Wednesday, February 3, 2010

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 - (பாகம்-1)

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" என்றதுமே நம் எல்லோரின் மனத்திரையில் ஒரு "பாயும் புலி"யின் உருவம். நினைத்த மாத்திரத்திலேயே பரவசப் படுத்தும் பர்சனாலிட்டி. வேகம், சுறுசுறுப்பு, ஸ்டைல், திரையில் காட்டும் ஆளுமை, பெரும்பாலோரின் மனதை வசீகரித்த‌, கொள்ளை கொண்ட ஸ்டைலான நடிப்பு, என எல்லோரும் ரசிக்கும் திரை உலகின் வசூல் சக்ரவர்த்தி.

மொழி எனும் எல்லை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி (பாக்ய தேவதா... இதில் கமலஹாசன் அவர்களும் நடித்துள்ளார்) மற்றும் ஆங்கிலம் ("ப்ளட்ஸ்டோன்" என்ற ஒரு ஆங்கில படம்) உள்ளிட்ட 7 மொழி படங்களில் நடித்துள்ளார்.

இந்திய நாட்டின் எல்லையையும் கடந்து, தமிழ் படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்படையாத ஜப்பான் நாட்டில் அவர் நடித்த "முத்து" என்ற தமிழ் படம் 200 நாட்களுக்கு மேலாக பெரிய வசூலுடன் ஓடியதும், அதை தொடர்ந்து "சந்திரமுகி" படம் சக்கை போடு போட்டதும் கூட நம்மை வியப்படைய வைக்கும்.... ஜப்பானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் ("சந்திரமுகி" நூறு நாட்கள், பின்னர் வசூலில் பட்டையை கிளப்பிய "சிவாஜி தி பாஸ்") ஐரோப்பாவில் என கண்டங்களை கடந்து வசீகரிக்கிறார்.

1975 ஆம் ஆண்டு, தனது திரைப் பயணத்தை, ஒரு மிக சிறிய (ஆனால் பவர்ஃபுல்லான) வேடத்தில் ”அபூர்வ ராகங்கள்” என்ற படத்தில் அறிமுகமாகி 1985 ஆம் வருடம் (அதாவது 10 வருடங்களுக்குள்) தன் 100வது படத்தை எட்டினார்... சூப்பர் ஸ்டார் அவர்களை அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ரஜினி அவர்களை ஒரு வில்லனாகவே பார்த்து, அது போன்ற வேடங்களையே கொடுத்து வந்தார். ஒரு நாள் தான் ஒரு பெரிய வில்லனாக வரவேண்டும் என்று ஆசி வழங்குங்கள் என்று ரஜினி அவர்கள் கே.பாலசந்தர் அவர்களிடம் கேட்ட போது, ஏன் வில்லனாக, நீ ஒரு பெரிய ஹீரோவாக வருவாய் எனச் சொன்ன வாய் முகூர்த்தம் இன்று நிதர்சனமானது.

அவரது திரைப் பயணத்தில் மைல் கல்லாய், வெற்றியின் படிகளாய் அமைந்த டாப் 20 படங்களை பட்டியலிட்டு அதன் சிறப்பம்சங்களையும் ஒரு வரியிட்டு இதோ ஒரு பதிவு. தற்போதைய கணக்கின்படி, ரஜினி அவர்கள் நடித்த 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொகுப்பிலிருந்து வெறும் 20 படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தொடுப்பது, மிகவும் சிரமமாக இருந்ததே ரஜினி அவர்களின் வெற்றியின் ரகசியம்.

பட்டியல் இட்டதில் விடுபட்ட பல நல்ல திரைப்படங்கள் தங்கள் மனதில் நிச்சயம் தோன்றும், அவை நிச்சயம் ரஜினியின் மணிமகுடத்தில் மின்னும் வைரங்களே.

1. மூன்று முடிச்சு - 22.10.1976

முக்கிய பாத்திரம், ஆனால் சற்றே முரண்பட்டதும் கூட, இது உனக்கு ஓகேதான் என்று கே.பி.அவர்கள் ரஜினியை வில்லனாக்கி ரசிக்க வைக்கும் நடிப்பு தந்தார்.. அவரது டீ.கே. ஒ.கே மிக பிரபலமாய் பேசப்பட்டது பட்த்தின் ஹைலைட். டைரக்டர் கே.பாலசந்தர்.அவர்கள் ரஜினியின் நடிப்பு மேல் வைத்த அந்த நம்பிக்கை தான், படத்தில் முழு நீள வேடத்தை பெற்று தந்தது.. ரஜினியும் தன் பங்குக்கு அட்டகாசமான “வில்லன்” நடிப்பை வாரி வழங்கி இருப்பார்... கமலுடன் போட்டி போடும் அந்த நடிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது....

2. புவனா ஒரு கேள்விக்குறி - 02.09.1977

வில்லனாகவே பார்க்கப்பட்ட ரஜினியை, ஒரு நேர் கதாபாத்திரத்திலும், பால் வடியும் முகத்துடன் நல்ல கதாபாத்திரங்களையே செய்து வந்த சிவகுமார் அவர்களை எதிர்மறையான வில்லன் வேடத்திலும் நடிக்க வைத்து பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன் கூட்டணி, விஷ பரீட்சை செய்த படம். ஆயினும், மக்கள் இருவரையும் ஏற்று கொண்டதில், படம் சூப்பர் ஹிட்... ”விழியிலே மலர்ந்தது” என்ற பாடல் சூப்பர் ஹிட்... இசை இளையராஜா...

3. 16 வயதினிலே - 15.09.1977

பரட்டை என பட்டையை கிளப்பிய நடிப்பு. சிறு வேடமே என்றாலும் ”இது எப்படி இருக்கு” என அவர் சொன்னதை நாம் ரசித்ததே பின்னர் பஞ்ச் டயலாக் எனும் பெயரில் விசுவரூபம் எடுத்தது. தியேட்டரிலிருந்து வெளிவந்த அனைவரும் சொன்ன டயலாக் “இது எப்படி இருக்கு”? இசை ராஜா இளையராஜாவின் கிராமிய இசையை பட்டி தொட்டி எங்கும் ரசிக்க வைத்தவர். தேசிய விருது பெற்ற எஸ்.ஜானகியின் இனிமையான குரலில் “செந்தூரப் பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்று” பாடல் காதில் இனிதாக கூவியது. ஸ்டுடியோவிற்குள் முடங்கிக் கிடந்த திரைப்பட குழுவை கிராமங்களின் வரப்புகளில் நடக்க வைத்த இயற்கையை அறிமுகமாக்கிய அறிமுக இயக்குனர் பாரதிராஜாவின் கை வண்ணம்.

4. இளமை ஊஞ்சலாடுகிறது - 09.06.1978

டைரக்டர் ஸ்ரீதர் - கமல்ஹாசன் - ரஜினிகாந்தின் வெற்றிக் கூட்டணி. கமலுக்கு இணையான முழு படத்தில் வரும் கதாபாத்திரம்... இந்த அளவு விட்டு கொடுத்தது கமல் அவர்களின் பெருந்தன்மை என்று ரஜினியே சொன்ன படம்... பாடல்கள் மெகா ஹிட்.. நண்பனாய் பின்னர் கூடப்பிறந்தவனாய் பழகியவன் தனக்கே துரோகம் செய்கிறானோ என வெகுண்டு எழுந்து, பின்னர் நிலை அறிந்து தியாகம் செய்யும் ஒரு ஸ்டைல் கேரக்டர். பேனா நீட்டி கையெழுத்திடும் ஸ்டைல் தியேட்டரின் கிளாப்ஸை அள்ளியது. பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.

5. முள்ளும் மலரும் - 15.08.1978

பிரபல எழுத்தாளர் “ரமணி சந்திரன்” அவர்கள் எழுதிய நாவல் தான் “முள்ளும் மலரும்” என்று ண்த்திரையில் திரைப்படமாய் விரிந்தது... ரஜினி அவர்களின் பாராட்டத்தக்க குணசித்திர நடிப்பு வெளிப்பட்ட படம்..

தங்கையின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் அண்ணன் - தங்கை கதை... பாசமலருக்கு இணையாக சொல்லப்பட்டது... படத்தை தயாரித்த வேணு செட்டியார் மறுத்த ஒரு பாடல், கமல் அவர்களின் தலையீட்டால், ஷூட் செய்யப்பட்டு, படத்தில் இடம் பெற்றது. அந்த பாடலே.... ”செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்” என்ற சூப்பர் ஹிட் பாடல்.. இளையராஜாவின் இசை பாலு மகேந்திரா ஒளிப்பதிவு என பெரிதும் பேசப்பட்ட படம்... மகேந்திரன் டைரக்‌ஷனில் யதார்த்தமான படம்...

(ஆர்.கோபி / லாரன்ஸ்)

(ஒரு சிறு குறிப்பு : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1977 ஆம் ஆண்டு 15 படங்களிலும், 1978 ஆம் ஆண்டு 20௦ படங்களிலும் நடித்திருந்தார்... )

இன்னும் வரும்...............

28 comments:

Menaga Sathia said...

அருமையான தொகுப்பு கோபி...

காமெடி பதிவு போடுங்க.ரொம்ப நாளாச்சு...

R.Gopi said...

//Mrs.Menagasathia said...
அருமையான தொகுப்பு கோபி...

காமெடி பதிவு போடுங்க.ரொம்ப நாளாச்சு...//

*******

வாங்க மேனகா...

இந்த பதிவிற்கு முதலில் வருகை தந்தமைக்கு நன்றி...

ஒரு அதிரடி “ஜோக்கிரி” பதிவு தயாராகிறது... விரைவில் பதிவேற்றப்படும்....

Thenammai Lakshmanan said...

சூப்பர் ஸ்டார் என்னிக்கும் சூப்பர்தான்

கோபி

R.Gopi said...

//thenammailakshmanan said...
சூப்பர் ஸ்டார் என்னிக்கும் சூப்பர்தான்

கோபி//

********

வாங்க தேனம்மை... கண்டிப்பாக.. அதில் மாற்று கருத்தே இல்லை...

உங்களுக்கு பிடித்த படங்களை இங்கே பட்டியலிடலாமே...

Prabhu said...

Fantastic Gopi, hats off (Thalaivar style)

R.Gopi said...

//Prabhu said...
Fantastic Gopi, hats off (Thalaivar style)//

*********

மிக்க நன்றி தலைவா... தொடர்ந்து வாங்க... இன்னும் மூன்று பாகங்கள் வெளிவரும்...

ISR Selvakumar said...

உங்களின் 20-20 முடிந்தபின், எனக்குப் பிடித்த பட்டியலை (மீதமிருந்தால்) கடைசியில் தருகிறேன். அதுவரையில் வாசிக்கிறேன்.

R.Gopi said...

//r.selvakkumar said...
உங்களின் 20-20 முடிந்தபின், எனக்குப் பிடித்த பட்டியலை (மீதமிருந்தால்) கடைசியில் தருகிறேன். அதுவரையில் வாசிக்கிறேன்.//

******

கண்டிப்பாக செல்வா சார்... நாங்களே பல மிக பிரமாதமான படங்களை இந்த 20 பட்டியலில் அடக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டோம்...

உங்களின் லிஸ்ட் படிக்க ஆவலாக உள்ளோம்...

Unknown said...

"செந்தூரப் பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்று"
"செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்"
இரண்டு பாட்டையும் மறக்க முடியுமா? காலத்தை வென்ற பாடல்கள்

R.Gopi said...

//jaisankar jaganathan said...
"செந்தூரப் பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்று"
"செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்"
இரண்டு பாட்டையும் மறக்க முடியுமா? காலத்தை வென்ற பாடல்கள்//

********

வாங்க ஜெய்சங்கர்.

நீங்கள் குறிப்பிட்டது போன்ற பல இனிமையான பாடல்கள் அப்போது இளையராஜாவால் இசைக்கப்பட்டு, நம்மால் ரசிக்கப்பட்டது...

அன்புடன் அருணா said...

அருமையான தொகுப்பு கோபி!

R.Gopi said...

//அன்புடன் அருணா said...
அருமையான தொகுப்பு கோபி!//

*******

வாங்க அருணா மேடம்... நீங்கள் வந்து கருத்து பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி...

5 படங்கள்தானே பட்டியலிடப்பட்டுள்ளது... இன்னும் 15படங்கள் வருகிறது...

நாங்கள் சொன்னது போல், 150க்கும் மேற்பட்ட படங்களில் வெறும் 20 படங்களை பட்டியலிடுவது மிகவும் சிரமமான ஒன்று...

மிக மிக நல்ல சில படங்கள் விடுபட்டதில் எங்களுக்கும் வருத்தமே.

தேவன் மாயம் said...

நல்ல தொகுப்பு நண்பா!!

Chitra said...

ரஜினி - அவர் படி படியாக தன் திறமைகளை வைத்து முன்னேறி, SUPER STARDOM அந்தஸ்த்தை பெற்றார். அவருக்கு வழங்கப்பட்ட மரியாதை. இப்பொழுது உள்ள போலிகள் போல், நம் மீது திணிக்கப்பட்ட IMAGE இல்லை.
ரஜினி ரஜினி தான் - one and only ரஜினி தான். தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்

R.Gopi said...

//தேவன் மாயம் said...
நல்ல தொகுப்பு நண்பா!!//

*********

வாருங்கள் தேவன் மாயம்...

இன்னும் 3 பகுதிகளாக வரவிருக்கிறது... தவறாமல் வந்து முழு 20 பட பட்டியலை பார்க்கவும்..

R.Gopi said...

//Chitra said...
ரஜினி - அவர் படி படியாக தன் திறமைகளை வைத்து முன்னேறி, SUPER STARDOM அந்தஸ்த்தை பெற்றார். அவருக்கு வழங்கப்பட்ட மரியாதை. இப்பொழுது உள்ள போலிகள் போல், நம் மீது திணிக்கப்பட்ட IMAGE இல்லை.
ரஜினி ரஜினி தான் - one and only ரஜினி தான். தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்//

**********

வாங்க சித்ரா... நீங்கள் சொன்னது மிக சரி... சோதனைகள் பலவற்றை தாண்டியே பல சாதனைகளை சூப்பர் ஸ்டார் அவர்கள் படைத்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று...

தொடர்ந்து வாருங்கள்... பட்டியலை பாருங்கள்... உங்கள் பட்டியலையும் தரலாம்...

maxo said...

Asathal Aarambam !!!

Pls do publish followup parts within this week.

R.Gopi said...

//maxo said...
Asathal Aarambam !!!

Pls do publish followup parts within this week.//

*********

Welcome MAXO... Thanks for your MAIDEN visit and comment...

The Second Part is almost ready and will be published in a day or two...

Do visit regularly and read the updates...

Also please visit my another blogspot and share your views.

www.edakumadaku.blogspot.com

Anonymous said...

நல்ல தொகுப்பு

அக்பர் அலி-துபாய்

R.Gopi said...

//Anonymous said...
நல்ல தொகுப்பு

அக்பர் அலி-துபாய்//

********

வாங்க அக்பர் பாய்... இன்னும் 3 பகுதிகளில் 15 படங்கள் வரவிருக்கிறது...

வந்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்...

ஷைலஜா said...

இப்போதான் எல்லாம் பாக்கறேன் யே அப்பா! எத்தனை சிரத்தையுடன் தொகுத்திருக்கீங்க கோபி! பாராட்டுக்கள்.

R.Gopi said...

//ஷைலஜா said...
இப்போதான் எல்லாம் பாக்கறேன் யே அப்பா! எத்தனை சிரத்தையுடன் தொகுத்திருக்கீங்க கோபி! பாராட்டுக்கள்.//

******

வாங்க மேடம்... இது தான் முதல் பாகம்... இன்னும் 3 பாகங்கள் வர இருக்கிறது...

அதையும் பார்த்து கருத்து சொல்லுங்கள்...

உங்களுக்கு பிடித்த படங்களையும் பட்டியலிடலாமே!!

R.Gopi said...

இந்த பதிவிற்கு ”தமிழிஷில்” வாக்களித்த உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி...

anubagavan
addboxdinesh
jeswanthy
menagasathia
thenammai
chitrax

கிரி said...

//அவரது டீ.கே. ஒ.கே மிக பிரபலமாய் பேசப்பட்டது பட்த்தின் ஹைலைட்//

உடன் தலைவர் தம் ஸ்டைல் ;-)

//”இது எப்படி இருக்கு” என அவர் சொன்னதை நாம் ரசித்ததே பின்னர் பஞ்ச் டயலாக் எனும் பெயரில் விசுவரூபம் எடுத்தது.//

ஓ! இப்படி தான் ஆரம்பம் ஆச்சா!

படங்கள் தேர்வுகள் கலக்கல்

R.Gopi said...

//கிரி said...
//அவரது டீ.கே. ஒ.கே மிக பிரபலமாய் பேசப்பட்டது பட்த்தின் ஹைலைட்//

உடன் தலைவர் தம் ஸ்டைல் ;-)

//”இது எப்படி இருக்கு” என அவர் சொன்னதை நாம் ரசித்ததே பின்னர் பஞ்ச் டயலாக் எனும் பெயரில் விசுவரூபம் எடுத்தது.//

ஓ! இப்படி தான் ஆரம்பம் ஆச்சா!

படங்கள் தேர்வுகள் கலக்கல்//

*********

நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்த கிரிக்கு வணக்கம்...

அதுவும் தலைவர் பற்றிய ஒரு பதிவில் பார்த்தது டபுள் சந்தோஷம்..

Mrs. Krishnan said...

Wow..!
Kalakkal thoguppu.

Thagundha padangal

asathiteenga.
(ivlo naal miss panitene sir)

Mrs. Krishnan said...

Wow..!
Kalakkal thoguppu.

Thagundha padangal

asathiteenga.
(ivlo naal miss panitene sir)

R.Gopi said...

//Mrs. Krishnan said...
Wow..!
Kalakkal thoguppu.

Thagundha padangal

asathiteenga.
(ivlo naal miss panitene sir)//

*******

வாங்க திருமதி கிருஷ்ணன்...

வருகை தந்து, படித்து, பாராட்டியமைக்கு மிக்க நன்றி...

இவ்ளோ நாள் மிஸ் பண்ணினாலும், லேட்டானாலும், லேட்டஸ்டா படிச்சு அசத்திட்டீங்க...

இது போல் பல பழைய பதிவுகள் உள்ளன... அவைகளையும் படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்...