Friday, July 31, 2009

பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல - (பகுதி-6)

பண்டிகைகள்......

இந்த மந்திர சொல்லை கேட்டால், குழந்தைகள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும் (புது துணியும், விதவிதமான தின்பண்டங்களும் கிடைக்குமே!!). பெரியவர்களோ, அந்த சிறியவர்கள் மன மகிழ்ச்சியை கண்டு பேரின்பம் கொள்வர்....

உலகில் உள்ள நாம் அனைவரும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், பக்ரீத், கிருஸ்துமஸ், ஹோலி என்று ஏதாவதொரு பண்டிகையை கொண்டாடி கொண்டேதான் இருக்கிறோம்.... அதன் மூலம், நம் மன இறுக்கத்தை குறைத்து கொள்ளவும் முயற்சித்து கொண்டிருக்கிறோம்.....

சினிமா பிரியர்களுக்கு தீபாவளி, பொங்கல், வருட பிறப்பு உள்ளிட்டவை மேலும் ஸ்பெஷல்..... ஏனெனில், அன்றுதான் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் நடித்த படம் ரிலீஸ் ஆகும்.....

அதுவும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு, பண்டிகையின் போது, ரிலீசாகும் ரஜினி படமென்றால், இரட்டை இனிப்பு சாப்பிடும் மனநிலை தான்.... பின்னே, கரும்பு தின்ன கூலி ஆச்சே.... புது துணி, தலைவரோட புது படம் ....... வேற என்ன வேண்டும்? கலக்கற சந்த்ரூஸ்.....

நான் கூட ராணுவ வீரன் (1981 தீபாவளி), பாயும் புலி (1983 பொங்கல்), தாய் வீடு (1983 தமிழ் வருட பிறப்பு), தங்க மகன் (1983 தீபாவளி) போன்ற படங்களை முதல் நாள், முதல் காட்சி ரசித்துள்ளேன்....அப்போதெல்லாம் பண்டிகையை ஒட்டி, என் வீடு தேடி வரும் உறவினர்கள் முதல் நாள், முதல் காட்சி (11.30௦ a.m.) முடிந்து நான் மதிய உணவிற்கு வீடு திரும்பும்போது என்னை அதிசயமாய் பார்த்தது நினைவுக்கு வருகிறது....

சரி....இந்த பகுதியில் நாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து பண்டிகை காலங்களில் வெளியான படங்களை பற்றி பார்ப்போம்.....

குடியரசு தினம் :

1. 26.01.1980 - பில்லா
2. 26.01.1981 - தீ

பொங்கல் :

1. 14.01.1982 - போக்கிரி ராஜா
2. 14.01.1983 - பாயும் புலி
3. 14.01.1984 - நான் மகான் அல்ல
4. 14.01.1990 - பணக்காரன்
5. 14.01.1991 - தர்மதுரை
6. 14.01.1992 - மன்னன்
7. 12.01.1995 - பாட்ஷா (பொங்கலுக்கு இரண்டு தினங்கள் முன்பே ரிலீஸ் ஆனது).

தமிழ் வருட பிறப்பு :

1. 14.04.1979 - நினைத்தாலே இனிக்கும்
2. 14.04.1982 - ரங்கா
3. 14.04.1983 - தாய் வீடு
4. 12.04.1985 - நான் சிகப்பு மனிதன்
5. 11.04.1986 - விடுதலை
6. 13.04.1988 - குரு சிஷ்யன்
7. 14.04.1994 - வீரா
8. 10.04.1997 - அருணாசலம்
9. 10.04.1999 - படையப்பா
10.14.04.2005 - சந்திரமுகி

மே தினம் :

1. 01.05.1981 - தில்லு முல்லு

சுதந்திர தினம் :

1. 15.08.1978 - முள்ளும் மலரும்
2 15.08.1980 - ஜானி
3. 15.08.1981 - நெற்றிக்கண்
4. 15.08.2002 - பாபா

தீபாவளி :

1. 26.10.1981 - ராணுவ வீரன்
2. 04.11.1983 - தங்க மகன்
3. 22.10.1984 - நல்லவனுக்கு நல்லவன்
4. 11.11.1985 - படிக்காதவன்
5. 01.11.1986 - மாவீரன்
6. 21.10.1987 - மனிதன்
7. 28.10.1989 - மாப்பிள்ளை
8. 05.11.1991 - தளபதி
9. 25.10.1992 - பாண்டியன்
10.23.10.1995 - முத்து

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு படம் கூட அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் ஆனதில்லை என்பது ஒரு கூடுதல் செய்தி.....
ஏதாவது தகவல்கள் விட்டு போயிருந்தால், தெரியப்படுத்தவும்.....

(இன்னும் வரும் ..........)

20 comments:

வால்பையன் said...

நீங்க ஒரு தகவல் பெட்டகம்!

R.Gopi said...

நன்றி வால்பையன்.....

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து, படித்து, கருத்து சொன்னதற்கு....

நான் ஏற்கனவே சொன்னதுபோல், இது காலவாக்கில் சேர்த்த விஷயங்கள் / தகவல்கள்....

தொடர்ந்து வருக..... ஆதரவு தருக....

R.Gopi said...

இந்த பதிவிற்கு வாக்களித்து "பிரபலம்" ஆக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

KARTHI6
VINO23
SUNFLOWERHOT
KVADIVELAN
ASHOK92
சுவாசம்
VGOPI
BHAVAAN

கிரி said...

நாங்க காத்திருப்பது எந்திரனுக்காக :-)

//இந்த பதிவிற்கு வாக்களித்து "பிரபலம்" ஆக்கிய உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.//

கோபி நீங்க தமிழிஷ் ஓட்டு பட்டையை நிறுவினால் நேரடியாக உங்கள் தளத்திற்கு வரும் என்னை போன்றவர்களுக்கு ஓட்டு போட எளிதாக இருக்கும்.

R.Gopi said...

Giri

Thanks for your visit and comments. Though i have started writing and managing two blogs, i never know how to establish TAMILISH in my blog?

Can you please tell me how to do it?

பாசகி said...

எப்படிங்க இவ்ளோ தகவல கைக்குள்ள வைச்சுட்டிருக்கீங்க.

ஆனா நாந்தான் இதுவரைக்கும் தலைவரோட படம் FDFS பார்த்ததே இல்லை :(

R.Gopi said...

//பாசகி said...
எப்படிங்க இவ்ளோ தகவல கைக்குள்ள வைச்சுட்டிருக்கீங்க.

ஆனா நாந்தான் இதுவரைக்கும் தலைவரோட படம் FDFS பார்த்ததே இல்லை :(//


நான் ஏற்கனவே சொன்னதுபோல், இது காலவாக்கில் சேர்த்த விஷயங்கள்

பிராட்வே பையன் said...

நன்றாக இருந்தது. சிறு விடுதல்,1990 தீபாவளிக்கு “ கொடி பறக்குது” ரிலிஸ்.
சென்னை வுட்லண்ட்ஸில் FDFS,பார்த்தேன்.

நன்றி.
ஹஸன் ராஜா.

R.Gopi said...

வருகைக்கு நன்றி பிராட்வே பையன்.....

1990-ல் இந்த இரு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனதாக நினைவு....

14.01.1990 - பணக்காரன்
15.06.1990 - அதிசய பிறவி.......

நண்பர்கள் வேறு யாரேனும் தெரியப்படுத்தலாம்...

ஷைலஜா said...

முத தடவையா வரேன்
என்ன கோபி தகவல்சுரங்கமா இருக்கீங்க! இருங்க நிதானமா எல்லாம் படிச்சிட்டு வரேன் என்ன?

R.Gopi said...

வாங்க ஷைலஜா

தங்கள் முதல் வருகைக்கு நன்றி.....

மெதுவா படிச்சுட்டு, உங்களோட கருத்தை சொல்லுங்க......

அது ஒண்ணுமில்லை..... சூப்பர் ஸ்டாரை கொஞ்சம் ஜாஸ்தியா பிடிக்குமா, அதான்..... நாள்பட எடுத்து வச்ச தகவல்களை இப்போ, இங்கே போட்டிருக்கேன்.....

நட்புடன் ஜமால் said...

நல்லா சேகரிச்சி இருக்கீங்க

தகவல்களை.

-------------------------

தமிழிஷில் சேர்க்க

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
நல்லா சேகரிச்சி இருக்கீங்க

தகவல்களை.//

*****************

என் தளத்திற்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் "வலையுலக புயல்" அண்ணன் ஜமால் அவர்களே.... வருக வருக......

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி....

தொடர்ந்து வருகை தந்து, தங்கள் நல்லாதரவை தருமாறு வேண்டுகிறேன்..... அப்படியே, என் மற்றொரு வலைத்தளத்தையும் (www.edakumadaku.blogspot.com)பார்த்து கருத்து தருமாறு வேண்டுகிறேன்...

நட்புடன் ஜமால் said...

என் தளத்திற்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் ]]

இதற்காக வருத்தப்படுகிறேன்[["வலையுலக புயல்"]]

இதற்கு புன்னகை

உங்களின் அதிகப்படி அன்பு தான் இந்த வார்த்தைக்கு காரணம் மற்றபடி இதற்கு தகுதியெல்லாம் இல்லை.

R.Gopi said...

//நட்புடன் ஜமால் said...
என் தளத்திற்கு முதன்முதலாக வருகை தந்திருக்கும் ]]

இதற்காக வருத்தப்படுகிறேன்//

மன்னிக்க வேண்டுகிறேன். என் தவறை பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

//[["வலையுலக புயல்"]]

இதற்கு புன்னகை

உங்களின் அதிகப்படி அன்பு தான் இந்த வார்த்தைக்கு காரணம் மற்றபடி இதற்கு தகுதியெல்லாம் இல்லை.//

உங்கள் பெருந்தன்மை என்னை நெகிழ வைக்கிறது......

நன்றி ஜமால்....

பாசகி said...

கோபி-ஜி விருது ஒண்ணு உங்களுக்காக காத்திருக்கு, சீக்கிரம் வந்து வாங்கிக்கோங்க.

R.Gopi said...

// பாசகி said...
கோபி-ஜி விருது ஒண்ணு உங்களுக்காக காத்திருக்கு, சீக்கிரம் வந்து வாங்கிக்கோங்க.//

********

நன்றி பாசகி..... உங்கள் அன்புக்கும்....ஆதரவுக்கும்......

இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை......

கயல்விழி நடனம் said...

நல்ல தகவல் தொகுப்பு....
"தலைவனின் தகவல் பெட்டகம்" ன்னு பட்டம் கொடுத்துடலாமா??? :P

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
நல்ல தகவல் தொகுப்பு....
"தலைவனின் தகவல் பெட்டகம்" ன்னு பட்டம் கொடுத்துடலாமா??? :ப்//

நீங்க‌ வேற‌.... ந‌ம்ம‌ள‌ எல்லாம் தூக்கி சாப்பிட‌ற மாதிரி ஆளுங்க‌ இருக்காங்க‌.... அவுங்க‌ காதுல‌ விழுந்தா கோவிச்சுப்பாங்க‌.....

R.Gopi said...

தொடரின் இந்த பகுதியை வாக்களித்து பிரபலமாக்கிய‌ நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி...

sunflowerhot
swasam
Karthi6
kvadivelan
VGopi
Vino23
ashok92
bhavaan
girirajnet
dgdg12