அகிம்சையை போதித்த அண்ணலே
அவனியில் நாங்கள் படுவது இன்னலே
வெள்ளையரை விரட்டி வாங்கிய சுதந்திரம் அன்றுகொள்ளையரிடம் சிக்கி தவிக்கிறோம் இன்று
அன்று நீ சுற்றினாய் அந்நியரை எதிர்த்து ராட்டை
வெள்ளையரை விரட்டி வாங்கிய சுதந்திரம் அன்றுகொள்ளையரிடம் சிக்கி தவிக்கிறோம் இன்று
அன்று நீ சுற்றினாய் அந்நியரை எதிர்த்து ராட்டை
இன்றோ அயோக்கியர்கள் பணம் கொடுத்து ஓட்டு வேட்டை
உனக்கு மரியாதை செய்யும் விதமாய் டாஸ்மாக் விடுமுறை இன்றுதெரிந்தே வாங்கி வைத்தார்கள் டாஸ்மாக் ஒரு நாள் முன்பு
உனக்கு மரியாதை செய்யும் விதமாய் டாஸ்மாக் விடுமுறை இன்றுதெரிந்தே வாங்கி வைத்தார்கள் டாஸ்மாக் ஒரு நாள் முன்பு
அஹிம்சையை போதித்த உனக்கு
மாலை யார் முதலில் போடுவது என்றெழுந்த சண்டை, கைகலப்பாகி உடைந்தது பல மண்டை
மண்டை உடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்...
அப்போது வெடித்த வன்முறை
மூடப்பட்ட கடைகள்
பற்றி எரியும் பேருந்துகள்,
காலவரையற்ற மூடலில் பள்ளிகள்
உனக்காக ஒரு நாள் கூட அஹிம்சையை கடைப்பிடிக்கமுடியாத அயோக்கிய அரசியல்வாதிகள்
நீ இன்று இங்கு இருந்து இவையெல்லாம் கண்டால் உன் கைத்தடி கொண்டு, அவர்களின் மண்டையை உடைப்பாய் என்பது திண்ணம்...
ஆயுதங்களை புறக்கணித்து,
ஆயுதங்களை புறக்கணித்து,
நம்மை அஹிம்சைக்கு அர்ப்பணிக்கும் நாளே அனைவருக்கும் உண்மையான காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
இப்போதிருக்கும் நிலையில் அது எதுவும்
நடக்க வாய்ப்பே இல்லாமல்
ஊரெங்கும் திண்டாட்டம்...
இந்நிலை என்று மாறுமோ?
நம் ஊர் என்று திருந்துமோ?
வருடத்தின் ஒரு நாளில் அவரின் சிலைக்கு மாலை போடுவதை காட்டிலும், அன்னாரின் அஹிம்சை கொள்கையை வாழ்நாளில் கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை...
ஆகவே... அண்ணலை மதிப்போம்
ஆகவே... அண்ணலை மதிப்போம்
அஹிம்சையை போற்றுவோம்...
ஜெய்ஹிந்த்...
நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்...
ஜெய்ஹிந்த்...
நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்...
6 comments:
நல்ல கருத்துக்கள் கோபி....
உங்களுக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
மகாத்மாவின் பிறந்த நாளில் அவரது அகிம்சை வழி பயணத்தினை தொடர உறுதி கொள்வோம்..!
வாழ்த்துக்களுடன்...
//வருடத்தின் ஒரு நாளில் அவரின் சிலைக்கு மாலை போடுவதை காட்டிலும், அன்னாரின் அஹிம்சை கொள்கையை வாழ்நாளில் கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை...
ஆகவே... அண்ணலை மதிப்போம்
அஹிம்சையை போற்றுவோம்...
ஜெய்ஹிந்த்...////
நன்றாக எழுதியுள்ளீகள்...
//உங்கள் தோழி கிருத்திகா said...
நல்ல கருத்துக்கள் கோபி....
உங்களுக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்//
--------
வருக என் தோழமை கிருத்திகா...
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
//ஆயில்யன் said...
மகாத்மாவின் பிறந்த நாளில் அவரது அகிம்சை வழி பயணத்தினை தொடர உறுதி கொள்வோம்..!
வாழ்த்துக்களுடன்...//
---------
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன்...
//Saranya said...
//வருடத்தின் ஒரு நாளில் அவரின் சிலைக்கு மாலை போடுவதை காட்டிலும், அன்னாரின் அஹிம்சை கொள்கையை வாழ்நாளில் கடைப்பிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை...
ஆகவே... அண்ணலை மதிப்போம்
அஹிம்சையை போற்றுவோம்...
ஜெய்ஹிந்த்...////
நன்றாக எழுதியுள்ளீகள்...//
----------
வருகைக்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி சரண்யா...
நல்ல கருத்துக்கள் கோபி.... மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிரீர்கள்... நாம் அகிம்சை பாதையை விட்டு பல மைல் தூரம் வந்துவிட்டோம்... :(
உங்களுக்கும் எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.. :)
// kanagu said...
நல்ல கருத்துக்கள் கோபி.... மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிரீர்கள்... நாம் அகிம்சை பாதையை விட்டு பல மைல் தூரம் வந்துவிட்டோம்... :(
உங்களுக்கும் எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.. :)//
---------------
வாங்க கனகு...
தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...
வருகைக்கும், பாராட்டு கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி... தொடர்ந்து வாருங்கள்..
Post a Comment