Monday, March 30, 2009

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - லேட்டஸ்ட் கிச்சு கிச்சு






அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி(??)யின் தலைவர் (!!) நடிகர் கார்த்திக் (அவருதான் அரசியலுக்கு வந்துட்டாரே, இன்னுமா நடிகர்னு கூப்பிடனும்?) அவர்களின் லேட்டஸ்ட் டகால்டி உரையை படித்து மகிழுங்கள்.
என்னை பயமுறுத்தி பார்க்கலாம்னு நினைக்கிறாங்க. சிங்கத்துக்கு ஏது பயம்? நான் எந்த முடிவு எடுத்தாலும் மக்களுக்காக இருக்குமே தவிர சுயநலத்துக்காக இருக்காது. வருகிற தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன்!
(இவரு இதுபோல எல்லாம் பேசி எல்லாரையும் டெர்ரர் ஆக்கராறு. அதனால்தான் யாரும் அவர பக்கத்துல கூட சேர்க்க மாட்டேங்கறாங்க).

Monday, March 23, 2009

சந்தன தேவன் சங்குண்ணி (நம்ம கேப்டன் தாங்கோ ஒ)


சந்தன தேவன் சங்குண்ணி.
இது என்ன கேப்டன் பிரபாகரன் மாதிரி ஒரு ஆக்ஷன் படமா, இல்லீங்கோ ஒ, இது ஒரு டெர்ரர் படம், நீங்களே பாருங்கோ ... பாத்து பயப்படுங்கோ .......

யாருங்க சொன்னது, தமிழ்ல ஹாரர் (HORROR) படமே வந்தது இல்லேன்னு ........ இத பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க .........

(பின்னால் வருவதால் இது பின்குறிப்பு - இந்த போட்டோவ பாத்துட்டு, அவரு ஊர்ல இருக்கற அய்யனாரே பயந்துட்டாராமே??)
நீங்களும் பாத்து பயந்தா, நிர்வாகம் பொறுப்பல்ல .......அல்ல .... அல்ல...... இன்னும் நெறைய இருக்கு ....... வரும் ...... வரும் ... வரும்...
சும்மா சொல்ல கூடாதுங்க, நம்ம கேப்டன் ஒரு டெர்ரர் தாங்க ......

Saturday, March 21, 2009

ஜோக்கிரிஸ்@பக்கிரிஸ்.காம்




இந்த டகால்டிய பாருங்க.... ...........
"அண்ணன் ஜார்ஜ் புஷ்" அவர்கள் பேச்சு சுவாரசியத்தில் போன் எப்படி புடிச்சு பேசறாரு பாருங்க. ....... என்ன வேணும்னா சொல்லுங்க, நம்ம "தல" போல வருமா !!!??
அவரு போன் எந்த பக்கம் வேணும்னாலும் புடிச்சு பேசுவாரு ....... ஒலகத்தையே தலைகீழா மாத்துனவருக்கு, இந்த போன் மேட்டர் எல்லாம் ஜுஜுபி.. போன் தல கீழ புடிச்சு பேசறத பாத்தா, நம்ம "தல" மன்மோகன் சிங்கோட பேசறாபோல இருக்கு,....
இன்னொரு "தல" மைக்கேல் ஜாக்சன்" தன்னோட ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியே கழற்றி காண்பிக்கிறார்.
மூக்கு, கண், காது, வாய் என்று எல்லா செயற்கை உறுப்புகளும் (எல்லாம்னா எல்லாம் இல்லேங்க, சில பல) தனித்தனியே அவர் கைகளில் மற்றும் மேசையில் காணப்படுகின்றது.

"தல" @ கிச்சு கிச்சு.காம் - தேர்தல் 2009 டகால்டி


சென்னை: நான் ஆட்சிப் பொறுப்பிலோ-பதவிப் பொறுப்பிலோ இருந்து புரிந்த சாதனைகளை விட - அவை என் புகழ் பாடும் கல்வெட்டுகள் என்பதை விட - நான் பதவிப் பொறுப்பிலே இருந்த நேரத்தில் - தவறு செய்வோர் எவராயினும் - என் நண்பராயினும் - கழகத்தவராயினும் - உற்றார் உறவினராயினும் - பெற்ற பிள்ளைகள் ஆயினும்; அறவழி நின்று அவர்களைக் கண்டிப்பேன், தண்டிப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.உள்ளார்.

இது குறித்து கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

அடித்தட்டு மக்களையும், விவசாயப்பெருங்குடி மக்களையும், நடுத்தர மக்களையும்-அவர்களுள் குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிட மக்கள் ஆகியோரும் அணி அணியாகச்சேர்ந்து திராவிடர் கழகம் திக்கெட்டும் கொள்கைபரப்பிய அந்தக் கால கட்டத்தில், 1949-ம் ஆண்டில் பிரளயம் ஒன்று வந்தது போல் இயக்கத்தில் ஒரு பிளவு வந்தது


நன்றி : தட்ஸ்தமிழ். காம்
(மக்களே, நல்லா கேட்டுக்கோங்க....... தப்பு பண்றவங்க யாரா இருந்தாலும் இனிமே "தலயோட பார்வைல இருந்தும், தண்டனைல இருந்தும் தப்பிக்க முடியாது.....
சரி அப்படியே இவங்களுக்கும் தண்டனை உண்டான்னு சொல்லிடுங்க "தல"
மதுரை தினகரன் ஆபீஸில் மூன்று பேர்கள் எரிக்கப்பட்டதற்கான காரணகர்த்தா மு.க.அழகிரி?
"திருமா" நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது பல நூறு வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கான காரணகர்த்தா, "திருமா" மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை?
கோர்ட்டில் இருந்த காவல்நிலையத்தை எரித்தும், கடைகளை அடித்து உடைத்தும், ரவுடித்தனம் செய்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை?
ஸ்பெக்ட்ரம் ரூ.65,000 கோடி ஊழலில் சிக்கிய மத்திய மந்திரி ராசா மீது நடவடிக்கை??
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட "காடு வெட்டி குரு" விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாரா?? (பா.மா.க.கூட்டணி முடிவு செய்யப்படாத வரை, நோ சான்ஸ்).
இதற்கெல்லாம் "தல" என்ன பதில் சொல்வார்??
அப்துல் கலாம் அவர்கள் இன்றைய இளைஞர்களை கனவு காண சொன்னால், அதற்கு நானா பொறுப்பு?? என்பார்.....)

Thursday, March 19, 2009

கேப்டனின் அவதாரங்கள் - தேர்தல் கிலி (மக்களுக்கு)






என்னிய யாருமே இதுவரைக்கும் கூப்பிடல, ஆனா, யாரு கூப்பிட்டாலும், நான் அவிங்க பக்கம் போறதுன்னு முடிவு பண்ணிட்டேன். கொள்கை பாத்தா, கையில இருக்கற காசுக்கு கால் கிலோ வெங்காயம் கூட வாங்க முடியாது. அதான் "தல"ய போய் பார்த்து, பேசி, முடிவு பண்ணிடலாம்னு இருக்கேன்..(இதுதான் என்னோட லேட்டஸ்ட் அரசியல் டயலாக்).
என் கணக்கு இப்போ புதுசு. எனக்கு தேவை 4-5 தொகுதி, 40-50 கோடி பணம். இத யாரு குடுத்தாலும், நான் அவிங்கள பாக்க போவேன். கூட்டணி ஓகேதான்.

நான் இப்போவும் சொல்றேன், என் கூட்டணி மக்களோட தான்.

என்னோட இந்த டயலாக், சினிமாவுக்கு தான், அரசியலுக்கு இல்ல. அதனால மக்கள் நான் சொல்றத நல்லா புரிஞ்சுக்கணும்.

நீங்க அவிங்ககிட்ட கேட்டு வாங்குங்க, நானும் அவிங்ககிட்ட கேட்டு வாங்குறேன். எப்படி நம்ம கணக்கு? அஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

இப்போ எனக்கு இருக்கற ஒரே பயம், இந்த மதுரக்கார பய "குடிவேலு"தான். அவன்தான், நான் எங்க நின்னாலும், என்னிய எதுத்து போட்டி போடுவேன்னு சொல்லி இருக்கான். என்ன இருந்தாலும் அவனும் ரோசக்காரன் .... அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு.

ஆனா, ஒரு பாட்டில் சல்பேட்டா வுட்டுட்டு, அவன் வீட்டாண்ட போய் சவுண்டு விடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன். அப்படி ஏதாவது முடிவு பண்ணினா, நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லிடறேன் மக்களே. அதுக்கும் உங்க ஆதரவு வேணும்.

(மேலே இருக்கற என்னோட போட்டோவ கொழந்தைங்க கண்ணுல படாம வைங்க, அப்படியே நீங்க யாரும் பாத்து பயந்துற வேண்டாம்னு என் ஊரு அய்யனாரு சாமி கிட்ட வேண்டிக்கறேன்).

Monday, March 16, 2009

விஜய்யின் கோபம்... மிரண்டு போன பிரபுதேவா!


இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான்.
சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ.
சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் பிரமொஷனல் டூர் போனார்கள் ...
அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள்.
குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை உருவாக்கப் பார்ப்பது ஏன்?' என ஒரு லோக்கல் சானல் நிருபர் கேட்டு வைக்க என்ன பதில் சொல்வதென்று யோசித்த விஜய், இடையில் தன் ரசிகர்களைத் திட்டி அந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாராம்.
'ஏய்... பேசிட்டிருக்கோம்ல... சைலன்ஸ்...!' என அவர் போட்ட சவுண்டு, படத்தில் வில்லன்களை எதிர்த்து அவர் வழக்கமாக விடும் சவுண்டை விட அதிகமாக இருந்தது. விஜய்யின் கோபத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரபு தேவா மிரண்டு போய் பார்ப்பது வீடியோவில் தெரிகிறது. ......................................................
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
(சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆசைப்படுவது தப்பில்லை இளைய தளபதி அவர்களே, அவரை போல் நிதானமாக நடந்து கொள்ளவும் வேண்டும். செயலில் முதிர்ச்சி வேண்டும், பேச்சில் பணிவு வேண்டும். குறிப்பாக, மீடியாவில் கோபம் கொள்ள வேண்டாம்...
உச்சியை அடைய முயற்சிக்கும் பொழுது, மிகவும் முக்கியமாக பணிவும், அனைவரை அரவணைக்கும் பண்பும் வேண்டும் தோழா ......)
"வில்லு விஜய்" சீறிய அந்த வீடியோ லிங்க் இதோ :

Sunday, March 15, 2009

டன்மான டமிலன் @ டகால்டி டயலாக்ஸ் டாட் காம்


தே.மு.தி.க. கட்சியின் "தலை"வர் "கேப்டன்" என்ற அடைமொழியில் அனைவராலும் செல்லமாக (??) அழைக்கப்படுபவரும், தமிழ் கரடி விஜய டி.ராஜேந்தரால் "டாஸ்மாக் தாதா" என்று அழைக்கப்பட்டவரும், ஜெ.ஜெ. அவர்களால் காட்டமாக "குடிகாரன்" என்று அழைக்கப்பட்டவரும், கலைஞர் அவர்களால் "டாஸ்மாக் சகோதரன்" என்று அன்பாக விளிக்கப்பட்டவருமான திரு.விஜயகாந்த் (விஜயராஜ், இவர் இயற்பெயர், ரைஸ் மில் ஓனர்), அவர்கள் தன் சுற்றம் சூழ தேர்தல் திருவிழாவிற்கு தயாராகி விட்டார்.

புள்ளி விவர புலி, மற்ற எல்லாவற்றிலும் எலி என்று அனைவராலும் புகழப்படும் திரு. விஜயகாந்த் அவர்களின், சுற்றுப்பயண பேச்சை, சிறிது கேட்போமா??

குட் ஈவினிங். என்னடா, இவன் எப்போவும் டமில்-ல தானே வணக்கம் சொல்லுவான், இப்போ என்ன புதுசா இங்கிலிஷ்-ல வணக்கம் சொல்றேன்னு பாக்கறீங்களா?? எல்லாரும் எனக்கு இங்கிலிஷ் தெரியாதுன்னு நெனக்கறாங்க .... அவங்களுக்கு தான் இந்த குட் ஈவினிங்.
போன வாரம்தான் A,B,C,D, கத்துகிட்டேன். அடுத்த வாரம் ரைம்ஸ் எல்லாம் சொல்லி குடுக்கறேன்னு டீச்சர் சொல்லி இருக்காங்க. இனிமே, A,B,C,D, தான், இங்கலிஷ்-ல ரைம்ஸ் தான் .... அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இங்க கூட்டமா கூடி இருக்கற உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. யார் பேச்சையோ கேட்டு, யாருக்கு ஓட்டு போட்டு, அங்க எதுவும் கெடைக்காம, இங்க வந்து இருக்கீங்க. இப்போ கூட சொல்றேன். நான் உங்க எல்லாருக்கும் வயிறு நெறைய பிரியாணி போடறேன். ஆனா, வர்ற எலக்ஷன்-ல எனக்கு தான் ஓட்டு போடணும். சரின்னா, இப்போவே, பிரியாணி போடறேன். ஊர்ல சுத்திட்டு இருந்த எல்லா ஆட்டையும், இப்போதான் ஆட்டை போட்டு, பிரியாணி ரெடி ஆயிட்டு இருக்கு.

போன எலக்சன்ல பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டீங்க. இந்த எலக்சன் அப்பவும் பணம் கேளுங்க. 500 குடுத்தா, 1000 கேளுங்க, 1000 குடுத்தா, 2000 கேளுங்க. அதுவும் ஒரே நோட்டுதான்..... 2000 நோட்டு இல்லேன்னு சொல்லுவாங்க, புதுசா அடிச்சு குடுக்க சொல்லுங்க. ஏன்னா, அது எல்லாம் உங்க பணம், அதனால கேட்டு வாங்குங்க.
இப்போ இருக்கற வெலைவாசி-ல யாருக்கும் பல்பொடி வாங்க கூட காசு இல்ல. இவ்வளவு ஏன், இந்த மேடைல இருக்கற யாருமே இதுவரைக்கும் பல்லு விளக்கல, என்னையும் சேர்த்து. கையில பாத்தீங்களா, வேப்பம்குச்சி... செங்கல்பொடி ........ இதான் நம்ம நெலமை.

நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு. ஆனா, என்னிய தேடி வந்துட்டா, மொதல்ல ஒரு வேப்பம்குச்சி குடுத்து, பல்லு வெளக்க சொல்லிட்டு, சூடா சுக்கு காப்பி தண்ணி தருவேன். பொறவு, சூடா சாப்பாடு தயார் ஆகும், நான் வீட்டுல இருந்தா, என்னிய பாக்க வரவங்க எல்லாருக்கும் வயிறார சாப்பாடு கெடைக்கும். ஆனா முக்கியமா ஒரு விசயம் சொல்றேன். நான் வாரத்துல 7 நாளு மட்டும் வீட்டுல இருக்க மாட்டேன்.

என் கட்சில சேரணும்னு நெறைய பேரு வாராங்க. எல்லாரும் சீக்கிரமா வந்து சேந்துடுங்க. கட்சில சேர்ர எல்லாருக்கும் சுக்கு காப்பி தண்ணியும், கோழி பிரியாணியும் உண்டு. இப்போ கூட, வர்ற வழியில "வெட்டி வாலிபர்கள் சங்கம்"ன்ற ஒரு சமுதாய கூடத்த தொறந்து வச்சுட்டுதான் வரேன்.

இதுக்கு முன்னை ஆட்சில இருந்தவங்க உங்களுக்கு இலவச டி.வி. குடுத்தாங்க. நாங்க ஆட்சிக்கு வந்தா, இலவசமா, ரேடியோ பொட்டி, ஐஸ் பொட்டி (அதாங்க பிரிட்ஜ்), ஜில் ஜில் பொட்டி (அதாங்க ஏ.சி.), கையில தூக்கிட்டு போய் பேசுற போனு (அதாங்க அண்ணன் சொல்றது என்னனா, மொபைல்) எல்லாம் இலவசமா குடுப்போம். இது தவிர மழை காலத்துல, நீங்க நனையாம இருக்கறதுக்கு நாங்களே வந்து உங்களுக்கு குடை பிடிப்போம், எப்படி. அம்ம்ம்ம்ம்ம்ம்.

நம்ம ஆளுங்க எல்லாருக்கும், நம்ம மண்டபத்திலேயே இலவசமா திருமணம் நடத்தி வைப்போம், ..... டெபாசிட் மட்டும் ஒரு லட்சம் குடுத்துடுங்க. அந்த டெபாசிட் கூட உங்க மூணாவது புள்ள பொறந்த உடனே, திருப்பி குடுத்துடுவோம்.
என்னது, மண்டபத்த இடிச்சிட்டாங்களா?? திருப்பி கட்டுவான் இந்த மதுரக்கார மொரட்டுப்பய.என்னது, கட்டுவேன்ன்னு நான் சொன்னது, மறுபடியும் கல்யாணம் இல்லடா (குடும்பத்துல கொழப்பம் பண்ணிடுவான் போல இருக்கே), பரதேசி, கல்யாண மண்டபத்தடா.....
டேய். நீ கேள்வி கேக்கறத பாத்தா, நீ அந்த குடிவேலு-வோட ஆளா?? என்னது, குடிவேலு, யாருன்னு தெரியாதா?? அது தெரியரவங்களுக்கு தெரிஞ்சா போதும்டா (நாக்கை மடித்து துண்டால் அடிப்பது போல் ஆக்ஷன் காட்டுகிறார்).

இங்க ஒரு பெரியவரும் , பெரியம்மாவும் என்னிய குடிகாரன்-னு சொன்னாங்களாம். ஆமாம், நான் குடிக்கறவன் தான். ஆனா, உங்கள மாதிரி அந்த டாஸ்மாக் கடைய மட்டும் நம்பி வாழறவன் இல்ல, தானே காய்ச்சி, தானே அடிப்பான் இந்த சல்பேட்டா சபரி.

நீ காய்ச்சி, அத டாஸ்மாக்-ல வித்து, நான் குடிச்சா எனக்கு அசிங்கம்
நானே காய்ச்சி, அத, என் பங்களாவுல வச்சு குடிச்சா நான் சிங்கம்

என் அடுத்த படம் என்னன்னு கேக்கறீங்களா?? ஏற்கனவே நடிச்ச படமே வெளியே வரல. என்னது, எப்போ வருமா, யாருக்குய்யா தெரியும், ஒரு பயலும் படத்த வாங்க மாட்டேங்கறான். வாங்குனாதான வெளியே வரும். ஆனா, இப்போ ஒரு சூப்பர் கதை ரெடி பண்ணி வச்சு இருக்கேன். கிராமத்து கதை. டைட்டில் கூட ரெடி, படத்தோட பேரு பெரிய செட்டியார்.

என்னோட சின்ன கவுண்டர் நல்லா ஓடினதால, இந்த படத்துக்கு பெரிய செட்டியார்னு பேரு வச்சு இருக்கேன். அந்த படத்துல, குடிவேலு-ன்னு ஒரு காமெடி நடிகன அறிமுகப்படுத்தறேன். அவன் வந்து இங்க இருக்கற இன்னொரு வேலு-க்கு ஆப்பு வைப்பான். யாரு அந்த வேலுவா?? அவனுக்கு தெரிஞ்சா சரி....... வெக்கறேண்டா அந்த வேலுவுக்கு வேட்டு.

எனக்கு நடிகர் சங்க பதவிய தந்த நீங்க, இந்த நாட்ட ஆளுற பதவியும் தந்து பாருங்க. அப்புறம் நம்ம நாட்ட தேடி, அமெரிக்கா காரன் வருவான். எதுக்காக வருவானா?? என்னிய கேட்டா?? எனக்கு என்னடா தெரியும்?!!

கடைசியா ஒண்ணு சொல்றேன், எனக்கு ஓட்டு போடுங்க, வீட்டுக்கு ஒரு ரேசன் கடை தொரப்பேன். சீம எண்ணை, அஸ்கா சக்கரை, வருசா வருசம் பொங்கலுக்கு இலவசமா கரும்பு, தீபாவளிக்கு வெடி எல்லாம் இலவசமா குடுத்து பட்டைய கெளப்ப போறேன்.

இன்னும் பேசறதுக்கு நெறைய இருக்கு, பேசிட்டே இருந்தா, அடுத்தவன் வந்து ஆட்சிய புடிச்சி, 5 வருசம் ஆட்சி பண்ணிட்டு போய்டுவான், எல்லாரும் எனக்கே ஓட்டு போடுங்க. நான் இன்னும் 5-10 காலேஜ் கட்டணும், 10-15 கல்யாண மண்டபம் கட்டணும், அதுக்கு உங்க எல்லாரோட ஆச்சியும் தேவை.

யோவ், அது ஆச்சி இல்லைய்யா, ஆசி,
ஆட்சி வேற, ஆச்சி வேற......ஆசி வேற....

(ஐயோ, நமக்கு தமிழே தள்ளாடுதே. நாம மொதல்ல, இந்த தமிழ ஒழுங்கா பேச கத்துக்கணும், நமக்கு தமிழே தகராறு, இதுல அடுத்த மீட்டிங்-ல இங்கலிஷ் வேறயா?? ஐயோ நெனச்சாவே தல சுத்துதே... இவனுங்க வேற நம்ம டங்குவார அறுத்துருவானுங்க. எல்லாத்தையும் போட்டோ புடிக்கறானுங்க ..... அங்க இங்க போட்டு நம்ம மானத்த வாங்கிட போறாங்க .......
(பின்னால் திரும்பி)
தம்பி ஒரு கிளாஸ் சர்பத் போட்டு குடுப்பா ....
டேய் ........... ஏண்டா, சர்பத் கேட்டா அதையே தரணுமா?? சர்பத் குடுக்கற மாதிரி சல்பேட்டா குடுடா பரதேசி)
யப்பா, 4 தொகுதியும் 40 கோடியும் வாங்கறதுக்குள்ள, நாக்குல நொரை தள்ளுதுய்யா அய்யனாரே!!!

தேர்தல் 2009 - அராஜகங்கள் ஆரம்பம்



வாக்காள பெருமக்களே, நாம் மற்றுமொரு மாபெரும் தேர்தலுக்கு தயாராகி விட்டோம். பல சில மற்றும் சில பல பெருந்தலைகள் (காடு வெட்டி குரு, செடி வெட்டி சிஷ்யர்கள், கொண்டித்தோப்பு கெடா குமார்ஸ்) ஆங்காங்கே உலா வர துவங்கி விட்டனர். விரச கவிகளின் பேனாக்களில் விரச மை இடப்பட்டு, விரச கவிதைகள் தயாராகிறது. கள்ளத்தோணி, கட்டுமரம், கடலில் தூக்கி போட்டால் மிதந்து வந்து சேவை செய்வேன் போன்ற உளுத்துப்போன கவிதைகள் எழுத தொடங்கப்பட்டு விட்டன.
பரமார்த்த குருவும், அவரின் சிஷ்யர்களும் உலகில் இருக்கும் அனைத்து வண்ணங்களை கொண்ட கரை போட்ட வேட்டியுடன் வலம் வருகிறார்கள். திடீர் தலைவர்கள், அனைத்து வாகனங்களிலும் உலா வருகிறார்கள்.

பெரும் அளவிலான கருப்புப்பணம் (சிவப்பு பணம் என்பதுதான் சரி, ஏனென்றால், பலகோடி ஏழைகளின் வயிற்றில் அடித்து உள்ளே பதுக்கி வைத்த பணம், கண்டிப்பாக சிவப்பு பணம் தான்), ஏராளமாக புரள ஆரம்பிக்கும்.

ஏமாற்று பேரங்கள் ஏற்கனவே எல்லா இடங்களிலும் ஆரம்பமாகி விட்டன. ஒன்றுக்கும் உதவாத உப்புமா மற்றும் லெட்டர் பேட் கட்சிகள், தங்கள் வேட்டியின் நிறத்தை ஏதாவது ஒரு கரைக்கு மாற்றி வருகின்றன. ஏனெனில், கரைவேட்டிக்கு தான் காசு.........

இதுபோன்ற உப்புமா பேரங்களில் யார் யார் உள்ளனர் என்று பார்ப்போம்.

விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க) - குடுங்க, ஏதாவது குடுங்க, குடுத்துட்டு அப்புறம் பாருங்க, எதுகை, மோனை விளையாடும், எதிராளிகள் பந்தாடப்படுவர். அவர்களை சரமாரியாக வசைபாடும் படலம் தொடங்கும். ஏற்கனவே விஜயகாந்தை ஒரு பொதுக்கூட்டத்தில் வசைபாடியதில், செம மாத்து கிடைத்தது. ஆனால், இவர் ஒரு விஷயத்தில் கெட்டி. யார், நிறைய கொடுக்கிறார்களோ, அவர்கள் பக்கம் தன் ஓட்டை தமிழ்குழாயை திருப்பி விடுவார். அங்கு கும்பி நாற்றத்துடன் தமிழ் அருவி பெருக்கெடுத்து ஓடும். ஒரு சீட் இல்லையென்றால் கூட பரவாயில்லை. சில கோடிகள், குறைந்தபட்சம் சில லட்சம், இவரின் லட்சியம்.

விஜயகாந்த் (தே.மு.தி.க) - இவர் இரு பெரும் தலைவர்களையும் சரமாரியாக வசைபாடி, ஒரு நல்ல மாற்று தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால், இந்த தேர்தலில், கண்டிப்பாக தி.மு.க கூட்டணிக்கு, விலை போய் விடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. (இங்கே கொள்கையும் கிடையாது, ஒரு வெங்காயமும் கிடையாது, கொள்கையை பார்த்தால், அவர்கள் பாக்கெட் காலியாக தான் இருக்கும் என்று இந்த மானம்கெட்ட தலைவருக்கு(??) தெரியாதா என்ன?? 4-5 சீட் மற்றும் கணிசமான கோடிகள் எதிர்பார்ப்பார்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) - கலைஞரின் முழு ஆதரவு உண்டு. ஆனால், கலைஞர் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவதுதான் தன் முக்கிய குறிக்கோள் என்று சொல்லிவருவதால், இந்த கூட்டணியில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த மடம் இல்லை என்றால், ஜெ.ஜெ.மேடத்தின் அந்த மடம் என்று உறுதியாக ஒரு முடிவு எடுத்து விடுவார். 6-8 சீட்கள் எதிர்பார்ப்பார், கூடவே சில கோடிகளும்.

மருத்துவர் அய்யா என்கிற ராமதாஸ் - இவர் தற்போதைய சூழலில் ஜெ.ஜெ.வின் கூட்டணியில் ஐக்கியமாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 9 - 11 இடங்கள் பேரம் பேசக்கூடும். தி.மு.க.வுடனான உரசல் நீடித்து வருகிறது. தி.மு.க-வும் இவர்கள் இதுவரை அழைத்து கூட்டணி பற்றி விவாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எந்த கூட்டணிக்கு போவார் என்பது "யாவரும் நலம்" மற்றும் "அதே கண்கள்" படத்தைவிட சஸ்பென்சாக வைத்து இருப்பார்.
சரத் குமார் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி) - இது பெரிய உப்புமா மற்றும் டகால்டி கட்சி என்பது, திருமங்கலம் இடைதேர்தலில் 800 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதில் இருந்தே தெரிகிறது. பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தும் திறமை இதனிடம் இல்லை. கட்சியின் ஒரே பலம் ராதிகாதான். நான் டாஸ்மாக் பார்ட்டி இல்லை, பாஸ்மார்க் பார்ட்டி என்று வீரமுழக்கம் விடுத்து, திருமங்கலத்தில் பீப்பீ ஊதியவர். ஐயோ ஐயோ.......

இதுதவிர, முக்கிய கட்சிகள் கூட்டணி எடுக்கும் முடிவில் உள்ளவை எவை எவை என்று பார்ப்போம்.

தி.மு.க (தற்போது காங்கிரஸ் இவர்கள் வசம், இது பெரிய பலம்)
அ.தி.மு.க. (தற்போது கம்யூனிஸ்டுகள் இவர்கள் வசம், இது இவர்களின் பெரிய பலம் )

பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பலப்பல பலே உப்புமா கட்சிகள் (சுப்பிரமணிய சுவாமி, கிருஷ்ணசாமி போன்ற சாமிகள் உட்பட) நாடெங்கும் நிறைந்துள்ளன. அவை பற்றி எல்லாம் பார்த்தால், நமக்கு இந்த ஆயுள் போதாது. கடைசியாக :
நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம் ஒரு கேடி
அவன் ஆட்டையை போட்டான் பல கோடி
ஓட்டு போட்ட நாம் நிற்போம் தெருக்கோடி

Wednesday, March 11, 2009

"தல" "தல"யாம் முந்திரிக்கா!!



முத்துப்பல் சிரிப்பழகா

முன்கோப சொல்லழகா

பார்போற்றும் பாவலனே

பாவேந்தன் வழிவந்தவனே

என்றும் போற்றுவோம் உன்னையே

முத்தமிழின் மூத்தவனே

தமிழ்நாட்டின் முதல்வனே

நீ பல வளமும் பெறுக.

பல்லாண்டு வாழ்க

(வேர் ஈஸ் த பார்ட்டி டுநைட்?)

Tuesday, March 10, 2009

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009 - 11.03.09


கேள்வி : பதவி, பட்டம்?
பதில் : நான் கேட்டு நீங்கள் தருவது, நான் கேட்காமல் என்னை தேடி வருவது.

கேள்வி : தமிழ்?
பதில் : நான் நேசிப்பது, சுவாசிப்பது, கனவிலும் வாசிப்பது.

கேள்வி : கூட்டணி?
பதில் : கூட்டாக சேர்ந்த அணி. அன்பாலும், அமௌன்டாலும் சேர்ந்தது.

கேள்வி : 40/40?
பதில் : அடைய ஆசைப்படுவது. அதை அடைய அனைத்து முயற்சியும் எடுப்பது, பின் அதை அடைந்தே தீருவது.

கேள்வி : ஆட்சி கட்டில்?
பதில் : அது அனைவருக்கும் பேச்சு மட்டில்.

கேள்வி : நீதிபதி?
பதில் : நீதிக்கு அதிபதி, இங்கு எனக்கு நானே நீதிபதி.

கேள்வி : தேர்தல் நிதி?
பதில் : அன்பாக செய்யும் முயற்சி. பலன் இல்லையேல், அராஜகத்தாலும் பெறப்படுவது.

கேள்வி : நம்நாடு?
பதில் : தமிழின் தாய்வீடு. அனைவருக்கும் ஒன்று.

கேள்வி : நல்ல சினிமா?
பதில் : உளியின் ஓசை

கேள்வி : ஆஸ்கர் விருது?
பதில் : "உளியின் ஓசை"க்கு கிடைக்க வேண்டும்.

கேள்வி : பாராட்டு விழா?
பதில் : நீங்கள் எனக்கு மட்டும் எடுக்க வேண்டும் என்று நான் விரும்புவது.

கேள்வி : 40-ல் பங்கு?
பதில் : கொடுக்க நினைப்பது சொற்பம், அதிகம் கேட்டால் அவர்கள் அற்பம்.

கேள்வி : இதயம்?
பதில் : அனைவருக்கும் இடம் உண்டு. அமௌன்ட் அதிகமானால், இடமும் அதிகம் உண்டு.

கேள்வி : சேர்ந்தே இருப்பது?
பதில் : நானும் என் கூட்டணியும்

கேள்வி : சேராதிருப்பது?
பதில் : நானும் ஜெ.யும்.

கேள்வி : மு.க.அழகிரி?
பதில் : கழகத்தின் தூண்

கேள்வி : ஏழையின் சிரிப்பில்?
பதில் : இறைவனை காண்பார் சிலர், தன்னை காண்பான் இந்த ஏழை!!

வேறு பல கேள்விகள் விரைவில்ல்ல்ல்ல்ல்ல்.........

ஜல்லி நாயகன் ஜெ.கே.ரித்தீஷ் அதிரடி கிரிக்கெட்


Cricket has been in news for different reasons off late and now there was a match that was played between Chennai Warriors and Andhra Kings.
Don't worry they are not new IPL teams but teams consisting of actors from Kollywood and Tollywood who played a friendly match on 7th March at Chidambaram Stadium in Chennai.
Chennai Warriors team consisted of Aarya, Simbu, Bharath, Srikanth, Jeeva, J.K Ritish, Shanthanu, Ramesh and Vikranth. Andhra Kings consisted of Tarun, Srikanth, Uday Kiran, Nikhil, Raghu, Prabhu, Sai Ravi and Rajiv Kanakala. The event was graced by M.K. Stalin and true to their talent, the Chennai Warriors won the match.
("தல ஜெ.கே.ரித்தீஷ்" இந்த காஸ்டியூம் பாக்க புதுசா, நல்லாத்தான் இருக்கு. ஆனா, "தல" பேட், பால் ஏதாவது எடுத்து வெளையாடினாரா இல்ல இதுவும் அவரோட "கானல் நீர்" மாதிரி டகால்டியா??)

Monday, March 9, 2009

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009




கேள்வி : ஜெ.உண்ணாவிரதம் ?
பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலின் புதுமொழி.



கேள்வி : ஒல்லியான பெண்கள் ?
பதில் : உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு


கேள்வி : வை.கோ?
பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.



கேள்வி : பகுத்தறிவு??
பதில் : அறிவுரைகளின் முதன்மை வார்த்தை. நாம் அடுத்தவரை பின்பற்ற சொல்வது. சொல்பவர்கள் பின்பற்றாதது.

கேள்வி : சமீபத்தில் கிடைத்ததில் பிடித்தது?

பதில் : "பகுத்தறிவு பகலவன்" என்ற பட்டம்.

கேள்வி : பிடித்த நிறம்

பதில் : மஞ்சள் மட்டும் அல்ல



கேள்வி : அடிக்கடி நினைவில் வந்து இம்சிக்கும் ஒரு வார்த்தை?
பதில் : ஐயோ, கொல்ராங்கோ, அய்யய்யோ கொல பண்றாங்கோ.........



கேள்வி : பிடிக்காத ஒரே நபர்
பதில் : ஜெ.ஜெயலலிதா.....



கேள்வி : எரிச்சலூட்டும் வார்த்தை
பதில் : மைனாரிட்டி அரசு.



கேள்வி : ஆற்காடு வீராசாமி?
பதில் : தொட்டால் ஷாக் அடிக்கமாட்டார். இடது புறம் சென்று பேசினால், பதிலளிக்க மாட்டார். மொத்தத்தில் நல்லவர். கழகத்தில் ஒரு மூத்தவர்.



கேள்வி : டி.ஆர்.பாலு?
பதில் : வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டி, பாலங்களின் நாயகன். பல கப்பல்களுக்கு சொந்தக்காரர் (எனக்கு கப்பம் கட்டியவர்களில் முதலிடம் இவருக்கு).



கேள்வி : அன்பழகன்?
பதில் : எங்கு இடம் இல்லை என்றாலும், என் இதயத்தில் அவருக்கு நிச்சயம் இடம் உண்டு (இல்லை என்றால், என் இடத்தையே கேட்டு விடுவார்).


கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓயாமல் அடுக்குமொழி பேசி அடுத்தவரை இம்சிப்பவர். பெரிய உடம்புக்காரர். இன்னமும் நாயகனாக நடித்து எல்லோரையும் பயமுறுத்துபவர்.

கேள்வி : விஜயகாந்த்??
பதில் : அரசியலில் அரிச்சுவடி படிக்க வந்துள்ள குழந்தை. இருக்கு அதனிடம் நிறைய அகந்தை.



கேள்வி : பிடித்த நடிகர்
பதில் : ஜெ.கே.ரித்தீஷ் (அல்ல)



கேள்வி : பிடித்த நடிகை??
பதில் : பரவை முனியம்மா (அல்ல)



கேள்வி : நினைவில் நின்றது / நின்றவர்??
பதில் : கவர்ச்சி கட்டழகி நமீதா.



கேள்வி : கையூட்டு பெற்றதுண்டா??
பதில் : கையூட்டு என்றால் என்ன?? என் தாய் என் கையில் வைத்து ஊட்டிய சோறுதானே??



கேள்வி : தமிழ்??
பதில் : தாய்மொழியாம் தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் வாட்சு.......



கேள்வி ; ஆங்கிலம்??
பதில் : வாணிபம் செய்ய புகுந்த அன்னியரின் பகட்டு மொழி.



கேள்வி : கருப்பு கண்ணாடி??
பதில் : அழகிற்கு அழகு சேர்ப்பதற்கு மட்டும் அல்ல.



கேள்வி : பிடித்த சுவை?
பதில் : கருப்பட்டியும் தேனும்........



கேள்வி : பிடித்த உணவு?
பதில் : கேப்ப களி மற்றும் குறு மிளகாய். நிறைய தின்றாகி விட்டது. இப்போது தின்று சிறிது நாளாகி விட்டது. விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.



கேள்வி : சன் டி.வி??
பதில் : உலக தொலைக்காட்சி வரிசையில் முதலிடம், மக்கள் மனதிலும் நின்றிடும். உலக தமிழர்களின் தேவை, அதற்கு நாங்கள் செய்யும் சேவை.



கேள்வி : கலைஞர் டி.வி??
பதில் : ஆஹா, இந்த சேனலை பார்க்கத்தான் உலகில் பலர் உயிருடன் உள்ளனர். இன்று உலகின் பல கோடி பேர்களை இலவசமாக மகிழ்விக்கும் ஒரு அற்புத சேனல் தான் கலைஞர் டி.வி. சேனல் யாருடையதாக இருந்தாலும், நல்லவற்றை போற்றுவதும், வாழ்த்துவதும் தானே பச்சை தமிழனின் குணம்??


கேள்வி : ஜெயா டி.வி??
பதில் : அப்படி என்றால் என்ன?? புதியதாக வந்துள்ள ஒரு டி.வி.மாடலா??



கேள்வி : கடவுள் பக்தி என்பது??
பதில் : நான் இதுவரை கேள்விப்படாதது. என் மனைவி எனக்காக எப்போதும் வேண்டுவது.



கேள்வி : பிரச்சனை??
பதில் : கோயில்களில் என் வீட்டார் எனக்காக, என் பெயரில் செய்த அர்ச்சனை (வெளியில் தெரிந்தால் பிரச்சனை).



கேள்வி : பிடித்த பாடல்??
பதில் : சர்க்கர இனிக்கிற சக்கர, இதில் எறும்புக்கு என்ன அக்கறை??



கேள்வி : பிடித்த வேலை?
பதில் : டபுள் ட்ராக் டகால்டி.......



கேள்வி : ஆசைப்படுவது?
பதில் : ஆல் டைம் டகால்டி.



கேள்வி : பிடித்த பட்டப்பெயர்?
பதில் : ஆல் இன் ஆல் அழகுராஜா.



கேள்வி : இன்பம் என்பது?
பதில் : நமீதாவை அருகில் வைத்து சொல்ல வேண்டிய பதில்.



கேள்வி : உங்கள் குரு??
பதில் : என்னை போல பல மாணவர்களையும், சிஷ்யர்களையும் கொண்ட பரமார்த்த குருதான் என் குரு.



கேள்வி : பிடித்த ஐந்து சிஷ்யர்கள், மாணவர்கள்?
பதில் : நான், மூடன், மட்டி, பேதை, மிலேச்சன்.



கேள்வி : தேர்தல் கூட்டணி.
பதில் : இதயத்தில் இடமளித்தவர்களுக்கு தொகுதிகளிலும் இடமளிக்கும் ஒரு விளையாட்டு.


கேள்வி : இலவச கலர் டி.வி??
பதில் : சேனல் பார்க்க சேர்த்து பணம் வாங்கி விடுவோம்.



கேள்வி : ஒரு ரூபாய் அரிசி??
பதில் : ஒரு வேளை சாப்பிட்டவர்கள், இனி மூணு வேளையும் வயிறு முட்ட சாப்பிட நான் செய்த யோசனை.... (இல்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன்).



கேள்வி : ஜல்லிக்கட்டு??
பதில் : வீர இளைஞர்கள் கட்டழகு கன்னியரை தன் வீரதீர செயல்கள் மூலம் கவர ஒரு வாய்ப்பு....



கேள்வி : தொகுதி பங்கீடு??
பதில் : அதிகம் ஆசைப்படுபவர்களிடம், அதிக ஆசை ஆபத்து என்பதை வலியுறுத்தி, சொற்பமாக கொடுக்கப்படும்.



கேள்வி : உங்கள் உண்ணாவிரதம் ஒரு ஸ்டண்ட் என்று சொல்லும் எதிர்கட்சியினருக்கு நீங்கள் சொல்லிக்கொள்வது??
பதில் : நான் உண்ணாவிரதம் இருந்தால் நாடு தாங்காது, நான் உண்ண ஆரம்பித்தால், உங்களுக்கு உணவு தந்து மாளாது......



கேள்வி : உங்கள் தேர்தல் வாக்குறுதிகள்??
பதில் : தேன் தடவிய கசப்பு மருந்து. மருந்து வேலை செய்வதற்குள் நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடுவோம்.



கேள்வி : தமிழக மக்கள்??
பதில் : குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.



கேள்வி : இதை எதற்கு சொன்னீர்கள்??
பதில் : ஏதாவது சொல்லவேண்டுமே என்று சொன்னேன். மற்றபடி, அவர்கள் போடட்டும் எனக்கு ஒட்டு. இல்லை என்றால், அவர்களுக்கு நான் வைப்பேன் வேட்டு.


கேள்வி : மக்களிடம் பிடித்தது?
பதில் : அவர்களின் ஞாபக மறதி.

கேள்வி : பிடித்த வார்த்தை??
பதில் : நாளை நமதே, நாற்பதும் நமதே.........

"தல" அதிரடி தேர்தல் பிரச்சார உரை.


என் இனிய கழக கண்மணிகளே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே. ஆங்கிலம் பேசும் அயல் நாட்டவர்களே, எதிர்கட்சியின் பகட்டானவர்களே, உங்கள் அனைவருக்கும் வள்ளுவனின் அடுத்த வாரிசாம், கம்பனின் இளைய பேரனாம் இந்த கலைஞரின் தமிழ் வணக்கங்கள்.

அயல் நாட்டினர் கூட தமிழ் படிக்க ஆவல் கொள்ளும் இந்த காலத்தில், இங்கு புல் பூண்டோடு பிறந்து, கப்பி, களையோடு வளர்ந்த என் தமிழ் கூட்டம், அந்நிய மொழியாம் ஆங்கிலத்தின் மேல் மோகம் கொண்டு அலைவதை பார்த்தால், அய்யகோ, என் நெஞ்சு விண்டு விடும் போல் உள்ளதே. இதை கண்டால், என் மனம் பதைபதைக்கும், உங்கள் பணம் என் பையை நிரப்பும்.
என் பிறந்த நாளின் போது, என்மேல் பாசம் கொண்டு, என் தமிழ்மேல் நேசம் கொண்டு, என் தொண்டர்கள் (குண்டர்கள்) என்னை பண மழையில் நனைத்தனர். நான் பதிலுக்கு அவர்களை என் தமிழ் மழையில் நனைத்தேன். இவ்வளவு நனைந்தும் வசூல் மழை ஒன்றும் பிரமாதம் இல்லை. குறைந்த வசூல் கண்டு கலக்கமடைந்தேன். நிறைய வசூல் வந்தால், நெகிழ்ச்சி அடைவேன்.

இந்நாட்டில் இப்போது பல பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ள நிலையில், நான் ஒரு புதிய தொல்காப்பியப்பூங்கா திறந்துள்ளேன். அந்த தொல்காப்பிய பூங்காவில் என் தமிழ் பௌண்டன், செந்தமிழை பீய்ச்சி அடிக்கும். உள்ளே நுழைய சிறுகட்டணமாக, ஒரு ரூ.5,000௦௦௦/- மட்டும் செலுத்தி, நீங்கள் அனைவரும் தொல்காப்பிய பூங்காவில் நுழைந்தால், என் தமிழ்மழை உங்களை குளிப்பாட்டி மகிழ்விக்கும். வாருங்கள், வந்து நனையுங்கள்.
பலப்பல வேஷங்கள் போடும் பலதரப்பட்ட மனிதர்களை நான் பல காலமாக கண்டு வளர்ந்தவன். ஆனால், என் பிறந்த நாள் விழாவின் போது, என்னிடமே பகல்வேஷம் போட்டு ஒருவன் வந்தான். பிறந்த நாள் வாழ்த்து கூறியவன், தட்சிணை எதுவும் போடாமல் ஓட எத்தனிக்க, சுற்றி குழுமி இருந்த என் தொண்டர்களால் (குண்டர்களால்) நன்றாக கவனிக்கப்பட்டான்.
இன்று, போர்ப்ஸ் என்றொரு அயல்நாட்டு பத்திரிகை என்னையும், என் குடும்பத்தாரையும், உலகின் 445-வது பணக்காரர்களாக அறிவித்து, விஷம பிரச்சாரம் செய்துள்ளது. இதில் எனக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. அயல்நாட்டின் அந்நியர் கூட இங்கு இருப்பவர்களின் கைப்பாவையாக மாறிவிட்டார்களோ என்று ஐயப்பட வைக்கிறது. மறத்தமிழன் ஒருவன், இந்த பட்டியலில், 444 இடங்கள் பின்தங்கி உள்ளானே என்று யாரும் கோபப்படவில்லை, வெட்கப்படவில்லை, வருத்தப்படவில்லை.

என்னை இந்த இடத்தில் வைத்து அழகு பார்த்த தமிழகமே, தமிழக மக்களே, எதிர்கட்சிகார்கள் கேட்கிறார்களே, இந்த இடம் எப்படி வந்ததென்று?? அவருக்கு சொல்லுங்கள், அது நீங்கள் எனக்கு, அன்பால் அளித்த இடம் என்று. வரும் வருடங்களில், இந்த இடம் நிரந்தரம் இல்லை, மேலும் உயரவைப்போம் என்று. அப்போதாவது அவர்களுக்கு புரியட்டும், நான் யாரென்று??

இந்த 445 இடத்தில் நான் உள்ளதை பற்றி கேள்வி எதுவும் கேட்க நினைப்போர், அந்த பட்டியலில், எனக்கு முன் உள்ள 444 பேரையும் கேட்டு விட்டு என்னிடம் வாருங்கள், பிறகு உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன். என்னை மட்டும் கேள்வி கேட்பது, என்ன கயமைத்தனம்??

டாஸ்மாக் சகோதரர் ஒருவர், அவரின் திருமண மண்டபத்தை நான் இடித்து விட்டதாக, எல்லா பத்திரிக்கைகளையும் அழைத்து சொல்லி வருகிறார். அவருக்கு ஒன்று சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன். நான் உன் மண்டபத்தை இடிக்கவில்லை. அரசாங்க அதிகாரிகள் ஏதோ திட்டத்திற்காக அந்த இடத்தை எடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். இந்த நல்ல விஷயத்தை, நீ டாஸ்மாக் போதை தெளிந்ததும், தெளிவு படுத்தி கொள்வாயாக.

நீ இது போன்று பலபல கோடிகள் செலவு செய்யும் முன், என்னையும் அழைத்து சில பல கோடிகள் கொடுத்திருந்தால், எனக்கு உன்மேல் வராது காழ்ப்பு, ஏனெனில் நான் சோற்றில் இடுவது உப்பு, நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால், உனக்கு நாங்கள் வைப்போம் ஆப்பு.

தேர்தல் சுற்றுபயணம் தொடங்க வேண்டும். வசூல் பலகோடிகள் தேற்ற வேண்டும். என் உண்டிகள் வசூலில் நிரம்பும்போது, என் மனமும் நிறைந்து காணப்படுகின்றது. ஒரு சில இடங்களில் மட்டும், வசூல் மிகவும் குறைவாக உள்ளது. அதை காணும் போது, மனம் வாட்டம் அடைகிறது.
நம் நாடு மற்றும் அதன் வளர்ச்சி, உலகின் அனைத்து பல நாடுகளுக்கும் சவால் விடும் நிலையில் இருந்தாலும், சில இடங்களின் வசூல் மட்டும் யாருக்கும் எந்த சவால் விடும் நிலையிலும் இல்லையே என்று எண்ணும்போது, என் உள்ளம் குமுறுகிறது, கண்கள் பனிக்கிறது, இதயம் கனக்கிறது.

மக்கள் வாழ்வில் மற்றற்ற மகிழ்ச்சியும், முன்னேற்றமும் வந்துள்ள நிலையில், இந்த முறை, வசூலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட நீங்கள் தயவு செய்ய வேண்டும். என்னை வசூல் மன்னனாக ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. பொறுப்பில் பின்வாங்குவது தமிழனுக்கு அழகல்ல. முடிவெடு தமிழா ............... சோதனைகளை தாண்டியவன், சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்.

நான் உங்கள் கட்டுமரம், கள்ளத்தோணி, நீங்கள் அதில் ஏறி, எங்கும் பயணம் செல்லலாம், இலவசமாக. நான் உங்களுக்கு சேவை செய்வதையே வாழ்வின் முக்கிய குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். என் சேவை நீங்கள் அறியாததா?? உதாரணத்துக்கு ஒன்று, மானாட மயிலாட, நானாட, நமீதா ஆட.....

காடுவெட்டி குரு, செடி வெட்டி சிஷ்யன் எல்லாரையும் அரவணைத்து செல்வது என் பண்பல்லவா?? எல்லோருக்கும் கையில் இருக்கும் 40அப்பத்தை சிறு சிறு பங்குகளாக கொடுத்து விட்டு, நான் என் பங்காக வைத்து கொள்ள இருப்பது வெறும் 35 தான்.
(வாழ்க அண்ணா நாமம், நானும் உங்களுக்கு போடுவேன் பெரிய நாமம்)

Sunday, March 8, 2009

சரத் @ மெகா காமெடி டாட் காம்




கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுப்போம் என்று அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.



அவர் மேலும் கூறியதாவது :



தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்களிடையே இருக்கிற வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைந்து தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத் தமிழரிடையே இருந்து வருகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. அறிவித்திருக்கும் போராட்டத்தின் மூலம் அதற்கான காலம் கனிந்திருக்கிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

**********************************************

தன் சமீபத்திய படமான 1977 மெகா ஹிட் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்து எல்லோருக்கும் கிச்சு கிச்சு மூட்டினார்.


(சரத்குமாரின் அதிமுக ஆதரவு பேச்சுக்கு , ஜெ.விடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது).

Saturday, March 7, 2009

கேள்வியும் நானே பதிலும் நானே - "தல" ஸ்பெஷல்



தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் "தல" தன் கேள்வி பதிலுடன் தயாராகி விட்டார். மிகுந்த பணிகளுக்கிடையில் அவர் அளித்த இன்றைய ஓரிரு வார்த்தை, "கேள்வியும் நானே பதிலும் நானே".

கேள்வி : அரசியல் என்பது?
பதில் : அனுபவசாலிகள் விளையாடும் மைதானம்

கேள்வி : தி.மு.க?
பதில் : திறமைசாலிகள் முழுதும் கலந்தது.

கேள்வி : திருமா??
பதில் : கருஞ்சிறுத்தை.

கேள்வி : வை.கோ?
பதில் : புலியல்ல, பூனைக்குட்டி.

கேள்வி : ராமதாஸ்?
பதில் : மருத்துவராக தகுதி பெற்ற மருத்துவர்.

கேள்வி : காடு வெட்டி குரு?
பதில் : என் அன்புத்தம்பி

கேள்வி : ஜெ.ஜெ.?
பதில் : பகட்டு சீமாட்டி.

கேள்வி : மு.க.முத்து?
பதில் : நடிப்பு சுரங்கம், பல்கலை வித்தகன்.

கேள்வி : மு.க.அழகிரி?
பதில் : அரசியல் அனுபவசாலி.

கேள்வி : மு.க.ஸ்டாலின்?
பதில் : தமிழ்நாட்டின் தளபதி.

கேள்வி : தங்கபாலு??
பதில் : என் ஆருயிர் நண்பர்.

கேள்வி : இளங்கோவன்??
பதில் : எல்லோருக்கும் இனியவர்.

கேள்வி : கேப்டன் விஜயகாந்த்?
பதில் : அவர் எந்த டீமுக்கு கேப்டன்? அவரை பழுப்பு எம்.ஜி.ஆர் என்றே அழையுங்கள்.

கேள்வி : ரஜினிகாந்த்??
பதில் : கருப்பு வைரம், இந்தியாவின் சூப்பர் ஸ்டார், விரைவில் அகில உலகும் கொண்டாடப்படும் நிலைக்கு வருவார்.

கேள்வி : கமலஹாசன்?
பதில் : சகலகலா வல்லவன்.......கலைத்தாயின் முதல் மகன்.

கேள்வி : டி.ராஜேந்தர்??
பதில் : ஓட்டை பாத்திரத்தில் ஓராயிரம் லிட்டர் தண்ணீர் சேமிக்க நினைப்பவர்.

கேள்வி : நடிகர் விவேக்?
பதில் : நகைச்சுவை வித்தகன்.

கேள்வி : வடிவேலு?
பதில் : வைகை மண்ணில் வந்த கரும்சிரிப்பு.

கேள்வி : வாலி?
பதில் : வார்த்தை ஜால கவி.

கேள்வி : வைரமுத்து?
பதில் : வைர வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்.

கேள்வி : இளையராஜா?
பதில் : இசைத்தாயின் மூத்த மகன்.

கேள்வி : ஏ.ஆர்.ரஹ்மான்?
பதில் : இசையை சுவாசிக்கும் இளம்புயல்.
கேள்வி : பாராளுமன்ற தேர்தல்??
பதில் : நாளை நமதே, நாளை நாற்பதும் நமதே!!!!

Tuesday, March 3, 2009

கேப்டன் விஜயகாந்த் - எங்கள் ஆசான் (படத்த வாங்க ஆளு யாரும் இல்லீங்கோ ஒ)






விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான் படம் முடிந்த பின்பும் ரிலீஸ் செய்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. படத்தை எந்த விநியோகஸ்தரும் வாங்கவில்லை என்பதால்தான் இந்த நிலை. முதலில் படத்தை வாங்கிக்கொள்வதாக உறுதியளித்த பிரமிட் சாய்மீரா கடைசி நேரத்தில் கையை விரிக்க, அதிர்ந்து போய் விட்டார் தயாரிப்பாளர் தங்கராஜ்.

இதற்கிடையில் மரியாதை பட பிரஸ் மீட்டில், "எங்கள் ஆசான் ரிலீஸ் ஆவது தாமதமாகிக்கொண்டிருக்கிறதே" என்று ஒரு நிருபர் கேட்க, "என் வேலை நடிச்சுக் கொடுப்பதுதான். படத்தை ரிலீஸ் பண்ணுவதும், தள்ளிப் போடுவதும் தயாரிப்பாளரின் இஷ்டம். அதிலே நான் எப்படித் தலையிட முடியும்?" என்றார் கேப்டன். முன்பெல்லாம் தனது படங்களில் ஏதாவது சிக்கல் என்றால் முன்னின்று முடித்து தருபவர், இப்போதெல்லாம் இப்படிப் பேசுவது எதனால் என்று புரியாமல் தவித்தார்கள் நிருபர்கள்.

இவர்களைவிடப் பெரும் தவிப்போடு இருப்பவர் எங்கள் ஆசான் தயாரிப்பாளர்தான்.

(நன்றி : சென்னைஆன்லைன்.காம்)
(இவரு பின்ன வடிவேலு கூட எல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா காமெடி லெவல்-ல தான் இருக்கமுடியும். கடந்த பத்து வருடங்களில் விஜயகாந்த் நடித்த ரமணா தவிர எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. ஆகவே தான் விஜயகாந்தின் படங்களை வாங்க யாரும் முன்வரவில்லை. சமீபத்தில் டாப்-20 தமிழ் நடிகர்களின் பட்டியலை ஒரு முன்னணி வெப்சைட் வெளியிட்டது. அந்த லிஸ்டில் விஜயகாந்த் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

Monday, March 2, 2009

டண்டனக்க டமாலு, உத்துப்பாரு நம்மாளு, கரடிக்கு சவாலு








தமிழ்நாட்டின், டெர்ரர் ஹீரோ (ஹீரோயினை தொடமாட்டார், ஆனால் சொம்பு சொம்பாக பால் எடுத்து ஊத்துவார், பால்தொட்டியில் ஹீரோயினை போட்டு குளிப்பாட்டுவார்), கேமராமேன், பாடலாசிரியர் (தட்டி பாத்தேன் கொட்டாங்கச்சி, தாளம் வந்தது பாட்ட வச்சி, தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி, தூக்கி எறிஞ்சா கண்ணு கொளமாச்சு உட்பட பல அதிரடி பாடல்கள் எழுதி உள்ளார்), இசையமைப்பாளர், பாடகர் (பொன்னான மனசே பூவான மனசே பாடல் புகழ்), டான்ஸ் மாஸ்டர் (சமீபத்திய அட்டகாச டான்ஸ் படம் வீராசாமி), ஸ்டண்ட் மாஸ்டர், காதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், டைரக்டர், தயாரிப்பாளர், மேக்கப் கலைஞன் உள்ளிட்ட பல விஷயங்களையும் தன் படத்தில் செய்வார். செய்து நம் அனைவரையும் கொல்வார். அவர்தான் நாம் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த பல்கலை வேந்தன் கரடி டி.ராஜேந்தர்.

வாய் ஓயாமல் அடுக்குமொழி பேசி, அடுத்தவரை எப்போதும் குறை கூறி கொல்லும் இந்த கரடி, கொஞ்ச நாளாக வாய்மூடி இருக்கிறது. அவரை நம் மக்களுக்கு ஞாபகப்படுத்தும் நோக்கில் அவர் எழுதிய ஒரு சூப்பர் கவிதை, உங்கள் பார்வைக்கு.
********************************************
டேய் குகையில் இருந்தா புலி
வலையில் இருந்தால் எலி
கொழம்புல போட்டா புளி
ஜலிப்பு கட்டினா சளி
அடிபட்டா வரும் வலி
குழியில ஆடுனா கோலி
கழியில ஆடுனா கில்லி
கழுத்துல கட்டுனா தாலி
கொழந்த தூங்குனா தூளி
வேல செஞ்சா ஜோலி
ஊர் சுத்துனா ஜாலி
வீட்ட சுத்தி போட்டா வேலி
ஆனா, மவனே லாரி ஒன்மேல ஏறினா நீ காலி
தலைல வெச்சா கரகம்
நான் என்னிக்குமே கெரகம்
மலைன்னா சிகரம்
நான் வந்தா ஊரே நகரும்
துருப்பிடிச்சா தகரம்
இதே ரேஞ்சுல போனா எனக்கு நரகம்
என் பையன் பேரு சிம்பு
அவன்கிட்ட வேணாம் வம்பு
அவன் நல்லவன்டா நம்பு
நீ நம்பினா எனக்கு தெம்பு
எதுவுமே சாப்பிடலேன்னா நோம்பு
ரொம்ப பிகு பண்ணினா வீம்பு
பொந்துல இருந்து சீறினா பாம்பு
அடுப்புல வெடிச்சது கடுகு
தண்ணியில போனது படகு
மலைன்னாலே அது குடகு

நீ என்ன பாத்தா கண்ணு
நான் அப்போ துன்னது பன்னு
குத்தினா பின்னு
பிஸ்கட் வெச்சா டின்னு
நீ ஓரமா போய் நின்னு
நான் சொன்னத திங்க் பண்ணு
தாண்டினா ஜம்பு
தண்ணி வந்தா பம்பு
எனக்கு எல்லாரும் வச்சது ஆப்பு
கண்ணுல வந்தா கண்ணீரு
மண்ணுல வந்தா தண்ணீரு
வாசனையா இருந்தா பன்னீரு

ஏய் டண்டனக்கா, ஏய் டணக்குடக்கா

Sunday, March 1, 2009

வருத்தப்படாத டகால்டிகள் சங்கம்

தமிழே - தமிழின்
குமிழே - குமிழின்
சிமிழே

புவியின் பூகோளமே
அழிவின் ஆரவாரமே
அராஜகத்தின் அச்சாரமே

முரண்பாட்டின் மூட்டையே
நீ நாட்டை போட்டது ஆட்டையே

நீ உண்ணாமல் இருந்தால்
சட்டியில் சாப்பாடு குறையாது


நீ உண்டு கொழுத்தால்
எங்களுக்கு போட்டு மாளாது

நீ திறந்து விட்டது டாஸ்மாக்
பசங்க வாங்காம விட்டது பாஸ்மார்க்

கள்வர்கள் கவிதை எழுதுவார்கள்
டகால்டிகள் டாஸ்மாக் அடிப்பார்கள்

தேன்தமிழ் நாட்டின் தீந்தமிழே - நீ
தமிழ்நாட்டுக்கு ஊதுவது சங்கே

அகில உலக டகால்டியே - நீ
அடிப்பது அந்தர் பல்டியே

தொல்காப்பிய பூங்காவில் கல்லா கட்டியவரே
மக்கள் அனைவருக்கும் குல்லா போட்டவரே

மஞ்சள் துண்டணிந்த மாபெரும் விரசகவியே
உன் ஆட்டத்திற்கு தாங்காதப்பா இந்த புவியே


எங்கள் சங்கத்தின் முதல்முகமே
நீங்கள் அனைவருக்கும் அறிமுகமே

முதுமையின் இளமையே
இன்று புதன்கிழமையே

முத்தமிழ் வித்தகரே - எங்கள்
தமிழ்நாட்டை வித்தவரே

பொறாமையின் பிறப்பிடமே
வஞ்சகத்தின் இருப்பிடமே

தலைவா கொஞ்சம் அடக்கி வாசி
பேசுவதற்கு முன் சிறிது யோசி

ராஜ்ஜியத்தின் மெத்தகையே
பூஜ்ஜியத்தின் குத்தகையே

நீ டகால்டிகெல்லாம் டகால்டி - உன்னை
வணங்கி வரவேற்போம் துதிபாடி