கவிதை ….. கவிதை! காற்று வாங்க போன போது??? … (அப்படியெல்லாம் காற்று வாங்க கவிதை போகுமா என்ன…. வார்த்தை கிடைக்காம கவிஞர்தான் காத்து வாங்குவாரு… கவிதையின் ஒரு பகுதியில் வார்த்தை அடைத்துக்கொள்ளாமல் காகிதம் கூட வெற்று இடங்களாய் காற்று வாங்கும்)
காற்று வாங்க சென்ற நம் கவிதை, நம்ம சென்னை மாநகர ”டெர்ரர் கரண்ட் கபாலி” கையில் சிக்கிக் கொண்டது. போனால் என்ன, சிக்கிக் கொண்டால் என்ன, எங்கு சென்றாலும் மனதை நெகிழ்த்தி மகிழ்ச்சி தருவது தானே நம் கவிதையின் வேலை, கலக்குவதே என் பணி என்று சொல்லி கவிதை தன் வேலையை தொடங்கி விட்டது.
லவ்வுல நான் ஜிவ்வாயிட்டேன்
லவ்வ ஜிவ்வாக்கி கவுஜ எழுதி
எடுத்துகினு வாய்யா
அப்பாலிக்கா பார்க்கலாம்…. நம்ம லவ்வு
எஸ்ஸா…. நோ - வான்னு
நோவாம என் கையில
சொல்லிருச்சு நம்ம டாவு
மெரிசலாயிட்டேன் நானு
மெர்ஸியே இல்லாத நீனு
ஒன் பேருல மட்டும் கீது மெர்ஸி
அங்க மேயுற பசு பேர் ஜெர்ஸி
இந்தாம்மே… என் இண்டிமேட்டு…
நான் இப்போ ஒன் கிட்ட அப்பீட்டு
லவ்வுல இப்போ லீக்காயிட்டேன்
ஜிவ்வுன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன்
என் லைஃப்ல ஃபர்ஸ்ட்டு
நீதாம்மே லாஸ்ட்டு
நீ இருந்தாதேன் பெஸ்ட்டு
இதான் என் இண்ட்ரெஸ்ட்டு
நீ இல்லாங்காட்டி
லைப்ஃபே வேஸ்ட்டு
குட்சேன் சூப்பரா ஒரு பூஸ்டு....
நீ சரவண பவன் ஃபுல் மீல்ஸ் கணக்கா
வயிறையும் மனசையும் ரொப்புவ
அந்த பில்லு கையில வர்றப்போ
அத்த இந்த மாமன் பையில சொருகுவ
பப்பரப்பேன்னு சொல்லி சொல்லி
இருட்டுல பயமும் காட்டுவ
கொக்கரக்கோன்னு கூவுற சேவலை
கோணி எடுத்து தொரத்துவ.
உங்க நைனா
அவரு
நமக்கு சைனா
ரிலிஜன் சொல்லி நம்மள
பேஜாராக்குறாரு ஃபைனா...
ரீஜெண்டா சொல்றேன்
கடவுளு படைச்சது
ரெண்டே ரெண்டு குரூப்பு தேன்...
ஒண்ணு மேல்
இன்னொன்னு ஃபீமேல்
அதுக்கு மேல
எதுவுமே லேது!
எனக்கோசரம் நீ
உனக்கோசரம் நான்
எனக்கு நீ அல்வா
உனக்கும் நான் அல்லவா
மொள்ளமா வாம்மா கண்ணு
வந்தா நாயர் கடையில துன்னலாம் பன்னு
புள்ள குட்டி பெத்துகிட்டா
ஒறவு எல்லாம் ஒண்ணாயிரும்
ஒண்ணு ரெண்டு வருசத்துல
எல்லாமே நல்லாயிரும்
கரீட்டா அன்னிக்கே சொன்னானே
கண்ணம்மா பேட்டை கண்ணாயிரம்....
ஆ….. மாமு!
இது கூட கவிஜை மாதிரி தேன் கீது
இதுக்கு மேல சொல்ல எதுவுமே லேது
இத்த குடுத்து நம்மாள கவுத்திர்றேன்
படிச்சுட்டு மொறச்சா, எஸ்கேப் ஆயிடறேன்...
ஆல் த பெஸ்ட் சொல்லு நைனா
என் லவ்வு சக்சஸ் ஆகட்டும் ஃபைனா…
(லாரன்ஸ் / ஆர்.கோபி)
28 comments:
ஆ….. மாமு!
இது கூட கவிஜை மாதிரி தேன் கீது
இதுக்கு மேல சொல்ல எதுவுமே லேது"
எப்படி இப்படி எல்லாம்
நல்ல க(டி)விதை
// ஹாய் அரும்பாவூர் said...
ஆ….. மாமு!
இது கூட கவிஜை மாதிரி தேன் கீது
இதுக்கு மேல சொல்ல எதுவுமே லேது"
எப்படி இப்படி எல்லாம்
நல்ல க(டி)விதை//
*********
வாங்க ஜி... முதல் வருகைக்கு நன்றி.
இந்த அருமையான கவுஜய படிச்சு, கருத்து சொன்னதுக்கு நெம்ப நன்றிபா.
இந்த மாதிரி எழுதுறதுக்கு ஞானம், ஞானம் வேணும்...அது உங்க கிட்ட இருக்கு...:)))
சென்னை செந்தமிழை காது குளிர ச்சே மனம் குளிர கேட்டேன்...! தலை நகர தெருவீதியில சுத்தின எப்பெக்ட் கொடுக்குது உங்க கவிதை...!
//ரெண்டே ரெண்டு குரூப்பு தேன்...
ஒண்ணு மேல்
இன்னொன்னு ஃபீமேல்//
இதை கண்டிப்பா எல்லோரும் நோட் பண்ணிக்கணும்....
என்னா மெசேஜ் !! :)))
இந்த பணி செவ்வனே தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்....
ஆஹா...
கவிநர் கபாலி வால்க!
என்னாமா எலுதிருக்காரு கவுஜ.
/எனக்கோசரம் நீ உனக்கோசரம் நான்
எனக்கு நீ அல்வா
உனக்கும் நான்
அல்லவா
மொள்ளமா வாம்மா கண்ணு வந்தா நா
கடையில துன்னலாம் பன்னு//
அப்பாலிக்கா இத்த செந்தமில்ல மொலிபெயர்க்க சொல்லி தலீவுரு கோபியாண்ட சொல்லுங்க கவிநரே
கௌசல்யா
திருமதி கிருஷ்ணன்
நீங்க ரெண்டு பேரும் பாராட்டியமை கண்டு மனம் மகிழ்ந்தேன்...
இந்த கவுஜய மெய்யாலுமே ஜூப்பரா சேர்ந்து எயுதுன தல லாரன்ஸுக்கு ஒரு பெசல் டேங்க்ஸ்....
இப்படி சென்னை தமிழ்லில் கவுஜ (கவிதை)எழுதியதால் "கவுஜ
(கவிதை)திலகம் "கோபி"
என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவாய்
நண்பா!!!!!!!
// S Maharajan said...
இப்படி சென்னை தமிழ்லில் கவுஜ (கவிதை)எழுதியதால் "கவுஜ
(கவிதை)திலகம் "கோபி"
என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடுவாய்
நண்பா!!!!!!//
********
வாங்க மகராஜன்...
ஹா...ஹா...ஹா... கவுஜ திலகம். டைட்டிலே சூப்பரா இருக்கே...
வருகை தந்து, பதிவை படித்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தலைவா...
மேரேஜ் லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?
அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை
//யாதவன் said...
அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை//
******
வாங்க யாதவன்...
தலையாண்ட சொல்லி செந்தமிழ்ல மொழிபெயர்த்துடுவோம்....
ஆ….. மாமு!
இது கூட கவிஜை மாதிரி தேன் கீது
இதுக்கு மேல சொல்ல எதுவுமே லேது
இத்த குடுத்து நம்மாள கவுத்திர்றேன்
படிச்சுட்டு மொறச்சா, எஸ்கேப் ஆயிடறேன்...
ஆல் த பெஸ்ட் சொல்லு நைனா
....ha,ha,ha,ha,ha... All the best! You really need it... ha,ha,ha,ha,ha....
வாரே வா இதுவல்லவா கவிதை கலக்கல் மச்சி
நம்ம கவுஜய படிச்சி மனசார பாராட்டின
சித்ரா
தங்கராசு நாகேந்திரன்
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி...
இந்த பதிவிற்கு தமிழிஷ்/இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் ”நெம்ப டேங்ஸ்”....
sriramanandaguruji
kingkhan1
kousalya
venkatnagaraj
kvrudra
janavin
kavikkilavan
RDX
chitrax
chuttiyaar
kosu
ganpath
jollyjegan
bhavaan
VGopi
kvadivelan
ashok92
easylife
ambuli
smaharajan
rk3879
pannikkuttir
அட அட அடடே.... கவித கவித......!!!
அவ்வ்வ்வ்.. எனக்கு அழுவாச்சியா வருதுங்க...
இந்த கவிதையை படிச்ச புள்ள எப்படி கீது...??
சும்மா ஒரு டவுட்டு...
ஹிஹிஹி.. :-)))
ஆஹா...................கிளம்பிட்டாங்கையா!
//Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
அட அட அடடே.... கவித கவித......!!!
அவ்வ்வ்வ்.. எனக்கு அழுவாச்சியா வருதுங்க...
இந்த கவிதையை படிச்ச புள்ள எப்படி கீது...??
சும்மா ஒரு டவுட்டு...
ஹிஹிஹி.. :-)))//
*******
ஆ... இந்த கவுஜய படிச்சு அழுவாச்சியா? இன்னாமே இது?
இத்த பட்ச புள்ள எங்கனு இருக்குனு தேடிகினு கீரேன்...
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ஆஹா...................கிளம்பிட்டாங்கையா!//
******
ஹா...ஹா...ஹா... மெய்யாலுமே கெளம்பிட்டோம் தல...
//ஆ... இந்த கவுஜய படிச்சு அழுவாச்சியா? இன்னாமே இது?
இத்த பட்ச புள்ள எங்கனு இருக்குனு தேடிகினு கீரேன்...
///
அதாங்க... ஆனந்தக் கண்ணீர்......!!
எம்புட்டு லவ்வு... சரி சரி.. அந்த புள்ளைய தேடி இட்டுக்குனு வந்ததும் சொல்லுங்க.. அப்பாலிக்கா வந்து பதில் சொல்றேன்.. :-))
நீங்க ஏன் இப்போ காமெடி எழுதலை.எழுதுங்க ப்ளீஸ்
நீங்க ஏன் இப்போ காமெடி எழுதலை.எழுதுங்க ப்ளீஸ்
அட எம்மாம் பெரிசு.சூப்பருங்கோ.
//Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
//ஆ... இந்த கவுஜய படிச்சு அழுவாச்சியா? இன்னாமே இது?
இத்த பட்ச புள்ள எங்கனு இருக்குனு தேடிகினு கீரேன்...
///
அதாங்க... ஆனந்தக் கண்ணீர்......!!
எம்புட்டு லவ்வு... சரி சரி.. அந்த புள்ளைய தேடி இட்டுக்குனு வந்ததும் சொல்லுங்க.. அப்பாலிக்கா வந்து பதில் சொல்றேன்.. :-))//
********
ஹா...ஹா...ஹா...
ஆனந்தி, ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு...
அத்த இஸ்துகினு வந்ததும் கூவறேன்.
//mani said...
நீங்க ஏன் இப்போ காமெடி எழுதலை.எழுதுங்க ப்ளீஸ்//
*******’
வாங்க மணி
காமெடி தானே... எழுதிடுவோம்...
asiya omar said...
அட எம்மாம் பெரிசு.சூப்பருங்கோ
******
வாங்க asiya omar....
மெய்யாலுமே கொஞ்சம் பெருசா தான் போச்சு...
வருகை தந்து, பதிவை படித்து கருத்து பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றி.
நைனா..மெய்யாலுமே ஒன்ங்கவுஜை படிச்சி வவுறு நோவுது.இத்த மெட்ராசு பாசையில் நானு டிகிரி வாங்கனும்ன்னு ஆசை.பீசு வாங்காமே எனக்கு நெட்டுலே படிச்சுக்கொடுத்தா என்னா..அக்காங்..
//படிச்சுட்டு மொறச்சா, எஸ்கேப் ஆயிடறேன்...
//மொறைக்கலே மாமு..அல்லாரும் சிரிச்சி ரசிச்சிகினே கீறாங்க..நடத்து மாமு நடத்து..
//ஸாதிகா said...
நைனா..மெய்யாலுமே ஒன்ங்கவுஜை படிச்சி வவுறு நோவுது.இத்த மெட்ராசு பாசையில் நானு டிகிரி வாங்கனும்ன்னு ஆசை.பீசு வாங்காமே எனக்கு நெட்டுலே படிச்சுக்கொடுத்தா என்னா..அக்காங்..//
*******
வாங்க ஸாதிகா...
டெர்ரர் கரண்ட் கபாலிய மிஞ்சறாங்க நம்மாளுங்க மெட்ராஸ் பாஷைல...
பஞ்சாமிர்தம் போல இனிக்குதூ
பஞ்சு பஞ்சா மனசு பறக்குது
கவித எழுத உக்காந்தா உன் மொகம்
நல்ல கலக்கலா வந்து நிக்குது
நான் கவித எழுதுவேனா
கலக்கல குடிப்பேனா...போம்மே அந்த பக்கம்
[யம்மாடி இதெல்லாம் நானா எழுதினேன்...]
//
goma said...
பஞ்சாமிர்தம் போல இனிக்குதூ
பஞ்சு பஞ்சா மனசு பறக்குது
கவித எழுத உக்காந்தா உன் மொகம்
நல்ல கலக்கலா வந்து நிக்குது
நான் கவித எழுதுவேனா
கலக்கல குடிப்பேனா...போம்மே அந்த பக்கம்
[யம்மாடி இதெல்லாம் நானா எழுதினேன்...]//
********
வாங்க GOMA....
நீங்க இம்புட்டு தெறமையா கவுஜ எழுதுவீங்கன்னு இப்போ தான் எனக்கு தெரியும்...
Post a Comment