எலே எடுபட்ட பயலே சங்கி... எப்படிடா இருக்க??
வாலே மங்கி... இன்னாடா மேட்டரு? நெம்ப நாளா ஆளயே காணுமேடா? உள்ளார எங்கயாவாது போயி வந்தியா??
இன்னாடா, காலைலயே டெர்ரர் கேள்வி எல்லாம் கேக்கற?? நீயே என்னிய அனுப்பிடுவ போல கீதேடா.... நானு இங்க தாண்டா இருக்குறேன்... சொல்லுடா... இன்னான்னா மேட்டரு வச்சுருக்குற..
சொல்றேன்டா, கேட்டுக்கோ.. நமீதா மேட்டரு, நம்ம கமல்தாசன் மேட்டரு... கேப்டன் மேட்டரு... அல்லாத்தையும் சொல்றேன்...
நம்ம நமீதா சூசைட் பண்ணிடுச்சின்னு எந்த பேமானியோ சொல்லிகினான் போல... அது ஒடனே எல்லா பத்திரிக்கை காரய்ங்களயும் கூப்பிட்டு, இனிமே பொடவை கட்டுற மாதிரி ரோல்ல தான் நடிக்க போறேன்... கொஞ்ச நாள் எந்த படத்துலயும் நடிக்கலேன்னா ஒடனே செத்துட்டேன்னு சொல்றாய்ங்களேன்னு அயுதுச்சாம்...... முன்னாடி ஒக்காந்து இருந்த பத்திரிக்கை காரய்ங்க எல்லாம் அத்த பார்த்து பெருமூச்சு விட்டாய்ங்களாம்....
அப்டியா?? டேய்.... ஒயுங்கா சொல்லுடா.... அவிய்ங்க பெருமூச்சு விட்டது, நமீதா அயுவுறத பார்த்து தானேடா?...
ஆமாண்டா.....பொறவு... நம்ம கமல்தாசன் அவரோட "மன்மதன் அம்பு" படத்தோட கேசட் ரிலீஸ் சிங்கப்பூர்ல பண்ணுனாராம்.....
இன்னாட சொல்ற, படத்தோட கேசட்டா?
டேய் டேய் மட மங்கி... படத்தோட பாட்டு கேசட்டுடா... படம் கேசட் இல்ல... இன்னாடா இம்புட்டு லொள்ளு பேசுத நீயி.....
சரி.....சரி.... சூப்பர் ஸ்டாரு மலேசியாவுல பண்ணிட்டாரு இல்ல.... அதான் இவரு சிங்கப்பூர்ல ரிலீஸ் பண்ணுனாரா.... சூப்பருடா சங்கி.... சரி, கேசட் ரிலீஸ் பண்ண சொல்ல அவர பேச சொன்னாய்ங்களா??
ஆமா... அவரு பேசினாரு... ஆனா, வயக்கம் போல, யாருக்கும் பிரியல... பாடுனாரு...... யாருக்கும் ரசிக்கல.... அப்புறம் நம்ம கமல்தாசன் கவிதை படிச்சப்போ, அமுல் பேபி மாதவன் ரொம்ப அயுதாராமாம்....
இன்னாத்துக்குடா.... நம்மாளு படிச்ச கவிதையை கேட்டா அயிதாரு?
டேய்....டேய்... வில்லங்கம் புடிச்சவனே...... பார்த்து சூதானமா பேசுடா... ரெண்டாவது தடவ படிச்சா, வேற அர்த்தம் வருதுடா... அந்த மேட்டரே மாதவனே சொல்றாருபா.... நீ கேட்டுக்கோ.....
கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவர் மன்மதன் அம்பு படப் பாடலைப் பாடி நடனமாடியபோது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன், என்றார் மாதவன்.
மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் என்று துவங்கும் பாடலை கமல் எழுதி இருக்கிறார். அற்புதமான பாடல் அது. கேசட் ரிலீஸப்போ, அதை கேட்டபோது நான் குழந்தைபோல் அழுதேன். ஆண்கள் அழக் கூடாது என்பார்கள். ஆனால் கமல் பாடல் என்னை அழ வைத்தது. விழாவில் பங்கேற்ற பலர் கண்களில் கண்ணீரை பார்த்தேன்..", என்றார்.
இதுக்கு நம்ம கமல்தாசன் ஒடனே மாதவனாண்ட, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.... மக்களே / ஆத்தீகவாதிகளே ....உங்களின் பக்தி, கடவுள் நம்பிக்கை எல்லாத்தையும் உங்கள் வீட்டின் நான்கு சுவற்றிற்குள் வைத்துக்கொள்ளுங்கள்.... பொதுவில் அதைப்பற்றி பேசாதீர்கள் என்றார்.....
சரி.... அடுத்த மேட்டருக்கு வாடா.... கேப்டன் என்னா பண்ணுனாரு?
சென்னையில நேத்து கேப்டன், அவிய்ங்க கச்சிக்காரய்ங்க எல்லாம் ஒண்ணு கூடி...
ஆஹா... ஒண்ணு கூடிட்டாய்ங்கடா... ஒண்ணு கூடிட்டாய்ங்க... சரி...இன்னா பேசிக்கினாய்ங்க...
இன்னானா... அவரு நடிச்ச படம் “விருத்தகிரி”யோட கேசட் ரிலீஸ் பண்ணுனாரு....
இவருமாடா.... ஆமாம், இவரு இன்னமுமாடா நடிக்கறாரு.... யார நம்பி? இவருக்கு கடைசியா “ரமணா” மட்டும் தானடா ஓடுச்சு.... அப்புறம் வரிசையா டெர்ரர் படங்கள் தானே ரிலீஸ் பண்ணுனாரு.....
டேய்... நீ தெரிஞ்சுதான் கேக்கறியா... நம்ம ஆளுக்கு நெம்ப தகிரியம்டா... அதனால, இந்த வாட்டி அவரே “விருத்தகிரி” படத்த டைரக்ட் பண்ணிட்டாருடா.... நெனச்ச எடத்துல பாட்டு வச்சுக்கலாம், நெனச்ச எடத்துல சண்டை வச்சுக்கலாம்.... நெனச்ச எடத்துல அரசியல் வசனங்கள வச்சுக்கலாம்.... எப்பூடி???
அதுவும் கேசட் ரிலீஸப்போ படா சவுண்டு விட்டாராமே....
அத்த ஏண்டா கேக்கற.... படா காமெடி வசனம் சொன்னாருடா.... அவரோட விருத்தகிரி படத்த ரிலீஸ் பண்ண விடாம தடுக்கறாய்ங்களாம்.... அப்படி பண்ணுனா, அவரு என்னா பண்ணுவேன்னு சொன்னத பாருடா.....
//"எனது முந்தைய படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன். அதே பிரச்சினைகள் விருதகிரி படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்தைத் தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதைக் காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.
ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன். நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்தேன். எனது மடியில் கனமில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை.//
படா டெர்ரர் தாண்டா...... அப்போ, படத்துல நெறைய அரசியல் சரவெடி வசனங்கள் இருக்கும்னு சொல்லு.....
ஆமாண்டா.... மெய்யாலுமே அது தாண்டா படம் பூரா இருக்கும்....
ஏண்டா, வர வர நம்ம நாட்டுல இவ்ளோ விசப்பரீட்சை எல்லாம் நடக்குது... ஒருத்தரு பிரம்மாண்டமா மலேசியாவுல கேசட் ரிலீஸ் பண்ணுனா, இன்னொருத்தர் அதுக்கு போட்டியா, சிங்கப்பூர்ல கேசட் ரிலீஸ் பண்ணுராரு... இன்னொருத்தரு, கண்டிப்பா எந்த பாட்டுமே ஹிட் ஆகாதுன்னு தெரிஞ்சு, ஒரு மீஜிக் டைரடக்கர இம்சை பண்ணி, ஒரு அஞ்சு பாட்டு வாங்கி போட்டு, அத்த ஒரு கவர்ல போட்டு, கச்சி காரய்ங்கள எல்லாம் கூப்பிட்டு, ரிலீஸ் பண்ணி.... அட போப்பா......வயக்கம் போல இல்லாம, இன்னிக்கு எனிக்கு ஜாஸ்தியா தல சுத்துதுடா...
சரி... வேற ஏதாவது மேட்டர் வேணுமா??
அய்யோ.... யப்பா.....அப்பாலிக்கா மிச்ச மேட்டரு எல்லாம் சொல்றா... நான் நேர அங்கனதான் போறேன்... ஆமாம்...டாஸ்மாக்தான்..ஒரு ஆஃப் அடிச்சாதான் சுத்தறது நிக்கும்... இன்னாது... இன்னாடா இன்னா சுத்துதுன்னு கேக்கற... என் தலதாண்டா மட மங்கி பயலே...
18 comments:
hahaha
//இந்த படத்தைத் தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதைக் காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.//
என்னாது படத்தை பார்கனுமா?
அந்த சக்தி எனக்கு இல்லை
கோபிக்கு தான் உண்டு
அருமை வாழ்த்துகள்
//
LK said...
hahaha//
**********
வாங்க LK....
என்ன தலைவா... பயங்கர சிரிப்பு போல இருக்கு...
முதலில் வருகை தந்து, கமெண்டியதற்கு மிக்க நன்றி....
//S Maharajan said...
//இந்த படத்தைத் தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதைக் காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.//
என்னாது படத்தை பார்கனுமா?
அந்த சக்தி எனக்கு இல்லை
கோபிக்கு தான் உண்டு//
*******
வாங்க மகராஜன்....
கூடவே இன்னொரு டெர்ரர் மேட்டர் சொன்னாரு.... தியேட்டர் கிடைக்கலேன்னா, ரோட்டுல வேட்டிய கட்டி படம் காட்டுவேன்னு....
யாரோட வேட்டின்னு தெரியல...
// யாதவன் said...
அருமை வாழ்த்துகள்//
*******
வாங்க யாதவன் சார்...
வருகை தந்து, பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....
”ஒரே சோக்காகீது வாத்யாரே”, டமாசுதான் போ”
//வெங்கட் நாகராஜ் said...
”ஒரே சோக்காகீது வாத்யாரே”, டமாசுதான் போ”//
**********
வாங்க வெங்கட் அண்ணாத்தே....
சோக்கா கீதுன்னு சொன்னதுக்கு டேங்க்ஸுபா......
கோபி ரொம்ப நகைச்சுவையாக நல்லாயிருக்கு..வாழ்த்துக்கள்!! ரொம்ப நாள் ஆச்சு உங்க வலைப்பக்கம் வந்து...
//Mrs.Menagasathia said...
கோபி ரொம்ப நகைச்சுவையாக நல்லாயிருக்கு..வாழ்த்துக்கள்!! ரொம்ப நாள் ஆச்சு உங்க வலைப்பக்கம் வந்து..//
**********
வாங்க மேனகா....
ரொம்ப நாள் கழிச்சு வந்ததற்கு முதற்கண் நன்றி.....
பதிவை ரசித்து படித்து, வாழ்த்திய தோழமைக்கு மிக்க நன்றி....
ha ha ha
sirippu sirippa varudhu
***
/கமல் எனக்கு கடவுள் போன்றவர
kamal - enaku kadavul mela nambikai illai.
Madhavan - adhudhan nanum solren. Neenga enaku kadavul pondravar.
***
/அதனால, இந்த
வாட்டி அவரே “விருத்தகிரி” படத்த
டைரக்ட் பண்ணிட்டாருடா .... நெனச்ச
எடத்துல பாட்டு வச்சுக்கலாம்,
நெனச்ச எடத்துல
சண்டை வச்சுக்கலாம்.... நெனச்ச
எடத்துல அரசியல் வசனங்கள
வச்சுக்கலாம் .... எப்பூடி???//
naama ninaicha edathula theatrela irundhu oodiyum varalaam
நகைச்சுவையாக நல்லாயிருக்கு கோபி
வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்திய திருமதி கிருஷ்ணன், சரவணன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி...........
ha,ha,ha,ha....
//Chitra said...
ha,ha,ha,ha....//
*******
Thanks Chitra for your visit and the laugh.....
இந்த பதிவிற்கு வாக்களித்து இண்ட்லி/தமிழிஷில் பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....
karthikvlk
kavikkilavan
venkatnagaraj
sriramanandaguruji
menagasathia
RDX
mrskrishnan
nagarajachozhan
chitrax
Karthi6
ashok92
sujeevan
arasu08
swasam
jollyjegan
urvivek
easylife
vilambi
hihi12
kvadivelan
varothayann
அண்ணாத்த விருத்தகிரி, மன்மதன் பாடல்கள் எப்பூடி ? கேக்க கூடியமாதிரி இருக்கா? இல்லியா?
//எப்பூடி.. said...
அண்ணாத்த விருத்தகிரி, மன்மதன் பாடல்கள் எப்பூடி ? கேக்க கூடியமாதிரி இருக்கா? இல்லியா?//
********
இல்ல தலைவா....
Post a Comment