Monday, November 23, 2009

மெல்லினம்....வல்லினம்...”புல்”லினம்...


"சூரியன்" மேற்கில் நகர்ந்து பூமித்தாயின் மடியில் ஓய்வெடுத்து படுக்க நகர திட்டமிடும் அந்தி சாய்ந்த மதி மயங்கும் மாலை நேரம்...
மேற்கு மூலையில் ரத்த சிவப்பில் வண்ணக் கோலம். பிடிவாதமாய் தீட்டப்பட்ட சில மஞ்சள் தீற்றுகள். நாள் முழுதும் விளையாடிய களைப்பின்றி சூரிய பந்து...இறைவன், இயற்கையோடு இணைந்து வரைந்த, சிறிதும்
உடைபடாத சிவப்பு அப்பளம்...
சுடரில் மட்டும் கொஞ்சம் சுணக்கம்.
சுட்டெரிக்காமல் மெல்லிய வெப்பம்.
நாளை வருவேன் என சொல்லி ஒளிந்து கொள்ள திட்டமிட, இரு மனித தலைகள் நம் கண்ணில் நிழலாட்டம்....

நட்பு, கற்பு இரண்டும் ஒன்றென அதுவும் தம்மென கொள்கை கொண்ட இரு நண்பர்கள்... மாலை வேளையில் பூங்காவினுள் காலாற நடந்து செல்வது அவர்களின் வாடிக்கை... கூடவே அங்கும், இங்குமாய் பார்த்து செல்வது வேடிக்கை... பகுத்தறிவு பசியும், பகிர்ந்து கொள்ளும் உத்வேகமும் அவர்கள் பேச்சில் உண்டு. வினா எழுப்பி அதற்கு விடை காண்பதும், வினயமாய் விடை தேடுவதும், அவர்களின் விருப்பமான விளையாட்டு. இன்றும் அதேபோல்...

பூங்காவில் புல், பச்சை பசேலென வளர்ந்து, நடக்கும் கால்களுக்கு கீழ் மெத்தை விரித்து இருந்தது. உடல் சோர்வு பாதங்களில் குறுகுறுப்பாய் குடியிருக்க, குளிர்ந்த மெத்து மெத்தென்றிருந்த புல் பாதங்களை லேசாய் முத்தமிட்டு வருடி விட, நேர்த்தியாய் நடந்த கால்களின் வலி நீங்கி... கால்களை பதித்ததும், உள்ளிழுத்தது...

சிறு வண்டுகளின் ரீங்காரம்...ஓங்காரமாய், ஏன் ”ஓம்”காரமாய் செவியை நிறைக்க, மனம் அந்த தாள லயத்தில் கிறுகிறுப்பாய் கிறங்கியது. நகரும் வாகனங்களின் சத்தம், அவை வெளியிடும் நச்சுப்புகை, நகர நெரிசல் என உணர்வுகளை பதம் பார்க்காத அமைதி அன்பாய் ஒழுகியது.

புதிதாய் பூத்த மெல்லிய பட்டு போன்ற பூக்களின் வாசம் காற்றில் புயலாய் புகுந்திருக்க, புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது. சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின...

பூக்களின் வழிவந்த காற்றில் கலந்திருந்த சுகந்தம் வெளியிடும் விரும்பத்தகுந்த நறுமணம் எங்கும் பரவி அந்த பகுதியையே நிறைத்து இருந்தது.... நன்கு இழுத்து மூச்சு விடுகையில் நுரையீரலை சென்று அடையும், சுத்தமான காற்று... உடலை இறுக்கம் தளர்த்தி, இலகு தன்மை கூட்டி, உள்ளத்தில் உற்சாகம் ஊட்டியது.

தெற்கிலிருந்து வீசும் லேசான தென்றல் காற்று... சிலுசிலுவென அவர்களின் தேகத்தில் படர்ந்தது.

இருவரில் ஒருவர் கேட்கிறார்... வலி என்பது என்ன??

திகைத்து நின்ற மற்றவர், மிக உன்னதமான விசயத்தை எப்படி இவ்வளவு சாதாரணமாக கேட்கிறாய் என்றார். நிமிடங்கள் சில, மவுனத்தில் கரைந்தது. ஆழமான சிந்தனை என முகம் பறை அறைந்தது.

வலி இயலாமை. இனி மேல் முடியாது என உணர்வின் உச்ச கட்ட வெளிப்பாடு. தன்மையை இழந்து விடுவோமோ எனும் அச்சம். கூக்குரலிட்டு அதை அகற்ற வேண்டும் எனும் முயற்சியே வலி.

ஒவ்வொரு வார்த்தையும் இருமுறை படிக்க வேண்டி உள்ளதே. சுருங்க சொல்லி விளங்க வைக்க முயற்சிப்போமே. செய்வோம் நன்று...அதுவும் இன்று.. சொன்னதின் உண்மை புரிந்து லேசான புன்முறுவலில் ஆமோதிக்க, சம்பாஷனை தொடர்ந்தது.

வலி ஏற்றுக் கொள்ளும் தளத்தில் என பல வகைப்படும். உடல் வலி, மன வலி, உணர்வு வலி, இது தனி மனித வலிகள். சமூக வலி, மொழி வலி (அவிய்ங்க...இவிய்ங்க, லகர, ளகர சிதைத்த தொலைக்காட்சி தமிழும் - தமிழ் தாய்க்கும் வலி உண்டல்லவா... மன்னிப்பாளாக...) என புறமும் உண்டு.

உரத்த சிரிப்பில் நண்பர் தொடர்ந்தார். வலி நீக்கும் உபாயம் உண்டோ, கூறலாமே..?!!

நன்கு வலித்த நம் கால்களை, பச்சை பசும்புல் எவ்வளவு இதமாய் நீவி விட்டது.... அதுதான்...எப்படி வலி சாஸ்வதமோ, அதுபோல் வலி நீக்கியும் சாஸ்வதமே.

இருவரும் சிரிப்பில் இணைந்தனர். இதயம் இளகியது. காற்றில் அசைந்தாடிய புல் அவர்களோடு சிரிப்பில் இணைந்தது. பூக்கள் கூட்டமாய் இணைந்து கை தட்டியது...

தலையை லேசாக உயர்த்தி, மேலே அண்ணாந்து வானை நோக்கும்போல், ”சுட்டெரித்தவன்” மறைய தொடங்கி ”குளிர்விப்பவன்” வானில் லேசாய் எட்டிப் பார்க்க, அங்கே மெதுமெதுவாய் குளிர் படர தொடங்கியது.

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

Friday, November 20, 2009

வாழ்க்கை புத்தகம்.... போதிப்பதென்ன??


நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத எவ்வளவோ விஷயங்களை நமக்கு நல்ல பல புத்தகங்கள் போதித்தது, போதித்துக்கொண்டு இருக்கிறது... வாழ்வில் நல்ல புத்தங்களுடன் அறிமுகமானோர், அதை ஆழ்ந்து படித்து, சரியாக உள்வாங்குதல் மூலம், வாழ்க்கையை பற்றிய ஒரு தெளிவு பெறுவது உறுதி... அவ்வாறு வாழ்வை பற்றி தெளிவு பெற்றோர், பல வெற்றிகளை தனதே ஆக்கிக்கொண்டதையும் நாம் முன்னாளில் பார்த்தோம், இந்நாளில் பார்த்து கொண்டிருக்கிறோம்.

இங்கே நாம் பார்க்கப்போகும் இந்த புத்தகம் நமக்கு நம் வாழ்க்கையையே போதிக்கிறது... வாருங்கள் நண்பர்களே, வாழ்க்கையை சிறிது வாசிப்போம்... சுவாசிப்போம்...

Health:

1. Drink plenty of water
2. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar
3. Eat more foods that grow on trees and plants, and eat less food that is manufactured in plants
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy
5. Make time for prayer
6. Play more games
7. Read more books than you did in 2008
8. Sit in silence for at least 10 minutes each day
9. Sleep for 7 hours
10. Take a 10-30 minutes walk every day ---- and while you walk, smile

Personality:

11. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
12. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
13. Don't over do ; keep your limits
14. Don't take yourself so seriously ; no one else does
15. Don't waste your precious energy on gossip
16. Dream more while you are awake
17. Envy is a waste of time. You already have all you need.
18. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness..
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Make peace with your past so it won't spoil the present
21. No one is in charge of your happiness except you
22. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
23. Smile and laugh more
24. You don't have to win every argument. Agree to disagree.

Community:

25. Call your family often
26. Each day give something good to others
27. Forgive everyone for everything
28. Spend time with people over the age of 70 & under the age of 6
29. Try to make at least three people smile each day
30. What other people think of you is none of your business
31. Your job won't take care of you when you are sick. Your family and friends will.. Stay in touch.

Life:

32. Do the right things
33. Get rid of anything that isn't useful, beautiful or joyful
34. GOD heals everything
35. However good or bad a situation is, it will change
36.. No matter how you feel, get up, dress up and show up
37. The best is yet to come
38. When you awake alive in the morning, thank GOD for it
39. Your Inner most is always happy. So, be happy.

ஈ-மெயிலில் இந்த அற்புத விஷயத்தை பகிர்ந்த தோழமைக்கு என் மனமார்ந்த நன்றி.....

Tuesday, November 17, 2009

SELF-CONFIDENCE (ABSOLUTELY UNBELIEVABLE)

வெகு நாட்களுக்கு முன் எனக்கு ஈ‍மெயிலில் வந்த இந்த விஷயத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..


தன்னம்பிக்கை என்றால் என்ன என்று இந்த பதிவை படித்து, பார்த்தால் தெரியும்...

பதிவை படியுங்கள்... முடிக்கு முன்னர் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு சிறிதளவேனும் உயர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை...

இந்த அளவு தன்னம்பிக்கை வாழ்வில் இருந்தால், நாம் எதையும் சாதிக்கலாம் என்பது உண்மை....

************
See a sort of inexplicable enthusiasm, firm confidence and indomitable tenacity in his face?!! Marvelous?!! !!!!!!!!

For people who make themselves in distress because of futile, frivolous and trivial reasons? Lets s ee him and l earn myriad lessons from him?!!

Miracle man walks again
Monday, July 9, 2007.

He survived against all the odds; now Peng Shulin has astounded doctors by learning to walk again.

When his body was cut in two by a lorry in 1995, it was little short of a medical miracle that he lived.

It took a team of more than 20 doctors to save his life.

Skin was grafted from his head to seal his torso? but the legless Mr Peng was left only 78cm (2ft 6in) tall.

Bedridden for years, doctors in China had little hope that he would ever be able to live anything like a normal life again.

But recently, he began exercising his arms, building up the strength to carry out everyday chores such as washing his face and brushing his teeth.

Doctors at the China Rehabilitation Research Centre in Beijing found out about Mr Peng's plight late last year and devised a plan to get him up walking again.
They came up with an ingenious way to allow him to walk on his own, creating a sophisticated egg cup-like casing to hold his body with two bionic legs attached to it.

He has been taking his first steps around the centre with the aid of his specially adapted legs and a resized walking frame.

Mr Peng, who has to learn how to walk again, is said to be delighted with the device.

Wowwwwww..... What a Self-confidence …!!!! Great

(இந்த ஈ-‍மெயிலை எனக்கு அனுப்பிய நண்பர் விஜய் அவர்களுக்கு என் நன்றி......)

Friday, November 13, 2009

ஈ‍-மெயில் டெர்ர‌ர் (ப‌டிச்சாலே ஒத‌றுதுல்ல‌...)


This has got to be one of the most clever E -mails I've received in the recent times.
Someone out there either has too much spare time or is deadly at Scrabble. (Wait till you see the last one)!

DILIP VENGSARKAR

When you rearrange the letters:

SPARKLING DRIVE

********

PRINCESS DIANA

When you rearrange the letters:

END IS A CAR SPIN

*******

MONICA LEWINSKY

When you rearrange the letters:

NICE SILKY WOMAN

********

DORMITORY

When you rearrange the letters:

DIRTY ROOM

*******

ASTRONOMER

When you rearrange the letters:

MOON STARER

*******

DESPERATION

When you rearrange the letters:

A ROPE ENDS IT

********

THE EYES

When you rearrange the letters:

THEY SEE

*********

A DECIMAL POINT

When you rearrange the letters:

IM A DOT IN PLACE

...

...

...

...

...

...
AND FOR THE GRAND FINALE:
MOTHER-IN-LAW:
When you rearrange the letters:

..

..

..

..

..


WOMAN HITLER
(என் குறிப்பு : என‌க்கு வந்த‌ ஈ‍-மெயில் அப்ப‌டியே ப‌திவேற்றம் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து... இதில், அடிஷனலாக‌ எந்த‌ உள்குத்தும் சேர்க்க‌‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை "ஜோக்கிரி" நிர்வாக‌ம் தெரிவித்து கொள்கிற‌து)

Friday, November 6, 2009

ஜெய் ஹோ - புத்தகத்திற்கான என் விமர்சனம்



எல்லா புகழும் இறைவனுக்கே...

சொக்கன் அவர்கள் எழுதிய " ஜெய் ஹோ" என்ற புத்தகம் தோழர் ஹரன் பிரசன்னா மூலம் இலவசமாக கூரியரில் கிடைக்க பெற்றேன்.
கண்டிப்பாக Blogger- ஆக இருக்க வேண்டும்; புத்தகத்தின் விமர்சனம் தமது blog-ல் எழுத வேண்டும், அதுவும் புத்தகம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் போன்ற கண்டிஷன்களுடன் 20 புத்தகங்கள் பெயர்கள் தந்திருந்தனர். அதில் நான் "ஜெய் ஹோ" என்ற புத்த‌க‌த்தை தேர்ந்தெடுத்து, சென்னை அட்ரஸில் பெற்றுக்கொண்டு, நண்பர் மூலம் துபாய்க்கு வரவழைத்து படித்தேன்..

சொக்கன் அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு புதிய உத்தியை கையாண்டுள்ளார்... அதாவது, அத்தியாயங்களின் தொடக்கம் எல்லாம் மெட்டு போடு, சின்ன சின்ன ஆசை, என ரஹ்மான் பட பாடல்களின் ஆரம்ப வரிகளையே தலைப்பாக வைத்துள்ளார் !!

புத்தகம் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய விழாவிலிருந்து தொடங்கி, அங்கிருந்து ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தந்தை திரு.சேகர் அவர்களை பற்றி மிக விரிவான தகவல்கள் தரப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாத்தா ஒரு பாகவதர்.!! தந்தையும் ஒரு சிறந்த இசை அமைப்பாளரே. நிறைய மலையாள படங்களுக்கு இசையமைத்தவர்.. ஆகவே ஏ.ஆர்.ரஹ்மானும் இசை மீது ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். இசை குடும்பம் என்று சொல்லலாம்... ஏனெனில், அவருக்கு பின், அவரின் சகோதரி ஏ.ஆர்.ரஹைனா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்றோரும் இசையமைப்பாளர்களாகி விட்டார்களே...

மிக மிக சிறு வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இரு ஆஸ்கார் வாங்கினார் என பார்ப்போம்...

4 வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் நன்றாக ஹார்மோனியம் வாசித்து இருக்கிறார்.

9 வயதில் சினிமாவில் ஒரு பாடலுக்கு மெட்டு போட்டிருக்கிறார் !!

11 வயதில் அவரின் தந்தை இறந்து விட, அந்த வயதில் இருந்தே, வீட்டை காப்பாற்றும் பொறுப்பு வந்து விடுகிறது.. தனியாளாக‌ இருந்து தாய் மற்றும் 3 சகோதரிகளை காப்பாற்றி இருக்கிறார் !!
25 வயது ஆகும்போதே ரோஜா படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

பின்னாளில், மிக மிக கடுமையாக உழைத்து இப்போது இந்த ஆஸ்கர் விருது வாங்கும் வரை வந்திருக்கிறார். ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசை அமைத்த பின், பெரிய அளவில் புகழ் பெற்றாலும், தென்னிந்திய மற்றும் வட இந்திய படங்களிலேயே சுற்றி கொண்டிருக்காமல், மேலும் தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவடைய எடுத்துக்கொண்ட முயற்சிகளே அவரை ஆஸ்கர் அளவுக்கு உயர்த்தியது என்றால் அது மிகையல்ல...

அடுத்தவர்கள் இசையில் என்ன செய்கிறார்கள் என்று கூர்ந்து பார்ப்பதை விடுத்து, தன் இசையில், தான் என்னென்ன புதுமைகளை செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தியதே அவரின் இசைக்கு தனித்துவம் தந்தது என்ப‌து உண்மை...

முன்னாளில் இசைக்குழு போன்ற விஷயங்களில் பணத்தேவைக்காக பணிபுரிந்தாலும், பின்னாளில் ஜிங்கிள்ஸ் என்றழைக்கப்படும் விளம்பரப்படங்களுக்கு இசையமைக்கும் காலகட்டத்திலேயே தன் தனித்துவத்தை இசையில் படைத்தார் என்பதை சொக்கனின் விவரிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது...

இசைஞானி இளையராஜா அவர்களிடம் கீ போர்ட் வாசிக்கும் காலகட்டத்தில், கார் ஓட்டவும் கற்றுக்கொண்டதை குறிப்பிட்டுள்ள சொக்கன், அதற்கான காரணத்தை சொல்லியபோது, படிக்கும் நமக்கு "பகீர்".......
தமிழின் முண்ணனியில் இருந்த பல டைரக்டர்கள் ஒரே நேரத்தில் இளையராஜாவின் இசையில் இருந்து மாறி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை இசையமைக்க செய்தனர்... உதாரணமாக, மணிரத்னம், கே.பாலசந்தர், பாரதிராஜா ... இதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் முண்ணனி இசையமைப்பாளராக உயர வழிவகுத்தது...

"என் முன் இருந்த இரு பாதைகளில் ஒரு பாதை அன்பு, மற்றொன்று வெறுப்பு. அதில் நான் அன்பை தேர்வு செய்தேன். அதனாலேயே இப்போது உங்கள் முன் நிற்கிறேன்". இது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ஆஸ்கர் மேடையில் சொன்னது...

தமிழில் நிறைய இசையமைத்திருந்தாலும், இங்கே அந்த கிரெடிட் நடிக்கும் நடிகர்களுக்கே போய் சேர்ந்து விடுகிறது... அதற்கு சரியான உதாரணம், தமிழில் நெடு நாட்களுக்கு பிறகு அவரின் மிகப்பெரிய ஹிட் ஆல்பமான "சிவாஜி"...

தற்போது தமிழின் / இந்தியாவின் மிகப்பெரிய படைப்பான "எந்திரன்" படத்திற்கு இசையமைத்து வருகிறார்... இந்த இசையும் உலகளவில் பெயர் பெறும் என்று என் உள்மனது சொல்கிறது... கூடவே அவர் இசையமைக்கும் மற்றொரு படைப்பான "சுல்தான் தி வாரியர்"... இதுவும், இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம் என்ற முறையில் சிறப்பு பெறுகிறது... இந்த படங்களில் ஏ.ஆர்.ர‌ஹ்மானின் இசை ப‌ட்டையை கிள‌ப்ப‌போகிற‌து...

ஏ.ஆர்.ரஹ்மான் மேலும் பல சிறப்பான் இசைப்படைப்புகளை தரவேண்டும் என்பதே இசை விரும்பிகளின் அவா... குறிப்பாக தமிழில்...அதை அவர் செவ்வனே நிறைவேற்றுவார் என்று நம்புவோம்...

முதன் முதலாய் என்னை ஒரு வித்தியாசமான கட்டுரை எழுத வைத்த கிழக்கு பதிப்பகத்திற்கும், சொக்கன் மற்றும் ஹரன் பிரசன்னாவிற்கும் என் நன்றிகள்.

ஜெய் ஹோ....