Thursday, March 19, 2009

கேப்டனின் அவதாரங்கள் - தேர்தல் கிலி (மக்களுக்கு)






என்னிய யாருமே இதுவரைக்கும் கூப்பிடல, ஆனா, யாரு கூப்பிட்டாலும், நான் அவிங்க பக்கம் போறதுன்னு முடிவு பண்ணிட்டேன். கொள்கை பாத்தா, கையில இருக்கற காசுக்கு கால் கிலோ வெங்காயம் கூட வாங்க முடியாது. அதான் "தல"ய போய் பார்த்து, பேசி, முடிவு பண்ணிடலாம்னு இருக்கேன்..(இதுதான் என்னோட லேட்டஸ்ட் அரசியல் டயலாக்).
என் கணக்கு இப்போ புதுசு. எனக்கு தேவை 4-5 தொகுதி, 40-50 கோடி பணம். இத யாரு குடுத்தாலும், நான் அவிங்கள பாக்க போவேன். கூட்டணி ஓகேதான்.

நான் இப்போவும் சொல்றேன், என் கூட்டணி மக்களோட தான்.

என்னோட இந்த டயலாக், சினிமாவுக்கு தான், அரசியலுக்கு இல்ல. அதனால மக்கள் நான் சொல்றத நல்லா புரிஞ்சுக்கணும்.

நீங்க அவிங்ககிட்ட கேட்டு வாங்குங்க, நானும் அவிங்ககிட்ட கேட்டு வாங்குறேன். எப்படி நம்ம கணக்கு? அஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

இப்போ எனக்கு இருக்கற ஒரே பயம், இந்த மதுரக்கார பய "குடிவேலு"தான். அவன்தான், நான் எங்க நின்னாலும், என்னிய எதுத்து போட்டி போடுவேன்னு சொல்லி இருக்கான். என்ன இருந்தாலும் அவனும் ரோசக்காரன் .... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு.

ஆனா, ஒரு பாட்டில் சல்பேட்டா வுட்டுட்டு, அவன் வீட்டாண்ட போய் சவுண்டு விடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன். அப்படி ஏதாவது முடிவு பண்ணினா, நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லிடறேன் மக்களே. அதுக்கும் உங்க ஆதரவு வேணும்.

(மேலே இருக்கற என்னோட போட்டோவ கொழந்தைங்க கண்ணுல படாம வைங்க, அப்படியே நீங்க யாரும் பாத்து பயந்துற வேண்டாம்னு என் ஊரு அய்யனாரு சாமி கிட்ட வேண்டிக்கறேன்).

3 comments:

கிரி said...

//இப்போ எனக்கு இருக்கற ஒரே பயம், இந்த மதுரக்கார பய "குடிவேலு"தான்.//

:-)))))))))))

R.Gopi said...

கிரி said...

//இப்போ எனக்கு இருக்கற ஒரே பயம், இந்த மதுரக்கார பய "குடிவேலு"தான்.//

*************

வாங்க கிரி,

முழு பாட்டில் டாஸ்மாக் உள்ளே பொய்விட்டால், இதுபோல் ஏதாவது சொல்லாமலா போவார் நம்ம "கேப்டன்"??

வால்பையன் said...

//இப்போ எனக்கு இருக்கற ஒரே பயம், இந்த மதுரக்கார பய "குடிவேலு"தான்.//

ஏன்பா என்னைய வச்சி யாரும் காமெடி கீமெடி பண்ணலையே!