Tuesday, March 22, 2011

"விதை” - குறும்படம்

”சித்தம்” என்னும் குறும்படத்தை வழங்கிய நம் “ப்ளாசம் கிரியேட்டர்ஸ்” உங்களை மீண்டும் மகிழ்விக்க ”விதை” என்ற புதிய குறும்படம் வாயிலாக வருகிறது...

ஒரு சமுதாய பார்வையுடன், பார்வையாளர்களின் மனதில் விதைக்க... ஒரு வீரிய விதையுடன் வெளிவருகிறது இந்த “விதை” என்னும் குறும்படம்...

எந்த ஒரு சாமான்ய மனிதனும், தன்னையும், தன் குடும்பத்தையும்.... பொறுப்புடன் பார்த்து ... தனது...!!!! என கொள்கிறான். அதுவே தன் ஊருக்கோ, அல்லது தான் சார்ந்திருக்கும் நாடு என்றோ வரும்போது, அதில் இருந்து அன்னியமாகி, தன் பொறுப்புக்களை விட்டு விலகி விடுகிறான்.

ஒரு தனி மனிதன், தன் ஊரையும் நாட்டையும், தன் குடும்பத்தை போல் பார்க்கும்..... மாற்றம் நிகழுமா... !!! எனும் கேள்விக்கு விடை சொல்கிறான், இந்த விதை குறும்படத்தின் கதாநாயகன்.

வாழ்வின் ரகசியம் அறிய, சமூக அன்பின் அடிநாதத்தை, அறிந்து கொள்ள நகர்கிறது, இக்குறும்படம்.

இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும் எனும் நம்பிக்கையுடன், பணிவுடன் சமர்பிக்கிறோம்.

“விதை” குறும்படத்தை இங்கே கண்டுகளியுங்கள் :

http://www.youtube.com/watch?v=AVkN6gtF33U


உங்கள் கருத்துக்களையும், நல்லாதரவையும் என்றும் வேண்டும்


(ஆர்.கோபி / லாரன்ஸ்)

27 comments:

Mrs. Krishnan said...

கருத்துள்ள கதை. அனைவரது நடிப்பும் யதார்த்தமாக உள்ளது. இசையும் அருமை. தாங்கள் மேன்மேலும் பல துறையிலும் வளர இந்த முயற்சி ஒரு விதையாக அமைய வாழ்த்துக்கள்

R.Gopi said...

//Mrs. Krishnan said...
கருத்துள்ள கதை. அனைவரது நடிப்பும் யதார்த்தமாக உள்ளது. இசையும் அருமை. தாங்கள் மேன்மேலும் பல துறையிலும் வளர இந்த முயற்சி ஒரு விதையாக அமைய வாழ்த்துக்கள்//

******

பதிவுகளுக்கு தொடர் வருகை தந்து, படித்து, கருத்து பகிரும் திருமதி கிருஷ்ணன் அவர்களே...

உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி...

Asiya Omar said...

நேற்றே பார்த்து விட்டேன்,கமென்ட் போடுவதற்குள் மற்ற வேலை வந்து விட்டது,அருமை.நண்பர்கள் வட்டம் பற்றிய கண்ணோட்டம் சூப்பர்.எதார்த்தமாக இருந்தது.விதை விருட்சமாக வாழ்த்துக்கள்.

R.Gopi said...

// asiya omar said...
நேற்றே பார்த்து விட்டேன்,கமென்ட் போடுவதற்குள் மற்ற வேலை வந்து விட்டது,அருமை.நண்பர்கள் வட்டம் பற்றிய கண்ணோட்டம் சூப்பர்.எதார்த்தமாக இருந்தது.விதை விருட்சமாக வாழ்த்துக்கள்.//

********

வாங்க ஆசியா ஓமர்...

உங்கள் தொடர் ஆதரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி...

Rekha raghavan said...

அருமை. தங்கள் குழுவினர் குறும்படம் எடுப்பதில் நல்ல முன்னேற்றம் காண்கிறேன். வாழ்த்துகள்.

R.Gopi said...

//ரேகா ராகவன் said...
அருமை. தங்கள் குழுவினர் குறும்படம் எடுப்பதில் நல்ல முன்னேற்றம் காண்கிறேன். வாழ்த்துகள்.//

********

வாங்க ராகவன் சார்...

தோழமைகளின் பாராட்டுதலே எங்களை மேம்படுத்துகிறது...

உங்களுக்கு என் குழுவின் சார்பாக நன்றி சார்...

இராஜராஜேஸ்வரி said...

இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும்/
நம்பிக்கைதானே வாழ்க்கை!
ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த இறைவனை இறைஞ்சுகிறேன்.
முன்னேற வாழ்த்துக்கள்.
சிறப்பான குறும்படத்திற்குப் பாராட்டுக்கள்.

Menaga Sathia said...

கோபி,உங்களின் வீடியோ பார்த்தேன்,,கதை ரொம்ப நல்லாயிருக்கு,அனைவரின் நடிப்பும் யதார்த்தமா இருக்கு.பாராட்டுக்கள்..மேலும் பல விதைகளை விதைக்க வாழ்த்துக்கள்!!!

சொல்லச் சொல்ல said...

விதையின் கதை மனதில் மீண்டும் அசைபோடும் அளவிற்கு மனதைத் தொட்டு விட்டது. இவைகளில் நடித்துக் கொடுத்து சேவை புரியும் அனைத்துப் பாத்திரங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//இராஜராஜேஸ்வரி said...
இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும்/
நம்பிக்கைதானே வாழ்க்கை!
ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த இறைவனை இறைஞ்சுகிறேன்.
முன்னேற வாழ்த்துக்கள்.
சிறப்பான குறும்படத்திற்குப் பாராட்டுக்கள்.//

********

வாங்க இராஜராஜேஸ்வரி...

வருகை தந்து, பதிவை படித்து, குறும்படத்தையும் கண்டு வாழ்த்தியமைக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த நன்றி...

R.Gopi said...

//S.Menaga said...
கோபி,உங்களின் வீடியோ பார்த்தேன், கதை ரொம்ப நல்லாயிருக்கு, அனைவரின் நடிப்பும் யதார்த்தமா இருக்கு. பாராட்டுக்கள்.. மேலும் பல விதைகளை விதைக்க வாழ்த்துக்கள்!!!//

********

வாங்க மேனகா...

மேலும் பல விதைகளை விதைக்க வாழ்த்திய உங்களுக்கு எங்கள் குழுவினர் சார்பாக நன்றி...

ஆஹா..

R.Gopi said...

//சொல்லச் சொல்ல said...
விதையின் கதை மனதில் மீண்டும் அசைபோடும் அளவிற்கு மனதைத் தொட்டு விட்டது. இவைகளில் நடித்துக் கொடுத்து சேவை புரியும் அனைத்துப் பாத்திரங்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.//

*******

வாங்க மேடம்...

தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி...

பார்த்தவர்கள் பெரும்பாலும் நன்றாக இருக்கிறது என்றே சொல்வதில் மிக்க மகிழ்ச்சி...

R.Gopi said...

இந்த பதிவிற்கு இண்ட்லியில் வாக்களித்து பதிவை பிரபலமாக்கிய தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக....

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருந்தது கோபி அண்ணா..

அனைவரது நடிப்பும் அருமை...முந்திய படத்தினைவிட இன்னும் முன்னேற்றம் இதில் அதிகாம இருக்கின்றது..

இன்னும் பல குறும்படங்கள் வழங்க உங்கள் குழுவிற்கு வாழ்த்துகள்...

R.Gopi said...

//GEETHA ACHAL said...
ரொம்ப நல்லா இருந்தது கோபி அண்ணா..

அனைவரது நடிப்பும் அருமை... முந்திய படத்தினைவிட இன்னும் முன்னேற்றம் இதில் அதிகம் இருக்கின்றது..

இன்னும் பல குறும்படங்கள் வழங்க உங்கள் குழுவிற்கு வாழ்த்துகள்...//

******

வாங்க கீதா மேடம்...

குறும்படம் கண்டு, எங்கள் குழுவை வாழ்த்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி....

ஸாதிகா said...

அருனையான கதை.உங்கள் உழைப்பும்,அனைவரது நடிப்பும் அருமை வாழ்த்துக்கள்.இன்னும்,இன்னும் சாதிக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.

R.Gopi said...

//ஸாதிகா said...
அருனையான கதை.உங்கள் உழைப்பும்,அனைவரது நடிப்பும் அருமை..

வாழ்த்துக்கள்.இன்னும்,இன்னும் சாதிக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.//

*********

வாங்க ஸாதிகா...

பதிவிற்கு வருகை தந்து, குறும்படத்தை கண்டு, வாழ்த்தியமைக்கு எங்கள் குழுவினர் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

தோழமைகளின் உற்சாகமூட்டும் சொற்களே எங்களுக்கு வலிமை கூட்டுகிறது...

கிரி said...

கோபி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

சென்ற முறையை விட இந்த முறை நிச்சயம் முன்னேற்றம் கண்டுள்ளீர்கள் குறிப்பாக எடிட்டிங், பின்னணி இசை, நடிப்பு ஆகியவை. கடந்த முறை பொருந்தா இசை இருந்தது இந்த முறை அது போல இல்லாமல் சீராக உள்ளது.

கொஞ்சம் விரைவிலேயே முடிந்தது போல இருந்தது. ஒரே இடத்தில் வைக்காமல் வெளி இடங்களிலும் எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//கிரி said...
கோபி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

சென்ற முறையை விட இந்த முறை நிச்சயம் முன்னேற்றம் கண்டுள்ளீர்கள் குறிப்பாக எடிட்டிங், பின்னணி இசை, நடிப்பு ஆகியவை. கடந்த முறை பொருந்தா இசை இருந்தது இந்த முறை அது போல இல்லாமல் சீராக உள்ளது.

கொஞ்சம் விரைவிலேயே முடிந்தது போல இருந்தது. ஒரே இடத்தில் வைக்காமல் வெளி இடங்களிலும் எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.//

*********

வாங்க கிரி...

குறும்படத்தை கண்டு, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி..

ஒரே ஒரு காட்சி மட்டுமே வெளியில் படம் பிடிப்பதாக இருந்தது... அதுவும் மாற்றி உள்ளேயே எடுத்து விட்டோம்.

raji said...

நல்ல கருத்தை தாங்கி நிற்கும் விருட்சம்.

ஆனால் என்ன அதிசயமென்றால் என் பதிவும் இந்த கருத்தை
அடிப்படையாகக் கொண்டதாக அமைந்ததே.

என் சிறுகதை உண்மையில் "த்ரோம்போசைத்தீமியா"வால்(இரத்த குறைபாடு)
பாதிக்கப் பட்ட ஒருவரின் கதை.கதையை எழுதி ஒரு மாதமாக எனது ட்ராஃப்ட்டில் வைத்திருந்தேன்
சம்பந்தப் பட்டவர் படித்து அப்ரூவ் செய்வதற்காகவும்
அவர் மனம் புண்படா வண்ணம் கொண்டு வருவதற்காகவும்.பல பேருக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த அவரே சம்மதித்து பப்ளிஷ் செய்ய சொன்ன பின் பப்ளிஷ் செய்தேன்.

raji said...

நான் குறிப்பிட்ட அந்த ரத்த குறைபாடு உள்ள நபர் மிக
நன்றாக பாடக் கூடியவர்.ஆனால் சமீப காலமாக(நோய் தெரிந்த பின்) அவரிடம் பாட சொல்லி
கேட்டாலே அவர் 'நல்லதோர் வீணை செய்தே' என்ற பாடலைத்தான் பாடுகிறார்.இது என் மனதை மிக வருத்துகிறது.எனவேதான் எனது சிறுகதைக்கும் அந்த பாடலின் பெயரையே அவரது சம்மதத்தின் பின் வைத்தேன்.

R.Gopi said...

வாங்க ராஜி...

உங்கள் கதையை படித்ததும் நிஜமாவே எனக்கு ஷாக்... ஏனென்றால், அதை மையமாக வைத்தே எங்களின் குறும்படமும் இருந்தது..

வருகை தந்து, கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

தக்குடு said...

நல்ல முயற்சி கோபி சார், முதல் படைப்பை விட பல முன்னேற்றங்கள் இதில் தெரிகிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
தக்குடு

R.Gopi said...

//தக்குடு said...
நல்ல முயற்சி கோபி சார், முதல் படைப்பை விட பல முன்னேற்றங்கள் இதில் தெரிகிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
தக்குடு //

*******

வாங்க தக்குடு...

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி....

RVS said...

இன்று தான் பார்க்க நேரம் வாய்த்தது. போன படத்திலிருந்து அதிவேகமாக முன்னேறியிருக்கிரீர்கள் கோபி! வளர வாழ்த்துக்கள். ;-))

ஆலம் விதை மிகச் சிறியதாக இருந்தாலும்... அதிலிருந்து வளரும் விருட்சம் எப்படி பெரியதாக இருக்கிறதோ அதுபோல உங்கள் முயற்சி ஆலமரமாய் வளர வாழ்த்துக்கள். ;-))

R.Gopi said...

// RVS said...
இன்று தான் பார்க்க நேரம் வாய்த்தது. போன படத்திலிருந்து அதிவேகமாக முன்னேறியிருக்கிரீர்கள் கோபி! வளர வாழ்த்துக்கள். ;-))

ஆலம் விதை மிகச் சிறியதாக இருந்தாலும்... அதிலிருந்து வளரும் விருட்சம் எப்படி பெரியதாக இருக்கிறதோ அதுபோல உங்கள் முயற்சி ஆலமரமாய் வளர வாழ்த்துக்கள். ;-))//

********

வாங்க ஆர்.வி.எஸ்....

உங்க பாராட்டு பார்த்து ரொம்ப நெகிழ்வா இருந்தது பாஸ்...

எப்போதும் சொல்வது போல், தோழமைகளின் ஆதரவே எங்களின் பெரிய பலம்...

உங்கள் அனைவரின் ஆதரவும் இன்றி இது நடந்திருக்க வாய்ப்பில்லை...

மிக்க நன்றி...

Jaleela Kamal said...

மிக அருமை கோபி விதை குறும்படம் மிகவும் கருத்துள்ளதாக இருந்தது,
உஙக்ள் அனைவரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்