Friday, July 31, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-6)





பண்டிகைகள்......

இந்த மந்திர சொல்லை கேட்டால், குழந்தைகள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும் (புது துணியும், விதவிதமான தின்பண்டங்களும் கிடைக்குமே!!). பெரியவர்களோ, அந்த சிறியவர்கள் மன மகிழ்ச்சியை கண்டு பேரின்பம் கொள்வர்....

உலகில் உள்ள நாம் அனைவரும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ், ஹோலி என்று ஏதாவதொரு பண்டிகையை கொண்டாடி கொண்டேதான் இருக்கிறோம்.... அதன் மூலம், நம் மன இறுக்கத்தை குறைத்து கொள்ளவும் முயற்சித்து கொண்டிருக்கிறோம்.....

சினிமா பிரியர்களுக்கு தீபாவளி, பொங்கல், வருட பிறப்பு உள்ளிட்டவை மேலும் ஸ்பெஷல்..... ஏனெனில், அன்றுதான் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் நடித்த படம் ரிலீஸ் ஆகும்.....

அதுவும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு, பண்டிகையின் போது, ரிலீசாகும் ரஜினி படமென்றால், இரட்டை இனிப்பு சாப்பிடும் மனநிலை தான்.... பின்னே, கரும்பு தின்ன கூலி ஆச்சே.... புது துணி, தலைவரோட புது படம் ....... வேற என்ன வேண்டும்? கலக்கற சந்த்ரூஸ்.....

நான் கூட ராணுவ வீரன் (1981 தீபாவளி), பாயும் புலி (1983 பொங்கல்), தாய் வீடு (1983 தமிழ் வருட பிறப்பு), தங்க மகன் (1983 தீபாவளி) போன்ற படங்களை முதல் நாள், முதல் காட்சி ரசித்துள்ளேன்....அப்போதெல்லாம் பண்டிகையை ஒட்டி, என் வீடு தேடி வரும் உறவினர்கள் முதல் நாள், முதல் காட்சி (11.30௦ a.m.) முடிந்து நான் மதிய உணவிற்கு வீடு திரும்பும்போது என்னை அதிசயமாய் பார்த்தது நினைவுக்கு வருகிறது....

சரி....இந்த பகுதியில் நாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து பண்டிகை காலங்களில் வெளியான படங்களை பற்றி பார்ப்போம்.....

குடியரசு தினம் :

1. 26.01.1980 - பில்லா
2. 26.01.1981 - தீ

பொங்கல் :

1. 14.01.1982 - போக்கிரி ராஜா
2. 14.01.1983 - பாயும் புலி
3. 14.01.1984 - நான் மகான் அல்ல
4. 14.01.1990 - பணக்காரன்
5. 14.01.1991 - தர்மதுரை
6. 14.01.1992 - மன்னன்
7. 12.01.1995 - பாட்ஷா (பொங்கலுக்கு இரண்டு தினங்கள் முன்பே ரிலீஸ் ஆனது).

தமிழ் வருட பிறப்பு :

1. 14.04.1979 - நினைத்தாலே இனிக்கும்
2. 14.04.1982 - ரங்கா
3. 14.04.1983 - தாய் வீடு
4. 12.04.1985 - நான் சிகப்பு மனிதன்
5. 11.04.1986 - விடுதலை
6. 13.04.1988 - குரு சிஷ்யன்
7. 14.04.1994 - வீரா
8. 10.04.1997 - அருணாசலம்
9. 10.04.1999 - படையப்பா
10.14.04.2005 - சந்திரமுகி

மே தினம் :

1. 01.05.1981 - தில்லு முல்லு

சுதந்திர தினம் :

1. 15.08.1978 - முள்ளும் மலரும்
2 15.08.1980 - ஜானி
3. 15.08.1981 - நெற்றிக்கண்
4. 15.08.2002 - பாபா

தீபாவளி :

1. 26.10.1981 - ராணுவ வீரன்
2. 04.11.1983 - தங்க மகன்
3. 22.10.1984 - நல்லவனுக்கு நல்லவன்
4. 11.11.1985 - படிக்காதவன்
5. 01.11.1986 - மாவீரன்
6. 21.10.1987 - மனிதன்
7. 28.10.1989 - மாப்பிள்ளை
8. 05.11.1991 - தளபதி
9. 25.10.1992 - பாண்டியன்
10.23.10.1995 - முத்து

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு படம் கூட அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் ஆனதில்லை என்பது ஒரு கூடுதல் செய்தி.....
ஏதாவது தகவல்கள் விட்டு போயிருந்தால், தெரியப்படுத்தவும்.....

(இன்னும் வரும் ..........)

Monday, July 27, 2009

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - (பகுதி-5)


ரஜினியின் "தசாவதாரம்"

நாம் அனைவரும் கமல்ஹாசன் நடித்து 2008-ம் ஆண்டு வெளிவந்த "தசாவதாரம்" பற்றி அறிவோம். இது என்ன? ரஜினிகாந்த் அவர்களின் தசாவதாரம்? மேலே படியுங்கள்.....

1995-ம் ஆண்டு வெளிவந்தது தமிழகத்தையே அலற வைத்த ஒரு மாபெரும் வெற்றிப்படம் தான் "பாட்ஷா" என்பதை யாரும் மறுக்க முடியாது.......

அந்த படத்தில் இசையமைப்பாளர் "தேனிசை தென்றல்" தேவா அவர்களின் இசை படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்ததை யாரும் மறுக்கலாகாது.... அதுவும் தேவாவின் ரீ-ரிக்கார்டிங் மிகவும் பேசப்பட்டது.....

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அறிமுக பாடலான "நான் ஆட்டோக்காரன்", அட்டகாசமான டூயட் பாடல்கள் "அழகு நீ நடந்தால் நடை அழகு", "தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்", சித்தர்களின் சிந்தனைகளை உள்ளடக்கிய "ரா ரா ரா ராமையா" ஆகிய பாடல்கள் பட்டையை கிளப்பின.

"பாட்ஷா" படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் அட்டகாசமான யோசனையில் உருவானதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியை பல்வேறு கெட்-அப்புகளில் நடிக்க வைப்பது.... ஆயினும், படத்தின் சஸ்பென்ஸ் மற்றும் சுவை குன்றி விடுமோ என்ற தயக்கத்தில், அந்த யோசனையை படத்தில், ஒரே பாடலில் வைத்து பட்டையை கிளப்பி இருப்பார்....

அந்த பாடல்தான் கதையின் நாயகனை (ரஜினியை), நாயகி (நக்மா) வர்ணிக்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "அழகு... நீ நடந்தால் நடை அழகு" என்று தொடங்கும் பாடல்.... இந்த பாடலில், சுரேஷ் கிருஷ்ணா தன் டைரக்ஷன் உத்தியால், சூப்பர் ஸ்டார் ரஜினியை 10 அவதாரமாக திரையில் காட்டி இருப்பார்..... அந்த 10 அவதாரங்கள்.....

1. ஹோட்டல் பேரர்
2. ஹோட்டல் கேட் கீப்பர்
3. ஆபீஸ் மேனேஜர்
4. ஜிம் இன்ஸ்ட்ரக்டர்
5. நாதஸ்வர வித்வான்
6. ட்ராபிக் போலீஸ்
7. புரோகிதர்
8. பஸ் கண்டக்டர்
9. கேங்க்ஸ்டர் / ரவுடி
10.மாணிக்கம்


இதை படிக்கும் போது, நீங்கள் அந்த பாடலை ஒரு முறை மனதிலேயே ரீவைன்ட் செய்து பாருங்கள்...... அட.... ஆமாம் என்று சொல்ல வைக்கும்.......

ஒரே பாடலில் (10 அவதாரங்கள்)...."தசாவதாரம்".... சூப்பர் ஸ்டார் ரஜினியை நெனச்சு பார்த்தாலே சும்மா அதிருதுல்ல......
(இன்னும் சுவாரசிய தகவல்கள் வரும்.........)

Wednesday, July 22, 2009

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - பகுதி - 4

இந்த பகுதியில், நாம் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ஹிந்தி திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.

ரஜினிகாந்த் அவர்கள், தமிழில் விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற "சட்டம் ஒரு இருட்டறை" என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த போது, கதாநாயகனாக அறிமுகமானார். மற்ற படங்களை பற்றியும் பார்ப்போம்.

1 அந்தா கானூன் (இதில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து இருந்தார்.... அது இந்த படத்தின் பெருவெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை மறுப்பதற்கில்லை....). ரஜினியின் ஜோடி ரீனா ராய்.

2. ஜீத் ஹமாரி - தமிழில் "தாய் வீடு" என்ற பெயரில் வந்த படத்தின் ஹிந்தி பதிப்புதான் இந்த படம். தமிழில் ஜெய்சங்கர், ஹிந்தியில் ராகேஷ் ரோஷன் ரஜினியுடன் நடித்து இருந்தனர். இரு மொழிகளிலும் நாயகியாக அனிதா ராஜ் நடித்து இருந்தார்.

3. மேரி அதாலத் - தெலுங்கு படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த படம். இதில் ஜோடியாக ஜீனத் அமன் நடித்து இருந்தார். ரஜினியின் தங்கையாக "கோமல்" என்பவர் நடித்து இருந்தார். இவர், பின்னாளில், "ரூபிணி" என்ற பெயரில் தமிழில் நடிக்க ஆரம்பித்து, ரஜினியுடன் மனிதன், உழைப்பாளி போன்ற படங்களில் நடித்தார்.

4.கங்குவா - தமிழில் வெளிவந்தது வெற்றி பெற்ற "மலையூர் மம்பட்டியான்" படத்தின் ஹிந்தி படிப்பு இது. ரஜினியின் நண்பரும், கன்னட பட காமெடி நடிகரும், தயாரிப்பாளருமான துவாரகீஷ் தயாரித்த இந்த படத்தில், தமிழில் ஜெயசங்கர் நடித்த வேடத்தில் ஹிந்தியில் சுரேஷ் ஒபேராய் (தற்போதைய இளம் நாயகன் விவேக் ஒபேராயின் தந்தை), சங்கிலி முருகன் வேடத்தில் காதர் கான், ஜெயமாலினி நடித்த வேடத்தில் சரிகா நடித்து இருந்தனர்...... ஜூடோ ரத்னம் அவர்களின் சண்டை காட்சிகள் பெரிதும் பேசப்பட்ட படம் இது...

5.ஜான் ஜானி ஜனார்தன் - தமிழில் ரஜினி நடித்து பெருவெற்றி பெற்ற "மூன்று முகம்" படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த படம்... ஹிந்தியிலும் மூன்று வேடங்களில் ரஜினி கலக்கி இருந்த படம் இது... அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் பெயர் ஹிந்தியில் ஜான் அமெண்டிஸ் என்று மாற்றப்பட்டது.

6.மகாகுரு - தெலுங்கு படத்தின் ரீமேக் இது. ஜோடியாக மீனாக்ஷி சேஷாத்ரியும், மற்றும் ராகேஷ் ரோஷன் நடித்த படம்.

7.வபாதார் - தெலுங்கு படத்தின் ரீமேக் இது.... தாசரி நாராயணராவ் படம். ஜோடியாக பத்மினி கோலாபூரி நடித்து இருந்தார்.

8.பேவபாய் - ரஜினியுடன் ராஜேஷ் கண்ணா நடித்து இருந்தார். இதில் பப்பி லகிரி இசையில் இடம் பெற்றிருந்த ஒரு சூப்பர் ஹிட் பாடலை சங்கர் கணேஷ் அப்படியே சுட்டு ஒரு முரளி நடித்த படத்தில் உபயோகப்படுத்தி இருந்தார் (தமிழில் இப்படி தொடங்கும் - நேற்றைய வரையில் பதினாறு, இன்று முதல் நீ பதினேழு...ஸ்விங் ஸ்விங் சிக்ஸ்டீன், நோ.. ஷீ ஈஸ் செவன்டீன்...). அடுத்த முறை எங்கேனும் இந்த பாடலை கேட்டால், அது கண்டிப்பாக ஷங்கர் கணேஷ் இசையில் வந்த பாடல் அல்ல என்று உணர்வீர்கள்.

9.பகவான் தாதா - ரஜினி, ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி நடித்த படம்... ஹ்ரித்திக் ரோஷன் இந்த படத்தில், ரஜினியின் மகனாக நடித்து இருப்பார்.

10.அஸ்லி நகலி - ரஜினி, சத்ருகன் சின்ஹா, ராதிகா (சித்தி, அரசி தாங்கோ... ) நடித்த படம்......

11.தோஸ்தி துஷ்மணி - ரஜினிகாந்த், ரிஷி கபூர், ஜிதேந்திரா சேர்ந்து நடித்த படம்.....

12.இன்ஸாப் கோன் கரேகா - ரஜினிகாந்த், தர்மேந்திரா, ஜெயபிரதா, மாதவி நடித்த படம்.

13.உத்தர் தக்ஷின் - ரஜினிகாந்த், ஜாக்கி ஷராப், மாதுரி டிக்ஷித் இணைந்து நடித்த படம்.

14.தமாச்சா - ரஜினிகாந்த், ஜிதேந்திரா, பானுப்ரியா, அம்ரிதா சிங் நடித்த படம். ரஜினியின் ஜோடியாக அம்ரிதா சிங் நடித்து இருப்பார்.

15.ப்ரஷ்டாசார் - கவுரவ வேடத்தில் ரஜினி நடித்த படம்..... உடன் நடித்தவர்கள், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ரேகா.

16.சால்பாஸ் - ஸ்ரீதேவி இருவேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரஜினி மற்றும் சன்னி தியோல் நடித்த படம். லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால் இசை பெரிதும் பேசப்பட்ட படம்.

17.ஹம் - மிக பெரிய ஸ்டார்கேஸ்ட் கொண்ட படம் இது. அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கோவிந்தா, கிமி காதகர், தீபா ஸஹி நடித்தது. ரஜினியின் ஜோடியாக தீபா ஸஹி நடித்தார்.

18.பாரிஷ்டே - ரஜினிகாந்த், தர்மேந்திரா, வினோத் கண்ணா நடித்தது. இதில், ரஜினியின் சிறிய வேடம், வட இந்திய பத்திரிக்கைகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.... கையில்இந்திய தேசிய கொடியுடன், குண்டடி பட்டு இருக்கும் ரஜினியின் போஸ் மிக பிரபலம்..... ரஜினிக்கு இதில் கவுரவ வேடம்....

19.கூன் கா கர்ஸ் - ரஜினிகாந்த், வினோத் கண்ணா, சஞ்சய் தத் நடித்தது. இந்த படம் "அரசன்" என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது.

20.பூல் பனே அங்காரே - ரஜினி, ரேகா இனைந்து நடித்தது. சரண்ராஜ் ரஜினியை கொன்றுவிட, அவர்களை ரேகா பழிவாங்குவது போன்ற கதை அமைப்பை கொண்டது.

21.தியாகி - தமிழில் ரஜினி நடித்து பெரிய வெற்றி அடைந்த "தர்மதுரை" படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த "தியாகி" படம். தமிழில் கவுதமி நடித்த வேடத்தில் ஹிந்தியில் ஜெயப்ரதா நடித்து இருந்தார்.

22.இன்சானியாத் கா தேவதா - ரஜினிகாந்த், வினோத் கண்ணா நடித்தது. (குரு சிஷ்யன் படத்தின் ரஜினி, பிரபு, மனோரமா காமெடி இதில் இடம் பெற்றிருந்தது..... மனோரமா வீட்டிற்கு பிரபு, ரஜினி சென்று செய்யும் காமெடி நினைவிருக்கும்...... ரஜினி, பிரபுவை ஒரு ABC ஆபீசர் என்று மனோரமாவிடம் அறிமுகப்படுத்துவார். பின் வரும் காட்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருக்கும்.....).

23.டாக்கு ஹசீனா - ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படம். ஹீரோயினாக நடித்தவர் ஜீனத் அமன்.

24. கிரப்தார் - ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் இணைந்து நடித்த படம் இது.
25.கைர் கானூனி - ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து இருப்பார். ரஜினியின் ஜோடியாக நடித்தவர் கிமி காத்கர். கோவிந்தா உடன் நடித்து இருந்தார்.

26.ஆதங் ஹி ஆதங் - ரஜினி, அமீர் கான் இணைந்து நடித்த படம். ரஜினியின் தம்பியாக அமீர் கான் நடித்து இருப்பார். படத்தின் டைட்டிலில் முதலில் ரஜினியின் பெயர்தான் வரும்.

27.புலாந்தி - ரஜினிகாந்த், அனில் கபூர் இணைந்து நடித்த படம்..... தமிழில் பெரிய வெற்றி பெற்ற "நாட்டாமை" படம், தெலுங்கில் "பெத்தராயுடு" என்ற பெயரில் வெளிவந்தது. தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் தெலுங்கில் ரஜினி நடித்து இருந்தார்.
பின் அந்த படத்தை ஹிந்தியில் தயாரித்தனர். ஹிந்தியிலும் அதே வேடத்தை ரஜினி ஏற்று நடித்தார்.
(இன்னும் வரும்.......)

Thursday, July 9, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல (பகுதி - 3)


தந்தை, மகள் மற்றும் மகன் - ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்


ஜெமினி கணேசன் : "அலாவுதீனும் அற்புத விளக்கும்" படத்தில் நடித்து இருப்பார்.
ரேகா : "ப்ரஷ்டாசார்" மற்றும் "பூல் பனே அங்காரே" படங்களில் இணைந்து நடித்து இருப்பார்.


தர்மேந்திரா - இன்ஸாப் கோன் கரேகா மற்றும் பாரிஷ்டே (ஹிந்தி திரைப்படம்).
ஹேமமாலினி - அந்தா கானூன் (ஹிந்தி திரைப்படம்). ரஜினியின் சகோதரியாக நடித்து இருப்பார்.
சன்னி தியோல் - சால்பாஸ் (ஹிந்தி திரைப்படம்)


விஜயகுமார் - ஆறு புஷ்பங்கள், காளி, தாய்வீடு, வணக்கத்துக்குரிய காதலியே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள்.
மஞ்சுளா - சங்கர், சலீம், சைமன் படத்தில் நடித்து இருப்பார்.
ப்ரீதா - படையப்பா படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பார்.


முத்துராமன் : "போக்கிரி ராஜா" படத்தில் வில்லனாக நடித்து இருப்பார்.
கார்த்திக் : "நல்லவனுக்கு நல்லவன்" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்.


சிவாஜி - பல படங்கள்.
ராம்குமார் - சந்திரமுகி (ஒரே ஒரு காட்சி).
பிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி

ஒய்.ஜி.பார்த்தசாரதி - "பாயும் புலி"
ஒய்.ஜி.மகேந்திரன் - "பாயும் புலி", துடிக்கும் கரங்கள், சிவப்பு சூரியன், நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட படங்கள்.

வி.கே.ராமசாமி - நல்லவனுக்கு நல்லவன், வேலைக்காரன், அருணாசலம் உள்ளிட்ட பல படங்கள்.
வி.கே.ஆர்.ரகு - பெரிய அளவில் பிரபலமடையாத இவர் ரஜினியுடன் நடித்த படம் நல்லவனுக்கு நல்லவன்...

ராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் "ஜீத் ஹமாரி" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் - ராகேஷ் ரோஷனின் மகனான இவர், ரஜினியின் மகனாக "பகவான் தாதா" படத்தில் நடித்து இருந்தார்.


ரஜினியுடன் ஜோடியாகவும் பிறகு வேறு வேடங்களிலும் நடித்தவர்கள் :


சுஜாதா : ஜோடியாக "அவர்கள்" படத்திலும், தாயாக "கொடி பறக்குது" மற்றும் "பாபா" படங்களிலும் நடித்தார்.
ஸ்ரீவித்யா : ஜோடியாக "அபூர்வ ராகங்கள்" படத்திலும், சகோதரி வேடத்தில் "மனிதன்" படத்திலும், மாமியாராக "மாப்பிள்ளை" படத்திலும், தாயாராக "தளபதி" படத்திலும் நடித்து இருப்பார்.


ரஜினியுடன் வெகு நாட்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தவர்கள் :


ரவிக்குமார் : "அவர்கள்" படம் (1977) மற்றும் "சிவாஜி தி பாஸ் (2007).
ராஜப்பா : "நினைத்தாலே இனிக்கும்" (1979) மற்றும் "படையப்பா" (1999)
சுமன் - "தீ" (1981) படத்தில் ரஜினியின் சகோதரராக நடித்து இருப்பார். "சிவாஜி தி பாஸ்" (2007), வில்லனாக நடித்து இருப்பார்.


ஒரே குடும்பத்தின் இருவேறு உறவினர்கள் : மாமனார் மற்றும் மருமகள்.


அமிதாப் பச்சன் : "அந்தா கானூன்", "ஹம்", "கிரப்தார்" உள்ளிட்ட ஹிந்தி படங்கள்.
ஐஸ்வர்யா ராய் : "எந்திரன்" படத்தில் ரஜினியின் இணையாக நடித்து கொண்டுள்ளார்.


ரஜினி ஹிந்தி படங்களில் நடித்த போது (தற்போது சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை), யார் யாருடன் நடித்தார் என்று பார்ப்போம்.


அமிதாப் பச்சன் : "அந்தா கானூன்", "ஹம்" மற்றும் "கிரப்தார்"
தர்மேந்திரா : "இன்ஸாப் கோன் கரேகா" மற்றும் "பாரிஷ்டே"
சஞ்சய் தத் : "கூன் கா கர்ஸ்"
ரிஷி கபூர் : "தோஸ்தி துஷ்மணி"
சசி கபூர் : "கெயர் கானூனி"
அமீர் கான் : "ஆதங் ஹாய் ஆதங்" (ஆமிர்கான் ரஜினியின் தம்பியாக நடித்து இருப்பார்). படத்தின் டைட்டிலில் கூட முதலில் ரஜினியின் பெயர்தான் வரும்.
வினோத் கண்ணா : "கூன் கா கர்ஸ்", இன்சானியாத் கா தேவதா" மற்றும் "பாரிஷ்டே"
சத்ருகன் சின்ஹா : "அஸ்லி நக்லி"
ராஜேஷ் கண்ணா :"பேவபாய்"
சன்னி தியோல் : "சால்பாஸ்"
கோவிந்தா : "ஹம்" மற்றும் "கெயர் கானூனி"
மிதுன் சக்கரவர்த்தி : "பிரஸ்டாசார்"
ஜாக்கி ஷராப் : "உத்தர் தக்ஷின்"
ஜிதேந்திரா : "தமாச்சா" மற்றும் "தோஸ்தி துஷ்மணி"
ராகேஷ் ரோஷன் : "மகாகுரு", ஜீத் ஹமாரி" மற்றும் "பகவான் தாதா"
அனில் கபூர் : "புலாந்தி"


(இன்னும் வரும் ..............)

"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" (பகுதி 2)













(சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் .....தொடர்ச்சி.... )
இளையராஜா - ரஜினி படத்திற்கு பாடல் எழுதி உள்ளார், பின்னணி பாடி உள்ளார், 65-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
கங்கை அமரன் - ரஜினி படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.

சரிதா - தப்பு தாளங்கள், புதுக்கவிதை உள்ளிட்ட படங்கள்.
விஜி - தில்லு முல்லு படத்தில், ரஜினியின் தங்கையாக நடித்து இருப்பார்.

ஜெயசுதா - பாண்டியன் படத்தில் ரஜினியின் சகோதரியாக நடித்து இருப்பார்.
சுபாஷினி - நினைத்தாலே இனிக்கும், ஜானி உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.

பாட்டி மற்றும் பேத்தி

செளகார் ஜானகி - "தில்லு முல்லு" (இவரின் பிறந்த நாளும், சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12 தான்).
வைஷ்ணவி - " தர்மதுரை" படத்தில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
அம்மா, பெண்

லக்ஷ்மி - நெற்றிக்கண், ஸ்ரீ ராகவேந்திரர், பொல்லாதவன், படையப்பா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.
ஐஸ்வர்யா - ரஜினியுடன் "எஜமான்" படத்தில் நடித்து இருப்பார்.

ரஜினி நடித்த படங்களை டைரக்ட் செய்த சகோதரர்கள் (டைரக்டர்கள் ஸ்ரீதர் மற்றும் சி.வி.ராஜேந்திரன்)

ஸ்ரீதர் : இளமை ஊஞ்சலாடுகிறது, துடிக்கும் கரங்கள்
சி.வி.ராஜேந்திரன் : கலாட்டா சம்சாரா (கன்னடம்), கர்ஜனை

கணவன் மற்றும் மனைவி - ரஜினியுடன் படங்களில் பணிபுரிந்தவர்கள்

கமலஹாசன் - பல படங்கள்
சரிகா - கங்குவா (மலையூர் மம்பட்டியான் தமிழ் படத்தின் ஹிந்தி பதிப்பு, தமிழில் ஜெயமாலினி நடித்த வேடத்தை, இந்த ஹிந்தி பதிப்பில் ஏற்று நடித்தார்.)

மனோஜ் கே.ஜெயன் - தளபதி படத்தில் நடித்து இருப்பார்.
ஊர்வசி - ஜீவன போராட்டம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருப்பார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி - "நான் சிகப்பு மனிதன்" உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
மணிமாலா - "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.

சிவச்சந்திரன் - சிவப்பு சூரியன், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.
லட்சுமி - நெற்றிக்கண், ஸ்ரீ ராகவேந்திரர், பொல்லாதவன், படையப்பா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்து இருப்பார்.

சுந்தர் சி. - அருணாசலம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரஜினியுடன் நடித்து இருப்பார். இந்த படத்தை இயக்கியவரும் அவரே.
குஷ்பு - தர்மத்தின் தலைவன், நாட்டுக்கொரு நல்லவன், மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பார்.

போஸ் வெங்கட் - 'சிவாஜி" படத்தில் வில்லன் சுமனின் கையாளாக நடித்து இருப்பார்.
சோனியா - அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், சிறுமியாக நடித்து இருப்பார்.

விஜயகுமார் - ஆறு புஷ்பங்கள், காளி, தாய்வீடு, வணக்கத்துக்குரிய காதலியே, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்கள்.
மஞ்சுளா - சங்கர் சலீம் சைமன் உள்ளிட்ட சில படங்கள்.
அம்பரீஷ் - "ப்ரியா" படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து உள்ளார். (அம்பரீஷ் பற்றி ஒரு உபரி செய்தி..... மு.க.முத்து நடித்த "பூக்காரி" என்ற படத்தில் தமிழ் படங்களில் அறிமுகமாகி இருப்பார். இதில், அம்பரீஷுக்கு வில்லன் வேடம். தொடர்ந்து வெளி வந்த மற்றொரு மு.க.முத்து நடித்த படமான "சமையல்காரன்" படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து இருப்பார். அப்போது அவர் பெயர் "அமர்நாத்". பின்னாளிலே "அம்பரீஷ்" என்ற பெயர் மாற்றத்துடன் நடிக்க ஆரம்பிக்க ஆரம்பித்தார்).
சுமலதா - "கழுகு", "முரட்டுகாளை" உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்து உள்ளார்.

பாக்யராஜ் : "நான் சிகப்பு மனிதன்" மற்றும் "அன்புள்ள ரஜினிகாந்த்"
பிரவீணா : "பில்லா"
பூர்ணிமா ஜெயராம் : "தங்கமகன்" (ரஜினியின் ஜோடியாக நடித்து இருந்தார்).

மணிரத்னம் - தளபதி படத்தை டைரக்ட் செய்தார்.
சுஹாசினி - தாய்வீடு (ரஜினியின் தங்கையாக), மனதில் உறுதி வேண்டும் (இதில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருப்பார்), தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து இருப்பார்.

ஐ.வி.சசி - காளி, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்களை டைரக்ட் செய்தவர்.
சீமா - காளி, எல்லாம் உன் கைராசி உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்தவர்.
பிரகாஷ் ராஜ் - "படையப்பா" படத்தில் ரஜினியுடன் நடித்து இருந்தார்.
லலிதகுமாரி - மனதில் உறுதி வேண்டும் (நேரடி தொடர்பு காட்சிகள் இல்லை)
(தொடரும் ..........)

Tuesday, July 7, 2009

"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" (பகுதி 1)

சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி எழுதாத "வலைஞர்கள்" இல்லை என்று சொல்லலாம். அப்படி அவரைப்பற்றி அனைவரும் ஏதாவது ஒரு கால கட்டத்தில்
ஏதாவதொரு விஷயத்தை சொல்லி இருப்பார்கள்.

இங்கே, நான் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி தெரிந்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள
ஆசைப்படுகிறேன். இதுவரை என்னுடைய எடக்குமடக்கு மற்றும் ஜோக்கிரி வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டாரை பற்றி மிக குறைவாகவே எழுதி உள்ளேன். அவருக்காக நான் எழுதிய "பிறந்த நாள் வாழ்த்து" இதோ இங்கே :

"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" என்றதுமே நம் மனத்திரையில் இந்த பாயும் புலி. சுறுசுறுப்பு, ஸ்டைல், உத்வேகம் என்று எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் விவரிக்க முடியாத ஆளுமை நிறைந்த காந்தம் இந்த ரஜினிகாந்த்.
சிறியோர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்கும் திரை உலகின் மன்னன். இவர் பற்றி அரிய தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கில படங்கள் (ஒரு ஆங்கில படம்) உள்ளிட்ட 7 மொழி படங்களில் நடித்துள்ளார்.
இது மிகவும் பழைய செய்தி...... ஜப்பானில் ரஜினி அவர்கள் நடித்த "முத்து" படம் 200௦௦ நாட்களுக்கு மேலாக பெரிய வசூலுடன் ஓடியதும், அதை தொடர்ந்து "சந்திரமுகி" படம் சக்கை போடு போட்டதும் கூட அனைவரும் அறிந்ததே....
பின்வரும் விஷயம் கூட பழைய செய்திதான்... ஆனால், இவ்வளவு உன்னிப்பாக கவனித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. ரஜினி அவர்கள் எத்தனையோ நடிகர்கள், நடிகைகளுடன் நடித்து உள்ளார். ஹிந்தியில் அவர் நடித்த சமயத்தில், ஷாருக் கான் தவிர அனைவரும் ரஜினியுடன் நடித்து உள்ளனர்.
அதே போல், தமிழிலும், பெரிய ஹீரோயின்கள் அனைவரும் அவருடன் நடித்து உள்ளனர் (சுகன்யா, சிம்ரன் போன்ற சிலரை தவிர). இதை சற்று விரிவாக பார்ப்போம். சொல்லபோகும் விஷயம் யாருக்கும் தெரியாததல்ல.... புதிதும் அல்ல.........

ஒரே குடும்பத்தை சேர்ந்த எம்.ஆர்.ராதா (நான் போட்ட சவால் படத்திலும்), ராதாரவி (உழைப்பாளி, அண்ணாமலை உள்ளிட்ட படங்களிலும்), ராதிகா (போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், ஊர்க்காவலன் உள்ளிட்ட படங்களிலும்), வாசு விக்ரம் (சிவாஜி தி பாஸ்) உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளனர்.

இதே போன்று உறவினர்களான சாருஹாசன், கமலஹாசன், சுஹாசினி, ஜி.வி., மணிரத்னம் போன்றோர் ரஜினியுடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

இவர்கள் நிஜத்தில் உறவினர்கள் மற்றும் படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

(சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்)
சகோதரர்கள் : சாருஹாசன் மற்றும் கமல்ஹாசன் :
சாருஹாசன் - தளபதி, வீரா
கமலஹாசன் - அபூர்வ ராகங்கள் தொடங்கி தில்லு முல்லு வரை ஏறத்தாழ 17 படங்கள்.
ஜி.வி மற்றும் மணிரத்னம்
ஜி.வி. - "தளபதி" படத்தை "ஜி.வி. பிலிம்ஸ் பேனரில் தயாரித்தார், அவரின் சகோதரர் மணிரத்னம் படத்தை இயக்கினார்.
ராம்குமார் மற்றும் பிரபு
ராம்குமார் - சந்திரமுகி
பிரபு - குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், மன்னன் மற்றும் சந்திரமுகி
பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம்
பிரபு தேவா - டான்ஸ் மாஸ்டராக பல படங்கள். பாபா உள்ளிட்ட சில படங்களில் ஒரு காட்சியில் தலை காட்டியுள்ளார்.
ராஜு சுந்தரம் - நடனம் மட்டும் அமைத்து உள்ளார்.
ராஜேஷ் ரோஷன் மற்றும் ராகேஷ் ரோஷன்
ராஜேஷ் ரோஷன் - ரஜினி நடித்த "பகவான் தாதா" உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.
ராகேஷ் ரோஷன் - ரஜினியுடன் "ஜீத் ஹமாரி" (தாய் வீடு படத்தின் ஹிந்தி பதிப்பு), பகவான் தாதா, மகாகுரு உள்ளிட்ட ஹிந்தி படங்களில் உடன் நடித்துள்ளார். இவர் இன்றைய பாலிவுட் இளம் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் அவர்களின் தந்தை என்பது எல்லோருக்கும் தெரியும்தானே.............
சசி கபூர் மற்றும் ரிஷி கபூர்
சசி கபூர் - கைர் கானூனி
ரிஷி கபூர் - தோஸ்தி துஷ்மணி
அம்பிகா மற்றும் ராதா :
அம்பிகா - எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த், மாவீரன் உள்ளிட்ட பல படங்கள்.
ராதா - பாயும் புலி, எங்கேயோ கேட்ட குரல், நான் மகான் அல்ல, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்கள்.
நக்மா மற்றும் ஜோதிகா
நக்மா - பாட்ஷா
ஜோதிகா - சந்திரமுகி
ஜோதிலக்ஷ்மி மற்றும் ஜெயமாலினி
ஜோதிலக்ஷ்மி : முத்து உள்ளிட்ட பல படங்கள்.
ஜெயமாலினி : அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்கள்
டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதகுமாரி
டிஸ்கோ சாந்தி : பல படங்கள்
லலிதகுமாரி : மனதில் உறுதி வேண்டும் (நேரடி தொடர்பு காட்சிகள் இல்லை)
(தொடரும்)

Monday, July 6, 2009

Kollywood 2009 - Half Yearly Report


There have been 53 films released during the period 01.01.09 to 30.06.09 and out of which, only 9 films recovered their cost or made profit.

It has been very encouraging year for movies made on small budgets of Rs.3 to Rs.5 Crores. The biggies except Surya's "AYAN" and Dhanush's "PADIKKADHAVAN" have all failed to cover the cost of production and marketing.

The 10 most successful films at Box Office are :

1. AYAN - BLOCKBUSTER
2. PADIKKADHAVAN - SUPER HIT
3. YAAVARUM NALAM - HIT
4. SIVA MANASULA SAKTHI - HIT
5. NADODIGAL* - HIT
6. MASILAMANI - HIT
7. VENNILAA KABADI KUZHU - HIT
8. PASANGA - ABOVE AVERAGE
9. MAYANDI KUDUMBATHAR - AVERAGE
10.ARUNDHADHI** (DUBBED FROM TELUGU) - HIT

* NADODIGAL - In its early days, how big hit it turns out, can be known only later as the film released on 26.06.09.

** ARUNDHADHI - It is a Telugu dubbed movie purchased at a high price, but did well in "B" & "C" Centres.
(Courtesy : www.sify.com)

Wednesday, July 1, 2009

REWIND 2007 - SIVAJI THE BOSS - ACTOR PARTIBAN


வாஜி... வாஜி... வாஜி... சிவாஜி!
வாஜிகினா... வாஜிகினா சிவாஜிகினா!

இது ஒரு பாட்டுக்குத் தொகையறா!

ஜாக்கிசானின் மார்க்கெட்டுக்கு மங்களம் பாடப்போகும் பாட்டுக்கு 100 கோடி தொகையறா!

நூறுகோடி + மக்கள் தொகையுள்ள இந்திய நாட்டில் நூறு கோடி வர்த்தகம். சினிமாவின் சூப்பர் ஜிகினா ரஜினி நடித்த சிவாஜியின் வித்தகம்! அமிதாப் + ஷாருக் ஒன்றுக்குள் ஒன்றாக −ணைந்து ‘அஷாமிருதாக்ப்’ என்ற ஹிந்தி படத்துக்குக்கூட அறுபது கோடிதான் வியாபாரம் ஆகுமென விநியோகஸ்தர்கள் முணுமுணுக்கிறார்கள்.

சிவாஜிக்கான எதிர்பார்ப்பு எப்படியிருந்தது என்றால்... சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தின் கோளாறைச் சரி செய்து தரையிறங்க, சிவாஜிக்கு ரெண்டு டிக்கெட் லஞ்சமாக வேண்டுமென ‘புஷ்’ஷிடம் கேட்க, புஷ் - மன்மோகன் சிங் - ஏவி.எம்.சரவணன் மூவரும் இது சம்பந்தமாக ஓர் ஒப்பந்தத்தில் ஒப்பம் இட்டிருப்பதாகத் தகவல் கசிந்தது.

வழக்கம்போல, ரஜினி திருமலை வழியாக இமயமலை யாத்திரைக்குக் கிளம்ப, அங்கு இமயமலையையே காணவில்லையாம்! விசனத்துடன் ரஜினி விமானமேறி சென்னை திரும்பும் வழியில், கர்நாடகாவை கடக்கும்போது விமானம் எதன் மீதோ மோத... மூடியை மேற்புறமாய்த் தள்ளிவிட்டு நீள் செவ்வகக் கண்ணாடி வழியே பார்த்தால்... ரஜினியின் நீண்டகால நண்பர் என்ற பந்தா எதுவுமில்லாமல் முண்டாசுக் கட்டிக் கொண்டு ‘சிவாஜி’க்கான ரிசர்வேஷன் கவுன்ட்டரில் வியர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருக்கிறது இமயமலை!

மலையளவு எதிர்பார்ப்போடு சிவாஜி ரிலீஸானது.

சிவாஜிராவ் சூப்பர் ஸ்டாராக திரு.பாலசந்தர் முதல் நிறைய காரணங்கள்... அதில் ஒருவர் திருமதி.லதா!
அவருடைய பொறுமையும் அமைதியும் விட்டுக் கொடுக்கும் பாங்கும்தான் ரஜினி வாழ்க்கையில் ஏற்பட்ட எத்தனையோ சூறாவளி சுனாமிகளுக்கு சூ... மந்திரக்காளி சொல்லி விரட்டியது. அந்த அன்புச் சகோதரியின் அழைப்பின் பேரில் எனக்கு அந்த நாலாயிர திவ்யப் பிரபந்த தரிசனம் கிடைத்தது. (நாலாயிரத்துக்கு திவ்யமாக விலை போனது எங்களுக்கு கொடுக்கப்பட்ட நாலு டிக்கெட்டின் மதிப்பு).

படம் தொடங்கக் காத்திருந்தோம். காத்திருத்தல் எப்போதுமே சுகம். பாவாடை சட்டையில் பார்த்த அத்தைப் பெண் பத்து வருடங் கழித்து வரப்போகிறாள். அவளை வரவேற்க ரயில் நிலையத்தில் வழி மீது விழி வைத்துக் காத்திருப்பது (விழியை யாரும் வழியில் மிதித்து விடாமல்), அந்த ரயில் பத்து மணி நேரம் தாமதமானாலும் காத்திருப்பது சொல்லி மாளா சுகம்.

வரப்போகும் அத்தை மகள் வத்தலும் தொத்தலுமாக வருவாளா? தெத்துப் பல்லும் நத்தை மூக்குமாக வருவாளா? தப்பித்தவறி தளதளன்னு, தக தகன்னு வருவாளா? எதுவுமே தெரியாம, கருவிழி கபடி ஆடக் காத்திருப்பது உலகளாவிய உவகை!

திரையுலகக் காத்திருப்பு திரை விலகக் காத்திருந்தபோது எனக்குள் ஏகப்பட்ட flash backs.எனக்கும் ரஜினி சாருக்கும் இடையே! நானும் ரஜினி ரசிகன்தான்! ஆனால் நல்ல படங்களுக்கும் அவரது நல்ல நடிப்புக்கும்.

‘முள்ளும் மலரும்’,‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘அவள் அப்படித்தான்’... இப்படி ‘பாட்ஷா’ வரை! நடிகரை மீறி அவர் மிக எளிமையான மனிதர். அந்த எளிமைக்கு நான் அடிமை!

என் திருமணத்தைப் பற்றி நான் அவரிடம்தான் முதன் முதலில் சொன்னேன்! அந்தளவு என் வாழ்க்கையில் முக்கியமானவர்.

தனக்குத் தெரிந்த ஞானத்தையும் - புத்திசாலித்தனத்தையும் திரையிடாமல், ரசிகனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே செய்யக்கூடிய புத்திசாலி!

நான் ‘சுகமான சுமைகள்’ எடுத்து நஷ்டப்பட்டு, வங்கியில் வாங்கிய கடனை தவணை முறையில் அடைக்க நெஞ்சடைக்கப் போராடிக் கொண்டிருந்தபோது ரஜினி சார் அழைத்தார். அடுத்து நான் தயாரிக்கும் படத்தில் அவர் ‘கெஸ்ட் ரோல்’ நடித்துத் தருவதாகவும், முக்கிய பாத்திரத்தில் என்னை நடிக்கவும் சொன்னார். அப்போதைய சூழ்நிலையில் அவர் கௌரவ தோற்றத்தில் நடித்தாலே குறைந்த பட்சம் சில கோடியாவது லாபம் பார்க்கலாம்.

எவ்வளவு உயர்ந்த மனம் இருந்தால் இப்படி ஓர் உதவி செய்ய முன் வருவார்! கூடவே ஒன்றும் சொன்னார். ‘SPM மாதிரி நான் கடமைப்பட்ட சிலபேரு கேக்குறாங்க... கெஸ்ட் ரோல் பண்ணச் சொல்லி... நான் யாருக்கும் பண்ணலை. ஆனா உங்களுக்குப் பண்ணித் தரேன்’ என்றார்.

அந்த நெகிழ்ச்சியில் யாருக்குமே தூக்கம் வராது. எனக்கும் வரவில்லை. இரவெல்லாம் யோசித்தேன். மறுநாள் வாஹினி ஸ்டூடியோவில் ‘பாட்ஷா’ படப்பிடிப்பு. மதிய வேளையில் போய் அவரைச் சந்தித்தேன். உணவுக்குப் பின் என் உணர்வைச் சொன்னேன்.

‘எனக்குச் சின்ன வயசு. உடம்புல தெம்பும் மனசுல தன்னம்பிக்கையும் நிறைய இருக்கு. ஆனா, SPM சாரெல்லாம் இப்பவே வயசானவங்க - நீங்களும் கடமைப்பட்டிருக்கீங்க! அவங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பைக் குடுத்தீங்கன்னா அவங்க உங்களை தெய்வமாப் பார்ப்பாங்க!
அதுமட்டுமில்லாம எனக்குள்ள பிரச்னைக்காக நீங்க படம் பண்ணாம, எனக்குள்ள திறமைக்காகவும் என்னுடைய ஸ்கிரிப்டுக்காகவும் என்னைக்காவது நீங்க படம் பண்ணா... ரொம்ப நல்லா... பெருமையாயிருக்கும்’ சொல்லி முடித்ததும் அவர் அமர்ந்திருந்த ரிவால்விங் சேர் தானாக என் திசைக்குத் திரும்ப, பார்வையாலேயே பெருமிதம் பொங்கப் பார்த்தார்.
அந்தப் பார்வை என் உயரத்தை உயர்த்துவதாகயிருந்தது. ஐயோ அதுவே... அந்த வினாடியில் எனக்குக் கிடைத்த பெருமையே, பல கோடி பெறும்!

இன்று வரை அதே உயரத்தில் நான்...

அதே நட்போடு அவர்...

திரையில் டைட்டில் ஓடிக் கொண்டிருந்தது. இணை தயாரிப்பு... S.P. முத்துராமன் அப்பாடா!

(தரவு-கல்கி)