Tuesday, December 8, 2009

சூரியனோ....சந்திரனோ...யாரிவனோ சட்டென சொல்லு.....

டிசம்பர் 12 2009 அன்று அகவை 60ல் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துப்பா இதோ, உங்கள் பார்வைக்கு :

ரஜினி எனும் மூன்றெழுத்து காந்தம்
உன் சிரிப்பில் தான் என்னே ஒரு பாந்தம்!!..

மலராத மலரும், மலருமே உன் சிரிப்பில்
இதை கண்ட அனைவருமே நிறைவோமே சிலிர்ப்பில்

வெள்ளி வானில் சில பல மின்மினி
மின்ன பாக்கும் பல சில இனி இனி
தோல்வி என்பதே இல்லை உனக்கினி
”ஆறிலிருந்து அறுபது வரை” உன் மேல் விருப்பம்
அதுவே திரைவாழ்வில் நீ கண்ட திருப்பம்

உன் நிறமோ சிறிது கருமை - ஆனால்
கருமைக்கே நீ சேர்த்தாய் பெருமை
இதை கண்டோர்க்கெல்லாம் பொறாமை
அவர்களுக்கு எங்கே தெரியும் உன் அருமை

எல்லோர்க்கும் உன் செயல் மேல் நம்பிக்கை
நீ விதைத்தாய் அவர்தம் வாழ்வில் தன்னம்பிக்கை

நீ, மன்னர்களும் மண்டியிடும் ”ராஜாதி ராஜா”
சேரனும், சோழனும் உள்ளடங்கிய - ”பாண்டியன்”
உன் படம் படையெடுக்கும் போது
பட்டையை கிளப்பும் வசூல்... நல்ல மகசூல்.
உன் படம் கண்டவர்கள் சொன்னது தூள், தூள்...
முந்தைய வசூல் சாதனைகள் ஆனதே தூள், தூள்

நீ, ரசிகர்கள் கூட்டத்தை நல்வழிப்படுத்தி
அந்த நல்வழியே அழைத்து செல்லும் ”தளபதி”
உலகில் தர்மத்தை போதித்த ”தர்மதுரை”

உழைப்பின் அருமை பெருமையை
ஓங்கி, உரக்க சொல்லிய ”உழைப்பாளி”
“வள்ளி"
என்ற நல்ல படத்தின் படைப்பாளி

தர்மத்தை போதித்து அதர்மத்தை விரட்டியவன்
அதனாலேயே உன் பெயர் “தர்மத்தின் தலைவன்”

நீ, தரணிக்கே ஒரே மகன்
இந்நாட்டின் தலைமகன் - ஆயினும்
”நான் மகான் அல்ல”, சாமான்யன் தான்
என அடக்கத்துடன் சொல்லிய ”தங்க மகன்”

நீ சொல்லி சூறாவளியாய் அடித்த படம் ”பாட்சா”
உன்னிடம் எப்போதும் பலிக்காது மற்றவர்கள் பாச்சா

உன் அவதாரத்தின் ஒரு பெயரோ ”வீரா” -
ஆனாலும் நிஜத்தில் நீயோ ஒரு சமாதான புறா

அகவை அறுபதை எட்டிய "மாவீரன்” நீ
ஆயினும்...பாசம் உள்ள மனிதன் நீ
மீசை வைத்த குழந்தை நீ

சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவையும்
அதன் சுருண்டு கிடந்த வியாபாரத்தையும்
”சிவாஜி” என்ற ஒரே படத்தின் மூலம்
அகண்டு விரிய செய்த அற்புத ”மனிதன்” நீ

ஆண்டுகள் பல ஆனாலும், வயது சில போனாலும்,
இன்னும் உன் ”இளமை ஊஞ்சலாடுகிறது”.

தேனையும், சர்க்கரையையும் சுவைத்தால்தான் இனிக்கும்
ஆனால், உன்னை பற்றியோ ”நினைத்தாலே இனிக்கும்”

நீ பாசத்தின் பாவலன், ”ஊர்காவலன்”
அனைவரும் விரும்பும் "ந‌ல்ல‌வ‌னுக்கு ந‌ல்ல‌வன்"

அன்பான எஜமானுக்கு ஒரு உண்மையான ”வேலைக்காரன்”
யுத்தத்தில் கூட தர்மம் கண்டது - உன் ”தர்ம யுத்தம்”

சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வந்தது வீர சிவாஜி - அன்று
சிவாஜி என்றவுடன் நினைவுக்கு வருவது உன் சிவாஜி தி பாஸ் - இன்று

அரிதாரமின்றி அவனியில் உலா வரும் “அதிசய பிறவி” நீ
எளியோருக்கு உதவிட இறைவன் படைத்த அற்புத கருவி நீ

தேவலோக இந்திரனும் காண தவமிருக்கும் “எந்திரனே”
உன் புகழுக்கு தடை போட இனி இல்லை ஒரு அரணே

“எந்திரன்” என்ற ஒரு மாபெரும் சித்திரம்
உலகில் படைக்க போகுதே பல பல சரித்திரம்

அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்
உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில்

ஆட்சியை தேடி அனைவரும், அனுதினமும் அலைய
வெண்தாடியோடு நீ அமைதியை தேடி இமயம் ஓடி ஒளிய

பிறந்த நாள் வாழ்த்து என நான் தொடங்க
வார்த்தைகள் தேடி வந்து, சேர்ந்து ஆனது கவிதை
அதுவும் இங்கே நிகழ்ந்தது தான் விந்தை

ஓடி மறைந்து ஒளிந்தாலும்,
வேண்டாம் என்று ஒதுங்கினாலும்
உன்னை விடுவதில்லை நாமினி
வேண்டாமென சொல்லாதே நீயினி

உனக்கே சமர்ப்பணம் இந்த ரசிகனின் பா
இந்த அகிலமே காத்திருக்கு, அரியணை ஏற வா

26 comments:

Vidhoosh said...

ம்ம். நடக்கட்டும்.
-வித்யா

கோமதி அரசு said...

கோபி, உங்கள் அபிமான தலைவரின் கவிதை அருமை.

அவர் படங்களை வைத்தே அவருக்கு பாமாலை செய்து, சிறப்பு செய்து இருக்கிறீர்கள்.

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்!

♠ ராஜு ♠ said...

கண்ணா..பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...!
பெரிய தலைக்கு வாழ்த்துக்கள்.

ஈ ரா said...

தல... கலக்குறீங்க...

நம்பளோட சமர்ப்பணம் எஸ் எஸ் மியூசிக் கில் இன்றோ நாளையோ வரப்போகிறது...அனுமதி கிடைத்தவுடன் நம் தளத்தில் வெளியிடுகிறேன்...

உங்கள் தோழி கிருத்திகா said...

நம்ம திருவிழ நெருங்கிக்கொண்டு இருக்கிறது...தலைவர் இன்பமான செய்தி தரப்போறாரா இல்லை அதிர்ச்சியா இல்லை இன்பஅதிர்ச்சியா ????பாப்போம்....
நாளக்கி நானும் ஒரு வாழ்த்து மடல் கிறுக்கப்போரேன்...கண்டிப்பாக பாக்கவும்

வியா (Viyaa) said...

kavithai super.. :)))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உங்கள் கவிதை
தலைவர் ரஜினி பற்றிய

அபூர்வ ராகங்கள்.

பதினாறு வயதினிலே

அவர் படம் பார்த்த நாள் முதல்
யாருக்கும்

நான் அடிமை இல்லை.

ஆனால் உங்கள் கவிதை கண்டு
நீங்கள் ரஜினிமேல் வைத்திருக்கும்

அன்புக்கு நான் அடிமை.

கலகலப்ரியா said...

வந்துட்டாருயா வந்துட்டாரு... சூப்பர் ஸ்டாரு...

கலகலப்ரியா said...

கவிதை... விந்தை.. இதுவும் உங்க தலைவரோட சித்து வித்தையாதான் இருக்கும்... கலக்கிட்டீங்க...

கிரி said...

கோபி படமா போட்டு தாக்கிட்டீங்க! :-)

தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எப்பூடி ... said...

அருமையா அருமை,தலைவர் பற்றி நினைத்தாலே கவிதை சும்மா அதிருதில்ல

Vijay said...

சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் வாழ்த்து !!! :)

Ammu Madhu said...

wonderful gopi..great job.

பாசகி said...

தலைவருக்கு வாழ்த்துக்கள்..

ஜி கவிதை எல்லாம் எழுதுது, கலக்கீட்டிங்க :)

R.Gopi said...

என்னுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை 60 வது பிறந்த நாளின் போது வாழ்த்திய தோழமை அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....

puyal said...

அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்
உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில். super thalaiva keep itup

R.Gopi said...

//puyal said...
அனைவரும் தவமிருக்கும் ஆட்சி கட்டில்
உனக்கோ எப்போதுமே அது பேச்சு மட்டில். super thalaiva keep itup//

*********

வாங்க புயல்....

உங்கள் மின்னல் வேக வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...

Jaleela said...

சூப்பர் ஸ்டார் அவர் வயசானாலும் அவருடைய ஸ்டைலும், சுறுசுறுப்பும் அப்படியே தான் இருக்கு.

அவர் படங்கள் அனைத்தும் நகைசுவை கலந்த தத்துவப்படங்களாகவும் இருக்கும்.

அவருடைய படத்தை தொகுத்து அவருடைய கவிதை ரொம்ப சூப்பரோ சூப்பர் கோபி.

Jaleela said...

மன்னன் விஜய சாந்தியுடன் நடித்தது, ரொம்ப நல்ல இருக்கும்,


அம்மா என்றழைக்காத உயிரில்லியே... இது ஒன்றே போதும் அவரை பற்றி சொல்ல... அருமையான நடிப்பு

R.Gopi said...

// Jaleela said...
சூப்பர் ஸ்டார் அவர் வயசானாலும் அவருடைய ஸ்டைலும், சுறுசுறுப்பும் அப்படியே தான் இருக்கு.

அவர் படங்கள் அனைத்தும் நகைசுவை கலந்த தத்துவப்படங்களாகவும் இருக்கும்.

அவருடைய படத்தை தொகுத்து அவருடைய கவிதை ரொம்ப சூப்பரோ சூப்பர் கோபி.//

********

சூப்பர் ஸ்டாரை பற்றி தங்கள் மனதில் இருப்பதை அப்படியே சொன்னதற்காக உங்களுக்கு என் நன்றி...

வெகு ஜனங்கள் ரசிப்பதாலேயே அவரின் படங்கள் பெரு வெற்றி பெறுகின்றன...

மீண்டுமொரு முறை என் நன்றி ஜலீலா மேடம் உங்களுக்கு....

R.Gopi said...

//Jaleela said...
மன்னன் விஜய சாந்தியுடன் நடித்தது, ரொம்ப நல்ல இருக்கும்,

அம்மா என்றழைக்காத உயிரில்லியே... இது ஒன்றே போதும் அவரை பற்றி சொல்ல... அருமையான நடிப்பு//

*******

மிக சரி ஜலீலா மேடம்... மன்னன் படத்தில், சரியான அளவில், மிகையில்லாத, எதார்த்தமான நடிப்பை பாந்தமாக வெளிப்படுத்தி இருப்பார்...

பண்டரிபாய் நிஜத்தில் இது போன்றதொரு துன்பத்துக்கு ஆளானபோது, அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஒரு பெட்டியில் 30 லட்சங்கள் வரை வைத்து கொடுத்ததாக பண்டரிபாய் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்... (இதை வெளியே கூறவேண்டாம் என்று ரஜினி கூறியிருந்தும்...)

கவிநயா said...

தலைவர் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு கவிதையில் பளிச்சிடுகிறது. இருவருக்கும் வாழ்த்துகள் :)

jokkiri said...

//கவிநயா said...
தலைவர் மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு கவிதையில் பளிச்சிடுகிறது. இருவருக்கும் வாழ்த்துகள் :) //

மிக்க நன்றி கவிநயா....

muthu said...

தல கலகீடீங்க ,தலைவரை பத்தி பேசி

Subasree Mohan said...

Ezthunadai arpudam.

Subasree Mohan said...

Ezthunadai arpudam.