மெகா காமெடி - பகுதி - 3
பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு
ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத் ஸ்டார்ஸ் எல்லாரையும், ஒரே மேடையில பாக்கறது ... அதுவும், தமிழ் சினிமா நடிகர்கள ஒண்ணா ஒரே இடத்துல பாக்கறது பெரிய ஆச்சரியம் இல்ல, அதனால ரெட்டிப்பு சந்தோஷம்.
அஜித் : நான் நெர்ய பேஸ் மாட்டேன், கூடாதுன்னு ரஜ்னி சொல்லி இருக்காரு..... அதனால, 3 வார்த்த பேசற எடத்துல 30 வார்த்தை மட்டும் பேஸ்வேன்.
சிம்பு : டேய், இவனே, யார்ரா அது.... ஒன் பேரு கூட மறந்து போச்சு..... சமீபத்துல கூட நெறைய வேஷம் எல்லாம் போட்டியே...... கரெக்ட்.....அஜித்..... பேரு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஏண்டா, நீ திடீர்னு குண்டா இருக்க.... இல்லேன்னா, யாரோ சொன்னாங்கன்னு, நாய் நக்கின பொறை மாதிரி ஒல்லி ஆயிடற....
விஜய் : அண்ணோவ்.......
சிம்பு : இது என்னடா அசிங்கமா அண்ணோவ்-னு கூப்பிடற..... இல்லே, அண்ணே அண்ணேன்னு செந்தில் மாதிரி கெஞ்சற..... இப்போ ஒனக்கு என்னடா வேணும்??
விஜய் : ரொம்ப சீன் போடாதீங்கன்னோ....தசாவதாரம் மாதிரி 10 வேஷம் கட்ட போறேன்னு பிலிம் வுட்டது நீங்க தானா?? அடக்கி வாசிங்கன்னோவ் .... இல்லேன்னா, சீக்கிரம் ரிடயர்ட் ஆக வேண்டியது தான்......
சிம்பு : ஐயோ, ரொம்ப சுத்தி, இப்போ ரீல் அறுந்து போச்சே.... கொஞ்ச நாள் யாரையும் கண்டுக்காம இருப்போம்.... இந்த ஜில்பான்சிகளையும் சேர்த்துத்தான்.....
அஜித் : என்னோட, போன படத்துல (ஆழ்வார்) நான் கடவுள் அவதாரம் எல்லாம் எடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சேன்..... எல்லாருக்கும் பிடிச்சது, ஆனா யாருக்குமே பிடிக்கல, அதனால ஓடல........நம்ம நாட்டுல வர வர கடவுள் பக்தி கொரஞ்சிடிச்சி.... ஆனா, அடுத்த படம், கொஞ்சம் பெரிசா பண்ணாலாம்னு இருக்கேன்.
சிம்பு : பெரிசான்னா, தசாவதாரம் மாதிரி, 20 அவதாரம் ஏதாவது பண்ண போறியா?? இப்போவே, அவனவன் மறை கழண்டு அலையுறான். உன் படம் பாத்து மறை கழண்டவங்களுக்காக தான் நான் லூசு பெண்ணே லூசு பெண்ணே பாட்டே ரெடி பண்ணினேன். இப்போ கூட அந்த பாட்ட பாடறவன் எல்லாம் என் ரசிகர்கள் இல்ல, செக் பண்ணிட்டேன்.... அவனுங்க எல்லாம் ஆழ்வார், ஏகன் படம் பாத்தவனுங்கதான்..
விஜய் : ஏனுங்கன்னோவ்.....ரொம்ப உதார் வுடரீங்கலே.... இதே ரேஞ்சுல பேசுனீங்க.... அப்புறம் என் அப்பா கிட்ட சொல்லி, உங்கள வச்சு படம் ஒன்னு டைரக்ட் பண்ண சொல்லி, கதைய முடிச்சுடுவேன்....... இல்ல... கேப்டனோட அடுத்த படத்துல நடிக்க வச்சுடவா......
கேப்டன் மரியாதை பட ரிசல்ட் பாத்துட்டு, இன்னும் அலறிட்டு இருக்காராமாம்.... அந்த பக்கம் உன்னை போல் ஒருவன்-னு ஒருத்தரு சொல்றாரு..... இந்த பக்கம் ரோபோட் - எந்திரன்-னு ஒருத்தர் சொல்றாரு..... அங்க ஒரு பக்கம் கந்தசாமி, இந்த பக்கம் ஆயிரத்தில் ஒருவன்...... யப்பா.....
சிம்பு : ஷங்கர் சார், நீங்க எந்திரன் படத்த பத்தி ஒண்ணுமே இதுவரை சொல்லவே இல்லையே..
ஷங்கர் : நீங்க யாரும் இதுவரைக்கும் கேக்கவே இல்லையே.... கேட்டாதானே சொல்ல முடியும்.......
அஜித் : சொல்லுங்க சார், எந்திரன் படம் ஷூட்டிங் முடிஞ்சுடுச்சா??
ஷங்கர் : எந்திரன் ஷூட்டிங் ஆரம்பிச்சுடுச்சான்னு கேளுங்க....
விஜய் : எந்திரன் படம் ஷூட்டிங் ஆரம்பிச்சுடுச்சா??
ஷங்கர் : முடிஞ்சுடுச்சு...........
சிம்பு : என்னது, ஷூட்டிங் முடிஞ்சுடுச்சா?? அதுக்குள்ளவா?? ஆரம்பிச்சு ஒரு வருஷம் தானே ஆகுது.......
ஷங்கர் : எல்லாரும் வெளையாடறீங்களா?? படம் ஆரம்பிச்சு ஒரு வருஷம்தான் ஆச்சு... இப்போ ஷூட்டிங் முடிஞ்சுடுச்சுன்னு சொன்னது படத்தோட ட்ரைலர்....... அது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்.... படம் ஷூட்டிங் முடிய இன்னும் ஒரு 3-4 வருஷம் ஆகும்.... அப்புறம் கிராபிக்ஸ் இருக்கு.......... எப்படியும் ஒரு 5 வருஷத்துல ரெடி ஆயிடும்......
விஜய், அஜித், சிம்பு : யப்பா (பெருமூச்சு), ஒரு நல்ல செய்தி சொன்னீங்க.... ஒரு 5 வருஷத்துக்கு கவலை இல்ல.....
சிம்பு : ஹலோ விஜய், நீங்க வேணும்னா யார பாத்து வேணும்னா பயப்படலாம்.... ஆனா, நான் அப்படி இல்ல..... ஏன்னா, தினம் தினம் கரடியோட குடித்தனம் நடத்துறவன் நானு...... (தமிழ் கரடிய சொன்னேம்பா........).
ஷங்கர் : சிம்பு, உங்க தைரியத்த நான் பாராட்டுகிறேன்..... வீராசாமி பாத்துட்டே இன்னும் நிறைய பேரு உயிரோட இருக்காங்களே.....
விஜய் : ஏஏய்ய்ய்ய்ய்ய்ய் சைலன்ஸ்ஸ் ..... பேசிட்டு இருக்கோம்ல.........
ஷங்கர் : எதுக்கு இவன் இப்போ இவ்ளோ சவுண்டு வுடறான்.... எல்லாம் வில்லு பட ரிசல்ட் எபெக்டா??
சரி, அத விடுங்க..... அப்புறம் ஒரு விஷயம், இப்போ, "எந்திரன்" படம் முடிஞ்சா உடனே, ஒரு 2-3 ஹீரோவா போட்டு ஒரு சூப்பர் படம் பண்ணலாம்னு இருக்கேன்... அது ஹாலிவுட் ரேஞ்சுல இருக்கும்.... நீங்க என்ன சொல்றீங்க.....
அஜித், விஜய், சிம்பு : எங்களுக்கு ஒகே சார் (கோரசாக.......)
ஷங்கர் : படத்தோட பூஜை போடறதுக்கு ரெடி பண்ணிடுங்க.... ஒரு 50 பக்கத்துக்கு இன்விடேஷன் ரெடி பண்ணிடுங்க........ கிட்ட தட்ட ஒரு போட்டோ ஆல்பம் மாதிரி....
அஜித், விஜய், சிம்பு : ஐயோ, ஒப்பனிங்கே டெர்ரரா இருக்கே...... பூஜைக்கே ஒரு 2-3 கோடி ஆயிடும் போல இருக்கே......
ஷங்கர் : ஆகட்டுமே..... 2-3 ஹீரோன்னா, அப்படிதான் ரெண்டு, மூணு மடங்கு செலவு ஆகும்.... செலவ பாத்தா முடியுமா?? மொதல்ல நாம நாலு பெரும், உலகம் முழுக்க சுத்தி பாத்து, லொகேஷன் செலக்ட் பண்ணனும்.......கொஞ்சம் பெருசா பண்ணிடலாம் இந்த படத்த...... எனக்கு 300 அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் இருக்கணும்......
கதை என்னன்னா, ஒப்பனிங் சீன்ல, ஹீரோஸ் பாரீன்ல இருந்து வர மாதிரி சீன் வைப்போம்.... ஏர்போர்ட்ல பர்மிஷன் கெடைக்கலேன்னா, ஒரு ஏர்போர்ட் செட் போட்டுடுவோம்.... அதுல ஒரு 5000-10000 ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் அந்த பக்கம், இந்த பக்கம் நடக்க விட்டுடுவோம்.... ஏன் இவ்ளோ பேர்னா, ஏர்போர்ட் பிசியானதுன்னு காமிக்கறதுக்கு...... விஜய் மல்லையா கிட்ட பேசி, ஒரு கிங்பிஷர் ப்ளேன் வாங்கிடுவோம்..... வாடகைக்கு எடுத்தா, ரொம்ப காஸ்ட்லி..... இந்த சீன் ரெண்டு, மூணு மாசத்துல எடுத்துடலாம்......
அப்புறம், படத்தோட ரெண்டாவது சீன்ல ஹாங்காங்ல இருந்து ஆரம்பிக்குது.... அதனால, இந்த ரெண்டாவது சீன் எடுக்க நம்ம யூனிட்ல இருந்து ஒரு 500 பேரு ஹாங்காங் போயிடுவோம்.....
இந்த படத்துல, நாம சண்டை காட்சிக்கு யூஸ் பண்றதுக்காக, ஒரு ஏரோப்ளேன், கப்பல், 50 லாரி, 100 கார், 40 பஸ், 75 வேன் எல்லாம் வாங்கிடலாம்..... வாடகைக்கு எடுத்தா ரொம்ப செலவு......
ஒரு 5000 பேர வச்சு, காட்டுக்குள்ள ஒரு அட்டகாசமான சண்டையை எடுத்துடலாம்..... இன்னொரு மெகா சண்டை, கறிகடையில நடக்குது... அதுக்கு கொஞ்சம் கறி வேணும்.....
விஜய் : அது பிரச்சனை இல்லை... நமக்கு தெரிஞ்ச காஜா பாய்னு ஒருத்தரு இருக்காரு... அவரு கடையிலேயே எடுத்துடலாம்....
ஷங்கர் : தம்பி விஜய், உங்களுக்கு நல்ல காமெடி வருது.... இந்த சண்டை காட்சிக்கு 3000 ஆடு, 2500 மாடு தொங்கற மாதிரி காட்சி வேணும்... காஜா பாய் கடைல இவ்ளோ தொங்க விட முடியுமா??
அஜித், விஜய், சிம்பு : 3000 ஆடு, 2500 மாடு தொங்கற மாதிரி காட்சியா?
ஷங்கர் : ஆமாங்க.... அப்போதான் காட்சியில ஒரு ரிச்னெஸ் தெரியும்.... இந்த சண்டைய இங்கிலாந்துல இருக்கற என்னோட நண்பன் ஜேம்ஸ் கடைல இருக்கற குடோன்ல எடுத்துடலாம். உங்க கூட ஒரு 500 பேர சண்டை போட சொல்லிடலாம்....
சிம்பு : இந்த படம் ரிச்சு..... முடிஞ்சா உடனே நான் எடுக்கறது பிச்சை..... விட்டுடுங்க சார்.... நான் கூட வல்லவன், கெட்டவன், சின்னவன் மாதிரி ஏதாவது படம் எடுத்து பொழைச்சுக்கறேன் என்று சொல்லி நழுவுகிறார்.....
அஜித் : இதுக்கு கொறச்சலா நீங்க படமே எடுக்க முடியாதா??
விஜய் : சார், நீங்க இனிமே ஹாலிவுட்ல மட்டும்தான் படம் எடுக்க முடியும்.... தமிழ்ல ஒங்கள டைரக்டரா போட்டு படம் எடுக்கற அளவுக்கு யார்கிட்டயும் காசு இருக்கற மாதிரி தெரியல...... நான் என் வழில போய், போக்கிரி-II எடுக்கறேன்... இந்த சின்ன பசங்க மூணு பேரையும் விட்டுங்க சார்.
ஷங்கரின் பட்ஜெட் கேட்டு, மூவரும் தலை தெறிக்க பறக்கிறார்கள்...
அஜித், நான் பேஷ் மாட்டேன், பேஸ் மாட்டேன், ஏகன், யானைப்பாகன் என்று சொல்லி கொண்டே தடுக்கி விழுந்து ஓடுகிறார்...
சிம்பு, எதிரில் படும் சுவர் எல்லாவற்றையும் தாண்டி கொண்டே, நயன்தாரா பிரபுதேவா உன்னை மணந்தாரா, ரீமா சென் இருக்கறதுலேயே நீதான் சூப்பர் பெண், பாவனா ஒன்ன மறந்து போவேனா என்றெல்லாம் உளறிக்கொண்டே ஓடுகிறார்.
விஜய் சிறிது தூரம் ஓடிவிட்டு, ஜோக்கிரி, போக்கிரி, வில்லு பவர் போன செல்லு என்று புலம்பியபடி ஓரிடத்தில் மயங்கி சரிகிறார்.......
ஷங்கர் ரஜினிக்கு போன் போட்டு, எந்திரன் அடுத்த ஷூட்டிங் ஷெட்யூல் பற்றி பேச ஆரம்பிக்கிறார்......
சார் வணக்கம்........... நான் ஷங்கர் பேசறேன்.......... நாம அடுத்து ஜப்பான் போய், அந்த ரோபோ கண்காட்சியை திறந்து வைக்கற சீன் எடுக்கப்போறோம்.......
Thursday, June 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
//இந்த படத்துல, நாம சண்டை காட்சிக்கு யூஸ் பண்றதுக்காக, ஒரு ஏரோப்ளேன், கப்பல், 50 லாரி, 100 கார், 40 பஸ், 75 வேன் எல்லாம் வாங்கிடலாம்..... வாடகைக்கு எடுத்தா ரொம்ப செலவு......
//
ஹா ஹா..டரியலாக்குறீங்களே.. :-)
நல்லா இருக்கு..மெலும் தொடரவும் :-)
அருமையா இருக்கு, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!
ungalaiyellammmmmm ...............
:@
//கயல்விழி நடனம் said...
ungalaiyellammmmmm ...............
:@
//
ரிப்பீட்டேடேடேடேய்.............
சூப்பர்ங்கண்ணா கலக்குங்க,,,
//அஜித், நான் பேஷ் மாட்டேன், பேஸ் மாட்டேன், ஏகன், யானைப்பாகன் என்று சொல்லி கொண்டே தடுக்கி விழுந்து ஓடுகிறார்...
சிம்பு, எதிரில் படும் சுவர் எல்லாவற்றையும் தாண்டி கொண்டே, நயன்தாரா பிரபுதேவா உன்னை மணந்தாரா, ரீமா சென் இருக்கறதுலேயே நீதான் சூப்பர் பெண், பாவனா ஒன்ன மறந்து போவேனா என்றெல்லாம் உளறிக்கொண்டே ஓடுகிறார்.
விஜய் சிறிது தூரம் ஓடிவிட்டு, ஜோக்கிரி, போக்கிரி, வில்லு பவர் போன செல்லு என்று புலம்பியபடி ஓரிடத்தில் மயங்கி சரிகிறார்.......//
ஹா ஹா ஹா செம காமெடி
சிம்பு, அஜித் ரசிகர் அதனால் அஜித்தை திட்ட மாட்டார் ;-)
வருகைக்கு நன்றி
கடைக்குட்டி
கலையரசன்
கயல்விழி நடனம்
சுப்பு
statistics
கிரி
சிரிக்க வைப்பது (குறைந்த பட்சம் புன்னகையாவது) என் நோக்கம்......
இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு.... ஒவ்வொண்ணா வராது .........ஆனா வரும்....
ஆஹா கோபி - கலக்கிட்டீரையா கலக்கிட்டீர்.
தொடருங்கள் மென் மேலும்!
இணைய நகை தளபதி
என்ற பட்டம் கொடுக்கலாமா
என்றொரு யோசனை.
//kggouthaman said...
ஆஹா கோபி - கலக்கிட்டீரையா கலக்கிட்டீர்.
தொடருங்கள் மென் மேலும்!
இணைய நகை தளபதி
என்ற பட்டம் கொடுக்கலாமா
என்றொரு யோசனை.//
********
Thanks Gouthaman Sir..... I am happy that you are enjoying comedy articles......
Do visit regularly for more comedy articles, which are in queue to come......
funny.. continue
//tamil videos said...
funny.. continue//
*********
Thanks for your maiden visit and comments..
Do visit regularly and enjoy reading updated articles......
இந்த பதிவிற்கு வாக்களித்து பிரபலமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி...
Kummachi
alwaysarafath
shathiesh
vasanth1717
mohamedFeros
dwgtamil
subash
vimalind
spice74
ldnkarthik
MVRS
jjjj
jollyjegan
swasam
VGopi
idugaiman
kosu
ambuli
gilli
Vino23
paarvai
//சிம்பு, எதிரில் படும் சுவர் எல்லாவற்றையும் தாண்டி கொண்டே, நயன்தாரா பிரபுதேவா உன்னை மணந்தாரா, ரீமா சென் இருக்கறதுலேயே நீதான் சூப்பர் பெண், பாவனா ஒன்ன மறந்து போவேனா என்றெல்லாம் உளறிக்கொண்டே ஓடுகிறார்//
ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.. கலக்கிட்டீங்க கோபி!
//அநன்யா மஹாதேவன் said...
//சிம்பு, எதிரில் படும் சுவர் எல்லாவற்றையும் தாண்டி கொண்டே, நயன்தாரா பிரபுதேவா உன்னை மணந்தாரா, ரீமா சென் இருக்கறதுலேயே நீதான் சூப்பர் பெண், பாவனா ஒன்ன மறந்து போவேனா என்றெல்லாம் உளறிக்கொண்டே ஓடுகிறார்//
ரொம்ப ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்.. கலக்கிட்டீங்க கோபி//
மிக்க நன்றி அநன்யா....
இதை மாதிரி யாரும் யோசிக்க முடியாது கோபி... சான்சே இல்ல... ரெம்பா நல்லா இருக்கு...
Post a Comment