Monday, January 17, 2011

கருப்பு எம்.ஜி.ஆர், வெள்ளை விஜயகாந்த்



தமிழ்நாட்டில் சட்ட மன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது... அதற்கு முன்னோடியாக தமிழகமெங்கும் அரசியல் கட்சிகளின் அட்டகாசங்கள் ஆரம்பமாகி விட்டன..

மறைந்தாலும், இப்போதும் ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கும் மந்திர பெயரான எம்.ஜி.ஆர். பெயரை எல்லா கட்சி தலைவர்களும் உச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்... வேறு எதற்கு, அவர் பெயரை சொன்னால், தங்கள் கட்சிக்கும் அவரின் வாக்கு வங்கியிலிருந்து கொஞ்சம் வாக்கு கிடைக்காத என்ற நப்பாசை தான்....

எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவர் சிலைக்கு யார் முதலில் மாலை போடுவது என்று சண்டை வந்து, கடைசியில் 133 கட்சி தலைவர்களின் பேரையும் எழுதி சீட்டு குலுக்கி போட்டு, நம்பர் வரிசையில் மாலையிட அனுமதி
வழங்கப்பட்டதாக செய்தி வருகிறது....

தலைவர்கள் தங்கள் பெயருடன் ஏதாவது ஒரு நிறம் வருமாறு பார்த்துக்கொள்கிறார்கள்... “தல” எப்போவும் போல் ”மஞ்சள்”, வை.கோ. அவர் ஸ்டைலில் இருந்து மாறாமல் அதே “கருப்பு”, ஜெயலலிதா எப்போதும் போல் “பச்சை”... இந்த வரிசையில் புது தலைவர் விஜயகாந்த் இப்போது பச்சை, மஞ்சள், நீலம் என்று சொல்லி கடைசியாக “கருப்பு” என்ற கலரில் ஆணியடித்து (லேசாக தள்ளாடியபடியே) நிற்கிறார்...

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் பாணியிலேயே கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்த விஜயகாந்த், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையணிவித்து விட்டு, செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த திடுக்கிடும் செய்தியை கூறினார் :

எல்லாரும் என்னிய கருப்பு எம்.ஜி.ஆர்.னு ஆசையா கூப்பிடறாங்க... அவங்க எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறேன்... என்ன கருப்பு எம்.ஜி.ஆர்.னு கூப்பிடுங்க... ஆனா, அதே நேரத்துல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை இனிமேல் “வெள்ளை விஜயகாந்த்”னு சொல்லுங்க... அது தான் எனக்கும் சந்தோசமா இருக்கும்... என்ன சந்தோசப்படுத்தணும்னு நீங்க நெனச்சா, இனிமே என்னிய இப்படி தான் கூப்பிடணும் என்று அன்பாக எச்சரிக்கை விடுத்தார்...

மக்களுக்கு விஜயகாந்த் இந்த எச்சரிக்கை விடுத்த போது ஏற்கனவே எப்போதும் கலங்கி காணப்படும் அவரின் சிவந்த விழிகள், மேலும் சிவப்பாகி, பார்ப்போரை திகிலடைய வைத்தது... அந்த விழாவில் விஜயகாந்த் பேசிய போது தன்னை எம்.ஜி.ஆர். தோற்றத்தில் வடிவமைத்து காட்டி இருந்த ஒரு புகைப்படம், இதோ, உங்கள் பார்வைக்கு (பார்த்து பயப்பட வேண்டாம் என்று எப்போதும் போல் ஜோக்கிரி நிர்வாகம் உங்களை கேட்டுக்கொள்கிறது) :



இது சாம்பிள் தான் தோழமைகளே... இன்னும் வரிசையாக வரவிருக்கும் / நடக்கவிருக்கும் அனைத்து காமெடிகளும் இங்கே அரங்கேற வாய்ப்புண்டு...

(பின்குறிப்பு : இந்த பதிவை படிச்சு ரெம்ப ஃபீல் பண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்....)

Monday, January 10, 2011

வெட்டி வேரு வாசம்.. வெடலை புள்ள நேசம்

கவிதை ….. கவிதை! காற்று வாங்க போன போது??? … (அப்படியெல்லாம் காற்று வாங்க கவிதை போகுமா என்ன…. வார்த்தை கிடைக்காம கவிஞர்தான் காத்து வாங்குவாருகவிதையின் ஒரு பகுதியில் வார்த்தை அடைத்துக்கொள்ளாமல் காகிதம் கூட வெற்று இடங்களாய் காற்று வாங்கும்)

காற்று வாங்க சென்ற நம் கவிதை, நம்ம சென்னை மாநகர ”டெர்ரர் கரண்ட் கபாலி” கையில் சிக்கிக் கொண்டது. போனால் என்ன, சிக்கிக் கொண்டால் என்ன, எங்கு சென்றாலும் மனதை நெகிழ்த்தி மகிழ்ச்சி தருவது தானே நம் கவிதையின் வேலை, கலக்குவதே என் பணி என்று சொல்லி கவிதை தன் வேலையை தொடங்கி விட்டது.

லவ்வுல நான் ஜிவ்வாயிட்டேன்

லவ்வ ஜிவ்வாக்கி கவுஜ எழுதி

எடுத்துகினு வாய்யா

அப்பாலிக்கா பார்க்கலாம்…. நம்ம லவ்வு

எஸ்ஸா…. நோ - வான்னு

நோவாம என் கையில

சொல்லிருச்சு நம்ம டாவு


மெரிசலாயிட்டேன் நானு

மெர்ஸியே இல்லாத நீனு

ஒன் பேருல மட்டும் கீது மெர்ஸி

அங்க மேயுற பசு பேர் ஜெர்ஸி

இந்தாம்மேஎன் இண்டிமேட்டு

நான் ப்போ ஒன் கிட்ட அப்பீட்டு


லவ்வுல இப்போ லீக்காயிட்டேன்

ஜிவ்வுன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன்

என் லைஃப்ல ஃபர்ஸ்ட்டு

நீதாம்மே லாஸ்ட்டு

நீ இருந்தாதேன் பெஸ்ட்டு

இதான் என் இண்ட்ரெஸ்ட்டு

நீ இல்லாங்காட்டி

லைப்ஃபே வேஸ்ட்டு

குட்சேன் சூப்பரா ஒரு பூஸ்டு....


நீ சரவண பவன் ஃபுல் மீல்ஸ் கணக்கா

வயிறையும் மனசையும் ரொப்புவ

அந்த பில்லு கையில வர்றப்போ

அத்த இந்த மாமன் பையில சொருகுவ


பப்பரப்பேன்னு சொல்லி சொல்லி

இருட்டுல பயமும் காட்டுவ

கொக்கரக்கோன்னு கூவுற சேவலை

கோணி எடுத்து தொரத்துவ.


உங்க நைனா

அவரு

நமக்கு சைனா

ரிலிஜன் சொல்லி நம்மள

பேஜாராக்குறாரு ஃபைனா...


ரீஜெண்டா சொல்றேன்

கடவுளு படைச்சது


ரெண்டே ரெண்டு குரூப்பு தேன்...

ஒண்ணு மேல்

இன்னொன்னு ஃபீமேல்

அதுக்கு மேல

எதுவுமே லேது!


எனக்கோசரம் நீ

உனக்கோசரம் நான்

எனக்கு நீ அல்வா

உனக்கும் நான் அல்லவா

மொள்ளமா வாம்மா கண்ணு

வந்தா நாயர் கடையில துன்னலாம் பன்னு


புள்ள குட்டி பெத்துகிட்டா

ஒறவு எல்லாம் ஒண்ணாயிரும்

ஒண்ணு ரெண்டு வருசத்துல

எல்லாமே நல்லாயிரும்

கரீட்டா அன்னிக்கே சொன்னானே

கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம்....


….. மாமு!

இது கூட கவிஜை மாதிரி தேன் கீது

இதுக்கு மேல சொல்ல எதுவுமே லேது

இத்த குடுத்து நம்மாள கவுத்திர்றேன்

படிச்சுட்டு மொறச்சா, எஸ்கேப் ஆயிடறேன்...


ஆல் த பெஸ்ட் சொல்லு நைனா

என் லவ்வு சக்சஸ் ஆகட்டும் ஃபைனா


(லாரன்ஸ் / ஆர்.கோபி)