Saturday, November 27, 2010

அதிரடி டைரக்டர்கள் 2011 - ஒரு டெர்ரர் சந்திப்பு



2010-ம் ஆண்டு முடிவடைய இருக்கும் நிலையில், ௦ 2010-ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் "எந்திரன்" உள்ளிட்ட ஒரு சில படங்களே வெற்றி பெற்ற நிலையில் கோலிவுட்டின் முக்கிய டெர்ரர் டைரக்டர்கள் ஒன்று கூடி, திரையுலகின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கிறார்கள்...

நடிகர்களின் சம்பளம், வீண் செலவுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தினால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும் என்ற நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகளை தெரிந்து கொள்வோம், வாருங்கள்...

**************

பேசாம நாம பழைய வ்யாவாரத்துக்கே போயிடலாம்னே.... ஏதோ கல்லால ஒக்காந்தோமா, புண்ணாக்க நோண்டிட்டு, புளிய உருட்டிட்டு...... என்னன்னவோ செய்யலாம்..... இங்க பாருங்க, நேத்து வந்த பயலுவ எல்லாம், நம்மள பார்த்தா மருவாத குடுக்கறதில்ல..... காலு மேல காலு போட்டு உக்காந்து இருக்கானுவ.... என்று "பூமநாராயணன்" சீறினார்.....

இன்னிக்கி தான்யா சரியா சொன்னீரு.... என் படத்துல நடிக்கற ஹீரோ, ஹீரோயின் பண்ற அலப்பறை கூட தாங்கலேய்யா என்று "டிங்கர் பிச்சான்" பொருமினார்.... அதுலயும், அந்த பிஜயகோந்து வருத்தகரி”ன்னு ஒரு படம் டைரக்ட் பண்ணி இருக்காராம்.... படத்துக்கு படம் கம்பியில தொங்கி சண்டை போடற அந்தாளுக்கு டைரக்‌ஷன பத்தி என்னய்யா தெரியும்.... .

கரெக்டுங்க.... என் படத்துல பாருங்க.... ஒப்பனிங் சீன்ல ஹீரோ ஒரு சின்ன கிராமத்துக்கு ரயில்ல வந்து எறங்கரார்னு அந்த "பிஜய்" கிட்ட கதை சொல்றேன்.... ரயில் எல்லாம் வேணாம்.... சின்னதா ஒரு ஹெலிகாப்டர்ல வந்து எறங்கற மாதிரி சீன் வைய்யுன்னு பெரிய சீன் போடறாரு... "கொட்டாம்பட்டி"க்கு வர்ற ஹீரோக்கு ரயில் வண்டியும், வெளியே போனா, மாட்டு வண்டியும் போதாதா, எதுக்குங்க ஹெலிகாப்டர் என்று “டைரக்டர் பீரரசு” பட்டாசு வெடிக்கிறார்.

பேசுறது எதுவா இருந்தாலும் சீக்கிரம் பேசிட்டு என்னை மட்டுமாவது அனுப்புங்க... இன்னிக்கி ஏ.வி.எம்.ல "3 டகால்டிகள்' படத்தோட ஓப்பனிங் சீன் ஷூட்டிங் இருக்கு, 3000௦௦௦ ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் வெயிட் பண்றாங்க என்று அவசரப்படுத்துகிறார் டைரக்டர் "பங்கர்"... பாருங்களேன்.... இவனுங்களும், இவனுங்க இம்சையும், ஒருத்தன் பீரங்கி மூக்குல பொடிய வைச்சு திணிக்கறான், இன்னொருத்தன் காதை நோண்டிகிட்டு இருக்கான் என்றபடி...

நான் இங்க எதுக்கு வந்தேன்னே தெரியல, எனிவே இங்க வந்து இவனுங்க பண்ற இந்த காமெடியெல்லாம் பார்த்தா, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என்றபடி மோட்டுவளையை பார்த்தபடி தாடையை சொரிந்தார் "பவுதம் பேனன்". இந்த மாதிரி ஷாட் வச்சா நல்லா இருக்குமா இல்ல ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரையும் வானத்து மேல‌ இருந்து பறந்து வ‌ர்ற‌ மாதிரி ஒரு ஷாட் வ‌ச்சு அச‌த்திடுவோமா என்று தனக்கு தானே பேசி சிரித்துக்கொண்டிருந்தார்...

அப்போது "தமிழ் கரடி" ஆவேசமாக சவுண்ட் விட்டுக்கொண்டு உள்ளே வர அந்த ஏரியாவே

அதகளமாகிறது....

டேய்.....யார் கிட்ட, என்கிட்டயேவா..... நான் தமிழன்டா.....தமிழன்..... யூத்து... தெரியும்ல... நான் இப்போ மட்டும் இல்ல, எப்போவும் பச்சை தமிழன், க்ரீன் டமிலன், யூ நோ... டெய்லி டூ ஹவர்ஸ் ஜிம் கோயிங்.....நெக்ஸ்ட் ஃபில்ம் ஹீரோ.... மத்த எல்லாரும் ஜீரோ என்றெல்லாம்

கதறி புஸ் புஸ் என்று மூச்சு வாங்குகிறார்......

வர்றியா..... ஒனக்கும் எனக்கும் ஒரு சவால்.... மவுண்ட் ரோடு நடுவுல, இல்லேன்னா, சட்டசபை வாசல்ல ஒரு மேடை போட்டு ABCD சொல்ல ஆரம்பிப்போம்.....15௦ நாள் தொடர்ந்து சொல்லுவோம்....யாரு நிறைய தடவை சொல்லுறாங்கன்னு பார்ப்போமா?.....

"நட்ட நடு ரோட்டுல 44 வவ்வாலு.... நானும் அங்கே விட்டேன் பாரு அதுக்கு தானே சவாலு!!! இந்த டயலாக் தொடர்ந்து 10 நாள், மவுண்ட் ரோடு நடுவுல, இல்லன்னா, போயஸ் கார்டன் வாசல்ல நின்னுட்டு கத்தி சொல்லுவியா? நான் சொல்லுவேன், ஏன்னா நான் மரத்தமிழன் என்றெல்லாம் ”கரடி” சவுண்ட் விடுவதை பார்த்து அனைவரும் மூச்சு விட மறந்தனர்....

ஐயோ.....இன்னிக்கி செத்தோம்டா நாம என்று எல்லாரும் கோரசாக மனதிற்குள் கூவுகின்றனர்..... கரடி எங்கேயோ வெளியூர்ல ஷூட்டிங் போயிடுச்சுன்னு சொன்னதாலதான், இன்னிக்கி இந்த மீட்டிங் வச்சோம்.... ஆனா, கரடி எப்படியோ தப்பிச்சு இங்க வந்துடுச்சே, இன்னிக்கி நம்ம எல்லாருக்கும் சங்குதான், ரிபீட் அபீட்டுதான் என்று நினைத்தனர்...

இந்த நாட்டுல விதவிதமா தப்பு பண்ணுன எத்தனையோ சமூக விரோதிகளை சட்டத்துல இருக்கற ஓட்டைய எல்லாம் சொல்லி தந்து, என் படம் மூலமா தப்பிக்க வச்சேன்... இன்னிக்கு என் பையன் “குஜய்” நடிக்கற ஒரு படத்த கூட எப்படி ஓட வைக்கறது என்ற வித்தையை எனக்கு யாரும் கற்றுத்தரவில்லையே என்று அழுது கொண்டே அந்த மீட்டிங் நடக்கும் இடத்திற்கு ஒரு பை நிறைய ஈர கர்சீஃப் எடுத்துக்கொண்டு வருகிறார் எஸ்.ஏ.சுந்தரசேகர் ....

என்னையா நடக்குது இந்த நாட்டுல..... ஒரு தமிழனுக்கு உள்ளே வர அனுமதி இல்லையா..... ......ஹௌ கேன் ஐ டாலரேட் திஸ் நான்சென்ஸ் என் அடுத்த படம் வரட்டும்.... ஆல் ஓவர் தி வேல்ட் ஒரே ஒரு ஹீரோதான்.... அதுவும் நான்தான் என்றபடி க்ரீன் ஷர்ட், ப்ளாக் ஜீன்ஸில் ”டைரக்டர் சாரதிராஜா” வருகிறார்........ அப்புறம் என்னோட ”சிவப்பு ரோஜாக்கள்” படத்தை இங்கிலீஷ்ல "எ பேர் ஆஃப் பளாக் ரெட் ரோஸஸ்”னு என் பையன் “பனோஜ்” வச்சு எடுக்கப்போறேன்னு சவால் விடுகிறார்...

அந்த படம் மட்டும் வரட்டும்....அப்புறம் பாருங்க......கோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஹாலிவுட், பிளைவுட்னு எல்லா வுட்டும் என்கிட்டே வந்து கால்ஷீட் கேட்டு நிக்கும்..... என்றெல்லாம் பிதற்றுவதை பார்த்து "பீரரசு", டிங்கர் பிச்சான்", பூமநாராயணன் எல்லாம் டெர்ரர் ஆகிறார்கள்.

சற்றே தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, தான் ஏற்கனவே எழுதி வைத்த தீர்மானங்களை டைரக்டர்கள் சங்க தலைவர் "பூமநாராயணன்" வாசிக்கிறார்....

***********************

இனிமேல் நடிகர், நடிகைகளுக்கு கேரவன் வண்டி கிடையாது..... டெம்பரரியா சூட்டிங் நடக்கற எடத்துல போடற டெண்ட் கொட்டகைல தான் தங்கணும்....

சூட்டிங் நடுவுல குடிக்க ஜூஸ் எல்லாம் கிடையாது..... வெறும் தண்ணீர்தான்.... ஒரு ஓரமா பானையில இருக்கும்.... அதுவும், அவிய்ங்கவிய்ங்க போய் தானே எடுத்து குடிக்கணும்.... அவிய்ங்களுக்கு உதவிக்கு ஆள் எல்லாம் கிடையாது...

படம் முழுக்க ஹீரோ, ஹீரோயினுக்கு மொத்தமே 5 டிரஸ்தான் .....

மத்தியானம் சாப்பாடு வெறும் கம்பங்கூழும், பச்சை மிளகாயும்தான்.... வெங்காயம் வேணும்னா, அவிய்ங்கவிய்ங்க வீட்டுல இருந்துதான் எடுத்து வரணும்... வேற எந்த சாப்பாடும் சினிமா கம்பெனி குடுக்காது....

லன்ச் டயத்துல தூங்கறதுக்கு ஆளுக்கு ஒரு பாய் மட்டுமே தரப்படும். போர்வை வேண்டுமென்றால் அவரவர்கள் வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும். அது அவர்கள் இஷ்டம். இதில் நிர்வாகம் தலையிடாது. ஆனா, ஒரு விஷயம், கண்ண மூடி படுத்து கெடக்கலாம், கண்டிப்பா, தூங்கக்கூடாது....

வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வர்றதுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்..... வர்ற வழியில ஹீரோ, அந்த படத்தோட காமெடி நடிகர பிக்-அப் பண்ணி டபுள்ஸ் அடிச்சுட்டு சூட்டிங் நடக்கற எடத்துக்கு வரணும்....

தமிழ் படங்களின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.... இது ரொம்ப முக்கியம்.... அந்த மாதிரி பேரு வைக்கற படத்துக்கு மட்டுமே வரிவிலக்கு

படத்துல நடிக்கற எல்லாருக்குமே தினக்கூலி அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும்.

*****************

இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படாதவர்கள், தானே சொந்தமாக படம் தயாரித்து, டைரக்ட் செய்து நடிக்கட்டும் என்று இந்த சங்கத்தின் சார்பாக கூறிக்கொள்கிறேன்.....என்று அறிக்கையை வாசித்து முடித்தார்.....

இதை கேட்ட "பீரரசு" "கரடி" போன்ற ஹீரோ டைரக்டர்கள் கொதித்து எழுந்தனர்......

நீங்கள் போடும் சட்டம் எல்லாம், ஹீரோவாக மட்டும் நடிக்கும் நடிகர்களுக்குத்தான் பொருந்தும்...... எங்களை போன்ற படைப்பாளிகளுக்கு பொருந்தாது என்று ஜெர்க்கினர்....

படைப்பாளி என்ற வார்த்தையை கேட்டதும் நன்றாக தூங்கி கொண்டிருந்த "டிங்கர் பிச்சான்"...சட்டென்று எழுந்து கரடி, பீரரசு, கிந்தர் எல்லாம் படைப்பாளிகள் இல்லை.... அழிப்பாளிகள்.... இந்த படவுலகில் படைப்பாளி என்றால் அது இந்த "டிங்கர் பிச்சான்" மட்டும்தான் என்று ஓவர் அலப்பறை விட்டு, நாற்காலியை எடுத்து “கரடி”யின் மீது வீசுகிறார்....

கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்த “கரடி” அவர் பின் நின்றிருந்த "பீரரசு", எஸ்.ஏ.சுந்தரசேகர், மற்றவர்கள் சங்கமாவது.... சுங்கமாவது.... கலைங்கடா எல்லாத்தையும் என்றபடி தன் தலையை கலைத்துக்கொண்டு, சட்டையை கிழித்துக்கொண்டு "டிங்கர் பிச்சான்" நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர்....

சங்கத்தின் தீர்மானம் எதுவும் செல்லாது, இவங்க சொல்ற மாதிரி என்னோட முழு படமா, அந்த படத்துல ஒரு சீன் கூட எடுக்க முடியாது என்று கூவிக்கொண்டே “பங்கர்” பெஞ்ச் அடியில் பதுங்குகிறார்.... பெஞ்சின் கீழே “பவுதம் பேனன்” ஏற்கனவே பயத்துடன் பதுங்கி இருக்கிறார்...

நிலைமை மோசமாவதை கண்ட "பூமநாராயணன்" சங்கத்தின் பின் வாசல் வழியாக பாய்ந்து தாவுகிறார்.... "கரடி", "பீரரசு" போன்றோர் ”பூமநாராயணன்” மற்றும் “டிங்கர் பிச்சான்” ஆகிய இருவரையும் தாக்க கையில் அரை செங்கல் எடுத்து கொலைவெறியுடன் துரத்துகின்றனர்......

அந்த இடமே காலியானதும், யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.............. இங்கிட்டு நான் ஒரு டைரக்டரு இருக்கறதையே மறந்துட்டீங்களா? இப்போ தான் “வருத்தகரி” பட சூட்டிங் முடிச்சுட்டு வர்றேன்.... என்னிய விட்டுட்டு இந்த கூட்டம் எப்படி நடக்குதுன்னு பார்க்கறேன்.... என்றெல்லாம் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர், யாரும் இல்லாததை பார்த்து, அதானே.... நான் கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா, அதுவும் ஒண்ணு ரெண்டு கேள்விக்கு பதில் சொன்னா, தொடர்ந்து மூணு நாள் மூவாயிரம் கேள்வி கேப்பேன்ல.... அதுக்கு பதில் சொல்ல ஒங்களுக்கு மூணு வருசம் ஆகுமே என்றெல்லாம் பிதற்றியபடி, அங்கிருந்து தள்ளாடி ”வெளிநடப்பு” செய்கிறார் “பிஜயகோந்த்”....

மொத்தத்தில் அந்த ஏரியாவே "கலீஜ்" ஆகிறது....

(ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்.....)

34 comments:

எஸ்.கே said...

கலக்கலா இருக்குங்க!

எஸ்.கே said...

இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//

:-)))))

R.Gopi said...

//எஸ்.கே said...
கலக்கலா இருக்குங்க!//

********

வாங்க தலைவா....

விருந்துக்கு முதலில் வந்து “வடை” பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

எப்பூடி.. said...

தங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன், நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

உங்கள் பதிவ வாசிக்க நைட்டாண்ட வாறன்.

R.Gopi said...

//எப்பூடி.. said...
தங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன், நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

உங்கள் பதிவ வாசிக்க நைட்டாண்ட வாறன்//

********

வாங்க தல....

மேட்டர் இன்னான்னு கண்டுகினு வரேன்..

Mrs. Krishnan said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

//"நட்ட நடு ரோட்டுல 44
வவ்வாலு.... இப்போ நானும்
அங்கே விட்டேன்
பாரு அதுக்கு தானே சவாலு!!!

நெக்ஸ்ட் ஃபில்ம்
ஹீரோ.... மத்த எல்லாரும்
ஜீரோ என்றெல்லாம்கதறி புஸ்
புஸ்
என்று மூச்சு வாங்குகிறார்//

இந்த சி(ரி)றப்பு இயக்குனர் முன்னால எல்லாரும் தோத்துட்டாங்க

"தமிழ்கரடி" பேரக் கேட்டாலே சும்மா கதறுதில்ல...! பதறுதில்ல...!!

எப்படி இப்படில்லாம் பேர் வைக்கறீங்க??

R.Gopi said...

வாங்க திருமதி கிருஷ்ணன்....

வழக்கம் போல, அதிரடியா வந்து, பதிவை படிச்சு, சிரிச்சாச்சா!!??

வந்து, படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.....

Rekha raghavan said...

// இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//

அனைத்து உலக பாஷைகளும் தெரிந்து தமிழ் மட்டும் தெரியாத எனக்கு ஒரு நண்பர் உங்கள் பதிவை படித்துக் காட்டினார். "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா?" என்பது எனக்கும் தெரியலீங்க. என்ன செய்ய?

பதிவு பாக உந்தி.

எப்பூடி.. said...

டெரர் கூட்டத்தில உண்மையில நிறைய வயித்தெரிச்சல் சீவன்கள் எல்லாம் இருக்குபோல? சூப்பரா கலாச்சிருக்கிறீங்க அதிலயும் நம்ம நாராயணன் போட்ட சட்டத்தில,

//வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வர்றதுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்..... வர்ற வழியில ஹீரோ, அந்த படத்தோட காமெடி நடிகர பிக்-அப் பண்ணி டபுள்ஸ் அடிச்சுட்டு சூட்டிங் நடக்கற எடத்துக்கு வரணும்....//

இது டாப்பு :-)))))

எப்பூடி.. said...

தங்களுடைய 'சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20' பதிவின் மூன்று பாகங்களையும் பார்த்தேன், உங்கள் 20 படங்களில் என்னுடைய 6 தெரிவுகள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி.

r.v.saravanan said...

கலக்கலா இருக்கு

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா, எல்லாமே ஒரே டெரர்ர் ஆன ஆளுங்களா பிடிச்சு கலாய்ச்சு இருக்கீங்களே… கலக்கல் போங்க.

கவி அழகன் said...

சுப்பரா போகுது

Chitra said...

ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்.....


....ha,ha,ha,ha,ha... sema....

R.Gopi said...

//ரேகா ராகவன் said...
// இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//

அனைத்து உலக பாஷைகளும் தெரிந்து தமிழ் மட்டும் தெரியாத எனக்கு ஒரு நண்பர் உங்கள் பதிவை படித்துக் காட்டினார். "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா?" என்பது எனக்கும் தெரியலீங்க. என்ன செய்ய?

பதிவு பாக உந்தி//

*****

ராகவன் சார்... வாங்க...வாங்க... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க...

முழுமையாக படித்து, கமெண்டியதற்கு மிக்க நன்றி சார்...

R.Gopi said...

//எப்பூடி.. said...
டெரர் கூட்டத்தில உண்மையில நிறைய வயித்தெரிச்சல் சீவன்கள் எல்லாம் இருக்குபோல? சூப்பரா கலாச்சிருக்கிறீங்க அதிலயும் நம்ம நாராயணன் போட்ட சட்டத்தில,

//வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கற இடத்திற்கு வர்றதுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் மட்டுமே தரப்படும்..... வர்ற வழியில ஹீரோ, அந்த படத்தோட காமெடி நடிகர பிக்-அப் பண்ணி டபுள்ஸ் அடிச்சுட்டு சூட்டிங் நடக்கற எடத்துக்கு வரணும்....//

இது டாப்பு :-)))))//

*******

வாங்க எப்பூடி...

அவங்களா வந்து மாட்டினா, நான் என்ன செய்யறது, சொல்லுங்க...

R.Gopi said...

//எப்பூடி.. said...
தங்களுடைய 'சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20' பதிவின் மூன்று பாகங்களையும் பார்த்தேன், உங்கள் 20 படங்களில் என்னுடைய 6 தெரிவுகள் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி//

********

வாங்க தல...

150க்கும் மேற்பட்ட படங்களில் இருந்து 20 படங்கள் தேர்வு செய்ததே எத்துணை சிரமம் என்பதை பதிவில் நான் எழுதியதில் படித்திருக்கலாம்...

உங்கள் தேர்வும் நன்றாக இருந்தது...

R.Gopi said...

//r.v.saravanan said...
கலக்கலா இருக்கு//

******

வாங்க சரவணன்...

ஏதோ, என் பதிவை படித்து லேசாக சிரித்தாலே கூட அது எனக்கு வெற்றி தான்... ஆனால், வந்து கருத்து சொல்லும் அனைவரும் நன்றாக இருப்பதாக சொல்வது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது...

R.Gopi said...

//வெங்கட் நாகராஜ் said...
ஆஹா, எல்லாமே ஒரே டெரர்ர் ஆன ஆளுங்களா பிடிச்சு கலாய்ச்சு இருக்கீங்களே… கலக்கல் போங்க.//

******

வாங்க வெங்கட் நாகராஜ்...

தொடர்ந்து வருகை தந்து, பதிவை படித்து, கருத்து பகிரலும், ஆதரவும் தருவதற்கு மிக்க நன்றி...

இந்த பதிவும் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி...

R.Gopi said...

//யாதவன் said...
சுப்பரா போகுது//

********

வாங்க யாதவன்...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தல...

R.Gopi said...

// Chitra said...
ஆமாம்... இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்.....

....ha,ha,ha,ha,ha... sema....//

********

வாங்க சித்ரா...

நீங்க எல்லாம் எழுதிடாததயா நான் எழுதிடறேன்...

பதிவிற்கு வருகை தந்து, படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

KANA VARO said...

கலக்கல் பதிவு

R.Gopi said...

//KANA VARO said...
கலக்கல் பதிவு//

********

வலைக்கு வருகை தந்து, பதிவை படித்து, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி KANA VARO....

பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கே!!

புலிகுட்டி said...

இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//
"கலீஜ்"என்பது அரபு மொழி."கலீஜ்"என்பதற்க்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லவும்.(எனக்கு தமிழ் மட்டும் இல்லை அரபும் தெரியாது.)

R.Gopi said...

//புலிகுட்டி said...
இந்த "கலீஜ்" என்பது தமிழ் வார்த்தையா? தமிழ் தெரியாதவர்கள் சொல்லலாம்//
"கலீஜ்"என்பது அரபு மொழி."கலீஜ்"என்பதற்க்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லவும்.(எனக்கு தமிழ் மட்டும் இல்லை அரபும் தெரியாது.)//

*******

”கலீஜ்” என்பது அரபு வார்த்தையாம்.. யாராவது வந்து அர்த்தம் சொல்லுங்கப்பு....

Mrs. Krishnan said...

”கலீஜ்”
என்பது அரபு வார்த்தையாம்..
யாராவது வந்து அர்த்தம்
சொல்லுங்கப்பு ....

***
அமீரகத்தில் இருக்கும் எங்கள் அண்ணன் 'அஞ்சா நெஞ்சன் அமீரக அரிமா' கோபி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவருக்கு நிச்சயம் இது போன்ற பழமை வாய்ந்த, புனிதமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியும்.

Unknown said...

ஒரு “தமிழ்படம்” பார்த்த ஃபீல் இருந்தது.கலக்கல்

Anonymous said...

கோபி, முதன் முறை உங்கள் பதிவை வாசித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

R.Gopi said...

//Mrs. Krishnan said...
”கலீஜ்”
என்பது அரபு வார்த்தையாம்..
யாராவது வந்து அர்த்தம்
சொல்லுங்கப்பு ....

***
அமீரகத்தில் இருக்கும் எங்கள் அண்ணன் 'அஞ்சா நெஞ்சன் அமீரக அரிமா' கோபி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவருக்கு நிச்சயம் இது போன்ற பழமை வாய்ந்த, புனிதமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியும்//

********

ஆஹா... சொன்னா கேக்க மாட்டேங்கறாய்ங்களே... அட, மெய்யாலுமே எனக்கு தெரியாதுங்கோ..

R.Gopi said...

//இனியவன் said...
ஒரு “தமிழ்படம்” பார்த்த ஃபீல் இருந்தது.கலக்கல்//

******

முதல் வருகைக்கும், பாராட்டியமைக்கும் மிக்க நன்றி இனியவன் சார்...

இது போன்ற பதிவுகள் எல்லாம் சும்மா நம்மை ரெஃப்ரெஷ் செய்வதற்காக எழுதப்படுகிறது...

நிறைய பதிவுகள் உள்ளன... அவற்றையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

R.Gopi said...

//சிவகுமார் said...
கோபி, முதன் முறை உங்கள் பதிவை வாசித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)//

********

அடடே... வாங்க சிவகுமார்.... முதல் முறையாக வந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..

தொடர்ந்து வருகை தாருங்கள்....

R.Gopi said...

அதிரடியான இந்த பதிவிற்கு பொன்னான வாக்குகளை அள்ளித்தந்து, பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

kousalya
mrskrishnan
RDX
anubagavan
karthikvlk
sriramanandaguruji
venkatnagaraj
kavikkilavan
chitrax
soundar1987
Rajeshh
jntube
jollyjegan
MVRS
mvetha
ldnkarthik
nanban2k9
paarvai
Karthi6
suthir1974
kndb
shruvish
Dev
mlakshankuma1
tamilvalam
smaharajan
razack
mohanpuduvai
vimalind
psychsuresh
Raadhai

Jaleela Kamal said...

உருது காரர்கள் தான் அடிக்கடி ‘கலீஜ்’என்ற வார்த்தைய பயன் படுத்துவாங்க.

R.Gopi said...

// Jaleela Kamal said...
உருது காரர்கள் தான் அடிக்கடி ‘கலீஜ்’என்ற வார்த்தைய பயன் படுத்துவாங்க.//

******

ஆஹா... அப்படியா? மிக்க நன்றி ஜலீலா மேடம்...