Sunday, March 15, 2009

தேர்தல் 2009 - அராஜகங்கள் ஆரம்பம்



வாக்காள பெருமக்களே, நாம் மற்றுமொரு மாபெரும் தேர்தலுக்கு தயாராகி விட்டோம். பல சில மற்றும் சில பல பெருந்தலைகள் (காடு வெட்டி குரு, செடி வெட்டி சிஷ்யர்கள், கொண்டித்தோப்பு கெடா குமார்ஸ்) ஆங்காங்கே உலா வர துவங்கி விட்டனர். விரச கவிகளின் பேனாக்களில் விரச மை இடப்பட்டு, விரச கவிதைகள் தயாராகிறது. கள்ளத்தோணி, கட்டுமரம், கடலில் தூக்கி போட்டால் மிதந்து வந்து சேவை செய்வேன் போன்ற உளுத்துப்போன கவிதைகள் எழுத தொடங்கப்பட்டு விட்டன.
பரமார்த்த குருவும், அவரின் சிஷ்யர்களும் உலகில் இருக்கும் அனைத்து வண்ணங்களை கொண்ட கரை போட்ட வேட்டியுடன் வலம் வருகிறார்கள். திடீர் தலைவர்கள், அனைத்து வாகனங்களிலும் உலா வருகிறார்கள்.

பெரும் அளவிலான கருப்புப்பணம் (சிவப்பு பணம் என்பதுதான் சரி, ஏனென்றால், பலகோடி ஏழைகளின் வயிற்றில் அடித்து உள்ளே பதுக்கி வைத்த பணம், கண்டிப்பாக சிவப்பு பணம் தான்), ஏராளமாக புரள ஆரம்பிக்கும்.

ஏமாற்று பேரங்கள் ஏற்கனவே எல்லா இடங்களிலும் ஆரம்பமாகி விட்டன. ஒன்றுக்கும் உதவாத உப்புமா மற்றும் லெட்டர் பேட் கட்சிகள், தங்கள் வேட்டியின் நிறத்தை ஏதாவது ஒரு கரைக்கு மாற்றி வருகின்றன. ஏனெனில், கரைவேட்டிக்கு தான் காசு.........

இதுபோன்ற உப்புமா பேரங்களில் யார் யார் உள்ளனர் என்று பார்ப்போம்.

விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க) - குடுங்க, ஏதாவது குடுங்க, குடுத்துட்டு அப்புறம் பாருங்க, எதுகை, மோனை விளையாடும், எதிராளிகள் பந்தாடப்படுவர். அவர்களை சரமாரியாக வசைபாடும் படலம் தொடங்கும். ஏற்கனவே விஜயகாந்தை ஒரு பொதுக்கூட்டத்தில் வசைபாடியதில், செம மாத்து கிடைத்தது. ஆனால், இவர் ஒரு விஷயத்தில் கெட்டி. யார், நிறைய கொடுக்கிறார்களோ, அவர்கள் பக்கம் தன் ஓட்டை தமிழ்குழாயை திருப்பி விடுவார். அங்கு கும்பி நாற்றத்துடன் தமிழ் அருவி பெருக்கெடுத்து ஓடும். ஒரு சீட் இல்லையென்றால் கூட பரவாயில்லை. சில கோடிகள், குறைந்தபட்சம் சில லட்சம், இவரின் லட்சியம்.

விஜயகாந்த் (தே.மு.தி.க) - இவர் இரு பெரும் தலைவர்களையும் சரமாரியாக வசைபாடி, ஒரு நல்ல மாற்று தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால், இந்த தேர்தலில், கண்டிப்பாக தி.மு.க கூட்டணிக்கு, விலை போய் விடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. (இங்கே கொள்கையும் கிடையாது, ஒரு வெங்காயமும் கிடையாது, கொள்கையை பார்த்தால், அவர்கள் பாக்கெட் காலியாக தான் இருக்கும் என்று இந்த மானம்கெட்ட தலைவருக்கு(??) தெரியாதா என்ன?? 4-5 சீட் மற்றும் கணிசமான கோடிகள் எதிர்பார்ப்பார்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) - கலைஞரின் முழு ஆதரவு உண்டு. ஆனால், கலைஞர் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவதுதான் தன் முக்கிய குறிக்கோள் என்று சொல்லிவருவதால், இந்த கூட்டணியில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த மடம் இல்லை என்றால், ஜெ.ஜெ.மேடத்தின் அந்த மடம் என்று உறுதியாக ஒரு முடிவு எடுத்து விடுவார். 6-8 சீட்கள் எதிர்பார்ப்பார், கூடவே சில கோடிகளும்.

மருத்துவர் அய்யா என்கிற ராமதாஸ் - இவர் தற்போதைய சூழலில் ஜெ.ஜெ.வின் கூட்டணியில் ஐக்கியமாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 9 - 11 இடங்கள் பேரம் பேசக்கூடும். தி.மு.க.வுடனான உரசல் நீடித்து வருகிறது. தி.மு.க-வும் இவர்கள் இதுவரை அழைத்து கூட்டணி பற்றி விவாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எந்த கூட்டணிக்கு போவார் என்பது "யாவரும் நலம்" மற்றும் "அதே கண்கள்" படத்தைவிட சஸ்பென்சாக வைத்து இருப்பார்.
சரத் குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி) - இது பெரிய உப்புமா மற்றும் டகால்டி கட்சி என்பது, திருமங்கலம் இடைதேர்தலில் 800 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதில் இருந்தே தெரிகிறது. பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தும் திறமை இதனிடம் இல்லை. கட்சியின் ஒரே பலம் ராதிகாதான். நான் டாஸ்மாக் பார்ட்டி இல்லை, பாஸ்மார்க் பார்ட்டி என்று வீரமுழக்கம் விடுத்து, திருமங்கலத்தில் பீப்பீ ஊதியவர். ஐயோ ஐயோ.......

இதுதவிர, முக்கிய கட்சிகள் கூட்டணி எடுக்கும் முடிவில் உள்ளவை எவை எவை என்று பார்ப்போம்.

தி.மு.க (தற்போது காங்கிரஸ் இவர்கள் வசம், இது பெரிய பலம்)
அ.தி.மு.க. (தற்போது கம்யூனிஸ்டுகள் இவர்கள் வசம், இது இவர்களின் பெரிய பலம் )

பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பலப்பல பலே உப்புமா கட்சிகள் (சுப்பிரமணிய சுவாமி, கிருஷ்ணசாமி போன்ற சாமிகள் உட்பட) நாடெங்கும் நிறைந்துள்ளன. அவை பற்றி எல்லாம் பார்த்தால், நமக்கு இந்த ஆயுள் போதாது. கடைசியாக :
நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம் ஒரு கேடி
அவன் ஆட்டையை போட்டான் பல கோடி
ஓட்டு போட்ட நாம் நிற்போம் தெருக்கோடி

No comments: