Wednesday, April 6, 2011

கேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-1)


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக வுடன் கூட்டணி அமைத்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட தே.மு.தி.க.தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" ஒரு "உற்சாக" விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்... அதில் கலந்து கொண்ட நமது சிறப்பு நிருபர் "டாஸ்மாக்கார்" அளித்த சுறுசுறு ரிப்போர்ட், இதோ..

முதலில் தே.மு.தி.க தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" கட்சி தொண்டர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்...

இங்க வந்து இருக்கற எல்லாருக்கும் வணக்கம்... நான் ரெம்ப நல்லவன்னு "அம்மா" சொன்னாய்ங்க... அம்மான்னா அவிய்ங்க இல்லடா... இவிய்ங்க வேற‌டா பரதேசி... என் வீட்டம்மா... பிரேமா....
பந்தலுக்கு உள்ளார நெறைய பேரு வந்தத பாத்தேன்... ஆனா, இங்க பாதி கூட்டம்தான் இருக்கு... மிச்சம் இருக்கறவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும், ஆனா, சொல்ல மாட்டேன்... அவிய்ங்களாவே இங்க வந்து பந்தல்ல ஒக்காரணும்... இன்னும், கொஞ்ச நேரத்துல இந்த மீட்டிங் முடிஞ்சதும், நானே என் கையால ஒங்க எல்லாருக்கும், சப்ளை பண்றேன்... யேய்.... பிரியாணிய சொல்றேன்...

இந்த தேர்தல்ல கூட்டணி வச்சதால இரண்டாவது எடத்துல இருக்கோம்..அடுத்த தேர்தல்ல, மொத எடத்துக்கு வரணும்... அதுக்கு ஏதாவது ஐடியா கொடுங்க.. அவிய்ங்கள, நான் தனியா கவனிக்கறேன்...

தலீவா... இந்த தடவ அ.தி.மு.க. வோட சேர்ந்து போட்டி போடறோம்... அடுத்த தடவ, "தல" கிட்ட சொல்லி, அவிய்ங்கள போட்டி போட வேணாம்னு சொன்னா, நம்ம அடுத்த எலக்சன்ல மொத எடத்துக்கு வந்துடுவோம்...

டேய்... பரதேசி... நீ எந்த கச்சி ஆளுடா... மவனே.. நான் அங்க வந்தா, ஒன்னிய பெண்டு எடுத்துடுவேன்.. ஐடியா குடுக்கற மூஞ்சிய பாரு... ஓங்கி குத்தவா? (முஷ்டியை மடக்கி காற்றில் ஓங்கி குத்துகிறார்....)... இதை பார்த்த, முதல் நான்கு வரிசை தொண்டர்கள் படை டர்ராகிறது...

உருப்படியா ஏதாவது சொல்றதுன்னா சொல்லுங்க... இல்ல, வந்த வேலைய பார்க்க போங்க... உள்ளுக்கு ரூம்புல தான் சரக்கு இருக்கு... அடிதடி பண்ணாம, முடிங்க... அந்த பக்கம், பிரியாணி பார்சல் இருக்கு... ஆளுக்கு ஒரு பார்சல் மட்டும் எடுத்துட்டு போங்க... போன தடவ ஆயிரம் பார்சல் வந்தது...அத்த, வந்து இருந்த ஐநூறு ஆளுய்ங்களே ஆட்டைய போட்ட மாதிரி இல்லாம.... என்று ஓவர் சவுண்ட் விடுகிறார்...
கேப்டனின் கண்கள் சிவந்து, பெரிதாகி, எந்நேரமும் தெறித்து விழுவதை போல் இருப்பதை கண்டு, சுதீஷ் அலறுகிறார்... இவன் வேற... ஏண்டா... இவ்ளோ பக்கத்துல வந்து நிக்கற... என்று சுதீஷை சீறுகிறார்...

மக்களே...நேத்து ஒரு பொஸ்தகம் படிச்சேன்... அது ரொம்ப நல்ல பொஸ்தகம்...

தலீவா... அது இன்னா பொஸ்தகம்?? எதுனா பலான பலானதா??

டேய் அடங்குடா பரதேசி... நான் எல்லா பொஸ்தகமும் தான் படிக்கறேன்... இப்போ கூட என் வண்டியில ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், கல்கண்டு எல்லாம் இருக்கு... திருப்பி போறப்ப படிக்கறதுக்கு... இது வேற பொஸ்தகம்டா.. 1330 குறள், பெரிய தாடி வெச்ச ஒருத்தரு எழுதுனது... (பெரியார் இல்லடா.... கபோதி... இவரு வேற...).. அங்... அவரு பேரு நெனவுல வரலியே... இனிமே டாஸ்மாக் கொஞ்சம் கொறைக்கணும்... எப்போ, எங்க பார்த்தாலும், மங்கலாவே தெரியுது... புத்தி கூட‌ எப்போவும் போல‌வே மந்தமா, தடுமாறிகிட்டே இருக்குது...

இப்போது மெதுவாக திரும்பி பக்கத்தில் இருக்கும் பண்ரூட்டியை பார்க்க, அவர் திருவள்ளுவர், திருக்குறள் என்று எடுத்து கொடுக்க...

ஆங்... அந்த பொஸ்தகம் பேரு "திருவள்ளுவர்"...எழுதுனது "திருக்குறள்"...

அய்யோ..அய்யோ என்று தலையில் பண்ரூட்டி அடித்து கொள்வதை கவனித்த விஜயகாந்த் தன் சிவந்த விழிகளை பெரிதாக்கி, உருட்டி பார்க்க.... பண்ரூட்டி அலறிக்கொண்டே பின்னால் சாய்கிறார்...

அவர் சாய்வதை பார்த்த சிலர், சோடா கேட்க, ஒரு தொண்டர், ஒரு ஃபுல் பாட்டிலும், சோடாவும், கிளாஸூம்... கூடவே சிப்ஸூம் எடுத்து வருவதை பார்த்து கேப்டன் கர்ஜனை செய்கிறார்...

சோமாறி... மயங்கி விழுந்தவனுக்கு, மொதல்ல வெறும் சோடா குடுடா... எழுப்பி, வேணுமான்னு கேட்டு சரக்கு கலக்கி குடு... எல்லாத்தையும், நானே சொல்லி தரணுமாடா. எவ்ளோ வருசம் என்கூட இருக்க... இது கூட தெரியலியா என்று ஜெர்க்குகிறார்...

சரி. சரி.. மொதல்ல அவர எழுப்பி உள்ளார இருக்கற‌ ரூம்புல படுக்க வைங்க... என்னோட ஏ.சி.ரூம்புக்கு யாரும் போயிடாதீங்க... அங்க எனக்கு தனியா காய்ச்சின பெஸல் சரக்கு இருக்கு...தப்பித்தவறி அத எடுத்து யாராவது அடிச்சு காலி பண்ணுணீங்க, மவனே, ஒரு பய இந்த எடத்த விட்டு உருப்படியா போக முடியாது...என்று ச‌வுண்ட் விடுகிறார்...

பெருமூச்சு வாங்கி விட்டு, சிறிதே போதை தெளிந்த நிலையில், அந்த பொஸ்தகம் பேரு "திருக்குறள்", அத்த எழுதுனவரு அந்த பெரிய தாடி வெச்ச "திருவள்ளுவர்" என்று சரியாக சொல்லிவிட்டு, ஹீ...ஹீ... என்று இளிக்கிறார்... அப்போது பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு தொண்டர் ஃபோட்டோ எடுக்க... அந்த ஃபோட்டோவ வெளியே பெரிசா போஸ்டர் அடித்து ஒட்ட சொல்கிறார்...

பொஸ்தகம் முழுசா படிச்சேன்... அதுல ஒரு கொறளு நெனவுக்கு வந்துச்சு... சொல்லவா என்று கூட்டத்தை பார்த்து கேட்க.. பசியில் எல்லா தலையும் ஒரு புறமாய் சாய, கேப்டன் சரி என்கிறார்கள் என்று எண்ணி, உற்சாசமாகி சொல்ல ஆரம்பிக்கிறார்...

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து...

அப்படின்னா என்னன்னு யாருக்காவது தெரியுமா? சொல்றேன் கேளுங்க...

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்று கூறப்படுவது..

ஆனா, இப்போ கருணாநிதி ஆச்சில மக்களுக்கு நோய் வருது... விளைச்சலே இல்ல.. பொருளாதார வளம் அவரு வீட்டுல மட்டும் தான் இருக்கு... இன்ப நிலை.. கலைஞர் டி.வி.ல காட்டுற "மானாட மயிலாட" தான் இன்ப நிலையா?? உரிய பாதுகாப்பு... நாட்டுல எங்க இருக்கு பாதுகாப்பு...

காலைல கூட நான் வரப்போ ஒருத்தன் என் மேல தூக்கி போடறதுக்கு ஒரு பெரிய பாறாங்கல்லோட வந்தான்... அப்புறம் அவன கூப்பிட்டு சரக்கடிக்க ரூ.200 குடுத்தேன்... கம்முனு போயிட்டான்... என்ன மாதிரி ஒரு பெரிய கச்சி தலைவருக்கே இந்த நாட்டுல பாதுகாப்பு இல்ல...

(யப்பா... ஒரெ ஒரு கொறளு சொல்றதுக்குள்ளவே, வேர்த்து, விறுவிறுத்து, நாக்குல நொரை தள்ளிப்போச்சு.. இனிமேல அந்த கொறளு பொஸ்தகத்த கண்ணால கூட பாக்க கூடாதுடா அய்யனாரே...).

இன்னும் நெறைய விசயம் இருக்கு... அடுத்த வாரம் மீட்டிங்ல சொல்றேன்... போயி எல்லாரும், வந்த வேலைய தொடங்குங்க... சரக்கு, பிரியாணி எல்லாம் உள்ளாக்க இருக்கற ரூம்புல இருக்கு...நான் வர்ட்டா..ஆங்ங். என்று சொல்லிவிட்டு பின்வாசல் வழியாக மாடியில் இருக்கும் தன் ரூம்புக்கு எஸ்கேப் ஆகிறார்...

(கேப்டனின் அதிரடி தொடரும்....)

25 comments:

Chitra said...

டேய் அடங்குடா பரதேசி... நான் எல்லா பொஸ்தகமும் தான் படிக்கறேன்... இப்போ கூட என் வண்டியில ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், கல்கண்டு எல்லாம் இருக்கு... திருப்பி போறப்ப படிக்கறதுக்கு... இது வேற பொஸ்தகம்டா.. 1330 குறள், பெரிய தாடி வெச்ச ஒருத்தரு எழுதுனது... (பெரியார் இல்லடா.... கபோதி... இவரு வேற...).. அங்... அவரு பேரு நெனவுல வரலியே... இனிமே டாஸ்மாக் கொஞ்சம் கொறைக்கணும்... எப்போ, எங்க பார்த்தாலும், மங்கலாவே தெரியுது... புத்தி கூட‌ எப்போவும் போல‌வே மந்தமா, தடுமாறிகிட்டே இருக்குது...


.......செமத்தியா காலை வாரிட்டீகளே! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

வெங்கட் நாகராஜ் said...

நல்லா அடிச்சு [!] ஆடறாரே [!!] உங்க கேப்டன் :) நல்ல பகிர்வு போங்க!

Menaga Sathia said...

செம காமெடி!!

பெசொவி said...

உங்க பதிவுல ஒரு பெரிய குறை இருக்கு....................................................................................கேப்டன் ஏன் புள்ளிவிவரம் சொல்லலை?

:)

R.Gopi said...

வருகை தந்து, பதிவை படித்து, இண்ட்லியில் வாக்களித்து, பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி..

சித்ரா
வெங்கட் நாகராஜ்
எஸ்.மேனகா
பெயர் சொல்ல விருப்பமில்லை

அடுத்த இரண்டாவது பகுதியில் இன்னும் டெர்ரர் எல்லாம் காத்திருக்கிறது... வெயிட்டீஸ்ஸ்ஸ்..

கடம்பவன குயில் said...

ஆஹா......இன்னிக்கி உங்ககிட்ட கேப்டன் மாட்டிகிட்டாரா !!! தாக்கு தாக்குன்னு தாக்கிருகீங்களே. செம காமெடி . ரொம்ப நல்லாருந்தது. ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. கேப்டன் உங்கள தேடிக்கிட்டு இருக்காராம்

R.Gopi said...

// KADAMBAVANA KUYIL said...
ஆஹா......இன்னிக்கி உங்ககிட்ட கேப்டன் மாட்டிகிட்டாரா !!! தாக்கு தாக்குன்னு தாக்கிருகீங்களே. செம காமெடி . ரொம்ப நல்லாருந்தது. ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. கேப்டன் உங்கள தேடிக்கிட்டு இருக்காராம்//

ஹா...ஹா...ஹா...

கேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-2) http://edakumadaku.blogspot.com/2011/04/2.html

இங்க போய் பாகம் - 2 படிச்சுட்டு அப்புறமா சொல்லுங்க..

அம்பிகா said...

இவ்ளோ தெளிவா கேப்டன் பேசுறாரா!!!!

R.Gopi said...

//அம்பிகா said...
இவ்ளோ தெளிவா கேப்டன் பேசுறாரா!!!!//

*****

ஹா...ஹா...ஹா...

வாங்க அம்பிகா... டேமேஜ் லெவல் உங்க கிட்ட இருந்து கேப்டனுக்கு ஜாஸ்தியா இருக்கே...

Jaleela Kamal said...

mm தப்பு தப்புன்னு தப்பிட்டீஙக

Jaleela Kamal said...

ஓ தொடருமா?

R.Gopi said...

வாங்க ஜலீலா மேடம்...

ஆமாம்... ஓவரா தான் தப்பிட்டேன் போல இருக்கு...

இரண்டாவது பாகம் சுடச்சுட எடக்கு மடக்குல போஸ்ட் பண்ணி இருக்கேன்... பாருங்க....

Mrs. Krishnan said...

/அய்யோ..அய்யோ என்று தலையில்
பண்ரூட்டி அடித்து கொள்வதை கவனித்த
விஜயகாந்த் தன் சிவந்த
விழிகளை பெரிதாக்கி ,
உருட்டி பார்க்க....
பண்ரூட்டி அலறிக்கொண்டே பின்னால்
சாய்கிறார் .../
-
(உடனே கேப்டன் தன் மைத்துனரை பார்த்து "ரமேஷு இங்க வந்து இவருக்கு தண்ணி கிண்ணி குடுத்து எழுப்பிவிடு" என்கிறார்.

மைத்துனர் தண்ணீர் பாட்டிலுடன் வேகமாக கேப்டனிடம் வந்து 'மச்சான் என் பேரு ரமேஷ் இல்ல, சுதீஷ் என்கிறார்'. உடனே கேப்டன் கண்கள் சிவக்க அவர் தலையில் 'நங் நங்' கென கொட்டி 'எனக்கு தெரியாதா எனக்கு தெரியாதா?' என ஆவேசமாக உறும இதை மயக்க நிலையிலேயே உணர்ந்த பண்ருட்டி மயக்கம் தெளிந்து அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.)

ஹி... ஹி... ஏதோ என்னால முடிஞ்சது.

R.Gopi said...

வாங்க திருமதி கிருஷ்ணன்...

உங்களால முடிஞ்சதுன்னு சொல்லி, லேட்டஸ்டா நடந்த கலவர நிகழ்ச்சியை உள்ளே இணைத்ததில் இருந்த உள்குத்தை கலவரத்துடன் ரசித்தேன்...

Sivaraj said...

Enga Gapton-a kindal pannunadhukaga ungala naal muluka viruthagiri paaka vaikanum

R.Gopi said...

//Sivaraj said...
Enga Gapton-a kindal pannunadhukaga ungala naal muluka viruthagiri paaka vaikanum//

********

வாங்க சிவராஜ்...

உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி? “விருதகிரி” போஸ்டர் பார்த்து பயந்தததுக்கே எனக்கு 3 நாள் முழுசா வேப்பிலை அடிச்சாங்க...

Unknown said...

Supper commedy

R.Gopi said...

// rishiram said...
Supper commedy//

Welcome Boss...

Please read Part-II also and comment..

R.Gopi said...

//அபு ஆசிம் said...
கலக்கல் காமெடி//

******

வாங்க அபு ஆசிம்...

காமெடியின் தொடர்ச்சியான பாகம் - 2 இங்கே படிச்சுடுங்க...

கேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-2) http://edakumadaku.blogspot.com/2011/04/2.html

ஆனந்தி.. said...

super boss...super..:))

ஸாதிகா said...

பதிவர்களா சேர்ந்து விழா எடுத்து காமெடி திலகம் என்று பட்டமளிப்பு விழா எடுத்தால் பொருத்தமாக இருக்கும்.

R.Gopi said...

வாங்க ஆனந்தி மற்றும் ஸாதிகா :

கேப்டனின் அதிரடி காமெடி தொடர்ச்சியான பாகம் - 2 இங்கே இருக்கு, படிச்சுடுங்க...

கேப்டன் - அதிரடி மீட்டிங் (பாகம்-2) http://edakumadaku.blogspot.com/2011/04/2.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி? “விருதகிரி” போஸ்டர் பார்த்து பயந்தததுக்கே எனக்கு 3 நாள் முழுசா வேப்பிலை அடிச்சாங்க...
//

நீங்கவேற... எனக்கு மூணு நாளா மூச்சா வரல பாஸ்..
:-)

அம்பாளடியாள் said...

வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......

Shiva Suja said...

எப்படி கோபி இப்படி எல்லாம் தோணுது?