Friday, September 11, 2009

"எந்திரன்" ரஜினிகாந்த் நேர்காணல், பரபரப்பு தகவல்கள்


சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு அதிரடி நேர்காணல்..

இன்றைய நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அகில உலக புகழ் பெற்ற அதிரடி நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வணக்கம் கூறி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்..

கண்ணா... இது ரொம்ப ஜாஸ்தியா சொல்றீங்க... நான் பாட்டுக்கு "சுல்தான்", "எந்திரன்" அப்டின்னு சின்ன சின்ன படங்கள் பண்ணிட்டு ஓரமா போயிட்டு இருக்கேன்.. நீங்க என்ன ரொம்ப உயரத்துக்கு தூக்கி போகாதீங்க...பயமா இருக்கு...

சார்... நீங்கதான் இன்னிக்கு உலகத்துலயே ரொம்பவும் மதிக்கப்படற சூப்பர் ஸ்டார், உங்க முன்னாடி மத்தவங்க எல்லாம் வெறும் போர்...

கண்ணா... என்ன பத்தி புகழ்ச்சியா சொல்லணும்னா, என் முதுகுக்கு பின்னாடி போயி சொல்லு... திட்டறதுன்னா, நேர்ல சொல்லு... அதுதான் எனக்கு புடிக்கும்... ஹா...ஹா...

சரி சார்... இன்றைய அரசியல் பத்தி ஏதாவது கருத்து சொல்றீங்களா??

இப்போதான் சொன்னேன்... பாராட்டணும்னா பின்னால போய் சொல்லுன்னு... இந்த அரசியல் பத்தி இப்போ எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க... ஏன்னா, நாட்டுல இப்போ, அரசியல் நெலமை சரியில்ல..."எந்திரன்"ல நடிக்கறதால, அறிவியல் பத்தி கேளுங்க, சொல்றேன்...

சரி...அறிவியல் பத்தி சொல்லுங்க....

கண்ணா... அறிவியல் பத்தி பேசறதுக்கு நாட்டுல, நெறைய அறிவியல் அறிஞர்கள் இருக்காங்க... அவங்க கிட்ட கேளுங்க...அது பத்தி ஜாஸ்தி பேசறதுக்கு என்கிட்ட விஷயம் இல்ல... நான் நேத்து கண்டக்டர்... இன்று ஒரு சாதாரண நடிகன்... அதுவும், மேல இருக்கறவன் என்ன சொல்றானோ, அத செய்யற ஒரு மனிதன்... நாளை நான் யாருன்னு எனக்கே தெரியாது... என்ன ஓகேவா??...

அய்யோ... சார், இப்படின்னா அப்படிங்கறீங்க... அப்படின்னா, இப்படிங்கறீங்க...

ஹா...ஹா...ஹா...அதுதான் கண்ணா, நான் மொதல்லயே சொன்னேன்.. அப்டி, இப்டி எதுவும் நாம யோசிச்சு செய்யறது இல்ல... அதுவும் மேல இருக்கறவன் சொல்லி கீழ இருக்கற நாம செய்யறது தான்... யச்சச்ச கச்சச்ச.. கச்சச்ச யச்சச்ச... ஏதாவது புரிஞ்சுதா... புரியல இல்ல.... இதுதான் வாழ்க்கை... அந்தரத்தில் எதுவும் மந்திரமில்லை... நம் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை... இது எப்படி இருக்கு??

ஙே என்று முழித்தபடி நிருபர், அடுத்த கேள்விக்கு தயாராகிறார்... சார்.. "எந்திரன்" பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.... எல்லாரும் ஆசைப்படறாங்க...

கேக்கறதுதான் கேக்கறீங்க, ஏன் கொஞ்சம்னு கேக்கறீங்க... நெற்யனு கேளுங்க...

சரி சார்... நெறய சொல்லுங்க....

அந்த படத்த பத்தி நெறய சொல்லணும்னு எனக்கும் ஆசைதான்... ஆனா, ஒரு வேலை பாதியில இருக்கறப்போ, அதப்பத்தி கேக்கறதே தப்பு... அதனால.. "எந்திரன்" பத்தி நான் சொல்றத விட டைரக்டர் ஷங்கர் சொல்றதுதான் சரியா இருக்கும்... ஒரே ஒரு விஷ‌ய‌ம் சொல்றேன்... தீபாவ‌ளி ரிலீஸ் ஆகுது......

என்ன‌...?? தீபாவ‌ளி ரிலீஸா?? ப‌ட‌ம் முடிஞ்சுடுச்சா??
ஆமாம்... ப‌ட‌ம் இல்ல‌... டிரெய்ல‌ர்... தீபாவ‌ளி அன்னிக்கு டிரெய்ல‌ர் ரிலீஸ்..

ய‌ப்பா... அதானே பார்த்தேன்... ஷங்கராவது ஒரு வருஷத்துல முடிக்கறதாவது என்று ம‌ய‌ங்கி விழுந்து பின் எழுகிறார் நிருப‌ர்...
சார்... கந்தசாமி படம் பாத்தீங்களே... அத பத்தி ஏதாவது சொல்லுங்க...
கந்தசாமி பார்த்தேன்... ரொம்ப ரொம்ப நல்ல படம்... நல்ல என்டெர்டெய்னர்..சாங்க்ஸ் நல்லா இருந்தது... நல்ல லொக்கேஷன்ல ஷூட் பண்ணி இருந்தாங்க...எனக்கு விக்ரம் ரொம்ப பிடிக்கும்... குட் ஆக்டர்... தாணு என்னோட நல்ல நண்பர்.. சுசி கணேசன் கூட பத்து வயசா இருக்கும் போது, என்னோட "மாவீரன்" ஷூட்டிங் பாக்க வந்து, என்கூட ஃபோட்டோ எல்லாம் எடுத்துகிட்டாரு...
சரி...வேற ஏதாவது கேள்வி இருக்கா??
ம்ம்ம்... உலக அரசியல் பத்தி கேக்கலாமா சார்...

ஓ... கேளுங்க... நான் இந்த பேட்டி முடிச்சுட்டு இமயமலை போகப்போறேன்... உலக அரசியல்ல எனக்கு ரொம்ப பிடிச்சது, சிங்கப்பூர்தான்... ஏன்னா, அதோட வளர்ச்சி...

வேற ஏதாவது கேக்கணுமா??

ஆமாம் சார்... கலைஞானி கமல் பற்றி??

கமல் உலகின் சிறந்த நடிகர் என்று நான் சொல்லல.. மத்த எல்லாரும் சொல்றாங்க.. சிங்கப்பூர்ல "நினைத்தாலே இனிக்கும்" ஷூட்டிங் நடந்தப்போ, லன்ச் ப்ரேக்ல போய், ரெண்டு கடலை உருண்டை வாங்கிட்டு வந்து எனக்கு ஒண்ணு குடுத்தாரு... அந்த நல்ல மனச, என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன்... இப்போ கூட ஹீரோவா "உன்னை போல் ஒருவன்" படத்துல நடிக்கறேன்னு போன வாரம் ஃபோன் பண்ணி சொன்னாரு...

சுரேஷ் கிருஷ்ணா??

நல்ல டைரக்டர்... ஆனா, இன்னும் அவரு "பாட்சா" படத்தோட பாதிப்புல இருக்காரு..... அது பத்தி அவர் கிட்ட பேசினேன்... உடனே "பாட்சா 2" எடுக்கலாமான்னு கேட்டாரு... அதுக்கு, 2015 வரைக்கும் சுரேஷ்னு பேரு இருக்கறவங்க கூட சேர வேண்டாம்னு இமயமலைல ஒரு சித்தர் சொன்னாரு... அதனால 2016க்கு மேல வந்து பாருங்கன்னு சொல்லி இருக்கேன்...

கே.எஸ்.ரவிக்குமார் பற்றி?

அவரு கடுமையான "உழைப்பாளி"... "படையப்பா" படத்துல நடிக்கறப்போ, எனக்கு எப்படி நடிக்கணும்னு சொன்னாரான்னு ஞாபகம் இல்ல.. ஆனா.. ஷூட்டிங் நடுவுல 4/5 சிகரெட் குடுத்தாரு... 45 நாள்ல படம் முடியணும்னு சொல்லி, 55 நாள்ல படத்த முடிச்சுடுவாரு. ஆளு அவ்ளோ சூப்பர் ஸ்பீடு... பட், குட் மேன்... தசாவதாரம் படத்துல "ஜார்ஜ் புஷ்" இந்தியா கூட்டிட்டு வந்தாரே, அதுக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு சொல்றேன்..

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க சார்...

ரசிகர்கள் என்னோட கண் மாதிரி...அவங்க நல்லா இருந்தா தான் நானும் நல்லா இருப்பேன்.. சரி... டைம் ஆயிட்டு இருக்கு...விஷயத்துக்கு வர்றேன்... எல்லாரும் நல்லா படிங்க... நல்லா வேல செய்யுங்க... செய்யற தொழில்தான் தெய்வம்... அப்புறம், பெரியவங்கள மதிச்சு நடக்கணும்... பெற்றோர்கள் பேச்சு கேட்டு வாழ்க்கை நடத்துங்க... பொழுதுபோக்கை கொஞ்ச நாளைக்கு கம்மி பண்ணுங்க... இன்னிக்கு நீங்க கஷ்டப்பட்டு உழைச்சா, நாளைக்கு உங்க வாழ்க்கை அடுத்தவங்களுக்கு இஷ்டப்படற மாதிரி இருக்கும்... அதனால, வாழ்க்கைய இஷ்டப்பட்டு வாழுங்க... கஷ்டப்பட்டு வாழாதீங்க... நெறைய வேதனைங்க, சோதனைங்க வரும்.. ஆனா.. வேதனைங்க, சோதனைங்கள தாண்டினா, சாதனை படைக்கலாம்...

உங்களுக்கு, தியேட்டர் பக்கம் போகணும்னு தோணுச்சுன்னா, வாரத்துக்கு ஒரு தடவை இல்லேன்னா மாசத்துக்கு ஒரு தடவை போங்க...போயி, போஸ்டர் எல்லாம் மட்டும் பாத்துட்டு திரும்பி வந்துடுங்க...நம்ம படம் "எந்திரன்" வர்றபோது சேர்த்து வச்சு, தியேட்டர்ல போயி, 4 / 5 தடவ பாருங்க...

"எந்திரன்" ரொம்ப ரொம்ப பெரிய படம்.. உலகம் முழுக்க ரிலீஸ் ஆகப்போகுது. படத்த சந்திரன்ல கூட(உதயம் காம்ப்ளெக்ஸ்ல இருக்கற சந்திரன் இல்ல... நிஜமாவே மேலே இருக்கற நிலா / சந்திரன்ல) ரிலீஸ் பண்ணலாம்னு டைரக்டர் ஷங்கர் ஐடியா சொல்றாரு... பார்ப்போம்...படத்த பாத்து என்ஜாய் பண்ணுங்க...

பேட்டி முடிக்கறதுக்கு முன்னாடி ஒரு உண்மைய சொல்றேன்... ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு... இது புரிஞ்சா நீ எல்லாருக்கும் ஃப்ரெண்டு.. ரெண்டும், மூணும் அஞ்சு.. உன் கையில விரல்கள் கூட அஞ்சு... இந்த சின்ன வாழ்க்கை தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க... நிறைய உழைக்க பழகுங்க...
நன்றி வணக்கம்....ஜெய்ஹிந்த்.....

சார்... இன்னும் நெறைய கேள்விகள் இருக்கு... மீண்டும் சந்திப்போம் சார்... நன்றி

(இப்போதைக்கு இது போதும் என்பதால் தற்காலிக முற்றும்.....)

29 comments:

Anonymous said...

Pls dont try to make fun of Thalivar - We dont expect this from GOPI.

- LAx

கிரி said...

கண்ணா! இந்த எந்திரன் ரிலீஸ் ஆகுறான் சந்திரன் ல ;-)

R.Gopi said...

//Anonymous said...
Pls dont try to make fun of Thalivar - We dont expect this from GOPI.

- LAx//

Sorry Mr.Lax... There is no intension to make fun of Thalaivar... I am his DIEHARD FAN since 1978....

Dont take it seriously....

//கிரி said...
கண்ணா! இந்த எந்திரன் ரிலீஸ் ஆகுறான் சந்திரன் ல ;-)//

Thanks Giri for your visit.

♠ ராஜு ♠ said...

Good one GOpi..!

R.Gopi said...

//♠ ராஜு ♠ said...
Good one GOpi..!//

நன்றி தலைவா... இதை காமெடியாக‌ ம‌ட்டும் பார்த்த‌த‌ற்கு....

ஈ ரா said...

நீங்க கேர்புல்லா எழுதிருக்கிறது தெரியுது தல.....

ஆனாலும் சிரிக்க வைத்தது....

R.Gopi said...

// ஈ ரா said...
நீங்க கேர்புல்லா எழுதிருக்கிறது தெரியுது தல.....

ஆனாலும் சிரிக்க வைத்தது....//

********

புரிதலுக்கு நன்றி ஈ.ரா...

இதை வெறும் நகைச்சுவையாக மட்டுமே பார்க்குமாறு நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...

பாசகி said...

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசில தலைவரயே கடிச்சிட்டயே பரட்டை :)))

//இதை வெறும் நகைச்சுவையாக மட்டுமே பார்க்குமாறு நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...//

சொல்லீட்டீங்கன்னா விட்டுடுவமா? ஜெட் ஏர்வேஸ் ஸ்டிரைக் முடிஞ்சப்புறம் கோயலை ஒரு ஸ்பெசல் ஃப்ளைட் விடசொல்லிருக்கேன். வந்து கவனிச்சுக்கறோம் :)

கலக்கீட்டீங்க ஜி :)))

R.Gopi said...

//பாசகி said...
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசில தலைவரயே கடிச்சிட்டயே பரட்டை :)))

//இதை வெறும் நகைச்சுவையாக மட்டுமே பார்க்குமாறு நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...//

சொல்லீட்டீங்கன்னா விட்டுடுவமா? ஜெட் ஏர்வேஸ் ஸ்டிரைக் முடிஞ்சப்புறம் கோயலை ஒரு ஸ்பெசல் ஃப்ளைட் விடசொல்லிருக்கேன். வந்து கவனிச்சுக்கறோம் :)

கலக்கீட்டீங்க ஜி :)))//

தாங்க்ஸ் பாச‌கி... அடிக்க‌டி காணாம‌ போயிட‌றீங்க‌...

இதுக்கு முன்னாடி, கேப்ட‌ன் விஜ‌யகாந்த் ப‌த்தி ரெண்டு பாக‌ம் எழுதினேன்... அதையும் ப‌டிங்க‌...

Kiruthiga said...

kalakkitinga sir...
avaru pettiya nejathula than paaakamudla
ipdi karpanayaavathu panikalaam
:)

R.Gopi said...

//Kiruthiga said...
kalakkitinga sir...
avaru pettiya nejathula than paaakamudla
ipdi karpanayaavathu panikalaam
:)//

வாங்க‌ கிருத்திகா...

மொத‌ல்ல இந்த‌ சார்னு சொல்ற‌த‌ விடுங்க‌...

வ‌ருகைக்கும், ப‌டித்து ர‌சித்தமைக்கும் என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி...

Kiruthiga said...

ok nanba :)
ithu ok ah

R.Gopi said...

//Kiruthiga said...
ok nanba :)
ithu ok ah//

This looks ok Kiruthiga...

Ungalukku cricket romba pidikkumaa?

அன்புடன் அருணா said...

உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் காத்திருக்கிறது என் வலைப்பூவில்....

Kiruthiga said...

romba illa....
rommmmmmmmmbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbaaaaaaaaaaaaaaaaaaaaaaa

R.Gopi said...

//அன்புடன் அருணா said...
உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் காத்திருக்கிறது என் வலைப்பூவில்....//

அப்ப‌டியா அருணா மேட‌ம்... இதோ வந்துண்டே இருக்கேன்...

rdharma said...

Gopi, asuusual kalakkal,typical Gopi style, oru chinna thiruttham, andha Kandha swami yean padam than question mattum drop pannalam, bec as you know Super Star jokku ku kuda he will not claim others film

Over all excellant Gopi, for some friend talking about Gopi making of fun of thalivar- You got to understand, Gopi is one of the hardcore fan and he is a Google when it comes to Rajini related info, some of the info that Gopi comes up may be a surprise shocker to the Super Star too, so beware of such comments

R.Gopi said...

//rdharma said...
Gopi, asuusual kalakkal,typical Gopi style, oru chinna thiruttham, andha Kandha swami yean padam than question mattum drop pannalam, bec as you know Super Star jokku ku kuda he will not claim others film

Over all excellant Gopi, for some friend talking about Gopi making of fun of thalivar- You got to understand, Gopi is one of the hardcore fan and he is a Google when it comes to Rajini related info, some of the info that Gopi comes up may be a surprise shocker to the Super Star too, so beware of such comments//

ந‌ன்றி த‌ர்மா... நீங்க‌ள் சொன்ன‌து போல், அந்த கந்த‌சாமி விஷ‌ய‌ம் எடிட் செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌து...

நான் ஏற்க‌ன‌வே சொல்லிவிட்டேன்... என்னை யாரும் ர‌ஜினி விஷ‌ய‌த்தில் சந்தேகப்ப‌ட‌ வேண்டாம்... ஏனெனில், நான் 1978ல் இருந்து அவ‌ரின் தீவிர‌ விசிறி... 2006,2007,2008 ஆகிய‌ மூன்று வ‌ருட‌ங்க‌ள் நண்பர் லாரன்ஸூடன் இணைந்து துபாயில் ஷ‌க்தி எஃப்.எம்.ரேடியோவில், ர‌ஜினி பிறந்த‌ நாள் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி செய்துள்ளேன்...

இந்த பதிவு சும்மா காமெடிக்காக எழுதப்பட்டது... என் வலையை தொடர்ந்து வாசிப்பவர்கள் இதுபோல் கண்டிப்பாக கேட்க மாட்டார்கள்..

Anonymous said...

//Sorry Mr.Lax... There is no intension to make fun of Thalaivar... I am his DIEHARD FAN since 1978....

Dont take it seriously....

// Gopi I do understand the fun intended - though initially it was a shocker - hence the reaction - I need to admit it is hilarious one.

Thalivaraiyum vidaliye Gopi !!!

R.Gopi said...

//Anonymous said...
//Sorry Mr.Lax... There is no intension to make fun of Thalaivar... I am his DIEHARD FAN since 1978....

Dont take it seriously....

// Gopi I do understand the fun intended - though initially it was a shocker - hence the reaction - I need to admit it is hilarious one.

Thalivaraiyum vidaliye Gopi !!!//

Thanks LAX... for your visit and comments and more importantly you understood me...Thats enough...

வால்பையன் said...

இது ஆரம்பத்தோட முடிவல்ல
முடிவோட ஆரம்பம்!

பீ கேர் ஃபுல்

நான் என்னைய சொன்னேன்!

R.Gopi said...

//வால்பையன் said...
இது ஆரம்பத்தோட முடிவல்ல
முடிவோட ஆரம்பம்!

பீ கேர் ஃபுல்

நான் என்னைய சொன்னேன்!//

வாங்க வால்...

உங்க கமெண்ட்டே அதிரடியா இருக்கே...

நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

Kalyan said...

superb kalakitinga

R.Gopi said...

//Kalyan said...
superb kalakitinga//

வாங்க கல்யாண்...

இந்த பதிவை ஸ்போர்ட்டிவாக எடுத்து கொண்டமைக்கு நன்றி...

கலகலப்ரியா said...

//Sorry Mr.Lax... There is no intension to make fun of Thalaivar... I am his DIEHARD FAN since 1978//

yabbe... poranthathila irunthevaa gopi... vazhththukkal...

R.Gopi said...

//கலகலப்ரியா said...
//Sorry Mr.Lax... There is no intension to make fun of Thalaivar... I am his DIEHARD FAN since 1978//

yabbe... poranthathila irunthevaa gopi... vazhththukkal...//

அய்யோ... லகலகவா?? வாய் கொடுத்து மாட்டிக்கிட்டேனா??

Kameswara Rao said...

hi Gopi

Nalla karpanai... was nice to with imagining SS voice for your q's it was really good

Kamesh

கயல்விழி நடனம் said...

:-)))

R.Gopi said...

// Kameswara Rao said...
hi Gopi

Nalla karpanai... was nice to with imagining SS voice for your q's it was really good

Kamesh//

//கயல்விழி நடனம் said...
:-)))//

Welcome Kamesh and Kayal Vizhi... Thanks for your visit and comments...