Saturday, August 14, 2010

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....


தாயின் மணிக்கொடி பாரீர்

இதை போற்றி புகழ்ந்திட வாரீர்.


வெள்ளையன் பிடியில் இருந்து நாட்டை மீட்க

அன்று சிந்திய பலரின் குருதி

கொடியின் மேலே ஆனது காவி


உல‌கின் இக்க‌ண தேவை சமாதான‌ம்

அதை உண‌ர்த்தும் விதமாய்

கொடியின் ந‌டுவில் இருக்கும் வெண்மை


பஞ்சம், பட்டினி கொடுமையை போக்கி

பசுமையாய் ஆக்குவோம் நாட்டை

இதை உண‌ர்த்த‌வே கொடியின் கடைசியில் பச்சை


இடையில் உள்ள சக்கரம் போல்

ஓயாமல் சுற்றி (உழைத்து) கொண்டிருந்தால்

உன் வாழ்வும் உயர்வு பெறும்

நம் நாடும் வளம் பெறும்


இன்றைய இந்தியா இதை உண‌ருமா?

கிறங்கிய விழிகள், உலகை மறந்த நிலை

இன்று புலர்ந்த‌ பொழுதும் வீண்

நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால கனவுகள்

அனைத்தும் கருகிய நிலை


விதவிதமான போதையின் பிடியில் இந்தியா

தூக்கி நிமிர்த்த வேண்டிய இளைஞர்கள்

போதையின் பிடியில் சுருண்டு....


அஹிம்ஸையின் வழியே சுதந்திரம் பெற்ற

அண்ணல் காந்தி கூட இன்றைய நிலை கண்டால்

கையில் எடுப்பார் ஏதாவதொரு ஆயுதம்....


நம் இன்றைய தேவை என்ன?

ஒற்றுமை வாழ்வும், கடின உழைப்பும்


கடுகு அளவுள்ள எறும்பே அதன்

உழைப்பை நம்பி வாழும்போது

மலையளவுள்ள மனிதா - நீயும்

உன் உழைப்பை ந‌ம்பி வாழ்ந்து பாரு


சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல்

நீயும் சோம்பலில் இருந்து எழுந்து உழை

குடியை கெடுக்கும் குடியை தவிர்

மனதை கெடுக்கும் மதுவை மற


சீரிய சிந்தனையை உள்ளத்தில் நிறுத்து

வாடிய அனைவரையும் அள்ளி அணைத்து

கனிவான மனதுடன் அன்பு செலுத்து

பொழுதுபோக்கை குறைத்தால்

நம் வாழ்வு சிறக்கும்....


ஜெய் ஹிந்த்.....


உலகில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Monday, August 2, 2010

”அப்பீட்” ஆன நான் மீண்டும் “ரிப்பீட்” ஆனேன்.....

வலையுலக தோழமைகள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.....

என் ”ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட்” அப்பீட் ஆனது ஆனதுதான், இனி ரிப்பீட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணி இருந்த வேளையில், என் மற்றொரு வலையான எடக்கு மடக்கு பதிவில் இந்த ஜிமெயில் ஹேக்கான விஷயத்தையும், ஜோக்கிரியை பற்றியும் குறித்து ஒரு பதிவு வெளியிட்டேன்...

கூடவே, நண்பர்கள் இந்த விஷயத்தில் உதவுமாறு வேண்டியிருந்தேன்... சௌந்தர், ஜே போன்றோர் இட்ட பின்னூட்டத்தில் சூர்யா கண்ணன் அவர்களை இது குறித்து தொடர்பு கொள்ள சொல்லி இருந்தார்கள்...

மற்றொரு நண்பர் சிங்கை கிரி (www.giriblog.com) அவர்களும், இது தொடர்பாக அவர் எழுதிய ஒரு இடுகையின் லிங்க் அளித்து முயற்சிக்க சொல்லி இருந்தார்....

நான் முதலில் நண்பர் சூர்யா கண்ணன் (www.suryakannan.blogspot.com) அவர்களுக்கு என் நிலை குறித்து ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்...

சூர்யா கண்ணன் அவர்களின் சீரிய முயற்சியால் நான் ஹேக் செய்யப்பட்ட என் ஜிமெயில், ஜோக்கிரி ப்ளாக் இரண்டையும் மீண்டும் கிடைக்கப்பெற்றேன்....

அவருக்கு இந்த பதிவை காணிக்கையாக்கி என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....
மிக்க நன்றி திரு.சூர்யா கண்ணன் மற்றும் சிங்கை சிங்கம் கிரி (இப்போ சிங்கம்னு சொல்றதுக்கு பதிலாக, ரோபோட் என்று சொல்லலாமோ!!) அவர்களே......