நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கலைஞர் அவர்கள் அதிரடியாக ஒரு முடிவு எடுத்து செய்த செயல், நாட்டின் பல்வேறு பட்ட பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தது.... .
தான் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் பல நிகழ்த்த இருப்பதாகவும், தமிழர்களுக்கு எங்கு பிரச்சனை என்றாலும், உடனே இது போன்ற நிகழ்வுகள் தன்னால் அரங்கேற்றப்படும் என்றும் உடன்பிறப்புகளுக்கு “முரசொலி”யில் கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது... அவருக்கு உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் பாராட்டுகளை அள்ளி குவித்த வண்ணம் உள்ளனர்.. (அய்யோ..........அய்யோ.....)
அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் செய்தி தொகுப்பு தான், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் செய்தி தொகுப்பு தான், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
*************
சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ஜக்குபாய் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.படம் சிறப்பாக வந்திருப்பதாக சரத்குமார் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டினார்.
ஜக்குபாய் படம் எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் வாங்க ஆளில்லாததால் இதோ அதோ என்று வெளியாக போக்குக் காட்டி வந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் டெக்னீஷியன்கள் பலருக்கு சம்பள பாக்கி வைத்துவிட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த நிலையில், படம் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டி.யாகவும் வெளியிடப்பட்டது.இதை வைத்தே பரிதாபம் தேடிக்கொள்ள முயன்ற சரத்- ராதிகா அண்ட் கோ, முடிந்த வரை இந்த விவகாரத்தை பெரிதாக்கியது.
முதல்வரைச் சந்தித்து திருட்டு விசிடி விற்போர், வைத்திருப்போர், பார்ப்போர் எல்லோர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று வற்புறுத்த, அடுத்த நிமிடமே அதைச் சட்டமாகவும் அறிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.
இந்நிலையில், 'ஜக்குபாய்' திரைப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரத்குமார். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பார்த்தார்.
இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் திரையரங்கில் அவருக்கென சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜக்குபாய் படத்தை கலைஞர் டிவிதான் வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
*****************
இந்த நிகழ்வின் மூலம், சரத் தன்னுடைய ச.ம.க.வை கலைத்து விட்டு, தி.மு.க.வோடு சங்கமம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை சரத்குமார் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கலைஞர் தெரிவித்தார்.... தமக்கு எப்போதும் சரித்திர புத்தகத்தின் நடுவில் உள்ள வெற்றிடத்தில் ஓர் குட்டி இடம் உள்ளதை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்....
இது கின்னஸ் புத்தகத்தில் இந்த வருடத்தின் சிறந்த “நகைச்சுவை நிகழ்வு” என்ற தலைப்பில் தேர்வாக சாத்தியம் இருப்பதாகவும், கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிக்க வைப்பதில் கலைஞர் வல்லவர் என்றும் எதிர் கட்சிகள் கூறுகின்றன...
7 comments:
ஆமா கோபியண்ணே..!
திருட்டு வி.சி.டியை தலைவர் ஒழிச்சுட்டாரு..இப்போல்லாம் ஒன்லி டி.வி.டிதான்..!
இத எழுதுன என் மேலயும் உங்க மேலயும் குண்டாஸ் பாயுமோ..!
//♠ ராஜு ♠ said...
ஆமா கோபியண்ணே..!
திருட்டு வி.சி.டியை தலைவர் ஒழிச்சுட்டாரு..இப்போல்லாம் ஒன்லி டி.வி.டிதான்..!
இத எழுதுன என் மேலயும் உங்க மேலயும் குண்டாஸ் பாயுமோ..!//
*********
வாங்க ராஜூ... “தலை” சௌக்யமா?? அசல் ஃபிப்ரவரி 12 ரிலீஸ் ஆகுதாமே?? கலக்குங்க...
நம்ம பெரிய “தல” திருட்டு வி.சி.டி.ய ஒழிச்சுட்டாரு... இனிமே ஒன்லி டி.வி.டி. தான்... தலைவா... இது பெரிய “டெர்ரர்” நியூஸ் ஆச்சே....
உங்க மேல குண்டாஸ் சான்ஸ் இருக்கு... என் மேல ... நோ சான்ஸ்...ஏன்னா, நான் ரொம்ப “ஒல்லி”. ஹீ.. ஹீ.. ஹீ...
இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பிரபலப்படுத்திய தோழமை அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....
venkatnagaraj
anubagavan
mohamedFeros
menagasathia
ganpath
mvetha
kosu
amalraaj
hihi12
MVRS
negamambala
msrgobenath
mohanpuduvai
:)) என்னது இது... அவ்வளவு வொர்த்தா அந்த படம்...
:))
//மயில் said...
:)) என்னது இது... அவ்வளவு வொர்த்தா அந்த படம்...
:))//
*******
மயில்... வாங்க...
என்ன கேட்டீங்க.. அவ்வளவு வொர்த்தான்னா?/
ஒரு வேளை “வெத்து”ன்னு சொல்ல வந்துட்டு ஸ்பெல்லிங் மாறிடுச்சோ...
நீங்க கலைஞரையும், சரத்குமாரையும்
வச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலியே... அவ்வ்வ்வ்வ்வ்...
//முதல்வரைச் சந்தித்து திருட்டு விசிடி விற்போர், வைத்திருப்போர், பார்ப்போர் எல்லோர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று வற்புறுத்த, அடுத்த நிமிடமே அதைச் சட்டமாகவும் அறிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.
//
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
மயிலுக்கு ரிப்பீட்டு.
//jaisankar jaganathan said...
//முதல்வரைச் சந்தித்து திருட்டு விசிடி விற்போர், வைத்திருப்போர், பார்ப்போர் எல்லோர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று வற்புறுத்த, அடுத்த நிமிடமே அதைச் சட்டமாகவும் அறிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.
//
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
மயிலுக்கு ரிப்பீட்டு.//
*********
வாங்க ஜெய்சங்கர்....
சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாயினும் 24 மணி நேரத்தில் சரி செய்யப்படும்... அணுகவும் : கோபாலபுரம்...
Post a Comment