Wednesday, July 22, 2009

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - பகுதி - 4

இந்த பகுதியில், நாம் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த ஹிந்தி திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.

ரஜினிகாந்த் அவர்கள், தமிழில் விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற "சட்டம் ஒரு இருட்டறை" என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த போது, கதாநாயகனாக அறிமுகமானார். மற்ற படங்களை பற்றியும் பார்ப்போம்.

1 அந்தா கானூன் (இதில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து இருந்தார்.... அது இந்த படத்தின் பெருவெற்றிக்கு உறுதுணையாக இருந்ததை மறுப்பதற்கில்லை....). ரஜினியின் ஜோடி ரீனா ராய்.

2. ஜீத் ஹமாரி - தமிழில் "தாய் வீடு" என்ற பெயரில் வந்த படத்தின் ஹிந்தி பதிப்புதான் இந்த படம். தமிழில் ஜெய்சங்கர், ஹிந்தியில் ராகேஷ் ரோஷன் ரஜினியுடன் நடித்து இருந்தனர். இரு மொழிகளிலும் நாயகியாக அனிதா ராஜ் நடித்து இருந்தார்.

3. மேரி அதாலத் - தெலுங்கு படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த படம். இதில் ஜோடியாக ஜீனத் அமன் நடித்து இருந்தார். ரஜினியின் தங்கையாக "கோமல்" என்பவர் நடித்து இருந்தார். இவர், பின்னாளில், "ரூபிணி" என்ற பெயரில் தமிழில் நடிக்க ஆரம்பித்து, ரஜினியுடன் மனிதன், உழைப்பாளி போன்ற படங்களில் நடித்தார்.

4.கங்குவா - தமிழில் வெளிவந்தது வெற்றி பெற்ற "மலையூர் மம்பட்டியான்" படத்தின் ஹிந்தி படிப்பு இது. ரஜினியின் நண்பரும், கன்னட பட காமெடி நடிகரும், தயாரிப்பாளருமான துவாரகீஷ் தயாரித்த இந்த படத்தில், தமிழில் ஜெயசங்கர் நடித்த வேடத்தில் ஹிந்தியில் சுரேஷ் ஒபேராய் (தற்போதைய இளம் நாயகன் விவேக் ஒபேராயின் தந்தை), சங்கிலி முருகன் வேடத்தில் காதர் கான், ஜெயமாலினி நடித்த வேடத்தில் சரிகா நடித்து இருந்தனர்...... ஜூடோ ரத்னம் அவர்களின் சண்டை காட்சிகள் பெரிதும் பேசப்பட்ட படம் இது...

5.ஜான் ஜானி ஜனார்தன் - தமிழில் ரஜினி நடித்து பெருவெற்றி பெற்ற "மூன்று முகம்" படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த படம்... ஹிந்தியிலும் மூன்று வேடங்களில் ரஜினி கலக்கி இருந்த படம் இது... அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் பெயர் ஹிந்தியில் ஜான் அமெண்டிஸ் என்று மாற்றப்பட்டது.

6.மகாகுரு - தெலுங்கு படத்தின் ரீமேக் இது. ஜோடியாக மீனாக்ஷி சேஷாத்ரியும், மற்றும் ராகேஷ் ரோஷன் நடித்த படம்.

7.வபாதார் - தெலுங்கு படத்தின் ரீமேக் இது.... தாசரி நாராயணராவ் படம். ஜோடியாக பத்மினி கோலாபூரி நடித்து இருந்தார்.

8.பேவபாய் - ரஜினியுடன் ராஜேஷ் கண்ணா நடித்து இருந்தார். இதில் பப்பி லகிரி இசையில் இடம் பெற்றிருந்த ஒரு சூப்பர் ஹிட் பாடலை சங்கர் கணேஷ் அப்படியே சுட்டு ஒரு முரளி நடித்த படத்தில் உபயோகப்படுத்தி இருந்தார் (தமிழில் இப்படி தொடங்கும் - நேற்றைய வரையில் பதினாறு, இன்று முதல் நீ பதினேழு...ஸ்விங் ஸ்விங் சிக்ஸ்டீன், நோ.. ஷீ ஈஸ் செவன்டீன்...). அடுத்த முறை எங்கேனும் இந்த பாடலை கேட்டால், அது கண்டிப்பாக ஷங்கர் கணேஷ் இசையில் வந்த பாடல் அல்ல என்று உணர்வீர்கள்.

9.பகவான் தாதா - ரஜினி, ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி நடித்த படம்... ஹ்ரித்திக் ரோஷன் இந்த படத்தில், ரஜினியின் மகனாக நடித்து இருப்பார்.

10.அஸ்லி நகலி - ரஜினி, சத்ருகன் சின்ஹா, ராதிகா (சித்தி, அரசி தாங்கோ... ) நடித்த படம்......

11.தோஸ்தி துஷ்மணி - ரஜினிகாந்த், ரிஷி கபூர், ஜிதேந்திரா சேர்ந்து நடித்த படம்.....

12.இன்ஸாப் கோன் கரேகா - ரஜினிகாந்த், தர்மேந்திரா, ஜெயபிரதா, மாதவி நடித்த படம்.

13.உத்தர் தக்ஷின் - ரஜினிகாந்த், ஜாக்கி ஷராப், மாதுரி டிக்ஷித் இணைந்து நடித்த படம்.

14.தமாச்சா - ரஜினிகாந்த், ஜிதேந்திரா, பானுப்ரியா, அம்ரிதா சிங் நடித்த படம். ரஜினியின் ஜோடியாக அம்ரிதா சிங் நடித்து இருப்பார்.

15.ப்ரஷ்டாசார் - கவுரவ வேடத்தில் ரஜினி நடித்த படம்..... உடன் நடித்தவர்கள், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ரேகா.

16.சால்பாஸ் - ஸ்ரீதேவி இருவேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரஜினி மற்றும் சன்னி தியோல் நடித்த படம். லக்ஷ்மிகாந்த் ப்யாரேலால் இசை பெரிதும் பேசப்பட்ட படம்.

17.ஹம் - மிக பெரிய ஸ்டார்கேஸ்ட் கொண்ட படம் இது. அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கோவிந்தா, கிமி காதகர், தீபா ஸஹி நடித்தது. ரஜினியின் ஜோடியாக தீபா ஸஹி நடித்தார்.

18.பாரிஷ்டே - ரஜினிகாந்த், தர்மேந்திரா, வினோத் கண்ணா நடித்தது. இதில், ரஜினியின் சிறிய வேடம், வட இந்திய பத்திரிக்கைகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.... கையில்இந்திய தேசிய கொடியுடன், குண்டடி பட்டு இருக்கும் ரஜினியின் போஸ் மிக பிரபலம்..... ரஜினிக்கு இதில் கவுரவ வேடம்....

19.கூன் கா கர்ஸ் - ரஜினிகாந்த், வினோத் கண்ணா, சஞ்சய் தத் நடித்தது. இந்த படம் "அரசன்" என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது.

20.பூல் பனே அங்காரே - ரஜினி, ரேகா இனைந்து நடித்தது. சரண்ராஜ் ரஜினியை கொன்றுவிட, அவர்களை ரேகா பழிவாங்குவது போன்ற கதை அமைப்பை கொண்டது.

21.தியாகி - தமிழில் ரஜினி நடித்து பெரிய வெற்றி அடைந்த "தர்மதுரை" படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த "தியாகி" படம். தமிழில் கவுதமி நடித்த வேடத்தில் ஹிந்தியில் ஜெயப்ரதா நடித்து இருந்தார்.

22.இன்சானியாத் கா தேவதா - ரஜினிகாந்த், வினோத் கண்ணா நடித்தது. (குரு சிஷ்யன் படத்தின் ரஜினி, பிரபு, மனோரமா காமெடி இதில் இடம் பெற்றிருந்தது..... மனோரமா வீட்டிற்கு பிரபு, ரஜினி சென்று செய்யும் காமெடி நினைவிருக்கும்...... ரஜினி, பிரபுவை ஒரு ABC ஆபீசர் என்று மனோரமாவிடம் அறிமுகப்படுத்துவார். பின் வரும் காட்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருக்கும்.....).

23.டாக்கு ஹசீனா - ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படம். ஹீரோயினாக நடித்தவர் ஜீனத் அமன்.

24. கிரப்தார் - ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் இணைந்து நடித்த படம் இது.
25.கைர் கானூனி - ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து இருப்பார். ரஜினியின் ஜோடியாக நடித்தவர் கிமி காத்கர். கோவிந்தா உடன் நடித்து இருந்தார்.

26.ஆதங் ஹி ஆதங் - ரஜினி, அமீர் கான் இணைந்து நடித்த படம். ரஜினியின் தம்பியாக அமீர் கான் நடித்து இருப்பார். படத்தின் டைட்டிலில் முதலில் ரஜினியின் பெயர்தான் வரும்.

27.புலாந்தி - ரஜினிகாந்த், அனில் கபூர் இணைந்து நடித்த படம்..... தமிழில் பெரிய வெற்றி பெற்ற "நாட்டாமை" படம், தெலுங்கில் "பெத்தராயுடு" என்ற பெயரில் வெளிவந்தது. தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் தெலுங்கில் ரஜினி நடித்து இருந்தார்.
பின் அந்த படத்தை ஹிந்தியில் தயாரித்தனர். ஹிந்தியிலும் அதே வேடத்தை ரஜினி ஏற்று நடித்தார்.
(இன்னும் வரும்.......)

16 comments:

Anand said...

Really, I like this article very much. It will be better to know if you give the information about the film hit or not.

கிரி said...

//இதில் ஜோடியாக ஜீனத் அமன் நடித்து இருந்தார்//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

//ஜான் ஜானி ஜனார்தன் - தமிழில் ரஜினி நடித்து பெருவெற்றி பெற்ற "மூன்று முகம்" படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த படம்//

இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

கோபி இத்தனை படத்தை எப்படி பிடித்தீங்க.. நிறைய தலைவர் ஹிந்தி படம் பார்த்து இருக்கீங்களா!

R.Gopi said...

//Anand said...
Really, I like this article very much. It will be better to know if you give the information about the film hit or not.//

Welcome Anand....

It is always difficult to tell whether a movie is hit or not.

Out of all the movies listed here, few movies are big hits, some are semi hits and many are flops.

R.Gopi said...

//கிரி said...
//இதில் ஜோடியாக ஜீனத் அமன் நடித்து இருந்தார்//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் //

இன்னா பீலிங்க்பா...... வுடுங்க....நம்ம "தலை"தானே..

//ஜான் ஜானி ஜனார்தன் - தமிழில் ரஜினி நடித்து பெருவெற்றி பெற்ற "மூன்று முகம்" படத்தின் ஹிந்தி ரீமேக் இந்த படம்//

இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

கோபி இத்தனை படத்தை எப்படி பிடித்தீங்க.. நிறைய தலைவர் ஹிந்தி படம் பார்த்து இருக்கீங்களா!//

என்ன சொல்றீங்க கிரி....... இது எல்லாம், நான் இவ்வளவு வருடமாக சேர்த்து வைத்த செய்திகள்...... சமயம் வரும்போதும், பதிவு செய்யலாம் என்று இருந்தேன்.... இப்போது பதிவு செய்தேன்....

நிறைய இல்லை கிரி..... நான் இங்கே குறிப்பிட்டிருக்கும் அத்தனை படங்களையும் பார்த்து இருக்கிறேன்.... பெரும்பாலானவை மும்பையில் மற்றும் பல சென்னையில்...... எப்படி..... சும்மா அதிருதுல்ல..........

R.Gopi said...

//வால்பையன் said...
பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி "வால்பையன்".

இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் வர உள்ளது.... தொடர்ந்து வருகை தாருங்கள்.

Arun Kumar said...

ஏகப்பட்ட மேட்ட சொல்லி இருக்கீங்க.. நல்ல பதிவு தலைவா.. இனிமே இந்த பட டிவிடி எல்லாம் தேடி பிடிச்சு வாங்கனும்..

R.Gopi said...

//Arun Kumar said...
ஏகப்பட்ட மேட்ட சொல்லி இருக்கீங்க.. நல்ல பதிவு தலைவா.. இனிமே இந்த பட டிவிடி எல்லாம் தேடி பிடிச்சு வாங்கனும்..//

வாங்க அருண்குமார்

வாழ்த்துக்கு நன்றி....... இப்போது அனைத்து படங்களும் கிடைப்பது கஷ்டம்...... நானே, ரிலீசில் பார்த்தது..... அதற்க்கு பிறது, சில படங்கள் ZEE சேனலில் போடுகிறார்கள்..... அனைத்து படங்களும் கிடைப்பது மிகவும் கடினம்.....

எனிவே.... தேடி பாருங்கள்.... கிடைத்தாலும் கிடைக்கும்..... சில......

ஷாஜி said...

I like the article very much..

It would be better if you could have mentioned the release year and its box office status(Hit /Flop).

Thanks.. keep it up..

ஈ ரா said...

/It is always difficult to tell whether a movie is hit or not.

Out of all the movies listed here, few movies are big hits, some are semi hits and many are flops./

கோபி...

நீங்கள் உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி ....

வாழ்த்துக்கள்...

Unknown said...

Hi Gopi

I have seen some of the movies listed and not all.

"Out of all the movies listed here, few movies are big hits, some are semi hits and many are flops."

Honest admission truly like a Rajini Fan.

Kamesh

appuram antha katha matter ennachu Gopi sir..

R.Gopi said...

வாங்க ஷாஜி, ஈ.ரா..காmesh.....

//ஷாஜி said...
I like the article very much..

It would be better if you could have mentioned the release year and its box office status(Hit /Flop).

Thanks.. keep it up..//

வரும் பகுதியில், ஹிந்தி படங்களில் ரிலீஸ் தேதியை குறிப்பிடுகிறேன்.... பாக்ஸ் ஆபீஸ் பற்றி சொல்லும்போது, சில படங்கள் பெரிய வெற்றியை அடைந்துள்ளன.... சில சுமாரான வெற்றியை அடைந்தன.... பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியது என்பது வேதனை கலந்த உண்மை....

எல்லோருக்கும், எப்போதும் வெற்றி கிடைப்பதில்லையே......

//ஈ ரா said...
/It is always difficult to tell whether a movie is hit or not.

Out of all the movies listed here, few movies are big hits, some are semi hits and many are flops./

கோபி...

நீங்கள் உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி ....

வாழ்த்துக்கள்...//

மனம் திறந்த வாழ்த்துக்கு நன்றி ஈ.ரா. உங்கள் வாழ்த்தை நான் மிகவும் மேலாக நினைக்கிறேன்.... இந்த வாழ்த்து என்னை உற்சாகப்படுத்தியது என்றால் மிகையல்ல.

//Kameswara Rao said...
Hi Gopi

I have seen some of the movies listed and not all.

"Out of all the movies listed here, few movies are big hits, some are semi hits and many are flops."

Honest admission truly like a Rajini Fan.

Kamesh

appuram antha katha matter ennachu Gopi sir..//

நன்றி காமேஷ்..... கதை ஓரிரு நாளில் அனுப்ப முயற்சிக்கிறேன்.....

கயல்விழி நடனம் said...

Gopi...
Chance ae illa....veluthu vaangureenga....
Yaarukkaavathu Super Star pathi info venumnna ungalukku redirect pannidalaam pola irukku..

R.Gopi said...

//கயல்விழி நடனம் said...
Gopi...
Chance ae illa....veluthu vaangureenga....
Yaarukkaavathu Super Star pathi info venumnna ungalukku redirect pannidalaam pola irukku..//

வாங்க கயல்..... உங்கள் வாழ்த்துக்கு நன்றி.....

நீங்க ரொம்ப மிகையா சொல்றீங்க.... நான் வெறும் கடைநிலை ஊழியன்தான்..... ஏதோ, எனக்கு தெரிஞ்ச (நிறைய பேருக்கு தெரியும்ங்க) சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கறேன்.... அவ்ளோதான்....

வருகைக்கு நன்றி...

பாசகி said...

யப்பா சாமி!!!! நிஜமாவே கண்ணை கட்டுதுங்க :) எத்தனை தகவல்கள். கோபி-ஜி சும்மா கலக்கறீங்க....

R.Gopi said...

//பாசகி said...
யப்பா சாமி!!!! நிஜமாவே கண்ணை கட்டுதுங்க :) எத்தனை தகவல்கள். கோபி-ஜி சும்மா கலக்கறீங்க....//

வாங்க பாசகி...... வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி..... சூப்பர் ரஜினின்னா சும்மாவா ஜி. தகவல்கள் கூட அதிரணும்ல... அதான்.... தொடர்ந்து பாகம்-5 படிங்க... பாகம்-6 ஓரிரு நாளில் அப்டேட் செய்யப்படும்.....

R.Gopi said...

இந்த பகுதியை வாக்களித்து பிரபலமாக்கிய‌ நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி...

kiruban
tamilz
urvivek
tharun
jollyjegan
Rajeshh
hihi12
Mahizh
spice74
arasu08
balak
Srivathsan
bhavaan
kvadivelan
paarvai
kosu
ashok92
jntube