Tuesday, February 9, 2010

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 – (பாகம்-2)

6. தப்புத் தாளங்கள் - 30.10.1978

இன்று இருக்கும் எந்த ஒரு பெரிய கதாநாயகரும் ஏற்க தயங்கும் ஒரு வித்தியாசமான ரவுடி கதாபாத்திரம்... வாழ்வது ஒரு விலைமாதுவுடன்.... சட்ட மீறல்களை அனாயாசமாய் செய்து கரவொலி வாங்கிய படம். சின்ன பட்ஜெட், கருப்பு வெள்ளை படம்... கமல் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்... கே.பாலசந்தர் டைரக்ட் செய்த படம்... நடிகை சரிதா அறிமுகமான படம்...
7. நினைத்தாலே இனிக்கும் - 14.04.1979
ஒரு ஆக்ரோஷமான அதிரடியான ஆக்‌ஷன் ஹீரோ என அங்கிகரிக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் காமெடியில் இந்த அளவு கலக்குவாரா என ஆச்சர்யப்பட வைத்த படம். அதையும் கண்டுபிடித்தவர் அவரின் குரு நாதரே. தீபக் என்ற கதாபாத்திரத்தில், கண்ணில் பார்த்ததையெல்லாம் லவட்டும், கையில் டேப்பை வைத்து கனவுக் கன்னியை தேடும், சுண்டு விரலா, டொயோட்டா காரா என்று “பூர்ணம் விஸ்வநாதன் கேட்கும் கேள்விக்கு திணறல் போன்ற காட்சிகள் என அதிரடி அக்மார்க் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ரகம்.
அதுவும், உங்க தாடி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்று கீதா கூறும்போது, இந்தா எடுத்துக்கோ என்று தன் ஃப்ரெஞ்ச் தாடியை கழற்றி கொடுத்தல் என்று பளீர் நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பார் டைரக்டர் பாலசந்தர்.... இது ஒரு இன்னிசை மழை என்று விளம்பரப்படுத்தியது போல், படத்தின் அனைத்து பாடல்களும் தேன் விருந்து...
“எங்கேயும் எப்போதும்”, “சம்போ சிவசம்போ (இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியது), “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்”, இனிமை நிறைந்த உலகம் இருக்கு”, பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா, ஆனந்த தாண்டவமோ தாண்டவனார் ஆடுகின்றார்” போன்ற தேனினும் இனிய பாடல்கள் நிறைந்த நிஜமான “இசை மழை”யே இந்த படம்...

8. ஆறிலிருந்து அறுபது வரை - 14.09.1979

தன் குடும்பத்திற்காக தன்னையே உருக்கிக்கொள்ளும் மூத்த அண்ணன் கதாபாத்திரம்... உருக்கமான பல காட்சிகள் நிறைந்தது.. தம்பியாக எல்.ஐ.சி.நரசிம்மன் நடித்து இருப்பார்...உயிர் நண்பனாக “சோ” அவர்கள் நடித்த படம்.. “கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ” என்ற இனிய பாடல் உள்ள படம்... இசை இளையராஜா... மற்றுமொரு பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த் கூட்டணி இணைந்து தந்த மாபெரும் வெற்றிப்படம்...

9. ஜானி - 15.08.1980
ஜானி என்ற நெகடிவ் கதாபாத்திரம் (கூட சுருளிராஜன் சாமிகண்ணுவுடன் இணையும் காட்சிகளில் படு லூட்டி...), வித்யாசாகர் என்ற முடி வெட்டும் சலூன் வைத்திருப்பவர் என்று இரு வேடங்களில் நடித்து இருப்பார்... இரு வேடங்களுக்கும் வித்தியாசம் காட்டும் வகையில் காட்சிகளை டைரக்டர் மகேந்திரன் அமைத்து இருப்பார்... ஒருவர் ஸ்ரீதேவியுடன் இணைந்து பல உருக்கமான காட்சிகள் நடித்து இருப்பார்.. அந்த பக்கம், தீபாவுடனான காட்சிகள் காமெடியாக இருக்கும்... இளையராஜாவின் இசையில் “காற்றில் உந்தன் கீதம்”, “என் வானிலே ஒரே வெண்ணிலா” போன்ற இனிமையான பாடல்கள் ஒலித்தன....
10.முரட்டுக்காளை - 20.12.1980

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிப்பில் தயாரிக்கப்பட்ட அன்பே வா
படத்தின் தயாரிப்பிற்கு பின், நீண்ட இடைவெளி விட்ட பொன்விழா கண்ட மாபெரும் தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம்.அவர்களின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளிவந்து வெள்ளி விழா கண்ட படம்... இந்த படத்திலும் இளையராஜா அவர்களின் இன்னிசையில் “பொதுவாக எம்மனசு தங்கம்”, “மாமன் மச்சான், ஏய்.. நீ தானே ஆச வச்சான்”, “எந்த பூவிலும் வாசமுண்டு” போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நிறைந்த படம்.. இன்று பார்த்தாலும் தொய்வின்றி ரசிக்கக்கூடிய ஒரு படம் இது... ரயில் சண்டைக்காட்சி பெரிதும் பேசப்பட்டது... “சீவிடுவேன்” என்ற டயலாக், அதற்கு ரஜினி காட்டும் மேனரிஸம் பாராட்டத்தக்க வகையில் இருக்கும்...

11.தில்லு முல்லு - 01.05.1981

நகைச்சுவை அதிரடி சரவெடி... ரஜினி - தேங்காய் சீனிவாசன் அட்டகாச காம்பினேஷன்... தேங்காய் அவர்களை ஏமாற்ற ரஜினி போடும் இரு வேடங்கள் வேடங்கள் (அய்யம்பேட்டை, அறிவுடைநம்பி, கலியபெருமாள் சந்திரன்...அய்யம்பேட்டை, அறிவுடைநம்பி, கலியபெருமாள் இந்திரன்), அதன் தொடர்பான காட்சிகள் படு சூப்பராக இருக்கும்... ஆபாசமற்ற ஒரு முழு நீள நகைச்சுவை படம்... மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையில் “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு” பாடல் சூப்பர் ஹிட்.. ஜோடியாக நடித்தவர் மாதவி... ரஜினியை வில்லனாகவே பார்த்த கே.பி.அவர்கள் நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு ஒரு முழு நீள காமெடி ரோல் செய்ய வைத்த படம்...இந்த படம் தமிழில் வெளிவந்த நகைச்சுவை படங்களில் ஒரு “மைல்கல்” என்றால் அது மிகையல்ல.
(ஆர்.கோபி / லாரன்ஸ்)
(புகைப்படங்கள் உதவி : ரஜினிஃபேன்ஸ்.காம் மற்றும் பல இணைய தளங்கள்...)

17 comments:

thenammailakshmanan said...

nlla irukku Thalaivar pada reviews....Gopi and Lawrence

Chitra said...

ஆபாசமற்ற ஒரு முழு நீள நகைச்சுவை படம்...

..........நான் அதிகம் பார்த்திருக்கும் ரஜினி படங்களில் இதுவும் ஒன்று. டி.வி.யில், இந்த படம் போட்டால் பார்க்க உட்கார்ந்து விடுவேன். தேங்காய் சீனிவாசன் சார் மற்றும் சௌகார் ஜானகி மேடம், ரஜினியுடன் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி இருப்பார்கள்.

super selections!

R.Gopi said...

//thenammailakshmanan said...
nlla irukku Thalaivar pada reviews....Gopi and Lawrence//

********

தலைவரின் ரசிகை தேனம்மை அவர்களே வருக...

நீங்களும் உங்கள் டாப்-20 படங்கள் பற்றி தெரிவிக்கலாமே....

R.Gopi said...

//Chitra said...
ஆபாசமற்ற ஒரு முழு நீள நகைச்சுவை படம்...

..........நான் அதிகம் பார்த்திருக்கும் ரஜினி படங்களில் இதுவும் ஒன்று. டி.வி.யில், இந்த படம் போட்டால் பார்க்க உட்கார்ந்து விடுவேன். தேங்காய் சீனிவாசன் சார் மற்றும் சௌகார் ஜானகி மேடம், ரஜினியுடன் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி இருப்பார்கள்.

super selections!//

*******

வாங்க சித்ரா...

தில்லு முல்லு ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நகைச்சுவை படம்...

உங்களோட டாப்-20 செலக்‌ஷன் ஆஃப் மூவிஸ் பற்றி சொல்லலாமே...

R.Gopi said...

இந்த பதிவிற்கு “தமிழிஷில்” வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமை அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.......

anubagavan
annamalaiyaan
menagasathia
thenammai
idugaiman
ashok92
VGopi
tamilz
hihi12
balak
chitrax

S Maharajan said...

நண்பா,
அடுத்த பதிவில் "புதுக்கவிதை" படத்தையும் சேருங்கள்
தலைவர் நடித்த (முழு நீள)
ஒரே காதல் படம்!

R.Gopi said...

//S Maharajan said...
நண்பா,
அடுத்த பதிவில் "புதுக்கவிதை" படத்தையும் சேருங்கள்
தலைவர் நடித்த (முழு நீள)
ஒரே காதல் படம்!//

*******

வாங்க மகராஜன்...

எங்களின் அடுத்த பதிவையும் பாருங்கள்... எங்களின் டாப்-20 பார்த்துவிட்டு, உங்களின் டாப்-20 பட சாய்ஸ் தெரிவியுங்கள்...

150க்கும் மேற்பட்ட படங்களில் இருந்து வெறும் 20 படங்கள் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கடினம் என்று நாங்கள் பலமுறை இங்கே சொல்லியுள்ளோம்...

இதனாலேயே, பல அருமையான படங்கள் விடுபட்டு போயிருக்கிறது..

வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி மகராஜன்......

jaisankar jaganathan said...

நினைத்தாலே இனிக்கும் பாடலும்
தில்லுமுல்லுவின் காமடியும் இன்றைக்கும் மறக்க முடியாதவை.

இன்றைக்கு வரும் படங்களில் கூட இது போன்ற அருமையான காட்சிகள் கிடையாது.

jaisankar jaganathan said...

நினைத்தாலே இனிக்கும்--பாட்டு எல்லாம் சூப்பர் தல

தில்லு முல்லு-ஜோக்கு எல்லாம் கலக்கல் தல
எங்க என் முதல் comment

R.Gopi said...

//jaisankar jaganathan said...
நினைத்தாலே இனிக்கும் பாடலும்
தில்லுமுல்லுவின் காமடியும் இன்றைக்கும் மறக்க முடியாதவை.

இன்றைக்கு வரும் படங்களில் கூட இது போன்ற அருமையான காட்சிகள்
கிடையாது.//

// jaisankar jaganathan said...
நினைத்தாலே இனிக்கும்--பாட்டு எல்லாம் சூப்பர் தல

தில்லு முல்லு-ஜோக்கு எல்லாம் கலக்கல் தல
எங்க என் முதல் comment//

*******

வாங்க ஜெய்சங்கர்...

நினைத்தாலே இனிக்கும் பாடல்கள், தில்லு முல்லு காமெடி இன்று வரை யாரும் முறியடிக்க முடியவில்லை...

Arumaiyana Erumai said...

நல்ல பதிவு..பழைய படங்களை நினைச்சு பார்க்கிறதும் இனிமை தான். நன்றி!

R.Gopi said...

//Arumaiyana Erumai said...
நல்ல பதிவு..பழைய படங்களை நினைச்சு பார்க்கிறதும் இனிமை தான். நன்றி!//

***********

வாங்க அருமையான எருமை...

கண்டிப்பாக... பழைய படங்களையும், அந்த கருத்துள்ள பாடல்களையும் கேட்பது ஒரு தனி சுகம் தானே...

அடுத்த பதிவையும் பார்த்துவிட்டு, உங்களின் டாப்-20 படங்களை பட்டியலிடலாமே...!!!

கிரி said...

//தப்புத் தாளங்கள் //

இந்தப்படம் நான் இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன்

//உங்க தாடி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்று கீதா கூறும்போது, இந்தா எடுத்துக்கோ என்று தன் ஃப்ரெஞ்ச் தாடியை கழற்றி கொடுத்தல் என்று பளீர் நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பார் டைரக்டர் பாலசந்தர்//

ஹி ஹி ஹி சூப்பரு!

//ஆறிலிருந்து அறுபது வரை - 14.09.1979//

செம படம்! எனக்கு ரொம்ப பிடித்த படம்

//தில்லு முல்லு //

இந்தப்படத்துல ரஜினி தேங்காய் சீனிவாசனை பார்த்து சார்! நீங்களும் உங்க தோட்டக்காரனும் ஒரே மாதிரி இருக்கீங்க என்பதும்.. வீட்டுக்கு வந்த வுடன் அவர் வீட்டு காவலர் மீசையை முறுக்கியதும்..ரஜினி தன் மீசை இல்லாத இடத்தை தடவி கொடுக்கும் ரியேக்சனும் பட்டய கிளப்பும்

R.Gopi said...

//கிரி said...
//தப்புத் தாளங்கள் //

இந்தப்படம் நான் இன்னும் பார்க்கலைன்னு நினைக்கிறேன்

//உங்க தாடி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு என்று கீதா கூறும்போது, இந்தா எடுத்துக்கோ என்று தன் ஃப்ரெஞ்ச் தாடியை கழற்றி கொடுத்தல் என்று பளீர் நகைச்சுவையை அள்ளி தெளித்திருப்பார் டைரக்டர் பாலசந்தர்//

ஹி ஹி ஹி சூப்பரு!

//ஆறிலிருந்து அறுபது வரை - 14.09.1979//

செம படம்! எனக்கு ரொம்ப பிடித்த படம்

//தில்லு முல்லு //

இந்தப்படத்துல ரஜினி தேங்காய் சீனிவாசனை பார்த்து சார்! நீங்களும் உங்க தோட்டக்காரனும் ஒரே மாதிரி இருக்கீங்க என்பதும்.. வீட்டுக்கு வந்த வுடன் அவர் வீட்டு காவலர் மீசையை முறுக்கியதும்..ரஜினி தன் மீசை இல்லாத இடத்தை தடவி கொடுக்கும் ரியேக்சனும் பட்டய கிளப்பும்//

*********

கிரி... தப்பு தாளங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்... அப்போது தான், ரஜினிக்கும் இன்றைய இளம் கதாநாயகர்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியும்...

Mrs. Krishnan said...

Thappu thaalangal
nanum parthadillai.

Thillu mullu ethana thadava parthalum salikadhu

R.Gopi said...

// Mrs. Krishnan said...
Thappu thaalangal
nanum parthadillai.

Thillu mullu ethana thadava parthalum salikadhu //

********

ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் தப்பு தாளங்கள்... அந்த வேடத்தை ஏற்று நடிக்க இன்று இருக்கும் எந்த ஹீரோவும் நினைத்தும் பார்க்க முடியாது...

தில்லு முல்லு, காமெடியில் ஒரு மாஸ்டர்பீஸ்......

Nirmal Arockiam said...

தப்பு தாளங்கள், how many knows, orginal version in malayalam. i watch the malayalam movie, Actor jain do the superstar role in malayalam