Monday, July 19, 2010

அசத்தல் “மேதை” அண்ணன் கி”ராமராஜன்”


கலைமகள் கலைக் கூடம் சார்பில் எம்.குமார், டி.பழனிச்செட்டியார், பாலகிருஷ்லெடி, 'சீர்காழி' கே.சிவசங்கர், எஸ்.செல்வபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படமான 'மேதை' என்ற படத்தின் மூலம் தனது மறுபிரவேசத்தை நிகழ்த்தப் போகிறார் ராமராஜன்.

(இதுவரை பட்டாப்பட்டி டவுசரில் அனைத்து கிராமங்களையும் கலக்கி வந்த "மாமேதை கி”ராமராஜன்" இந்த "மேதை" படத்தில் ஜேம்ஸ்பாண்ட் எல்லாம் அசரும் வகையில் கோட் சூட் அணிந்து கலக்குகிறார். ஆனாலும் ரசிகர்களை (!!???) ஏமாற்றாமல் ஒரு பாடல் காட்சியிலாவது பட்டாப்பட்டி டவுசர் அணிந்து கையில் பால்சொம்புடன் வருவார் என்றும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன).

இது அவருக்கு 44-வது படம். (முந்தைய 43 படங்களிலும் டவுசர் மற்றும் பட்டாப்பட்டி அணிந்து நடித்த உலகின் ஒரே நடிகர் என்ற பெருமை அண்ணனுக்கு உண்டு).

இந்தப் படத்தில் கிராமத்து பள்ளி ஆசிரியராக வருகிறார் ராமராஜன். வழக்கம்போல கிராமிய பின்னணியைக் கொண்ட இப்படத்தில் காதல், நகைச்சுவை, சண்டை என்று அவரது ரசிகர்கள் (!!???) எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களும் கொண்டதாக அசத்தலாக தயாராகிறதாம்.

படத்தின் முக்கிய பலமாக வடிவேலு நடிக்கிறார். இதுவரை கவுண்டமணியுடன் மட்டுமே கலக்கி வந்த ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் மதுரை மண்ணின் மைந்தருடன் இணைந்து காமெடி பண்ண தயாராகிறார். (வடிவேலு இந்த படத்துல அண்ணன் ”மேதை”யோட மேட்டர முடிச்சுடுவாருன்னு நெனக்கறேன்).

புதுமுக நாயகி ஒருவர் ராமராஜனுடன் ஜோடி சேருகிறார். சார்லி, அஜய், ஹாசினி, ஸ்ரீரஞ்சினி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார், தீனா. பாடல்கள் ரிலீஸாகி பட்டைய கெளப்புதாமாம்...

“மேதை” அறிமுக காட்சியில் வரும் :

என்னோட பட்டாப்பட்டிக்கு பதில் சொல்ல
இந்த பதினெட்டு பட்டிலயும் ஆளில்ல

என்ற பாடல் சூப்பர் ஹிட்டாம்... மெய்யாலுமா தல??

மதுரை அருகே மேலூரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை கடலூர், புதுச்சேரி, நெய்வேலி மற்றும் பல இடங்களில் நடக்க இருக்கிறது.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், என்.டி.ஜி.சரவணன்.

தன் புதிய படமான “மேதை” பற்றி சொல்லும் போது, முன்பு சிவாஜி நடித்து வெளிவந்த படிக்காத மேதை அளவு இருக்கும் என்று கூறினார்...

(இந்த படத்தில் ரீ-எண்ட்ரி ஆவதன் மூலம் ”மேதை கி"ராமராஜன்" திரையுலகில் முன்னணியில் இருக்கும் டெர்ரர் ஸ்டார்ஸ் டி.ராஜேந்தர், ஜெ.கே.ரித்தீஷ் மற்றும் யுனிவர்சல் ஹீரோ சாம் ஆண்டர்சன் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று அகில உலக கி"ராமராஜன்" ரசிகர் மன்றம்? தெரிவித்துள்ளது).

Wednesday, July 14, 2010

BITS, Pilani - Dubai - Vacancies

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம். இந்தியாவின் மிக பிரபலமான BITS, Pilani கல்வி நிறுவனத்தின் துபாய் கிளையில் கீழ்க்கண்ட பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று அங்கே பணிபுரியும் என் தோழர் செல்லதுரை என்பவர் மூலமாக அறிந்தேன்..

1. Technical Assistants - Electrical & Electronics Engg. / Electronics & Instrumentation Engg (Male)
2. Senior Lecturer / Lecturer - IT (Male)
3. Executives / Assistants - Finance & Accounts (Male)
4. Executives / Assistants - HR (Male)
5. Senior Secretaries / Secretaries (Male)

மேலும் விரிவான தகவலுக்கு /மேலதிக விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்..

http://www.bitsdubai.com/vacancies.html