"சூரியன்" மேற்கில் நகர்ந்து பூமித்தாயின் மடியில் ஓய்வெடுத்து படுக்க நகர திட்டமிடும் அந்தி சாய்ந்த மதி மயங்கும் மாலை நேரம்...
மேற்கு மூலையில் ரத்த சிவப்பில் வண்ணக் கோலம். பிடிவாதமாய் தீட்டப்பட்ட சில மஞ்சள் தீற்றுகள். நாள் முழுதும் விளையாடிய களைப்பின்றி சூரிய பந்து...இறைவன், இயற்கையோடு இணைந்து வரைந்த, சிறிதும்
உடைபடாத சிவப்பு அப்பளம்...
சுடரில் மட்டும் கொஞ்சம் சுணக்கம்.
சுட்டெரிக்காமல் மெல்லிய வெப்பம்.
நாளை வருவேன் என சொல்லி ஒளிந்து கொள்ள திட்டமிட, இரு மனித தலைகள் நம் கண்ணில் நிழலாட்டம்....
நட்பு, கற்பு இரண்டும் ஒன்றென அதுவும் தம்மென கொள்கை கொண்ட இரு நண்பர்கள்... மாலை வேளையில் பூங்காவினுள் காலாற நடந்து செல்வது அவர்களின் வாடிக்கை... கூடவே அங்கும், இங்குமாய் பார்த்து செல்வது வேடிக்கை... பகுத்தறிவு பசியும், பகிர்ந்து கொள்ளும் உத்வேகமும் அவர்கள் பேச்சில் உண்டு. வினா எழுப்பி அதற்கு விடை காண்பதும், வினயமாய் விடை தேடுவதும், அவர்களின் விருப்பமான விளையாட்டு. இன்றும் அதேபோல்...
பூங்காவில் புல், பச்சை பசேலென வளர்ந்து, நடக்கும் கால்களுக்கு கீழ் மெத்தை விரித்து இருந்தது. உடல் சோர்வு பாதங்களில் குறுகுறுப்பாய் குடியிருக்க, குளிர்ந்த மெத்து மெத்தென்றிருந்த புல் பாதங்களை லேசாய் முத்தமிட்டு வருடி விட, நேர்த்தியாய் நடந்த கால்களின் வலி நீங்கி... கால்களை பதித்ததும், உள்ளிழுத்தது...
சிறு வண்டுகளின் ரீங்காரம்...ஓங்காரமாய், ஏன் ”ஓம்”காரமாய் செவியை நிறைக்க, மனம் அந்த தாள லயத்தில் கிறுகிறுப்பாய் கிறங்கியது. நகரும் வாகனங்களின் சத்தம், அவை வெளியிடும் நச்சுப்புகை, நகர நெரிசல் என உணர்வுகளை பதம் பார்க்காத அமைதி அன்பாய் ஒழுகியது.
புதிதாய் பூத்த மெல்லிய பட்டு போன்ற பூக்களின் வாசம் காற்றில் புயலாய் புகுந்திருக்க, புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது. சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின...
பூக்களின் வழிவந்த காற்றில் கலந்திருந்த சுகந்தம் வெளியிடும் விரும்பத்தகுந்த நறுமணம் எங்கும் பரவி அந்த பகுதியையே நிறைத்து இருந்தது.... நன்கு இழுத்து மூச்சு விடுகையில் நுரையீரலை சென்று அடையும், சுத்தமான காற்று... உடலை இறுக்கம் தளர்த்தி, இலகு தன்மை கூட்டி, உள்ளத்தில் உற்சாகம் ஊட்டியது.
தெற்கிலிருந்து வீசும் லேசான தென்றல் காற்று... சிலுசிலுவென அவர்களின் தேகத்தில் படர்ந்தது.
இருவரில் ஒருவர் கேட்கிறார்... வலி என்பது என்ன??
திகைத்து நின்ற மற்றவர், மிக உன்னதமான விசயத்தை எப்படி இவ்வளவு சாதாரணமாக கேட்கிறாய் என்றார். நிமிடங்கள் சில, மவுனத்தில் கரைந்தது. ஆழமான சிந்தனை என முகம் பறை அறைந்தது.
வலி இயலாமை. இனி மேல் முடியாது என உணர்வின் உச்ச கட்ட வெளிப்பாடு. தன்மையை இழந்து விடுவோமோ எனும் அச்சம். கூக்குரலிட்டு அதை அகற்ற வேண்டும் எனும் முயற்சியே வலி.
ஒவ்வொரு வார்த்தையும் இருமுறை படிக்க வேண்டி உள்ளதே. சுருங்க சொல்லி விளங்க வைக்க முயற்சிப்போமே. செய்வோம் நன்று...அதுவும் இன்று.. சொன்னதின் உண்மை புரிந்து லேசான புன்முறுவலில் ஆமோதிக்க, சம்பாஷனை தொடர்ந்தது.
வலி ஏற்றுக் கொள்ளும் தளத்தில் என பல வகைப்படும். உடல் வலி, மன வலி, உணர்வு வலி, இது தனி மனித வலிகள். சமூக வலி, மொழி வலி (அவிய்ங்க...இவிய்ங்க, லகர, ளகர சிதைத்த தொலைக்காட்சி தமிழும் - தமிழ் தாய்க்கும் வலி உண்டல்லவா... மன்னிப்பாளாக...) என புறமும் உண்டு.
உரத்த சிரிப்பில் நண்பர் தொடர்ந்தார். வலி நீக்கும் உபாயம் உண்டோ, கூறலாமே..?!!
நன்கு வலித்த நம் கால்களை, பச்சை பசும்புல் எவ்வளவு இதமாய் நீவி விட்டது.... அதுதான்...எப்படி வலி சாஸ்வதமோ, அதுபோல் வலி நீக்கியும் சாஸ்வதமே.
இருவரும் சிரிப்பில் இணைந்தனர். இதயம் இளகியது. காற்றில் அசைந்தாடிய புல் அவர்களோடு சிரிப்பில் இணைந்தது. பூக்கள் கூட்டமாய் இணைந்து கை தட்டியது...
தலையை லேசாக உயர்த்தி, மேலே அண்ணாந்து வானை நோக்கும்போல், ”சுட்டெரித்தவன்” மறைய தொடங்கி ”குளிர்விப்பவன்” வானில் லேசாய் எட்டிப் பார்க்க, அங்கே மெதுமெதுவாய் குளிர் படர தொடங்கியது.

(ஆர்.கோபி / லாரன்ஸ்)
34 comments:
//வலி இயலாமை. இனி மேல் முடியாது என உணர்வின் உச்ச கட்ட வெளிப்பாடு. தன்மையை இழந்து விடுவோமோ எனும் அச்சம். கூக்குரலிட்டு அதை அகற்ற வேண்டும் எனும் முயற்சியே வலி.//
அருமையான விளக்கம்
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//வலி இயலாமை. இனி மேல் முடியாது என உணர்வின் உச்ச கட்ட வெளிப்பாடு. தன்மையை இழந்து விடுவோமோ எனும் அச்சம். கூக்குரலிட்டு அதை அகற்ற வேண்டும் எனும் முயற்சியே வலி.//
அருமையான விளக்கம்
**********
நன்றி தலைவா...
/இருவரும் சிரிப்பில் இணைந்தனர். இதயம் இளகியது. காற்றில் அசைந்தாடிய புல் அவர்களோடு சிரிப்பில் இணைந்தது. பூக்கள் கூட்டமாய் இணைந்து கை தட்டியது.../
நன்று.
உங்களுக்கு இப்டியும் எழுத வருமா..? =))... அருமையா எழுதி இருக்கீங்க...! நிறைய எழுதணும் இப்டி..!
//நாள் முழுதும் விளையாடிய களைப்பின்றி சூரிய பந்து...இறைவன், இயற்கையோடு இணைந்து வரைந்த, சிறிதும்
உடைபடாத சிவப்பு அப்பளம்...
சுடரில் மட்டும் கொஞ்சம் சுணக்கம்.
சுட்டெரிக்காமல் மெல்லிய வெப்பம். //
//பூக்களின் வாசம் காற்றில் புயலாய் புகுந்திருக்க, புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது//
//சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின...
//
நல்ல கனமான வார்த்தைப் பிரயோகத்திற்கு வாழ்த்துக்கள்...
உங்கள் எழுத்தின் அடுத்த பரிமாணத்தை இலகுவாக காட்டி விட்டீர்கள்...
பாராட்டுக்கள் கோபி, லாரன்ஸ்
//ஈ ரா said...
//நாள் முழுதும் விளையாடிய களைப்பின்றி சூரிய பந்து...இறைவன், இயற்கையோடு இணைந்து வரைந்த, சிறிதும் உடைபடாத சிவப்பு அப்பளம்...
சுடரில் மட்டும் கொஞ்சம் சுணக்கம்.
சுட்டெரிக்காமல் மெல்லிய வெப்பம். //
//பூக்களின் வாசம் காற்றில் புயலாய் புகுந்திருக்க, புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது//
//சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின...//
நல்ல கனமான வார்த்தைப் பிரயோகத்திற்கு வாழ்த்துக்கள்...
உங்கள் எழுத்தின் அடுத்த பரிமாணத்தை இலகுவாக காட்டி விட்டீர்கள்...
பாராட்டுக்கள் கோபி, லாரன்ஸ்//
********
நெடு நாட்களுக்கு பிறகு மீண்டும் வருகை தரும் ஈ.ரா.அவர்களே...வருக .... வணக்கம்...
பதிவை அலசி பார்த்து, படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி.... தொடர்ந்து வாருங்கள்........
//வானம்பாடிகள் said...
/இருவரும் சிரிப்பில் இணைந்தனர். இதயம் இளகியது. காற்றில் அசைந்தாடிய புல் அவர்களோடு சிரிப்பில் இணைந்தது. பூக்கள் கூட்டமாய் இணைந்து கை தட்டியது.../
நன்று.//
********
வருகைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி வானம்பாடிகள்....
//கலகலப்ரியா said...
உங்களுக்கு இப்டியும் எழுத வருமா..? =))... அருமையா எழுதி இருக்கீங்க...! நிறைய எழுதணும் இப்டி..!//
*******
வாங்க ப்ரியா... பதிவை ரசித்து படித்து, பாராட்டிய தோழமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றி...
எழுதுவோம்..... தொடர்ந்து வாருங்கள்........
அருமையான விளக்கம்
//தியாவின் பேனா said...
அருமையான விளக்கம்//
*******
தொடர் வருகை தந்து, ஊக்கப்படுத்தும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி ”தியா”..........
இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பிரபலமாக்கிய உங்கள் அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றி....
menagasathia
paamaran
vanniinfo
Kalakalapriya
MVRS
chuttiyaar
jegadeesh
ambuli
csKrishna
முதல்ல தலைப்புக்கு ஒரு ஜே போடறேன்!
பெற்ற குழந்தைக்கு நல்ல பெயர் சூட்டும் கடமை பெற்றவர்களுக்கு உண்டே அதுப்போல பதிவுகளின் பெயர்கள் என்னைக்கவரும்போது லயிப்பு முதலில் அதில் சென்றுவிடும்!
இனி பதிவினைப்பற்றி.....
என்னகோபி புல்(வலி)வெளிபற்றி இப்படியும் அருமையாக எழுதமுடியுமா?! அடேயப்பா ஏதோ பசைப்புல்வெளியில் காலாற நடந்த சுகம் படிக்கையில்! சிவப்பு அப்பளம் என்ற வர்ணனை அபாரம் ஆமாம் வீட்டில் அப்பளம் சுடும்போது எண்ணை அதிகம் காய்ந்தால் அப்பளம் சிவந்துவிடும் காய்ந்த சூரியனின் நிலையும் அதே! மீண்டும் இரவில் காயாத வெள்ளை அப்பளமாய் முழுநிலவு! ஆஹா!
குளிரில் நமுத்துவிடும்போல அதான் பிறைநிலாஅப்பளங்களோ?:)
அடடா ஓர் அழகிய புல் (full)சிந்தனையை நான் குலைத்துவிட்டேனா?:0 ஆனாலும் கோபி இந்தக்கட்டுரை என்னென்னவோ சொல்கிறது இன்னமும்வாசிக்காத புத்தகத்தைக்கையில் வைத்துக்கொண்டு யோசிப்பதுப்போல இருக்கிறது அருமை எனப்பாராட்டினால் அது சின்ன வார்த்தை ஆகவே தமிழில் வார்த்தைகளைதேடிக்
கொண்டிருக்கிறேன்! புல்வெளிபுல்வெளிதன்னில் பனித்துளிபனித்துளி ஒன்று ...என்று பாட வைக்கும் பதிவு! வாழ்த்துகள்!
ஷைலஜா அவர்களே...
நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எங்கள் முதற்கண் நன்றி...
உங்கள் விமர்சனம் பற்றி சொல்ல வேண்டுமானால், நாங்கள் எழுதிய பதிவளவு உள்ளது... அதுவே ஒரு பெரிய ஆச்சரியம்... இவ்வளவு கூட பாராட்ட முடியுமா என்று!!? :
வார்த்தைகள் வந்து விழுந்தது விந்தை
அதுவே ஆனது இங்கே கவிதை...
மிக்க நன்றி ஷைலஜா மேடம்........
//புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது. சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின//
நல்ல வர்ணனை. ரசித்தேன்.
ரேகா ராகவன்.
//KALYANARAMAN RAGHAVAN said...
//புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது. சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின//
நல்ல வர்ணனை. ரசித்தேன்.
ரேகா ராகவன்.//
********
வருகைக்கும், ரசனைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராகவன் சார்....
விழி மூட மறந்தேன் என்னே உங்கள் வார்த்தைகளின் வலிமை கோபி...மெய்யாலும் மெய் சிலிர்க்க வைத்தது இயற்கையின் வர்ணனை..பதிவின் இறுதி வரை சுருதி குறையாத இசையாய் சுவை குறையவில்லை..அனுபவித்து ரசித்து எழுதியிருக்க கோபி...கொஞ்சம் நமக்கும் சொல்லி தரளாமே சொல்லின் வன்மையை...
//தமிழரசி said...
விழி மூட மறந்தேன் என்னே உங்கள் வார்த்தைகளின் வலிமை கோபி...மெய்யாலும் மெய் சிலிர்க்க வைத்தது இயற்கையின் வர்ணனை..பதிவின் இறுதி வரை சுருதி குறையாத இசையாய் சுவை குறையவில்லை..அனுபவித்து ரசித்து எழுதியிருக்க கோபி...கொஞ்சம் நமக்கும் சொல்லி தரளாமே சொல்லின் வன்மையை...//
********
பதிவை ரசித்து படித்து, மகிழ்ந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தமிழரசி...
ஆனாலும், கவிதாயினிக்கு கவிதையும், தமிழுக்கு தமிழும் சொல்லி கொடுக்க சொன்ன உங்களின் நகைச்சுவை என்னை மிகவும் கவர்ந்தது...
//
இருவரில் ஒருவர் கேட்கிறார்... வலி என்பது என்ன??
//
நல்ல கேள்வி, ஆனால் விடைதான் சரியா வராது வலியை உணர முடியும் ஆனால் சரியான விகிதத்தில் உணர்த்த முடியாது.
அனுபவிக்கும்போது நரக வேதனையா இருக்கும் :(
//
நாள் முழுதும் விளையாடிய களைப்பின்றி சூரிய பந்து...இறைவன், இயற்கையோடு இணைந்து வரைந்த, சிறிதும்
உடைபடாத சிவப்பு அப்பளம்...
சுடரில் மட்டும் கொஞ்சம் சுணக்கம்.
சுட்டெரிக்காமல் மெல்லிய வெப்பம்.
//
இந்த வரிகளை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை அருமை!
//RAMYA said...
//
இருவரில் ஒருவர் கேட்கிறார்... வலி என்பது என்ன??
//
நல்ல கேள்வி, ஆனால் விடைதான் சரியா வராது வலியை உணர முடியும் ஆனால் சரியான விகிதத்தில் உணர்த்த முடியாது.
அனுபவிக்கும்போது நரக வேதனையா இருக்கும் :(//
********
ரம்யா...
இதை படித்த போது, என் கண்ணில் தானாக கண்ணீர் வந்தது... அது ஏன் என்று உங்களுக்கு தெரியும்.....
//RAMYA said...
//
நாள் முழுதும் விளையாடிய களைப்பின்றி சூரிய பந்து...இறைவன், இயற்கையோடு இணைந்து வரைந்த, சிறிதும்
உடைபடாத சிவப்பு அப்பளம்...
சுடரில் மட்டும் கொஞ்சம் சுணக்கம்.
சுட்டெரிக்காமல் மெல்லிய வெப்பம்.
//
இந்த வரிகளை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை அருமை!//
**********
ரம்யா....
வலைக்கு வருகை தந்து, பதிவை ரசித்து படித்து, பாராட்ட வார்த்தையே இல்லை என்று சொன்ன போது, எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது...
//
பூக்களின் வாசம் காற்றில் புயலாய் புகுந்திருக்க, புற்கள் ஈரக் கவிதை வாசித்திருந்தது
//
அந்த புயல் மனதிற்கு இனிமை. புற்களின் ஈரம் பாதங்களுக்கு அருமையா இருக்கும்!
//
சிறு குருவிகள், ”குரு” யாருமின்றி கற்ற சங்கீதத்தை இனிமையாய் இசைக்க, பூக்களும், புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின...
//
நாம மனதையும் லயிக்க வைத்து நம்மையும் தாளம் தப்பாமல் ஆட வைக்கும் இல்லையா கோபி :)
கோபி! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. எதை வாழ்த்தறது? எதை விடறது.
மொத்த இடுகையும் அருமை!
//RAMYA said... //
//அந்த புயல் மனதிற்கு இனிமை. புற்களின் ஈரம் பாதங்களுக்கு அருமையா இருக்கும்! //
//நாம மனதையும் லயிக்க வைத்து நம்மையும் தாளம் தப்பாமல் ஆட வைக்கும் இல்லையா கோபி :)//
//கோபி! ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. எதை வாழ்த்தறது? எதை விடறது.
மொத்த இடுகையும் அருமை!//
*********
ஆஹா.... இப்படி சிலாகிச்சு சொல்றீங்களே ரம்யா... நன்றி....
இந்த பதிவை நானும், நண்பர் லாரன்ஸ் அவர்களும் இணைந்தே எழுதினோம்... இந்த பதிவில் எங்கள் இருவரின் கைவண்ணமும் உள்ளது...
வலி மனிதனுக்கு ஒரு ஒப்பற்ற உதவி. அபாயத்தை உணர்த்தும் எச்சரிக்கை கருவி. வலியே இல்லை என்றால் யோசித்துப்பாருங்கள் உடலிலொரு பாகமே கழண்டு விழுந்தாலும் அறியாது உயிர் நீப்போம். உழைப்பு, சுறுசுறுப்பு, அமைதி, தன்மை, மரியாதை, உண்மையாயிருத்தல், மனிதனை சக உயிர்களை மதித்தல் என்று மனிதனை முன்னேற்றும் தேவையான காரணிகள் எல்லாமே வலியையும், கசப்பையும் தருபவையாகவே நம்மால் உணர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. வலியுள்ள உடலுக்குத்தான் ஒத்தடத்தின் சுகம் தெரியும்.
//பலா பட்டறை said...
வலி மனிதனுக்கு ஒரு ஒப்பற்ற உதவி. அபாயத்தை உணர்த்தும் எச்சரிக்கை கருவி. வலியே இல்லை என்றால் யோசித்துப்பாருங்கள் உடலிலொரு பாகமே கழண்டு விழுந்தாலும் அறியாது உயிர் நீப்போம். உழைப்பு, சுறுசுறுப்பு, அமைதி, தன்மை, மரியாதை, உண்மையாயிருத்தல், மனிதனை சக உயிர்களை மதித்தல் என்று மனிதனை முன்னேற்றும் தேவையான காரணிகள் எல்லாமே வலியையும், கசப்பையும் தருபவையாகவே நம்மால் உணர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. வலியுள்ள உடலுக்குத்தான் ஒத்தடத்தின் சுகம் தெரியும்.//
*********
வலியை பற்றி விரிவாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் எடுத்து சொல்லிய பலா பட்டறை அவர்களே... உங்களுக்கு எங்கள் நன்றி........
தொடர்ந்து வருகையும், ஆதரவும் தந்து ஊக்கப்படுத்துங்கள்...
//பூக்களின் வழிவந்த காற்றில் கலந்திருந்த சுகந்தம் வெளியிடும் விரும்பத்தகுந்த நறுமணம் எங்கும் பரவி அந்த பகுதியையே நிறைத்து இருந்தது.... நன்கு இழுத்து மூச்சு விடுகையில் நுரையீரலை சென்று அடையும், சுத்தமான காற்று... உடலை இறுக்கம் தளர்த்தி, இலகு தன்மை கூட்டி, உள்ளத்தில் உற்சாகம் ஊட்டியது.//
கலக்கல்........
//Sangkavi said...
//பூக்களின் வழிவந்த காற்றில் கலந்திருந்த சுகந்தம் வெளியிடும் விரும்பத்தகுந்த நறுமணம் எங்கும் பரவி அந்த பகுதியையே நிறைத்து இருந்தது.... நன்கு இழுத்து மூச்சு விடுகையில் நுரையீரலை சென்று அடையும், சுத்தமான காற்று... உடலை இறுக்கம் தளர்த்தி, இலகு தன்மை கூட்டி, உள்ளத்தில் உற்சாகம் ஊட்டியது.//
கலக்கல்........//
***********
முதல் வருகைக்கு முதலில் நன்றி...
வலையின் பக்கம் வருகை தந்து, பதிவை ரசித்து படித்து, பாராட்டி கருத்துரைத்தமைக்கு எங்களின் மனமார்ந்த நன்றி Sangkavi.......
தொடர்ந்து வருகை தந்து, பதிவுகளை படித்து உற்சாகப்படுத்துங்கள்....
pls see this link
http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html
//Mrs.Menagasathia said...
pls see this link
http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html//
********
Yes Madam....
//உங்கள் தோழி கிருத்திகா said...
http://spiritual-indian.blogspot.com/2009/11/blog-post_30.html......
இதை பார்க்கவும் உடனே//
*******
இதோ பார்க்கிறேன் தோழமை கிருத்திகா அவர்களே....
நான் ஊரிலிருந்து திங்கள் கிழமை தான் வந்தேன், உங்கள் ப்திவுகளை இப்போது தான் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
20 நாட்களாய் ஊரிலில் இல்லை.
நம் தேசத்தின் வலிஒழியட்டும்,என்றும் சந்தோஷப்பூக்கள்மலரட்டும்.என்ற ஜண்டுபாம் விளம்பரம் எனக்கு பிடிக்கும்,அது போல் வலியைப் பற்றி ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள்.
”எப்படி வலி சாஸ்வதமோ,அது போல
வலி நீக்கியும் சாஸ்வதமே”
அற்புதமான வரிகள்.
உடல்,மனம்,ஆன்மா எல்லாம் இணைந்து செயல்பட்டால் எல்லா வ்லிகளையும் (அகம்,புறம் வலிகளை)
போக்கலாம்.
//சிறு வண்டுகளின் ரீங்கராம் ஓங்காரமாய் ஏன் “ஓம்”காராமாய்
செவியை நிறைக்க மனம் அந்த தாள லயத்தில் கிறு கிறுப்பாய் கிறங்கியது.//
வார்த்தைகள் கிறங்க வைக்கிறது.
//சிறு குருவிகள் “குரு” யாருமின்றி கற்ற சங்கீதததை இனிமையாய் இசைக்க,பூக்களும்,புற்களும் தாளம் தப்பாமல் நடனமாடின.//
அருமையான வரிகள்,ரசித்தேன்.
//இருவரும் சிரிப்பில் இணைந்தனர்.
இதயம் இளகியது.காற்றில்
அசைத்தாடிய புல் அவர்களோடு சிரிப்பில் இணைந்து கைதட்டியது.//
நானும் ரசித்து கைதட்டுகிறேன்,
உங்கள் இருவர் கற்பனையை ரசித்து.
படங்கள் அருமை.
பூக்களின் வழிவந்த காற்றில் கலந்திருந்த சுகந்தம் வெளியிடும் விரும்பத்தகுந்த நறுமணம் எங்கும் பரவி அந்த பகுதியையே நிறைத்து இருந்தது.... நன்கு இழுத்து மூச்சு விடுகையில் நுரையீரலை சென்று அடையும், சுத்தமான காற்று... உடலை இறுக்கம் தளர்த்தி, இலகு தன்மை கூட்டி, உள்ளத்தில் உற்சாகம் ஊட்டியது.
அனுபவித்து எழுதியிருக்கீங்க...பதிவை படிக்கும் போதே குளிர் சீலீர்ன்னு உணரமுடிகிறது...
பதிவிற்கு வந்து, வரிக்கு வரி முழுதுமாய் ரசித்து படித்து விரிவான பின்னூட்டமிட்ட தோழமை கோமதி அரசு அவர்களே.... அதுவும், ஊரிலிருந்து வந்தவுடன் என் பதிவை படித்தேன் என்று சொன்னமைக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கமும், நெஞ்சார்ந்த நன்றியும் உரித்தாகுக...
//அனுபவித்து எழுதியிருக்கீங்க...பதிவை படிக்கும் போதே குளிர் சீலீர்ன்னு உணரமுடிகிறது...//
இப்படி சொன்ன தமிழரசிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும், வணக்கங்களும்... என்றென்றும்...
அழுதுஅழுது
தன் துக்கங்களையெல்லாம்
ஒரே துளியாய்த் திரட்டி நின்றதால்
உதயமாகிறது
அப் புல்லின் முன் பரிதி
தல அருமை உங்கள் பதிப்பு ....
Post a Comment