Thursday, February 5, 2015

டேபிளார்

நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்....

இது அதுவா, இதுவா, அவரா, இவரா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படித்தால் பிடித்தாலும் பிடிக்கலாம்....

இந்த பதிவு வழக்கம் போல ஒரு ஜோக்கிரி பதிவு தான்..... யாரையும் குறிப்பிடுவது அல்ல.....

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

ஒரு காலைப் பொழுதில் தன் ஆட்டையை போடும் முயற்சியில் சற்றும் மனம் தளராத டேபிளார் தன் கனத்த சரீரம் மற்றும் ஜோல்னா பையுடன் வழக்கமான ஆட்டை வேட்டைக்கு கிளம்புகிறார்…..
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
டேபிளார் : சார் வணக்கம்….

தயாரிப்பாளர் : வணக்கம்….. நீங்க யாரு?

என் பேரு டேபிளார்.... 

பேரே டேபிளாரா? அது சரி….. அதென்ன பெரிய ஜோல்னா பை…. ஏகப்பட்ட கதை எழுதி எடுத்துட்டு ரொம்ப சிரத்தையா சான்ஸ் தேடறீங்களோ?….. உங்களோட விடாமுயற்சி எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு…..

நான் ஒரு எதிர்கால டைரக்டர்…….. ஜோல்னா பையில கதையா? ஹா ஹா ஹா…. டாக்டர் என்னிய டயட்ல இருக்க சொன்னாரு…. அதான், ஜோல்னா பை எடுத்துட்டு நேரா என்னோட ஃப்ரெண்ட் கடைக்கு போயி கொஞ்சமா ஒரு 2-3 கிலோ ஸ்நாக்ஸ் புடிச்சுட்டு வந்தேன்…. இது தீர்றதுக்குள்ளார டிஃபனுக்கு ஒரு வழி பண்ணனும்…….

எதிர்கால டைரக்டர்னு சொன்னீங்களே? அப்படின்னா……….?

அதாவது அடுத்தவன் எடுத்த படத்தை கன்னாபின்னான்னு திட்டறதுக்காக நிறைய டெஸ்க்/டேபிள் ஒர்க் பண்ணினதால டேபிளார்னு பேரு…. எவ்ளோ நல்லா படம் எடுத்து இருந்தாலும் திட்டிடுவேன்…… அப்புறமா டைரக்டர் கிட்ட இருந்து ஃபோன் வரும்….. அவரை மீட் பண்ணி ஒரு கவர் வாங்கிட்டு அவரை என்னோட ஃப்ரெண்டா ஆக்கிட்டு அவரைப் பத்தி ஆஹா, ஓஹோன்னு எழுதுவேன், சொல்லுவேன்….. எதிர்கால டைரக்டர்னா, எவனாவது இளிச்சவாயன் மாட்டினா அவனை ஆட்டைய போட்டு எதிர்காலத்துல ஒரு படம் எடுத்து காட்டுறது…..

அப்படியா? வெளங்கிடும்….. சரி, இதுக்கு முன்னாடி ஏதாவது குறும்படம் அளவுக்காவது எடுத்து இருக்கீங்களா?

ஆமாம் சார்…. ஒரு சூப்பர் படம் எடுத்து இருக்கேன்….. ஒரு பாம்பு படம் எடுத்தப்போ அதை அழகாக படம் எடுத்து இருக்கேன்…. இங்கே பாருங்க…. அந்த கலர்ஃபுல் ஃபோட்டோ!!

என்னங்க இது, ஃபோட்டோவுல எதுவுமே இல்லாம காலியா இருக்கு? பாம்பு எங்க?

அது ஃபோட்டோ பிடிச்சதும் போயிடுச்சுங்க…….

மேட்டர் அப்படி போகுதா? அதை விடுங்க….. சினிமாவுல யாரையாவது தெரியுமா?

ஓ….. நல்லா தெரியுமே… இப்போ தான் உலக நாயகனை பார்த்துட்டு வர்றேன்….

என்னது? உலக நாயகனைத் தெரியுமா? பார்த்துட்டு வர்றீங்களா? என்ன சொன்னாரு?

ஒண்ணும் சொல்லல…. இப்போ தான் உத்தம வில்லன் போஸ்டர்ல பார்த்துட்டு வர்றேன்…. படா ஷோக்கா இஷ்டைல் பண்றாரு….. ஹீ ஹீ ஹீ…….

அட கெரகமே….. எதுவும் சொல்றதுக்கு இல்ல…...சரி, சினிமா பத்தி ஏதாவது படிச்சு இருக்கீங்களா?

சினிமா எடுக்க தெரியாத அளவுக்கு படிச்சுருக்கேன்…. எல்லாரும் எடுத்த சினிமாவ நொட்டை, நொள்ளைன்னு சொல்லி இருக்கேன்…. எப்படி சினிமா வியாவாரம் பண்ணனும்னு ஒரு புஸ்தகம் எழுதி இருக்கேன்…..(ஆனா அது என் படத்துக்கு ஒர்க் அவுட் ஆவாதுன்னு தெரியும்)… கேட்காதே கிடைக்காதுன்னு எல்லாருக்கும் சொல்லி இருக்கேன்…. அப்படியே, நிறைய ஹோட்டல் போய் வகை வகையா சாப்பிட்டு இருக்கேன்…. இருங்க…. நாலு கடலை உருண்டைய உள்ளார தள்ளிட்டே பேசுவோம்…..

சினிமா எடுக்கறதுக்கும் ஹோட்டல் போறதுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கே…. இருங்க, கொஞ்சம் முறுக்கு உள்ளார தள்ளிட்டே சொல்றேன்…. எல்லா படத்தோட டிஸ்கஷனுக்கும் போயிடுவேன்…. நான் இது வரைக்கும் சாப்பிடாத ஒவ்வொரு ஹோட்டல்லயும் டிஸ்கஷன் வச்சுக்கலாம்னு கூட்டிப் போய் அவங்க காசுல ஓசியில எல்லாத்தையும் சாப்பிட்டுறுவேன்…. இல்லேன்னா, எல்லா ஹோட்டல்லயும் போயி எப்படி சாப்பிடறது?

ஓகே….. சினிமான்னா என்ன? சொல்லுங்க பார்ப்போம்…..

சினிமான்னா, தியேட்டர் உள்ளார ஃப்ரெண்ட கூட்டிட்டு ஓசியில போய் உட்காரணும்…. அங்கே ஸ்க்ரீன் வெள்ளையா இருக்கும்….. சேர், ஃபேன் எல்லாம் போட்டு இருப்பாங்க…… டிக்கெட் வாங்கி அம்புட்டு பேரும் உட்கார்ந்ததும் படம் போடுவாய்ங்க….. சினிமா ஒரு 2 – 2 ½ மணி நேரம் ஓடும்….. நடுவுல இண்டர்வெல் மணி அடிச்சு வெளியே விடுவாங்க….. அப்போ ஓடிப்போய் சமோசா, பாப்கார்ன், முறுக்கு, காஃபி எல்லாம் சாப்பிடலாம்…. கூட வர்ற எந்த ஃப்ரெண்டாவது ஓசியில வாங்கித் தந்தா!!

ஓ….. எல்லாமே ஓசிதானா? இந்தளவுக்கு சினிமா பத்தி தெரியுமா…..சரி, அப்படியே ஒரு ஒன்லைன் சொல்லுங்க பார்ப்போம்….

ஒரு ரோடு…. அதுல ஒரே ஒரு கோடு….

யோவ்….. என்ன நக்கலா? ஒன்லைன்னா, ஒரு வரியில ஒரு கதை சொல்லுன்னு அர்த்தம்……

ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட கதை சரி….

ரொம்ப அருமையான ஒன்லைனர்….. இப்போதைக்கு எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரியணும்….. உங்களுக்கு உள்ளூர் படம் பத்தி மட்டும் தான் தெரியுமா, இல்லேன்னா உலகப் படம் பத்தியும் ஏதாவது தெரியுமா?

என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க….. நான் எல்லா ஒலகப் படங்களும் பார்த்து இருக்கேன்…..

அப்படியா, வாவ்வ்வ்வ்…… எங்கே பார்த்தீங்க? ஏதாவது உலகப் பட விழாக்கள்லயா?

நீங்க வேற….. அங்கே எல்லாம் எதுக்கு போகணும்….. பர்மா பஜார் பக்கமா போறப்போ எல்லாம் டிவிடி விக்கற கடையில இருக்கற எல்லா ஒலகப் படங்களோட டிவிடிய எடுத்து, அந்த போஸ்டர் எல்லாம் பார்த்துடுவேன்…. இதுவரைக்கும் இப்படி ஆயிரக்கணக்கான ஒலகப் படங்கள் பார்த்து இருக்கேன்… சில படங்களோட போஸ்டர் செக்ஸிலி ஃபைன் & டிவைனா இருக்கும்……

ஆஹா…. ஓஹோ…. உங்களோட சினிமா அறிவு நெனச்சா எனக்கு புல்லரிக்குது……. உங்க கதை ரெம்ப நல்லா இருக்கு….. அந்த நரி ஒன்லைனர் சூப்பர்….. சொல்லி வைக்கறேன்….. நரி கிடைச்சதும் ஆள் அனுப்பறேன்…. ஸ்டோரி டிஸ்கஷனுக்கு வாங்க…..

ஓ அப்படியா, தேங்க்ஸ் சார்….. இவ்ளோ நேரம் ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணிட்டோம்…… வாங்களேன்….. பக்கத்து தெருவுல இருக்கற முத்து மெஸ் போயி லைட்டா டிஃபன் சாப்டுகிட்டே பேசுவோம்…. அங்க டிஃபன் எல்லாம் டிவைன்….. சாப்பிட்டுட்டே நம்ம படத்தோட கதைய டிஸ்கஸ் பண்ணுனா ஸ்டோரி இன்னமும் கூட நல்லா வரும்….

என்னது ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணினோமா? நீங்க தான் இவ்ளோ நேரம் ஜோல்னா பையில இருக்கற ஐட்டம் எல்லாம் எடுத்து ஏப்பம் விட்டுகிட்டே இருந்தீங்க…… சரி, கையில, பையில ஏதாவது துட்டு இருக்கா….. இருந்தா சொல்லுங்க அப்பாடக்கர் டைரடக்கரே உடனே சாப்பிட போவோம்….

துட்டா…….. அப்படின்னா என்னா சார்…. நான் எப்போவும் வெளியே கெளம்பறப்போ பர்ஸை வீட்டுல வச்சுட்டு வர்றது தான் பழக்கம்….. நீங்க டிஃபன் வாங்கி தந்தா சாப்பிடறேன்…. ஹீ ஹீ ஹீ…..

அப்படியா…. இந்தாங்க ஜில்லுனு ஒரு கிளாஸ் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு கெளம்புங்க…..

சார்…. அட்லீஸ்ட் இந்த ஜில்ல் தண்ணி கூட மிக்ஸ் பண்ண ஏதாவது சரக்காவது…..!!!!!!!!!!!!

யோவ் செக்யூரிட்டி…. இந்தாள கழுத்து பிடிச்சு வெளியே தள்ளுய்யா…. ரோட்டுல போறப்போ, வர்றப்போ எங்கே பார்த்தாலும் போட்டு நாலு சாத்து சாத்துய்யா….. இப்போ இவனை வெளியே தள்ளி கேட் சாத்துய்யா……

இவனுக்கு கதை எழுதறதுக்கு, டைரக்ட் பண்றதுக்கு சரக்கு இருக்கோ இல்லையோ, அடுத்தவன ஆட்டைய போட்டு நல்லா சாப்பிடறதுல, சரக்கு அடிக்கறதுல நிறைய திறமை இருக்கு….. அது அவனோட தொப்பைய பார்த்தாவே தெரியுது……

இதுக்கெல்லாம் கவலைப் பட்டா ஆட்டைய போட முடியுமா என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்ட டேபிளார் தன் ஜோல்னாவில் கடைசியாக இருக்கும் ஒரு முறுக்கு பாக்கெட் பிரித்து நொறுக்கிக் கொண்டே அடுத்ததாக எந்த கம்பெனியை ஆட்டைய போடலாம் என்று பிளான் பண்ணிக் கொண்டே தன் ஸ்வீட் ஸ்டால் நண்பருக்கு மிஸ்டு கால் தந்து விட்டு (ஜோல்னா பையில ஸ்நாக்ஸ் காலி…..), லஞ்ச் டைம் ஆயிடுச்சே, யாரை ஆட்டைய போட்டு மத்யான சாப்பாடு வெளுத்துக் கட்டலாம் என்று யோசித்துக் கொண்டே டூ வீலரை எடுக்கிறார்….. 

ஸ்வீட் ஸ்டால் வைத்து இருக்கும் நண்பர் மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் வருகிறது….. அவர் நாலு நாள் கடைக்கு லீவு விட்டு விட்டார் என்று……


பெட்ரோல் இல்லாத வண்டியை தள்ளிக் கொண்டே தனக்கும், வண்டிக்கும் தீனி போட வேற யாரை ஆட்டைய போடலாம் என்று யோசித்துக் கொண்டே டேபிளார் தொந்தி குலுங்க ரோட்டில் நகர்கிறார்……..

No comments: