Monday, November 1, 2010

மன்மத அம்பு - கப்பலில் காதல்

அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் (!!) "மன்மத அம்பு" ஷூட்டிங் முடிந்து, பாடல் வெளியீடு நவம்பர் 20௦ அன்று சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற இருக்கும் நிலையில், படத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன் என்று கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை அணுக, அவர் என்னை கேட்பதை விட, அவரை கேட்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்மிடம் கை காட்டிய இடத்தில் ............................அமர்ந்திருந்தவர் கமல்ஹாசன்....

நிறைய கேள்விகள் கேட்க நினைத்தாலும், அவரின் கோபத்தை மனதில் கொண்டு சில கேள்விகள் மட்டுமே கேட்டோம்...

நிருபர் : வணக்கம் சார்....

கமல் : வணக்கம்.....என்னை காண வருகை தந்திருக்கும் உங்களை வருக வருக என்று வரவேற்கும் ஆவல் எனக்கு உண்டு.. ஏனென்றால், வந்தவர்களை விருந்தினர்களாக கருதி வரவேற்பது என்பது தமிழனின் பண்பாடு என்றாலும், அந்த பண்பாடு இன்னமும் அழியாமல் உள்ளதா என்பதை அறியாமல் உங்களை வரவேற்பதில் சிறிய சிக்கல்... ஆகவே.........

நிருபர் : இவ்ளோ சுருக்கமா வரவேற்றதற்கு மிக்க நன்றி சார்... இப்போ, கேள்விகளை கேட்கலாமா?

நாங்க எல்லாரும், எப்போவும், தெரிஞ்சுக்க ஆசைப்படற அபூர்வ சகோதரர்கள் படத்துல வர்ற "அப்பு" பத்தி ஏதாவது சொல்லுங்களேன்..

கமல் : சொல்றேன்.. சின்ன வயசுல, நாங்க வெளையாடற இடத்துல ஒரு குட்டை இருந்தது... அதுல, "குப்பு"ன்னு ஒரு குள்ளமான பையன் வந்து, டைவ் அடிப்பான், நீச்சல் அடிப்பான், மீன்கள் பிடிப்பான்.....
ஆனாலும், அவனை பார்க்கும் அனைவரும், கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பாதே என்று சொல்லி கேலி செய்வார்கள்...

அன்று முடிவு செய்தேன்...குட்டையானவர்கள் கெட்டவர்கள் இல்லை என்று நிரூபிப்பது என்று...
பின்னாளில் “குட்டையானவன் கெட்டவனா” என்றெல்லாம் பல நாட்கள் யோசித்து, ஒரு திரைப்படமாக எடுத்து, வெண்திரையில், அதை நிரூபித்தேன்... எனவே, அந்த அபூர்வ சகோதரர்கள் படமும், அதில் வரும் குள்ள "அப்பு"வும், உலகத்தில் உள்ள அனைத்து குள்ளர்களுக்கும் சமர்ப்பணம்...

நிருபர் : இப்போது நீங்கள் நடித்து வெளிவர இருக்கும் "மன்மத அம்பு" படம் பற்றிய ஒரு கேள்வி.. அது, ஏற்கனவே வெளிவந்த "டைட்டானிக்" படத்தின் காப்பி போல் இருக்கிறது என்று இணையத்தில் நிறைய தேள்கள் தம்பட்டம் கொட்டி வருகிறதே!!?

கமல் : உங்களின் முதல் கேள்வியே கோணலாக உள்ளது... இது போல் எல்லா படத்திற்கும் இதையே சொல்லிக்கொண்டு திரியும் நிறைய செந்தேள் செந்தாமரைகளை பார்த்தவன் நான்....இரண்டும் பிரம்மாண்டமான கப்பலில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதை தவிர எந்த ஒற்றுமையும் இல்லை... ”மன்மத அம்பு” இன்றைய கல்லூரி இளைஞர்களுக்கு காதலை சொல்லி தரும் ஒரு புதிய முயற்சி... நீங்கள் என்னை கோபமுற செய்யாமல் கேள்விகளை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
நிருபர் : மன்மத அம்பு படத்தை பற்றி....
கமல் : படம் ஷூட்டிங் முடிந்து விட்டது.... சொகுசு கப்பலில் எடுத்துள்ளோம்... தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்...
நிருபர் : இதெல்லாம் தெரியுமே... தெரியாதது ஏதாவது?
கமல் : தெரிந்த விஷயங்களை மேலும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்... தெரியாத விஷயங்கள் தெரியாததாகவே இருக்கட்டும் என்று திரிஷா என்னிடம் சொன்னதை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை...
நிருபர் : படத்தில் பாடல்கள் இருக்கிறதா? பாடல்களை படத்தில் வைப்பதற்கு நீங்கள் எதிரி என்றும், எத்தனை கோடி கொட்டி கொடுத்தாலும், டூயட் பாடல்களில் நடிக்க மாட்டீர்கள் என்றும் வாலி ஒரு விழாவில் உங்களை பற்றி சொன்னாரே...
கமல் : கவிஞர் வாலி அவர்கள் சொன்னது பற்றி எனக்கு எதுவும் தெரியாது... ஆனால், இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் வைக்கலாம் என்று ரவி சொன்னபோது, அந்த 5 பாடல்களில் 6 பாடல்களை எழுத மட்டும் புதிதாய் ஒரு பாடலாசிரியர் இருக்கட்டும்... மீதமுள்ள பாடல்களை ஏற்கனவே உள்ள பழைய பாடலாசிரியர்கள் எழுதட்டும் என்று முடிவு செய்து, அந்த 6 பாடல்களை மட்டும் ”புதிய பாடலாசிரியர்” ஆன நானே எழுதி விட்டேன்...
நிருபர் : என்ன? 5 பாடல்களில் 6 நீங்கள் எழுதி விட்டீர்களா? அய்யோ... தல சுத்துதே... சரி சார்... முன்னாடி “யாவரும் கேளிர்”னீங்க, அப்புறம் “காருண்யம்”னீங்க... இப்போ திடீர்னு அதென்ன ஒரு ரொமாண்டிக் தலைப்பு “மன்மத அம்பு”....?
கமல் : பெயரளவில் மட்டுமே வேறுபட்டாலும், பொருளளவில் இந்த மூன்றுமே ஒன்று தானே....
நிருபர் : மன்மத அம்பு கேட்கவா, பார்க்கவா?
கமல் : முதலில் நவம்பரில் பார்க்க (ஏன்னா, அப்போ தானே ஆடியோ ரிலீஸ்), பின்னர் டிசம்பரில் பார்க்க (அப்போ தான் படம் ரிலீஸ்)...
நிருபர் : தமிழ் படங்களின் ஆடியோவை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யாமல் வெளிநாட்டில் ரிலீஸ் செய்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளாரே?
கமல் : அவர் சொன்னது வேறு ஒருவர் நடித்து வெளிவந்த வேறு ஒரு படத்திற்கு... இந்த படத்தின் பாடல் வெளியீட்டிற்கு அழைத்தால், அவரே வந்து பாராட்டி விட்டு செல்வார்... ஏனென்றால் எனக்கும் அவர்க்கும் பகையில்லை... இதை நான் வெளியில் சொல்வது முறையில்லை... சரி, அடுத்த கேள்வி?
நிருபர் : படத்தின் ஷூட்டிங்கின் நடுவே திரிஷா தொலைந்து விட்டாராமே?
கமல் : தொலையவில்லை... யாருடனோ நட்பு கொண்டு, அவர்களுடன் நாங்கள் எட்ட முடியாத “தொலைவில்” இருந்தார்.... கேட்டால், பழமையான விளையாட்டான கண்ணாமூச்சி ஆட்டம் என்றார்.... இது போன்ற “ஒளிந்து விளையாடும் விளையாட்டு” அவருக்கு மிகவும் பிடிக்கும்...
நிருபர் : எப்போதும் எல்லா படங்களிலும் காமெடி என்று சொல்லி மெட்ராஸ் பாஷை பேசுவீர்களே.... இந்த படத்திலும் அதே போன்ற காமெடி உண்டா.... கெட்டப் சேஞ்ச் புதுசா ஏதாவது ட்ரை பண்ணி இருக்கீங்களா?
கமல் : சமீப காலமாக அதாவது செந்தமிழ் மாநாடு நடந்த பிறகு, செந்தமிழை கரைத்து குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், செந்தமிழை தவிர மற்ற அனைத்துமே என் நாவுக்கு அந்நியமாகி போய் விட்டது... திஸ் இஸ் நாட் ய ஜோக் மேன்... யு கேன் சி இட் வென் தி மூவி ரிலீஸ்..... ஐ டோண்ட் ஹேவ் எனி கெட்டப் சேஞ்ச் இன் திஸ் மூவி...
நிருபர் : ஆஹா.... ஆங்கிலம் இங்கே செந்தமிழாக மாறி தமிழ் மழை பொழிந்தது... மிக்க மகிழ்ச்சி.... படத்தின் பாடல்களை எல்லாம் எந்தெந்த பாடகர்கள் பாடி இருக்கிறார்கள்??
கமல் : நல்ல குரல் வளம் கொண்டவர்களை பாட வைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்ததால், படத்தின் அனைத்து பாடல்களையும் நானே பாடிவிட்டேன்....
நிருபர் : படத்தின் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றையும் நீங்களே செய்து விட்டீர்களே!!??
கமல் : ஆம்... என் கலை தாகத்தை தணிக்க நான் எடுத்த சிறு முயற்சி தான் இந்த அனைத்து துறை கையாளல் அல்லது உங்கள் பாஷையில் ஆக்கங்களின் ஆக்ரமிப்பு...
நிருபர் : மன்மத அம்பு ஆஸ்கரை குறிவைக்குமா?
கமல் : நான் வச்ச குறி எப்போதும் தப்பிவிடும்.... ஆனாலும், குறித்து கொள்ளுங்கள்....இம்முறையும் குறி வைத்திருக்கிறேன்.. இதுவும் சரித்திரம் சலித்துக்கொள்ள இருக்கும் ஒரு நிகழ்வு தான்... (நீங்கள் அனைவரும் நினைக்கும் அந்த சோர்வு சலிப்பு இல்லை, சல்லடை வழியே கப்பிகளை அகற்றும் அந்த சலிப்பு).... இது புரிந்தால் நீங்கள் புத்திசாலி, புரியவில்லை என்றால் நான் அதிர்ஷ்டசாலி.....
நிருபர் : இன்றைய தமிழ் சினிமா?
கமல் : இன்றளவில் அது மூச்சிழந்து இருக்கிறது.... அதற்கு ஆக்ஸிஜன், அனாசின், நோவால்ஜின் மற்றும் க்ளைகோடின் தருவதற்கு நான் பல வழிகள் வைத்துள்ளேன்... "மன்மத அம்பு" பட ரிலீஸின் போது அதைப்பற்றி அறிவிப்பேன்... இப்போது எனக்கு நிறைய பணிகள் உள்ளது... பாரதி வருகிறேன் என்று அலைபேசியில் தெரிவித்தார்...பாரதி என்றால் பாரதிராஜா இல்லை... இவர் சந்தானபாரதி... கொஞ்சம் நீராகாரம் அருந்தும் பழக்கம் உள்ளவர்.. அப்படியே என் அடுத்த படம் பற்றி விவாதமும் நடைபெற போகிறது... பிற‌கு சந்திப்போம்..
நிருபர் : இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கி, எங்கள் கேள்விகளுக்கு ”தெளிவாய்” நல்ல முறையில் பதில் சொன்னமைக்கு மிக்க நன்றி சார்...

47 comments:

Anonymous said...

Super Gopi, Romba nalaiku piragu unga style la oru punching post,romba naal nu naan sonnathu nan parthu romba naal endru, neenga daily kalakkrathu enakku theryum, good diwali punch from you

Regards,
Dharma

Mrs. Krishnan said...

Ha ha ha ha
I'm laughing, laughing,laughingeh...

Nallathan kelvi(?) kekaringa sir!.

/இது புரிந்தால்
நீங்கள் புத்திசாலி,
புரியவில்லை என்றால் நான்
அதிர்ஷ்டசாலி ...../

neenga budhisaliya, illai avar adhirshtasaaliya? Enna mudivuku vandheenga?

Mrs. Krishnan said...

//நிறைய கேள்விகள் கேட்க
நினைத்தாலும் , அவரின்
கோபத்தை மனதில் கொண்டு சில
கேள்விகள் மட்டுமே கேட்டோம்...//

olaga nayagan avlo kovakararanga?

பெசொவி said...

ஒரு குழப்பவாதியைப் பேட்டி காண சென்ற உமது நிருபர் குழப்பவாதியா என்று நான் இந்த சமயத்தில் கேட்டால் நானே ஒரு குழப்பவாதியாக உங்கள் மனதில் தோன்றுவேனோ என்று ஒரே குழப்பமாக உள்ளதால், இந்தப் பேட்டியை பிரசுரித்த உங்களுக்கு ஒரு நன்றியை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!

Chitra said...

நிருபர் : எப்போதும் எல்லா படங்களிலும் காமெடி என்று சொல்லி மெட்ராஸ் பாஷை பேசுவீர்களே.... இந்த படத்திலும் அதே போன்ற காமெடி உண்டா.... கெட்டப் சேஞ்ச் புதுசா ஏதாவது ட்ரை பண்ணி இருக்கீங்களா?

கமல் : சமீப காலமாக அதாவது செந்தமிழ் மாநாடு நடந்த பிறகு, செந்தமிழை கரைத்து குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், செந்தமிழை தவிர மற்ற அனைத்துமே என் நாவுக்கு அந்நியமாகி போய் விட்டது... திஸ் இஸ் நாட் ய ஜோக் மேன்... யு கேன் சி இட் வென் தி மூவி ரிலீஸ்..... ஐ டோண்ட் ஹேவ் எனி கெட்டப் சேஞ்ச் இன் திஸ் மூவி...


.....தெளிவான பதில்!!!! :-)

Anonymous said...

கோபி நல்லாவே லொல்லு பண்ணியிருக்கீங்க..சிலது நிஜமோன்னு நினைச்சிட்டேன்..ஏஞ்சாமி கமல் மீது இம்பூட்டு கொலை வெறி...

R.Gopi said...

//
Anonymous said...
Super Gopi, Romba nalaiku piragu unga style la oru punching post,romba naal nu naan sonnathu nan parthu romba naal endru, neenga daily kalakkrathu enakku theryum, good diwali punch from you

Regards,
Dharma//

********

தர்மா ஜி...

முதலில் வருகை தந்து, பதிவை படித்து மகிழ்ந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....

R.Gopi said...

//Mrs. Krishnan said...
Ha ha ha ha
I'm laughing, laughing,laughingeh...

Nallathan kelvi(?) kekaringa sir!.

/இது புரிந்தால்
நீங்கள் புத்திசாலி,
புரியவில்லை என்றால் நான்
அதிர்ஷ்டசாலி ...../

neenga budhisaliya, illai avar adhirshtasaaliya? Enna mudivuku vandheenga?//

*********

வருகை தந்து பதிவை படித்து வாய் விட்டு சிரித்ததற்கு மிக்க நன்றி திருமதி கிருஷ்ணன்...

//neenga budhisaliya, illai avar adhirshtasaaliya? Enna mudivuku vandheenga?//

நான் அந்த முடிவை உங்களிடமே விட்டு விட்டேன்...

R.Gopi said...

//Mrs. Krishnan said...
//நிறைய கேள்விகள் கேட்க
நினைத்தாலும் , அவரின்
கோபத்தை மனதில் கொண்டு சில
கேள்விகள் மட்டுமே கேட்டோம்...//

olaga nayagan avlo kovakararanga?//

*******

கொஞ்சம் இல்லீங்கோ.... நெம்ப கோவக்காரருங்கோ.....

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஒரு குழப்பவாதியைப் பேட்டி காண சென்ற உமது நிருபர் குழப்பவாதியா என்று நான் இந்த சமயத்தில் கேட்டால் நானே ஒரு குழப்பவாதியாக உங்கள் மனதில் தோன்றுவேனோ என்று ஒரே குழப்பமாக உள்ளதால், இந்தப் பேட்டியை பிரசுரித்த உங்களுக்கு ஒரு நன்றியை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்//

வாங்க தல.... மிக்க நன்றி....

அதுவும் கடைசியில் நன்றி என்ற ஒரு ஒற்றை வார்த்தையை சொல்ல ஓராயிரம் வார்த்தைகளை முன்னே சொல்லிய உங்கள் குறும்புக்காகவே உங்களிடம் நான் ட்யூஷன் எடுக்க வேண்டும்....

இப்படியாக உங்களுக்கு நான் “அவர்” சார்பில் பதில் சொல்லிக்கொள்கிறேன்.

R.Gopi said...

//Chitra said...
நிருபர் : எப்போதும் எல்லா படங்களிலும் காமெடி என்று சொல்லி மெட்ராஸ் பாஷை பேசுவீர்களே.... இந்த படத்திலும் அதே போன்ற காமெடி உண்டா.... கெட்டப் சேஞ்ச் புதுசா ஏதாவது ட்ரை பண்ணி இருக்கீங்களா?

கமல் : சமீப காலமாக அதாவது செந்தமிழ் மாநாடு நடந்த பிறகு, செந்தமிழை கரைத்து குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், செந்தமிழை தவிர மற்ற அனைத்துமே என் நாவுக்கு அந்நியமாகி போய் விட்டது... திஸ் இஸ் நாட் ய ஜோக் மேன்... யு கேன் சி இட் வென் தி மூவி ரிலீஸ்..... ஐ டோண்ட் ஹேவ் எனி கெட்டப் சேஞ்ச் இன் திஸ் மூவி...


.....தெளிவான பதில்!!!! :-)//

******

இப்போ “அவர்” மிகவும் தெளிவானவராம். அவரே சொன்னார்...

வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சித்ரா...

R.Gopi said...

//தமிழரசி said...
கோபி நல்லாவே லொல்லு பண்ணியிருக்கீங்க..சிலது நிஜமோன்னு நினைச்சிட்டேன்..ஏஞ்சாமி கமல் மீது இம்பூட்டு கொலை வெறி..//

******

வாருங்கள் தமிழரசி அவர்களே...

வந்திருந்து, பதிவை படித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி...

இது லொள்ளு தானா என்று யோசிக்கும் வேளையில், ஒரு வேளை அப்படியே இருந்து விட்டால் என்ன செய்வது என்பதை பற்றி குறிப்பு எடுத்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்...

அப்படி இருக்கும் பட்சத்தில், மாற்று யோசனை ஏதாவது யோசனையில் உதிக்குமா அல்லது வேறு ஏதாவது உத்தி தான் செய்ய வேண்டுமா என்பது பற்றியும்............ யப்பா... போதும்.... முடியல.....

suneel krishnan said...

ஏன் இந்த கோல வெறி உங்களுக்கு ? :)
உண்மையிலயே சில கேள்விகளுக்கு நிஜமான பதிலோனு நெனைச்சுட்டேன்

R.Gopi said...

//dr suneel krishnan said...
ஏன் இந்த கோல வெறி உங்களுக்கு ? :)
உண்மையிலயே சில கேள்விகளுக்கு நிஜமான பதிலோனு நெனைச்சுட்டேன்//

********

வாங்க சுனீல் கிருஷ்ணன்....

என்ன அப்படின்னா இது உண்மையில்லையா!!? அய்யகோ... என்னே என் தமிழுக்கு வந்த சோதனை.

உண்மைய விட இது நல்லா இருக்கா. அப்படின்னா, ரசியுங்கள்...

நன்றி தலைவா....

Anonymous said...

ரொம்ம்ம்ம்ப தெளிவான பேட்டி தாங்க..
பேட்டி எடுத்த உங்களுக்கு ஒரு “ஓ“ போடணும்.

அது சரி.. கடைசி வரைக்கும்
“மன்மதன் அம்பு“ படத்தப்பத்தி எந்த பதிலும் வரவே இல்லையே.. அது தனிப் பேட்டியா வருதா என்ன?

R.Gopi said...

//இந்திரா said...
ரொம்ம்ம்ம்ப தெளிவான பேட்டி தாங்க..
பேட்டி எடுத்த உங்களுக்கு ஒரு “ஓ“ போடணும்.

அது சரி.. கடைசி வரைக்கும்
“மன்மதன் அம்பு“ படத்தப்பத்தி எந்த பதிலும் வரவே இல்லையே.. அது தனிப் பேட்டியா வருதா என்ன?//

********

வாங்க இந்திரா...

இதை விட தெளிவா யாருங்க உங்களுக்கு பேட்டி தந்துட போறாங்க..

என்னது... படத்த பத்தி எதுவுமே சொல்லலியா... கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அவரேன்னு சொன்னாரே... நல்லா கவனிங்க...

வெங்கட் நாகராஜ் said...

கலக்கலான கமல் பேட்டி. என்ன சொல்ல வரார்னு புரியாம இருந்தா தான் அது கமல் பேட்டின்னு கரெக்டா புரிஞ்சி வைச்சிருக்கீங்களே, நீங்க புத்திசாலி!

R.Gopi said...

//வெங்கட் நாகராஜ் said...
கலக்கலான கமல் பேட்டி. என்ன சொல்ல வரார்னு புரியாம இருந்தா தான் அது கமல் பேட்டின்னு கரெக்டா புரிஞ்சி வைச்சிருக்கீங்களே, நீங்க புத்திசாலி!//

*******

வாங்க வெங்கட்...

பதிவை ரசித்து படித்து, என்னை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி...

என்னை புத்திசாலி என்று நீங்கள் சொன்னதால், நான் அதிர்ஷ்டசாலி...

Sivaraj said...

Typical komali replies :-)

R.Gopi said...

//Sivaraj said...
Typical komali replies :-)//

******

வாங்க சிவராஜ்...

என்னங்க பூசணிக்காய இப்படி படார்னு நடுவுல வச்சு ஒடச்சுட்டீங்க.... இலைமறைவு, காய் மறைவு தெரியாதா?

Unknown said...

Gopi

top notch... typical kamala (intentionally typed) replies.

I am using your punch here:

Manmadhan Anbu... Nasugina Sombu

ha ha ha ha

Kamesh

R.Gopi said...

//Kamesh said...
Gopi

top notch... typical kamala (intentionally typed) replies.

I am using your punch here:

Manmadhan Anbu... Nasugina Sombu

ha ha ha ha

Kamesh//

******

ஆஹா...

வாங்க காமேஷ்....

நன்னா பத்த வச்சுட்டேளே!!??

Mrs. Krishnan said...

//Sivaraj said...
Typical komali replies :-)//
******
வாங்க சிவராஜ்...
என்னங்க பூசணிக்காய
இப்படி படார்னு நடுவுல
வச்சு ஒடச்சுட்டீங்க .... இலைமறைவு,
காய் மறைவு தெரியாதா?//

//Kamesh:top notch... typical kamala
(intentionally typed) replies.
I am using your punch here:
Manmadhan Anbu... Nasugina
Sombu//
----
Ellarum oru mudivodadhan irukeengala?
Enna irundhalum oru oscar (kidaikadha) nayaganai ivlo damage panradhu sari illai. Innum konjam adhigama edirparkiren.

R.Gopi said...

Mrs. Krishnan said...

Ellarum oru mudivodadhan irukeengala?
Enna irundhalum oru oscar (kidaikadha) nayaganai ivlo damage panradhu sari illai. Innum konjam adhigama edirparkiren.//

********

யப்பா....

வாங்க திருமதி கிருஷ்ணன்...

வந்த அனைத்து கமெண்டுகளிலும் இது தான் டெர்ரர் மோஸ்ட் கமெண்ட்....

r.v.saravanan said...

தீபாவளி வாழ்த்துக்கள் கோபி

R.Gopi said...

//r.v.saravanan said...
தீபாவளி வாழ்த்துக்கள் கோபி//

*******

வாங்க சரவணன்...

உங்களுக்கும், நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க லேட்டா வந்துட்டேன்

R.Gopi said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க லேட்டா வந்துட்டேன்//

*********

வாங்க சதீஷ்....

படிச்சீங்களா?? ஓகே...

பதிவை படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி....

kppradeep said...

Gopi,
Super and i am damn sure that if any one asks these questions to Kamal he will answer in the same way as you had written

R.Gopi said...

//kppradeep said...
Gopi,
Super and i am damn sure that if any one asks these questions to Kamal he will answer in the same way as you had written//

********

Pradeep ji...

Welcome and thanks for your wishes

Mrs. Krishnan said...

Gopi sir..,
தீபாவளி வாழ்த்துக்கள
தீபாவளி வாழ்த்துக்கள
தீபாவளி வாழ்த்துக்கள

R.Gopi said...

//Mrs. Krishnan said...
Gopi sir..,
தீபாவளி வாழ்த்துக்கள
தீபாவளி வாழ்த்துக்கள
தீபாவளி வாழ்த்துக்கள//

*******

வாங்க திருமதி கிருஷ்ணன் ...

வாழ்த்துக்கு மிக்க நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

என் தீபாவளி வாழ்த்தை இங்கே சென்று பாருங்களேன்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்.
http://edakumadaku.blogspot.com/2010/11/blog-post.html

Paleo God said...

உங்கள அடிச்சிக்க முடியுமா? ஹா ஹா

எதுக்கும் கடவுளப் பத்தி கேட்டிருந்தா எதுனா பத்தி சொல்லிருப்பாரே..! அடுத்த தபா நிருபர உசாரா செலெக்ட் பண்னுங்க ஜி :))

R.Gopi said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
உங்கள அடிச்சிக்க முடியுமா? ஹா ஹா

எதுக்கும் கடவுளப் பத்தி கேட்டிருந்தா எதுனா பத்தி சொல்லிருப்பாரே..! அடுத்த தபா நிருபர உசாரா செலெக்ட் பண்னுங்க ஜி :))//

*********

வாங்க ஷங்கர் ஜி....

எப்படி இருக்கீங்க... வருகை தந்து, பதிவை ரசித்து படித்து, பாராட்டிய நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி...

அடுத்த தடவை டெர்ரர் கேள்விகளை தயார் செய்து கொண்டு போகிறேன்..

எப்பூடி.. said...

நான் உங்களது பதிவை பாரட்டலாமென்று நினைத்தாலும் நண்பர்களுக்கிடையில் பாராட்டுவது சிறப்பாக இருக்காதென்பதால் பாராட்டாமலும் இருக்கமுடியாது, ஆனாலும் பாராட்டு மட்டும் மனிதனை வாழவைக்குமா என்ற கேள்விக்கு எனக்கு தெரிந்து நான் படித்த பாரதி கவிதைகளிலே 'சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போமென்ற' வரிகள் இன்றைய காலகட்டத்தில் கூறினால் சீமான் போன்றவர்களால் எதிர்க்கப்படுமென்பதால் அன்று பாரதி எழுதியது பொய்த்துவிடக்கூடாதென்பதற்க்காக இன்று அந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டால் நீங்கள் இந்தியா வரும்போது இலங்கையிலிருந்து கால்நடையாக நடந்துவந்து நேரிலே உங்களை சந்தித்து உங்களுக்கு அப்போது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

ஆமாம் யாரந்த ""செந்தேள்?" காமடி பீசா? இல்லை களண்ட பீசா?

Unknown said...

ஆஹா ரசிக்கும்படி இருந்துச்சு..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

R.Gopi said...

வாங்க எப்பூடி....

வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

//ஆமாம் யாரந்த ""செந்தேள்?" காமடி பீசா? இல்லை களண்ட பீசா?//

அவர் மறை கழண்ட காமெடி பீஸ்....

R.Gopi said...

// சிநேகிதி said...
ஆஹா ரசிக்கும்படி இருந்துச்சு..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

*****

ஹா...ஹா... ஹா....

வாங்க சிநேகிதி...

பதிவை ரசித்து படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி....

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

சுபத்ரா said...

சூப்பர் ஸ்டார் ரசிகர் உலக நாயகனைப் பற்றி எழுதினால் இப்படித் தான் இருக்கும்.

ஆனால், மொழிநடை பிரமாதம். கலக்கிட்டீங்க அண்ணா.

R.Gopi said...

//சுபத்ரா said...
சூப்பர் ஸ்டார் ரசிகர் உலக நாயகனைப் பற்றி எழுதினால் இப்படித் தான் இருக்கும்.

ஆனால், மொழிநடை பிரமாதம். கலக்கிட்டீங்க அண்ணா//

***************

வாங்க சுபத்ரா....

வருகை தந்து, பதிவை ரசித்து படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி....

இந்த மாதிரி காமெடியா எழுதணும்னு முடிவு பண்ணியாச்சுன்னா, அதுல சூப்பர் ஸ்டார் கூட வந்து மாட்டுவார்.... வேணும்னா, இங்க போய் பாருங்களேன்.... சூப்பர் ஸ்டார மட்டும் விட்டுடுவோமா என்ன!?

"எந்திரன்" ரஜினிகாந்த் நேர்காணல், பரபரப்பு தகவல்கள்
http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_11.html

Anonymous said...

சூப்பர் கோபி ஜி . இதை எல்லாம் படிக்கும் போது கமலுக்கும் உங்களுக்கும் நெறைய தொடர்பு இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது . அதே சமயத்தில் அந்த தொடர்பின் பயனாக இந்த போஸ்ட் ஐ எங்களுக்கு தந்ததில் மிக்க மகிழ்ச்சி
இவர் படங்கள் ஓடாது என்று நான் சொல்ல வில்லை, ஓடினால் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னேன்.
--
Regards..
PRABHU

R.Gopi said...

//Anonymous said...
சூப்பர் கோபி ஜி . இதை எல்லாம் படிக்கும் போது கமலுக்கும் உங்களுக்கும் நெறைய தொடர்பு இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது . அதே சமயத்தில் அந்த தொடர்பின் பயனாக இந்த போஸ்ட் ஐ எங்களுக்கு தந்ததில் மிக்க மகிழ்ச்சி
இவர் படங்கள் ஓடாது என்று நான் சொல்ல வில்லை, ஓடினால் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னேன்.
--
Regards..
PRABHU//

*******

வாங்க பிரபு...

இவருக்கும் எனக்கும் தொடர்பு இருக்கும் என்று கீழ்ப்பாக்கத்திற்கு வழி சொன்னமைக்கு மிக்க நன்றி....

இப்படியே விட்டா, என்னையும் பாதி “குணா” ஆக்கி விடுவீங்க போல இருக்கே...

Sivaraj said...

Gopiji, we expect a funny review of Manmadhan ambu in your trademark style once it releases.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை படிச்ச பல பதிவர்கள் கீழ்பாக்கத்துல இருக்காங்களாமே உண்மையா?# டவுட்டு

R.Gopi said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பதிவை படிச்ச பல பதிவர்கள் கீழ்பாக்கத்துல இருக்காங்களாமே உண்மையா?# டவுட்டு//

********

ஹா...ஹா...ஹா...

ரமேஷ் ஜி.... இந்த பதிவை படித்து விட்டு இன்னமும் தெளிவாய் இருப்பதாய் நான் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன்...

ஆனா, எங்க போகணும்னு நெனச்சு பஸ்சுல ஏறினாலும், டிக்கெட் வாங்கறப்போ, கீழ்ப்பாக்கம் போகறதுக்கு ஒரு டிக்கெட் குடுங்கன்னு கேட்டுவேனோன்னு பயமா இருக்கு..

R.Gopi said...

//Sivaraj said...
Gopiji, we expect a funny review of Manmadhan ambu in your trademark style once it releases.//

*********

Sure Sivaraj.....

R.Gopi said...

//Sivaraj said...
Gopiji, we expect a funny review of Manmadhan ambu in your trademark style once it releases.//

*********

Sure Sivaraj.....