Monday, January 17, 2011

கருப்பு எம்.ஜி.ஆர், வெள்ளை விஜயகாந்த்



தமிழ்நாட்டில் சட்ட மன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது... அதற்கு முன்னோடியாக தமிழகமெங்கும் அரசியல் கட்சிகளின் அட்டகாசங்கள் ஆரம்பமாகி விட்டன..

மறைந்தாலும், இப்போதும் ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்கு வங்கியை வைத்திருக்கும் மந்திர பெயரான எம்.ஜி.ஆர். பெயரை எல்லா கட்சி தலைவர்களும் உச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்... வேறு எதற்கு, அவர் பெயரை சொன்னால், தங்கள் கட்சிக்கும் அவரின் வாக்கு வங்கியிலிருந்து கொஞ்சம் வாக்கு கிடைக்காத என்ற நப்பாசை தான்....

எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாள் விழாவில் அவர் சிலைக்கு யார் முதலில் மாலை போடுவது என்று சண்டை வந்து, கடைசியில் 133 கட்சி தலைவர்களின் பேரையும் எழுதி சீட்டு குலுக்கி போட்டு, நம்பர் வரிசையில் மாலையிட அனுமதி
வழங்கப்பட்டதாக செய்தி வருகிறது....

தலைவர்கள் தங்கள் பெயருடன் ஏதாவது ஒரு நிறம் வருமாறு பார்த்துக்கொள்கிறார்கள்... “தல” எப்போவும் போல் ”மஞ்சள்”, வை.கோ. அவர் ஸ்டைலில் இருந்து மாறாமல் அதே “கருப்பு”, ஜெயலலிதா எப்போதும் போல் “பச்சை”... இந்த வரிசையில் புது தலைவர் விஜயகாந்த் இப்போது பச்சை, மஞ்சள், நீலம் என்று சொல்லி கடைசியாக “கருப்பு” என்ற கலரில் ஆணியடித்து (லேசாக தள்ளாடியபடியே) நிற்கிறார்...

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் பாணியிலேயே கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்த விஜயகாந்த், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலையணிவித்து விட்டு, செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த திடுக்கிடும் செய்தியை கூறினார் :

எல்லாரும் என்னிய கருப்பு எம்.ஜி.ஆர்.னு ஆசையா கூப்பிடறாங்க... அவங்க எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்க ஆசைப்படறேன்... என்ன கருப்பு எம்.ஜி.ஆர்.னு கூப்பிடுங்க... ஆனா, அதே நேரத்துல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை இனிமேல் “வெள்ளை விஜயகாந்த்”னு சொல்லுங்க... அது தான் எனக்கும் சந்தோசமா இருக்கும்... என்ன சந்தோசப்படுத்தணும்னு நீங்க நெனச்சா, இனிமே என்னிய இப்படி தான் கூப்பிடணும் என்று அன்பாக எச்சரிக்கை விடுத்தார்...

மக்களுக்கு விஜயகாந்த் இந்த எச்சரிக்கை விடுத்த போது ஏற்கனவே எப்போதும் கலங்கி காணப்படும் அவரின் சிவந்த விழிகள், மேலும் சிவப்பாகி, பார்ப்போரை திகிலடைய வைத்தது... அந்த விழாவில் விஜயகாந்த் பேசிய போது தன்னை எம்.ஜி.ஆர். தோற்றத்தில் வடிவமைத்து காட்டி இருந்த ஒரு புகைப்படம், இதோ, உங்கள் பார்வைக்கு (பார்த்து பயப்பட வேண்டாம் என்று எப்போதும் போல் ஜோக்கிரி நிர்வாகம் உங்களை கேட்டுக்கொள்கிறது) :



இது சாம்பிள் தான் தோழமைகளே... இன்னும் வரிசையாக வரவிருக்கும் / நடக்கவிருக்கும் அனைத்து காமெடிகளும் இங்கே அரங்கேற வாய்ப்புண்டு...

(பின்குறிப்பு : இந்த பதிவை படிச்சு ரெம்ப ஃபீல் பண்ண வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்....)

22 comments:

Mrs. Krishnan said...

//“கருப்பு” என்ற கலரில்
ஆணியடித்து (லேசாக
தள்ளாடியபடியே) நிற்கிறார்...//
-
ஹா ஹா டெரர்
-
(பார்த்து பயப்பட
வேண்டாம் என்று எப்போதும் போல்
ஜோக்கிரி நிர்வாகம்
உங்களை கேட்டுக்கொள்கிறது)
-
அதெல்லாம் ஒத்துக்க முடியாது. ஆயுள் காப்பீடு எடுத்துக்கொடுத்தாத்தான் அந்த படத்தையே பார்ப்போம். எங்க குடும்ப நிலைமை என்னாவறது?

S Maharajan said...

எங்கள் கருப்பு எம் ஜி யாரை கடுமையாக சாடிய
கோபி க்கு
"விருத்தகிரி" படத்தை தொடர்ந்து பார்க்கும் படி
உத்தரவு இடுகிறோம்
இவன்: வெள்ளை விஜயகாந்த பாசறை.......
துபாய்

R.Gopi said...

முதலில் வருகை தந்து, கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி திருமதி கிருஷ்ணன்...

ஆயுள் காப்பீடு கூட காப்பாத்த முடியாது போல இருக்கே!!

R.Gopi said...

//S Maharajan said...
எங்கள் கருப்பு எம் ஜி யாரை கடுமையாக சாடிய
கோபி க்கு
"விருத்தகிரி" படத்தை தொடர்ந்து பார்க்கும் படி
உத்தரவு இடுகிறோம்
இவன்: வெள்ளை விஜயகாந்த பாசறை.......
துபாய்//

*******

வாங்க மகராஜன்...

“விருதகிரி” படத்தை தொடர்ந்து பார்க்கவா? வேணும்னா, “நசுங்கின சொம்பு”, “விருதகிரி” ரெண்டு படத்தோட போஸ்டர் பார்க்கிறேன்...

என்னால அதிகபட்சமா பண்ண முடிஞ்சது இது தான்... டீல் ஓகேவா?

வெங்கட் நாகராஜ் said...

வெள்ளை விஜயகாந்த் - ஆஹா என்னா பேர் வைக்கறீங்க! சூப்பர் :)

நட்புடன்

வெங்கட்.
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html

R.Gopi said...

//வெங்கட் நாகராஜ் said...
வெள்ளை விஜயகாந்த் - ஆஹா என்னா பேர் வைக்கறீங்க! சூப்பர் :)

நட்புடன்

வெங்கட்.
http://venkatnagaraj.blogspot.com/2011/01/blog-post_17.html//

*********

வாங்க வெங்கட்....

பேருக்கென்ன, இந்த மாதிரி நிறைய பேர் வச்ச அனுபவம் இருக்கே... அதான்... தொடர்ந்து வருகை தந்து, கருத்து பகிர்வதற்கு மிக்க நன்றி...

Jaleela Kamal said...

அட கருப்பு எம் ஜி ஆரா , பார்த்து விட்டு பயந்தே போய் விட்டேன்

கடுமைய கண்டிக்கிறேன், எம், ஜி ஆர் அவரை போல் யாருமே வர முடியாது.
http://samaiyalattakaasam.blogspot.com

R.Gopi said...

//Jaleela Kamal said...
அட கருப்பு எம் ஜி ஆரா , பார்த்து விட்டு பயந்தே போய் விட்டேன்

கடுமைய கண்டிக்கிறேன், எம், ஜி ஆர் அவரை போல் யாருமே வர முடியாது//

*****

வாங்க ஜலீலா மேடம்...

இதெல்லாம் சும்மா தமாஷ்...

பெசொவி said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!//

********

வாங்க தல...

கருப்பு வெள்ளை ஆகறதும், வெள்ளை கருப்பு ஆகறதும் அரசியல்ல சகஜம் தானே...

Raju said...

\\ஆணியடித்து (லேசாக தள்ளாடியபடியே)\\

:-))

R.Gopi said...

//♠ ராஜு ♠ said...
\\ஆணியடித்து (லேசாக தள்ளாடியபடியே)\\

:-))//

********

ஹா...ஹா...ஹா...

வாய்யா ராஜு... இவ்ளோ நாளா எங்க ஆளையே காணும்?

இவ்ளோ பெருசா எழுதி இருக்கற பதிவுல, அந்த சின்ன தள்ளாடற மேட்டர கப்புனு புடிச்ச பாரு... நீ சூப்பர்மேன்யா...

Menaga Sathia said...

ஆஹா விஜயகாந்துக்கு என்னமா பேர் வைக்கீறீங்க,சூப்பர்ர்ர்ர்

ஸாதிகா said...

//ஆனா, அதே நேரத்துல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களை இனிமேல் “வெள்ளை விஜயகாந்த்”னு சொல்லுங்க... அது தான் எனக்கும் சந்தோசமா இருக்கும்... என்ன சந்தோசப்படுத்தணும்னு நீங்க நெனச்சா, இனிமே என்னிய இப்படி தான் கூப்பிடணும் என்று அன்பாக எச்சரிக்கை விடுத்தார்...
// ஆத்தாடீஈஈஈஈ...கருப்பு எம் சி ஆருக்கு ஆசையப்பாரு?

ஸாதிகா said...

//இது சாம்பிள் தான் தோழமைகளே... இன்னும் வரிசையாக வரவிருக்கும் / நடக்கவிருக்கும் அனைத்து காமெடிகளும் இங்கே அரங்கேற வாய்ப்புண்டு...
// கோபி சார் ரொம்ப டெரர் காட்டுறீங்களே!!!!!

R.Gopi said...

பதிவிற்கு வருகை தந்து அட்டகாசமான கருத்து பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி...

எஸ்.மேனகா
ஸாதிகா

Kousalya Raj said...

ரொம்ப பீல் பண்ணியதால் கமெண்ட் போட இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் கோபி

R.Gopi said...

கௌசல்யா...

வருகைக்கு நன்றி...

ரொம்ப ஃபீல் பண்ணியதால் கமெண்ட் போடவில்லை என்ற கமெண்டுக்கு மிக்க நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

(பார்த்து பயப்பட வேண்டாம் என்று எப்போதும் போல் ஜோக்கிரி நிர்வாகம் உங்களை கேட்டுக்கொள்கிறது) :
பயப்படாமல் இருக்கமுடியவில்லை.
வண்ணம் காட்டி எண்ணம் ஈடேறுமா??

R.Gopi said...

// இராஜராஜேஸ்வரி said...
(பார்த்து பயப்பட வேண்டாம் என்று எப்போதும் போல் ஜோக்கிரி நிர்வாகம் உங்களை கேட்டுக்கொள்கிறது) :
பயப்படாமல் இருக்கமுடியவில்லை.
வண்ணம் காட்டி எண்ணம் ஈடேறுமா??//

******

தள்ளாடினாலும், இந்த முறை கேப்டன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கற மாதிரி இருக்கு...

பயப்படாம இருக்க முடியுமா?

Shri Hari said...

உங்க பதிவ படிச்சு, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. ரொம்பே நன்றி. அரசியல் வாதிகளை இப்படி கண்ணா பின்னானு கலக்குறது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும்... இவனுகே பண்ற கொடுமைக்கு இந்த மாதிரி தான் இவனுகளே கமெடி பண்ணும். அட்லீஸ்ட் இதுக்காகவாவது இவனுங்கே உதவுரனுன்களே... நன்றி :)

Sivaraj said...

Gopi ji, you should be made to watch Mariyadhai, Engal Aasaan and Viruthagiri for making fun of our GAPTON.