மாட்டிக்கிட்டாரு.... மன்னாரு வசமா மாட்டிக்கிட்டாரு.....
மன்னாரு... இதுதான் என் பெயர். மேஜர் மன்னாரு இதுதான் இப்போ என்னோட சரியான பெயர். இந்த மன்னாரு கதையத்தான் இப்ப நீங்க வாசிக்கிறீங்க. தமிழ்நாட்டின் வரைபடத்தில் ஓரமாய் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய ஊரான சிரமக்குடியில் பிறந்தேன்...
”மன்னாரு”ங்கிற பெயர் எனக்கு வந்ததே ஒரு சுவாரசியமான சம்பவம். இது என் இயற்பெயரல்ல... இது ஆகு பெயரா, ஆகிய பெயரா, இல்லை இது நிறைய ஆக்கர் வாங்கி ஆக்கிய ஆக்கர் பெயர்... எங்க ஊரு சிரமக்குடியில நான் பண்ணுன சேட்டை தாங்காம, பொண்டு பொடிசுக எல்லாம், மண்ணாயிடுவாரு… மண்ணாயிடுவாருன்னு திட்டுனாங்க. டெய்லி அடிக்கடி திட்ட வேண்டியதாலயும், மண் ஆயிடுவாருன்னு பெருசா சொல்லி சொல்லி வாய் வலிச்சதாலயும் சுருக்கமா மன்னாரு… மன்னாருன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
அப்படி என்ன சேட்டை பண்ணினேன்னு கேளுங்களேன்… சின்ன வயதிலேயே, ஆங்…. (கண்ணடித்து விஷமமாக சிரிக்கிறேன்…) ____ விளையாட்டுகளின் நம்பர் 1 மாணவன் என சிறந்து விளங்கியதால் “மைனர் மன்னாரு” என்று பெயர் வைத்து செல்லமாக அழைக்கப்பட்டேன்..... என் “மன்மத பாணம்” விடும் கள்ளன் போலீஸ் விளையாட்டு எல்லை மீறிப் போச்சு. நான் என்னங்க செய்யுறது, அம்பு… அப்படிங்கும்போதே அது சும்மா இருக்குமா. பாயும், தாவும், ஓடும். பறந்து வந்து குத்தும். அப்புறமா என்ன பாத்து குத்துதேன்னு சொன்னா எப்படிங்க… இப்போ, வேணும்னா லைட்டா மூக்கை மூடிக்கொள்ளுங்கள்.......
இந்த லாஜிக் புரியாமல், என் வீட்டார் என்னை வீட்டை விட்டும், சிரமக்குடி மக்கள் ஊரை விட்டும் ப்ளீஸ்…. முடியல… விட்டா அழுதுறுவோம்…. என அடித்து துரத்தி விட்டனர்... பின், தட்டு
தடுமாறி நட்டு நகமாகி நான் போய் ராணுவத்தில் சேர்ந்து விட்டேன்.
அங்கும் எல்லை தாண்டி இந்த…. ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்… இந்த சிறந்த விளையாட்டை அங்கு காட்டியதால், மேஜர் மன்னாரு ஆனேன்... இந்த விளையாட்டை அங்கீகரிக்கும் விதமாக, என்னை வேலையில் இருந்து தூக்கி வீசி விட்டனர்... நான் நன்றாக கவிதை எழுதுவேன்… (அப்படின்னு நான் அடிக்கடி பொய் சொல்வேன்... அதையெல்லாம் நம்பணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க)
எனக்கு ஒரு வீக்னெஸ்… அதுதான் பகுத்தறிவு.
பகுத்தறிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா பகுத்தறிவுன்னா என்ன அப்படின்னு எங்கிட்ட யாராவது கேட்டுட்டா, அதெல்லாம் தெரியாது.... சும்மாவே, கருப்பு கலர்ல சட்டை ஒண்ணு எடுத்து போட்டுகிட்டு கடவுளை திட்டினால் பகுத்தறிவுன்னு நெனச்சு செஞ்சது அது....ஆனா நல்லா கேட்டுக்கோங்க…. நான் நல்லா பகுத்தறிவு பேசுவேன், பகுத்தறிந்து நடப்பேன் அப்படின்னு எனக்குள்ளேயே நான் நினைத்துக்கொள்வேன்.... (நெனப்பு தான் இப்போ பொழப்பை கெடுக்குது!!)......
அப்புராணியா யாராவது ஆன்மீகம் பேசுனா வக்கணையா நான் நொட்டை என்பேன்.... அதை நொள்ளை என்பேன் (வேற என்ன வேலை எனக்கு!?). அப்புறம்… அப்புறம்... அடிக்க வராத சாமியா பார்த்து வாய்க்கு வந்த மாதிரி பேசுவேன்..… இதுல நான் அறிவு ஜீவின்னு ஜிவ்வுன்னு சொல்ல ஒரு குழுவே என்கிட்ட இருக்கு. உன்ன போல ஆளு ஊருக்குள்ள இல்ல அப்படி ஒரு ரூட்டுல ஜால்ரா ஜாம்பவான்கள் நம்மகிட்ட இருக்காங்க. கடவுள்களை நான் ஏசினாலும், தூற்றினாலும் எனக்கு என் அல்லக்கைகள் வைத்த பெயர் ”ஆட்டையாம்பட்டி ஆண்டவர்”.......
அங்கெங்கெனாதபடி எங்கெங்கும் நீக்கமற என் பண்டைய விளையாட்டின் எல்லையை விரிவு படுத்தினேன் ….. ஏங்க இதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் கொடுக்க மாட்டாங்களோ…..... கஷ்டம் வரும் போதெல்லாம், இந்த அயோக்கிய சிகாமணிக்கு ஆதரவு கரம் நீட்டியவர் ஜாங்கிரி ஜக்குபாய் என்று செல்லமாக அழைக்கப்படும் ஜேக்கப் ஜெகந்நாதன் அவர்கள் தான்... அதற்கு நன்றி கடனாக, அவர் வீட்டில் இருந்த ............ (ஹா...ஹா... ம்ம்ம்..........அதே தாங்க...............கண்டுபிடிச்சிட்டீங்களே!!)..........
அடச்சே..... ஒரு விஷயத்த உருப்படியா சொல்ல விட மாட்டேங்கறாங்க.... கொஞ்சம் இருங்க.....பக்கத்துல பெண் வாசனை அடிக்கிறது.... போய், லைட்டா மோப்பம் பிடிச்சுட்டு வர்றேன் (அடிச்சு புடிச்சு வேகமாக எழுந்து… தட தடவென வெளியில் ஓடுகிறார்)......
ஆங்... வந்தாச்சு..... கஷ்டப்பட்டதுக்கு எதுவும் பிரயோஜனமில்லை.... 55-60 வயசு வரைக்கும் கூட எனக்கு ஓகே தான்னு போய் பார்த்தேன்...... ஆனால், போனது ஒரு 70-75 வயசு இருக்கும்.... கண்ணோடு கண்ணை கலக்கவில்லையென்றாள்….காறி துப்பி, கன்னத்தில் அடிவிழும் எச்சரிக்கை என்றாள், அவள் அவளின் வழியே சென்றாள்…நான் இதோ, திரும்பி வந்து விட்டேன்....
நான் ஏன் இப்படி இருக்கிறேன் என நினைத்து பார்த்தேன்.... என் கனவில் வந்து வாத்ஸ்யாயனர் அடிக்கடி கடித்து கடி ஜோக் சொல்கிறார். அது தான் பிரச்சனை. அவர் ஒரு நாளில் சொன்னார்.... வந்ததை வரவில் வை... சென்றதை செலவில் வை என்று.... கூட்டி கழித்து பார்த்தால், வரவில் வைத்த மோகமும், செலவில் வைத்த கூடலும் இன்றைய நிலையில், தராசின் இரண்டு தட்டிலும் ஏறக்குறைய சமநிலையிலேயே இருக்கிறது... நானும் இப்போது சகஜ நிலைக்கு வந்து விட்டேன் என்று சொல்ல முடியவில்லை...
என் கவிதா மேதாவிலாசம் இந்த வையகம் அறியும், ஒரு டவுட்டுங்க… மேசைக்கு மேசை தாவுறது தான மே..தாவி… அதனால் தான் மேஜை விட்டு மேஜை தாவிய மேதாவி நான். என் கவிதா மேதாவிலாசம் என்ன என்பதை நீங்களும் கொஞ்சம் பருகுங்களேன்… மே…ஐ… மே….பீ…. மே…தாவி…
சித்தாந்தமும் வேதாந்தமும்
கூடி கை கோர்த்து
கும்மி அடிக்கும் நேரத்தில்
மொத்தமாக வை
பத்து முத்தமாக வை
அதையும் சத்தமாக வை
ஒரு துளி வெண்மை
உறைத்தது என் ஆண்மை
மலர்ந்தது பெண்மை
இதை கண்டதும்
புரிந்தது உண்மை
சாத்திரத்தின் சூத்திரத்தை
ஆத்திரம் அறியாது
ஆத்திரத்தின் சூத்திரத்தை
பாத்திரம் அறியாது
பாத்திரத்தின் சூத்திரத்தை
சொன்னாலும் புரியாது
நிரம்ப பேசும் உலகில்
ஊமைக்கு இல்லை மதிப்பு
ஊமைகள் உலவும் உலகில்
பேச்சாளிக்கு வரிவிதிப்பு
இதை படித்ததும் கவிஞர் கோலி, கவிஞர் காத்துவாயன் எல்லோரும் என்னை கவிஞரே, கவிப்புயலே என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.... ஆனாலும்,, அதனால் வரும்படி வகையில் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை... கூடல் விளையாட்டிற்கும் கூடுதலாக ஆள் கிடைக்கவில்லை....
என்னோட பாலிஸி நெம்ப சிம்பிள்.
சாம, தான, பேத, கூடல், தண்டம் எதுவும் வேலைக்கு ஆகலேன்னா …. தத்திந்தனாத தத்தம்.... எப்போதும் போல தகிடுதத்தம்…. தகிடுதத்தம்…. ஆமா… தகிடுதத்தோம்...... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்................
15 comments:
//நான் நன்றாக கவிதை எழுதுவேன்…
( அப்படின்னு நான்
அடிக்கடி பொய் சொல்வேன்...
அதையெல்லாம்
நம்பணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்
அதுதான்
பகுத்தறிவு .பகுத்தறிவு எனக்கு ரொம்ப
பிடிக்கும்.
ஆனா பகுத்தறிவுன்னா என்ன
அப்படின்னு எங்கிட்ட
யாராவது கேட்டுட்டா , அதெல்லாம்
தெரியாது.... //
HAA... HAA.. HAA...
//இதுல நான்
அறிவு ஜீவின்னு ஜிவ்வுன்னு சொல்ல
ஒரு குழுவே என்கிட்ட இருக்கு.//
ஓ..... இந்த மன்னாரு அவுரா? எப்படிங்க நீங்க அவர மாதிரியே சிந்திச்சிருக்கீங்க!!!??
//
ஓ..... இந்த மன்னாரு அவுரா? எப்படிங்க நீங்க அவர மாதிரியே சிந்திச்சிருக்கீங்க!!!??//
********
வாங்க திருமதி கிருஷ்ணன்....
என்னங்க இப்படி படீர்னு “அவர்”தான்னு உடைச்சு சொல்லிட்டீங்க...
முதலில் வருகை தந்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி....
சொல்ல மறந்துட்டேங்கோ...அந்த புகைப்படத்துக்கு திருஷ்டி சுத்தி போடுங்க
'கண்ணு பட போகுதய்யா மேஜர் மன்னாரு...
உமக்கு சுத்தி போட வேணுமய்யா மைனர் மன்னாரு...'
//Mrs. Krishnan said...
சொல்ல மறந்துட்டேங்கோ...அந்த புகைப்படத்துக்கு திருஷ்டி சுத்தி போடுங்க
'கண்ணு பட போகுதய்யா மேஜர் மன்னாரு...
உமக்கு சுத்தி போட வேணுமய்யா மைனர் மன்னாரு...'//
*******
பொருத்தமான பாடலை எழுதியதற்கு பாராட்டுக்கள்....
எனக்கு கூட அந்த ஃபோட்டோ ரொம்ப பிடிச்சிருக்கு....
ha ha sema comedy!!
//வந்ததை வரவில் வை... சென்றதை செலவில் வை என்று.... கூட்டி கழித்து பார்த்தால், வரவில் வைத்த மோகமும், செலவில் வைத்த கூடலும் இன்றைய நிலையில், தராசின் இரண்டு தட்டிலும் ஏறக்குறைய சமநிலையிலேயே இருக்கிறது// வைர வரிகள்!
ஆத்திரம் பாதி, அவசரம் பாதி கலந்து செய்த கலவை நான்!
உள்ளே வக்கிரம் வெளியே அக்கிரமம் விளங்க முடியா கவுச்சி நான்!
கப்பு வாங்கி கப்பு வாங்கி பிரபலம் ஆகத் துடிக்கின்றேன்,
"கப்பு" "ஆயி" "கப்பு" "ஆயி" கலந்து பேசி நடிக்கின்றேன்.
//S.Menaga said...
ha ha sema comedy!!//
******
வாங்க மேனகா...
பதிவிற்கு வருகை தந்து, பதிவை படித்து ரசித்து சிரித்தமைக்கு நன்றி...
// சிவகுமார் said...
//வந்ததை வரவில் வை... சென்றதை செலவில் வை என்று.... கூட்டி கழித்து பார்த்தால், வரவில் வைத்த மோகமும், செலவில் வைத்த கூடலும் இன்றைய நிலையில், தராசின் இரண்டு தட்டிலும் ஏறக்குறைய சமநிலையிலேயே இருக்கிறது// வைர வரிகள்!//
********
வாங்க சிவக்குமார்...
அவரோட லீலைகள் எல்லை மீறினதால தான் இந்த பதிவு...
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஆத்திரம் பாதி, அவசரம் பாதி கலந்து செய்த கலவை நான்!
உள்ளே வக்கிரம் வெளியே அக்கிரமம் விளங்க முடியா கவுச்சி நான்!
கப்பு வாங்கி கப்பு வாங்கி பிரபலம் ஆகத் துடிக்கின்றேன்,
"கப்பு" "ஆயி" "கப்பு" "ஆயி" கலந்து பேசி நடிக்கின்றேன்.//
********
ஹா...ஹா...ஹா... வாங்க ஜி....
நல்லவனா, கெட்டவனா எனக்கே தெரியலியேப்பா....
கெட்டவன் இல்ல, ஆனா நல்லவனா இருந்திருந்தா, நல்லா இருந்திருக்கும்
இப்படி எல்லாம் எவ்ளோ டகால்டி விட்டாரு இந்த மைனர் மன்னாரு!!?
நன்றி தலைவா....
நீஈஈஈஈஈஈஈளமான பதிவுங்க..
இருங்க படிச்சுட்டு வரேன்
//எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்................//
இது இது இதுதாங்க இந்தப் பதிவுலயே எனக்குப் பிடிச்ச வார்த்தை..
//இந்திரா said...
நீஈஈஈஈஈஈஈளமான பதிவுங்க..
இருங்க படிச்சுட்டு வரேன்
//ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......//
இது இது இதுதாங்க இந்தப் பதிவுலயே எனக்குப் பிடிச்ச வார்த்தை..
*****
ஹா...ஹா.... வாங்க இந்திரா...
கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
கண்ணு பட போகுதய்யா மேஜர் மன்னாரு...
உமக்கு சுத்தி போட வேணுமய்யா மைனர் மன்னாரு...'
repeat
//r.v.saravanan said...
கண்ணு பட போகுதய்யா மேஜர் மன்னாரு...
உமக்கு சுத்தி போட வேணுமய்யா மைனர் மன்னாரு...'
repeat//
********
சரவணன் சார்...
நீங்கள் ரிபீட்டியதற்கு நன்றி....
Post a Comment