Tuesday, June 30, 2009

GREAT PHOTOGRAPHS…..












Thursday, June 25, 2009

அந்நியன் - பாகம் - 2 (விஜய், அஜித், சிம்பு)

மெகா காமெடி - பகுதி - 3

பங்கேற்பவர்கள் : டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் அஜித், விஜய், சிம்பு

ஷங்கர் : உங்க எல்லாருக்கும் என் வணக்கம். இந்த யூத் ஸ்டார்ஸ் எல்லாரையும், ஒரே மேடையில பாக்கறது ... அதுவும், தமிழ் சினிமா நடிகர்கள ஒண்ணா ஒரே இடத்துல பாக்கறது பெரிய ஆச்சரியம் இல்ல, அதனால ரெட்டிப்பு சந்தோஷம்.

அஜித் : நான் நெர்ய பேஸ் மாட்டேன், கூடாதுன்னு ரஜ்னி சொல்லி இருக்காரு..... அதனால, 3 வார்த்த பேசற எடத்துல 30 வார்த்தை மட்டும் பேஸ்வேன்.

சிம்பு : டேய், இவனே, யார்ரா அது.... ஒன் பேரு கூட மறந்து போச்சு..... சமீபத்துல கூட நெறைய வேஷம் எல்லாம் போட்டியே...... கரெக்ட்.....அஜித்..... பேரு எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஏண்டா, நீ திடீர்னு குண்டா இருக்க.... இல்லேன்னா, யாரோ சொன்னாங்கன்னு, நாய் நக்கின பொறை மாதிரி ஒல்லி ஆயிடற....

விஜய் : அண்ணோவ்.......

சிம்பு : இது என்னடா அசிங்கமா அண்ணோவ்-னு கூப்பிடற..... இல்லே, அண்ணே அண்ணேன்னு செந்தில் மாதிரி கெஞ்சற..... இப்போ ஒனக்கு என்னடா வேணும்??

விஜய் : ரொம்ப சீன் போடாதீங்கன்னோ....தசாவதாரம் மாதிரி 10 வேஷம் கட்ட போறேன்னு பிலிம் வுட்டது நீங்க தானா?? அடக்கி வாசிங்கன்னோவ் .... இல்லேன்னா, சீக்கிரம் ரிடயர்ட் ஆக வேண்டியது தான்......

சிம்பு : ஐயோ, ரொம்ப சுத்தி, இப்போ ரீல் அறுந்து போச்சே.... கொஞ்ச நாள் யாரையும் கண்டுக்காம இருப்போம்.... இந்த ஜில்பான்சிகளையும் சேர்த்துத்தான்.....

அஜித் : என்னோட, போன படத்துல (ஆழ்வார்) நான் கடவுள் அவதாரம் எல்லாம் எடுத்து ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சேன்..... எல்லாருக்கும் பிடிச்சது, ஆனா யாருக்குமே பிடிக்கல, அதனால ஓடல........நம்ம நாட்டுல வர வர கடவுள் பக்தி கொரஞ்சிடிச்சி.... ஆனா, அடுத்த படம், கொஞ்சம் பெரிசா பண்ணாலாம்னு இருக்கேன்.

சிம்பு : பெரிசான்னா, தசாவதாரம் மாதிரி, 20 அவதாரம் ஏதாவது பண்ண போறியா?? இப்போவே, அவனவன் மறை கழண்டு அலையுறான். உன் படம் பாத்து மறை கழண்டவங்களுக்காக தான் நான் லூசு பெண்ணே லூசு பெண்ணே பாட்டே ரெடி பண்ணினேன். இப்போ கூட அந்த பாட்ட பாடறவன் எல்லாம் என் ரசிகர்கள் இல்ல, செக் பண்ணிட்டேன்.... அவனுங்க எல்லாம் ஆழ்வார், ஏகன் படம் பாத்தவனுங்கதான்..

விஜய் : ஏனுங்கன்னோவ்.....ரொம்ப உதார் வுடரீங்கலே.... இதே ரேஞ்சுல பேசுனீங்க.... அப்புறம் என் அப்பா கிட்ட சொல்லி, உங்கள வச்சு படம் ஒன்னு டைரக்ட் பண்ண சொல்லி, கதைய முடிச்சுடுவேன்....... இல்ல... கேப்டனோட அடுத்த படத்துல நடிக்க வச்சுடவா......

கேப்டன் மரியாதை பட ரிசல்ட் பாத்துட்டு, இன்னும் அலறிட்டு இருக்காராமாம்.... அந்த பக்கம் உன்னை போல் ஒருவன்-னு ஒருத்தரு சொல்றாரு..... இந்த பக்கம் ரோபோட் - எந்திரன்-னு ஒருத்தர் சொல்றாரு..... அங்க ஒரு பக்கம் கந்தசாமி, இந்த பக்கம் ஆயிரத்தில் ஒருவன்...... யப்பா.....

சிம்பு : ஷங்கர் சார், நீங்க எந்திரன் படத்த பத்தி ஒண்ணுமே இதுவரை சொல்லவே இல்லையே..

ஷங்கர் : நீங்க யாரும் இதுவரைக்கும் கேக்கவே இல்லையே.... கேட்டாதானே சொல்ல முடியும்.......

அஜித் : சொல்லுங்க சார், எந்திரன் படம் ஷூட்டிங் முடிஞ்சுடுச்சா??

ஷங்கர் : எந்திரன் ஷூட்டிங் ஆரம்பிச்சுடுச்சான்னு கேளுங்க....

விஜய் : எந்திரன் படம் ஷூட்டிங் ஆரம்பிச்சுடுச்சா??

ஷங்கர் : முடிஞ்சுடுச்சு...........

சிம்பு : என்னது, ஷூட்டிங் முடிஞ்சுடுச்சா?? அதுக்குள்ளவா?? ஆரம்பிச்சு ஒரு வருஷம் தானே ஆகுது.......

ஷங்கர் : எல்லாரும் வெளையாடறீங்களா?? படம் ஆரம்பிச்சு ஒரு வருஷம்தான் ஆச்சு... இப்போ ஷூட்டிங் முடிஞ்சுடுச்சுன்னு சொன்னது படத்தோட ட்ரைலர்....... அது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும்.... படம் ஷூட்டிங் முடிய இன்னும் ஒரு 3-4 வருஷம் ஆகும்.... அப்புறம் கிராபிக்ஸ் இருக்கு.......... எப்படியும் ஒரு 5 வருஷத்துல ரெடி ஆயிடும்......

விஜய், அஜித், சிம்பு : யப்பா (பெருமூச்சு), ஒரு நல்ல செய்தி சொன்னீங்க.... ஒரு 5 வருஷத்துக்கு கவலை இல்ல.....

சிம்பு : ஹலோ விஜய், நீங்க வேணும்னா யார பாத்து வேணும்னா பயப்படலாம்.... ஆனா, நான் அப்படி இல்ல..... ஏன்னா, தினம் தினம் கரடியோட குடித்தனம் நடத்துறவன் நானு...... (தமிழ் கரடிய சொன்னேம்பா........).

ஷங்கர் : சிம்பு, உங்க தைரியத்த நான் பாராட்டுகிறேன்..... வீராசாமி பாத்துட்டே இன்னும் நிறைய பேரு உயிரோட இருக்காங்களே.....

விஜய் : ஏஏய்ய்ய்ய்ய்ய்ய் சைலன்ஸ்ஸ் ..... பேசிட்டு இருக்கோம்ல.........

ஷங்கர் : எதுக்கு இவன் இப்போ இவ்ளோ சவுண்டு வுடறான்.... எல்லாம் வில்லு பட ரிசல்ட் எபெக்டா??

சரி, அத விடுங்க..... அப்புறம் ஒரு விஷயம், இப்போ, "எந்திரன்" படம் முடிஞ்சா உடனே, ஒரு 2-3 ஹீரோவா போட்டு ஒரு சூப்பர் படம் பண்ணலாம்னு இருக்கேன்... அது ஹாலிவுட் ரேஞ்சுல இருக்கும்.... நீங்க என்ன சொல்றீங்க.....

அஜித், விஜய், சிம்பு : எங்களுக்கு ஒகே சார் (கோரசாக.......)

ஷங்கர் : படத்தோட பூஜை போடறதுக்கு ரெடி பண்ணிடுங்க.... ஒரு 50 பக்கத்துக்கு இன்விடேஷன் ரெடி பண்ணிடுங்க........ கிட்ட தட்ட ஒரு போட்டோ ஆல்பம் மாதிரி....

அஜித், விஜய், சிம்பு : ஐயோ, ஒப்பனிங்கே டெர்ரரா இருக்கே...... பூஜைக்கே ஒரு 2-3 கோடி ஆயிடும் போல இருக்கே......

ஷங்கர் : ஆகட்டுமே..... 2-3 ஹீரோன்னா, அப்படிதான் ரெண்டு, மூணு மடங்கு செலவு ஆகும்.... செலவ பாத்தா முடியுமா?? மொதல்ல நாம நாலு பெரும், உலகம் முழுக்க சுத்தி பாத்து, லொகேஷன் செலக்ட் பண்ணனும்.......கொஞ்சம் பெருசா பண்ணிடலாம் இந்த படத்த...... எனக்கு 300 அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் இருக்கணும்......

கதை என்னன்னா, ஒப்பனிங் சீன்ல, ஹீரோஸ் பாரீன்ல இருந்து வர மாதிரி சீன் வைப்போம்.... ஏர்போர்ட்ல பர்மிஷன் கெடைக்கலேன்னா, ஒரு ஏர்போர்ட் செட் போட்டுடுவோம்.... அதுல ஒரு 5000-10000 ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் அந்த பக்கம், இந்த பக்கம் நடக்க விட்டுடுவோம்.... ஏன் இவ்ளோ பேர்னா, ஏர்போர்ட் பிசியானதுன்னு காமிக்கறதுக்கு...... விஜய் மல்லையா கிட்ட பேசி, ஒரு கிங்பிஷர் ப்ளேன் வாங்கிடுவோம்..... வாடகைக்கு எடுத்தா, ரொம்ப காஸ்ட்லி..... இந்த சீன் ரெண்டு, மூணு மாசத்துல எடுத்துடலாம்......

அப்புறம், படத்தோட ரெண்டாவது சீன்ல ஹாங்காங்ல இருந்து ஆரம்பிக்குது.... அதனால, இந்த ரெண்டாவது சீன் எடுக்க நம்ம யூனிட்ல இருந்து ஒரு 500 பேரு ஹாங்காங் போயிடுவோம்.....

இந்த படத்துல, நாம சண்டை காட்சிக்கு யூஸ் பண்றதுக்காக, ஒரு ஏரோப்ளேன், கப்பல், 50 லாரி, 100 கார், 40 பஸ், 75 வேன் எல்லாம் வாங்கிடலாம்..... வாடகைக்கு எடுத்தா ரொம்ப செலவு......

ஒரு 5000 பேர வச்சு, காட்டுக்குள்ள ஒரு அட்டகாசமான சண்டையை எடுத்துடலாம்..... இன்னொரு மெகா சண்டை, கறிகடையில நடக்குது... அதுக்கு கொஞ்சம் கறி வேணும்.....

விஜய் : அது பிரச்சனை இல்லை... நமக்கு தெரிஞ்ச காஜா பாய்னு ஒருத்தரு இருக்காரு... அவரு கடையிலேயே எடுத்துடலாம்....

ஷங்கர் : தம்பி விஜய், உங்களுக்கு நல்ல காமெடி வருது.... இந்த சண்டை காட்சிக்கு 3000 ஆடு, 2500 மாடு தொங்கற மாதிரி காட்சி வேணும்... காஜா பாய் கடைல இவ்ளோ தொங்க விட முடியுமா??

அஜித், விஜய், சிம்பு : 3000 ஆடு, 2500 மாடு தொங்கற மாதிரி காட்சியா?

ஷங்கர் : ஆமாங்க.... அப்போதான் காட்சியில ஒரு ரிச்னெஸ் தெரியும்.... இந்த சண்டைய இங்கிலாந்துல இருக்கற என்னோட நண்பன் ஜேம்ஸ் கடைல இருக்கற குடோன்ல எடுத்துடலாம். உங்க கூட ஒரு 500 பேர சண்டை போட சொல்லிடலாம்....

சிம்பு : இந்த படம் ரிச்சு..... முடிஞ்சா உடனே நான் எடுக்கறது பிச்சை..... விட்டுடுங்க சார்.... நான் கூட வல்லவன், கெட்டவன், சின்னவன் மாதிரி ஏதாவது படம் எடுத்து பொழைச்சுக்கறேன் என்று சொல்லி நழுவுகிறார்.....

அஜித் : இதுக்கு கொறச்சலா நீங்க படமே எடுக்க முடியாதா??

விஜய் : சார், நீங்க இனிமே ஹாலிவுட்ல மட்டும்தான் படம் எடுக்க முடியும்.... தமிழ்ல ஒங்கள டைரக்டரா போட்டு படம் எடுக்கற அளவுக்கு யார்கிட்டயும் காசு இருக்கற மாதிரி தெரியல...... நான் என் வழில போய், போக்கிரி-II எடுக்கறேன்... இந்த சின்ன பசங்க மூணு பேரையும் விட்டுங்க சார்.

ஷங்கரின் பட்ஜெட் கேட்டு, மூவரும் தலை தெறிக்க பறக்கிறார்கள்...

அஜித், நான் பேஷ் மாட்டேன், பேஸ் மாட்டேன், ஏகன், யானைப்பாகன் என்று சொல்லி கொண்டே தடுக்கி விழுந்து ஓடுகிறார்...

சிம்பு, எதிரில் படும் சுவர் எல்லாவற்றையும் தாண்டி கொண்டே, நயன்தாரா பிரபுதேவா உன்னை மணந்தாரா, ரீமா சென் இருக்கறதுலேயே நீதான் சூப்பர் பெண், பாவனா ஒன்ன மறந்து போவேனா என்றெல்லாம் உளறிக்கொண்டே ஓடுகிறார்.

விஜய் சிறிது தூரம் ஓடிவிட்டு, ஜோக்கிரி, போக்கிரி, வில்லு பவர் போன செல்லு என்று புலம்பியபடி ஓரிடத்தில் மயங்கி சரிகிறார்.......

ஷங்கர் ரஜினிக்கு போன் போட்டு, எந்திரன் அடுத்த ஷூட்டிங் ஷெட்யூல் பற்றி பேச ஆரம்பிக்கிறார்......

சார் வணக்கம்........... நான் ஷங்கர் பேசறேன்.......... நாம அடுத்து ஜப்பான் போய், அந்த ரோபோ கண்காட்சியை திறந்து வைக்கற சீன் எடுக்கப்போறோம்.......

Wednesday, June 24, 2009

INCREDIBLE INDIA .......

I got these pictures in my E-mail. Felt it so interesting and is sharing with you all..




















Monday, June 22, 2009

மெகா மொக்கைஸ்.... 23.06.09

(வலையில் படித்தது, படித்ததும் பிடித்தது...)

கஸ்டமர் : என்னங்க எல்லா பிஸ்கட்டும் ஒடைஞ்சு இருக்கு?
மிஸ்டர் எக்ஸ் : அது 50-50, அப்படிதான் இருக்கும்...

*********

நண்பர் : சார், உங்களுக்கு சொந்த ஊர் எது?
மிஸ்டர் எக்ஸ் : எனக்கு சொந்தமா ஊர் எல்லாம் இல்லை. சொந்த வீடுதான்....
**********
நண்பர் : ஒங்க மாமா டெல்லியில என்னவா இருக்காரு?
மிஸ்டர் எக்ஸ் : அங்கயும் என் மாமாவாதான் இருக்காரு..
********
நண்பர் : சார், உங்க நாய் கட்டி போட்டுருக்கா?
மிஸ்டர் எக்ஸ் : கட்டி போடல.... குட்டி போட்டு இருக்கு.....
******
நண்பர் : என்ன சார், ஒங்க பொண்ணுக்கு பாத்து இருக்கற மாப்பிள்ளை ரொம்ப "பசை"யுள்ள கையாமே? என்ன பண்ணறாரு?
மிஸ்டர் எக்ஸ் : போஸ்டர் ஒட்டராரு...........
*********
நண்பர் 1 : இவர் ஆனாலும் ரொம்ப முன் ஜாக்கிரதை பேர்வழிதான்.....ட்ரைவர் கிட்ட மெதுவா போ... மெதுவா போன்னு சொல்றாரு.....
நண்பர் 2 : நல்லதுதானே.....இதுல என்ன தப்பு?
நண்பர் 1 : சார், அந்த ட்ரைவர் நடந்து போயிட்டு இருக்கார் .....

********

நண்பர் : சோம்பேறிகளுக்கான போட்டியில உங்களுக்கு முதல் பரிசு கெடச்சுதாமே? எப்படி?
மிஸ்டர் எக்ஸ் : நான் அந்த போட்டிக்கு பேர் கொடுத்தேன்... ஆனா கலந்துக்கவே இல்ல.... அதான் முதல் பரிசு.....

*********

நண்பர் : ஒங்க பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்?
மிஸ்டர் எக்ஸ் : நிறைய தடவை கேட்டவுடன், நேத்துதான் எங்கிட்ட சொன்னா.... பக்கத்து வீட்டு சீனிவாசனை தான் பிடிக்கும்னு....

**********

நண்பர் : ஏன் சார், ஸ்பூனை பாதியா உடைக்கறீங்க??
மிஸ்டர் எக்ஸ் : டாக்டர்தான் பாதி ஸ்பூன் மருந்து சாப்பிட சொல்லி இருக்காரு....

மெகா மொக்கைஸ்



வலையில் படித்தது.............. படித்ததும் பிடித்தது..........

போன் பூத்காரர் : ஹலோ, என்னங்க சார், நாலு கால் பேசிட்டு, ஒரு காலுக்கு தான் பணம் கொடுக்கறீங்க......

மிஸ்டர் எக்ஸ் : நல்லா கணக்கு பண்ணி பாருங்க.... நாலு கால் ஒண்ணு தானே?

*******************

நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்?

மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை....

************

நண்பர் : மூக்குல ஏன் அடிக்கடி சளி பிடிக்குது?

மிஸ்டர் எக்ஸ் : ஏன்னா, மூக்குக்கு மேல ஐஸ் (EYES) இருக்கு ............

***********

நண்பர் : தலைல இருந்து முடி எல்லாம் கொட்டுதே? என்ன பண்றது?

மிஸ்டர் எக்ஸ் : மொட்டை அடிச்சுடுங்க........

************

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

************

நண்பர் 1: அரிசி கிலோ எவ்வளவு?

மிஸ்டர் எக்ஸ் : கிலோ ரூ.50/-

நண்பர் 1: எப்போ கொறையும்?

மிஸ்டர் எக்ஸ் : நான் அளக்கும்போது..........

********************

மிஸ்டர் எக்ஸ் : இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பாக்க முடியாது :

நண்பர் : அப்படியா?? அவ்வளவு சுறுசுறுப்பா??

மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே இடமாற்றத்துக்கும் அப்ளை பண்ணிட்டார்.....

Thursday, June 18, 2009

எந்திரன் பாடல்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், வாலி, வைரமுத்து

பங்கேற்போர் : ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து.

ஏ.ஆர்.ரஹ்மான் : என் இருப்பிடம் தேடி வந்திருக்கும் கவிஞர்களுக்கு, இந்த இசைப்புயலின் காலை வணக்கம்.

வாலி : வாழ்க தமிழ், வளர்க தாய்த்திரு நாடு... ரஹ்மான் அவர்களே, கவிஞர்களே வணக்கம் என்று சொன்னீர்கள். இங்கு, நான் ஒரு கவிஞன் தானே உள்ளேன், பின் உங்களுக்கு ஏன் இந்த குழப்பம்.

வைரமுத்து : இசை புயலுக்கு செந்தமிழ் செல்வனின் தமிழ் வணக்கம். வடுகப்பட்டியின் சார்பாக ஒரு வீர வணக்கம். வாலி அவர்களின் இந்த நக்கல் பேச்சு, மிகவும் மிகைப்படுத்த பட்ட குத்தல் பேச்சு. நாங்களும், பலகாலமாய், தமிழை நேசித்து, சுவாசித்து, வளர்ந்தவர்கள்தான். அவ்வளவு ஏன், என் முன்னோர்களில் இருந்து இன்று, என் காலம் வரை, நாங்கள் அருந்துவது, தண்ணீர் அல்ல, தமிழ் நீர், அதுவும் தமிழ் அருவியில் இருந்து....

வாலி : சரி சரி கவிஞர், வேண்டாம் இந்த கோபம், விட்டு விடாதீர்கள் சாபம்... இந்த முத்தமிழ் வித்தகன், பைந்தமிழின் இளைய பேரன் வாலி, உங்களை கவிஞராக அங்கீகரித்து விட்டான், போதுமா?? (2-3 பாட்டுக்கு சான்ஸ் வாங்கலாம்னு பாத்தா வுட மாட்டான் போல இருக்கே?).

வைரமுத்து : கவிஞர் வாலி அவர்களே... வாழ்க உங்கள் தமிழ் பற்று...வளர்க உங்கள் தமிழ் தொண்டு....... பைந்தமிழின் இளைய பேரன் என்று உங்களை வர்ணித்த, உங்களின் நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது... உங்களுக்கு தமிழை விட, நகைச்சுவை நன்றாக வருகிறது..... வடிவேலு பக்கத்து வீடா, இல்லை விவேக் எதிர்த்த வீடா?? பாவம், விட்டு விடுங்கள், அவர்களும் பிழைத்து போகட்டும்...

சரி, இனி விஷயத்திற்கு வருவோம்... தம்பி ரஹ்மான் அவர்கள் அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் நடிக்கும், அகில உலகையும் அதிர வைக்க போகும், மாபெரும் படமான "எந்திரன்" படத்தில் 5 அருமையான பாடல்கள் இருப்பதாக என்னிடம் மெட்டமைத்து காட்டினார். ஆஹா, அந்த மெட்டு, அத்தனையும் தேன் சொட்டு, அவை அனைத்தும் சூப்பர் ஹிட்டு.....

நான் சொல்கிறேன், இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற அந்த 5 பாடல்களை நான் எழுதுவதாக உளமார உணர்கிறேன்...... எனக்கு ஆசை அதிகம் இல்லை, அப்படியே இருந்தாலும் எல்லாம் சின்ன சின்ன ஆசைதான், அதையும் ஏற்கனவே "ரோஜா" படத்தில் சொல்லி விட்டேன். ஆகவே, அந்த 5 பாடல்களை தவிர படத்தின் மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதட்டும்.......

வாலி : தம்பி வைரமுத்து அவர்களே... உங்களுக்கு தமிழ் தெரிந்த அளவு, கணக்கு தெரியவில்லை, ஏன், தமிழையே மறந்து விட்டீர்களோ என்று நினைக்கிறேன், அதனால்தான், "காதலன்" படத்தில் :

ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தால்
தேவை இல்லை பார்மசி


என்று ஒரு தமிழ் பாடலை நல்ல சுத்தமான ஆங்கிலம் கலந்து எழுதினீர்..... அனால், எனக்கு தமிழும் தெரியும், ஞான் கணக்கும் அறியும்........

வைரமுத்து : ஒன்றே சொன்னிர்கள், நன்றே சொன்னீர்கள், அதையும் இன்றே சொன்னீர்கள். பல்லில் அடிபட்டால் பல்வலி, ஒரு பாடலின் முதல்வரி பல்லவி. இதோ, படத்தின் நாயகன் அறிமுகமாகும் "எந்திரன்" படத்தின் பாடலின் பல்லவி :

எந்திரன் எந்திரன் எந்திரன்
எதிர்காலம் அறிந்த எந்திரன்
இவன் தந்திரன், தந்திரன், தந்திரன்
பூமியை ஆள வந்த இந்திரன்


வாலி : ஐயோ, ஐயோ, இது என்ன தமிழுக்கு வந்த சோதனை....... முதல் வரியில் ஏன் படத்தின் பெயர் வரவேண்டும்..... நாயகனின் பெயர் வந்தால் இன்னும் நல்லா இருக்குமே..... தம்பி ரஹ்மான் அவர்களே, வைரமுத்து சொன்னதை, மறந்து விடுங்கள்... இதோ என் பாடலை கேளுங்கள்..........

வா வா வா வசீகரா
அந்த வானமே வசப்படுமே வசீகரா
தா தா தா வசீகரா
உன் சம்மதம் தா வசீகரா ........


வைரமுத்து : கேட்டதும் வாந்தி வருவது போல் எழுத, இந்த அவனியில் உம்மை விட்டால் வேறு ஆளே இல்லை அய்யா. நீங்கள் இதுவரை இந்த வடுகப்பட்டி காரனின், தமிழை முழுமையாக கேட்டதில்லை என நினைக்கிறேன்... இதோ, ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமாக, என் தமிழ் உங்கள் செவிகளுக்கு :

குப்பியில் இருந்து கரு மை எடுத்து,
அதில் என் தமிழை கலந்து,
நான் எழுதும் பாடல் கேட்டு,
அங்கே தமிழ் சேவல் கொக்கரிக்கும்,
தமிழ் சோடா கொப்பளிக்கும்.

என் தமிழ் ஆற்றின் சீற்றம் கண்டு,
சிறு நரிகள் சிதறி ஓடும்,
வன்புலிகள் வாலாட்டும்,
மதம் கொண்ட யானையும் மண்டி போடும்,
சீறி வரும் நாகமோ, என் தமிழ் கேட்டு
மண்ணில் மெல்ல தலை கவிழும்.

ஊசியிலை காட்டினுள் சீறி பாயும் என் தமிழ்,
அங்கே பல மூங்கில்களை துளைக்கும்.
மூங்கில் வழி நுழையும் என் தமிழ் பாட்டு,
மென் சங்கீதத்தை அங்கே சாரலாய் அள்ளி தெளிக்கும்....

நீங்காத நாதம் கேட்ட ரீங்கார வண்டுகள்,
தன் இருப்பிடம் தேடி ஓடி ஒளியும்....
துள்ளி ஓடும் புள்ளி மானும்,
மெல்ல மெல்ல மயங்கி தலைசாயும்.

இப்போது புரிகிறதா வாலி அவர்களே, என் தமிழ் மயக்கும் தமிழ் என்று......

ஏ.ஆர்.ரஹ்மான் : ஆஹா, ஆஹா.... வைரமுத்து அவர்களே... நான் சமீப காலத்தில் கேட்ட மிக நல்ல தமிழ் வரிகள் இவைதான்...... வாழ்த்துக்கள்......

வாலி : பொறாமையின் பிறப்பிடமே, வஞ்சகத்தின் இருப்பிடமே, கொஞ்சம் அடக்கி வாசி... என் பாடலை நீ நன்கு வாசி, பின் நீ எழுதுவது தமிழ் தானா என்று யோசி!!

வைரமுத்து : எதுகை மோனைகளை சொல்லி, நீ எழுதும் தமிழ் உயிர்கொல்லி. தமிழ் மக்கள் தமிழை மறக்க நீங்கள் எடுக்கும் முயற்சி விரைவில் வெற்றி பெரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் : கவிஞர்களே, பாடல் இருக்கா இல்லையா?? எனக்கு வேறு படங்களும் இருக்கின்றன..... பல ஹிந்தி படங்கள் ஏற்கனவே பெண்டிங்கில் இருக்கிறது

வாலி : ரோபோக்களை கட்டி மேய்க்கும் நம் நாயகனுடன் படத்தின் நாயகி கிடைக்கும் ஒய்வு நேரத்தில், ஆடிப்பாடும் அடுத்த டூயட் பாடல் இதோ ........

என் தலைவா நீ ஒன்று
நான் சேர்ந்தால் நாம் இரண்டு
நம் மழலை வந்தால் நாம் மூன்று
நான் மறை வேதமோ நான்கு.........

வைரமுத்து : இது என்ன ஒரு டூயட் பாடலா, LKG பாடலா??. ரஹ்மான் அவர்களே, இதை கேளுங்கள்........

வாடா என் தலைவா நீ வா
ஓடி வந்து அணைக்க வா வா
தர வேண்டும் கோடி முத்தம்
அதுவும் இனி நித்தம் நித்தம்

வாலி : அடடா, இவன் கொஞ்சம் நல்லாவே தமிழ் எழுதுவான் போல இருக்கே... ரஹ்மான நம்ம பக்கம் வளைக்க ட்ரை பண்ணுவோம்..... ரஹ்மான், இந்த பாட்டு கேளுங்க.....

தலைவா நீ சிலிகான் சிங்கம்
உனக்காக தானே என் அங்கம்
காத்திருக்கு சீக்கிரம் வாடா
போத்திக்கதான் போர்வையாய் வாடா

ஏ.ஆர்.ரஹ்மான் : வாலி, இந்த பாட்டு சூப்பர். இத ஒகே பண்ணிடலாம். நெக்ஸ்ட்.

வைரமுத்து : ஆஹா, வாய்ப்பு நழுவி விட்டதே?? என்ன செய்யலாம்?? நம்மால் முடிந்தது, பழைய குப்பையை கிளறி, வாய்ப்பை பறிக்கலாம்..... வாலி அவர்களே, முன்பு கூட, நீங்கள் ஒரு பாடல் எழுதினீர்கள்... அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்று...... பாடலின் இசையில், படமாக்கப்பட்ட விதத்தில், நடிப்பில் என்று எந்த குறையும் இல்லை... ஆனால், நீர் எழுதிய பாடலில்தான் குறை இருந்தது புளுகு கவிஞரே !!!

வாலி : வேண்டாம் அன்பரே....அந்த பாடலின் இசையை குறை கூறினால் கூட பொறுத்து கொள்வேன்... ஆனால், அந்த பாடலை குறைகூறினால் பொறுத்து கொள்ள மாட்டேன்..... அம்மா என்றழைக்காத ஒரு உயிர் உண்டோ, இந்த பூமியில்??

வைரமுத்து : வாலி அவர்களே, வேண்டாம் என்னிடம் விஷ பரீட்சை. சரி, இதற்கு பதில் சொல்லுங்கள்... எந்த சர்ப்பமாவது அம்மா என்று அழைத்து கேள்விப்பட்டிருக்கிறீரா? இல்லை, என்ற கரடியாவது அம்மா என்று கூப்பிட்டதை காட்ட முடியுமா?? நான் கண்ட கருங்குயில் கூட கூ கூ என்று தானே கூவுகிறது? இதில் இருந்தே தெரிய வில்லை, நீர் ஒரு புளுகு மூட்டை கவிஞர் என்று?

ஏ.ஆர்.ரஹ்மான் : ஐயோ, இவனுங்க ரெண்டு பேரோட இம்சை தாங்க முடியலையே... பாட்டு எழுத கூப்பிட்டா, இவனுங்களோட சண்டையில இந்த தமிழை கேட்டு கேட்டு, என் தலையே வீங்கி போச்சு....... மொதல்ல இவனுங்கள தொரத்துவோம்......

சரி சரி கவிஞர்களே, உங்க ரெண்டு பேருக்குமே ஆளுக்கு 3 பாட்டு குடுத்துடலாம்னு நெனச்சு, "எந்திரன்" படத்து பாடல்களை கூட 5-ல இருந்து, 6-ஆ மாத்திட்டேன்.

ஆனா, இப்போ நீங்க இந்த சூப்பர் மூட பார்த்த உடனே, அத கெடுக்காம, அந்த 6 பாட்டுக்களையும் நா.முத்துகுமார், பா.விஜய் இந்த ரெண்டு பேரை வச்சு எழுத சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்.....

அப்போதான், பல்லேலக்கா பல்லேலக்கா மாதிரி ஹிட் பாடலும், ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட் மாதிரி புரியாத மாதிரி எழுதி சூப்பர் ஹிட் ஆகர பாட்டுங்க எலாம் கிடைக்கும்......... அப்புறம் உங்க ரெண்டு போரையும் கூப்பிடறேன்....... வணக்கம் ......

பாடல் எழுத சான்ஸ் கிடைக்காது என்று தெரிந்த உடன், இரண்டு கவிஞர்களும் ஒருவர் ஜிப்பாவை ஒருவர் கிழிக்க ஆரம்பிக்க, இந்த சாக்கில் வாலி, வைரமுத்து மேல் தன வாய் தாம்பூலத்தை தெளிக்க, அங்கே, ரத, கஜ படைகள் ஏதுமின்றி ஒரு போர் உருவாவதை கண்டு, ஏ.ஆர்.ரஹ்மான் தன ரெகார்டிங் ஸ்டூடியோவின் பின்வாசல் வழியாக தலை தெறிக்க ஓடுகிறார்.......

Sunday, June 14, 2009

குடிமக்களுக்கோர் ஒரு குளுகுளு செய்தி ....


'குடிமக்கள்' வசதிக்காக பீரை இறக்குமதி செய்யும் தமிழக அரசு!

தமிழகத்தில் பீர் கடும் தட்டுப்பாட்டில் இருப்பதால் தவித்து வரும் 'குடிமக்களின்' தாகத்தைத் தீர்ப்பதற்காக, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் பீரை வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

கோடை காலம் சுட்டெரிப்பதால் டாஸ்மாக் கடைகளில் பிற மது வகைகளை விட பீர்தான் பெருமளவில் விற்பனையாகிறது. விற்பனையாகும் அளவுக்கு சப்ளை இல்லாததால், பீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பீர் கிடைக்காமல் 'குடிமக்கள்' பெரும் அவதிப்படுகின்றனர்.

இதையடுத்து டாஸ்மாக் நிறுவனம் வெளிமாநிலங்களிலிருந்து பீர் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 3 லட்சம் கேஸ் பீர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

பீரை வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யவிருப்பது இது 2வது முறை என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிரபலமான சாப் மில்லர் உள்ளிட்ட நிறுவனங்களில் டாஸ்மாக் சார்பில் பீருக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம்.

தமிழகத்திலேயே தயாரிக்கப்படும் பீர் நிறுவனங்களுக்கு மட்டும்தான் தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு பிராண்டுகளை இங்கு தயார் செய்ய முடியாது.

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பாலாஜி ப்ரூவரிஸ், மோகன் ப்ரூவரீஸ், எம்பீ ப்ரூவரீஸ் ஆகியவை உள்ளன.

தமிழகத்தில் அதிக அளவில் விற்பனையாகும் பீர் பிராண்ட் ஆக மார்க்கோ போலோவின் ஸ்டிராங் பீர் உள்ளது.

இந்தியாவின் குடிகார மாநிலங்களில் (அதாவது அதிகம் குடிப்பவர்கள் வரிசையில்) தமிழகம் 3வது இடத்தில் உள்ளதாம். முதலிடத்தை பஞ்சாபும், 2வது இடத்தை ஆந்திராவும் பெறுகின்றன.

(வெட்கம் வெட்கம், தமிழன் இதில் ஏன் முதலிடம் பெறாமல் சோடை போனான்?? இருந்தாலும், நம்ம மக்களோட கோடை தாகத்தை தீர்ப்பதற்கு நம் அரசு எடுக்கும் முயற்சியை பாராட்டுவோம்).
(நன்றி : thatstamil.com)
ஒரு முக்கிய நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த செய்தி :
மதுரைப்புயலின் வாரிசு, தினமும், அந்தி சாய்ந்ததும், கணிசமான அளவு "சரக்கை" உள்ளே தள்ளி விட்டு, புயலையே புரட்டி போடறாராம்...... இதனால, புயலோட, மனசுல பெருசா வேதனை புயலாம் !!!!
சின்ன புயலுக்குத்தான் (அதாங்க, நம்ம மதுரை புயலின் வாரிசு) என்னா வில்லத்தனம்??.........

Friday, June 12, 2009

கல்யாண சமையல் சாதம்

மிஸ்டர் எக்ஸ் : வாழ்க்கையை நினைத்தாலே வெறுப்பா இருக்குடா.....

மிஸ்டர் ஒய் : ஏண்டா, அப்படி சொல்ற? அளவான குடும்பம், அன்பான மனைவி, நல்ல வேலை, கைநிறைய சம்பளம், வேற என்னடா வேணும்?

மிஸ்டர் எக்ஸ் : பின்ன என்னடா?? நான் வந்துதான் சாப்பிடணும்னு சொல்லி, என் மனைவி எனக்காக எப்போதும், காத்திருக்கா?? இதுக்கு பதில் சொல்லு...... உங்க வீட்டுல இப்படி இருக்கா??

மிஸ்டர் ஒய் : இது பாராட்டக்கூடிய நல்ல விஷயம் தானே? இந்த காலத்துல எந்த வீட்டுல இப்படி காத்து இருக்காங்க..........

மிஸ்டர் எக்ஸ் : ஆமாண்டா..... நான் வீட்டுக்கு போய், சமையல் பண்ணித்தானே என் மனைவி சாப்பிடணும்? அங்க எப்படி??

மிஸ்டர் ஒய் : ????????????

முதல்வர் கருணாநிதி மாமல்லபுரம் சென்றார்-ஓய்வு



முதல்வர் கருணாநிதி ஓய்வுக்காக மாமல்லபுரம் சென்றுள்ளார். சில நாட்கள் அவர் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

உடல் நலக்குறைவு, மருத்துவமனை வாசம், தேர்தல் பணிகள், பின்னர் ஆட்சியமைப்புப் பணிகள் என தொடர்ந்து கடும் பிசியாக இருந்து வந்தார் முதல்வர் கருணாநிதி.

தற்போது துணை முதல்வர் பதவியை உருவாக்கி முதல்வர் பணியின் பாதிப் பளுவை மு.க.ஸ்டாலின் வசம் கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் ஓய்வுக்காக மூத்த அமைச்சர்கள் சிலருடன் முதல்வர் கருணாநிதி மாமல்லபுரம் சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்து விட்டு பின்னர் அவர் சென்னை திரும்புவார்.

(இதற்கிடையில் தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பத்திரிக்கையாளைகளிடம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது).
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

Sunday, June 7, 2009

GREAT COMEDY - பகுதி 2



கவுண்டமணி
செந்தில்
வடிவேல்
விவேக்
சின்னி ஜெயந்த்

கவுண்டமணி : இங்க வந்திருக்கும் எல்லாருக்கும் வணக்கம்.


எல்லா நடிகர்கள் : வாங்க, வாங்க.... வணக்கம் கவுண்டரண்ணே......


கவுண்டமணி : டேய்...உங்க எல்லார் வணக்கத்தையும் தூக்கி, அந்த குப்பை தொட்டி மூஞ்சி மேல போடுங்க (வடிவேலை காட்டுகிறார்).

உங்களுக்கு யாரும் வணக்கம் சொல்லலேடா, வீங்குன மண்டையனுங்களா!!! நான் இந்த நிகழ்ச்சி பாக்கறவங்களுக்கு வணக்கம் சொன்னேன். நீங்க எல்லாம் ஒரு மார்க்கமானவனுங்கன்னு எனக்கு தெரியும்.. அதுவும் இல்லாம, இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா கிட்ட வணக்கம் வாங்கற தகுதி இங்க இருக்கற ஒரு மூஞ்சிக்கு கூட இல்லியேடா நாராயணா ...... படுவா... சத்தம் எதுவும் வராம இருக்கணும் தெரியுதா.... இல்ல... ஒங்க எல்லாரோட குரல் வளையையும் கடிச்சு துப்பிடுவேன்.

சின்னியை பார்த்து : டேய்... ஒன்ன இதுக்கு முன்னாடி எங்கயோ பாத்து இருக்கேனேடா?? அப்போ ஒனக்கு கொம்பு இருந்துச்சு.... கூட்டாளிங்களோட ஒரு குளத்த அசிங்கம் பண்ணிட்டு இருந்தியேடா... அப்ப, நான் கூட ஒன்ன கூப்பிட்டு, ஒரு வாளில புண்ணாக்கு, கழனி தண்ணி எல்லாம் வச்சேனே, ஞாபகம் இருக்கா?? இல்ல பழச எல்லாம் மறந்துட்டியாடா??

செந்திலை பார்த்து : டேய், தீஞ்சு போன தேங்காமூடி மண்டையா, உன்னோட முழியே சரியில்லையே?? ஏதாவது ஏடாகூடம் பண்ணலாமுன்னு யோசிக்கறியா?? அப்படி ஏதாவது நடந்தா, இங்க ஒரு கொல விழும்டா முக்கா மண்டையா!!

வடிவேலை பார்த்து : டேய், அமாவாசைக்கு பொறந்தவனே.... இன்னாடா லுக்கு, படுவா, கண்ணா நோண்டி காக்காவுக்கு போட்டுடுவேன்....ஆத்தாவுக்கு கெடா வெட்டுறதுன்னு வேண்டிட்டு இருக்கேன்.... அதுக்கு பதிலா, ஒன்ன பலி போட்டுடுவேன், எந்த டகால்டியும் எங்கிட்ட வேண்டாம்.....

செந்தில் : அண்ணே... நீங்க எங்களுக்கு வணக்கம் சொல்லலேன்னா பரவாயில்லேண்ணே... நாங்க எல்லாம் உங்களுக்கு வணக்கம் சொல்லி ஆகணும்னே.. ஏன்னா... நீங்க எங்க எல்லாருக்கும் சீனியர் ஆச்சே....


வடிவேல் : ஆமாம்ணே... நீங்க வழி விடவே தான், நாங்க எல்லாம் உள்ள வர முடிஞ்சது.....இப்போ மேல வந்து ஒக்கார முடிஞ்சது....ஏதோ, இன்னிக்கி உங்க புண்ணியத்துல, தம்பி சூர்யாவ விட கொஞ்சம் ஜாஸ்தி சம்பளம் வாங்கறேன்... இப்ப வர வழியில மதுரை எவ்ளோன்னு சொம்மா ஒரு வெல கேட்டேண்ணே .... ரேட் கொஞ்சம் படியல... வந்துட்டேன் ....

ஏன்னா .....பொறந்த ஊர அப்படியே கொஞ்சம் வாங்கி போடலாம்னுதான்..... பாப்போம்.... படியாம எங்க போக போகுது ..... யப்பா, என்னா வெயிலு, என்னா வெயிலு..... ஏம்பா, அந்த ஏசிய கொஞ்சம் கூல் இங்க்ரீஸ் பண்ணுங்க.....

விவேக் : எலே, நேரம்லே ஒனக்கு... ஊர்ல கவுத்து கட்டில்ல மல்லாக்க படுத்து, கால ஆட்டிட்டு, விசிறியால முதுகு சொரிஞ்சு, வானத்த பாத்து, கொசுவோட குடும்பம் நடத்துனவன் எல்லாம், இன்னிக்கி ஓசில ஏசி பாத்துட்டு ஏசிங்கறான்... கூல் இங்க்ரீஸ் பண்ணுங்கறான்.. சரி, அத விடுங்க... அத பத்தி பேசினோம்னா, அது, அவன் ஊரு குட்டைய விட நாத்தமா இருக்கும்...

நாம எல்லாம் இன்னிக்கி இருக்கற பிசி ஷெட்யூல்ல இங்க வந்ததே அதிகம், கவுண்டர் அண்ட் செந்தில் இந்த பிசிங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னன்றதையே மறந்து இருப்பாங்க... ஹா ஹா .... GREAT COMEDY ...

ஆண்டவன் கெட்டவங்களுக்கு சொறி மட்டும் கொடுப்பான்... ஆனா, நல்லவங்களுக்கு அவனே ஆளையும் அனுப்பி சொறிஞ்சு விடுவான்... எப்படி... என்னோட பன்ச் டயலாக்.. So, ஸ்டாப் ஆல் திஸ் நான்சென்ஸ்.....

கவுண்டமணி : இங்கிலீசு..... எங்கிட்ட ..... டேய், தகர டப்பா தலையா...சொல்லுடா, ரொம்ப பேசினான்னா, அவன் நாக்குல சூட்டுகோல் வச்சு தீச்சுடுவேன்னு.. டேய், என்னாடா பன்ச் டயலாக், பஞ்சு மிட்டாய் டயலாக்...அந்த காலத்துல நான் பேசாத ப்ன்ச் டயலாகாடா?? அதுவும் நான் கொஞ்ச நாள் அங்க இங்க நகர்ந்தா, சைக்கிள் கேப்ல உள்ள பூந்தவன் எல்லாம் இன்னிக்கு பெரிய காமெடியனாடா??

கேட்டா பன்ச் டயலாக் பேசறான்... சீறும் சிங்கம், பாயும் புலிங்கறான்... நான் கேக்கறேன்.... இந்த புலி புலின்னு சொல்றியே... கொட்ட எடுத்ததா, இல்ல கொட்ட எடுக்காததா?? இன்னாடா, ஜார்ஜ் புஷ் தம்பி மாதிரியே பேசற.... ங்க்கொக்க மக்கா, வரேண்டா .........


சின்னி : ஆஹ்ங்க்.... ஏன் எல்லாரும் ரொம்ப கோவமா இருக்கீங்க... நாம எல்லாரும் நகைச்சுவை கலைஞர்கள்....நமக்கு கோவமே வரக்கூடாது...


கவுண்டமணி : பளார் .....பளார்..... என்று சின்னி ஜெயந்தை அறைகிறார்.....
சின்னி : அண்ணே... ஏன் என்ன அடிச்சீங்க ... வேணாம்...எனக்கு கெட்ட கோவம் வரும்... அப்புறம் அங்க வந்து ஒங்க காது ரெண்டையும் கடிச்சுடுவேன்.. ஆங்க்.......


கவுண்டமணி : வாடா ராசா வா... இந்த டகால்டி வுடுவேன்னுதான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணினேன். இப்போ என்ன சொன்ன... கெட்ட கோவம் வருமா, கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்ன, நாம எல்லாரும் நகைச்சுவை கலைஞர்கள்....நமக்கு கோவமே வரக்கூடாதுன்னு......

one ஸ்டெப் பேக்.... வாய் இருந்தா எத வேணும்னாலும் பேசுவியாடா, தவள வாயா.... இனிமே ஏதாவது பேசின, உன் மூக்குல, குச்சிய விட்டு நோண்டிடுவேன்... இல்ல பட்டாச கொளுத்தி வாய் உள்ள போட்டுடுவேன்... உனக்கு காமெடியே வராது.... ஆனா, தைரியமா எல்லார்கிட்டயும் நீ பெரிய காமெடியன்னு சொல்லிட்டு திரியற ....இனிமே இது மாதிரி ஏதாவது நீ சொன்னன்னு எனக்கு தெரிஞ்சது... மவனே ... அன்னிக்கு ஒனக்கு சங்குதான்.... போ......ராசா போ.....

வடிவேல் : ஏண்ணே ... ஏன் இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்கீங்க....இதுல இருந்தே ஒங்கள பத்தி எங்க எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சுன்னே.... உஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா...இப்பவே கண்ண கட்டுதே .......


கவுண்டமணி : டேய், கருவாயா... நீ என்ன நெல்சன் மண்டேலா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரனா?? இல்ல ஒபாமா வீட்டுக்கு எதிர்வீடா? ரொம்ப சொறியரியேடா..... சரி மேல சொல்லு....

வடிவேல் : இல்லேண்ணே..... கோவம் இருக்கற எடத்துல தான் நல்ல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க ... அந்த மேட்டர சொல்ல வந்தேண்ணே.... இப்ப சொல்ரேண்ணே... நீங்க ரொம்ப நல்லவருன்னு..........ஹீ ஹீ .......

கவுண்டமணி : டேய்.....ஸ்டாப்....நான் என்னிக்காவது உன் கிட்ட நல்லவன்னு சொல்லி இருக்கேனா??இல்ல இந்த நாட்டுல என்ன பத்தி யார்கிட்டயாவது என்ன பத்தி கேட்டு அவங்க நான் நல்லவன்னு உங்கிட்ட சொன்னாங்களா?? ஒனக்கு எப்படிடா தெரியும்.... இல்ல என்ன எப்பவாவது ஸ்கேல் வச்சு அளந்து பாத்தியா??

மவனே...பேசணும்னுறதுக்காக ஏதாவது ஏடாகூடமா பேசின, ஒன் வாய தொறந்து அணுகுண்டு வெச்சுடுவேன்...அப்புறம் நீ பேசுறதுக்கு வாயே இருக்காது...நானும் வந்ததுல இருந்து பாக்குறேன், நீ ஏதோ எல்லாருக்கு ISO சர்டிஃபிகேட் குடுக்கற மாதிரியே பேசுறியே... படுவா... நீ குடுக்கற சர்டிஃபிகேட்ட கொண்டு போய், பழைய பேப்பர் கடையில போட்டா, ஒரு பிடி பொட்டு கடல கூட தர மாட்டான்......இல்ல ஒரு கொட்ட எடுத்த பேரீச்சம்பழம் கூட தரமாட்டான்..... பேரீச்சம் பழத்த எடுத்துட்டு அந்த கொட்டய தான் தருவான்.......சர்டிஃபிகேட் குடுக்கற மூஞ்சிய பாரு... நல்லா கரி புடிச்ச சட்டியாட்டமா!!! அந்த தவள வாயன கூட்டிட்டு எங்கியாவது ஓடிபோயிடு....

சின்னி : ஐ அப்ஜெக்ட் இட் யுவர் ஆனர்....... ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...ரஜினிதான் சூப்பர் ஸ்டார்...... palpaanso ... pilpaansi ........

கவுண்டமணி : டேய், பாத்தியா, நாடு எவ்ளோ கெட்டு போயிடுச்சுன்னு .... இங்க பாரு, தவள எல்லாம் இங்கிலீஷ் பேச ஆரம்பிச்சுடுச்சு......

விவேக் : ஹல்லோ .... உங்களுக்கு இங்கிலீஷ் தெரியலேன்னா, சும்மா இருங்க... அந்த சின்னிய ஏன் இன்சல்ட் பண்றீங்க..... தம்பி சின்னி.... நீ நல்லா இங்கிலீஷ் பேசுப்பா.... அண்ணே, திஸ் இஸ் டூ மச்......

கவுண்டமணி : வாங்க, சின்ன கொலைவாணரே.... இல்ல சின்ன கலைவாணரே .... உங்களோட வீடு என்ன ஆக்ச்ஃபோர்டு யூனிவர்சிட்டி பக்கத்துலயா?? இல்ல, நீங்க கேம்பிரிட்ஜ் யூனிவர்சிடில படிச்சீங்களா?? மூணாம்புல 7 வருசம் படிச்ச நாயி நீ..........

செந்தில் : டென்சன் ஆகாதீங்கப்பா... அண்ணே...இப்படியே பேசிட்டு இருந்தா எப்படிண்ணே...வாங்க சாப்பிடலாம்... சோறு தீந்துட போகுது.....

கவுண்டமணி : இவன் இம்சை வேற.... டேய் டப்பா தலையா, நீ தின்னு தின்னுதான் இப்படி பூசணி மாதிரி வீங்கி இருக்கியே.... இன்னும் சாப்பாடு சாப்பாடுன்னு அலையறியேடா....நீ, இன்னும் பெருத்தா ஒன் ஒடம்பு தாங்குமாடா??? இல்ல ஒனக்கு சோறு போட்டு இந்த நாடு தாங்குமாடா?? மக்களே, நல்லா யோசிச்சு நீங்களே ஒரு முடிவு பண்ணுங்க.....இந்த பன்னிக்கு இன்னும் சோறு போடனுமான்னு......... டேய், இன்னிக்கு என்னடா, புதுசா, பேண்ட் எல்லாம் போட்டு இருக்க, நீ எப்பவும் கோமணம் தவிர எதுவும் கட்ட கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல......

செந்தில் : இல்லேண்ணே... இந்த ப்ரொக்ராம் முடிஞ்சதும், பேண்ட் அவுத்துடரேன்.....உள்ள, ரெடியா கோமணமிருக்குண்ணே..........

விவேக் : என் இனிய வில்லேஜ் மக்களே.... இந்த 21ஸ்ட் சென்சுரில கோமணம், ஆமணம்னு... நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களாடா..... வெளியே போய் ஒலகத்த பாருங்கடா.. அவன் அவன் இன்டெர்னெட்ங்கறான்.. செல் ஃபோன்ங்கறான்... எஸ்.எம்.எஸ்.ங்கறான்.... எம்.எம்.எஸ்.ங்கறான்.. லாப்டாப்ங்கறான்...

நீங்க என்னடான்னா, ஆடு, மாடு மேச்சுட்டு, குச்சி வச்சு பல்லு தேச்சுட்டு, ஓரமா போய் ஒக்காந்து சரக்கு அடிச்சுட்டு, கம்மா கரை, ஆத்தங்கரை எல்லாத்தயும் நாஸ்தி ப்ண்றேங்க... திருந்தவே மாட்டேன்னு சொல்லாம, கொஞ்சம் திருந்த ட்ரை பண்ணுங்கடா.........

வடிவேல் : அல்லோ, அல்லல்லோ.. எச்சூஸ் மி... நீங்க ரெம்ப பேசரீங்க சார்... பேசாம, நீங்க வாரத்துக்கு ஒரு எட்டு நாள் மௌன விரதம் இருக்கறது ஒங்களுக்கும், இந்த ஊருக்கும் நல்லது.. ஹேய்.... கிட்ட வராத மேன்...... அப்புறம் நான் ஊம்ம் பண்ணிடுவேன்.....

கவுண்டமணி : டேய் கருவாட்டுதலையா..... சீ ... நகருடா.... என்னடா அவன ஊஹ்ம் பண்ணிடுவேன்னு சொல்லிட்டு எங்கிட்ட வர்ற... தள்ளி போயிடு...படுவா...இல்ல மரியாதை கெட்டு போயிடும்.... டேய் நாரவாயா இது விஜயகாந்த் நடிச்ச மரியாதை இல்லடா......... வேறடா ..... ஐயோ இவனும் இவனோட இம்சையும்.......... ஒரே குஷ்டமப்பா.... ச்சே கஷ்டமப்பா .....

நீ இப்பத்தான் ஒரு உருப்படியான பேச்சு பேசி இருக்க...ஆனா, என்ன ஏதோ பெரிய சிந்தனை சிற்பி மாதிரி பேசர.... நீ என்ன ஜி.டி.நாயுடு பேரனா?? அது எப்படிடா, ஒண்ணாம்பு படிச்சுட்டு, இவ்ளோ தெளிவா பேசற... நீ ஆளு மட்டும்தான் மாடு மாதிரி வளந்து இருக்கேன்னு நெனச்சேன்.... ஆனா, பரவாயில்லடா, மூளை கூட கொஞ்சம் வளர்ந்திருக்கு... கீப் இட் அப்.......

வடிவேல் : ஏண்ணே... இப்ப அத எல்லாம் கெளர்ரீங்க........ நல்லது சொன்னா, சொல்றது யாருன்னு பாக்க கூடாதுண்ணே, சொல்ற விசயம் நல்லதான்னு மட்டும்தான் பாக்கணும்.

கவுண்டமணி : அட்ரா அட்ரா அட்ரா சக்க..... நேத்திக்கு வரைக்கும் மாட்டுக்கு மேல ஒக்காந்து சவாரி செஞ்சவன் எல்லாம் இன்னிக்கு ஹை கோர்ட் லாயர் மாதிரி பேசறான்.......சரி, நாடு கெட்டு போச்சு, வேற என்ன சொல்ல .... நீ சொல்லுடா.... டேய் ... நீங்க எல்லாரும் எது வேணும்னாலும் சொல்லுங்கடா... கேட்டுக்கறோம்... ஆனா, மவனே, ரொம்ப நாள் தாங்காதுடா, சொல்லிட்டேன்......

செந்தில் : அண்ணே, நீங்க அந்த பக்கம் திரும்பி பேசிட்டு இருந்தப்ப, இந்த சின்னி ஒங்கள பாத்து பழிப்பு காட்டுறாண்ணே.......

கவுண்டமணி : டேய் தவளவாயா, அந்த பக்கம் திரும்பினா பழிப்பு காட்டுவ, இந்த பக்கம் பாத்தா, பாபா ப்ளாக் ஷீப் பாட்டு பாடுவ.... மகனே, உன் டகால்டிய எல்லாம் எங்கிட்ட வச்சுக்காத... நான் பொல்லாதவன்.... மோசமானமாவன்... ஒழுங்கு மரியாதையா சொல்றேன்... 3 எண்றதுகுள்ள இங்க இருந்து ஓடிடு... இல்ல, வாயில தார் உருண்டைய திணிச்சுடுவேன்...... இல்ல இந்த கருவாயன் நடிக்கற படத்துல இருந்து அவன தூக்கிட்டு நீ நடி, அவன விட நீ எவ்வளவோ பெட்டர்.

வடிவேல் : சார், என் படத்துல யார தூக்கணும், யார நடிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும்.... சோ... யூ ப்ளீஸ் ஷட் அப்..............வேணும்னா, நீங்க சரின்னு சொன்னா, உங்கலுக்கு ஒரு சின்ன வேசம் என் படத்துல தரேன்...... எனக்கு பெரியப்பாவா நடிங்க... சின்னி பய எல்லாம் வேணாம்.... டேய் சின்னி, போய் பக்கத்து கடைல அண்ணன் பேர சொல்லிட்டு, குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தின்னுட்டு இந்த ஊர விட்டு ஓடிடுடா.....

கவுண்டமணி : டேய் சொறி தலையா.... நீ எனக்கு வேஷம் தர்றியாடா?? இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா எங்கேயோ இருக்க வேண்டியவண்டா... இந்த பட்டிக்காட்டுல வந்து மாட்டிக்கிட்டேன்.......நான், இளைச்சா, நாய் வந்து நக்கி பார்க்கும்னு எனக்கு அன்னிக்கே ஒரு ஜோசியக்காரன் சொன்னான்... அத, நான் அன்னிக்கு நம்பல, ஆனா, மவனே, இன்னிக்கு நம்பறேண்டா...........நீ கிட்ட வந்து என்ன நக்காதடா .......

செந்தில் : அண்ணே, சீக்கிரம் போய் சைக்கிள் கடைய தொறக்கணும்னே.... முழு நாளு லீவு விட்டா அண்ணி கோவிச்சுக்கும்ணே.... வேலைய முடிச்சு சீக்கிரம் வீட்டுக்கு வந்தா, ஏதோ பொரி உருண்டை எல்லாம் தரேன்னு சொன்னாங்கண்ணே........

கவுண்டமணி : டேய் நசுங்கி போன தார் டப்பா தலையா..... நானே, ரொம்ப நாள் கழிச்சு கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கேன்... அது ஒனக்கு பிடிக்கலியாடா... ஏண்டா, அந்த அண்ணி, நொண்ணின்னு சொல்லி அந்த பன்னிய ஞாபகப்படுத்தற ......... நானே அந்த வீங்கி போனவள கொஞ்ச நேரம் மறந்து இருந்தேன்...

இந்த தவள வாயன், கருவாயன், ஆக்ஸ்ஃபார்ட் ப்ரொஃபெஸ்ஸர், எல்.கே.ஜி பாப்பா இதுங்களோட வெளையாடிகிட்டு இருந்தேன்.... போடா, இனிமே, அண்ணி அது இதுன்னு சொல்லி என்ன பயமுறுத்துன, படுவா, காதுல கரப்பான் பூச்சிய பிடிச்சு விட்டுடுவேன்.

வடிவேல் : ஹல்லோ.... ரெம்ம நேரமா இந்த ஆளு, வெட்டி பேச்சு பேசிட்டு இருக்காறு...... இந்த ஆளுக்குத்தான் வேலை இல்ல.... நம்ம போயி, நம்ம வேலைய பாப்போம்... அப்ப நான் கெளம்பவா?? சூட்டிங்குக்கு டயம் ஆச்சு...... ஷங்கர், கமல் எல்லாம் வெயிட் பண்றாங்க.......காலைல ஏ.வி.எம்.ல சூட்டிங்..... மும்தாஜோட இரு கும்மாங்குத்து பாட்டு, நைட்டு.........

கவுண்டமணி : நைட்டு எங்கடா, இண்டோர் ஷூட்டிங்? தம்பி.... போதும்டா.... நீ இப்போ எல்லாம் நெறைய நைட் ஷோ பாக்க போறன்னு பசங்க சொன்னாங்க...... வேணாம்டா ராசா.... என்ன பாரு.... நெறைய நைட் ஷோ பாத்துட்டு இப்போ எப்படி இருக்கேன்னு.......

என்னவோ, நீ ஒருத்தன் நடிச்சுத்தான் தமிழ் படத்துக்கு ஆஸ்கார் அவார்ட் வாங்கி குடுக்கற மாதிரி பேசற........நாங்களும் நடிச்சு இருக்கோம் ராசா..... நீ சொன்னியே ஷங்கரு... அவரோட மொதல் படத்துல நடிச்சதே நானும், இந்த வெந்தும், வேகாத மண்டையனும்தான்.....

நீயும் பழச மறந்துடாத... ராஜ்கிரண் படத்துல நான் ஒனக்கு கொடுத்தது எல்லாம் ஞாபகம் இருக்கா?? இல்ல, இப்ப ஏதாவது ஞாபகப்படுத்தணுமா??

சின்னி : ஆஹ்ம்ம்.... நானும் கெளம்பறேன்..... ரஜினி எனக்காக வெயிட் பண்றாரு......"எந்திரன்" படத்தோட கிளைமாக்ஸ் காட்சி எனக்காக வெயிட்டிங்.......இப்போ தான் ஷங்கர் ஃபோன் பண்ணினாரு......ஒரு கில்பான்ஸி, இந்த பல்பான்ஸியோட, ஜில்பான்ஸி பண்ண கூப்பிடுது......

விவேக் : ஓகே.... இனிமே உங்களோட பேசி பிரயோஜனம் இல்ல... தேஜாஸ்ரீயும், சாயாசிங்கும் எனக்காக வெயிட்டிங்..... சூப்பர் டூயட் பாக்கி இருக்கு...படம் பேரு சொல்லி அடிப்பேன்...இது முடிஞ்சா, ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் தமிழ்ல பண்றேன்..... வர்டா..........

கவுண்டமணி : டேய், நானும் பாக்கறேன்... அவன் என்னடான்னா சொல்லி அடிப்பேன்றான்...... யாரடா சொல்லி அடிப்ப... நான் ஒன்ன சொல்லாமயே அடிப்பேண்டான்னு சொன்னா, அது அவனோட படம் பேருங்கறான்... ஏதோ என்ன பழி வாங்கற மாதிரியே படத்துக்கு பேரு வச்சு இருக்கான்... இந்த தவள வாயன், ஜில்பான்ஸி, பல்பான்ஸிங்கறான்....எந்திரன் படத்துல ரஜினியோட கிளைமாக்ஸ் அது இதுன்னு சொறியறான்.......அந்த கருவாயன் என்னடான்னா, மும்தாஜ், கும்தாஜ்ங்க்றான்...... கில்மா, ஜல்ஸாங்கறான்..... இது பத்தாம வாரத்துக்கு 4-5 நாளு நைட்டு ஷூட்டிங் வேற பாக்கறான்.........

அப்ப, நான் இங்க என்ன இளிச்சவாயனா?? வரேண்டா, கூடிய சீக்கிரம் வரேன்.. டிரிபிள் ஆக்ஷன் ரோல் ஒண்ணு ரெடி பண்ணிட்டு இருக்கேன்... ஒரு போலீஸ் ஆஃபீசர், ஒரு காலேஜ் ஸ்டூடன்ட், அப்புறம் ஒரு நாட்டாமை கேரக்டர், அந்த படம் மட்டும் வரட்டும்டா, மவனே, இந்த ஆல் இந்தியா சினி ஃபீல்டே என் கையிலடா......... கவுண்டனின் சவுண்ட் அதிகமாவதை கண்டு, அனைவரும் திகிலடைந்து, அங்கங்கு கிடைக்கும் வழியாக எஸ்கேப் ஆகிறார்கள்........