசின் அங்கீகாரம் ஆணுக்கு இருபத்தொன்றும், பெண்ணுக்கு பதினெட்டும் உண்டு.. இரண்டுமே மூன்றாம் எட்டு..
--நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
இது மிகவும் உண்மை... இதை தாண்டும் சூழ்நிலைகளில் தலைமுறை இடைவெளி மிகவும் அதிகமாகும்.. குறைந்த பட்சம் மூத்த குழந்தை தோளுக்கு மிஞ்சும்போது நம் தோள்கள் கூனிக் குறுகிஇருக்கக் கூடாது...
--ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
மனைவி, குழந்தை என்று எல்லாம் கிடைத்தவுடன், பொறுப்புடன், தனக்கு மட்டும் இன்றி குடும்பத்திற்கும் சேர்த்து உடலில் தெம்பும், திடமும் இருக்கும்போது குதிரைக்கு சேணம் கட்டியது போல் உழைத்து செல்வம் சேர்க்க வேண்டும்... இந்த எட்டு ஆண்டுகளில் சம்பாதித்து சேர்த்து வைப்பதே போதும்.. அதற்க்கு மேல் சேர்த்து, வளைத்துப் போட்டு பிள்ளைகளை முதுகெலும்பு இல்லாதவர்கள் ஆக்கக் கூடாது என்பது இதன்கருத்து.
--ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
இவன் தந்தை ஆறாம் எட்டில் சுற்றி கற்றுக்கொடுத்த விஷயங்களை நேரடியாக அறியவும், தன் திறமைகளை வெளி உலகுக்குகு காட்டி தன் வம்சத்திற்குஅங்கீகாரத்தை ஏற்படுத்தி, அடுத்து தன் மகனும் இதை பின்பற்றும் வண்ணம் வாழ வேண்டும்...
--ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
உண்மை, இப்போது அடுத்த தலை முறை ஸ்திரமாகி இருக்கும். சிறு வழி காட்டுதலோடு தன் பணியை நிறைவு செய்து மனதிற்கும் உடலிற்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.
--எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல
இதற்கு உயிரை விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை.. முதல் ஏழு - நிலைகளியே எட்டாம் எட்டிலும் இருந்தால் உனக்கு நிம்மதி இருக்காது என்பதே பொருள்... பற்றற்ற நிலையில் சமமாகப்பார்க்க வேண்டும் அப்படி என்றால் நிம்மதி யாக இருக்கலாம்..
// ஈ ரா said...
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
-- எத்தனை விளையாட்டுக்களையும், ஆட்டங்களையும் பிற்காலத்தில் போட்டாலும், மழலைகளும், குழந்தைகளும் காட்டும் விளையாட்டுக்கு ஈடு கிடையாது என்பதேபொருள்..
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
--இரண்டரை வயதிலேயே கொண்டு போய் புத்தக மூட்டையைக் கொடுக்காமல், ஏழு வயது வரை நல்ல போதனைகளையும், பழக்கங்களையும், அன்பையும், சகிப்புத்தன்மையயும், விட்டுக் கொடுத்தலும் கற்றுக்கொடுத்து, முதலில் மனிதனாக மாறச் செய்து, பிறகுதான் கல்விக்கு கொண்டு செல்ல வேண்டும்..அப்பொழுது ஆழமாக உள்வாங்கிக் கொள்வார்கள்.. (அந்தக்காலத்தில் ஏழு வயதிற்கு மேல் தான் குருகுலத்திற்கு அனுப்புவார்கள். ) அதுவரை கடமை பெற்றோர்களுக்குத்தான் உண்டு.
--மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
இதுதான் மிகச் சரியானது... காலத்தினால் இன்று தள்ளிப் போகிறது.. ஆனால் இளமையில் அனுபவிப்பவன், தவறான வழியில் செல்ல மாட்டான், கவனமும் சிதறாது.. இன்றைக்கும் அரசின் அங்கீகாரம் ஆணுக்கு இருபத்தொன்றும், பெண்ணுக்கு பதினெட்டும் உண்டு.. இரண்டுமே மூன்றாம் எட்டு..
--நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
இது மிகவும் உண்மை... இதை தாண்டும் சூழ்நிலைகளில் தலைமுறை இடைவெளி மிகவும் அதிகமாகும்.. குறைந்த பட்சம் மூத்த குழந்தை தோளுக்கு மிஞ்சும்போது நம் தோள்கள் கூனிக் குறுகிஇருக்கக் கூடாது...
--ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
மனைவி, குழந்தை என்று எல்லாம் கிடைத்தவுடன், பொறுப்புடன், தனக்கு மட்டும் இன்றி குடும்பத்திற்கும் சேர்த்து உடலில் தெம்பும், திடமும் இருக்கும்போது குதிரைக்கு சேணம் கட்டியது போல் உழைத்து செல்வம் சேர்க்க வேண்டும்... இந்த எட்டு ஆண்டுகளில் சம்பாதித்து சேர்த்து வைப்பதே போதும்.. அதற்க்கு மேல் சேர்த்து, வளைத்துப் போட்டு பிள்ளைகளை முதுகெலும்பு இல்லாதவர்கள் ஆக்கக் கூடாது என்பது இதன்கருத்து.
--ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
இவன் தந்தை ஆறாம் எட்டில் சுற்றி கற்றுக்கொடுத்த விஷயங்களை நேரடியாக அறியவும், தன் திறமைகளை வெளி உலகுக்குகு காட்டி தன் வம்சத்திற்குஅங்கீகாரத்தை ஏற்படுத்தி, அடுத்து தன் மகனும் இதை பின்பற்றும் வண்ணம் வாழ வேண்டும்...
--ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
உண்மை, இப்போது அடுத்த தலை முறை ஸ்திரமாகி இருக்கும். சிறு வழி காட்டுதலோடு தன் பணியை நிறைவு செய்து மனதிற்கும் உடலிற்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.
--எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல
இதற்கு உயிரை விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை.. முதல் ஏழு - நிலைகளியே எட்டாம் எட்டிலும் இருந்தால் உனக்கு நிம்மதி இருக்காது என்பதே பொருள்... பற்றற்ற நிலையில் சமமாகப்பார்க்க வேண்டும் அப்படி என்றால் நிம்மதி யாக இருக்கலாம்.//
*********
தோழமை ஈ.ரா.அவர்களே...
இது போன்றதொரு விளக்கத்திற்காக தான் காத்திருந்தேன்....
நானும் நண்பர் லாரன்ஸ் அவர்களும் இந்த பாடலை பற்றி விவாதிக்கும் போது, இருவருக்கும் இரு வேறான புரிதல் இருந்தது...
லாரன்ஸ் அவர்கள் இந்த பதிலை படித்து விட்டு என்ன சொல்வார் என்று காத்திருக்கிறேன்...
சித்தரின் கருத்தை உள்வாங்கி படத்தில் பாடல் எழுதிய வைரமுத்து அவர்கள் கொடுக்க வேண்டிய (கேட்டிருந்தால், இதே போல் தான் விளக்கம் கொடுத்திருப்பார்)அருமையான விளக்கத்தை விபரமாக தந்த ஈ.ரா.அவர்களே.... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

கோபி- லா அவர்களுக்கு,
சித்தரின் வாக்கு,அன்றைய கால கட்டத்திற்கு பொருத்தமாக இருந்தது... இன்றைய நிலையில் +1 சேர்த்து வாழ்கையை 9
, பகுதியாக பிரித்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்பது இந்த செல்ல சித்தரின் யோசனை... இது பற்றிய உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் - cdhurai@gmail.com
// cdhurai said...
கோபி- லா அவர்களுக்கு,
சித்தரின் வாக்கு,அன்றைய கால கட்டத்திற்கு பொருத்தமாக இருந்தது... இன்றைய நிலையில் +1 சேர்த்து வாழ்கையை 9
, பகுதியாக பிரித்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்பது இந்த செல்ல சித்தரின் யோசனை... இது பற்றிய உங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன் - cdhurai@gmail.com//
******
தென்பாண்டி தங்கமே.... தென் தமிழ்நாட்டின் சிங்கமே... பார்த்தேன் உன் கர்ஜனை... நீ செய்தது செந்தமிழில் அர்ச்சனை...
செல்ல சித்தரின் வெல்ல வரிகள் பலே ஜோர் ரகம்...
9 ஆக வாழ்க்கையை பிரித்துப்பாக்க சொன்ன உங்களின் புதிய கணக்கு புல்லரிக்க வைத்தது...
மிக்க நன்றி செல்ல சித்தரே....
யார் சொன்னது இப்பொழுதெல்லாம் நல்ல பாடல்கள் வருவதில்லை என்று...ஐயாஅறிவுமதி அவர்கள் எழுதிய "டாடி மம்மி வீட்டி இல்லை தடை போடா யாருமில்ல..."என்ற தத்துவ பாடலை நீங்க கேட்டதில்லை போலும்...
//திவா said...
யார் சொன்னது இப்பொழுதெல்லாம் நல்ல பாடல்கள் வருவதில்லை என்று...ஐயாஅறிவுமதி அவர்கள் எழுதிய "டாடி மம்மி வீட்டி இல்லை தடை போடா யாருமில்ல..."என்ற தத்துவ பாடலை நீங்க கேட்டதில்லை போலும்.//
******
வாங்க திவா அவர்களே...
நீங்கள் உதாரணம் காட்டிய அந்த உயரிய தத்துவ பாடலை லேசாக அசை போட்டதில் அந்த அரிய தத்துவ வரிகள் இப்போதும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கூடவே போனசாக இன்னொரு பாடலையும் கேட்க நேர்ந்தது - நான் அடிச்சா தாங்க மாட்ட.... நாலு நாளு தூங்க மாட்ட.....
அட அட அட.... என்னே தத்துவம்.. என்னே தத்துவம்... இது போன்ற பாடாவதி பாடல்களை எழுதும் இவர்களை எல்லாம் தூக்கிப்போக தனியாக ஏதும் சுனாமி வராதோ!!??
என்ன வேணும்னாலும் சொல்லுங்க .எட்டு தான் என் ராசி நம்பர் ஆக்கும் :)
//பத்மா said...
என்ன வேணும்னாலும் சொல்லுங்க .எட்டு தான் என் ராசி நம்பர் ஆக்கும் :)//
*******
வாங்க பத்மா மேடம்...
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....
நண்பர் கோபிக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
வாழ்வியல் பற்றிய இந்த பதிவு சூப்பர். மிகவும் சுவாரசியமாகவும் சுவையாகவும் உள்ளது. சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட இந்த பதிவும், அதற்கு ஆர்வமுடன் எழுதப்பட்ட ஆழமான பின்னூட்டங்களும் மிக பிரமாதம்.
மேற்கத்திய சிந்தனையில் வாழ்வை மூன்றே பிரிவுகளாக பிரிப்பான் ஒரு தத்துவவாதி.
UPTO 25 LEARN
UPTO 50 EARN
AFTER THAT SPEND
மனித வாழ்வை ஒரு meta model ஆக்கி, எல்லோருக்கும் பொதுவாய் ஒரு தீர்வு சொல்லும் நோக்கில், நம் எல்லோரையுமே
எட்டு எட்டா மனுச வாழ்வ பிரிச்சுக்கோ
அதில் எந்த எட்டில் இப்ப இருக்க புரிஞ்சுக்கோ
என ஒரு தேர்ந்த அரிச்சுவடி போல் இருக்கும் பாடல் வரி நம்மை யோசிக்கவும் சரி செய்யவும் உதவுகிறது. இந்த பாடலின் நோக்கமும் ஆழமும் என்னை அதிசயிக்கவே வைக்கிறது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என சொல்லாமல், இதை ஆராயவும் யோசிக்கவும் கிடைத்த வாய்ப்பாகவே கருதுகிறேன்.
1. திருமணத்தை 24க்குள் முடி என்பதில் உள்ள நன்மைகள் மிகச் சரியானதே. இன்றைய நடைமுறையில் கொஞ்சம் காலம் தள்ளிப் போனாலும் இந்த வரிகளில் உள்ள கருத்தை நிராகரிக்க முடியாது. (நாமென்ன 54 வயதிலோ, 60 வயதிலோ கல்யாணம் செய்யும் இன்றைய பிரபலங்களை வைத்தா கருத்து சொல்ல முடியும்)
2. குழந்தை பிறப்பை 32க்குள் முடித்தால் தான் நல்லது. ஒரு ஆண் குழந்தையோ பெண் குழுந்தையோ தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு ஒரு 20-25 வயசு அல்லது வருடங்கள் ஆகும், அதுவரை அவர்களை காக்கும் கடமை பெற்றோருக்கு உண்டென்பதால், ஓய்வு காலத்துக்கு முன் அந்த கடமைகள் முடிவது நல்லது.
என்றாலும் சில கேள்விகள்.
1. கல்வி என்பது பள்ளிப் படிப்பு மட்டுமா, அல்லது நாம் கற்றுக் கொள்ளும் அத்தனை விசயங்களுமா.
2. மொழி, மற்றும் அடிப்படை கல்வி மட்டுமே பள்ளியில் படிக்கிறோம், நமது எல்லா தொழில் அறிவுகள நிச்சயமாய் அதற்கு மேல் தானே தொடங்குகிறது.
3. கல்வியை அப்படி ஒரு காலகட்டத்திற்குள் அடக்கமுடியுமா, அல்லது மூச்சு முடியும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டுமா.
4. இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல எனும் சிந்தனை, நாம் நாற்பது வயதில் கற்றுக் கொள்ளும் கல்வியை ஏளனம் அல்லவா செய்கிறது.
5. ஊர் சுற்றுவது என்பது (ஏண்டா இப்படி ஊர சுத்தி வர்றே…. என நம் பெற்றோர்கள் திட்டியது அல்ல அல்லவா……) உலகம் பூராவும் செல்வது என்பது, நம் அறிவை விருத்தியாக்கும். கலாச்சார வேற்றுமைகள், மனித சமூதாயம் பற்றிய ஆழமான விசயங்களை கற்றுக் கொடுக்கும். 24 மணி நேரத்தில் உலகையே எளிதாய் வலம் வரும் இன்றைய கால கட்டத்தில் ஆறாம் எட்டுக்கு மேல் வேண்டாம் என்பது வேண்டாமே.
6. செல்வம் சேர்ப்பதும் இப்படி ஒரு காலகட்டத்தில் அடங்குமா. Principle acquisition / accumulation எனும் சாத்தியக்கூறு நாற்பது வயதிற்குள் நடந்தால் நல்லது. என்றாலும் Asset appreciation எனும் அற்புதம் 45 – 50 வயதில் தானே இன்றைய நடைமுறையில் துவங்குகிறது.
6.64 வயதிற்கு மேல் நிம்மதியில்லை, என்பதை இயல்பா நடைமுறையா என்பதை விடுத்து, ஆக்கபூர்வமாய் எப்படி 64 வயசுக்கு மேல் நம்மை பயனுள்ளவனாக்கலாம் என சிந்திக்க வேண்டாமா. எப்படி நம்மால் மற்றவருக்கு உபயோகம் என சிந்திக்க தொடங்கினால் நல்லதல்லவா. இன்போசிஸ் நீலகண்டன் தனது 64 வயது ஓய்வுக்கு பின் இந்திய தேசத்தின் அடையாள அட்டை வழங்கும் ஒரு வேலையை எடுத்துக் கொண்டது போல், நம்மை நலமாக்குவது நம் கையில் அல்லவா உள்ளது.
lawrance
வருகை தந்து, பதிவை ஆழமாக படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி லாரன்ஸ் அவர்களே...
உங்களின் சில கேள்விகள், சந்தேகங்கள் இங்கே விளக்கப்படுகிறது..
//1. கல்வி என்பது பள்ளிப் படிப்பு மட்டுமா, அல்லது நாம் கற்றுக் கொள்ளும் அத்தனை விசயங்களுமா. //
கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களுக்கும் பொதுவாக இங்கே சொல்லப்பட்டுள்ளது... இளமையில் கல் என்பது முன்னோர் மொழி.. ஆகவே, இளமையில் கற்கும் ஆர்வம் வேண்டும் என்பதையே இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வி அல்ல என்று சொல்கிறது..
//2. மொழி, மற்றும் அடிப்படை கல்வி மட்டுமே பள்ளியில் படிக்கிறோம், நமது எல்லா தொழில் அறிவுகள நிச்சயமாய் அதற்கு மேல் தானே தொடங்குகிறது.//
அடிப்படையாக படிக்கும் அந்த படிப்பை தான் இரண்டாம் எட்டு என்ற பதம் குறிக்கிறது... 16 வயது வரை நாம் படிப்பது தானே பின்வரும் அனைத்து படிப்புகளுக்கும் தேவைப்படும்...
//3. கல்வியை அப்படி ஒரு காலகட்டத்திற்குள் அடக்கமுடியுமா, அல்லது மூச்சு முடியும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டுமா.//
கல்வியை கண்டிப்பாக எந்த கூட்டுக்குள்ளும் அடக்க முடியாது.... மூச்சு இருக்கும் வரை கற்க தான் வேண்டும்....
//4. இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல எனும் சிந்தனை, நாம் நாற்பது வயதில் கற்றுக் கொள்ளும் கல்வியை ஏளனம் அல்லவா செய்கிறது.//
கண்டிப்பாக இல்லை ஜி.. இரண்டாம் எட்டு வரை கல்லாதவன், அதற்கு பிறகு கற்பதில் என்ன விதமான ஆர்வம் கொள்ளப்போகிறான் என்ற எண்ணத்தில் தான் சொல்லி இருப்பதாக நினைக்கிறேன்...
//5. ஊர் சுற்றுவது என்பது (ஏண்டா இப்படி ஊர சுத்தி வர்றே…. என நம் பெற்றோர்கள் திட்டியது அல்ல அல்லவா……) உலகம் பூராவும் செல்வது என்பது, நம் அறிவை விருத்தியாக்கும். கலாச்சார வேற்றுமைகள், மனித சமூதாயம் பற்றிய ஆழமான விசயங்களை கற்றுக் கொடுக்கும். 24 மணி நேரத்தில் உலகையே எளிதாய் வலம் வரும் இன்றைய கால கட்டத்தில் ஆறாம் எட்டுக்கு மேல் வேண்டாம் என்பது வேண்டாமே.//
இதுவும் உங்களால் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது...
ஆறாம் எட்டுக்கு மேல் வேண்டாம் என்ற சொல்பதம் அந்த பாடலில் வரவேயில்லை...

6. செல்வம் சேர்ப்பதும் இப்படி ஒரு காலகட்டத்தில் அடங்குமா. Principle acquisition / accumulation எனும் சாத்தியக்கூறு நாற்பது வயதிற்குள் நடந்தால் நல்லது. என்றாலும் Asset appreciation எனும் அற்புதம் 45 – 50 வயதில் தானே இன்றைய நடைமுறையில் துவங்குகிறது. //
இங்கும் உங்கள் புரிதல் தவறோ என்று தோன்றுகிறது.... செல்வம் சேமிப்பது எந்த வயதிலும் அடங்காது.. ஆயினும் ஏதாவதொரு வயதில் அந்த மனோபாவம் வந்தாக வேண்டுமே... அதையே அந்த ஐந்தாம் எட்டு குறிக்கிறது...
//6.64 வயதிற்கு மேல் நிம்மதியில்லை, என்பதை இயல்பா நடைமுறையா என்பதை விடுத்து, ஆக்கபூர்வமாய் எப்படி 64 வயசுக்கு மேல் நம்மை பயனுள்ளவனாக்கலாம் என சிந்திக்க வேண்டாமா. எப்படி நம்மால் மற்றவருக்கு உபயோகம் என சிந்திக்க தொடங்கினால் நல்லதல்லவா. இன்போசிஸ் நீலகண்டன் தனது 64 வயது ஓய்வுக்கு பின் இந்திய தேசத்தின் அடையாள அட்டை வழங்கும் ஒரு வேலையை எடுத்துக் கொண்டது போல், நம்மை நலமாக்குவது நம் கையில் அல்லவா உள்ளது. //
இன்று, இங்கு 64 வயதிற்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் / அனைவரின் நிலையும் இன்ஃபோசிஸ் நீலகண்டனை போலிருந்தால், உங்கள் கேள்வி சரிதான்... இல்லையென்னும் பட்சத்தில் பதில் வேறு...
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல
இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல
- இந்த இரண்டையும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒப்புக் கொள்ளலாம்!
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
-இதை பெண்களுக்கு என்று கொள்ளலாம்!
நான்காம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
-இது உண்மைதான், முப்பத்திரண்டு வயதுக்குள் குழந்தைகள் பிறந்தால் தான், நமக்கு அறுபது வயது வரும்போது அவர்கள் நம்மை நம்பி இருக்காமல், செட்டில் ஆகியிருப்பார்கள்!
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
- இந்த இரண்டையும் ஒன்றாகவே கொண்டு நாற்பதெட்டு வயதுக்குள் உலகத்தைச் சுற்றியாவது செல்வம் சேர்க்க வேண்டும் என்று கொள்ளலாம்!
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல
- இது தற்போது நடைமுறைக்கு ஒத்து
வராது என்றே தோன்றுகிறது!
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல
- இது உண்மைதான் என்று எனக்கு படுகிறது!
ஒரு சிறந்த பாடலை எடுத்துக் கொண்டு ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வந்திருக்கிறீர்கள், நன்றி, வாழ்த்துகளுடன்!
அன்புத்தோழமை பெயர் சொல்ல விருப்பமில்லை அவர்களுக்கு...
தங்களின் விரிவான பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி...
இது போன்ற பதில்களை கொண்டே, பாடலைப்பற்றிய என் புரிதலும் இருக்குமென்று நம்புகிறேன்..
நண்பர்கள் ஈ.ரா, லாரன்ஸ் இருவரையும் தொடர்ந்து உங்களின் வி்ளக்கமான பதிலும் என்னை மிகவும் கவர்ந்தது...
மிக்க நன்றி தல.....
இந்த பாடலில் சொல்லியிருக்கும் ஒவ்வொரு எட்டும் நமக்கு சவால் மாதிரி..இன்னும் இருக்கும் எட்டுக்களை எப்படி சமாளிக்க போறோமோன்னு இருக்கு கோபி...தத்துவம் மட்டுமல்ல உண்மைகளையும் பகிரும் பாடல் இது
அடேயப்பா..!!
பாட்டை எழுதிய வைரமுத்து கூட இவ்வளவு யோசிச்சு இருப்பாரா தெரியல. அருமையான விளக்கங்கள். நல்ல பகிர்வு கோபி.
// தமிழரசி said...
இந்த பாடலில் சொல்லியிருக்கும் ஒவ்வொரு எட்டும் நமக்கு சவால் மாதிரி..இன்னும் இருக்கும் எட்டுக்களை எப்படி சமாளிக்க போறோமோன்னு இருக்கு கோபி...தத்துவம் மட்டுமல்ல உண்மைகளையும் பகிரும் பாடல் இது//
*******
வாங்க தமிழரசி...
வாழ்க்கையே இன்றைய தேதியில் சவாலானதாக மாறிய நிலையில், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் (அடியும்) கவனமானதாக இருக்க வேண்டும்...
அழகான வாழ்வியல் தத்துவத்தை விளக்கும் இந்த பதிவிற்கு நிறைய தோழமைகள் வருகை தந்து, கருத்து பகிர்ந்து எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது....
//அம்பிகா said...
அடேயப்பா..!!
பாட்டை எழுதிய வைரமுத்து கூட இவ்வளவு யோசிச்சு இருப்பாரா தெரியல. அருமையான விளக்கங்கள். நல்ல பகிர்வு கோபி.//
******
ஹா...ஹா...ஹா. வாங்க அம்பிகா.
பதிவின் நோக்கமே இந்த பாடலை படித்து கருத்து பகிரும் ஒவ்வொருவரும் எவ்வாறு புரிந்துள்ளார் என்று அறிவதே..
அந்த வகையில் நிறைய தோழமைகள் ஆர்வமுடன் வந்து, பதிவை படித்து தங்கள் கருத்தை பகிர்ந்தது பாராட்டுக்குறியது...
நாம் அந்த எழுத்தாளர் / பாடலாசிரியரின் பார்வை இந்த பாடலை எப்படி நோக்கியது என்று பார்க்காமல் மாறுபட்டு விலகி யோசித்ததாலேயே பல்வேறு விளக்கங்கள் வந்தது...
என்னா ஆராச்சி ஒரு பாட்டை வச்சு??!! எல்லாரும் இக்காலச் சித்தர்கள்னு சொல்லிரலாம் போல!!
அந்தப் பாட்டு ஒரு பொதுவான அறிவுரையாகச் சொல்லப்பட்டிருக்கிறது; தனிமனிதனின் சூழ்நிலைகளைப் பொறுத்து அவற்றை அனுசரித்துச் செல்லவேண்டும், அவ்வளவுதான்!!
இருந்தாலும், ஆணோ, பெண்ணோ, 3-ம் 8-ல் கல்யாணம் செஞ்சுக்கிறதுதான் சரி, நல்லதும்கூட!!
//ஹுஸைனம்மா said...
என்னா ஆராச்சி ஒரு பாட்டை வச்சு??!! எல்லாரும் இக்காலச் சித்தர்கள்னு சொல்லிரலாம் போல!!
அந்தப் பாட்டு ஒரு பொதுவான அறிவுரையாக சொல்லப்பட்டிருக்கிறது; தனிமனிதனின் சூழ்நிலைகளைப் பொறுத்து அவற்றை அனுசரித்துச் செல்லவேண்டும், அவ்வளவுதான்!!
இருந்தாலும், ஆணோ, பெண்ணோ, 3-ம் 8-ல் கல்யாணம் செஞ்சுக்கிறதுதான் சரி, நல்லதும்கூட!!//
***********
வாங்க ஹுஸைனம்மா... வணக்கம்.
நம் வாழ்வியல் பற்றிய பல நல்ல விஷயங்களை உள்ளடக்கியதாலேயே இந்த பாட்டை பற்றிய பதிவு...
அனைவரின் புரிதலையும் அறிய விரும்பினேன்... அது போல், பல நண்பர்கள் முன்வந்து, அவர்களின் புரிதலை விளக்கினார்கள்...
நீங்கள் சொல்வதும் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது...
வருகை தந்து, பதிவை படித்து, உங்களின் மேலான கருத்தை பதிந்தமைக்கு மிக்க நன்றி .....
Innum sila mani nerathil ENDHIRANAI dharisikka pogum AMEERAGA ARIMA AVARGALUKKU VAAZHTHUKKAL
பருவத்தில் பயிர் செய் என்பது போல் எல்லாம் காலத்தில் நடக்க வேண்டும் என்பது இந்தபாடலின் கருத்து.
படிக்க வேண்டிய காலத்தில் படித்து,திருமணம் செய்ய வேண்டிய காலத்தில்(24) திருமணம் செய்து,குழந்தை பெறுவதை தள்ளிப் போடமல் பெற்று,வளர்த்து ஆளக்கி,நம் கடமை முடித்தபின்,நம் மனநிறைவுக்கு
ஆக்கபூர்வமான விஷயங்களை செய்ய வேண்டும்.
அருமையான பதிவு.. தொடரட்டும் எழுத்துப் பயணம்...!
வருகை தந்து பதிவை படித்து கருத்து பகிர்ந்த தோழமைகள்
திருமதி கிருஷ்ணன்
கோமதி அரசு
தமிழ் டிஜிடல் சினிமா
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..
என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் அதையெல்லாம் நிறுத்திவிட்டு இந்தப் பாடலைக் கேட்கத் தோன்றும்.
தத்துவப் பாடல். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
//சுபத்ரா said...
என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் அதையெல்லாம் நிறுத்திவிட்டு இந்தப் பாடலைக் கேட்கத் தோன்றும்.
தத்துவப் பாடல். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி//
********
அப்படியா? ஆமாம்னா, நீங்க ஒரு ரஜினி ரசிகையா இருக்கணும்...
நல்ல பாடல், நல்ல கருத்தை உள்ளடக்கியது..
எந்திரன் பார்த்தாச்சா?
Post a Comment