Monday, July 27, 2009

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல - (பகுதி-5)


ரஜினியின் "தசாவதாரம்"

நாம் அனைவரும் கமல்ஹாசன் நடித்து 2008-ம் ஆண்டு வெளிவந்த "தசாவதாரம்" பற்றி அறிவோம். இது என்ன? ரஜினிகாந்த் அவர்களின் தசாவதாரம்? மேலே படியுங்கள்.....

1995-ம் ஆண்டு வெளிவந்தது தமிழகத்தையே அலற வைத்த ஒரு மாபெரும் வெற்றிப்படம் தான் "பாட்ஷா" என்பதை யாரும் மறுக்க முடியாது.......

அந்த படத்தில் இசையமைப்பாளர் "தேனிசை தென்றல்" தேவா அவர்களின் இசை படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்ததை யாரும் மறுக்கலாகாது.... அதுவும் தேவாவின் ரீ-ரிக்கார்டிங் மிகவும் பேசப்பட்டது.....

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி அறிமுக பாடலான "நான் ஆட்டோக்காரன்", அட்டகாசமான டூயட் பாடல்கள் "அழகு நீ நடந்தால் நடை அழகு", "தங்க மகன் இங்கு சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்", சித்தர்களின் சிந்தனைகளை உள்ளடக்கிய "ரா ரா ரா ராமையா" ஆகிய பாடல்கள் பட்டையை கிளப்பின.

"பாட்ஷா" படத்தின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் அட்டகாசமான யோசனையில் உருவானதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியை பல்வேறு கெட்-அப்புகளில் நடிக்க வைப்பது.... ஆயினும், படத்தின் சஸ்பென்ஸ் மற்றும் சுவை குன்றி விடுமோ என்ற தயக்கத்தில், அந்த யோசனையை படத்தில், ஒரே பாடலில் வைத்து பட்டையை கிளப்பி இருப்பார்....

அந்த பாடல்தான் கதையின் நாயகனை (ரஜினியை), நாயகி (நக்மா) வர்ணிக்கும் விதமாக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "அழகு... நீ நடந்தால் நடை அழகு" என்று தொடங்கும் பாடல்.... இந்த பாடலில், சுரேஷ் கிருஷ்ணா தன் டைரக்ஷன் உத்தியால், சூப்பர் ஸ்டார் ரஜினியை 10 அவதாரமாக திரையில் காட்டி இருப்பார்..... அந்த 10 அவதாரங்கள்.....

1. ஹோட்டல் பேரர்
2. ஹோட்டல் கேட் கீப்பர்
3. ஆபீஸ் மேனேஜர்
4. ஜிம் இன்ஸ்ட்ரக்டர்
5. நாதஸ்வர வித்வான்
6. ட்ராபிக் போலீஸ்
7. புரோகிதர்
8. பஸ் கண்டக்டர்
9. கேங்க்ஸ்டர் / ரவுடி
10.மாணிக்கம்


இதை படிக்கும் போது, நீங்கள் அந்த பாடலை ஒரு முறை மனதிலேயே ரீவைன்ட் செய்து பாருங்கள்...... அட.... ஆமாம் என்று சொல்ல வைக்கும்.......

ஒரே பாடலில் (10 அவதாரங்கள்)...."தசாவதாரம்".... சூப்பர் ஸ்டார் ரஜினியை நெனச்சு பார்த்தாலே சும்மா அதிருதுல்ல......
(இன்னும் சுவாரசிய தகவல்கள் வரும்.........)

17 comments:

கிரி said...

//அதுவும் தேவாவின் ரீ-ரிக்கார்டிங் மிகவும் பேசப்பட்டது.....//

எனக்கு ரொம்ப பிடித்த பின்னணி இசை படம்

கயல்விழி நடனம் said...

Paara...ippadi oru information ah????hmm....nice...vera enna solla??
innum ethanai part pottu asaththa poreenga???

R.Gopi said...

//கிரி said...
//அதுவும் தேவாவின் ரீ-ரிக்கார்டிங் மிகவும் பேசப்பட்டது.....//

எனக்கு ரொம்ப பிடித்த பின்னணி இசை படம்//

வாங்க கிரி..... எல்லாருக்குமே பிடிச்சதாச்சே ...... அதுதானே படம் சூப்பர் ஹிட்....

//கயல்விழி நடனம் said...
Paara...ippadi oru information ah????hmm....nice...vera enna solla??
innum ethanai part pottu asaththa poreenga???//

வணக்கம் கயல்..... எப்படி இருக்கீங்க.... புது இடம் எல்லாம் எப்படி இருக்கு?? உங்கள் கருத்துக்கு நன்றி.... இன்னும் கொஞ்சம் டீடைல்ஸ் இருக்குங்க..... எல்லாரையும் இல்லேன்னா கூட, சில பெற குஷி படுத்தலாமேன்னுதான்.....

Unknown said...

Hi Gopi,

We did discuss this issue previously I am just trying to remember the site where we had he discussion...

Nice piece of information ....

Yenakku Batsha padame oduthu

Kamesh

R.Gopi said...

//Kameswara Rao said...
Hi Gopi,

We did discuss this issue previously I am just trying to remember the site where we had he discussion...

Nice piece of information ....

Yenakku Batsha padame oduthu

Kamesh//

***************

Thanks Kamesh.....

R.Gopi said...

எனக்கு வாக்களித்து, இந்த பகுதியை தமிழிஷில் பிரபலமாக்கிய

v.GOPI
TAMILZ
மௌனகவி
MAHIZH
NANBAN2K9
பார்வை
சுட்டியார்

ஆகியோருக்கு என் நன்றி.....

Anonymous said...

பிடித்த பின்னணி இசை, பிடித்த படம், பிடித்த Super Star, I like this article.....Thanks

Ram said...

Hello background music terminator padathu Theme musickoda copy ....Deva copi adichatha thavira onnum pannala....

R.Gopi said...

// Anonymous said...
பிடித்த பின்னணி இசை, பிடித்த படம், பிடித்த Super Star, I like this article.....தேங்க்ஸ்
//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அனானி....

//Ram said...
Hello background music terminator padathu Theme musickoda copy ....Deva copi adichatha thavira onnum pannala....//

வாங்க ராம்.... தேவா காப்பி அடிச்சாலும், பொருத்தமா உபயோகப்படுத்தி இருந்தாரே...

Anonymous said...

I like this film very much. I was visited this film while i did my 10th std. now i am 27 yrs old. but now i can remember that film scene by scene. very nice film especially that song

R.Gopi said...

//Anonymous said...
I like this film very much. I was visited this film while i did my 10th std. now i am 27 yrs old. but now i can remember that film scene by scene. very nice film especially that song//

------------

தேங்க்ஸ் அனானி.......

R.Gopi said...

//Anonymous said...
I like this film very much. I was visited this film while i did my 10th std. now i am 27 yrs old. but now i can remember that film scene by scene. very nice film especially that song//

------------

தேங்க்ஸ் அனானி.......

பாசகி said...

ஒரே ஃபால்-ல பத்து ரன் அடிக்க நம்ம தலைவராலதான் முடியும்-னு தோனி சொன்னது அன்னைக்கே நடந்துருக்கா, சூப்பரு :)))

இனிமே தலைவர் படம் பார்க்கும்போது உங்க கூட சேர்ந்துதான் பார்க்கணும்... பல மேட்டர் நோட் பண்ணறீகளே

R.Gopi said...

//பாசகி said...
ஒரே ஃபால்-ல பத்து ரன் அடிக்க நம்ம தலைவராலதான் முடியும்-னு தோனி சொன்னது அன்னைக்கே நடந்துருக்கா, சூப்பரு :)))

இனிமே தலைவர் படம் பார்க்கும்போது உங்க கூட சேர்ந்துதான் பார்க்கணும்... பல மேட்டர் நோட் பண்ணறீகளே//

தோனி சொன்னாரா.....அட்ரா சக்க.. தலைவர பாராட்டதவங்க யாரு இருக்காங்க ஜி.... (வயித்தெரிச்சல் கோஷ்டி தவிர..). அவங்க கூட, படம் பாத்துட்டு தான் தலைவர திட்டுவாங்க.......

"எந்திரன்" சேர்ந்து பார்ப்போம்..... டிக்கட் நீங்க வாங்கிடுங்க.....

பாசகி said...

//"எந்திரன்" சேர்ந்து பார்ப்போம்..... டிக்கட் நீங்க வாங்கிடுங்க.....//

நான் ரெடி, சென்னை வந்துடுங்க :)

R.Gopi said...

//பாசகி said...
//"எந்திரன்" சேர்ந்து பார்ப்போம்..... டிக்கட் நீங்க வாங்கிடுங்க.....//

நான் ரெடி, சென்னை வந்துடுங்க :)//

ஆ..ஹா... இதைபோல நிறைய பேரு கெளம்பிட்டாங்க போல இருக்கே மக்கா ....

R.Gopi said...

இந்த பகுதியை பிரபலமாக்க வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி...

tamilz
Mahizh
nanban2k9
VGopi
mounakavi
paarvai
chuttiyaar
girirajnet
udanpirappu